004- திங்கக்கிழமை.பதிவு – நாங்கள் சென்றிருந்த உயர்நிலை உணவகம் - நெல்லைத்தமிழன்
இதுபற்றி எங்கள் பிளாக்குக்கு எழுதலாமா கூடாதா என்று ரொம்பவே யோசித்தேன். இன்றென்னவோ (எழுதுகின்ற இன்று) இதையும் அனுப்பலாமே என்று தோன்றியது.
எனக்கு உணவில் எல்லாமே பிடிக்காது. இதுபற்றி நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். இதோ ராகி சேவை பண்ணியிருக்கிறேன் என்று எனக்குக் கொடுத்தால் நான் சாப்பிடமாட்டேன். இதுவரை சாப்பிடாத புது உணவைச் சுவைத்துப் பார்க்கும் எண்ணமே எனக்கு வராது. இதற்கு விதிவிலக்கு இனிப்புகள். வட இந்திய உணவுகளான (அப்படி எழுதுவது தற்போதைய நிலையில் அர்த்தமில்லாதது. இட்லி தோசையே தமிழக உணவு இல்லை, எங்களது என்று கர்நாடகாவில் சொல்லுவார்கள். நமக்கு அந்நியமான பிரியாணியே தமிழகத்தில் மிக அதிகமாக விற்பனையாகும் உணவு என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்). ஆனால் என் மனைவி புது உணவைச் சுவைக்கத் தயங்க மாட்டாள். என் பெண்ணோ, பல புதிய புதிய ரெஸ்டாரண்டுகளில் அவளுடைய நண்பர்களோடு சென்று சாப்பிட்டோ இல்லை வீட்டுக்கு ஆர்டர் செய்து சாப்பிட்டோ பார்ப்பாள். அதனால் எந்த எந்த ரெஸ்டாரண்ட் நன்றாக இருக்கும் என்பது (நான் சொல்வது சாதம், சாம்பார், ரசம் அல்லது, இட்லி தோசை உணவகங்கள் அல்ல. அந்தப் பக்கமே பெரும்பாலும் அவள் செல்லமாட்டாள்) அவளுக்கு அத்துப்படி. அதே சமயம் அவளுக்கு அப்பா இந்த எதையுமே டேஸ்ட்கூடச் செய்ய மாட்டார் என்பதும் அத்துப்படி. ஒன்றிரண்டு தடவை அவளுடன் சென்றிருக்கிறேன்.
சென்ற வருட இறுதியில் எங்கள் திருமண நாளுக்கு அவள் பெங்களூரில் ஒரு ரெஸ்டாரண்டில் இடத்தை புக் பண்ணியிருந்தாள். அதனை இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் எனக்குத் தெரிவித்தாள். எந்த இடம் என்று மாத்திரம் சொல்லவில்லை. ஆனால், அந்த ரெஸ்டாரண்டுக்கு என் ரெகுலர் உடையுடன் (அரை டிரவுசர், டி.ஷர்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ) போக முடியாது, ரொம்ப ஃபார்மல் உடையுடன், முடிந்தால் ப்ளேசர், ஆஃபீஸ் ஷூவுடன் செல்லணும் என்று சொன்னாள். எனக்கோ ரொம்ப டென்ஷன். அடப்பாவி.. எனக்கோ புது உணவு ஒன்றும் பிடிக்காது, இவளோ ஏதோ ஹை ஃபை ரெஸ்டாரண்டில் புக் பண்ணியிருக்கிறாள் போலிருக்கிறதே என்று தூக்கமே வரவில்லை. (நிஜமா). அவளுக்கோ முன்னமே ரெஸ்டாரண்ட் பெயரைச் சொல்லிவிட்டால் திரில் இருக்காது, அப்பாவும் போகமாட்டேன் என்று சொல்லிவிடுவாரோ என்று நினைத்திருக்கிறாள்.
