திங்கள், 31 ஆகஸ்ட், 2020

"திங்க"க்கிழமை :  பனீர் ஜால்ஃப்ரெசி  :  ரமா ஸ்ரீநிவாசன் ரெஸிப்பி 


பன்னீர் ஜால்ஃப்ரெசி


எங்களது சிறிய பெண் சட்டக் கல்லூரியில் கடைசி வருடம் படித்துக்
கொண்டிருக்கின்றாள். பூனாவில் படித்துக் கொண்டிருந்தவளை கோவிட் 19 தாக்கம் மஹாராஷ்டிராவில் அதி பயங்கரமாக இருப்பதால், மார்ச் மாதம் 18ஆம் தேதி சென்னைக்கு வரவழைத்து விட்டோம்.

அவள் மிகவும் வெய்ட் கான்ஷியஸ்ஸான பேர்வழி. ஆகவே, இரவு வேளைகளில் அரிசி சாதம் உண்ண மாட்டாள். எனவே, நானும் அவளும் சேர்ந்து யூ ட்யூபில் பார்த்து வித விதமாக அவளுக்குப் பிடித்த உணவுகளை தயார் செய்ய முயற்சிப்போம்.

அதன் வெளிப்பாடுதான் இந்த பன்னீர் ஜால்ஃப்ரெசி.

மசாலா விழுதிற்கு வேண்டிய பொருட்கள் :

எண்ணெய்: 2 டேபிள் ஸ்பூன்கள்
(அது நல்லெண்ணெய்யாகவோ, ஆலிவ் ஆயிலாகவோ இருக்கலாம்)
சிறிய வெங்காயம் : 1
(நன்றாக வெட்டப் பட்டது)
இஞ்சி பூண்டு விழுது : 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி : 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் : 1 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரீ மிளகாய் தூள் : வேண்டிய அளவு
தக்காளி : 1
(சிறு துண்டுகளாக வெட்டியது)



மற்ற பொருட்கள் :

எண்ணெய் : 2 டேபிள் ஸ்பூன்கள்
(அது நல்லெண்ணையாகவோ, ஆலிவ் ஆயிலாகவோ இருக்கலாம்)
காய்ந்த உடைத்த சிவப்பு மிளகாய் : 1
வெட்டப் பட்ட இஞ்ஜி : 1 (1 இன்ச் அளவிற்கு)
ஜீரகம் : ½ டேபிள் ஸ்பூன்
வெங்காயம் : ½ (நன்றாக வெட்டியது)
தக்காளி ஸாஸ் : 1 டேபிள் ஸ்பூன்
குடை மிளகாய் : ½ (வெட்டியது)
உப்பு : வேண்டிய அளவு
பனீர் : 8 துண்டுகள்
(நீள வாக்கில் வெட்டப் பட்டவை)
தக்காளி : ½ (சிறு துண்டுகள்)
கரம் மஸாலா பொடி : ¼ டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம்பழச் சாறு : 2 டேபிள் ஸ்பூன்கள்



செய்முறை :
முதலில் வாணலியில் எண்ணெயை நன்றாக சுட வைத்து, வெங்காயத் துண்டுகளை வதக்கவும்.

பின்னர், இஞ்சி பூண்டு விழுதைச் சேர்க்கவும்.

அடுத்தது, தக்காளி துண்டுகளையும் சேர்த்து நன்றாக தளரும் மட்டும் வதக்கவும்.



இப்போது, காஷ்மீரீ மிளகாய் தூளையும் சேர்த்து வதக்கவும்.

தண்ணீர் சேர்க்காமல் நன்றாக விழுதாக அரைத்து, தனியாக வைக்கவும்.

அதே வாணலியில் மறுபடியும் எண்ணெய் சேர்க்கவும்.

காய்ந்த மிளகாய், வெட்டிய இஞ்சி மற்றும் சீரகத்தை சேர்த்து, வதக்கவும்.

பிறகு, வெட்டிய வெங்காயத் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

வெட்டிய குடை மிளகாயையும் சேர்த்து சிறிது வதக்கவும்.

இப்பொழுது அரைத்து வைத்த மஸாலா விழுதை மற்றும் தக்காளி ஸாஸ்ஸயும் சேர்த்து வேண்டிய அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.



பின்னர், வெட்டிய பனீர் துண்டுகளையும் தக்காளி துண்டுகளையும் சேர்த்து ஒரு சிறு கிளறு கிளறவும்.

இறுதியாக கரம் மஸாலா பொடியையும் எலுமிச்சம்பழ சாறையும் சேர்த்து மிதமாகக் கிளறி இறக்கவும்.



இந்த பனீர் ஜால்ஃப்ரெசியை அரிசி உணவுடனோ, ரொட்டியுடனோ அல்லது நான் கூடவோ உண்ணலாம்.

