புதன், 10 ஏப்ரல், 2013

மனவரிகள்....


                                                                     
                                                                   



நதியில் ஓடும் நீராய்
காலம்
நீரோடு சென்று விட்டாலும்
சில
நினைவுகள் மட்டும்
நனைந்த மண்ணாய்
மனதில்
ஈரமாகவே எப்போதும்.

********************************************** 


ஒவ்வொரு
வளர்பிறையிலும்
வானம் பார்த்தபடி
காத்திருக்கிறேன்
நிலவு
வளர்ந்து
ஒருநாள்
வானத்தையே நிறைக்குமென...

***************************************************



இருப்பதில்
நாட்டமில்லாது
இல்லாததை நினைத்து
ஏதோ ஒன்றை
எப்போதும்
தேடிக் கொண்டேயிருக்கும்
மனம்.

**************************************************

 

பயணம் வீணாகாமல்
படுத்தபடி
வாசித்துக் கொண்டு வந்த
புத்தகம் விலக்கி
ஜன்னல் வழி
வானம் பார்க்கும்போதெல்லாம்
கண்ணில் பட்டது
என் கூடவே வந்த
ஏக்க நிலா....
விழுப்புரத்திலிருந்து
ஜன்னல் வழியே
என்னைப் பார்த்தபடியே
உடன் வந்தது
அந்த
ஏக்கத்தில் மெலிந்த
அரைநிலா.
.
விடாமல் விரட்டிய
நிலவை
தாம்பரத்தில் துறந்து
என் வழி நடந்தேன்.
நிமிர்ந்து பார்க்காவிடினும்
நிலா கூட வருவது
நீரில் தெரிகிறது..

26 கருத்துகள்:

  1. நீரில் மிதக்கும் நிலா மனதைப் பறித்தது. மனம் பற்றிய கவிதையும் அருமை. மற்றவை ஓ.கே. (ஹும்...! என்னமோ பெருசா நூறு கவிதை எழுதிக் கிழிச்சுட்ட மாதிரி நன்று, ஓகேன்னு விமர்சனம் தர்ற பந்தாவப் பாருன்னு திட்டுது மனஸ்)

    பதிலளிநீக்கு
  2. கூட வரும் நிலா நிறைய யோசிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. திருப்தி இல்லாத எதையாவது தேடிக் கொண்டிருக்கும் மனசை விட, துரத்தும் நிலாவை ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  4. கடைசிக் கவிதை ஏற்கெனவெ படிச்சது. மத்த இரண்டும் அருமை.அதுவும் இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலையும் மனம்! என் இப்போதைய நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. :))))

    பதிலளிநீக்கு
  5. ஜூப்பரு..

    இதே மாதிரி நிலாக்கவிதை நானும் ஒண்ணு வெச்சிருக்கேன். 'எப்ப வெளியிடப்போறே?'ன்னு உங்க பதிவுல வந்து மிரட்டலா ஞாபகப்படுத்துது நிலா

    பதிலளிநீக்கு
  6. //பயணம் வீணாகாமல்
    படுத்தபடி
    வாசித்துக் கொண்டு வந்த.. //

    கவிதையை மேற்கொண்டு வாசித்த பொழுது தான் தெரிந்தது --
    வானம் பார்க்காத நேரமெல்லாம் வீணான நேரம் என்று.

    பதிலளிநீக்கு
  7. வீடு வந்து தாழ் போட்டு
    முற்றத்தில் கால் அலம்புகையில்
    நிமிர்ந்து பார்த்தால்
    வானத்தில் அதே நிலா
    துணையாய் வந்த என்னை
    வெளியே வைத்து கதவு சாத்தி
    பதுங்கி விட்டாயே என்று.

    பதிலளிநீக்கு
  8. நான்கும் நன்று. ஈரமான நினைவுகளும், விடாது தொடரும் நிலவும் அதிகம் கவர்ந்தன.

    பதிலளிநீக்கு
  9. நிலாக் கவிதை மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
  10. இருப்பதில்
    நாட்டமில்லாது
    இல்லாததை நினைத்து
    ஏதோ ஒன்றை
    எப்போதும்
    தேடிக் கொண்டேயிருக்கும்
    மனம்.//

    உண்மை.
    நீங்கள் சொல்வது போல் ’இருப்பதை விட்டு பறக்க ஆசை படுவது’ என்று பெரியவர்கள் சொல்வார்கள்.


    நிலாகவிதை அருமை.
    ஜீவி சார் தொடர் கவிதையும் அருமை.

    பதிலளிநீக்கு
  11. இருப்பதில்
    நாட்டமில்லாது
    இல்லாததை நினைத்து
    ஏதோ ஒன்றை
    எப்போதும்
    தேடிக் கொண்டேயிருக்கும்
    மனம்.//
    pidithirukirathu.

    பதிலளிநீக்கு
  12. ஓ அமாவாசையன்று நிலா வந்துவிட்டதே.
    எனக்கு ரயிலிலும் நிலவை மட்டும் பார்க்கவே பிடிக்கும். என் தோழி. என்னை அறிந்தவள் எப்பொழுதும் இருப்பவள்.


    அடுத்தது மனம் அதுவும் நடக்காததை நினைத்து ஏங்கும். நடந்ததை மறக்கும். குரங்கல்லவா.

    நதி ஓடி மறைந்தாலும் ஓடின நினைவு வண்லாய் மனசில் நிற்கத்தான் செய்யும். மறதியையும் நினைவையும் படைத்தவனைத்தான் கேட்கணும்.
    வெகு அருமை ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  13. // அந்த
    ஏக்கத்தில் மெலிந்த
    அரைநிலா.//

    பாவம்யா...
    அம்புட்டு துறத்திருக்கு
    அதை அம்பேல்னு விட்டுட்டு வந்திருக்கயே !!

