ஏஞ்சல் :
1, நமக்கு கஷ்டத்தை வேதனைகளை கொடுத்தவங்களுக்கும் அன்பை தரணும் என்பது ப்ராக்டிகலா சரியா வருமா ?ஏதேனும் ஒரு கட்டத்தில் பழைய வலியின் வடுக்கள் வலிகளை நினைவுகூறாதா ?
& க + வே கொடுத்தவர்களுக்கு உடனேயே அன்பைத் தரவேண்டுமா அல்லது அப்புறமாகத் தரணுமா? உடனேயே கொடுத்தால், அவர் சரிதான் - இவன் ரொம்ப நல்லவன் - எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கறான் என்று நினைத்து இன்னும் இன்னும் சீண்டுவார். உடனடி எதிர்வினை ஒன்றும் செய்யாமல், புன்னகையோடு கடந்து சென்றுவிட்டு, சிறிது காலம் கழித்து அவர் நம்மை நாடி வந்தால், இன்முகத்தோடு உதவி செய்யலாம்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்
2,சுயமரியாதை என்பது என்ன ?
# தான் அனாவசியமாகக் கேவலப்படுத்தப் படுவதை அல்லது இழிவு செய்யப்படுவதைப் பொறுத்துக் கொண்டு இராது அதை எதிர்த்துப் போராடும் குணம் கொண்டவராக இருப்பது சுயமரியாதைக்காரர்களுக்கான அடையாளம்.
& நம்மை மற்றவர்கள் மதிக்கவேண்டும் என்றால், முதலில் நம்மை நாமே மதிக்கவேண்டும். அதே போல் மற்றவர்களுக்கு நாம் என்ன தருகிறோமோ அதுவேதான் நமக்குக் கிடைக்கும். மற்றவர்களுக்கும் மரியாதை கொடுத்து, நமக்கும் நாமே மரியாதை கொடுப்பது சுயமரியாதை.
# தான் அனாவசியமாகக் கேவலப்படுத்தப் படுவதை அல்லது இழிவு செய்யப்படுவதைப் பொறுத்துக் கொண்டு இராது அதை எதிர்த்துப் போராடும் குணம் கொண்டவராக இருப்பது சுயமரியாதைக்காரர்களுக்கான அடையாளம்.
& நம்மை மற்றவர்கள் மதிக்கவேண்டும் என்றால், முதலில் நம்மை நாமே மதிக்கவேண்டும். அதே போல் மற்றவர்களுக்கு நாம் என்ன தருகிறோமோ அதுவேதான் நமக்குக் கிடைக்கும். மற்றவர்களுக்கும் மரியாதை கொடுத்து, நமக்கும் நாமே மரியாதை கொடுப்பது சுயமரியாதை.
3, நட்பில் ஈகோ பார்ப்பது சரியா ? தவறா ?
# நட்பில் ஈகோ காட்டப்பட வேண்டிய தருணம் வருவது எந்த அடிப்படையில் , என்பதைக் கொண்டு தான் நட்பில் ஈகோ பார்க்கலாமா கூடாதா என்று சொல்ல முடியும். நமது மிக நெருங்கிய நண்பர் ஆனாலும் நம் சுயமரியாதையை பாதிக்கக்கூடிய ஒரு செயலைச் செய்தார் என்றால் அப்போது ஈகோ காட்டாமல் இருக்க முடியாது.
& தவறு.
# நட்பில் ஈகோ காட்டப்பட வேண்டிய தருணம் வருவது எந்த அடிப்படையில் , என்பதைக் கொண்டு தான் நட்பில் ஈகோ பார்க்கலாமா கூடாதா என்று சொல்ல முடியும். நமது மிக நெருங்கிய நண்பர் ஆனாலும் நம் சுயமரியாதையை பாதிக்கக்கூடிய ஒரு செயலைச் செய்தார் என்றால் அப்போது ஈகோ காட்டாமல் இருக்க முடியாது.
& தவறு.
4, எதற்கும் ஒரு அளவு உண்டு என்பதில் உடன்படுகிறீர்களா ? அன்புகாட்டுவதிலும் பரிவு காட்டுவதிலும் அக்கறைகாட்டுவதிலும்கூட அளவுகோல் தேவையா ?
# அன்பையும் அக்கறையையும் இவ்வளவு என்று அளக்கக் கூடிய சாத்தியம் உண்டா ? இவரிடத்தில் கொஞ்சம் அன்பு அவரிடத்தில் அதைவிடக் கொஞ்சம் அதிகமான அன்பு என்று சொல்ல முடியுமா என்ன ?
& அன்பு, பரிவு, அக்கறை எல்லாவற்றுக்கும் கொடுப்பவரையும் பெற்றுக்கொள்பவரையும் பொருத்த விஷயங்கள். அதிலும் அளவு எல்லாம் ஒன்றும் இருக்க வாய்ப்பு இல்லை. ஒரு தாய் தன் குழந்தைகளிடம் அன்பு, அறிவு, பரிவு எல்லாம் அளவுகடந்து கொடுக்கலாம். ஆனால் அதே அளவில் அவற்றை, வெளியாட்கள் யாரும் கொடுக்க இயலாது.
# அன்பையும் அக்கறையையும் இவ்வளவு என்று அளக்கக் கூடிய சாத்தியம் உண்டா ? இவரிடத்தில் கொஞ்சம் அன்பு அவரிடத்தில் அதைவிடக் கொஞ்சம் அதிகமான அன்பு என்று சொல்ல முடியுமா என்ன ?
& அன்பு, பரிவு, அக்கறை எல்லாவற்றுக்கும் கொடுப்பவரையும் பெற்றுக்கொள்பவரையும் பொருத்த விஷயங்கள். அதிலும் அளவு எல்லாம் ஒன்றும் இருக்க வாய்ப்பு இல்லை. ஒரு தாய் தன் குழந்தைகளிடம் அன்பு, அறிவு, பரிவு எல்லாம் அளவுகடந்து கொடுக்கலாம். ஆனால் அதே அளவில் அவற்றை, வெளியாட்கள் யாரும் கொடுக்க இயலாது.
5, நீங்கள் பேசிப்பழகும் ஒருவர் உங்களிடம் // எனக்கு உன்னை கூட நம்ப பயமா இருக்கு யாரையும் நம்ப மாட்டேன் //என்றால் எப்படி ரியாக்ட் செய்வீங்க ?
# "உன்னைக் கூட" என்று அவர் சொல்வதிலிருந்தே என்னை அவர் ஒரு உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறார் என்பது தெளிவாகிறது. அது எனக்கு மகிழ்ச்சியை மட்டுமே தரும் அல்லவா ?
& என்னிடம் அப்படி யாராவது சொன்னால், " எனக்கும் அப்படித்தான் " என்று சொல்லிவிடுவேன்!
# "உன்னைக் கூட" என்று அவர் சொல்வதிலிருந்தே என்னை அவர் ஒரு உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறார் என்பது தெளிவாகிறது. அது எனக்கு மகிழ்ச்சியை மட்டுமே தரும் அல்லவா ?
& என்னிடம் அப்படி யாராவது சொன்னால், " எனக்கும் அப்படித்தான் " என்று சொல்லிவிடுவேன்!
6,இப்போதெல்லாம் நம் தாய்தமிழ்நாட்டில் மக்கள் குறிப்பா அதிக அளவில் பெண்கள் பொதுவெளியில் அதிகமாக காதுகூசும் அளவு வார்த்தைவசவுகளை பேசுகிறார்களே ! இது எதை நமக்கு உணர்த்துகிறது ? இதன் காரணம் என்ன ?
ஆசை வெட்கம் அறியாதென்பார்கள். ஸ்டைல் மேல் பற்றும் வெட்கம் கெட்ட விஷயம் தான் போலிருக்கிறது.
& Offence is the best sort of defense என்று நினைக்கிறார்களோ? நெருங்கிய உறவினர் ஒருவர் ஓட்டிய காரில் அவரோடு ஒருமுறை பயணித்தேன். முன்னால் சென்ற கார் ரயில்வே கேட் அருகில் திடீர் ப்ரேக் போட்டு நிற்க, பின்னால் சென்ற எங்கள் கார், முன் காரின் பின் பகுதியில் லேசாக மோதி, அந்தக் காருக்கு சிறிய சேதம். என் உறவினர் உடனே காரை விட்டு இறங்கி நேரே அந்தக் காரின் ஓட்டுனரை நோக்கிச் சென்று 'கன்னா பின்னா காச் மூச் ' என்று கத்தி, " ஏனையா இப்படி அஜாக்கிரதையாக வண்டி ஓட்டுகிறீர்கள் " என்று கேட்டார். அந்த கார் ஓட்டுனர் பணிவாக 'சாரி' சொன்னதும், இவர் வெற்றிப் புன்னகையோடு திரும்பினார். அப்புறம் அவர் என்னிடம், " ஆக்சுவலா தப்பு என் மேலதான். ஆனால் நான் சும்மா இருந்திருந்தா அவன் இறங்கி வந்து அவனுடைய காரின் சேதத்தைப் பார்த்து, என்னைப் பார்த்து கத்தி, என்னிடம் இழப்பீடு கேட்டிருப்பான்" என்றார்! இது விசித்திரமாக இல்லையா!
# அந்த மாதிரி வெளியில் நமது பெண்கள் இழிவான வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்கும் துர்பாக்கியம் எனக்கு இதுவரை நேரவில்லை. கடவுளுக்கு நன்றி.
ஆசை வெட்கம் அறியாதென்பார்கள். ஸ்டைல் மேல் பற்றும் வெட்கம் கெட்ட விஷயம் தான் போலிருக்கிறது.
