புதன், 17 ஏப்ரல், 2013

சினி பிட்ஸ் - ரசிக்க, சுவைக்க.


                                          


                                      


எம் ஜி ஆருடன் ஜெமினி இணைந்து நடித்த ஒரே படம் முகராசி.

கர்ணனில் முதலில் எம் ஜி ஆர் தான் நடிப்பதாக இருந்தது.

 
                                               

'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியர்' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் '64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர்' என்று குறிப்பிட்டு சிவாஜியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன!

எம்.ஜி.ஆரை 'மிஸ்டர் எம்.ஜி. ஆர்.' என்று அழைத்த ஒரே ஆள் சந்திரபாபு. சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அதுபற்றி இவர் கவலை படவும் இல்லை!

எம்.ஜி.ஆரை 'ராமச்சந்திரா' என்றும், சிவாஜியை 'கணேசா' என்றும் அழைப்பார் எம் ஆர் ராதா.. மற்ற நடிகர்களை எல்லாம் வாடா, போடாதான்!

எழுந்தாளர் ஜெயகாந்தனுக்கு மிக முக்கியமான ரசிகர் சந்திரபாபு. இருவரும் மணிக்கணக்கில் பேசுவார்கள். சந்திரபாபு கேட்டு அவருக்காக எழுதிய நாடகம்தான் 'எனக்காக அழு', ஆனால், அதில் சந்திரபாபு கடைசி வரை நடிக்கவில்லை!

                                                     

ஷீலா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார் சந்திரபாபு. முதலிரவின் போதே தனக்கு உள்ள இன்னொரு தொடர்பை அந்தப் பெண் சொன்னார். மறுநாள் காலையில் மனப்பூர்வமாக ஷீலாவை அனுப்பிவைத்துவிட்டார்!

                                                           

ப்ளைமெளத், அம்பாஸடர், இம்பாலா எனப் பலப் பல கார்களை வைத்திருந்தார் MR ராதா. இம்பாலாவில் ஒரு நாள் எருமை மாட்டுக்கு வைக்கோல் எடுத்துச் சென்றதைப் பார்த்துப் பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். 'நமக்குப் பயன் படுறதுக்குத்தானப்பா கார். தகரத்துக்கு கலர் பெயின்ட் அடிச்சதுக்காக, தலையிலயா தூக்கிட்டுப் போக முடியும்?' என்று கேட்டார்!

                                            

தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்' என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லவே, 'அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம்!

'திருவிளையாடல்படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, `நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்கஎன்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம்!

                                                 

முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை, யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் `நாகேஷ் பாணிஎன்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!

`பஞ்சதந்திரம்ஷீட்டிங், உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், `கோழி இன்னும் சாகலையாப்பா?'  30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கெளரவிக்கவில்லை!
 
                              

மிகப் பிரபலமான கவுண்டமணி –செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!

ஜெய் சங்கர் ஹீரோவாகக் கோலோச்சிய காலங்களில் பி பி ஸ்ரீநிவாஸ் அவருக்குக் குரல் கொடுத்ததில்லை. (பின்னாளில் ஊமை விழிகள்)

கமலும் விவேக்கும் இணைந்து நடித்ததில்லை.


(பெரும்பாலான விவரங்கள் 'நெட்'டில் 'லக்ஷ்மன்-சுருதி' பக்கத்திலிருந்து எடுத்தது)

19 கருத்துகள்:

  1. சுவையான தகவல்கள்.
    ஜெய்சங்கருக்குப் பிபிஸ்ரீனிவாஸ் சாரின் குரல் ஒத்துப் போயிருக்காது.:)
    கவுண்டமணி செந்தில் சாதனை மன்னர்கள்.
    நாகேஷ் ஆரம்ப காலத்தில் ஜெரி லூயியை நடிப்புக்கும் நடனத்துக்கும் துணை கொண்டார். அந்த உடம்புக்குத் தெய்வ அருள் தானாக வந்திருக்கணும் என்ன ஒரு நடிப்பு மா.
    என் எஸ்கே
    சந்திரபாபு,
    எம் ஆர் ராதா
    இவர்கள் நல்ல தனி பிறவிகள்.
    அதிலும் சந்திரபாபு ரொம்பப் பாவம்.
    சிவாஜி நடிப்புப்பல்கலைக் கழகம். அவரைப் பற்றி ஆங்கிலப் புத்தகத்தில் வந்திருப்பது புது செய்தி.
    மிகநன்றி எங்கள் ப்ளாக்.