    அரை காலாகி
    அதுவும் இல்லையாகி
    அம்புட்டும் போனப்ப‌
    அமா வாசையா நிக்குதையா...

    அபிராமி கோவிலாண்டே
    அந்த பட்டர் வருவாரோன்னு....

    கொஞ்சம் போய் கவனிய்யா..
    கொஞ்சி 2 வார்த்தை பேசுய்யா.
    வஞ்சிக் கொடி போல
    வானத்திலே அவ
    வரும் நாள கவனிய்யா..

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in
    .

    பதிலளிநீக்கு
  14. நான்கு கவிதைகளும் உங்கள் மனதின் வரிகள் மட்டுமல்ல எல்லோர் மனதின் வரிகளும் தான்.

    எனக்கு ரொம்ப பிடித்தது நிலாவை நீங்கள் தாம்பரத்தில் விட்டு விட்டு வந்தாலும் நிலா உங்களை விட வில்லை என்று சொல்லும் கவிதை. மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  15. //கொஞ்சம் கவனிய்யா..கொஞ்சி பேசுய்யா.

    கவனிக்குறதாவது கொஞ்சுறதாவது?
    கூடவே வராப்புல நடிச்சு அங்கேயே நின்ன நிலா நம்பிக்கை துரோகியில்லையா?

    பதிலளிநீக்கு
  16. நிலா கூட வருவது
    நீரில் தெரிகிறது.
    நினைவில் மலர்கிறது ...

    பதிலளிநீக்கு
  17. கவிதைகள் அருமை!

    நிலாக் கவிதை முகப்புத்தகத்தில் பகிர்ந்து விட்டீர்களோ?

    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. //வானத்தையே நிறைக்குமென...// செம

    பதிலளிநீக்கு
  19. உங்கள் கூட வந்த நிலவும், திரு ஜீவி அவர்களின் 'துணையாய் வந்த என்னை வெளியே வைத்து கதவு சாத்தி பதுங்கிவிட்டாயே...' கவிதையை சபாஷ் சொல்ல வைக்கிறது!

    பதிலளிநீக்கு
  20. கோமதி அரசு அவர்களுக்கும், ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கும்-- தங்கள் ஆழ்ந்த ரசனைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  21. ரசிக்கத் தெரிந்தால் போதும் என்று மனஸ் கிட்ட சொல்லுங்க கணேஷ்...நன்றி வருகைக்கும் முதல் கருத்துக்கும்.

    நன்றி அப்பாதுரை. என்ன யோசிக்க வைத்தது என்று சொன்னால் நாங்களும் ரசிப்போமே...

    நன்றி DD

    நன்றி கீதா மேடம். நீங்கள் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் முகநூல் பக்கம் வருவீர்கள் போல! :)))

    நன்றி அமைதிச்சாரல். நீங்களும் சீக்கிரம் வெளியிட்டு விடுங்கள். நிலா வருத்தப் பட்டால் கஷ்டமாக இருக்கும்! :))))

    நன்றி ஜீவி சார். முத்தாய்ப்பாய் ஏழு வரிகள் சொல்லி எங்களையெல்லாம் கட்டிப் போட்டு விட்டீர்கள். அழகு.

    நன்றி ராமலக்ஷ்மி.

    நன்றி சசிகலா

    நன்றி கோமதி அரசு மேடம்.

    Nandri HVL.

    ஒவ்வொன்றாய் ரசித்திருக்கிறீர்கள். நன்றி வல்லிம்மா.

    நன்றி சூரி சிவா சார். அபிராமி பட்டருக்குக் காத்திருக்கிறது என்று சொல்லி கவர்ந்து விட்டீர்கள்.

    நன்றி கோவை2தில்லி.

    நன்றி raajalakshmi paramasivam. ரசித்ததற்கு நன்றிகள்.

    அப்பாதுரை.... :)))

    நன்றி RR மேடம்.

    நன்றி வெங்கட்.

    நன்றி சீனு.

    நன்றி ரஞ்சனி மேடம்.

    பதிலளிநீக்கு
  22. //நீங்கள் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் முகநூல் பக்கம் வருவீர்கள் போல! :)))//

    அப்படி எல்லாம் கணக்கு வைச்சுக்கலை. ரொம்பத் தொந்திரவு தாங்காது சில சமயம், (ஃபேஸ்புக் மெசேஜ் தான் சொல்றேன்). அப்போ வருவேன். அநேகமா மறந்துடும். அதிலே இருக்கிறேன்னே நினைப்பு வருவதில்லை. :))))))

    பதிலளிநீக்கு
  23. அத்தனை குட்டிக்கவிதைகளையும் ரசிச்சிருக்கும் நிலாவும்.அத்தனையும் அழகு !

    பதிலளிநீக்கு
  24. அருமை... அருமை... அனைத்துக் கவிதைகளும் அருமையாக உள்ளது.

    நதியில் ஓடும் நீராய்
    காலம்
    நீரோடு சென்று விட்டாலும்
    சில
    நினைவுகள் மட்டும்
    நனைந்த மண்ணாய்
    மனதில்
    ஈரமாகவே எப்போதும்.

    இது ரொம்ம்ம்ப சூப்பர்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  25. விழுப்புறத்திலிருந்தே விரட்டி வந்த நிலவை தாம்பரத்தில் துறந்தது மிகக் கவலையான விசயம்.. ஹா ஹா ஹா மிக அருமையான கற்பனை.. அழகு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!