& Offence is the best sort of defense என்று நினைக்கிறார்களோ? நெருங்கிய உறவினர் ஒருவர் ஓட்டிய காரில் அவரோடு ஒருமுறை பயணித்தேன். முன்னால் சென்ற கார் ரயில்வே கேட் அருகில் திடீர் ப்ரேக் போட்டு நிற்க, பின்னால் சென்ற எங்கள் கார், முன் காரின் பின் பகுதியில் லேசாக மோதி, அந்தக் காருக்கு சிறிய சேதம். என் உறவினர் உடனே காரை விட்டு இறங்கி நேரே அந்தக் காரின் ஓட்டுனரை நோக்கிச் சென்று 'கன்னா பின்னா காச் மூச் ' என்று கத்தி, " ஏனையா இப்படி அஜாக்கிரதையாக வண்டி ஓட்டுகிறீர்கள் " என்று கேட்டார். அந்த கார் ஓட்டுனர் பணிவாக 'சாரி' சொன்னதும், இவர் வெற்றிப் புன்னகையோடு திரும்பினார். அப்புறம் அவர் என்னிடம், " ஆக்சுவலா தப்பு என் மேலதான். ஆனால் நான் சும்மா இருந்திருந்தா அவன் இறங்கி வந்து அவனுடைய காரின் சேதத்தைப் பார்த்து, என்னைப் பார்த்து கத்தி, என்னிடம் இழப்பீடு கேட்டிருப்பான்" என்றார்! இது விசித்திரமாக இல்லையா!
7, சில நேரத்தில் தொடர் உரையாடலில் நமக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வரும் அதை விறுவிறுப்பை எழுதிட்டு அச்சோ இதை படிக்கும் யாருக்கும் இந்த பதில் மனக்கிலேசத்தை உண்டு பண்ணக்கூடாததுன்னு எழுதாம விட்டிருப்பேன் அப்படி உங்களுக்கும் ஏற்பட்டதுண்டா ?
இன்னிக்கும் ஒரு பதில் எழுதி வேண்டாம்னு விட்டுட்டேன் அமானுஷ்ய சம்பவங்கள் பற்றி :))))))))))
# என் பதில் பிறருக்கு மனக் கிலேசத்தை எப்போது உண்டு பண்ணும் என்று தெரியவில்லை . " நேற்று ஒரு பேயோடு பேசிக் கொண்டிருந்தேன்" என்று நான் சொன்னால் ஒருவேளை அதைப் படிக்கும் பலருக்கும் மனக்கிலேசம் ஏற்படலாம். அதற்காக நான் அதைச் சொல்லாமல் இருக்க வேண்டும் என்று ஆகிவிடுமா ?
பேய் : " ஆ ! இந்த # என்னோடு பேசியதை எல்லாம் இப்படி வெளியே சொல்கிறாரே!"
& சில சமயங்கள் எனக்கும் அது நிகழ்வதுண்டு. சில பதில்களில் சில சம்பவங்கள் எழுதி முடித்துவிட்டு அப்புறம் கொஞ்சம் யோசனை செய்து, அவற்றை நீக்கிவிடுவேன். இப்படித்தான் ஒருமுறை என்ன நடந்தது என்றால் ..... அப்போ நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் ............
8, நன்மைக்கும் தீமைக்கும் சம்பந்தம் தொடர்பு இருக்கா ? நீட்டி முழக்கி நீதி நேர்மை நியாயம் என்று பேசுபவர்களின் நெருங்கிய தொடர்பில் அநீதிக்கே இலக்கணமானோர் இருப்பது மிகவும் குழப்புகிறதே ???
# தீமை என்று ஒன்று இல்லாவிட்டால் நன்மை என்று ஒன்று இருக்க முடியாது அல்லவா ? மேலும் தீயோர் கேண்மை சிலசமயம் தவிர்க்க இயலாததாகப் போவதுண்டு.
& நன்மைக்கும் தீமைக்கும் உள்ள தொடர்பு, உண்மைக்கும் பொய்க்கும் உள்ள தொடர்பு போன்றது. நேர் <-> எதிர் விஷயங்களில் எப்படி தொடர்பு இருக்க முடியும்! நி, நீ, நே பேசுபவர்களின் தொடர்பில் அ இ இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் சொல்லலாம் - Unlike poles attract each other!->
# தீமை என்று ஒன்று இல்லாவிட்டால் நன்மை என்று ஒன்று இருக்க முடியாது அல்லவா ? மேலும் தீயோர் கேண்மை சிலசமயம் தவிர்க்க இயலாததாகப் போவதுண்டு.
& நன்மைக்கும் தீமைக்கும் உள்ள தொடர்பு, உண்மைக்கும் பொய்க்கும் உள்ள தொடர்பு போன்றது. நேர் <-> எதிர் விஷயங்களில் எப்படி தொடர்பு இருக்க முடியும்! நி, நீ, நே பேசுபவர்களின் தொடர்பில் அ இ இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் சொல்லலாம் - Unlike poles attract each other!->
9, சவால்களை எதிர்கொள்ளும் திறமை வருங்கால சந்ததிகளுக்குண்டா ? அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால் களில் முதல் 3 இடங்களில் எவை இருக்கும் ?
# சவால்களை எதிர்கொள்ளும் திறன் எல்லாருக்கும் இருக்கிறது. எதிர்காலத்தில் நம் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய முதல் மூன்று சவால்கள் என்று சொல்வதனால், லஞ்சம், நேர்மையின்மை, முரட்டுத்தனம் ஆகியவற்றைச் சொல்லலாம்.
& சவால்களை வருங்கால சந்ததிகள் திறமையாக எதிர்கொள்வார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்றளவில் எனக்குத் தோன்றுகின்ற மூன்று சவால்கள்: தொற்று நோய்கள் பரவாமல் காத்துக்கொள்வது, மற்ற மனிதர்களுடன் சுமுகமாக நடந்துகொள்வது, வாழ்க்கையில் குறிக்கோள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதனை அடைய உழைப்பது.
# சவால்களை எதிர்கொள்ளும் திறன் எல்லாருக்கும் இருக்கிறது. எதிர்காலத்தில் நம் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய முதல் மூன்று சவால்கள் என்று சொல்வதனால், லஞ்சம், நேர்மையின்மை, முரட்டுத்தனம் ஆகியவற்றைச் சொல்லலாம்.
& சவால்களை வருங்கால சந்ததிகள் திறமையாக எதிர்கொள்வார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்றளவில் எனக்குத் தோன்றுகின்ற மூன்று சவால்கள்: தொற்று நோய்கள் பரவாமல் காத்துக்கொள்வது, மற்ற மனிதர்களுடன் சுமுகமாக நடந்துகொள்வது, வாழ்க்கையில் குறிக்கோள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதனை அடைய உழைப்பது.
10, ஒரு நபரை முன்பின் தெரியாதவரை முதன்முதலாக சந்திக்கும்போது நீங்கள் கவனிக்கும் முதல் விஷயம் எது ? ஏன் ?
# அவர் முகம் திருப்தி மகிழ்ச்சி அமைதி முதலிய உணர்வுகளை பிரதிபலிக்கிறதா எனப் பார்ப்பதுண்டு. இதற்கு பிரத்யேகமான காரணம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இது என் இயல்பு. அவ்வளவு தான்.
& அவருடைய முகபாவம். சுமுகமானவரா அல்லது சிடுமூஞ்சியா என்று பார்ப்பேன். பேசும்போது அவருடைய கண்களையும், அவருடைய (சை)கைகளையும் கவனிப்பேன். ஆள் எப்பேர்ப்பட்டவர் என்று ஒரு ஐடியா கிடைத்துவிடும். ஆனால் அது முதல் impression மட்டுமே அன்றி முடிவான impression இல்லை.
# அவர் முகம் திருப்தி மகிழ்ச்சி அமைதி முதலிய உணர்வுகளை பிரதிபலிக்கிறதா எனப் பார்ப்பதுண்டு. இதற்கு பிரத்யேகமான காரணம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இது என் இயல்பு. அவ்வளவு தான்.
& அவருடைய முகபாவம். சுமுகமானவரா அல்லது சிடுமூஞ்சியா என்று பார்ப்பேன். பேசும்போது அவருடைய கண்களையும், அவருடைய (சை)கைகளையும் கவனிப்பேன். ஆள் எப்பேர்ப்பட்டவர் என்று ஒரு ஐடியா கிடைத்துவிடும். ஆனால் அது முதல் impression மட்டுமே அன்றி முடிவான impression இல்லை.
பானுமதி வெங்கடேஸ்வரன் :
பணக்காரர்கள் என்றால் குழந்தைகள்மீது பாசம் காட்ட மாட்டார்கள் என்று ஏன் நினைக்கிறோம்? அவர்கள் quality time கொடுக்கலாமே?
# அப்படியா நினைக்கிறோம் ? நினைத்தால் அது தவறு.
& லாமே!
& லாமே!
பால், பிராண்ட் மாற்றுவதில்லை, காபி பொடியும் அப்படியே. போடுபவரும் மாறுவதில்லை(நான்தான் போடுகிறேன்) அப்படி இருந்தாலும் இன்று அமைந்த காபி மாதிரி அருமையான காபி ஏன் தினமும் அமைவதில்லை?
# பால் பிராண்ட் ஒன்றேயானாலும் தரம் ஒரேமாதிரி இருப்பதில்லை என்பதைக் கவனித்திருக்கிறேன்.
& 1) நேரத்தில் எழுந்திருக்கிறோம். சரியான நேரத்திற்கு பால் வீட்டுக்கு வந்துவிட்டது. வீட்டில் இனிமையான மெல்லிய இசை / பாட்டு கேட்டுக்கொண்டிருக்கிறது. அதிக பட்சம் 50 ppm TDS value இருக்கின்ற தண்ணீரை 99 deg C அளவுக்கு சூடு செய்து, பில்டரில் சரியான அளவுக்கு எடுத்துக்கொண்ட Coorg pure (No Chicory) காபிப்பொடியின் மீது பரவலாக ஊற்றி, டிகாக்ஷன் இறங்கும் வரை பொறுமையாக, காபி ராகத்தில் 'என்ன தவம் செய்தனை ' என்று ஹம் செய்கிறோம். பால் பொங்குவதற்கு முன்பாக ஸ்டவ்வை அனைத்து, பாலை எடுத்து டிகாக்ஷன் கலந்து, சர்க்கரை போட்டு, இரண்டு ஆற்று ஆற்றி, பிறகு காபியை ஓரிடத்தில் அமர்ந்து சிறிது சிறிதாக ரசித்து உறிஞ்சுகிறோம். தேவாமிர்தம் இதுதான்.