    பதிலளிநீக்கு
  2. ஜெயசங்கர், பாரதியும் பாடும் பாடல் ’நில், கவனி, காதலி’ என்று நினைக்கிறேன் அதில் பி.பி ஸ்ரீநிவாஸ் பாடி இருக்கிறார். அந்த பாடல் ஆரம்பிக்கும் வரி
    எங்கேயோ பார்த்தமுகம், புதுநிலவோ, பூச்சரமோ, மதுவிழியோ! மாணிக்கமோ!
    என்று வரும் .
    ஊமைவிழியில் ’தோல்வி நிலையென’ மிகவும் நல்ல பாடல் பாடினார்.

    // 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கெளரவிக்கவில்லை!//

    எனக்கும் அந்த வருத்தம் உண்டு.

    கலைவாணரைப்பற்றி வரும் செய்திகள் எல்லாம் அவர் உதவும் குணத்தையே குறிப்பிடுகிறது உயர்ந்த மனிதருக்கு வண்க்கம் பல.

    செய்திகள் எல்லாம் நன்றாக இருந்தது.


    பதிலளிநீக்கு
  3. ரசிக்க வைக்கும் பல தகவல்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  4. ‘எங்கேயோ பார்த்த முகம்’ பாட்டு பற்றி நான் சொல்ல வந்தேன். கோமதி அரசு மேடம் சொல்லிட்டாங்க. சிவாஜி ஒரு இம்பாலா வெச்சிருந்தார். அதுல பந்தாவா வந்து இறங்குவார். ஒருநாள் ராதாவுக்கு லிஃப்ட் தர அவர் மறுக்க, ‌கான்டாகிப் போன எம்.ஆர்.ராதா உடனே தானும் ஒரு இம்பாலா வாங்கி அதில் வைக்கோல் ட்ரிப் அடிக்க வைத்தார். அதைப் பத்திக் கேட்டப்பதான் நீங்க சொல்லியிருக்கற வரிகளை சொன்னார். நாகேஷ்...! சந்திரபாபு...! என்றும் மனதில் வாழும் நகைச்சுவை மேதைகள்!

    பதிலளிநீக்கு
  5. //சந்திரபாபு கேட்டு அவருக்காக எழுதிய நாடகம்தான் 'எனக்காக அழு' //

    தோழர் ஜெ.கே.யின் 'யாருக்காக அழுதான்?' தான் தெரியும். இது
    ஆனந்த விகடனில் வெளிவந்த குறுநாவல். நாகேஷ் நடித்து அதே பெயரில் திரைப்படமாக வந்தது.

    பதிலளிநீக்கு
  6. //இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கெளரவிக்கவில்லை! //

    நாகேஷை 'மஹா கலைஞன்' என்று குறிப்பிடுவார் கமல். இதுவே இன்னொரு கலைஞனால் உணரப்பட்ட ஆகப்பெரிய பெரிய விருதல்லவா?.

    பதிலளிநீக்கு
  7. உழைப்பால் உயர்ந்த கோவை ஜி.டி.நாயுடு அவர்கள் எம்.ஆர்.ஆரை மிகவும் கவர்ந்தவர். கேள்விப்பட்ட செய்தி: எம்.ஆர்.ஆர். மிகச்சிறந்த கார் மெக்கானிக்காம். அக்கக்காக ஷெட்டில் கழட்டிப் போட்டு அவர் கார்களை அவரே தான் பழுது பார்ப்பாராம்.

    பதிலளிநீக்கு
  8. எங்கேயோ பார்த்த முகம் - கோமதி அரசு சொல்லிட்டாங்க.

