புதன், 12 ஆகஸ்ட், 2020

நின்டென்டோ switch இந்தியாவில் வந்திருக்கா ?

ஏஞ்சல் : 


1, கலைஞன் என்பவன் (ர் ) யார் ?


# கலைஞன் என்பவன் கலையை சிறப்பாக வெளிக் கொணர்பவன். அது தவிர வேறு நோக்கம் இல்லாதவன் .
கலைஞர் என்றால் மு.க. 

& மக்களுக்கு மனமகிழ்ச்சி தருவதற்கு வேலை செய்து ஊதியம் பெறுபவர். 

2, இறைசக்தி எப்படிப்பட்ட கலைஞர்களுக்குள் வரும் ? 

# எல்லா நல்லதுமே இறைசக்தியால் தூண்டப்படுவதால் உண்டாவதாகக் கருதப்படுகிறது. நல்லன அல்லாதன மனிதரின் பேராசை முதலான உணர்வுகளால் ஏற்படுவன. 

& அர்ப்பணிப்போடு எந்த வேலையையும் முனைந்து செய்யும் கலைஞர்களுக்குள்.

3,நின்டென்டோ switch இந்தியாவில் வந்திருக்கா ? விளையாடி இருக்கீங்களா ?

# நின்டெண்டோ என்றால் என்ன என்றே தெரியாது.

& இந்தியாவில் இருக்கு. சரி - 'நி சுவி' ஒன்றை அமேசான் மூலம் வாங்கிவிடலாம் என்று ஆர்டர் செய்ய நினைத்து தேடிக் கண்டுபிடித்தேன். 


ஆ! அம்மா !! ஆவ் !!! இருபத்து மூன்றாயிரத்து ஐநூறு ரூபாய் !!!! என்னங்க - நான் என்ன கையில ஒரு கோடி ரூபாய் வெச்சுகிட்டு, எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கேனா ! என்னைப் பார்த்து ஏனுங்கோ இப்பிடி கேட்டீங்கோ?

இது ஒருபுறமிருக்க - சுமார் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு பையன், பெண் இருவரும் விளையாடுவதற்கு Play Station and accessories வாங்கி, Mario, Super Mario போன்ற இருநூற்று ஐம்பது வகை விளையாட்டுகளை அவர்களோடு சேர்ந்து நானும் ஆடியது உண்டு. அப்போ எல்லாமே சேர்ந்து ஐநூறு ரூபாய்க்குள் கிடைத்தது

4,நமக்கு பிடிச்சவங்க நல்லவர்களாகவும் பிடிக்காதவங்க கெட்டவர்களாகவும் இருக்கிறார்களே இது எப்படி ?

# அப்படியா ?

எனக்குப் பிடிக்காத சில நல்லவர்களும், பிடித்த பல "கெட்ட"வர்களும் உண்டு. 

நல்லவர் கெட்டவர் என்பதற்கான விதிமுறைகள் அவரவரளவில் மாறுபடும். நற்றாமரைக் கயம். 

& யோசிக்க வேண்டிய விஷயம்! ஒருவேளை நல்லவர்களை மட்டும்தான் நமக்குப் பிடிக்கிறது; கெட்டவர்களை பிடிப்பதில்லை என்பது காரணமாக இருக்குமோ. 
ஆனால், அதே சமயம் நல்லவனைப்போல் வேடமிடும் கெட்டவனை நமக்குப் பிடித்துப்போய் விடுமோ என்கிற சந்தேகம் வருகின்ற வாய்ப்பும் அதிகம் உள்ளதால், கெட்டவனைப் போல வேடமிடும் நல்லவன் இருக்க சாத்தியங்கள் குறைவு என்று தோன்றினாலும் ஆனால் அவர்களை கெட்டவர்கள் என்று தவறாக நினைத்து நம்முடைய பிடிக்காதவர்கள் பட்டியலில் சேர்த்துவிடுவோமோ என்னும் பயமும் எழும் அதே நேரத்தில், நாம் நல்லவராக இருந்து, எதிராளியும் நல்லவராக இருந்துவிட்டால் பிரச்னை இல்லை என்று கொண்டாலும் அதே நேரத்தில் நாம் கெட்டவராக இருந்து எதிராளி நல்லவராகவோ, கெட்டவராகவோ அல்லது ந போல் வேடமிடும் கெ ......... (ஆ எங்கே கேள்வி கேட்டவரைக் காணோம்!) 

கீதா சாம்பசிவம் :

மாமியார்-மருமகள் விரோதம் தமிழ்நாட்டில் மட்டும் தான் அதிகமோ? மற்ற மாநிலங்கள்/நாடுகளில் இருந்தாலும் பெரும்பாலும் அங்கெல்லாம் மாமியார்-மருமகன் பிரச்னையே அதிகம்னு தோணுது.நீங்க என்ன சொல்றீங்க?

# TV சீரியல் ரொம்ப பாக்காதீங்கன்னுதான் சொல்றேன்.

& மாமியார் மருமகள் கொடுமை, வரதட்சனைக் கொடுமை என்றெல்லாம் சில சமாச்சாரங்கள் எனக்கு இந்திப்படங்களில் / இந்தி சீரியல்களின் தமிழாக்கங்களைப் பார்த்துதான் தெரியவந்தது. 

அயல் நாடுகளில் சித்தரிக்கப்படும் பல மாமியார் - மருமகன் பிரச்னைகள் ஜோக் என்ற கண்ணோட்டத்தில்தான் என்று நினைக்கிறேன். 