நான் வேலை பார்த்த போது, பல ஐந்து மற்றும் அதற்கு மேலான நட்சத்திர ஹோட்டல்களுக்கு எங்கள் அலுவலக ஜெனெரல் மேனேஜர்கள் மாத்திரம் ஒரு குழுவாகச் செல்லும்போது சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் நான் நேரடியாக பழங்கள் மற்றும் டெஸர்ட்ஸ் மாத்திரமே சாப்பிடுவேன். சில நேரங்களில் எனக்கு மாத்திரம் ரைஸ், Dhதால் பண்ணிக்கொண்டு வருவார்கள். கேட்க விசித்திரமாகத்தான் இருக்கும். ஆனால் நான் இப்படித்தான். ஒரு முறை லண்டனில் மிகப் பெரிய (மினிஸ்டர்களும் செல்லும்) ரெஸ்டாரண்டில், எனக்கு மாத்திரம் ரைஸ் மற்றும் Dhதால் பண்ணிக்கொடுத்த கூத்தும் நடந்திருக்கிறது. இது பற்றியே ஒரு பதிவு எழுதிவிடலாம். தாய்வானில் என்னை ஒரு ஜப்பான் உணவு விடுதிக்குக் கூட்டிச்சென்றார்கள் (நான் சுத்த வெஜிடேரியன் என்பதால். ஆனால் பாருங்க அவங்க கொடுத்த ஒரு உணவும் எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய ஹோஸ்டுக்கு ரொம்பவே வருத்தம் (அவ்வளவு விலை உயர்ந்த ரெஸ்டாரண்ட் அது). அவர் மனம் கோணக்கூடாது என்பதற்காக நான் அங்கு ஐஸ்க்ரீம் வாங்கிச் சாப்பிட்டேன். இன்னொரு முறை இன்னொரு ஹோஸ்ட், நான் வெளியில் ஹோட்டலில் சாப்பிடுவதை விரும்பவில்லை, எனக்கு பழங்கள் மாத்திரம் போதும் என்று சொன்னபோது ஆச்சர்யமாகப் பார்த்துவிட்டு என் மேசை முழுவதும் பழங்களாக அடுக்கிவிட்டார் (நான் படமெடுக்க விட்டுப்போனதில் இதுவும் ஒன்று). வித விதமான பழங்கள், பத்துப் பேர்களாவது சாப்படும்படியாக என் ஒருவனுக்காக ஆர்டர் செய்துவிட்டார். சரி பழங்கதையை விடுவோம்.
நாங்கள் செல்லவேண்டிய அன்று மாலை, நான் ஷர்ட் பேண்ட், டை என்று விதவிதமாக அணிந்துகொண்டு பெண்ணுக்கு அனுப்பி அவள் எதை செலக்ட் செய்து சொல்கிறாள் என்பதற்காகக் காத்திருந்தேன். பிறகு என் மனதுக்கு உகந்ததையே அணிந்துகொண்டேன். கிளம்ப பத்து நிமிடங்களுக்கு முன்னால் ரெஸ்டாரண்ட் பெயரையும் இடத்தையும் அவள் பகிர்ந்துகொண்டாள். முன்னமே எனக்கு காளான் பிடிக்காது, எந்த டிரிங்க்ஸும் கிடையாது என்றெல்லாம் சொல்லியிருக்கிறாள். அதற்கேற்றவாறு அவர்கள் மெனுவில் எங்களுக்காக ஓரிடு ஐட்டங்களில் மாற்றங்கள் செய்திருந்தனர் (காளான் இருக்கக்கூடாது என்பதற்காக)
இரவு 7:10க்கு அந்த ரெஸ்டாரண்டை அடைந்தோம். (சுமார் ஐந்து கிமீ தூரம்). எங்களுக்காக தனி மேசையை அலாட் செய்து அதைச் சிறிது பூக்களால் அலங்கரித்திருந்தார்கள். ஒவ்வொரு உணவையும் கொடுக்கும்போது அதில் என்ன என்ன இருக்கிறது, அதன் சிறப்பு என்ன என்பதையெல்லாம் ஒரு பெண் வந்து விளக்கினாள். உணவின் அளவு சிறியதுதான். ஆனால் அதைச் செய்திருந்த விதம், Craftmanship மிக உயர்வாக இருந்தது. ருசியும் அருமையாக இருந்தது. அவர்கள் மெனுவிலேயே ஒவ்வொரு உணவின் கேலரியையும் பிரிண்ட் செய்திருந்தார்கள். டிரை செய்துதான் பார்த்துவிடுவோமே என்று நினைத்து எல்லாவற்றையும் ருசித்து முழுமையாகச் சாப்பிட்டேன் (அளவே மிகச் சிறியதுதான்). 1800 கேலரிகள். இதிலேயே 11 கோர்ஸ் உணவும் இருக்கிறதாம். டயட்டில் இருந்து எடையைக் குறைத்துக்கொண்டிருக்கும் எனக்கு இந்த உணவால் மறுநாள் எவ்வளவு கிலோ எடை கூடப்போகிறது என்ற கவலை.
