செவ்வாய், 4 ஜனவரி, 2011

"இசையால் மயங்காத..." - கிஷோர்.

அன்றைய பொழுதுகளில் மனதை வருடிய சில பாடல்களை சொல்லிப் பகிர்ந்து கொள்ள ஆசை.

நீண்ட நாள் ஆசை. சில பல காரணங்களால் தள்ளிக் கொண்டே போன் ஆசை.

அந்த நாள் 'ரங்காவளி, மன் சாஹே கீத், மனோ ரஞ்சன் ஜெய் மாலா சாயா கீத், ஆப் கே ஃபர்மாயிஷ்' காலங்களை நினைவு 'படுத்தும்' ஆசை.

ஹிந்திப் பாடகர்களில் மிகவும்....மிகவும் பிடித்த பாடகர் கிஷோர் குமார். கடவுள் இந்தியாவுக்கு அளித்த கொடைகளில் ஒருவர். முதலில் எல்லாம் கொஞ்சம் மூக்கால் பாடிக் கொண்டிருந்தார் என்று ஆரம்பக் காலப் பாடல்களைக் கேட்கும் போது தோன்றும். சல்தி க நாம் காடி படத்தில் அவர் பாடிய 'ஏக் லடுக்கி பீகி பாகி சி' பாடல் ஒரு புதிய பாணியில் அமைந்தது என்று சொல்லலாம். எஸ் டி பர்மனும் ஆர் டி பர்மனும் கிஷோரின் பல இனிய பாடல்களைக் கொடுக்கக் காரணமாயிருந்தவர்கள்.


குறிப்பாக ஆர் டி பர்மன் கிஷோர் காம்பினேஷன் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாயின.


ஆர் டி பர்மன் கிஷோர் கூட்டணியுடன் ராஜேஷ் கன்னா வும் சேர்ந்தால்... இதில் பல பாடல்கள் சூப்பர் ஹிட். ராஜேஷ் கன்னாவின் நடனத்தைப் பாருங்கள். அது தனிரகம். இந்தப் பாடலுக்கு (ஏ ஜோ மொஹப்பத் ஹை) தமிழில் நினைவுக்கு வரும் பாடல் சொல்ல முடிகிறதா,,,


கீழே வரும் பாடலில் வருபவர் சஞ்சீவ் குமார். அந்தக் காலத்தில் இது மாதிரி காட்சிகள் அதிகம். அதாவது ஒரு பார்ட்டி நடக்கும். 'அப்பாவி' இளம் ஹீரோ யாரோ கேட்டதற்கு பதிலாகவோ அல்லது எல்லோருடைய வற்புறுத்தலுக்கும் இணங்கியோ பாடுவார். குறிப்பாக தனது கனவில் நினைத்து வைத்திருக்கும் 'பெயரில்லா' தனது கனவுக் காதலியை நினைத்துப் பாடும் பாடல். கிஷோரின் குரல், ஆர் டியின் இசை, பாடல் வரிகள்..."என் அன்புக்கு பதிலாக நீ ஏன் எனக்கு இவ்வளவு துன்பத்தைத் தருகிறாய்?" என்று பாடுவதும் அழகு. இதே மாதிரி பார்ட்டியில் அப்புறமும் ஒரு ஹீரோ தன் வருங்கால மனைவியைப் பற்றி பாடிய பாடல் மிகப் பிரபலம்..என்ன சொல்லுங்கள்...!