2) லேட்டாக எழுந்திருக்கிறோம், அதே பால்தான் ஆனால் வந்தது லேட். வீட்டுல கரண்டு இல்லை. பக்கத்து வீட்டில் என்னவோ உரக்க சண்டை போட்டுக்கொண்டிருக்கும் ஓசை கேட்கிறது. கரண்ட் இல்லாததால் தண்ணீர் பில்டர் இயந்திரம் ஓடவில்லை. குழாய்த் தண்ணீரை உபயோகித்து டிகாக்ஷன் போடுகிறோம். வெளிச்சம் இல்லாததால், தண்ணீரின் கொதிநிலை, அளவு இதெல்லாம் சரியாக தெரியவில்லை. ஊற்றும்போது சிறிது வெந்நீர் வெளியே சிந்தி கால்களில் பட்டு சுடுகிறது. டிகாக்ஷன் இறங்காமல் மக்கர் செய்கிறது. பில்டரை 'டொங் டொங்' என்று தட்டி டிகாக்ஷன் தயார் செய்கிறோம். பால் பொங்கியபிறகு ஸ்டவ்வை அவசரமாக அணைக்கிறோம். பால் பாத்திரம் கையாளும்போது கைகளில் லேசாக சுட்டுவிடுகிறது. அவசரமாகத் தயாரித்த காபியை கொஞ்சம் ருசி பார்த்ததில் நாக்கில் சுட்டு சுவையரும்புகளை பதம் பார்த்துவிடுகிறது. இந்த காபி ஏன் தேவாமிர்தமாக இல்லை?
# பால் பிராண்ட் ஒன்றேயானாலும் தரம் ஒரேமாதிரி இருப்பதில்லை என்பதைக் கவனித்திருக்கிறேன்.
& 1) நேரத்தில் எழுந்திருக்கிறோம். சரியான நேரத்திற்கு பால் வீட்டுக்கு வந்துவிட்டது. வீட்டில் இனிமையான மெல்லிய இசை / பாட்டு கேட்டுக்கொண்டிருக்கிறது. அதிக பட்சம் 50 ppm TDS value இருக்கின்ற தண்ணீரை 99 deg C அளவுக்கு சூடு செய்து, பில்டரில் சரியான அளவுக்கு எடுத்துக்கொண்ட Coorg pure (No Chicory) காபிப்பொடியின் மீது பரவலாக ஊற்றி, டிகாக்ஷன் இறங்கும் வரை பொறுமையாக, காபி ராகத்தில் 'என்ன தவம் செய்தனை ' என்று ஹம் செய்கிறோம். பால் பொங்குவதற்கு முன்பாக ஸ்டவ்வை அனைத்து, பாலை எடுத்து டிகாக்ஷன் கலந்து, சர்க்கரை போட்டு, இரண்டு ஆற்று ஆற்றி, பிறகு காபியை ஓரிடத்தில் அமர்ந்து சிறிது சிறிதாக ரசித்து உறிஞ்சுகிறோம். தேவாமிர்தம் இதுதான்.
2) லேட்டாக எழுந்திருக்கிறோம், அதே பால்தான் ஆனால் வந்தது லேட். வீட்டுல கரண்டு இல்லை. பக்கத்து வீட்டில் என்னவோ உரக்க சண்டை போட்டுக்கொண்டிருக்கும் ஓசை கேட்கிறது. கரண்ட் இல்லாததால் தண்ணீர் பில்டர் இயந்திரம் ஓடவில்லை. குழாய்த் தண்ணீரை உபயோகித்து டிகாக்ஷன் போடுகிறோம். வெளிச்சம் இல்லாததால், தண்ணீரின் கொதிநிலை, அளவு இதெல்லாம் சரியாக தெரியவில்லை. ஊற்றும்போது சிறிது வெந்நீர் வெளியே சிந்தி கால்களில் பட்டு சுடுகிறது. டிகாக்ஷன் இறங்காமல் மக்கர் செய்கிறது. பில்டரை 'டொங் டொங்' என்று தட்டி டிகாக்ஷன் தயார் செய்கிறோம். பால் பொங்கியபிறகு ஸ்டவ்வை அவசரமாக அணைக்கிறோம். பால் பாத்திரம் கையாளும்போது கைகளில் லேசாக சுட்டுவிடுகிறது. அவசரமாகத் தயாரித்த காபியை கொஞ்சம் ருசி பார்த்ததில் நாக்கில் சுட்டு சுவையரும்புகளை பதம் பார்த்துவிடுகிறது. இந்த காபி ஏன் தேவாமிர்தமாக இல்லை?
ஒரு காபி குடிக்கிறீர்கள்,பிரமாதமாய் இருக்கிறது. உடனே இன்னொரு அரை கப் கிடைக்குமா? என்று கேட்டு வாங்கி குடிப்பீர்களா? அல்லது ஏதோ நல்லதாக ஒரு முறை கிடைத்து விட்டது, அதோடு நிறுத்திக் கொள்ளலாம், மீண்டும் குடிக்க ஆசைப்பட்டு, அது எப்படி அமையுமோ? வாயை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நிறுத்திக் கொண்டு விடுவீர்களா?
# பிடித்திருந்தால் கேட்க வெட்கப் பட மாட்டேன். ஆனால் காபி டீ " இன்னும் கொஞ்சம் வேண்டும் " என்று கேட்கத் தோன்றாது.
& காபி குடிக்கும் பழக்கத்தை நிறுத்தி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் நான் இரண்டாவது வகை ஆசாமி. நல்லதாக ஒருமுறை கிடைத்துவிட்டது. அது போதும்.
ஒரு கலைப் படைப்பை ரசிக்கும் பொழுது அந்த படைப்பாளி எடுத்துக் கொண்ட விஷயத்தை எப்படி அளித்திருக்கிறார் என்று பார்த்தால் போதாதா? கையினோரு தராசோடு உட்கார வேண்டுமா?
# விமர்சனப் பார்வை மனித இயல்பு. அது மறக்கப்படும் அளவுக்குக் கலைநயம் இருப்பது பார்ப்பவரின் நல்லதிருஷ்டம்.
& நான் பொழுபோக்கிற்காக மட்டுமே கலைப்படைப்புகள் பக்கம் செல்பவன். தராசு எதுவும் எடுத்துச் செல்வதில்லை.
& நான் பொழுபோக்கிற்காக மட்டுமே கலைப்படைப்புகள் பக்கம் செல்பவன். தராசு எதுவும் எடுத்துச் செல்வதில்லை.
=========
மின்நிலா 013 Google LINK : CLICK HERE
அடுத்த வார மின்நிலா கார்கள் சிறப்பு இதழ். வாசகர்கள் அவர்களுடைய வாச கார்கள் பற்றி விவரம், புகைப்படம் எல்லாம் எங்களுக்கு வாட்ஸ் அப் அல்லது engalblog@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு சனிக்கிழமைக்குள் அனுப்பி வைக்கவும், நன்றி.
=========
மீண்டும் சந்திப்போம்
=========
மின்நிலா 013 Google LINK : CLICK HERE
அடுத்த வார மின்நிலா கார்கள் சிறப்பு இதழ். வாசகர்கள் அவர்களுடைய வாச கார்கள் பற்றி விவரம், புகைப்படம் எல்லாம் எங்களுக்கு வாட்ஸ் அப் அல்லது engalblog@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு சனிக்கிழமைக்குள் அனுப்பி வைக்கவும், நன்றி.
=========
மீண்டும் சந்திப்போம்
=========
என் அனுபவத்தில் சொல்கிறேன். நமக்குக் கஷ்டத்தை அல்லது வேதனையைக் கொடுத்தவர்கள் பற்றிய கோபம் சில நாட்களில் நிச்சயமாக மறைந்து விடும் . அந்தச் செயல் குறித்த நினைவு இருக்குமே தவிர, அதுபற்றி எந்தக் கோபமும் வருத்தமும் இருக்காது.//////////////////// SO TURE. Vaazhththukal.
பதிலளிநீக்குSo true. The hurt does go away.
நீக்குவாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம்.
நீக்குவாங்க, வாங்க! பாராட்டுக்கு நன்றி.
நீக்குஇனிய காலை வணக்கம், ஸ்ரீ கௌதமன் ஜி, ஸ்ரீராம்,
பதிலளிநீக்குஇன்னும் வரப் போகிறவர்கள் அனைவருக்கும்
என் அன்பு பிரார்த்தனைகள்.
சிறிது நேரத்தில் மீண்டும் வருகிறேன்.
வாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம்.
நீக்குநன்றி, மீண்டும் வருக; மீண்டும் மீண்டும் வருக!
நீக்குகேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம்.
பதிலளிநீக்குவாச கார்கள்! :) கீதாம்மாவுக்கு அனுப்பி வைத்த கார் படம் எனக்கும் அனுப்பி வைக்கலாம்! :)))) அவ்வப்போது எனக்கு வரும் அலைபேசி அழைப்பு ஒன்று - உங்கள் பழைய காரை நீங்கள் விற்க விரும்புகிறீர்களா? என்று கேட்கும்! ஒவ்வொரு முறையும் நான் சொல்லும் பதில் - முதலில் எனக்கு ஒரு கார் இலவசமாகக் கொடுங்கள். பின்பு அதை என்னிடமிருந்து விலை கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்பது தான்! ஹாஹா...
