தினமலரில் சமீபத்தில் ரசித்த ஜோக். ராகுல் காந்தி திடீர் திடீரென உத்தரப் பிரதேசத்தில் நுழைந்து ஏர் பிடிக்கிறேன், கூழ் குடிக்கிறேன், ஏழைகளுடன் குடிசையில் தங்குகிறேன் என்று ஃபிலிம் காட்டிக் கொண்டிருப்பதை கிண்டலடிக்கும் ஜோக். "சீக்கிரம் கூழைக் குடிச்சித் தொலை.. ராகுல் அடுத்த தெரு கிட்ட பாத யாத்திரை வந்துட்டாராம்.." நியூஸ் சானல்களுக்கு ராகுல் ஃபாலோ அப் நல்ல தீனி.
தயாநிதி ராஜினாமா செய்த நாளில் மற்ற அனைத்து சேனல்களும் அதைச் சொல்ல கலைஞர் டிவியில் மட்டும் 'பிரபுதேவா ரமலத் விவாகரத்துக்கு முக்கியத்துவம் தந்த அளவு இதைப் பற்றி ஒரு வரி கூட கிடையாது! தி மு கவுக்கு இரண்டு இடம் நிறுத்தப் பட்டுள்ளது என்கிறது காங்கிரஸ். பிரச்னை இல்லாமல் இருக்க வேண்டுமானால் அவர்களுக்குக் கொடுக்க புதிய துறைகள் உருவாக்கலாம். அறிக்கைத்துறை, சமாளிப்புத்துறை, இப்படி...
"மீடியாக்கள் ராஜ்ஜியம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் நடக்கிறது... யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம்...தயாநிதி விதிவிலக்கல்ல" என்பது கலைஞரின் கருத்து. கலைஞர் டிவி, சன் டிவி மீடியாக்கள் இல்லையா... இவர்கள் செய்யாததா... இது ஒருபுறமிருக்க இதில் ஓரளவு நியாயம் இருக்கிறது.
சமீபத்தில் அன்னா ஹசாரே பாபா ராம்தேவ் ஆகியோருக்கு மீடியாக்கள் தந்த முக்கியத்துவம் ஒரு யோக்கியமான காரணத்துக்காக (கங்கையைக் காப்பாற்றுங்கள்) இந்த வருடம் பிப்ரவரி முதல் உண்ணாவிரதம் இருந்து யாராலும் கவனிக்கப் படாமல் உயிர் நீத்த சுவாமி நிகமானந்தா பற்றி செய்தி எங்காவது வெளியில் வந்ததா... துக்ளக்கிலும் கல்கியில் ஞானியும் சொல்லியிருக்கிறார்கள். சம்பவம் நடந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் பா ஜ க வும் கண்டு கொள்ளவில்லை, காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை, மீடியாக்களும் கண்டு கொள்ளவில்லை.
ஆனால் எல்லோரும் கண்டு கொண்ட ஆட்டம் ஒன்று உண்டு! ராம்தேவின் நள்ளிரவு போராட்டக் கலைப்புக்கு கண்டனம் தெரிவித்த நிகழ்வில் பி ஜே பியின் சுஷ்மா ஸ்வராஜ் நடனமாடியது செய்தியாகியதாம். தேசபக்திப் பாடல்களுக்குத்தானே ஆடினேன் என்ன தவறு என்றாராம் அவர்! ஆனால் நடுத்தர மக்கள் உண்மையிலேயே ஆடிப் போய்விட்டார்கள் கேஸ் சிலிண்டர் அநியாய விலை ஏற்ற விவரம் கேட்டு.
பத்மநாப சுவாமியின் நகைப் பொக்கிஷத்தை உலகுக்கு காட்டிக் கொடுத்த சுந்தரராஜன் காலமாகி விட்டாராம். 70+ வயது. இயற்கை மரணமாகத்தான் இருக்கும். இவர் இந்திராகாந்திக்கு ஆலோசகராக இருந்தவராம். கோவிலுக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ள இவர் வீடு நோக்கி தினமும் ஒரு எதிர்ப்பு ஊர்வலம் நடந்ததாம். தெருவில் எதிர்ப்படுவோர் எல்லாம் இவரைத் திட்டிக் கொண்டே இருந்தார்களாம். இனி அதற்கெல்லாம் தேவை இல்லை. அவரை எதிர்த்து குதித்துக் கொண்டு இருந்தவர்கள் அடங்கி விட்டாலும் ....
