ஒவ்வொரு வருடமும், டிசம்பர் முப்பத்து ஒன்று முடிந்தவுடனே இசைவிழா ஆர்வம் வெகுவாகக் குறைந்து விடுகிறது. இது மீண்டும் தழைக்க திருவையாறு (தியாகராஜ ஆராதனை) விழா ஆரம்பமாக வேண்டும். டிசம்பர் 31 இசை கேட்கும் ஆர்வம் குறைய என்ன காரணம்? யோசித்துப் பார்த்ததில், டிசம்பர் மாதம் முழுவதும் நிறைய கச்சேரிகள் கேட்ட களைப்பு என்பதுதான் முழு முதல் காரணம் என்று தோன்றுகிறது.
உண்மையில் திருவையாறு உத்சவம் கூட முன்பு போல் இல்லை என்ற எண்ணம் பலமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? நிறைய பேர் பாட வந்துவிட்டார்கள். அதனால் தரம் பின்னுக்குத் தள்ளப் பட்டுவிட்டது. மேலும் தொலைக்காட்சியில் எல்லாம் பார்க்க முடிகிறது என்பதால் ஆர்வம் சற்று தளர்ச்சியடைந்து விட்டதாகத் தோன்றுகிறது. மேலும் மூச்சுத் திணறும் அளவுக்குக் கூட்டம் கூடுவதும் சாப்பாட்டுக்கு சிரமப் படுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மியுசிக் அகாடமியில் இசை நிகழ்ச்சியை விடியோ மூலமாக அருகில் இருக்கும் சிறு அரங்குக்கு அனுப்பி அதற்கு ஐம்பது ரூபாய் டிக்கெட் வைத்து விற்றனர். அதுவும் பெரிய நன்மையாகவே இருந்தது. எனக்கு முன்னூறு, ஐநூறு என்று பணம் கொடுத்து அனுமதிச் சீட்டு வாங்க மனம் வருவதில்லை. என் வரையில் நூறு ரூபாய்தான் லிமிட். எனினும் சில கச்சேரிகளுக்கு இரு நூறு ரூபாய் டிககட் வாங்கியது உடன் வந்த மகள் உபயம்.
பாரத் சுந்தர், பிரசன்னா வெங்கடராமன் ஆகியோர் இந்த ஆண்டு நட்சத்திர பாடகர்கள். மிக நன்றாகப் பாடினார்கள். நிஷா ராஜகோபாலன், அம்ருதா முரளி ஆகியோர் பாட்டும் நன்றாக இருந்ததன. மேலும் ஓர் இளம் தாரகையைக் குறித்து ஒரு நாளிதழில் மிகவும் சிலாகித்து எழுதியிருந்ததைப் படித்ததன் பேரில் ஆர்வமாகச் சென்றேன். துரதிருஷ்டவசமாக அன்று கச்சேரி எடுபடவில்லை. அது ஒரு தனி நிகழ்வாக இருக்கலாம் என்பதால் அவரது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.
பெரும்பாலான இளம் பாடகர்கள் கச்சேரிகளில் பக்க வாத்தியம் ஒரே இரைச்சலாக இருந்தது ஒரு துரதிருஷ்டம்.
@ @ @ @ @ @ @ @ @ @
(செவிக்கு உணவு இல்லாத போது - அல்லது சரியாகக் கிடைக்காத போது - சிறிது அல்லது பெரிது வயிற்றுக்கும் ... க்கும் ! ....)
இம்முறை காண்டீன் போட்டிகளில் வெற்றி பெற்றது (என்னைப் பொறுத்தவரை) நாரத கான சபா. கண்டனத்துக்கு ஆளாவது அகாடமி. ஆறுதல் பரிசு பார்த்தசாரதி சபா மற்றும் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ்.
இம்முறை காண்டீன் போட்டிகளில் வெற்றி பெற்றது (என்னைப் பொறுத்தவரை) நாரத கான சபா. கண்டனத்துக்கு ஆளாவது அகாடமி. ஆறுதல் பரிசு பார்த்தசாரதி சபா மற்றும் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ்.