உணவை விட, அதனைச் செய்வதற்கு அவர்கள் எவ்வளவு மெனெக்கெட்டிருப்பார்கள், எவ்வளவு அழகாக அதனைச் செய்திருக்கிறார்கள் என்பதே என்னை மிகவும் கவர்ந்தது.
எங்களுக்கான மெனு கார்ட்
இதில் அரைக்கோளமாக இரண்டு இருக்கிறதே.. அதுதான் சாப்பிடும் வஸ்து. ஸ்டார்ட்டர்
Potted Mushroom Pate க்கும் பதிலாக எங்களுக்கு காளான் பிடிக்காது என்பதால் கொடுத்த உணவு இது.
Plant ‘n’ Chips – Mustard Smoked Eggplant, Miso tartare – 207 Cal
Asparagus and Corn (Bydagi chilli oil, Puffed corn sweet & spice) – 169 Cal
Steamed Lotus root (Smoked pepper, gochu Garu lotus cracker) 190 cal
Cantaloupe and Ginger (mint salt) – வாய்க்கு புத்துணர்ச்சி தருவதற்காக மற்றும் இதற்கு முன் சாப்பிட்டவைகளை டைஜஸ்ட் செய்வதற்காக – 42 cal
Red and Green Rhapsody (Carnaroli, Coconut milk, edamame) 187 Cal . இதற்குக் கொடுத்த ப்ரெட்டுடன் கீழே படம் போட்டிருக்கிறேன்.
Water Chestnut & Haloumi Pithivier (Vegetables ensemble, Pommery & Vegetable reduction)
The Sorcery (Raspberry Cremeaux, Vanilla custard) 274 Cal (இதில், இலை அழகுக்குத்தான், சாப்பிட அல்ல என்று சொன்னார்) பார்க்க தென்னாப்பிரிக்கா எலுமிச்சம்பழம் மாதிரி இருந்தது.
Go Bananas – Miso Caramel icecream, Cinnamon Cremaux (பார்க்க வாழைப்பழம் போன்று இருந்தாலும் பழத்தின் சுவையைக் கொண்டுவந்திருக்கிறார்கள்). – 427 Cal
இதையெல்லாம் சாப்பிட்டு முடிக்க எங்களுக்கு 2 ½ மணி நேரமானது. மெதுவாக ருசித்து ரசித்துச் சாப்பிட்டோம். ஒவ்வொரு ஐட்டம் முடிந்த பின்னர், அவற்றை அப்புறப்படுத்திய பிறகு அடுத்த ஐட்டம், அதனைப் பற்றி கொண்டுவந்த பெண் விளக்கிய பிறகு நாங்கள் சாப்பிட ஆரம்பிப்போம். எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்த பிறகு எங்களுக்கு கேக் ஒன்று கொண்டுவந்தார். எங்கள் திருமண நாளுக்காக அந்த ரெஸ்டாரண்டின் காம்ளிமெண்ட். அதில் கொஞ்சம் சாப்பிட்டேன்.
எங்கள் திருமண நாளுக்காக அவர்கள் complimentaryயாகக் கொடுத்த கேக்
இவ்வளவு எழுதிவிட்டு ரெஸ்டாரண்டின் பெயரையும், விருந்தின் விலையையும் எழுதாமல் போகலாமா? ITC Gardenia, A Luxury Collection Hotelல், நாங்கள் சென்றிருந்தது Gajsa. ஒருவருக்கு 4000 ரூபாய்+ ஆகியிருக்கும். இது தவிர மனைவி ஆர்டர் செய்திருந்த மினரல் வாட்டர் பாட்டில் ஒன்றுக்கு 500 ரூபாய் (ஹா ஹா ஹா)
என்னைவிட என் பெண் tensedஆக இருந்திருப்பாள். கிளம்புவதற்கு முன்னால் அம்மாவிடம், அப்பாக்குப் பிடிக்கலைனா சாப்பிடவேண்டாம், நீ டேஸ்ட் பண்ணு என்று சொன்னாளாம். அப்பாவைப் பற்றி நன்கு தெரிந்த என் பெண், உணவு எப்படி இருந்தது என்று கேட்டாள். ரொம்பவே நன்றாக இருந்தது, உணவின் அழகு, நேர்த்தி, அதனைக் கொண்டுவந்து கொடுத்த விதம், அதன் ருசி என்று எல்லாமே என்னைக் கவர்ந்தது என்று உண்மையைச் சொன்னேன். அவளுக்கு ரொம்பவே சந்தோஷம்.