===


===

42 கருத்துகள்:

  1. மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு..

    திருக்குறள் காட்டும் நல்லொழுகு சோம்பலின்மை..

    திருவோணத் திருநாள் நல்வாழ்த்துகளுடன்
    நலமே வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

    பதிலளிநீக்கு
  3. அனைவரும் நோய் இல்லா வழ்வு பெறட்டும்.இறைவன் நம்மைக் காக்க
    பிரார்த்தனைகள்.

    திருவோண நன்னாள் அனைவருக்கும் இனிய செய்திகளைத் தர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. ரமா ஸ்ரீனிவாசன் அவர்களின் பனீர் செய்முறை
    மிகச் சிறப்பு.
    புதுவிதமான சிற்றுண்டி.
    கூடவே பூரியோ நான் ஓ இருந்தால் ருசிதான்.
    அருமை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தளர்த்தப்பட்ட ஊரடங்கினால் அனைவருக்கும் நன்மையே விளையட்டும். விரைவில் நோய்த்தொற்றுப் பரவல் குறைந்து அனைவரும் நல்வாழ்க்கைக்கு அச்சமின்றித் திரும்பவும் பிரார்த்திக்கிறேன். வலக்கண் தொந்திரவு கொடுப்பதால் கணினி பயன்பாட்டைக் குறைச்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடியோ அழைப்பில் தெரியும் அளவுக்குக் கண் வீக்கம் பெரிசா இருக்குப் போல! பையர், குஞ்சுலு இருவரும் பார்த்துவிட்டு உடனடியாக மருத்துவமனைக்குப் போ என்றனர். எனக்குக் கொஞ்சம் பயம்! விளக்கெண்ணெய் தடவிக்கறேன்.

      நீக்கு
    2. உடனடியாக கண் டாக்டரை ஆலோசிக்கவும். கண் வீக்கம் ஆரம்ப காலத்திலேயே கவனிக்கப்படவேண்டிய விஷயம். தாமதம் செய்யவேண்டாம்.

      நீக்கு
  6. P என்பதை ஏனோ தெரியலை, இங்கே தமிழ்நாட்டில் "பன்னீர்" என்கின்றனர். அதே போல் "கசூரி மேதி"யும் "க:ஸ்"தூரி மேதி"யாகிறது. சனாவும் அழுத்தம் திருத்தமாகச் "சன்னா" ஆகிவிடுகிறது. இஃகி,இஃகி,இஃகி. இந்தப் பனீர் செய்முறையை எங்க பையர் எங்களைச் செய்ய விட மாட்டார். அவர் தான் செய்வார். அவருக்குப் பிடிச்சதும் கூட. நன்றாகவும் பண்ணுவார். ஃபுல்காவை நாங்க பண்ணி வைச்சுடுவோம். அவர் பனீர் ஜல்ஃப்ரெசி பண்ணுவார்.

    பதிலளிநீக்கு
  7. ரமா ஸ்ரீநிவாசனின் செய்முறையில் பனீர் ஜல்ஃப்ரெசி நன்றாக வந்திருக்கிறது. நான் பண்ணினால் தக்காளி ப்யூரியைப் பயன்படுத்துவேன். அல்லது முழுத்தக்காளியை ப்ளாஞ்சிங் செய்து சாறு எடுத்துப்பேன். சப்பாத்தி இல்லாமல் ஜீரா ரைஸுடனும், மடர் புலவுடனும் கூடச் சாப்பிடலாம். நன்றாகச் செய்திருக்கார் ரமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனீரைத் துண்டங்களாக்கி வெந்நீரில் அலசி விட்டு நெய்யில் வறுத்துக் கொண்டு கடைசியில் தான் சேர்ப்பேன்.சில சமயம் சாப்பிடும்முன்னர் சேர்த்துவிட்டுக் கிளறிக் கலப்பதும் உண்டு.