ஹா... ஹா... ஹா... அதேபோல இல்லாத காருக்கு தவணை ட்யூ என்று சொல்லி எனக்கு மெசேஜ் வந்து கொண்டே இருக்கிறது. கட்டாவிட்டால் காரை பறிமுதல் செய்து விடுவார்களாம்!
நீக்குநன்றி வெங்கட்.
ஹா ஹா ! ஒரு கதை எழுத கரு கிடைக்கும் போல இருக்கு!!
நீக்குகேள்விகள் கேட்ட அன்பு ஏஞ்சலுக்கு வாழ்த்துகள். அற்புதமான
பதிலளிநீக்குபதில்கள் வந்திருக்கின்றன.
பானுமாவுக்கும் வாழ்த்துகள்.
பணக்காரர்கள் மிக மிக அன்பு கொண்ட பெற்றோராக
இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
சில நபர்கள் வாழ்வின் முன்னேற்றம்
என்ற பெயரில் குழந்தைகளைக் கவனிக்காமல் இருப்பதையும்
பார்த்திருக்கிறேன்,
ஆம், நீங்கள் சொல்வது சரிதான்!
நீக்குநன்றி வல்லிம்மா :)
நீக்குசில நேரத்தில் தொடர் உரையாடலில் நமக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வரும் அதை விறுவிறுப்பை எழுதிட்டு அச்சோ இதை படிக்கும் யாருக்கும் இந்த பதில் மனக்கிலேசத்தை உண்டு பண்ணக்கூடாததுன்னு எழுதாம விட்டிருப்பேன் அப்படி உங்களுக்கும் ஏற்பட்டதுண்டா ?
பதிலளிநீக்குஇன்னிக்கும் ஒரு பதில் எழுதி வேண்டாம்னு விட்டுட்டேன் அமானுஷ்ய சம்பவங்கள் பற்றி :))))))))))
ஏஞ்சல், அந்தப் பதிலை
இங்கே பதியுங்கள். எங்களுக்கு சுவாரஸ்யம் கூடும்.
ஆம், ஆம். அதே, அதே!
நீக்குஹாஹா :) வல்லிம்மா அண்ட் கௌதமன் சார் மற்றொரு அமானுஷ்ய அனுபவங்கள் பதிவில் பகிர்கிறேன் :)
நீக்குஎங்கள் பதிவா?
நீக்கு:))))))
நீக்குகாப்பி பதில்கள் அருமை.
பதிலளிநீக்குநேரத்தைப் பொறுத்தே காப்பி. சரி சரி. ஒத்துக் கொள்கிறேன்.:)
நன்றி!
நீக்குபார்த்த உடன் சம்மதிப்பது திருமணத்தில் முடியும்.
பதிலளிநீக்குமற்றவர்களிடம் கவனமாகத்தான் இருக்க வேண்டும்.
ஆ ! அபுரி!!
நீக்கு:) சொன்ன பதில் சரிதான். என்னுடைய அபிப்பிராயம் சொன்னேன் மா. பாரத்தவுடன் சிலரின் குணங்கள்
நீக்குபுரிகின்றன. பல நாட்கள் பழகின பிறகுதான். நம்பிக்கை வளரும். .
நானும் உங்கள் கூற்றை ஏற்கிறேன் வல்லிம்மா :)
நீக்குஅனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் கொரோனா அச்சம் நீங்கி இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பப் பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்கு//அதிலும் அளவு எல்லாம் ஒன்றும் இருக்க வாய்ப்பு இல்லை. ஒரு தாய் தன் குழந்தைகளிடம் அன்பு, அறிவு, பரிவு எல்லாம் அளவுகடந்து கொடுக்கலாம். ஆனால் அதே அளவில் அவற்றை, வெளியாட்கள் யாரும் கொடுக்க இயலாது. // அன்பில் அளவு இருக்க வாய்ப்பில்லை எனச் சொல்லிவிட்டுப் பின்னால் முடிக்கையில் தாயின் அளவு அதை வெளி ஆட்களால் கொடுக்கமுடியாது என்று சொல்லி இருப்பது எனக்கு முரணாகத் தோன்றுகிறதே! :( சரியாப் புரிஞ்சுக்கலையோ?
பதிலளிநீக்குஅதாவது, அன்பு பரிவு இத்யாதிகள் எல்லாம் measurable or quantifiable சமாச்சாரங்கள் கிடையாது என்று சொல்லி, உணரப்படவேண்டியவைகள் என்ற அளவில் இரண்டாவது அளவை சொன்னேன்.
நீக்கு//உடனடி எதிர்வினை ஒன்றும் செய்யாமல், புன்னகையோடு கடந்து சென்றுவிட்டு, சிறிது காலம் கழித்து அவர் நம்மை நாடி வந்தால், இன்முகத்தோடு உதவி செய்யலாம். //
பதிலளிநீக்குஅதன் பின்னும் சீண்டிக்கொண்டே இருப்பவர்கள் உண்டு.
அப்படி இருந்தால் ignore them என்பதுதான் தீர்வு!
நீக்குமின்நிலா கார்கள் சிறப்பு இதழா ! ரொம்ப innovative idea ஆக இருக்கிறதே.. இதைப்பற்றி முன்பே அறிவிப்பு வந்ததா , இதுதான் முதல் முறையா? நான் ஒரு கார் ப்ரியன். பைக் ப்ரியன். இன்னும் என்னென்னவோ ..
பதிலளிநீக்குசரி, கார் படம் நிஜமாகவே அனுப்பலாமா?
அனுப்புங்க, அனுப்புங்க! engalblog@gmail.com அல்லது வாட்ஸ் அப் எண் 9902281582.
நீக்குஇன்னா செய்தாரை ஒறுத்தல் நாம் அவர்களை பிளாக் செய்வது ..
பதிலளிநீக்குஇதுதான் உத்தமம் . இல்லாவிட்டால் தினம் தினம் இன்னா தொடர்கதை ஆகிவிடும்
ஹா ஹா ஹா ! கரெக்டு !!
நீக்குஏஞ்சலின் முதல் கேள்விக்கு..
பதிலளிநீக்குஇரு பதில்களையும் டிட்டோ செய்கிறேன். கூடவே அது மீண்டும் தொடர்ந்தால் விலகி இருப்பது நல்லது. அதாவது இக்னோர் செய்தல். அதை நினைத்து நம் மண்டையைக் குழப்பிக் கொண்டு நம்மையே நம்மை புண்ணாக்கிக் கொண்டு இருப்பதை விட விலகி விட்டு அவர்களுக்குத் தெரிந்தது அம்புத்தான் என்று ஒதுங்கிவிடுவது பெட்டர் என்பது என் தனிப்பட்டக் கருத்து. இல்லை என்றால் நம் மகிழ்ச்சியும் தொலைந்து போகுமே. எல்லாம் அனுபவத் தத்துபுத்துவம் தான் ஹா ஹா ஹா
கீதா
நீங்க சொல்வது சரிதான்.
நீக்குயாரேனும் சீண்டினாலும் கெடுதல் செய்தாலும் நான் மறந்துவிடுவேன்.. அப்புறம் அவர்கள் வந்து பழகினால் மீண்டும் பழகுவேன். ரொம்ப டார்ச்சர் கொடுத்தால் விலகி இருப்பேன் ஆனால் உதவி கேட்டால் செய்துவிடுவேன். அதுவும் மகிழ்ச்சியாக. என்னை வீட்டில் சூடு சுரணை யற்றவள் எருமை மாட்டுத் தோல் என்பார்கள். பாவம் எருமை மாடு!!!!!!!!!!!! அப்புறம் இதை வைத்துக் கொண்டு நான் எல்லாவற்றையும் மறந்துவிடுவேன் என்ற பெயரும்.
நீக்குசிலருக்கு வருடம் மாதம், தேதி டைம், அந்த நேரத்தில் என்ன கலர் ட்ரெஸ் போட்டிருந்தாங்கன்னும் நினைவு வைச்சிருப்பாங்க. எங்கே உட்கார்ந்திருந்தோம் எங்கே நின்றிருந்தோம் கூட யாரெலலம் இருந்தாங்க என்ப்தும் கூட...யம்மாடியோவ்....இது மனதிற்கு நல்லதே அல்ல. மறப்போம் மன்னிப்போம் என்பதே நல்லது. இல்லை என்றால் பழி உணர்ச்சி மேலோகும் அதுவும் ஒரு பெர்சனாலிட்டிக்கு நல்லதல்ல.
கீதா
ஆம், உண்மைதான். எதற்கு தேவை இல்லாத விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொண்டு நம்முடைய 5 GB மெமரி ஸ்பேசை வீணடிப்பது!
நீக்கு//சிலருக்கு வருடம் மாதம், தேதி டைம், அந்த நேரத்தில் என்ன கலர் ட்ரெஸ் போட்டிருந்தாங்கன்னும் நினைவு வைச்சிருப்பாங்க//
நீக்குபழிவாங்குதலுக்கு இது வேணாம் ஆனா கணவர்களின் நினைவு சக்தியை டெஸ்ட் பண்ண இதை மனைவியர் யூஸ் பண்ணலாம் :))))))
எங்கள் மனைவி குழு இதை படிக்காமல் இருப்பார்களாகுக!
நீக்குஈகோ இல்லாமல் இருப்பது மிக நல்லது ஆனால் அது நடைமுறையில் கொஞ்சம் கஷ்டம்தான். ஏஞ்சலின் இரண்டாவது கேள்வி சுயமரியாதைக்கும் இந்த ஈகோவுக்கும் சிறிய வித்தியாசம்தான். (முதல் பதிலில் சொல்லப்பட்டிருக்கோ?!!)
