வெள்ளி, 2 டிசம்பர், 2011

ஜேகே 23 - சிந்தனைப் புரட்சி

      
தர்க்க வழி மார்க்கத்தையோ, மதவழி மார்க்கத்தையோ அல்லது சாராம்சமில்லாத விவாதத்தையோ உங்களுக்குப் பிரச்னைகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் வழியாக நான் சொல்லியிருந்தால், அது பொறுப்பற்ற செயலாகும், இல்லையா?  ஆனால் இந்த நாட்டில் மட்டுமின்றி, உலக சமய வல்லுனர்கள் நம்மைத் தளைப் படுத்துகிறார்கள்.  சமூக் நியதிகள் நம்மைத் தளைப் படுத்துகின்றன. சமூகத்தின் பகுதியாயிருக்கும் நடத்து குடும்பமும் நம்மைத் தளைப் படுத்துகின்றன.  சமயம், சமூகம் மற்றும் குடும்பம் விதிக்கும் தளைகள் எல்லாம் கடந்த காலத்தின்பாற்பட்டவை.  ஆக, தனி மனிதன் என்று எவரும் இல்லை என்ற உண்மை மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாய் இருக்கிறது. பொது நீர்த் தேக்கத்திலிருந்து அனைவரும் தண்ணீரைப் பெறுவது போல, தனி நபரின் மனம், சமய, சமூகக் கட்டுப்பாடுகளின் அடிப்படியில் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாகவே தன் செயலைத் தீர்மானிக்கிறது.  ஆக, தனி நபருக்கும் சமூகத்திற்கும் இடையே உள்ள பிரிவு பொய்யானது.  தளைபடுத்தப்படுதல் ஒன்று மட்டுமே உள்ளது. 
      
நிகழ் காலத்திலும் கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் நம்மைத் தளைப்படுத்தும் காரணியாக இருப்பது 'நான், எனது' என்ற எண்ணம்தான். அதே எண்ணம்தான் இப்போது தளைகளிலிருந்து நமக்கு விடுதலைப் பெற்றுத் தர முயற்சிக்கிறது. ஆக, நான், எனது என்ற எண்ணம்தான் அனைத்துத் தளைகளுக்கும் ஆணிவேராய் இருக்கிறது. 'நான், எனது' என்ற எண்ணம், கடந்த காலத்தின் சாரம், அதுவே காலம், அதுவே துக்கம் -  அது, தன்னை, தன்னிலிருந்து விடுவிக்கப் பெருமுயற்சி செய்கிறது.
     
'நான், எனது' இல்லா விட்டால் நீங்கள் தளை படாதவர். தளைப்  படாததால் நீங்கள் யாருமில்லை, ஒன்றுமில்லை. 
    
குறிப்பிட்ட ஒன்றாக ஆக வேண்டுமென்ற முயற்சியானது தளைப் பட்டிருப்பதன் செயலாக, தாக்கமாக இருக்கிறது. 
    

9 கருத்துகள்:

  1. எளிய வார்த்தைகளில் ஜேகே-யின் சிந்தனையைப் பகிர்ந்த விதம் அருமை.

    //நிகழ் காலத்திலும் கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் நம்மைத் தளைப்படுத்தும் காரணியாக இருப்பது 'நான், எனது' என்ற எண்ணம்தான். //

    உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  2. ’நான்’ என்பதை அகந்தை என்றும் சொல்கிறார்களே !

    பதிலளிநீக்கு
  3. //நான், எனது' இல்லா விட்டால் நீங்கள் தளை படாதவர். தளைப் படாததால் நீங்கள் யாருமில்லை, ஒன்றுமில்லை.//

    'நான்', 'எனது' இருந்தால் தளைபட்டவர். புரிகிறது.

    தளைப்பட்டதால் நீங்கள்? நீங்கள் உண்டு என்று ஆகிறதா?..

    இந்த இடத்தில் புரியவில்லையே?
    கொஞ்சமே கொஞ்சமாவது விளக்கிச் சொல்லலாமே?..

    'நான்' 'எனது' ஆன அவையே பன்மையில் 'நாங்கள்' 'எங்கள்" என்றாயின்...

    பதிலளிநீக்கு
  4. படித்திருந்தாலும் இப்போதும் சிந்தனையில் ஆழ்த்தும் வார்த்தைகள்.

    பதிலளிநீக்கு
  5. தளைப்படாமல், ஒன்றும் இல்லாமல் போவது முடிகிற காரியாமா? அப்படி யாரவது இருந்திருக்கிறார்களா?
    'Make a mark in the world' - தளைப்படாமல் தடயம் பதிக்க முடியுமா!

    பதிலளிநீக்கு
  6. என்னங்க ஆச்சு?? அதிக மழையினால் தத்துப்பித்துவமா? இல்லைனா கிறுக்குத்தனமான பதிவுகளால் வெறுத்துப் போயிட்டீங்களா? :)))))))

    apart from joking,

    agreed with Meenakshi. இந்தப் பதிவுகளின் மூலம் நீங்களும், இந்த போதனைகளின் மூலம் ஜே.கே.யும் தளைப்பட்டே இருக்கிறீர்கள். இது ஒரு கோணம்! :))))

    பதிலளிநீக்கு
  7. சாரிங்க.. தவளைக் கதைங்களைப் படிச்சு படிச்சு இதையும் 'தவளைப்படாமல்'னே இத்தனை நாளும் படிச்சிட்டிருந்தேன். அப்பவும் புரியலேங்கறது வேறே விஷயம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!