அது சரி… எத்தனையாவது ஆன்னிவர்சரி என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். சின்னஞ் சிறுசுகள்ட போய்க் கேட்கும் கேள்வியா இது?
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி. காலையில் எழுதிய கருத்துகள் போகவில்லை
நீக்குவணக்கம் நெல்லைத்தமிழர் சகோதரரே.
பதிலளிநீக்குஉணவகம் பற்றிய பதிவு நன்றாக இருக்கிறது. நன்றாக அனுபவித்து எழுதியுள்ளீர்கள். நானும் சுவாரஸ்யமாக படித்தேன். அந்த உணவகத்தில் பரிமாறப்பட்ட உணவுகள் நன்றாக இருந்தன. பார்க்கவே அழகாக தரமாக உள்ளது. காத்திருந்து சாப்பிடும் போது பசியின் அளவும் கம்மியாகி விடும்.
சிறப்பாக திருமண நாளை கொண்டாடிய தங்கள் இருவருக்கும், அதை அன்போடு கொண்டாட விருப்பப்பட்ட தங்கள் மகளுக்கும் என் அன்பான வாழ்த்துகள்.
/அது சரி… எத்தனையாவது ஆன்னிவர்சரி என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். சின்னஞ் சிறுசுகள்ட போய்க் கேட்கும் கேள்வியா இது?/
ஹா ஹா ஹா. ஆமாம்.. நாங்களும் சின்னஞ் சிறுகள்தானே..! இதையெல்லாம் நீங்கள் விவரித்து சொன்னாலும் எங்களுக்குத் தெரியாது. புரியாது. நீங்கள் கட் செய்யும் கேக்கை மட்டும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருப்போம் . அவ்வளவுதான்..! ஹா ஹா ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்றைக்கு கேக் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. மற்றபடி உணவு நன்றாக இருந்தது.
நீக்குஇருந்தாலும் எனக்கு சூடான 2 இட்லிகள், 1 ரவா தோசை தமிழக சாம்பார் அல்லது பரோட்டா குருமா யதேஷ்டம். இந்த மாதிரி உயர் உயர்நிலை உணவகங்களில் எனக்கு அவ்வளவாக விருப்பம் கிடையாது
/இந்த மாதிரி உயர் உயர்நிலை உணவகங்களில் எனக்கு அவ்வளவாக விருப்பம் கிடையாது/
நீக்குஉண்மைதான். எனக்கும் நீங்கள் சொல்வது போல நாங்கள் ஹோட்டலுக்குச் சென்றால், நல்ல மெத்தென்ற சூடான இட்லி, மசால் தோசை பொங்கல், என அதுவே போதும் என்பேன். போட்டா, சப்பாத்தி போன்றவைகளை நான் அவ்வளவாக விரும்பி சாப்பிட்டதில்லை. சப்பாத்தி கூட சமயங்களில் ஒ.கே. பரோட்டாவை வேண்டாமென கூறி விடுவேன். இங்குள்ள உணவகங்களில் பொங்கல் அவ்வளவாக நன்றாக இராது. அடையார் ஆனந்த பவனில் ஓரளவு ஓ. கேயாக இருக்கும். ஆனால், அளவு மிக கம்மி. விலையும் அதிகம்.
இன்று நீங்கள் பகிர்ந்த உணவுகள் பார்க்கவே குட்டியாக இருக்கிறது. வயிற்றுக்கு எப்படி போதுமென நினைத்தேன். ஆனால், மனதளவில் ஏற்றுக் கொண்டால் ஒரு திருப்தி உண்டாகும். ஹா ஹா. நன்றி.