நெல்லைத்தமிழன் : 

என் பெரியப்பா, தான் இறக்கப் போவதைத் தெரிந்து ஒரு வாரம் முன்பு என் அப்பாவை வரச் சொன்னார் (திருவனந்தபுரத்துக்கு). என் பாட்டிக்கும் இறப்பிற்கு முந்தின நாள் இறப்பு சம்பந்தமாகக் கேள்விகள் கேட்டிருக்கிறார். இது மாதிரி நீங்கள் கேள்விப்பட்டிருக்கீங்களா?

# இந்த மாதிரி அசாதாரண சம்பவங்கள் எல்லாக் குடும்பத்திலும் இருக்கும்.
என் உறவினர் ஒருவர் தன் அந்திம காலம் நெருங்கி விட்டதாகக் கருதி சில ஏற்பாடுகள் செய்து அதன் பின் பத்து ஆண்டுகள் இருந்தார்.
பலித்தபின்பு "அப்பவே சொன்னார்" என மாய்ந்து போவோம். பலிக்காத விஷயங்களில் திரில் இல்லாததால் எளிதாக மறக்கப்பட்டு விடுகின்றன.

வாழ்க்கை வாழ்வதற்கேனு சொல்றாங்களே. வாழ்வதுன்னா என்ன?

# ரசனையுடன், மகிழ்ச்சியாக, யாரையும் புண்படுத்தாமல் , பிறருக்கு ஆனவரை உபகாரமாக இருப்பதுதான் ..

முன்னால ஆத்துத் தண்ணி, குளத்துத் தண்ணி இதெல்லாம் குடிச்சே நல்லாத்தான் இருந்தாங்க. இப்போ ஆர்ஓ ங்கறாங்க, அப்புறம் அதுனால பிரச்சனை வரும்றாங்க. எல்லா புதுக் கண்டுபிடிப்புகளும் புதுப் புது பிரச்சனைகளைக் கொண்டுவருதே!

# இது குறித்து நானும் பலமுறை யோசித்ததுண்டு. முன்பெல்லாம் இப்போது போல் எல்லாவற்றையும் மாசு படுத்துதல் அதிகம் இல்லாததுதான் காரணமோ ?

இப்போ நாம் குடிக்கும் பால்னால பிரயோசன் இல்லைனு படித்தேனே. உங்க அபிப்ராயம் என்ன?

# இப்போது கிடைக்கும் பாக்கெட் பால் குடித்து வளர்ந்த தலைமுறையே இருக்கிறதே.

நம்மிடம் 1கோடி இருந்தால் (சொத்து மற்றும் பணம்) வாழ்க்கையை நன்றாக கழித்துவிட முடியாதா? சரி... பெரிய அரசியல்வாதிகளுக்கு 10 கோடி இருந்தால் பத்தாதா? எது அவங்களை, 5000 கோடி, 10000 கோடி, 40,000 கோடி என சொத்து சேர்க்கத் தூண்டுகிறது? அதன் பலன் என்ன?

# இது பற்றி இதே போன்று நானும் யோசித்ததுண்டு. 

ஓரளவுக்கு மேல் பணம் சேர்ந்தவுடன் குடும்பத்தில் அனைவர்க்கும் தலா பலகோடி இருக்க வேண்டும் எனத் தோன்றும் போலிருக்கிறது. 
அதன்பின் ஒரு சொந்தமாக தீவு, ஏகே 47 ஏந்திய காவலர் பட்டாளம் இதற்கெல்லாம் கூட சேர்க்க வேண்டுமே..
தேர்தலில் வெற்றி பெற ஒரு நூறு கோடி, தோற்றால் வழக்கு வராமல் தடுக்க ஒரு நூறு இப்படி முடிவில்லாமல் தேவை நீண்டுகொண்டே இருக்கும் போல் இருக்கிறது. 
பாங்க்கில் போட்டு வட்டி பெற இயலாது என்பதால் வட்டிக்காக ஒரு ஐம்பது கோடி, செல்லாத நோட்டு ஆனால் சமாளிக்க ... இப்படி தொடர்கதை - டீவி சீரியல் போல இருந்தால் நாம் எல்லாம் என்ன ஆவது ?

ரமா ஸ்ரீனிவாசன் : 

1. ஒரு மனிதன் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுப்பது அவன்
டி.என்.சி.யில் உள்ள ஓர் அமைப்பா அல்லது அவனது வாழ்க்கை சூழலில் உள்ள பல வருத்தங்கள், வித்தியாசங்கள் மற்றும் வெளியே சொல்ல முடியாத மனஉளைச்சல்களின் உந்துதலா? இது என் நீண்ட நாளைய சந்தேகம். ஏனெனில் நான் கண்ட சில மிகத் தெரிந்தவர்களின் தற்கொலை நிகழ்வின் முன்னர் அவர் மிகவும் உற்சாகத்துடனும் ஒரு பாசிடிவிடியுடனும்தான் (Positivity) காணப் பட்டிருக்கிறார், பழகியிருக்கிறார். பின்னர், ஏன் இந்த திடீர் முடிவு?

# தற்கொலை என்பது ஒரு க்ஷண நேரம் மனம் வெதும்பி புத்தி பேதலிப்பதால் நிகழ்கிறது என சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

2. ஒருவர் தன் குடும்பத்தின் வரையறைக்குள் இருந்து தன் மூதாதையர்
கற்று கொடுத்தது போல் தன் மாமனார், மாமியார், நாத்தனார், மச்சினர்
யாவருக்கும் நேர்மையாக உழைத்து குடும்பத்தை ஓர் நல்ல பல்கலைக்
கழகமாக கொண்டு செல்ல எண்ணும்போது அவருடைய குடும்பத்தினரே அவரை பதம் பார்க்க நினைப்பது ஏன்?