மகனைப் பற்றியே சொன்னால் எப்படி? மறுபடி ஒரு எஸ் டி பர்மன் பாடல். காட்சியில் வருபவர் தேவ் ஆனந்த்.. ஹிந்தித் திரையுலகின் எவர் கிரீன் ஹீரோ...அவர் ஸ்டைல், அவர் நடையைப் பாருங்கள். ஹிந்தியின் எம் ஜி ஆர் அவர்! இந்தப் பாடல் ஒரு புதிய முறையில் அமைந்தது. வரிகளில் அந்தாதி கேள்விப் பட்டிருக்கிறோம். இது ட்யூனில் அந்தாதி போல மாலையாகக் கோர்க்கப் பட்ட அழகிய பாடல்! "பூக்களின் வண்ணம் கொண்டு இதயத்தின் பேனாவைக் கொண்டு உனக்கு தினமும் எழுதும் கடிதம்... நீ என் இதயத்தின் அருகிலேயே இருப்பதை எப்படிச் சொல்வேன்... மேக மின்சாரம், நிலவின் குளிர்ச்சி இரண்டையும் ஒருங்கே கொண்ட உன் காதல் என்னை பலப் பல ஜென்மம் எடுக்க வைக்கிறது..." பாடலில் வரும் இசை..சந்தூர் என்று நினைக்கிறேன்... அப்பா பர்மன் ஒன்றும் சளைத்தவரல்ல!


ஒரு வேண்டுகோள்...கிஷோர் கேள்விப் பட்டிருக்கிறேன் என்று சொல்லி விட்டுப் போய் விடாமல் எல்லாப் பாடல்களையும் முழுமையாகக் கேட்டு அனுபவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நிறையப் பேருக்கு தெரிந்திருக்கும். இவரைத் தெரியாதவர்கள் இருந்தால் அல்லது கேட்காதவர்கள் இருந்தால் கேட்டு ரசியுங்கள்.

இது முதல் தவணை. இனி அவ்வப் போது தொடரும்..! கபர்தார்!

28 கருத்துகள்:

  1. நான், குஜராத்தில் இருந்த பொது.. வட இந்திய சகோதர்கள் 'கிஷோர்' பற்றி சிலாகித்து சொல்லுவார்கள். அப்போது எனக்கு ஹிந்தி அவ்வளவாகத் தெரியாது.
    நன்றாகத் தெரிந்தபின்... இந்நூற்றாண்டின் ஆரம்ப கால ஹிந்திப் படங்களை பார்த்திருக்கிறேன். அதனால் அந்த வகைப் பாடல்களைத்தான் ரசித்தேன்.

    கிஷோர் -- எனக்கு மிகவும் தொலைவில் தெரிகிறார்.. ஐ ஆம் சாரி..
    பின்சென்று அவரை பிடிக்க முயற்சி செய்கிறேன்..

    பதிலளிநீக்கு
  2. கிஷோர் கேள்விப்பட்டிருக்கிறேன்...

    இன்னும் வரும் என்று பயமுறுத்தியதற்காக மேலே...

    ராஜேஷ்கன்னா சூபர்ஸ்டாராக கிஷோர் தான் காரணம் என்று நினைக்கிறேன்.

    கிஷோர் ஒரே மாதிரி எல்லாருக்கும் கட்டை குரலில் பாடுவார் அல்லது யோடலிங் செய்வார் என்று நினைக்கும் பொழுதெல்லாம் திடீரென்று 'பீகி' போல் பாட்டு பாடி 'அட!' போட வைப்பார். லட்டு போல் மதுபாலாவை ஒரு காட்சியில் காட்டிவிட்டு கழட்டிவிட்டார்களே, நியாயமா?

    பதிலளிநீக்கு
  3. 'எதிர்கால மனைவி' - என்ன பாட்டுங்க?

    பதிலளிநீக்கு
  4. தேவ் ஆனந்துக்குப் பாடிய பல பாடல்கள் பிடிக்கும்; 'அச்சா ஜி மை ஹாரி' 'சோட் தோ ஆஞ்சல்' எனக்கு ரொம்பப் பிடித்த டூயட்; பத்தாயிரம் தடவை கேட்டிருப்பேன். ஒரு தனிப்பாட்டு ஆரம்பம் ஞாபகம் வரமாட்டேங்குது - 'கயி கயி பார்' என்று 'பல பிறவிகள் எடுக்க வேண்டும்' என்ற பொருளில் முடியும் ஒரு பாட்டு - சட்டென்று ஞாபகம் வரவில்லை, அதுவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  5. 'கோரா காகஜ் தா' is my all time favorite. (இதே மெட்டை வச்சு sdb எத்தனை பாட்டு போட்டிருக்கார், சொல்லுங்க பார்ப்போம்?)