கமலா ஹரிஹரன் மேடம்... கும்பகோணம் வெங்கட்ரமணா ஹோட்டல்ல 120 ரூபாய்கு சுடச்சுட மதிய உணவு காலை 9:30க்கு சாப்பிட்டேன். டிபன்னா ரவா தோசை டிபன் சாம்பார் தேங்காய் சட்னி, நல்ல முறுமுறு மெதுவடை இல்லைனா இட்லி மி பொடி, , பரோட்டா குருமா, .. இந்த மாதிரி எளிய உணவே எனக்கு சந்தோஷம் தரும். ஹோட்டல் வெண்பொங்கலில் எண்ணெய் கலப்படம் என்பதால் விரும்புவதில்லைவிரும்புவதில்லை. ஆமாம் வெங் போட்ட மசால்வடை எங்க பெங்களூரில்
நீக்குசாப்பிடடது இன்றல்ல . நமக்கு சாதாரண உணவே யதேஷ்டம்
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்று என்னவாயிற்று.. இந்தப்பதிவு என் வலைத்தள "நண்பர்கள் பதிவில்" இதுவரை வரவுமில்லை...! நான் இங்கு வந்து தந்த என் இரு கருத்துக்கு மேலாக வேறு எதுவும் காணப்படவுமில்லை. என்னவாயிற்று.? எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் வந்து ஏதாவது வலைத்தள பிரச்சனையென்றால் கவனிக்கவும். நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காரணம் தெரியவில்லை. திடுமெனெ என்னுடைய நெட்வர்க்கும் பிரச்சனை செய்ததுபோலத் தோன்றியது.மீள் வருகைக்கு நன்றி.
நீக்குகொஞ்ச நாளாகவே பிளாகர் விதம் விதமாக, ரகம் ரகமாக படுத்துகிறது.
நீக்குஎனக்கும் இந்த வகை படுத்தல்கள் அவ்வப்போது இருக்கின்றன.
அதனோடு கூட ஒருவருக்கு தனியாக பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தால், 'பதிலளி' ஆப்ஷன் சரியாக வராது. தனியாக வேண்டுமானால் ஒரு கமெண்டிடலாம். குறிப்பிட்ட நபருக்கு பதில் அளிக்க முடியாமல் இருக்கும். அப்படியும் சில நாட்களில் இருந்தன.
காலையில் 'அனுபிரேம்' தளத்துக்கு சென்றிருந்த போது, எங்கள் பிளாக்கின் நேற்றைய பதிவு காணப்பட்டதே தவிர ,இன்றைய பதிவு காலை 7 மணிக்கு கூட அங்கு அப்டேட் ஆகாமல் இருந்தது.
நீக்குஎனக்கு இன்னமும் இந்தப்பதிவு காட்டப்படவில்லை.
நீக்குஇன்றைக்கு ஐபேடில் பதிலளித்தால், வெளியிட முடியவில்லை பிறகு முயற்சிக்கவும் என்று திரும்பத் திரும்ப வந்தது. லேப்டாப்பில் இந்தப் பிரச்சனை இல்லை
நீக்கு
பதிலளிநீக்குகில்லெர்ஜீ குறிப்பிடும் கூத்தாடர்களுக்கும் கூத்தாடிகளுக்கும் தான் இந்த மாதிரி 7 ஸ்டார் உணவு கட்டுப்படியாகும். ஆமாம் ஒவ்வொரு உணவுக்கும் கலோரி கணக்கு வேறே சொல்கிறீர்கள். எப்படி கலோரி கணக்கு கண்டுபிடித்தீர்கள்.
ஜெயகுமார் சார்... நாம மிடில்கிளாஸ் இப்படி நினைக்கிறோம். ஆனால் ரெஸ்டாரென்ட்ல கூட்டம் சொல்லி மாளலை. எல்லா இடங்களிலும் செலவழிக்க அனேகமா 30 சதம் மக்கள்ட ஏகப்பட்ட பணம் இருக்கு போலிருக்கு என்று தோன்றுகிறது
நீக்குநாம் என்ன தினந்தோறுமா என்று சென்று சாப்பிட போகிறோம்,?
நீக்குஏதாவது ஒரு அக்கேஷன்...
கல்யாண நாள், பிறந்தநாள் அல்லது வேற யாராவது பார்ட்டி கொடுத்தால்....
இப்படி ஏன் புதிய வகை உணவுகளை சுவைக்கும் வாய்ப்பை விட வேண்டும்?