# தனி நபர்கள் மனோபாவங்களை நன்கு உணர்ந்து கொண்டால், அவை நம்மை அதிகம் பாதிக்காது. 
"பதம் பார்க்க" என்று எதைச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. நம்மைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் நேரடியாகவோ வம்பாகவோ சொல்வது என்று வைத்துக் கொண்டால், நான் சொல்வது: "இதுவும் மனிதர்க்கு இயல்பு".

3. வாழ்க்கை நடந்து கொண்டே இருக்கும்போது, திடீரென ஒரு நேரம் எனக்கு இன்று அல்லது இன்னும் சிறிது நேரத்தில் ஏதோ விபரீதம் அல்லது வேண்டாத நிகழ்ச்சி நடக்கப் போகிறது என்று தீவிரமாகத் தோன்றும். உடம்பு படபடப்பாகும். மனம் எதிலும் செல்லாது. அதே போல் பெரிதாகவோ சிறிதாகவோ ஏதோ ஒன்று நடந்து விடும். இது நான் பல முறைகள் எதிர் கொண்ட ஓர் வித்தியாசமான உணர்ச்சி. இது ஏன் நடக்கிறது? எனக்கு மட்டுமேவா அல்லது உங்கள் யாருக்காவது இப்படி ஓர் அனுபவம் உண்டா?

# இந்த வகை உணர்ச்சி முன்கூட்டியே வந்ததாக நினைப்பது ஒருவகையான பிரமை என வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

4. நம்மை விட்டு தங்கள் நல்ல எதிர்காலத்திற்காக வெளியூரோ அல்லது
வெளி நாடோ செல்லும் நம் பிள்ளைகள் அங்கு நன்றாக காலூன்ற வேண்டும், நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று ஆணித்தரமாக இங்கு பெற்றோர்களாகிய நாம் செய்யும் பிரார்த்தனைகள் பல நேரங்களில் பலன் அளிப்பதை நான் கண் கூடாகப் பார்த்திருக்கின்றேன். இது ஓர் தற்செயலாக நிகழ்வா அல்லது “blood is thicker than water” என்ற பழமொழிக்கேற்ப பெற்றோரின் மனமுவந்த பிரார்த்தனைகளுக்கு இறைவனின் செவி சாய்த்தலா?

# அவர்கள் பொறுப்பாக நிதானமாக இருப்பது அவர்களது நல்லியல்பே தவிர நமது பிரார்த்தனை காரணமாக அல்ல என்று நான் நினைக்கிறேன். 

===================
   
இன்று இந்தப் பதிவில், நான் வழக்கமாகக் கொடுக்கின்ற தளத்தின் இணைப்பு அல்லாது google தள இணைப்பு கொடுத்துள்ளேன். வழக்கமாகக் கொடுக்கும் தள இணைப்பு வேண்டாத விளம்பரங்களை கொண்டு வந்து துன்புறுத்துகிறது என்பதால், இந்த முயற்சி. இந்த வார மின்நிலா இதழை இதுவரையிலும் படிக்காதவர்கள், இந்த இணைப்பு மூலம் பார்த்து / பதிவிறக்கம் செய்து, சரியாக வருகிறதா என்று கருத்துரை இட்டால், மகிழ்ச்சி. 
  
மின்நிலா 012    >>>>   LINK  :   
  
===================
  
மீண்டும் சந்திப்போம். நன்றி. 
   
===================

95 கருத்துகள்:

  1. நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும்..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறள் 452:
      நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
      இனத்தியல்ப தாகும் அறிவு.


      மு.வரதராசன் விளக்கம்:
      சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா அண்ட் ஸ்ரீராம் மற்றும் எல்லோருக்கும்.

    ஏஞ்சல் அதான் கேள்விகள் நிறைய இருக்கு. இன்று நிறைய பதிவுகள் பார்க்க வேண்டும் போல!! ஹா ஹா ஹா

    அப்புறம் வருகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இன்றைய கேள்விகளும், பதில்களும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

    //நல்லவர் கெட்டவர் என்பதற்கான விதிமுறைகள் அவரவரளவில் மாறுபடும்//

    உண்மை. நிச்சயமாக எல்லோருக்கும் பிடித்தவராக ஒருவர்கூட வாழவில்லை, வாழவும் முடியாது.

    பதிலளிநீக்கு
  4. வல்லுனர்கள் தான் எல்லாமும் சொல்வார்களே!...

    பேய் என்று சொன்னால் மூட நம்பிக்கை...
    ஆனால் திருவள்ளுவர் அலகை (பேய்) பற்றிச் சொல்கிறார்...

    இறைவனே இந்த வல்லுநர்களிடம் சிக்கிக் கொண்டு படாத பாடுபடும் போது-
    நாம் எல்லாம் எம்மாத்திரம்?...

    பதிலளிநீக்கு
  5. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    கேள்விகளும் பதில்களும் சுவார்ஸ்யம். அதுவும் பதில்கள் நறுக்குத் தெரித்தாற்போல என்று சொல்லலாம்.