    பதிலளிநீக்கு
  6. தமிழ் பாடல்களை சிலாகித்து எழுதி விட முடியும். பிற மொழியையும் விரும்பி சிலாகித்து எழுதுவதென்றால் கிஷோர் உங்களை அந்தளவு ஈர்த்துள்ளார். பாடல்களை கேட்டு கொண்டே உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  7. ஹிந்தி நஹி மாலும் ஹை.. இசைக்கு மொழி ஏது... கேக்கறேன்.. அப்புறம் சொல்றேன்.. ;-)

    பதிலளிநீக்கு
  8. ஆராதனா ரிலீஸ் ஆகி எல்ல இடங்களிலும் சக்கை போடு போட்டநேரம் (நம்ம ஊர் மெட்ராஸ் லிட்டில் ஆனத் தியேட்டரில் அது அப்போது வெள்ளி விழா படமாக ஓடியது) அதற்கு பின்னர் வந்த நிறைய இந்தி படங்களில் அப்பாவும் மகனும் மாறி மாறி (எஸ்.டி பர்மனும்,ஆர்.டி பர்மனும் ) இசை யமைத்த படங்களில் கிஷோர் நிறைய ஹிட் பாடல் கள் பாடி தள்ளிக்கொண்டே இருந்தார். ஒண்ணா ரெண்டா எடுத்து சொல்ல?

    யே ஷாம் மசுதானி ------ கட்டி பதங்
    பல் ..பல்..தில் கே பாஸ் து ரஹ்தீஹோ...------------- பிளாக் மெயில்

    இவைகளை விட்டுவிடாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. இசைக்கு மொழி தேவையில்லை.
    ரசித்தேன்.நல்லாயிருக்கு ஸ்ரீராம் !

    பதிலளிநீக்கு
  10. //ஹிந்திப் பாடகர்களில் மிகவும்....மிகவும் பிடித்த பாடகர் கிஷோர் குமார். கடவுள் இந்தியாவுக்கு அளித்த கொடைகளில் ஒருவர்.//

    உண்மை. ஆம்பிளைத்தனமான குரல். ஹிந்தி பாடல்களை கேட்கவைத்த ஒரே பாடகர். அதற்கு முன்னும் பின்னும் யாரும் வரவில்லை என்று எனக்கு தோன்றும். பலர் முகமது ரபியை கொண்டாடுவார்கள். எனக்கு என்னவோ கிஷோர் தான் பிடிக்கும்.

    கல்யாணம் ஆவதற்கு முன் என் நண்பர்கள் வட்டத்தில் ஒருவன் சூப்பராக கிடார் வாசிப்பான். ஹிந்தி பாடலும் அமர்க்களமாக பாடுவான். பல நாட்கள் அப்படி அவன் பாட கேட்டு இருக்கின்றேன். நான் ஹிந்தி பாடல் கேசட் ரெகார்ட் செய்ய துண்டியதும் அப்போது தான்.

    பதிலளிநீக்கு
  11. நன்றி மாதவன்,

    நன்றி கோபி,

    நன்றி வானம்பாடிகள்,

    மாதவன், நீங்கள் வட நாட்டில் இருந்தும் கிஷோர் அதிகம் கேட்டதில்லை என்பது ஆச்சர்யம் அளிக்கிறது.
    கேளுங்கள். இனிய பல பாடல்கள் தந்தவர்.

    நன்றி அப்பாதுரை, //" 'கயி கயி பார்' என்று 'பல பிறவிகள் எடுக்க வேண்டும்' என்ற பொருளில் முடியும் ஒரு பாட்டு - சட்டென்று ஞாபகம் வரவில்லை, அதுவும் பிடிக்கும்"//
    கடைசி காணொளி பார்க்கவில்லை/கேட்கவில்லை என்று தெரிகிறது!
    கோரா காகஜ் தா மெட்டில் பொங்குதே புன்னகை என்ற பாடல் இருக்கிறது. எம் எல் ஸ்ரீகாந்தின் நினைப்பது நினைவேறும் பாடல் ஓரளவு சொல்லலாமோ என்னவோ...வேறு ஏதும் நினைவுக்கு வரவில்லையே...