    ஜெய்சங்கருக்கு பிபிஸ்ரீ பாடிய பாடல் யார் நீ படத்தில் - டிகிரிகி.. அட்டகாசமான பாட்டு.

    இன்னொரு பாட்டும் இருக்கிறது, சட்டென்று படம் மறந்துவிட்டது. one day, one way, one boy, one girl. (இது நாகேஷுக்காகவும் இருக்கலாம்).

    பொதுவாக இதுபோன்ற விஷயங்களை மீனாக்ஷி உடனே எழுதுவார்.. கொஞ்ச நாளாக அப்ஸ்காண்ட் ஆகியிருப்பதால் வசதியாகப் போனது. நான் முந்திக் கொள்கிறேன்.

    (எல்லாம் தெரிஞ்சுகிட்டே நம்ம கிட்டே கதை உடுறீங்களோ?)

    பதிலளிநீக்கு
  9. இன்னொரு பாட்டும் இருக்கிறது, சட்டென்று படம் மறந்துவிட்டது. one day, one way, one boy, one girl. (இது நாகேஷுக்காகவும் இருக்கலாம்)//
    அப்பாதுரை சார் சரியாக சொன்னீர்கள்.

    இந்த பாடலும் ஜெயசங்கர் , ஜெயலலிதா இரட்டை வேடத்தில் நடித்தபடம் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்த கல்லூரி நண்பர்கள் பாடும் பாடல் நாகேஸ், மற்றும் நண்பர்களுக்கு பிபிஸ்ரீ அவர்கள் பாடியது.’ நீ ‘. என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. பிரபலமானவர்களுக்கு நெருக்கமான தகவல்களை யார் யாருக்குச் சொல்லி அது எப்படி இன்னொருவர் மூலமாய்
    மற்றொருவருக்குப் போய்ச் சேருகிறது என்பதை ஆராய்வது இயலாத காரியம். கர்ண பரம்பரைக் கதை மாதிரி. 'யாரோ சொல்லி எப்படியோ எனக்கு தெரிய வந்ததை உனக்குச் சொல்கிறேன்' என்கிற அளவில் தான் இவற்றின் நிச்சயத்தன்மை.

    உதாரணத்திற்கு நீங்கள் லக்ஷ்மன்-சுருதி பக்கத்தைச் சுட்டியிருக்கிறீர் களா, சந்திரபாபுவை பற்றி நீங்கள் குறிப்பிட்டிருப்பது வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இன்னொருவர் பதிவிலும் காணக் கிடைக்கிறது. அவரானால் 'நன்றி: ஆனந்த விகடன் -விமல்' என்று நன்றி தெரிவித்திருக்கிறார்.

    எழுத்துகின்ற விஷயத்தின் கருத்தை மட்டும் உறிஞ்சிக்கொண்டு வார்த்தைகள் எழுதுகிறவரின் வரிகளாக இருந்தால் இந்த குறையைத் தவிர்த்திருக்கலாம். வாசிப்போருக்கு இப்பத்தான் படிக்கிற புதுசு போலவும் இருக்கும்.


    பதிலளிநீக்கு

  11. @ நன்றி வல்லிம்மா.... நாகேஷ் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது நானும் படித்திருக்கிறேன்.

    @ நன்றி கோமதி அரசு மேடம்... நீங்கள் சொல்வது உண்மைதான். பி பி எஸ் ஜெய்சங்கருக்குப் பாடியிருக்கிறார். தகவல் தவறு! மன்னிக்கவும்.

    @ நன்றி DD.

    @ நன்றி கணேஷ். நீங்கள் சொல்லும் தகவல் நானும் படித்திருக்கிறேன். என்றாலும் இங்கு நெட்டில் நான் உருவிய இடத்தில் இவ்வளவுதான் இருந்தது!