    கோடிகள் விளையாடும் இடத்தில் பிறந்தவர்கள்
    சந்தோஷமாக இருக்கிறார்களா என்று
    யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யோசிக்கவே வேண்டாம் வல்லிம்மா. வீட்டில் இருக்கும் கோடிகள் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பதில்லை. அப்பா அம்மா கவனம் பெற்று வளரும் குழந்தைகள்தாம், சண்டை ச்ச்சரவு அன்பு வருத்தம் மகிழ்ச்சி என்று கலந்துகட்டி நன்றாக வாழ்க்கையை வாழ்கின்றன. எது கேட்டாலும் கிடைக்கும், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், அப்பா அம்மா அருகாமை மட்டும் கிடையாது என்ற இடத்தில் என்ன மகிழ்ச்சி இருந்துவிட முடியும்?

      நீக்கு
    2. //எது கேட்டாலும் கிடைக்கும், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், அப்பா அம்மா அருகாமை மட்டும் கிடையாது என்ற இடத்தில் என்ன மகிழ்ச்சி இருந்துவிட முடியும்?// பணக்காரர்கள் என்றால் குழந்தைகள்மீது பாசம் காட்ட மாட்டார்கள் என்று ஏன் நினைக்கிறோம்? அவர்கள் quality time கொடுக்கலாமே? 

      நீக்கு
  6. ஏஞ்சல் சொன்ன நிண்டெண்டோ ஸ்விட்ச்
    இப்போது இங்கேயும் நம் வீட்டுக்கு வந்து விட்டது.

    எல்லோரும் ஆன்லைனில் தோழர்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
    விலை மலிவாக இருக்கும் போதே வாங்கி விட்டார்கள்.

    அதற்கான விளையாட்டுகள் 70 $ வரை போகிறது.

    பதிலளிநீக்கு
  7. நெல்லை சொல்லி இருப்பது போல
    எங்கள் தாத்தா வரசொல்லி நாங்கள் மதுரைக்கு சென்றோம்.
    முதல் நாள் தெளிவாக எல்லோரிடமும்
    பேசி,
    அடுத்த நாள் காலையில் இயற்கை எய்தினார்.

    முன் கூட்டியே அறியும் சக்தி யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
    இறைவன் அனைவரையும் நல்லபடியாக வைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சரியமாக சிலருக்கு தன் அந்திமக்காலம் நெருங்கிவிட்ட விவரங்கள் சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் கணக்கில் முன்னதாகத் தெரிந்துவிடுகிறது!

      நீக்கு
    2. சமீபத்தில் இறந்த என் கடைசி மைத்துனன் கணேஷும் தன்னுடைய முடிவு நெருங்கிக் கொண்டிருப்பதாகவே சொல்லிக் கொண்டிருந்தார். இவ்வளவு சீக்கிரம் நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. 91 ஆம் வருடம் வைத்த இருதய வால்வ் திடீரென வேலை செய்வதை நிறுத்திவிட்டதால் மரணம் சம்பவித்திருப்பதாக மருத்துவப் பரிசோதனை முடிவு. அவர் மருத்துவரிடம் போய் பேஸ் மேக்கர் வைத்துக்கொள்ள இருந்தார். அதற்குள்ளாக இந்த முடிவு.

      நீக்கு
  8. நமக்குப் பிடித்தவர்கள் நல்லவர்களாக - கேள்வியின் உள்ளர்த்தம் பிடித்தவர்கள் தவறு செய்தாலும் பெரிதுபடுத்தாத மனம் பிடிக்காதவர்கள் செய்யும் சிறு தொறையும் பூதாகரமாக்குவது ஏன்? - அது நம் தவறுதான். சொன்னது என்ன என்பதைவிட சொல்வது யார் என்றே மனம் பார்க்கிறது, பிறகு எதிர்வினை புரிகிறது. கவனித்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள்!

      நீக்கு
    2. நெல்லை சொல்லுவது போல் எங்க புக்ககத்தில் நடந்தது/நடக்கும்/நடக்கின்றது. அவங்க பிடிச்சவங்க என்ன செய்தாலும் பொறுத்துப் போகும் குணம் எல்லோரிடமும் இருக்கு.

      நீக்கு
  9. //ஒருவகை பிரமை//- அப்படி அல்ல. எனக்கும் நிறைய முறை நடந்திருக்கு, நடக்கிறது. சில சமயங்களில் false alarm என்று தோணும். இதைப்பற்றி ஒரு சமயத்தில் எழுதறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதுங்க எழுதுங்க எழுதுங்க! எழுதி எங்களுக்கு அனுப்பி வைங்கள்!

      நீக்கு
    2. எனக்குப் பெரும்பாலும் உள்ளுணர்வு சொல்வது தான் சரியாக இருந்திருக்கு.

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. கேள்விகளும் பதிலும் நன்றாக இருக்கிறது.

    எல்லோருக்கும் நல்லவாரக யாரும் இருக்கவே முடியாது. பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் இருப்பார்கள் வெளியில் சொல்லாமல் வாழ்க்கைகை வாழ்ந்து கொண்டு போவார்கள்.

    எத்தனை கோடி பணமிருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே பாடல் நினைவுக்கு வருது.

    என் அப்பா நான் நினைத்தேன் அப்பவே! என்று சிலவிஷயங்கள் நடக்கும் போது சொல்வார்கள்.
    உள் உணர்வு சில நேரம் சரியாக சொல்லும்.