பிடதி ஆஸ்ரமத்தில் குருபூர்ணிமா அன்று நடந்த நித்யானந்தரின் புவி ஈர்ப்பு விசையை எதிர்க்கும் நிகழ்ச்சி அல்லது நடனம் எல்லா சேனல்களிலும் ஒளி பரப்பப் பட்டது. உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் 'நம்பி' தலையை உயர்த்தி யோகாவின் அரைமண்டியிட்ட போஸில் அப்படியே எழும்பிக் குதிக்கத் தொடங்கியது கண் கொள்ளாக் காட்சி! ரஞ்சியும் இருந்தார். சும்மா இருந்தவர் நித்தியானந்தா சைகை காட்டியதும் அவரும் ஒரு முறை முயற்சித்தார். ஒரு நிருபர் எதிர்த்ததையும் பார்க்க முடிந்தது. உச்சகட்ட பரவச நிலைக்குப் போன ஒரு பெண்மணி அந்தக் கால பாம்பு டான்ஸ் போல ஆடத் தொடங்கி தரையில் விழுந்து நெளிய அருகில் சேரில் அமர்ந்திருந்த ஒரு வயதான பெண்மணி அதைப் பார்த்த பார்வையில் அவர் கேலியாகப் பார்க்கிறார் என்று நம்பத் தொடங்கிய கணத்தில் அவர் உடம்பிலும் அதிர்வுகள் தொடங்கி, பாம்பு டான்சுக்கு ரெடியானதைப் பார்க்க முடிந்தது. தெய்வீகப் பரவச நிலை என்று இதை ஏற்றுக் கொண்டால் கூட - மனிதம் என்பதே சற்றும் இல்லாத சில நிகழ்வுகளையும் வருத்தத்துடன் சொல்லவேண்டி உள்ளது.
ஓரிரு வருடங்களுக்கு முன்னால் அமைச்சர்கள் தலைமைச் செயலர் எதிரிலேயே ஒரு போலீஸ் ஆபீசர் வெட்டிக் கொல்லப் பட்டதைப் பார்த்தோம். உதவி கேட்டு அவர் எழுந்து எழுந்து அலறியும் யாரும் பக்கத்திலேயே போகவில்லை அப்போது. அதே போல ஒரு காட்சி சென்ற வாரம் கோவையில் அரங்கேறியது. 'குடிமகன்கள்' இடையே நடந்த சண்டையில் பைக்கில் மோதி கீழே தளளி அடித்துத் துவைத்து, தலையில் கல்லைப் போட்டு கொல்லுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெரிய கூட்டமான பொது ஜனம்...! cctv யில் ரெகார்ட் ஆனதை சேனல்களில் தமிழ்பட காட்சி போல காட்டிக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலேயே போலீஸ் ஸ்டேஷன் வேறு இருந்ததாம். ஏன் இந்தக் கொடுமையை பார்த்துக் கொண்டிருந்த பொது ஜனத்தில் ஒருவர் கூட தட்டிக் கேட்கவோ தடுக்கவோ முன் வரவில்லை? சிக்னல் விழுந்ததும் ஏதோ ரோடில் பிச்சை எடுப்பவர்களைத் தாண்டிச் செல்வது போல வாகனங்கள் தங்கள் வேலையைப் பார்க்க விரைந்தது ஏன்? கலிகாலம்.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் ...
in and out of love என்பது இயற்கை தானே?
பதிலளிநீக்குநித்யானந்தா பலே ஆசாமி போலிருக்குதே?
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநல்ல கலவையான தொகுப்பு.
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குசீக்கிரம் கூழைக் குடிச்சித் தொலை.. ராகுல் அடுத்த தெரு கிட்ட பாத யாத்திரை வந்துட்டாராம்//
:):):)
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குஏன் இந்தக் கொடுமையை பார்த்துக் கொண்டிருந்த பொது ஜனத்தில் ஒருவர் கூட தட்டிக் கேட்கவோ தடுக்கவோ முன் வரவில்லை?//
நம்மள யாராவது சப்போர்ட் பண்ணினா தைரியமா தட்டிக் கேட்கலாம்.
பல்சுவை தொகுப்பு நன்றாக இருந்தது. கலைஞர் டிவிக்கும், சன் டிவிக்கும் - சமச்சீர் கல்வி திட்டம் குறித்த செய்தி இல்லையென்றால் ரெம்பவே திண்டாடமாக போயிருக்கும்.
பதிலளிநீக்குஇந்த பூமிஇன்னமும் நித்தியை நம்புவது ஓரு கொடுமை ...அதை வைத்து மிடியா இன்னமும் ஓட்டுவது கொடுமையிலும் கொடுமை
பதிலளிநீக்குபல் சுவை பதிவர் அவர்களுக்கு என் முதல் வணக்கம்.
பதிலளிநீக்குஅருமையான செய்திகளை
அமர்க்களமாய் தொகுத்து
அதற்கு ஏற்றர் போல
கருத்தும் இட்டு இருப்பது
ரசிக்கும் படியாக இருந்தது
நித்தி ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சி வலையில் கிடைக்கிறதா? இருந்தால் லிங்க் கொடுக்கவும். [ஹி...ஹி....ஹி...] அப்புறம், ரஞ்சி, நித்தி ரெண்டு பேரும் இந்த மீடியா பயல்கள் செய்த வேலையால் பிரிஞ்சு போயிருந்தாங்க, இப்போ சந்தோஷமா இருக்காங்களா..... ஐயையோ தப்ப நினைக்காதீங்க, ஆன்மீக குருவும் சிஷ்யையுமாக ஆனந்த பரவச நிலையை எட்டிக்கிட்டு இருக்காங்கலான்னுதான் கேட்டேன்....