பதிலளிநீக்குசில சமயங்களில் சுயமரியாதையே கூட ஈகோவாகப் பார்க்கப்படும். எனவே நல்ல நட்பு, உறவு இதில் ஈகோ தவறு.
& ந் பதில்//
யெஸ்..
ஆனால் கொஞ்சம் கடினமான விஷயம்!!!!!!!
கீதா
அந்த ஈகோ இருப்பதால்தான் நல்ல நட்பும், உறவும் சிக்கலாகிவிடுகிறது!
நீக்குகீதா
முற்றிலும் உண்மை.
நீக்குஅன்புடைமை குறள்கள் பலவற்றுக்கு சொல்லலாம்...
பதிலளிநீக்குகாபி (செய்முறை) பதில்கள் : பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு...!
நன்றி.
நீக்குயாரையும் நம்ப மாட்டேன்//
பதிலளிநீக்குஇது கொஞ்சம் உளவியல் சார்ந்த ஒன்று. எங்கோ அந்த நபர் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளார் எனலாம். இந்த நம்பிக்கையின்மை வரம்பு மீறினால் கண்டிப்பாக உளவியல் பிரச்சனையாகிவிடும்.
கீதா
அப்படியும் இருக்கலாம்.
நீக்குசரியான கணிப்பு கீதா .அவர் கொஞ்சம் டிப்ரஸ்ட் .
நீக்குஏஞ்சல் 6 வது கேள்வி அவங்க எதை வைச்சுக் கேட்டிருக்காங்கன்னு புரியுது.
பதிலளிநீக்கு& ன் பதில் சூப்பர். அப்படியான அனுபவங்கள் எனக்கு நிறைய உண்டு. அதாவது அடிவாங்கும் வடிவேலு போல!!! ஹா ஹா ஹா...எதிராளி தான் வெற்றி கொண்டதாக நினைப்பது.....
ஆனால் ஏஞ்சல் கேட்டது வேறு ஒரு த்வனி என்பதாகப் படுகிறது. சரியா ஏஞ்சல்?! நான் எதற்கோ இதனைப் பதிலில் எழுத நினைத்து வேண்டாம் என்று டெல் செய்தேன்.
கீதா
ஹா ஹா ! நன்றி.
நீக்குகொஞ்சம் யோசித்தால் இதற்கு காரணம் தெரியும். நான் பதின்ம வயதிற்குக் குறைவா இருந்தபோது, குடிக்கிறவன் என்று ஒருத்தரை ஐடெண்டிஃபை பண்ணினாலே கொஞ்சம் அருவருப்பா பார்ப்போம் (குடிகாரப்பய என்று). சிகரெட் குடிப்பவர்கள் அருகேயே போகமாட்டோம். ஆனால் சினிமா, தொலைக்காட்சிகளில் இவை சர்வ சாதாரணமா ஆன பிறகு, பலருக்கு 'குடிப்பது' என்பது பெரிய தவறா தெரியலை. அதுபோல தொலைக்காட்சி தொடர்களில் கொலைகார, அயோக்கிய மாமியார்கள் மருமகள்களைப் பார்த்த பிறகு, அதுவும் நம் வாழ்வில் இயல்பாக மாறுகிறது எனத் தோன்றுகிறது. இவையெல்லாம் சமூகக் கேடுகள்தாம்.
நீக்குயோசிக்கவேண்டிய விஷயம்.
நீக்கு@ கீதா ரெங்கன் :)) ஆமா ஆமா சரியா புரிஞ்சிட்டீங்க ..நானும் விளக்கமா எழுத விரும்பலை அது தெரியாதவரையும் தேடி பார்க்கவைக்கும் :)பொதுவா யாராச்சும் கெட்ட வரத்தை பேசின அவங்க திசைப்பக்கம் கூட நடக்கமாட்டேன் ஆனா மீடியா எல்லா குப்பையையும் நமக்கு காட்டிதொலைக்குது
நீக்குகஷ்டம்தான்.
நீக்குசில கேள்விகளுக்கு பதில் கூற அதிகம் யோசிக்க வேண்டும் போலுள்ளதே?
பதிலளிநீக்குஅப்படியா!
நீக்குபானுக்காவின் கடைசிக் கேள்வி.
பதிலளிநீக்குயெஸ் யெஸ் மீ டூ. தராசு வைத்துக் கொண்டு பார்க்கும் பழக்கம் கிடையாது. ஆ தராசு பதில்கள் என்று எங்கோ - குமுதத்தில்? - பார்த்த நினைவு!
கீதா
தராசு பதில்கள் கல்கி என்று ஞாபகம்.
நீக்கு
நீக்குகல்கிதான் இப்ப நினைவுக்கு வந்துவிட்டது.
தராசு என்றால் நடுநிலைமையாக! என்று அர்த்தம் கொண்டால்.. ஒரு பக்கம் சாயாமல்..பாராட்டவும் வேண்டும் குறைகளை அழகா சொல்லி அதை எப்படி மேம்படுத்தலாம் என்று சொல்லலாம்
கீதா
எங்கள் வீட்டில் முன்பு இருந்த ஃபிகோ மாமியின் படம் இருக்கா என்று தெரியவில்லை. தேட வேண்டும். (மின்நிலா) அவள் ஆவியின் குறும்படம் காபோகா வில் கூட நடித்திருக்கிறாளாக்கும்!
பதிலளிநீக்குகீதா
கீதா
அப்படி ஒரு கார் இருந்ததே உங்கள் கருத்துரை பார்த்துதான் ஞாபகம் வருகிறது.
நீக்குஎமக்கு மன வேதனையை தருபவர்கள் மீது உடனடி கோபம் இருக்கும் சிறிது காலத்தின் பின் அவர்கள் அறியாமையால்தான் அவ்வாறு நடந்து கொண்டார்கள் என மன்னித்து விடுவேன்.
பதிலளிநீக்குஆம், அதுதான் சரியான attitude . நன்றி.
நீக்குகேள்வி பதில்களை காலயிலேயே படித்துவிட்டேன். அப்புறம் கருத்திடலாம்னு, மத்த வேலைகளைப் பார்க்கப் போயிட்டேன்.
பதிலளிநீக்கு//சில நாட்களில் நிச்சயமாக மறைந்து விடும் .// - அது நமக்கு பிறர் செய்த தவறு, வேதனைகளைப் பொறுத்தது. 50 ரூபாய் நம்மிடமிருந்து திருடிவிட்டான்.... அட..இப்படி துரோகம் பண்ணிட்டானே..ரூமில் தன் சட்டையிலிருந்து 60 ரூபாய் எடுத்துக்கோ என்று சொன்னதற்கு நைஸா இன்னொரு 50 ரூபாயும் எடுத்திட்டானே என்ற மாதிரி தவறுகள் சில நாட்களில் மறந்துவிடுவோம். ஒருத்தரின் மகனைக் கொலை செய்தான் என்ற மாதிரி தவறுகளை எப்படி கொஞ்ச நாளில் மறந்துவிடுவார்கள்?
குற்றம் நம்மை வேதனைப்படுத்தும் அளவைப் பொறுத்துத்தான் மறப்பதும் மன்னிப்பதும்.
கிரிமினல் தவறுகளுக்கு சட்டம் தன் கடமையை செய்யும். ராஜீவ் காந்தி உயிரோடு இருந்திருந்தால் 'அந்த ஏழு பேரை' மன்னித்திருப்பார் என்று யாரோ சொன்ன ஞாபகம் வருகிறது!
நீக்குயாரோவா? யார்?
நீக்குராஜிவ் காந்தி உயிருடன் இருந்திருந்தால் ஏழு பேர் சிறைக்கே போயிருக்க மாட்டார்களே!
நீக்கு//உயிருடன் இருந்திருந்தால் ஏழு பேர் சிறைக்கே போயிருக்க மாட்டார்களே!// - தப்புத் தப்பா எழுதறாங்க எங்க கீசா மேடம். வெடிகுண்டு சரியா வெடிக்கலை, இல்லை எக்குத்தப்பா வெடிச்சு ஆதிரை மட்டும் செத்தா, மத்த எல்லாருக்கும் பிரச்சனை இல்லை என்றால், நூல் பிடிச்சு மத்தவங்களைப் பிடிச்சு உள்ளதான் வச்சிருப்பாங்க. அதுவும் தவிர, 'மன்னித்துவிடுவார்' என்பதற்கு அர்த்தமே இல்லை. ராஜீவ் காந்திக்கு அந்த பவர் கிடையாது. அவங்க கொலை செய்தது பாரத நாட்டின் பிரதமராக வரப்போகிறவரை (முன்னாள் பிரதமரை). வெறும் ராஜீவ் காந்தி என்ற இந்தியரை அல்ல.
நீக்குசுயமரியாதைக்கான & பதில் மிக அருமை. அடங்கிப் போய்க்கொண்டே இருந்தால் (அது மனைவி ஆனாலும் சரி) இன்னும் அதிகமாகவே அடக்குவார்கள்.
பதிலளிநீக்குநட்பில் ஈகோ பார்க்கக்கூடாது. பெரும்பாலும் 'நட்பு' என்று வரும்போது அங்கு பரஸ்பர அன்பும் மரியாதையும் இருக்கும்.
//பெண்கள் பொதுவெளியில் அதிகமாக காதுகூசும் அளவு வார்த்தைவசவுகளை// - பதில் சொன்னவர்கள் 16 வயதினிலே படத்தைப் பார்த்ததே இல்லை போலிருக்கு (எங்க ஹாஸ்டலில் ஞாயிறு மதியம் கதை வசனம் ஒலிபரப்பி ஒலிபரப்பி கிட்டத்தட்ட மனப்பாடம் ஆகியிருந்தது... மானம் கெட்டவ..ரோஷம் கெட்டவ..தூ.....)
ஹா ஹா !