    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் காலை வணக்கம்.
    நெ. தமிழன் சாரின் முதல் கேள்விக்கு என்னுடைய அனுபவம். என் அம்மா இறப்பதற்கு முதல் நாள் படுக்கையின் அருகில் இருந்த என் மன்னியை அழைத்து விட்டத்தைக் காட்டி என் அம்மா "அதோ காமாட்சி கூப்படரா" என்று பல முறைகள் கூறினார் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள் என் மன்னி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அப்பா இறுதி மூச்சு விடுவதற்கு முன்பு, வீட்டின் தெற்கு திசையில் உள்ள மேல் ஜன்னல் திசையில் நோக்கி, அவருடைய இறந்து போன அண்ணனை பெயர் சொல்லிக் கூப்பிட்டு, ' சற்றுப் பொறு இதோ வருகிறேன் ' என்று கூறினார் என்ற தகவலை என் அம்மா எங்களிடம் கூறினார்.

      நீக்கு
  14. இன்றைய கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம்.

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  15. 3,நின்டென்டோ switch இந்தியாவில் வந்திருக்கா ? விளையாடி இருக்கீங்களா ?//

    இப்படி ஒரு விளையாட்டு இருக்கிறது என்பதே இப்போதுதான் தெரிகிறது. கௌ அண்ணா சொல்லிருப்பதைப் பார்த்தால் மயக்கமே வருது ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நின்டென்டோ switch//

      நான் கூட அது ஏதோ புதுவகை உணவோ என்று யோசித்தேன்.  அப்புறம் நவீன வசதியுடன் கூடிய ஸ்விட்ச் ஆக இருக்கும் என்று நினைத்தேன்!

      நீக்கு
    2. @ ஸ்ரீராம் 

      https://media1.tenor.com/images/9aad30dd62c75fcb93721ed598b97114/tenor.gif?itemid=12374477

      நீக்கு
    3. இப்படி ஒண்ணு இருப்பதே ஏஞ்சல் சொல்லித் தான் தெரியும்.

      நீக்கு
  16. 4,நமக்கு பிடிச்சவங்க நல்லவர்களாகவும் பிடிக்காதவங்க கெட்டவர்களாகவும் இருக்கிறார்களே இது எப்படி ?//

    நமக்குப் பிடித்தவர்கள் என்றால் அவர்கள் செய்யும் தவறுகள் கண்ணில் படாது அல்லது நாம் பெரிதுபடுத்த மாட்டோம். அதே சமயம் நமக்குப் பிடிக்காதவர்கள் தவறு செய்தால் அது ஊதிப் பெரிதாக்கப்படும் பெரிதாக்குவோம். அல்லது அவர்கள் நல்லது செய்தால் கூட அதை ஆராய்வோம். இதன் பின்னணியில் ஏதேனும் இருக்கோ என்று. பாராட்ட டக்கென்று மனம் வராது. நமக்குப் பிடிக்காதவர்கள் செய்யும் தவறை பல காலம் நினைவு வைத்திருப்பதும் வழக்கம். அவர்கள் எது செய்தாலும் தப்பு. அவர்கள் நல்லது செய்வது டக்கென்று மறக்கப்படும். அதே இது நமக்குப் பிடித்தவர்கள் என்றால் கூடுதல் புகழ்வது, இதுதான் பொதுவான மாஸ் சைக்காலஜி. ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிடித்தவர்கள் செய்யும் தவறு, பிடிக்காதவர்கள் செய்யும் நல்லது இதையெல்லாம் அப்புறம் பார்க்கலாம் - முதலில் ஏன் சிலரைப் பிடிக்கிறது, அல்லது சிலரைப் பிடிக்காமல் போகிறது என்பதை ஆராயவேண்டாமோ!

      நீக்கு
    2. வேண்டாத மருமகள் கைபட்டா குத்தம், கால்பட்டா குத்தம்...  

      மாமியார் உடைச்சா மண்குடம், மருமகள் உடைச்சா பொன்குடம் போன்ற வாசகங்கள் நினைவுக்கு வருகின்றன.  மாமியாரை மருமகளும், மருமகளை மாமியாரும் விரோத மனப்பான்மையுடனே அணுகுகிறார்கள்...  அதே போல நாத்தனாரையும்!

      நீக்கு
    3. இது என்னது? பிடிச்சவங்க பிடிக்காதவங்க என்ற டாபிக்கில் மாமியார் மருமகள் சண்டையைக் கோத்து விடறார் இந்த ஶ்ரீராம். ஒர்க் ஃப்ரம் ஹோம் போட்டுக்கிட்டு விடுபட்ட சீரியல்கள் எல்லாத்தையும் பார்த்து முடிச்சுக்கிட்டிருக்காரோ? இருக்கும் இருக்கும.

      ஶ்ரீராம்.. பெண்கள்னாலே சண்டை ச்ச்சரவு சகஜம்தானே. என்ன நான் சொல்றது?

      நீக்கு
    4. ம்ம்ம்?  என்ன சொல்றீங்க நெல்லை?   காதில் விழவில்லை!

      நீக்கு
    5. நெல்லை கொஞ்சம் சத்தமா சொல்லுங்க. பா வெ மேடம் காதுகளில் விழவேண்டும்.

      நீக்கு
    6. ஆஆ !!! கீதாக்கா இதை கொஞ்சம் கவனியுங்க 

      நீக்கு
    7. ஹாஹாஹா, என்னோட பெரிய குறை பிடிச்சவங்க கிட்டேத் தான் அவங்களோட பலவீனம், தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்த முயல்வேன். பின்னாடி வாங்கிக் கட்டிக்கொள்வேன். அதுக்கப்புறமா அவங்களுக்கு என்னைப் பிடிக்காமல் போயிருக்கு/போயிடும். :))))))) நாங்க எதிலேயும் தனிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ!