      நீக்கு
  8. //அவள் மிகவும் வெய்ட் கான்ஷியஸ்ஸான பேர்வழி. ஆகவே, இரவு வேளைகளில் அரிசி சாதம் உண்ண மாட்டாள்.// இதில் எங்களுக்கு அத்தனை உடன்பாடு இல்லை. வசதிக்காக ராத்திரி ஏதேனும் டிபன் சாப்பிடுகிறோமே தவிர்த்து அரிசிச் சாதத்தினால் எடை ஏறுவது இல்லை. அல்லது சர்க்கரையும் கூடுவதில்லை. கோதுமை உணவுக்கும் இதே போன்ற பயன்கள் தான். எங்கள் மருத்துவர் சொன்னது இரவில் சப்பாத்தி தான் சாப்பிடணும்னு இல்லை. அதோடு கூடச் சேர்த்துச் சாப்பிடும் சப்ஜி வகைகளால் உங்கள் எடையும் ஏறலாம், கொலஸ்ட்ரால் எனப்பதும் கொழுப்பும் அதிகரிக்கலாம்.வேக வைத்த காய்கள் மட்டுமே சாப்பிடுவதில்லை. எண்ணெய் சேர்த்த க்ரீம் சேர்த்துத் தயாரிக்கும் சப்ஜி வகைகள் உடல் எடையை அதிகரிக்கவே செய்யும் என்பார். ஆகவே தயிர்சாதம் மட்டும் சாப்பிட்டால் கூடத் தப்பில்லை எனச் சொல்லுவார். ஆனால் குளிர்காலங்களில் சாப்பிட முடிவதில்லை. நல்ல வெயில்காலம் எனில் அநேகமாகத் தயிர்சாதம் தான். அரிசியினால் எடை ஏறுவதில்லை என்பதையும் கண்ணால் கண்டிருக்கிறேன். என்றாலும் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு நிலைப்பாடு. அவரவர் உடல்நிலையும் மாறுபடும்.எது சாப்பிட்டாலும் சீக்கிரமாச் சாப்பிட்டுடணும். அளவோடும் இருக்கணும் என்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு எடை அப்சஷன் உண்டு. (எடை குறைக்க முடியலை என்பது வேறு விஷயம்). ஆனால் எடை எதனால் அதிகரிக்கிறது என்பதெல்லாம் ஓரளவு கடந்த பத்து வருடங்களில் கணித்திருக்கிறேன்.

      நார்மலா நம் சாப்பாடு (பாயசம் வடை அப்பளாம் போன்றவை இல்லாமல்) சாப்பிட்டால் எடை ஏறாது (அளவும் முக்கயம். ஒவ்வொரு சாத்த்திற்கும் குளம் வெட்டக் கூடாது). சப்பாத்தி மாற்று அல்ல. எதனால் சப்பாத்தி மித் இருக்கு என்றால், சப்பாத்தினா 2-3 அதிகபட்சம் சாப்பிடுவோம், சாதம்னா குளம் வெட்டுவோம்.

      உணவுக்கு இடையில் வெந்நீர் தவிர, வேறு உணவு எதுவும் சாப்பிடக்கூடாது (எனக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை). சமீப காலமா, இரவு உணவு அதிகபட்சம் 6 1/2 மணிக்குள். அதற்கப்புறம் வாய்க்கு பூட்டுதான், வெந்நீர் தவிர. காலையில் முதல் உணவு வெந்நீர்.

      சப்ஜி வகைகள் வெயிட் ஏத்தும் என்பது உண்மைதான்.

      நீக்கு
  9. இந்த பனீர் ஜால்ஃப்ரெசி சாப்பிட்டதில்லை. படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  10. படங்களோடு சொன்ன விதம் அருமை மேடம்.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. பனீர் ஜால் ஃப்ரைஸி நன்றாக வந்திருக்கிறது. பனீர் என் மருமகளுக்கு மிகவும் பிடிக்கும். அவளிடம் சொல்கிறேன். பனீர் எடையை கூட்டும் என்பது என் அனுமானம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் பனீர் பிடிக்கும். சீஸும் பிடிக்கும். நம்மவர் நேர்மாறாக இருப்பதால் வாங்குவதற்குக் கொஞ்சம் கஷ்டம். நான் கடைக்குப் போனால் வாங்குவேன். பிள்ளை, பெண் அல்லது வேறு உறவினர் யாரேனும் வந்தால் வாங்கி வைப்பேன். எங்க இருவருக்குனு வாங்குவதே இல்லை.

      நீக்கு
  13. இந்த பனீர் ஜால்ஃப்ரெசி புதிதாக உள்ளது... செய்முறை எளிதாகவும் உள்ளது...

    பதிலளிநீக்கு
  14. பனீர் ஜால் ஃப்ரைஸி செய்முறை குறிப்புகளும் படங்களும் அருமை.
    ஓணம் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. கெளதமன் சார், எங்கள் பிளாக்குடன் தொடர்பு கொள்வதற்கான மின்னஞ்சல் முகவரி தர முடியுமா?.. நன்றி.

    பதிலளிநீக்கு
  16. மின் நிலா பார்த்தேன். சனிக்கிழமைப் பதிவில் ரமா ஶ்ரீநிவாசனின் கட்டுரையைத் தேடினேன். பின்னர் தான் நினைவு வந்தது. அவர் அனுப்பவே இல்லையே என்பது. :))))))

    பதிலளிநீக்கு
  17. மின் நிலாவின் ,
    ரயில்வே பதிவு மிக அருமை. சென்னையில் இருந்து கொண்டு ராயபுரம் போனதில்லையே
    என்று தோன்றுகிறது.
    நல்ல தகவல்கள் கௌதமன் ஜி.
    KGY சார் அளித்திருக்கும்
    லஞ்ச அலுவலகக் கதை சிரிக்க வைக்கிறது.
    பவுன் 123 ஆ!! அதுவும் ஒன்றரைப் பவுன்.
    சுவாரஸ்யமான பதிவு.
    என் ''நாடி'' பகுதியையும் பிரசுரித்ததற்கு மிக நன்றி.