பதிலளிநீக்குhttp://www.youtube.com/watch?v=i7vp0NLEDoM
பதிலளிநீக்குhttp://www.youtube.com/watch?v=cn78w5S-wtA
பதிலளிநீக்குhttp://www.youtube.com/watch?v=LA3GEgAdW4w
http://www.youtube.com/watch?v=GgFzAzmhGAs
தொகுத்து வழங்கிய விதம் அருமை. சிலிண்டர் விலை. நடுத்தர மக்கள் மட்டுமல்ல, ஏழைமக்கள் பலரும் கூட மண்ணெண்ணெய் வாங்க சிரமப் பட்டு இப்போதுதான் கேஸுக்கு மாறி சற்றே நிம்மதியாகியிருந்தார்கள்.
பதிலளிநீக்குபல்சுவைப் பகிர்வுகள் அருமை. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குgood mixer post..
பதிலளிநீக்குசுவாரசியமான பதிவு!
பதிலளிநீக்குஇவங்களெல்லாம் சாமி இல்ல ஆசாமிகள்
பதிலளிநீக்குகலவையான, சுவாரஸ்யமான ஒரு பதிவு .
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி
கொஞ்சா நாளா சொல்லனும்னு நினைக்கிற விஷயம், ஒரு ஆங்கிலப் படத்தில் செய்தித் தாள் ஒன்று பரபரப்பு செய்திகளை போட்டு புகழ் பெறும். சிலகாலம் கழித்து அத்தகைய செய்திகள் கிடைக்காது என்ற நிலை வரும் பொழுது, அந்த நிறுவனமே அத்தகைய நிகழ்வுகளை உருவாக்கும்.
பதிலளிநீக்குதமிழ் பதிவர்களும் கிட்ட தட்ட அத்தகைய மனோநிலையில் இருக்கிறார்கள் இப்பொழுது எனத் தோன்றுகிறது,
////சீக்கிரம் கூழைக் குடிச்சித் தொலை.. ராகுல் அடுத்த தெரு கிட்ட பாத யாத்திரை வந்துட்டாராம்//
பதிலளிநீக்குஇள வயதில், பசி இருந்த அளவு உணவில்லை. அப்போது என் அண்ணன் வரும் முன் நான் முண்டி அடித்து கொண்டு கிடைத்ததை அள்ளி போட்டுக்கொள்ள என் அம்மா அப்படி தான் சொல்லுவாள். இப்போது உணவு இருக்கு ஆனால் பசி இல்லை ! என்ன கொடுமை சரவணன் !
நித்தி ராசியை பாருங்களேன். ஒரு ஆண் வர்கத்தையும் காணும். மனம் மயக்கும் பூக்கள், எங்கெங்கு காணினும் பெண்கள் கூட்டம் (வயதானவர்களை கழித்து பார்த்தாலும் !). எனக்கென்னவோ, இவரை இப்படி எல்லோரும் முன் வைத்தால் தான் வீடியோ எடுக்க தேவை இல்லாமல் இருக்கும் !
அரசியலில் காசு கொடுத்து / சரக்கு கொடுத்து லாரியில் அழைத்து வந்ததுபோல் இந்த கும்பலும் அப்படி வந்தவர்கள் போல் தான் எனக்கு பட்டது.
ரஞ்சி பக்கத்தில் உள்ள பெண்ணை பார்த்து சிரித்து பேசும்போதே தெரியவில்லையா.
தமிழ் தொலைக்காட்சி போல் ஜோக் எதுவும் கிடையாது. ஜெயலலிதாவை காணும்போது சன் டிவி, மைக் இருக்காது. கருணாநிதியை காணும்போது ஜெயா டி.வி. மைக் இருக்காது. அடுத்தமுறை செய்தி பார்க்கும்போது காணுங்கள்.
நான் பொதிகை செய்தி தவிர மற்றவை காணுவதில்லை.
நித்யானந்தா கோஷ்டியின் குதியாட்டம் பார்த்தேன். கலிகாலம்.
பதிலளிநீக்குகடைசி செய்தி மனதை கனக்க வைத்தது. டி.வியில் பார்த்துத் தொலைத்தேன்.
-
நித்தியானந்தம் செய்த தவறு என்ன? பெண்ணுடன் சல்லாபமாக இருப்பது தவறா? இல்லை வேறு ஏதாவது புரட்டு நடக்கிறதா? இணையத்தில் தேடியவரைக்கும் வேறே எந்த விஷயமும் காணோமே?
பதிலளிநீக்குநித்தியானந்தாவின் ஆங்கிலம் ஆச்சரியமாக இருந்தது.
இத்தனை வெறுப்பின் இடையிலும் நம்பிக்கையோடு ஆட்டம் போடும் இவர் பலே ஆசாமி தான்.
ராகுல் காந்தி ஜோக் சூப்பர்.
பதிலளிநீக்கு