      நீக்கு
  17. நமக்குப் பிடித்தவர்களைப் பற்றி ஒரு பிம்பம் நாம் உருவாக்கி வைத்திருப்போம் எப்படி பிடிக்காதவர்களைப் பற்றி ஒரு பிம்பம் உருவாக்கி வைத்திருக்கிறோமோ அப்படி. அதனால்தான் பல சமயங்களில் நம்மால் நடுனிலையில் இருந்து பார்க்க முடிவதில்லை.

    பிடித்தவர்கள் தவறு செய்துவிட்டால் அதை ஏற்க மனம் மிகவும் கஷ்டப்படும். அதே சமயம் இப்படி பிடிப்பவர்களை ஒரே அடியாக வெறுப்பவர்களும் உண்டு அவர்கள் ஒரு வேளை மனது நோகும்படி ஏதேனும் செய்துவிட்டால். இது பற்றி நிறைய சொல்லலாம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுலேயே குழப்பிட்டீங்க, இன்னும் நிறையவா!!

      நீக்கு
    2. அதாவது கேள்வி என்னன்னா பிடித்தவர், பிடிக்காதவர் பாகுபாடு ஏன், எப்படி ஏற்படுகிறது என்பதுதான்...   சரிதானே கேஜிஜி ?

      நீக்கு
    3. ஶ்ரீராம் இப்போ கேள்வியையே தலைகீழா மாத்திட்டார்.

      சிலரைப் பார்த்த முதலே பிடிக்குது. சிலரை பார்த்தாலே, இவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்னு முதலிலேயே பிடிக்காமல் போயிடுது.

      ஒருவேளை நம்ம பிம்பத்துல இது பிடிக்காதுன்ற லிஸ்டுல உள்ளவை அவங்க கிட்ட ஏதாவது இருந்திருக்குமோ?

      நீக்கு
    4. நம்மகிட்ட அந்த பிடிக்கற, பிடிக்காத லிஸ்ட் எதை வைத்து உருவாகுது?

      நீக்கு
  18. நல்லவர் கெட்டவர் என்பதற்கான விதிமுறைகள் அவரவரளவில் மாறுபடும்.//

    யெஸ் அதே . நல்ல பதில்

    கீதா

    பதிலளிநீக்கு
  19. & கௌ அண்ணாவின் பதிலும் செம

    கீதா

    பதிலளிநீக்கு
  20. கீதாக்கா மாமியார் மரும்கள் பிரச்சனை, மாமியார் மருமகன் பிரச்சனை, மாமனார் மருமகன் இரச்சனை எல்லா ஊர்களிலும் உண்டு என்றே தோன்றுகிறது. மேலை நாடுகளில் கொஞ்சம் குறைவாக இருக்கலாம் அவர்கள் லைஃப் ஸ்டைல் அப்படி என்பதால், தனியாகத்தானே வாழறாங்க கல்யாணத்திற்குப் பிறகு அல்லது பிடிக்கலைனா டைவேர்ஸ் பிரிதல் என்பதால் குறைவாக இருக்கலாம்.
    ஆனால் சைனாவில் உண்டு என்பது அப்படங்களைப் பார்க்கறப்ப தெரிந்து கொண்டேன்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காட்டுமிராண்டிகள் எல்லோரும் உட்கார்ந்து விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்களாம். அப்போ ஒரு காட்டுமிராண்டி, பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த இன்னொரு காட்டுமிராண்டியிடம் சொன்னான் : " எனக்கு என் மாமியாரை கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை "
      அதற்கு, பக்கத்தில் இருந்தவன் சொன்ன பதில் : " அப்போ அதை விட்டுவிட்டு மீதி எல்லாத்தையும் சாப்பிடு !"

      நீக்கு
    2. சமீபத்தில் வரதக்ஷணைக்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தமிழகத்திலே தான் அதிகம்! :(

      நீக்கு
  21. ஏஞ்சலின் முதல் கேள்விக்கு # பதிலையும், இரண்டாவது கேள்விக்கு இரண்டு பேர்களின் பதில்களையும் ரசித்தேன். 

    பதிலளிநீக்கு
  22. தற்கொலை எண்ணத்தை மரபும் தீர்மானிக்கிறது என்றும் ஒரு கருது உண்டு. 

    பதிலளிநீக்கு
  23. நல்லதொரு கேள்வி பதில்கள்...

    எல்லோருக்கும் நல்லவனாக நட(டி)ப்பதை விட, நமக்கு நல்லவனாக நடப்பது / இருப்பது மட்டுமே சாத்தியம் ! அதுவே உத்தமமும் கூட ! அதே போல் நம்மை மாற்றிக் கொள்வதும், திருந்துவதும் !

    பெற்றோர்கள் மனம் புண்படாமல் இருந்தாலே பிரார்த்தனையே தேவையில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பெற்றோர் மனம் புண்படாமல்
      இருப்பதா...//

      அதற்கெல்லாம் மகன் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

      பெற்றோர் மனம் புண்படாமல் இருக்க வேண்டுமே!.. என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டிருக்க வேண்டியது தான்...

      நீக்கு
  24. இரத்தத்தை வியர்வையாக அல்ல.. இரத்தமாகவே சிந்தி குடும்பத்துக்கு உழைத்த மகனைப் பார்த்து -

    என்ன பெரிதாக செய்து விட்டாய்!... - என்று அம்பு தொடுத்த பெற்றோர்களும் இருக்கிறார்கள்...

