திங்கள், 16 ஏப்ரல், 2012

எட்டெட்டு பகுதி 14::பால் கணக்கு.



கே வி (மனதுக்குள்) என்ன? ராமாமிர்தம் பால்காரரா? பால்காரருக்கும் பால் பேரிங்குக்கும் என்ன சம்பந்தம்? மாயா எப்படி பால்காரர் உதவுவார் என்று கூறினார்? சரி பார்ப்போம். 


   
கே வி: நான் கூறிய விஷயங்கள் எல்லோருக்கும் புரிந்ததா? நீங்கள் எல்லோரும் உங்கள் இடத்திற்குச் செல்லலாம். இந்த அலுவலகத்தின் முதன்மை மேலாளர் தாஸ் அவர்கள் கூறியது போல, நீங்கள் எல்லோரும் உங்கள் ஒத்துழைப்பை அளிப்பீர்கள் என்று நம்புகின்றேன். 

எல்லோரும் அறையிலிருந்து ஒவ்வொருவராக வெளியேறினர். டி பி அகர்வால் எல்லோரும் சென்ற பிறகு, கே வி அருகில் வந்து, "சாரி சார். கொஞ்சம் அதிகப் பிரசங்கித் தனமாக பேசி விட்டேனோ ...?" 

கே வி : அதெல்லாம் ஒன்றும் இல்லை அகர்வால் சார். நீங்கள் சொன்ன பால்காரர், ராமாமிர்தத்தின் விலாசம் கிடைக்குமா? 

அகர்: ஓ நிச்சயம் கொடுக்கின்றேன் சார். இப்பொழுது இன்னொரு சம்பவமும் ஞாபகத்திற்கு வருகின்றது. நேற்று, ஜூலை மாதத்திற்கான பால் கணக்குக்கு பணம் வாங்க வந்த பொழுது, ராமாமிர்தத்துக்கும், என் மனைவிக்கும், பால் கணக்கில் ஏதோ தகராறு. ராமாமிர்தம், நாங்கள் ஜூலை மாதத்தில் வாங்கிய பாலுக்கு,அறுபத்திரண்டு ரூபாய் அதிகமாகக் கொடுக்கவேண்டும் என்றார். என் மனைவி, ஜூலை மாதக் கேலண்டரில் எழுதி வைத்திருக்கும் பால் கணக்கை, ஒரு தாளில் எழுதி ராமாமிர்தத்திடம் கொடுத்து, 'இதுதான் கணக்கு. இதிலும் சந்தேகம் இருந்தால், என் கணவரின் அலுவலகத்திற்கு நாளை வரப்போகும் ஆடிட்டர் (நான் ஏற்கெனவே ஆடிட் பற்றி அவளுக்குச் சொல்லியிருந்தேன்) உன்னுடைய வீட்டுக்கு வந்து, உன் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பார்' என்று கேலியாகச் சொன்னாள். 
             
கே வி: அட அப்படியா? நான் இப்பொழுதே உங்கள் பால்காரர் ராமாமிர்தத்தை சென்று பார்க்கின்றேன். முடிந்தால், உங்கள் வீட்டுப் பால் கணக்கையும் சீர் செய்யப் பார்க்கின்றேன். சிரிக்காதீர்கள் அகர்வால்ஜி! ஏதோ வந்த இடத்தில் என்னால் முடிந்த சிறிய உதவி. உங்கள் மனைவி பெயர் என்ன? 
           
அகர் : மாயா அகர்வால். 
   
(தொடரும்) 
              

9 கருத்துகள்:

  1. மாயாவாஆ!

    நன்றி! இதே மாதிரி கடகடன்னு அடுத்த பதிவையும் போடுங்க. இந்த மாதிரி கதையெல்லாம் விறுவிறுப்பு குறையாம படிக்கணும். அப்பதான் சுவாரசியமே.

    பதிலளிநீக்கு
  2. எங்கள் ப்ளாக்17 ஏப்ரல், 2012 அன்று 7:09 AM

    வினோத் குமார் இன்னும் வரவில்லை. அவருக்காக வெயிட்டிங்!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் .. உள்ளேன் ஐயா ...

    வாரம் ஒரு பகுதின்னு கணக்கு வைச்சு இருக்கீங்களா...

    வாரம் இருமுறை பதிவிட கூடாதா
    நன்றி
    வினோத்

    பதிலளிநீக்கு
  4. எங்கள் ப்ளாக்18 ஏப்ரல், 2012 அன்று 12:42 PM

    வாங்க வினோத். உங்களுக்காகத்தான் இவ்வளவு நேரம் கடை தொறந்து வெச்சிருந்தோம். வாரம் ஒரு பதிவு போடும்பொழுதே இந்தக் கதையை முப்பது பேருங்கதான் படிக்கிறாங்க, அதிலும் நாலு பேருங்கதான் கமெண்ட். வாரம் இரண்டு பதிவு இந்தக் கதைக்கு ஒதுக்கினால், வாசகர்கள் ரொம்பப் பேருங்க எங்கள் பக்கம் வராமல் சிக் லீவு போட்டுவிடுவாங்க!

    பதிலளிநீக்கு
  5. ஹும்ம்ம் ... கடமையை செய் பலனை எதிர்பாராதே...

    பதிலளிநீக்கு
  6. குரோம்பேட்டை குறும்பன்19 ஏப்ரல், 2012 அன்று 1:48 PM

    // Vinoth Kumar said...
    ஹும்ம்ம் ... கடமையை செய் பலனை எதிர்பாராதே...//
    உண்மைதான் -- பதிவாசிரியர் ஏதோ கடமைக்குக் கதை எழுதுகிறார். ஏதோ சில வாசகர்கள் கடமைக்கு அதைப் படிக்கிறார்கள்; அதிலும் ஏதோ சிலர் கடமைக்குக் கமெண்ட் எழுதுகிறார்கள். பதிவாசிரியரே - பாவம் அய்யா நீர்!

    பதிலளிநீக்கு
  7. மாயா அகர்வால்????

    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!