மியூசிக் அகடமியின் மினி மீல்ஸ்! எல்லா நாட்களிலும் ஒரு கப் தயிர்சாதம் உண்டு. ஸ்வீட், சிப்ஸ் கூட அப்படியே. ஆனால், மற்றது மட்டும் ஒவ்வொரு நாளும் மாறும். சாம்பார் சாதம் / எலுமிச்சை சாதம் / புளியோதரை/ ரசம் சாதம் / காரக்குழம்பு (ஆக்சுவலா இந்தக் காரக் குழம்பு சாதம் காரமாகவே இல்லை - புளியோ புளி எனப் புளித்தது!)
ஒரு முழுச் சாப்பாட்டின் விலை, மை ஃபைன் ஆர்ட்ஸில் எண்பது, அகடமியில் நூறு, பார்த்தசாரதி சபா காண்டீனில் நூற்றுப் பத்து. இந்த வகையில், பார்த்தசாரதி சபா மற்ற எல்லா காண்டீன்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது! மதுரை மணி அய்யர் பாட்டு போல மவுண்ட் மணி ஐயர் கேட்டரிங் போலிருக்கு! அகடமியில் மினி மீல்ஸ் ரூபாய் ஐம்பதுக்குக் கிடைத்தது. பாட்சா காண்டீனில் ஒரே சாப்பாடுதான். ஆனால் தரம் உயர்வாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. எல்லா சபா காண்டீன்களிலும், அருகில் உள்ள ஐ டி கம்பெனிகளிலிருந்து மதியச் சாப்பாட்டிற்கு பலர் படை எடுத்து வந்து இரசித்துச் சாப்பிட்டுச் சென்றார்கள். அவர்களில் யாரும் பாடகர்கள் இருந்த மேடைப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை!
வாங்க சார்.. நல்லா சங்கீத சீசன என்ஜாய் பண்ணீங்களா ?
பதிலளிநீக்குஇன்னும் கொஞ்சம் டீடெயிலா பதிவு போடுங்க.. சார்.
27 ம் தேதி பெங்களூர் வந்தேன்.. நீங்க சங்கீத சீசனுக்கு (போன வருஷம்போல) சென்னை போயிருப்பீங்கனு நெனப்பு வந்திச்சு அப்ப. நா நெனைச்சது சரிதானு இப்பத் தெரியுது.
என்னோட அஞ்சாறு பதிவு க்கு ஒங்க விசிடிங் பெண்டிங்.. சாவகாசமா ஒரு விசிட் வாங்க..
லேசில் நினைவேற மாட்டேங்குது பக்கம். சாப்பாடும் விழாவோட அம்சம் தானே? அதுக்காக வந்தாலும் காதில் விழுந்தால் சரிதான். கேன்டீன்ல ஸ்பீகர் வச்சு கச்சேரியை கேக்க வைக்கறாங்களோ?
பதிலளிநீக்குஅப்பாதுரை சார், சில காண்டீன்களில், பாட்டு சத்தம் கேட்கும். மியூசிக் அகடெமி, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் போன்று. மற்றவைகளில் சத்தம் வெளியே கேட்பதில்லை.
பதிலளிநீக்குஇசை விழா வர்ணனை இப்பொழுதுதான் படித்தேன். மிக அருமை. அந்தக்கால விழாவாக இருந்தால், பால் பாயசத்தில் ஆரம்பித்து, ஜிலேபி, சர்க்கரைப் பொங்கல், முதலிய இத்யாதிகளுடன் விருந்து சாப்பிடுவது போல் இருந்திருக்கும். ஆனால், இக்கால கட்டத்தில் உள்ள கேன்டீன் உணவு போல், சுவையும் சுவையில்லாததுமான கச்சேரிகள். இளம் கலைஞர் பரத் சுந்தர் கச்சேரி சிங்கப்பூரில் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. சஞ்சய் சுப்ரமணியம் அவர்களின் சாயல் கொஞ்சம் தெரிகிறது. மிக நன்றாக, கற்பனை வளத்துடன் பிரகாசிக்கிறார். டாப் டென்னில் ஏன் டாப் ஃபைவ்வில் கூட வருவதற்கான் அறிகுறிகள் இருக்கின்றன.
பதிலளிநீக்கு