    அதெல்லாம் தலையெழுத்துங்க!...

    பெற்றோரைப் பற்றி சொல்வதற்கு இனியது.. ஆனால்
    நடைமுறை வாழ்க்கை மிக மிகக் கொடியது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. DS Sir.. முதல்ல மனிதனுக்கு சுயநலம், தான் தன் சுகம். அப்புறம்தான் மத்தது. இதை நாம புரிஞ்சுக்கிட்டா எந்த உறவு கிட்டவும் ஏமாற்றம் இருக்காது.

      நீக்கு
    2. எழுத்தாளர் சிவசங்கரி அவர்களது நாவல் ஒன்றின் பெயர் -

      தான் தன் சுகம்...

      நீக்கு
    3. //என்ன பெரிதாக செய்து விட்டாய்!... - என்று அம்பு தொடுத்த பெற்றோர்களும் இருக்கிறார்கள்..// அதே! அதே!

      நீக்கு
  25. இந்த நின்டென்டோவில் ஸ்விட்ச் மற்றும் lite என்ற வகை இருக்கு .lite கையில் வச்சு விளையாடறது ஸ்விட்ச் கேம் கன்சோல் டிவியில் கனெக்ட் செஞ்சு விளையாடுவது .இது 6 -100 வரைக்கும் விளையாடப்படும் கேம் :)ஒரு 88 வயது பாட்டி 4000 மணிநேரம் விளையாடி இருக்கார் :) அதனால் அவர் பெயரில் ஒரு கேரக்டரை உருவாக்கி இருக்காங்க https://www.today.com/parents/grandma-loves-playing-nintendo-s-animal-crossing-game-t178182 
    அனிமல் crossing னு பெயர் இந்த கேம்ஸுக்கு நாமே குட்டி தீவை உருவாக்கணும் தோட்டம் எல்லாம் அமைக்கணும் ..அந்த கேரக்டேர்ஸ் நம்முடன் பேசுவாங்க 3  நாள் விளையாடலாமா விட்டா நாலாவது நாள் விளையாடும்போது நம்மை எங்கே போனானு கேக்கும் எல்லாம் பூனை ,கோழி ஆடு குதிரை ஆனைக்குட்டி மீன் போன்ற கேரக்டர்ஸ் :) 
    விலைதான் மயக்கம்போட வைக்குது  

    பதிலளிநீக்கு
  26. ///. (ஆ எங்கே கேள்வி கேட்டவரைக் காணோம்!)//
    ஹஆஹாஆ :) ஏற்கனவே எனக்கு புலி சிங்கம் வளர்க்க ஐடியா குடுத்தீங்கல்ல :) அதனாலோ என்னமோ தெர்ல மூணு நாளுக்கு முன்னாடி அதிகாலை கனவில் ஒரு நல்ல கொசக்மோசக் :) ஐ மீன் கொழுக் மொழுக் புலி  எங்க வீட்டுக்கு வந்தே ஆவேன்னு            கெஞ்சுது உருளது பிரளது :) நான் உள்ளே விட முடியுமோ :))))))) அப்படியும் உள்ளே நுழைஞ்சு பக்கத்தில் படுக்குது கதிகலங்கி எழும்பினா என்னை டிஸ்டர்ப் செய்தடகு எங்க ஜெசி :)))))))))))   பூனையையும் புலியாய் மாற்றிவிட்டது   உங்கள் பதில் :))  

    பதிலளிநீக்கு
  27. 1, நமக்கு கஷ்டத்தை வேதனைகளை கொடுத்தவங்களுக்கும் அன்பை தரணும் என்பது ப்ராக்டிகலா சரியா வருமா ?ஏதேனும் ஒரு கட்டத்தில் பழைய வலியின் வடுக்கள் வலிகளை நினைவுகூறாதா ?

    2,சுயமரியாதை என்பது என்ன ?
    3, நட்பில் ஈகோ பார்ப்பது சரியா ?  தவறா ? 
    4, எதற்கும் ஒரு அளவு உண்டு என்பதில் உடன்படுகிறீர்களா ? அன்புகாட்டுவதிலும் பரிவு காட்டுவதிலும் அக்கறைகாட்டுவதிலும்கூட அளவுகோல் தேவையா ?
    5, நீங்கள் பேசிப்பழகும் ஒருவர் உங்களிடம் // எனக்கு உன்னை கூட நம்ப பயமா இருக்கு யாரையும் நம்ப மாட்டேன் //என்றால் எப்படி ரியாக்ட் செய்வீங்க ?
    6,இப்போதெல்லாம் நம் தாய்தமிழ்நாட்டில் மக்கள் குறிப்பா அதிக அளவில் பெண்கள்  பொதுவெளியில் அதிகமாக காதுகூசும் அளவு வார்த்தைவசவுகளை பேசுகிறார்களே ! இது எதை நமக்கு உணர்த்துகிறது ? இதன் காரணம் என்ன ?
    7, சில நேரத்தில் தொடர் உரையாடலில் நமக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வரும் அதை விறுவிறுப்பை எழுதிட்டு அச்சோ இதை படிக்கும் யாருக்கும்  இந்த  பதில் மனக்கிலேசத்தை உண்டு பண்ணக்கூடாததுன்னு எழுதாம விட்டிருப்பேன் அப்படி உங்களுக்கும்  ஏற்பட்டதுண்டா ?இன்னிக்கும் ஒரு பதில் எழுதி வேண்டாம்னு விட்டுட்டேன் அமானுஷ்ய சம்பவங்கள் பற்றி :)))))))))) 
    8, நன்மைக்கும் தீமைக்கும் சம்பந்தம் தொடர்பு இருக்கா ? நீட்டி  முழக்கி நீதி நேர்மை நியாயம் என்று பேசுபவர்களின்  நெருங்கிய தொடர்பில் அநீதிக்கே இலக்கணமானோர் இருப்பது மிகவும் குழப்புகிறதே ??? 