    நன்றி தமிழ் உதயம், ஹிந்தி கொஞ்சம் தெரியும் என்பதே இது போன்ற பாடல்களை ரசிக்க ஆரம்பித்துதான்...

    நன்றி ஆர் வி எஸ்....நீங்கள் ஹிந்திப் பாடல்கள் கேட்டதில்லை/கேட்பதில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. உங்களைப் போன்ற இசை ரசிகர்கள் இவற்றை விட்டு வைக்கலாமோ?


    நன்றி கக்கு மாணிக்கம், கண்டிப்பாக விட மாட்டோம்! நீங்கள் சொன்ன பாடல்கள் அவரின் ரத்தினங்கள்!

    நன்றி ஹேமா,

    நன்றி சாய், எனக்கும் ரஃபி, முகேஷ் என்று எல்லோரையும் பிடிக்கும் என்றாலும் கிஷோர் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்!. கிடாரோடு என்றதும் எனக்கு உடனடியாக சில கிஷோர் பாட்டுகள் நினைவுக்கு வருகின்றன! கட்டா மிட்டா, யாதோன் கி பாராத், ப்ரியத்தமா பாடல்கள்..!

    நன்றி அப்பாவி தங்கமணி.

    பதிலளிநீக்கு
  12. //நீண்ட நாள் ஆசை. சில பல காரணங்களால் தள்ளிக் கொண்டே போன் ஆசை.//
    :) மிகவும்....மிகவும் நன்றி! எனக்கு கிஷோர் பாடல்கள் என்றுமே மிக மிக ஸ்பெஷல். ஹிந்தி சுத்தம் இல்லை படு சுத்தமா தெரியாது. ஆனால் பல பாடல்களை இன்றும் மிகவும் ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் முதன் முதலில் தற்செயலாக கேட்ட கிஷோர் பாடல் 'Gata rahe meradil'. அன்று அவர் குரலுக்கு மயங்கியதுதான், இன்று வரை மீளவில்லை. 'andhi' பட பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் அழுது விடுவேன். 'chingari' பாட்டிற்கு அடிமையே ஆகிவிட்டேன். 'jaanejaan', 'gum hai kisi' 'meri soni' இந்த பாடல்கள் மேல் காதலே உண்டு. 'kati patang', 'anamika', 'julie', 'prem pujari', 'mehbooba', 'abhimaan' இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

    உங்கள் அடுத்த பயமுறுத்தலை விரைவில் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    'அச்சா ஜி மை ஹாரி' ரபி அவர்கள் பாடியது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. கமென்ட் போட்டபிறகு தான் அந்த விடியோவே பாத்தேன்.. முதல் ரெண்டு விடியோ மட்டும் தான் முதலில் தெரிந்தது.. பாட்டை ரொம்ப ரசிப்பேன் - விடியோவை ஏன் பாத்தோம்னு ஆயிடுச்சு போங்க.

    அச்சாஜி - மீனாக்ஷி இந்தி படு சுத்தமா தெரியாதுனுட்டு இந்தப் போடு போடுறீங்களே? உங்களை நம்ப முடியாது போலிருக்கே? யாருனா கவனிக்கறாங்களுனு பாத்தேன், எனக்கு தெரியும் ரபி தான்னு... (இதுக்குத் தான் மீசை வக்கறதில்லை)

    பதிலளிநீக்கு
  14. கீழ் கண்டவைகளையும் அந்த ரத்தினங்களுடன் சேர்த்துகொள்ளுங்கள்.