நீக்கு@ நெல்லைத்தமிழன் உங்க மகள் செய்த ப்ரெட் லோஃப் post கமெண்ட்ஸ் நேற்று பார்க்கலையா :)
நீக்குநீங்க எழுதினப்பறம்தான் போய்ப் பார்த்தேன் (நன்றி). மறுமொழியும் கொடுத்தாச்சு எல்லோருக்கும்..ஹாஹா
நீக்கு//நீட்டி முழக்கி நீதி நேர்மை நியாயம் என்று பேசுபவர்களின்// - என்னுடைய அனுபவம் சொன்னா, நம்ப கஷ்டமா இருக்கும். யார் யார், ரொம்ப அதிகமாக, கடவுள், சாமி சாமி என்று அதீதமாக இருக்கிறார்களோ, அவர்களிடத்தில் அதிக தவறுகள் இருப்பதைத்தான் நான் இதுவரை பார்த்திருக்கிறேன். எங்க ஆபீஸிலேயே, யாராவது கொஞ்சம் அதிகமாக 'தெய்வம், இந்த விரதம் அந்த விரதம்' என்று ஃபிலிம் காட்டினாலே நான் கொஞ்சம் ஜாக்கிரதையாகிடுவேன்.
பதிலளிநீக்குஉண்மை. எனக்கும் அந்த அலுவலக அனுபவம் இருக்கிறது.
நீக்குஎனக்கும் இதே அனுபவம் உண்டு.
நீக்குஅதே நெல்லை...அதே..எனக்கும் அனுபவம் உண்டு
நீக்குகீதா
அதே அதே ஒரு எக்ஸ்க்ளூசிவ் கிறிஸ்தவ குடும்பத்தினருடன் நட்பு வைத்து நாங்கள் பட்ட பாட்டை சொல்ல முடியாதளவு கஷ்டப்பட்டோம் .அளவுக்குமிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு .ஒரு சிறு உதாரணம் அவர்கள் ஞாயிறு பிள்ளைகளை விளையாட அனுமதிக்கமாட்டாங்க சிவப்பு வண்ணம் உடுத்தமாட்டாங்க பிங்க் வண்ணம் ஆண்கள் சர்ட் போட மாட்டாங்க நானா ஜீன்ஸ் அணிந்தால் குற்றம் :) பெண்கள் அணியக்கூடாதாம் ஆண் உடைகளை .கடும் குளிர் மைனஸ் டிக்ரீல நானா என்ன பண்ணுவேன் .இப்படிலாம் அட்டூழியம் பண்ணின அந்த குடும்ப தலைவன் இறுதியில் தடம் மாறினார் .
நீக்குஏஞ்சலின்... எதையுமே அதீதமாகச் செய்தால், நாம் நட்புகளை இழக்கத் தயாராக இருக்கவேண்டும், சமூகத்தில் ஒட்டாமல் தனித்திருப்பதில் இன்பம் காண வேண்டும். அவ்வைப் பாட்டி அதனால்தான் ஊரோடு ஒத்து வாழ் என்று நமக்கு அறிவுரை சொல்லியிருக்கார்.
நீக்குஎனக்கும் சிலர் (குடும்பத்தில் மூத்த உறவினர்கள்) கொஞ்சம் அதீத அட்வைஸ் மழை பொழிவாங்க - இந்தமாதிரிதான் டிரெஸ் பண்ணணும், இதை இதைச் செய்யணும், வெளில சாப்பிடக்கூடாது, ஆனியன் போன்ற பல தவிர்க்கப்பட்ட உணவுகளை உண்ணக்கூடாது என்றெல்லாம். ஆனா என் பாலிசி, நம் வாழ்க்கையை நாமதான் வாழணும், அடுத்தவங்க சொல்வதில் நமக்கு எது ஒத்துவருமோ அதைத்தான் ஏத்துக்கணும். அடுத்தவங்களோட xerox copyயா நாம ஏன் இருக்கணும்?
//ரசிக்கும் பொழுது அந்த படைப்பாளி எடுத்துக் கொண்ட விஷயத்தை எப்படி அளித்திருக்கிறார் என்று பார்த்தால் போதாதா?// - இது என்னடா அநியாயமாக் கீது. வீட்டில் சாப்பாடு நல்லா இருக்கா, என்ன மாதிரின்னு சொல்லாம சும்மா அவுக் அவுக்னு சாப்பிட்டுட்டுப் போனா, பண்ணினவங்களுக்கு ஒரு மாதிரி இருக்காதா? விமர்சனம் எப்போதுமே ஒரு கலைப்படைப்பை அவதானித்து படைப்பாளிக்கு கலையை மேம்படுத்தக் கொடுக்கும் வாய்ப்பு. அதை இலவசமா செய்யறவங்களை பாராட்டாட்டா வேண்டாம், குறை சொல்லாமல் இருக்கலாமே. அல்லது, பேசாம 'சூப்பர், அருமை, பார்க்கவே நல்லா இருக்கு, எழுத்தை ரசித்தேன், கதம்பத்தை ருசித்தேன்' என்று முதுகு சொறியும் பின்னூட்டங்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன என்று எழுதிடலாமே.
பதிலளிநீக்குசூப்பர், அருமை, உங்க கருத்தை ரசித்தேன்!
நீக்குநெல்லை விமர்சனம் செய்வதில் தவறில்லை அதை எப்படிச் செய்கிறோம் என்பதுமிக மிக முக்கியம். ஒரு சிலரது விமர்சனங்கள் மிகவும் மனதை வாட்டி கீழே தள்ளும் அள்விற்கும் இருக்கும். அதுவும் மாஸ் சைக்காலஜி என்று இருக்கே. இங்குமே கூட ஸ்ரீராம் அடிக்கடி சொல்வார் முதல் கமென்ட் எப்படி இருக்கோ அப்படியே மற்றவையும் தொடரும் என்று.
நீக்குசாப்பாட்டைச் சாப்பிட்டு என்ன செஞ்சுருக்கே நீ உப்பு இல்லை, காரமில்லை...நல்லால்லே என்று என்று சொல்வது நல்ல விமர்சனமா? அது அதைச் செய்தவரின் மனதை, அதைச் செய்வதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரத்தை எல்லாம் அவமதிப்பது போல இல்லையா? ஹார்ஷ் விமர்சனம் சரியல்ல.
இதை இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று இப்படி முயற்சி செய் என்று சொன்னால் நல்ல விமர்சனம். விமர்சனம் ஊக்கப்படுத்துவது போல இருக்க வேண்டுமே அல்லாமல் கலைஞரை முன்னேற விடாமல் இருப்பது போல இருக்கக் கூடாது இல்லையா?
கீதா
பொதுவாகவே விமர்சனம் செய்பவர்கள் கலைஞர்களை அல்லது படைப்புகளை, ஒன்று ஓரேயடியாகப் புகழ்வது அல்லது ஒரே அடியாக ஹார்ஷாகச் செய்வது.
நீக்குஇதை ஜெ கா ரொம்ப அழகாகச் சொல்லியிருக்கிறார் பாரீசுக்குப் போ எனும் நாவலில். அவர் அதில் சொல்லும் கருத்துகள் பல சிந்திக்க வைக்கும்.
கீதா
//பணக்காரர்கள் என்றால் குழந்தைகள்மீது பாசம் காட்ட// - பாசம் காட்ட வாய்ப்பு மிக மிகக் குறைவு. அவங்களுக்கு நேரம் மிகவும் குறைவு என்பதுதான் காரணம். அவங்க பிஸினெஸ், அரசியல், காசு சேர்க்கும் வழி என்று ரொம்பவே பிஸியாக உழைக்கவேண்டி இருக்கும். அதுனால குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க மாட்டார்கள். அதை ஈடுகட்ட, என்ன கேட்டாலும் வாங்கிக்கொடுத்துவிடுவார்கள், என்ன செலவழித்தாலும் பெரும்பாலும் கண்டுக்க மாட்டாங்க.
பதிலளிநீக்குநாராயண, நாராயண!
நீக்குபணக்காரர் மட்டுமில்லை தாய் தகப்பன் இருவரும் வேலைக்குப்போகும் வீட்டிலும் இப்பிரச்சினையுண்டு .இந்த காரணத்தாலேயே நான் மகள் பல்கலைக்கழகம் போன பின்தான் வேலைக்கு செல்ல துவங்கினேன் .அதுவும் நானும் கணவரும் மாறி மாறி ஷிஃப்ட் .எங்க மகளுடன் படிக்கும் பல ஸ்டூடண்ட்ஸ் சொல்வது //உனக்கு அன்பான குடும்பம் இருக்கு // பிள்ளைகளின் மனநிலையை பெற்றோர் புரிஞ்சிக்கணும்
நீக்குநல்ல வழிமுறையைப் பின்பற்றியிருக்கிரீர்கள்.
நீக்கு@ nellai: குழந்தை வளர்ப்பு என்பது வேறு, பணம் சம்பாதிப்பது என்பது வேறு. ஏழைகளுக்கும், மிடில் க்ளாஸ் மக்களுக்கும் பணம் சம்பாதிக்கும் அவசியம் இல்லையா? பணமும் சம்பாதித்து, குழந்தைகளுக்காகவும் நேரம் ஒதுக்கும் பெற்றோர் எல்லா மட்டத்திலும் உண்டு. பணமும் சம்பாதிக்காமல், குழந்தைகளிடம் கொடூரமாக நடக்கும் பெற்றோர்களும் உண்டு. நேற்றைய கீதா ரங்கனின் கதை படித்தீர்களா இல்லையா? பணக்கார பெற்றோர் பற்றிய உங்கள் கருத்து ,"வெள்ளையாக இருப்பவர்கள் நல்லவர்கள்" என்பது போன்றது.
