செவ்வாய், 13 டிசம்பர், 2011

உள் பெட்டியிலிருந்து 12 2011

                       
மனோதத்துவம்..

அர்த்தமில்லாத விஷயத்துக்குக் கூட அடக்க முடியாமல் சிரிக்கும் ஒருவன் மனதில் ஆழ்மன சோகம் உண்டாம்!
  
ரொம்பத் தூங்கும் ஒருவன் தனிமையை நிறைய உணர்பவனாக இருக்கலாமாம்.

ரொம்பப் பேசாதவன், அதே சமயம் பேச ஆரம்பித்தால் வேகமாகப் பேசுபவன் நிச்சயம் வெளிப்படுத்தாமல் உள்ளே ரகசியங்களைக் கொண்டிருக்கிறானாம்.
   
அழமுடியாதவன் பலவீனமானவனாம்.

அசாதாரணமான முறையில் பதட்டமாக சாப்பிடுபவன் டென்ஷன் அதிகமுள்ளவனாம்.

நேரமில்லா நிலையிலும் வேளையில்லா வேளையிலும் உங்களைப் பற்றி விசாரிக்கும் நபர் உங்களை விரும்புகிறாராம்.

--------------------------------------------------
மன்னிப்பு

தவறிய கணங்களில் உதவும் மன்னிப்பு உடைந்த நம்பிக்கைகளில் உதவுவதில்லை.

-----------------------------------------------------
உறவின் பலம்

ஒற்றுமைகளைக் கண்டு பிடிப்பதிலும் வேற்றுமைகளை மதிப்பதிலும் உறவின் பலம் இருக்கிறது.

------------------------------------------------------  
இடுக்கண் வருங்கால் பாடுக! 

பிரச்னைகள் அதிகமாகும் போது குரலெடுத்துப் பாடுங்கள். நாராசமான நம் குரலை விட அந்தப் பிரச்னைகள் பெரிதில்லை என்ற ஞானம் வரும்!
  
----------------------------------------------------
சமாளிப்'பூ'

நான் என்ன சொன்னேன் என்பதற்கு மட்டும்தான் நான் பொறுப்பு... அதை நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டீர்கள் என்பதற்கல்ல!
  
--------------------------------------------------------
நினைவுகள்

இணையும்போது உருவாக்கி பிரியும்போது பாதுகாக்கிறோம். சந்திப்பதும் பிரிவதும் வாழ்வின் வழிகளாயின் பிரியும்போது மீண்டும் சந்திப்போம் என்று நம்புவதும் வாழ்வின் நம்பிக்கைகள். 

--------------------------------------------------------
எதில் வெற்றி?

யாரையாவது முட்டாளாக்குவதில் நீங்கள் வெற்றி பெறும் கணத்தில், நண்பர்களே தெரிந்து கொள்ளுங்கள்... அவர் முட்டாள் என்று நினைக்காதீர்கள்.. அவர் அந்த அளவு உங்கள் வார்த்தைகளை நம்பியதால் முட்டாளானார் என்பதை உணருங்கள்.

------------------------------------------------ 
நான் யார், நான் யார், நீ யார்? 

ஒரு முட்டாள் தான் முட்டாள் என்று உணரும்போது அறிவாளியாகிறான்.
ஒரு அறிவாளி தான் அறிவாளி என்று எண்ணும் கணத்தில் முட்டாளாகிறான்!

---------------------------------------------------
"நச்"

நல்லவனாக இருங்கள். ஆனால் நிரூபிக்க முயலாதீர்கள்.

-----------------------------------------------------
"எனக்கொரு ஆசை இப்போது..."
  
இரண்டு நாய்கள் முத்தமிட்டுக் கொண்டதைப் பார்த்துக் கொண்டிருந்த காதலன் காதலியிடம், "நீ தவறாக நினைக்கவில்லை என்றால் நானும்..."

காதலி இடைமறித்தாள்.."ஓகே, ஆனால் ஜாக்கிரதை...கடித்துவிடப் போகிறது..." 

-----------------------------------------------------
       

13 கருத்துகள்:

  1. உள்பெட்டியிலிருந்த அனைத்தையும் ரசிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  2. ஒற்றுமைகளைக் கண்டு பிடிப்பதிலும் வேற்றுமைகளை மதிப்பதிலும் உறவின் பலம் இருக்கிறது.

    அனைத்தும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தது பதிவின் வெற்றி!

    பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. அருமை அருமை அனைத்து
    உள்பெட்டி விஷயங்களும்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    பதிலளிநீக்கு
  4. எதையென்று குறிப்பிடமுடியாமல் எல்லாமே மனதில் பதிகிறது.2-3 முறை வாசித்துவிட்டேன் !

    பதிலளிநீக்கு
  5. நச் மட்டுமின்றி எல்லாமே நச். நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  6. உள் பெட்டியிலிருந்த விஷயங்கள் சிறப்பாக இருக்கு. கடைசி ஜோக்,அருமை.

    பதிலளிநீக்கு
  7. முட்டாள்கள் குறித்த இரண்டு தத்துவங்களும் ரொமப அருமை. (என் ஏரியா என்பதாலோ?? :-)))))) )

    பதிலளிநீக்கு
  8. அத்தனை செய்திகளும் அருமை. ஹுசைனம்மா சொன்னது போல முட்டாள்களைப் பற்றிய குறிப்பு மிக உண்மை.
    கடி ஜோக் உட்பட.

    பதிலளிநீக்கு
  9. யாரு முட்டாள் யார் அறிவாளி? சரியான வட்டமா இருக்குதே?

    பதிலளிநீக்கு
  10. //ஒரு முட்டாள் தான் முட்டாள் என்று உணரும்போது அறிவாளியாகிறான்.//
    ஹை! ஈஸியா அறிவாளி ஆயிடலாம் போல இருக்கே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!