எனக்கும் கூட
காணி நிலம் வேண்டும் -
பால்கனியுடன் ஒரு மாடி அறை
அட்டாச்டு பாத்ரூமுடன்,
கீழே மெஸ் நடத்தும் மாமி -
இரு வேளை காபி, மதிய சாப்பாடு
இரவு டிபன், பால்
அப்பப்போ செகண்ட் டோஸ் காபி -
மாமி தந்து விட வேண்டும் (விலைக்குத்தான்)
பத்திரிகைக் கடை ஒன்று மஸ்ட்.
ஒரு நூலகம் கூட ரொம்ப ரொம்ப அவசியம். -
எல்லா லேட்டஸ்ட் வெளியீடுகளுடனும்.
சைக்கிளுடன் இருக்க வேண்டும்.
மருந்துக் கடை பத்திரிகைக் கடைகளுக்குப்
போய் வருபவனாக அவன் -
ஒரு கல்லூரி மாணவி
மாமிக்கு இருக்கட்டுமே -
மறந்து விட்ட ஒண்ணா
மாமி இரண்டாம் தாரமாக
இருந்தால் பெட்டர் -
குடியிருப்பு ஒழுங்கான வீதியாக
எல்லையில் ஓடும் ஆறு -
குளிக்க வசதியான படிக்கட்டுடன் -
ரொம்ப முக்கியம்
கரையில் ஒரு படர்ந்து விரிந்த ஆலமரம்.
தலைவைத்துப் படுக்க வேர்கள் புடைத்து -
இந்த சொர்க்கம்
எங்கே கிடைக்கும் -
எனக்கு வேண்டுமே.......
வேண்டவே வேண்டாம்
எனக்கு எப்போதும் -
ஒரு கடப்பாடு போல
வேளா வேளைக்கு
கட்டாய உணவு.
பேசத் தெரியாத,
படித்ததைப் பகிரத் தெரியாத
நட்பு, உறவு.
விஜய்களும், தனுஷ்களும், ரஜினிகளும்
அழையா விருந்தாளிகளாய்
தினம் தினம் வந்துபோகும்
முட்டாள் பெட்டி
வார, மாத பருவ ஏடுகள்.
மறந்து விட்ட ஒண்ணா
பதிலளிநீக்குமாமி இரண்டாம் தாரமாக
இருந்தால் பெட்டர் - //
எல்லாம் சரி, இது மட்டும் இடிக்குதே?
ஆனால் ஒரு விஷயம்! என்ன தான் சமைச்சுக் கொடுத்தாலும் ஒரு நாள் அதுவும் பிடிக்காமல் போகும்.
எனக்குக் கைக் கட்டுப் போட்ட 2010-ஆம் வருடம் இப்படித் தான் என் கணவர் ஒருத்தர் வீட்டில் சொல்லி வைச்சுச் சாப்பாடு வாங்கினார். ஒரு வாரம் எல்லாம் ஒழுங்காப் போச்சு; அடுத்த வாரம், உட்கார்ந்தவாறே நீ சொல்லிக் கொடு, நான் செய்யறேன்னு ஆரம்பிச்சார். :)))))
பதிலளிநீக்கு"பாஹே" யாரு????????????????????
பதிலளிநீக்குதினம் தினம் வந்துபோகும்
பதிலளிநீக்குமுட்டாள் பெட்டி//
பொதிகை, தூர்தர்ஷன் பாரதி, சங்கரா, எஸ்விபிசி பார்க்கலாம். :))))
//வார, மாத பருவ ஏடுகள். //
வாங்கறதே இல்லை. துக்ளக், கல்கி, கலைமகள் மட்டுமே வாங்கறோம். :)))))
Kadaisi paaravai rombave rasiththen!
பதிலளிநீக்குகாணிநிலம் வேணும்.யுத்தமில்லா பூமி வேணும்மாதிரி இந்த வேண்டுதல்கள் சாதாரண ஒரு மனிதனின் வேண்டுதல்கள்.நல்லாத்தானிருக்கு.இதைக்கேட்ட உங்க 5 பேருக்கும் எல்லாம் அமைய வாழ்த்துகள் !
பதிலளிநீக்குஆஹா! இது சுகம்தான், சொர்கம்தான். எல்லாம் நல்லாதாங்க இருக்கு. வீட்டு உள்ள ஒரு ஊஞ்சல் இருந்தா இன்னும் நல்லா இருக்கும். ஆடிண்டே கதை படிக்கலாம். :)
பதிலளிநீக்குஎல்லாம் நடந்துவிடக் கூடிய
பதிலளிநீக்குஆசைப் போல்தான் தெரிகிறது
கொஞ்சம் அதிர்ஸ்டம் இருந்தால்...
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ரசித்து ரசித்து யோசித்துக் கேட்ட வரங்கல்.. வாழ்த்துகள்..
பதிலளிநீக்குமெஸ் நடத்தும் மாமியெல்லாம் தரமுடியாதாம்
பதிலளிநீக்குஆர்வீஎஸ் சொல்லச் சொன்னார்.
வேண்டியது அருளட்டும் அன்னை மகா சக்தி. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவேண்டாததையும் அருளும் சக்தியும் அவளிடமுண்டு.. என்செய்வது எம் இறைவியை?
இரவு டிபன், பால்
பதிலளிநீக்குஅப்பப்போ செகண்ட் டோஸ் காபி -
மாமி தந்து விட வேண்டும் (விலைக்குத்தான்)///
அப்போ சும்மா இல்லையா
இன்றைய பதிவு Theme-களை நீங்களே உருவாக்கலாம்
//வேண்டவே வேண்டாம்//
பதிலளிநீக்குஎல்லாம் தினமும் இயந்திரத்தனமாக நடக்க ஆரம்பிச்சுட்டா அலுத்துப்போய் கடைசியில் மாமி மெஸ்ஸையும் இப்படியே சொல்ல நேரிடும் :-))
நான் அமைதி கட்சி! :)))
பதிலளிநீக்குஅப்புறம் தூர்தர்ஷன் லோக்சபா சானல் பாருங்க. நல்லாவே இருக்கும். தரமான நிகழ்ச்சிகள் என்றால் தூர்தர்ஷன் மட்டுமே. ஒன் அண்ட் ஒன்லி.
நான் அமைதி கட்சி! :)))
பதிலளிநீக்குஅப்புறம் தூர்தர்ஷன் லோக்சபா சானல் பாருங்க. நல்லாவே இருக்கும். தரமான நிகழ்ச்சிகள் என்றால் தூர்தர்ஷன் மட்டுமே. ஒன் அண்ட் ஒன்லி.
அப்பப்போ செகண்ட் டோஸ் காபி - //
பதிலளிநீக்குஅப்பப்போக் குடிக்கிறது எல்லாமே செகண்ட் டோஸா எப்படி ஆகும்? 3வது, 4ஆவது, 5 ஆவது டோஸ் கடைசியா வீட்டிலே பெரிய டோஸா வாங்கிக் கட்டிக்கலாம்.