நீக்கு///நான் மகள் பல்கலைக்கழகம் போன பின்தான் வேலைக்கு செல்ல துவங்கினேன்///
நீக்கும்ஹூம் 4 பிள்ளைகள் எனில், 4 ஆவது பிள்ளை பல்கலைக்கழகம் போகும்போது அஞ்சுவுக்கு வயசு 80 ஐத் தாண்டியிருக்கும்:).. அப்போ எங்கின போய் வேலை தேட முடியும் கர்ர்ர்ர்ர்:))... ச்சும்மா போகிற போக்கில அள்ளி விடக்கூடாதாக்கும்:))
:))))
நீக்குநல்ல சுவாரசியமான கேள்விகள். பதில்களும் சிறப்பாக இருக்கின்றன. சில பதில்கள் மிகவும் ரசிக்க வைத்தன.
பதிலளிநீக்குஅன்பு என்பது எதிர்பாராத அன்பாக இருந்தால் இப்படி மன்னிப்பு என்ற வார்த்தைகளுக்கு அங்கு அவசியமில்லாமல் போய்விடுமே. ஆனால் மனிதர்கள் நாம் அந்த அளவிற்கு நம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டுவிட்டால் பழியுணர்ச்சி இல்லாமல் கடந்து சென்றுவிடலாம். அல்லது வெறுக்கும் மனமும் கூட இல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் சில சமயங்களில் அப்படி இருப்பது கடினமான சவால் விடும் தருணங்களாகவும் அமைந்துவிடுகிறதுதான்.
மறப்போம் மன்னிப்போம் என்பது நல்ல விஷயம் தான் ஆனால் சிலர் எல்லையைத் தாண்டி நம்மை ஏமாற்றும் போது கோபம் வரத்தான் செய்கிறது அவர்களை விலக்கி வைக்கத்தான் தோன்றுகிறது
துளசிதரன்
நல்ல கருத்துரை. நன்றி.
நீக்குசுயமரியாதை மனிதனுக்கு மிகவும் முக்கியம். சில இடங்களில் அது தவறும் போது மனம் வேதனையுறும். அப்போது கொஞ்சம் ஈகோ எட்டிப்பார்க்கும். நம் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிவரும்.
பதிலளிநீக்குபதில்களை மிகவும் ரசித்தேன்.
ஈகோ யாரிடம் காட்டுகிறோமோ இல்லையோ கண்டிப்பாக வீட்டில், உறவில், நட்பு வட்டத்தில் காட்டக் கூடாது. காட்டாமல் இருப்பது நல்லது. அப்படியே ஈகோ மேலெழுந்தாலும் கடும் வார்த்தைகள் பயன்படுத்தாமல் சாதுர்யமாகச் சமாளிக்கத் தெரிய வேண்டும் குறிப்பாகக் குடும்பத்தில்.
இரு பதில்களும் சிறப்பு.
துளசிதரன்
நன்றி, நன்றி.
நீக்குஎதிர்காலச் சந்ததியினர் கண்டிப்பாக நன்றாக சமாளிப்பார்கள். எளிதாகக் கடந்து செல்வார்கள் என்றே தோன்றுகிறது. நமக்குப் பிரச்சனை என்று தோன்றுவது அவர்கள் அதைப் பிரச்சனையாகவே கருதுவதாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு சில விஷயங்களைக் குறிப்பாக நாம் ஒழுக்கம் என்று வலியுறுத்தும், எண்ணும் விஷயங்களை அவர்கள் எப்படிக் கையாள்வார்கள் என்பது நமக்குக் கொஞ்சம் இடிக்கலாம். அவர்கள் அதையும் எளிதாக எடுக்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் அதையும் ஒரு பெரிய விஷயம்காக் கருதாததால் இருக்கலாம்.
பதிலளிநீக்குஇதற்கான பதில்களும் சிறப்பு.
துளசிதரன்
நன்றி துளசிதரன் சார்.
நீக்குஅனைத்து கேள்விகளும் அருமை . அதற்கு பொறுமையாக நிதானமாக பதில்கள் சொன்னது அருமை.
பதிலளிநீக்குநமக்கு கஷ்டம் கொடுத்தவர்கள் நினைவு எப்போது கஷ்டம் கொடுத்தார்கள் என்று நினைக்கும் போதுதான் கோபம் வரும். ஆனால் அவர்கள் எதிரில் வந்து சிரிக்கும் போது மறந்து விடும் வரவேற்க தோன்றும்.
காப்பி குடிப்பதை ரசித்து சொல்லி இருக்கிறீர்கள். நான் காப்பி குடிக்கும் போது அப்படித்தான் மிகவும் ரசித்து குடித்தேன். நான் காப்பியை விட்டு 30 வருடங்கள் ஆச்சு.
அட! காபிப் பழக்கத்தை விட்டு முப்பது வருடங்களா! Great!
நீக்குநேற்று இரவிலிருந்தே இணையத்தில் பிரச்னை...
பதிலளிநீக்குகாலையில் அலுவலகம்... வேலை ...
உலகத்தில் ஆயிரம் ஆயிரம் நடந்து கொண்டு தான் இருக்கின்றன...
நாம் நமக்கான கோப்பையில் இருக்கும் காஃபியை ரசித்துக் குடித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியது தான்...
வேலை ஒன்றும் இல்லாவிட்டால்
சும்மா இருக்க வேண்டியது தான்...
நமக்காக ஒரு கோப்பை இருக்கிறது. அதில் காஃபியும் இருக்கிறது என்பதே சில சமயங்களில் போதுமானதாக இருக்கிறது..
நீக்குஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்,
நீக்குபல எண்ணத்தில் நீந்துகிறேன்
ஏன், ஏன், ஏன் !
காபி இருப்பது கோப்பையில் என்றால்
என் வாயினில் ருசிக்கட்டுமே !!
வாழ்க்கையில் இனிக்கட்டுமே!
எப்படி ருசிக்கும் உங்கள் வாயில் - நீங்கள்தான் நிறுத்தி ரெண்டு வருஷமாச்சே!
நீக்குஅட! ஆமாம் ல !!
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்தக் கருத்தும் ...
நீக்குஎனது கேள்விகளுக்கு பதிலளித்த ஆசிரியர்களுக்கு நன்றீஸ் :) இன்னிக்கும் நிறைய கேள்வி கேட்கா ஆசை ஆனா வேலைக்கு புறப்பட்டிட்டிருக்கேன் இயன்றால் திங்களுக்குள் கேட்கறேன் :)
பதிலளிநீக்குநிச்சயம் கேளுங்கள்.
நீக்கு//இயன்றால் திங்களுக்குள் கேட்கறேன் :)//
நீக்குஅல்லோ மிஸ்டர்:)) அதிரா வந்திட்டேனாக்கும்:)) கிளாவிகளை ஓசிச்சுக் கேட்கவும்:)) இல்லை எனில் அடிவிழும்:))
அதற்கெல்லாம் பயந்தவர் இல்லை அவர்! தைரியமாக கேட்பார்!
நீக்குநான் என் பதிவில் கூட பதில் கருத்தில் சொல்லியது. இருக்கும் போது எல்லொருடனும் அன்புடன் அவர்களோடு முடிந்த அளவு நேரம் செலவிட்டு இருக்கலாம் குறிப்பாக நம் பெற்றோர், குடும்பத்துடன்.
பதிலளிநீக்குஇது அங்கு சொல்லவில்லை. இறந்த பிறகு வருத்தம் மிஞ்சிப் போகும். நட்பு அல்லது உறவினர் யார் மீதேனும் கோபம் இருந்தால் கூட அவரை மன்னித்து அட்லீஸ்ட் ஹை பை என்றாவது இருக்கலாம். புன்சிரிப்புடன் கடக்கும் அளவிற்கேனும். மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பதை விட. பேசாமல் இருப்பதை விட. என்று எனக்கு அடிக்கடித் தோன்றும். ஆனால் ஐடியலிஸ்டிக்காக இருக்க முடியாதே.
நைஜீரியன் காஸ்பெல் சிங்கர் சாம்சங்க் என்பவர் பாடியதாக அழகான ஆங்கிலக் கவிதை ஒன்றை எடுத்து வைத்திருந்தேன் என் பதிவிற்காக. பதிவு பெரிதாகிப் போனதால் போடவில்லை. அப்புறம் அடுத்த பதிவில் சேர்க்க வைத்துள்ளேன்.
முந்தைய கருத்தில் தப்பா பேர் சொல்லிட்டேன் அதான் டெலிட் செஞ்சேன்
கீதா
ஓ ! அப்படியா! கருத்துரைக்கு நன்றி.
நீக்குஎல்லாமே சுவாரஸ்யமாக இருந்தது ஜி
பதிலளிநீக்குநன்றி.
நீக்குதனக்கு வேதனை கொடுத்தவர்களுக்கும் அன்பை கொடுத்தவர் என் அம்மா. மற்றவர்களிடம் இருக்கும் குறையை பாராட்டக்கூடாது என்பார். "குப்பையை தள்ளிட்டு கோலத்தை போடணும்' என்பது அவர் பாலிசி. அதனால் எனக்கு கெடுதல் செய்தவர்களுக்கு அன்பை கொடுப்பேன். ஆனால் சிலர் நாம் என்னதான் அன்பை சொரிந்தாலும், அதே ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க மாட்டேன் என்கிறார்களே..!!ஏஞ்சலின் அந்த கேள்விக்கு #,& இரண்டு பேர்களின் பதில்களுமே சிறப்பு!
பதிலளிநீக்குகுப்பையை தள்ளிவிட்டு கோலத்தைப் போடணும். சுருக்கமான, அழகான பாலிசி. கருத்துக்கு நன்றி.