    @ நன்றி ஜீவி சார். நானும் 'யாருக்காக அழுதான்' தான் கேள்விப் பட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன். அந்தப் படமும் சமீபத்தில் தமிழன் டிவியில் பார்த்தேன். ஜோசப் படம் பார்த்தது போலவே இருப்பார் நாகேஷ். ஆனால் எழுத்தில் வந்த உணர்வு படத்தில் கிட்டவில்லை!

    எம் ஆர் ஆர் பற்றி புதிய தகவலும் சொல்லியிருக்கிறீர்கள். நாகேஷுக்கு நம்மைப் போன்ற ரசிகர்கள் தரும் விருதை விட வேறென்ன விருது வேண்டும்?

    //அவரானால் 'நன்றி: ஆனந்த விகடன் -விமல்' என்று நன்றி தெரிவித்திருக்கிறார். //

    ஆம். இந்தப் பக்கத்திலும் அப்படியேதான் போட்டிருக்கிறது.

    //எழுத்துகின்ற விஷயத்தின் கருத்தை மட்டும் உறிஞ்சிக்கொண்டு வார்த்தைகள் எழுதுகிறவரின் வரிகளாக இருந்தால்//

    எழுதுவது 4 வரி... தெரிய வேண்டியது இவ்வளவுதான். இதை மாற்றுவானேன் என்றுதான்....!

    இதுதான் அந்த லிங்க்.

    http://www.lakshmansruthi.com/cineprofiles/actors-tips.asp

    @ நன்றி அப்பாதுரை. மீனாட்சியைக் காணோம் என்று நாங்கள் கூட நினைத்தோம்.
    //(எல்லாம் தெரிஞ்சுகிட்டே நம்ம கிட்டே கதை உடுறீங்களோ?)//

    அப்படிக் கூடச் சொல்லி விடலாமோ!

    @ மீள்வருகைக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் நன்றி கோமதி அரசு மேடம்!

    பதிலளிநீக்கு
  12. நீங்கள் சொல்வது உண்மைதான். பி பி எஸ் ஜெய்சங்கருக்குப் பாடியிருக்கிறார். தகவல் தவறு! மன்னிக்கவும்.//

    ஸ்ரீராம் , பழைய பாடல்கள் தொலைக்காட்சியில் அடிக்கடி கேட்பதால் தெரிந்தது சொன்னேன், இதற்கு எதற்கு மன்னிப்பு எல்லாம்.

    பதிலளிநீக்கு
  13. எங்கேயோ பார்த்தமுகம் மறந்துவிட்டேனே
    ''இருவிழி மேடையில் எழுதிய ஓவியம்
    புதுமலரொ பூச்சரமோ மதுமலரோ மாணிக்கமோ''/ வாவ் கோமதி ஸுப்பர் மா.

    பதிலளிநீக்கு
  14. // 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கெளரவிக்கவில்லை!//
    வருத்தத்துக்குரிய விஷயம்.

    சினி பிட்ஸ் அத்தனையும் புதுமை எனக்கு.
    ரசித்து படித்தேன்

    பதிலளிநீக்கு
  15. வல்லி அக்கா, இருவிழி மேடையில் எழுதிய ஓவியம் என்ற வரியை நான் மறந்து விட்டேன். நீங்கள் நினைவு படுத்தி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  16. சுவாரஸ்யமான தகவல்கள். நடனத்தால் மட்டுமே பிரபலமான அடுத்த தலைமுறை நடிகர்கள் பலரை விடவும் நடிப்போடு நடனத்திலும் மிளிர்ந்தவர் நாகேஷ்.

    பதிலளிநீக்கு
  17. அந்த ஏழுநாட்கள் படம் சந்திரபாபுவின் கதை தான் என்று கூடச் சொல்வார்கள்.

    எம்.ஜி.ஆர். கர்ணனாகவா? ஐயோ!

    பதிலளிநீக்கு
  18. சுவையான தகவல்கள்....
    ரசித்தேன்....

    நாகேஷ் எனும் மகா கலைஞனை என்ன பாராட்டினாலும் தகும்...

    பதிலளிநீக்கு
  19. சுவாரசியமான தகவல்கள்... சுவையான கருத்துள்ள பின்னூட்டங்கள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!