    க்யா நசாரே க்யா சிதாரே --- ஜ்ஹீல் கி உஸ்பார்
    ஜிந்தகிகே சபர் மெய்ன் ---- ஆப் கி கஷம்
    தில் க்யா கரே ---- ஜுலி

    குறிப்பிட்ட அத்தனை பாடல்களும் யு டியுபில் கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. வாங்க மீனாக்ஷி, இது உங்கள் 'நேயர் விருப்பமா'கவே ஆகி விட்டது. கிட்டத் தட்ட ஒன்பது மாதங்களுக்கு முன் கொடுத்த வாக்குறுதியை நினைவு படுத்திக் கொண்டே இருந்தீர்கள். கிஷோர் லிஸ்ட் எங்களிடம் நிறைய...நிறைய...ஒவ்வொன்றாக அவ்வப்போது ரசிப்போம். கக்கு மாணிக்கம், நீங்கள் கொடுக்கும் ஆதரவினால் இன்னும் நிறைய பயமுறுத்தலாம்!!

    அப்பாதுரை, மீள்வருகைக்கு நன்றி...நிறைய பாடல்கள் காதால் கேட்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றும். காட்சிகளைப் பார்த்தால் பாடலின் மீதுள்ள ஆசை விட்டுப் போகும்!

    நன்றி கக்கு மாணிக்கம், ஆப் கி கசம் படத்தில் அனைத்துப் பாடல்களுமே அருமையான பாடல்கள். ஆர் டி பர்மன் மறைந்த நாள் அன்று நேஷனல் சேனலில் இந்தப் படம் போட்டுதான் அஞ்சலி செலுத்தினார்கள்

    பதிலளிநீக்கு
  16. அர்த்தம் தெரிந்தால், இன்னும் ரசிப்பேன் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. சித்ரா சொல்வது சரி .. வேறு ஏதோ "ஹமாரா ப்ளாக்"-க்கிற்கு வந்துவிட்டோமோ என்று குழம்பிவிட்டேன். சாம்பிளுக்கு ஒரு பாடல் கேட்டேன். கிஷோர் குரல் இனிமையாக ஒலிக்கிறது.
    கற்பூர வாசனைக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  18. கிஷோர், ரஃபி.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! ஆபீசுக்குள்ளெ இருக்கும் போதே சித்ரஹார் பார்த்த இஃபெக்ட், நன்றி!

    பதிலளிநீக்கு
  19. நன்றி Chitra, மோ.சி.பாலன்,

    முதல் வருகைக்கு நன்றி பொற்கொடி, அடிக்கடி வாங்க...

    பதிலளிநீக்கு
  20. முதல் வருகைலாம் இல்ல, ரொம்ப நாள் முன்னாடி வந்துருக்கேன், but எத்தனை url தான் நானும் ஞாபகம் வெச்சுக்கறது!! :)

    பதிலளிநீக்கு
  21. porkodi என்று எங்கள் எடிட்டரில் அடித்தால் போர்க்கொடி என்று வருகிறது. இப்படி ஆனிக்கொரு முறை மார்கழிக்கு இன்னொரு முறை என்று வந்தால் எங்களுக்கும் மறந்து போகிறது.

    பதிலளிநீக்கு
  22. கிஷோர்குமார்....எதை விடுப்பது எதைத் தொடுப்பதுன்னு யோசிக்கவைப்பவர்.அமிதாப் ஜயா காம்பினேஷனுக்க்கும் அவர் குரல் சேரும்.
    ராஜெஷ் கன்னா மும்டாஜ் குரலுக்கும் சேரும்.
    அனாமிகா பாட்டும்,மெரே சப்னோகி ரானி, ஆனந்த் படத்தில் வரும் ஜிந்தகி...,யே மெரே தேரே லியே கீ சாத் ரங் மே சப்னே ஹுவே' ஆப் கி கசம்,காதா ரஹே மேரா தில், மயங்கிக் கிடக்கவே கிஷோரின் குரல் படைத்தார் இறைவன்.

    பதிலளிநீக்கு
  23. oh mere dhil ki chein....
    musaaffir hoon yaaro,

    mera jeevan kora kaagaz,

    1942 a love story songs
    more and more:)

    பதிலளிநீக்கு
  24. மீனாக்ஷியின் அத்தனை பாடல்களுக்கும் நானும் அடிமை.நன்றி மீனாக்ஷி.
    நான் குறிப்பிட்ட ஒரு பாடல் முகேஷ் பாடியது.மன்னிக்கணும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!