நீக்கு//ஒரு கலைப் படைப்பை ரசிக்கும் பொழுது அந்த படைப்பாளி எடுத்துக் கொண்ட விஷயத்தை எப்படி அளித்திருக்கிறார் என்று பார்த்தால் போதாதா? கையினோரு தராசோடு உட்கார வேண்டுமா?// நான் கேட்க நினைத்ததை சரியாக சொல்லவில்லை. விமர்சிக்கக் கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. முறைதவறிய உறவுகளை சித்தரிக்கும் கதைகளையோ, திரைப்படங்களையோ படிக்கும் பொழுதும், பார்க்கும் பொழுதும் அதை படைத்த வரை ரவுண்டு கட்டி திட்டுகிறார்களே, இது சரியா? அவர் அதை எப்படி சித்தரித்திருக்கிறார்? என்று ரசித்தால் போதாதா? கூடவே ஒழுக்க தராசை கொண்டு செல்ல வேண்டுமா? என்றுதான் கேட்க நினைத்தேன். அப்படி கேட்டால் என்னை ஒழுக்கமற்றவள் என்று நினைத்து விடப் போகிறார்களே என்ற பயத்தில் கேள்வியை மாற்றி விட்டேன்.
பதிலளிநீக்குநமக்குத் தெரிந்தவர்கள் தவறு செய்தாலோ, இல்லை நமக்குத் தெரிந்தவருடைய பெண்ணை யாரோ பையனுடன் பீச்சில் பார்த்தாலோ இல்லை மற்ற சந்தர்ப்பங்களிலோ ஏன் நாம் உடனே அந்தத் தவறு நடக்கக்கூடாது என்று முயற்சி எடுக்கிறோம்? அவர்கள் வாழ்க்கை அவர்கள் வாழ்கிறார்கள் என்று ரசிக்கக் கற்றுக்கொள்ளவில்லை? 'முறைதவறிய உறவு' போன்ற அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்வதை திரைப்படமாக எடுத்து, பார்க்கும் மக்கள், பொதுவாக சமுதாயமே அப்படி இருக்கு என்று நினைத்து இன்னும் கெட்டுப்போக வைக்கிறானே இந்த டைரக்டர் பயல் என்ற தார்மீகக் கோபம்தான் கடுமையான விமர்சனத்தை முன் வைக்கக் காரணம். மோசமான தொலைக்காட்சித் தொடர்களை, நாம் எல்லோரும் உட்கார்ந்து பார்த்து, அட எப்படீல்லாம் சிந்தித்திருக்கான் இந்த டைரக்டரு என்று வியப்பதில்லை, வேற வேலையில்லை, சேனலை மாத்துங்க என்றுதான் சொல்வோம். நம் அடி மனதில், நாம் எல்லோரும் நல்லவங்களா இருக்கணும் என்று விருப்பப்படுவதாலும் சமூகமும் நன்றாக இருக்கணும் என்ற நல்லெண்ணத்தினாலும்தான் இந்த மாதிரி 'ரவுண்டு கட்டி திட்டுவது'.
நீக்குநெல்லைததமிழன் சொல்வது நியாயம் என்று நினைக்கிறேன்.
நீக்குநீங்கள் சொவது என்னவோ வாஸ்தவம்தான். இருந்தாலும் தி.ஜானகிராமனையும், கே.பாலசந்தரையும் இப்படி திட்ட வேண்டாம் என்று தோன்றும்.
பதிலளிநீக்குவிஷுவல் மீடியாவில் சமுதாயத்தைக் கெடுத்தவர்களுக்கே அதிக பங்கு. எழுதப் படிக்காத தெரியாதவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்த சமுதாயத்தைக் கெடுப்பவர்கள் சினிமா ஆட்களே.
நீக்குஒரு சின்ன சந்தேகம், எங்காத்துக்காரர், சாரி, எங்காத்து கார் படம் மட்டும் அனுப்பினால் போதுமா? அல்லது அதனோடு எங்கள் அனுபவங்களையும் எழுதி அனுப்ப வேண்டுமா?
பதிலளிநீக்கு//எங்காத்துக்காரர், சாரி, எங்காத்து கார்//
நீக்குஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதிராவைப்போல டங்கு ஸ்லிப்பாகுதே:))... இருந்தாலும் இவ்ளோ கோபம் எதுக்கு:))
கார் படம் நல்லது. + அனுபவங்கள் இன்னும் நல்லது.
நீக்குகெள அண்ணன் நலம்தானே... நீண்ட நாட்களின் பின்பு வந்திருப்பதால கவ்வன்னா எப்படி அடிப்படி என மறந்திட்டேன் ஹா ஹா ஹா எழுத்துக்கள் கைக்கு வரக் கஸ்டப்படுது பாருங்கோ கீ போர்ட்டில கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...
பதிலளிநீக்குஆங்ங்ங்ங் பழையபடி அதிரா இல்லையே அதட்டிக் கிளவி கேட்க சே சே டங்கு ஸ்லிப்பாகுதே கேள்வி கேட்க எனும் தெகிறியத்தில அஞ்சு 10 கேள்வி கேட்கத் தொடங்கிட்டாவோ கர்ர்ர்ர்:)).. தோ வந்திட்டேனே...:))
கேளுங்கள்!
நீக்கு//3, நட்பில் ஈகோ பார்ப்பது சரியா ? தவறா ?//
பதிலளிநீக்குஈகோ வந்திட்டாலே அங்கு நட்புத் தள்ளாடுது என்றுதானே அர்த்தம்:)).. என்ன சொல்றீங்க கெள அண்ணன்?:))
கரெக்ட்
நீக்கு//4, எதற்கும் ஒரு அளவு உண்டு என்பதில் உடன்படுகிறீர்களா ? அன்புகாட்டுவதிலும் பரிவு காட்டுவதிலும் அக்கறைகாட்டுவதிலும்கூட அளவுகோல் தேவையா ?//
பதிலளிநீக்குதேவைதான்.. அன்புதானே காட்டுகிறோம் என.. அடுத்தவர் மனைவிக்கோ.. கணவனுக்கோ அதிக அன்பைக் காட்டிவிட்டால் என்ன ஆகும் நம் நிலைமை ஹா ஹா ஹா:)...
கண்ணதாசன் அங்கிள் ஜொள்ளியிருக்கிறார்....
“நாம் எது செய்தாலும், ஆருக்குச் செய்கிறோம் என்பதும் முக்கியம்” என...
அதுவும் சரிதான்!
நீக்கு///5, நீங்கள் பேசிப்பழகும் ஒருவர் உங்களிடம் // எனக்கு உன்னை கூட நம்ப பயமா இருக்கு யாரையும் நம்ப மாட்டேன் //என்றால் எப்படி ரியாக்ட் செய்வீங்க ?//
பதிலளிநீக்குஹா ஹா ஹா.. இதற்கான இரு பதில்களையும் ரசித்தேன்...
நான் எனில் பயப்பிடுவேன், ஹையோ அப்படிச் சொல்லும் அளவுக்கு நான் ஏதும் தவறு செய்திட்டேனோ என்னை அறியாமல் என..
ஹா ஹா அப்படியும் ஒரு பயம் வரத்தான் செய்யும்!
நீக்கு//6,இப்போதெல்லாம் நம் தாய்தமிழ்நாட்டில் மக்கள் குறிப்பா அதிக அளவில் பெண்கள் பொதுவெளியில் அதிகமாக //
பதிலளிநீக்குஅஞ்சு நீங்க, வனிதாவையும் சூரியாதேவியையும் பற்றிப் பேசவில்லைத்தானே?:)) ஹா ஹா ஹா..
Who are they hun ????☺️☺️☺️☺️☺️☺️
நீக்குஎனக்கும் வனிதாவை சொல்கிறாரோ என்ற சந்தேகம் வந்தது.
நீக்கு///பணக்காரர்கள் என்றால் குழந்தைகள்மீது பாசம் காட்ட மாட்டார்கள் என்று ஏன் நினைக்கிறோம்? அவர்கள் quality time கொடுக்கலாமே? ///
பதிலளிநீக்குஎன்ன ஆச்சு பானு அககாவுக்கு?:)).. இது ஏதோ கோர்ட்டில வெளியான தீர்ப்பை வச்சுக் கேட்பதைப்போலவே கேய்க்கிறா கர்ர்:)).. முதலில் இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தீங்க பானு அக்கா?:)...
அது சென்ற வார புதன் கேள்வி பதில் கருத்துரைகளின் தாக்கம்.
நீக்கு1, நமக்கு ஒரு சிந்தனை தோணுது அந்த சிந்தனை கொஞ்சம் நேரத்தில் மறந்தும் போகுது என்னுடைய கேள்வி நம்மில் உதித்த சிந்தனை எங்கே போகின்றது ?
பதிலளிநீக்கு2, தவறுகள் நம்மை திருத்திக்கொள்வதற்கு என்றால் எதற்கு தவறு செய்ய மக்கள் பயப்படறாங்க ?
3, ஒவ்வொரு மனிதரும் தனிப்பட்ட குணாதிசயங்களோடு இருக்கிறார்களே இதில் நம்மை நாமாக வைப்பது எது ?
4, ஒவ்வொருநாளும் புதிதாய் பிறக்கின்றோம் என்பது உண்மையா ?
5, சிறு குழந்தைபோல் போல தூங்கினார் தூங்கினாள் என்பது எப்படி பொருத்தமாக வரும் ? பெரும்பாலான சின்ன குழந்தைகள் அமைதியா இரவில் தூங்குவதில்லையே ? ?
6, பழைய சிண்ட்ரெல்லா கதையை இப்போ புதிதா எழுதும்போது ஷூவுக்கு பதில் என்ன ப்ராப்பர்டி வரக்கூடும் ?எதுக்கு கேட்கிறேன்னா இப்போதுள்ள குழந்தைங்க எதை சொன்னாலும் நம்புவதில்லை :) காலில் பொருந்திய அளவான ஷூ எப்படி கழண்டு விழுந்துச்ன்னுலாம் ? கேட்கிறாங்க
இவ்வளவு லேட்டாகவா கேட்பது! சரி பதில்கள் அளிக்கப் பார்க்கிறோம்!
பதிலளிநீக்கு