    ஆரோக்கிய வாழ்வு சிறக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  18. பானு வெங்கடேஸ்வரனின் கார்ப் பதிவு
    மிக அழகு.
    அவரது இளமைக் காலப் படங்களும் ஜோர்.
    துபாய்க்கு அவர் வந்த போது தெரிந்திருந்தால்
    நானும் பார்த்திருப்பேன்.
    அந்த பேஸ்மெண்ட் பார்க்கிங்க் பழைய நினைவுகளை
    மீட்கிறது.
    அவரது சிகப்பழகியும், க்ரே கம்பிரமும் அருமை.

    குட்டிப் பையன் ஸ்மார்ட்டா இருக்கிறான்.
    அவரும் கணவரும் எமிரேட்ஸ் கட்டிடத்திற்கு முன் எடுத்திருக்கும் படமும் அழகு.
    வாழ்த்துகள் பானு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 93-95ல் நான் துபாயில்தான் இருந்தேன் வல்லிம்மா. அப்போ துபாய்க்கும் ஷார்ஜாவுக்கும் நடுவில் பாலைவனத்தில் ஒரு ரோடு உண்டு. சிட்டி செண்டர் அமைந்திருக்கும் இடமே அப்போது அந்தப் பகுதியில் கடைசி இடம். 94-95ல்தான் டாக்சி செர்வீசை அரசு டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மேற்கொள்ள ஆரம்பித்தது. ஆரம்பத்தில் டாக்சி ஓட்டுநர்களுக்கு 3500 திர்ஹாம் மாதச் சம்பளம். அப்புறம் என்ன.. பல டாக்சி டிரைவர்கள் ரொம்ப அலட்டிக்காம வேலை செய்து சம்பளம் வாங்கினாங்க. அப்புறம்தான், 2000 சம்பளம், மீதி வேலை செய்து வரவு சம்பாதிப்பதைப் பொருத்து என்று மாறியது. என் அலுவலகம் இருந்தது தெய்ரா டவரில்.

      நீக்கு
    2. அன்பு முரளிமா, பெரியவன் 2000 த்திலிருந்து 2013 வரை இருந்தான். துபாய் ஸ்விஸ் ,அமெரிக்கா சுற்ற எங்களுக்கு வசதியாக. இருந்தது. உங்களுக்கு இவ்வளவு விவரம் தெரிந்திருக்கிறதே. ஆமாம் நாங்கள் பார்ககும் போதே கட்டிடங்கள் மணலை நிறைக்க ஆரம்பித்தன. உக்ர வெய்யில். டெய்ரா செல்ல மிகப் பிடிக்கும்.
      மகனும் அலுக்காமல் அழைத்துச் செல்வான் . இனிமையான உஷ்ணமான நாட்கள்.நன்றி ராஜா.

      நீக்கு
    3. உங்கள் நினைவுகளைப் பகிர்ந்ததற்கு நன்றி.

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் தயாரிப்பான பனீர் ஜால்ஃபிரெஸி புது விதமாக நன்றாக உள்ளது. பனீரும் வெயிட் போடுமோ என்ற எண்ணத்தில் இதுவரை செய்ததில்லை. சுலபமான முறையுடன் ரெசிபியை செய்து காண்பித்த சகோதரிக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. மின்னிலாவின் இரயில்வே படங்கள், கேஜிஒய் அவர்களின் அனுபவங்கள், வல்லிம்மாவின் நாடி ஜோசிய அனுபவம் நன்றாக இருந்தது. கேஜிஒய் எபியில் இவைகளை எழுதலாம் என்று நினைக்கிறேன்.

    நாடி ஜோசிய அனுபவம் - பொது வெளியில் எழுதும்போது நடந்தது நடந்தபடி எழுதுவதில் சங்கடங்கள் உண்டு, அதிலும் என்ன சொன்னார்கள் என்று எழுதுவதில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன சங்கடங்கள் ? எனக்கு தெரியவில்லை.

      நீக்கு
    2. அதுதான் நடந்து முடிந்தாச்சே மா. சங்கடம் இல்லாமல் எழுதலாம்.

      நீக்கு
  21. சுவையான குறிப்பு. பனீர் கொண்டு செய்யப்படும் அனைத்து விதமான சப்ஜிகளும் பிடித்தமானவையே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!