    9, சவால்களை எதிர்கொள்ளும் திறமை வருங்கால சந்ததிகளுக்குண்டா ? அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால் களில் முதல்  3 இடங்களில் எவை இருக்கும் ?

    10, ஒரு நபரை முன்பின் தெரியாதவரை முதன்முதலாக சந்திக்கும்போது நீங்கள் கவனிக்கும் முதல் விஷயம் எது ? ஏன் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆ எப்படியோ 10 கேள்வி வந்துடுச்சி ..இவற்றில் 5 க்கு இவ்வாரம் பதில் அளித்து பிறரின் கேள்விகளுக்கும் இடமளித்து மிச்சத்தை 5 அடுத்த வாரத்துக்கு பதில் தரவும் 

      நீக்கு
    2. 8ம் கேள்விதான் கலவரமாயிருக்கு. எனக்குத் தேவை நீடி நேர்மை எருமை னு சொன்னவர் உங்களுக்கு என்ன அநீடி இழைத்துவிட்டார்?

      நீக்கு
    3. அவ்வ்வ்வ் :) இந்த டவுட்டு பார்த்து நானே கலவரமாகிட்டேன் :)))))) ஹஹஹஹ அவங்க நீடி நேர்மைன்னு சொல்றவங்க அப்போ அவங்க தொடர்பில் நட்பில்  இருக்கும் நான் இல்லையா அநீதிக்கு இலக்கணம்னு வருது ஹையோ ஹய்யய்யயோ :) இது சும்மா பொதுவா தோணுச்சு 

      நீக்கு
  28. அடுத்த புதனுக்கான கேள்விகள்:
    1.பால், பிராண்ட்   மாற்றுவதில்லை, காபி பொடியும் அப்படியே. போடுபவரும் மாறுவதில்லை(நான்தான் போடுகிறேன்) அப்படி இருந்தாலும் இன்று அமைந்த காபி மாதிரி அருமையான காபி ஏன் தினமும் அமைவதில்லை? 
    2. ஒரு காபி குடிக்கிறீர்கள்,பிரமாதமாய் இருக்கிறது. உடனே இன்னொரு அரை கப் கிடைக்குமா? என்று கேட்டு வாங்கி குடிப்பீர்களா? அல்லது ஏதோ நல்லதாக ஒரு முறை கிடைத்து விட்டது, அதோடு நிறுத்திக் கொள்ளலாம், மீண்டும் குடிக்க ஆசைப்பட்டு, அது எப்படி அமையுமோ? வாயை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நிறுத்திக் கொண்டு விடுவீர்களா?
    3. ஒரு கலைப் படைப்பை ரசிக்கும் பொழுது அந்த படைப்பாளி எடுத்துக் கொண்ட விஷயத்தை எப்படி அளித்திருக்கிறார் என்று பார்த்தால் போதாதா? கையினோரு தராசோடு உட்கார வேண்டுமா? 
    இதோடு நான் மொத்தம் நாலு கேள்விகள் கேட்டிருக்கிறேன். கணக்கு தப்பில்லை, கவனித்தால் தெரியும். பதில்களை எதிர்பார்க்கிறேன்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் காஃபி விஷயம்! திருவையாறுக்கு முதல் முதலாகப் போனப்போ (எண்பதுகளின் கடைசி) ஒரு ஓட்டலில் காஃபி, டிஃபன் சாப்பிட்டோம். காஃபி அவ்வளவு அருமையாக இருந்தது. அப்போ மணி மாலை/மதியம்/ நான்கு மணி இருக்கலாம். பின்னர் எல்லா இடங்களும் கோவிலுக்கும் போயிட்டு மறுபடியும் அதே ஓட்டலுக்குக் காஃபியின் சுவை கவர்ந்திழுக்க வந்தோம். காஃபியும் குடிச்சோம். முதலில் கொடுத்த அதே பணியாளர் தான் இப்போவும் காஃபி கொடுத்தார். ஆனால் முதலில் குடித்த சுவை இல்லை. பின்னர் புரிந்தது. நேரம் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட ஏழரை மணி என்பதால் காஃபியில் நீரை விட்டு விளாவி இருப்பார்களோ என நினைத்தோம்.

      நீக்கு
    2. பதில்கள் அளிப்போம். நாலு கேள்விகளா? தேடிப்பார்க்கிறோம். கிடைத்தால் பதில் சொல்லுவோம்!!!

      நீக்கு
    3. ஓ !! பணக்காரக் குழந்தைகள் பற்றிய கேள்வியா? ஓகே !

      நீக்கு
  29. வணக்கம் சகோதரரே

    இந்த வாரம் கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமையாக உள்ளது. கேள்விகள் கேட்ட அனைவருக்கும், தக்கவாறு பதிலளித்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.. நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  30. ஆஹா, தாமதமாக வந்ததால் இத்தனை பின்னூட்டங்களையும்
    படிக்க முடிந்தது.

    பணக்காரக் குழந்தைகள் பற்றி எங்கே இருக்கு கேள்வி?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!