கூத்தாடன் கூத்தாடி இவ்வளவு கலோரி சாப்பிடமாட்டாங்களே. அவங்கள்ட காசு இருக்கும், ஆனால் நினைத்ததையெல்லாம் சாப்பிடமுடியாதே ஜெயகுமார் சார்.
நீக்கு/இப்படி ஏன் புதிய வகை உணவுகளை சுவைக்கும் வாய்ப்பை விட வேண்டும்?// வீட்டில் என்னைத் தவிர அனைவரும் இந்த மாதிரி வித்தியாசமான உணவுகளைச் சுவைப்பதில் ஆர்வம் உண்டு, குறைந்தபட்சம் வேண்டாம் என்று என்னைப்போல நிர்தாட்சண்யமாகச் சொல்லமாட்டார்கள்
நீக்குநெல்லை, நல்லாருக்கு பெயர்தான் வாயில் நுழையவில்லை. எனக்கு எதுவுமே.சாப்பிட முடியாது போல இருக்கே...உணவு மட்டுமில்லை...பாக்கெட்டும்.
பதிலளிநீக்குஇதையெல்லாம் சுவைக்கப் பிடிக்கும்...ஆனா சாப்பிட நம்ம ஊர் சாப்பாடுதான்.
இருந்தாலும் சாப்பாட்டை விட பெண்ணின் அன்புதான் இங்கு பரிசு. அதை ஹானர் செய்ய வேண்டும். ஆசையாக ஏற்பாடு செய்திருக்கிறாள்....பாராட்ட வேண்டிய விஷயம், நெல்லை.
கீதா
வாங்க கீதா ரங்கன் க்கா. ஏதோ எனக்கு பாக்கெட் பெருசா இருக்குன்னு சொல்ற மாதிரி இருக்கே ஹாஹா. அது ஒரு அனுபவம் என்ற அளவில் ஓகே. வாய்ப்பு கிடைக்கும்போது ஐந்து நட்சத்திர ஓட்டலில் மதிய உணவு சாப்பிடணும்.
நீக்குஆமாம் அவள் அன்புதான் பெரிது
படங்கள் சூப்பர். உணவுகள் கவர்ச்சி.
பதிலளிநீக்குகீதா
நன்றி. சுவையாவும் இருந்தன. என்ன ஒண்ணு.. எல்லாமே சாம்பிள் சைஸ் என்பதுபோல சிறியதாக இருந்தன
நீக்குஉணவுகள் எல்லாம் நன்றாக உள்ளன.
பதிலளிநீக்குஉங்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள்.
வாங்க மாதேவி அவர்கள். நான் இதை அனுப்பினதே லேட். வெளியிட்டதும் லேட். இப்போ கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆனதுபோல எண்ணம்.
நீக்குசெர்வ் செய்யப்பட்ட ஒவ்வொரு ஐட்டமும் அன்லிமிட்டடா இல்லை குறிப்பிட்ட அளவுதானா?
பதிலளிநீக்குஎல்லாவற்றையும் சாப்பிட்டபோது வயிறு மிகவும் நிரம்பிவிட்டது. அளவு இவ்ளோதான். லிமிடெட். திரும்ப இன்னும் ஒன்றுன்னு கேட்க முடியாது.
நீக்குமஷ்ரூமுக்கு பதிலாக என்று கொடுக்கப்பட்டிருக்கும் ஐட்டத்தை பார்த்தால் என்லார்ஜ் செய்யப்பட்ட எட்டுக்கால் பூச்சி போல இருக்கிறது!!
பதிலளிநீக்குஹா ஹா ஹா... அளவெல்லாம் உள்ளங்கைக்குள் அடங்கிவிடும்.
நீக்குநான் பஹ்ரைன்ல வேலை பார்த்த கம்பெனியின் ஒரு ரெஸ்டாரண்டில் (எல்லாம் பிராண்டுகள்தாம்) எந்த ஐட்டம் பிடிக்குதோ அதை வேண்டுமளவு சர்வ் செய்வார்கள். இதில் இவ்வளவுதான்
பாதி ஐட்டம் வடிவமும் புரியவில்லை, பெயரும் புரியவில்லை் எல்லாம் ஆங்கிலத்திலேயே சொல்லி இருக்கிறீர்கள்!!!
பதிலளிநீக்குதமிழில் அதன் பெயர்கள் என்ன? உப்பா? புளிப்பா? இனிப்பா? காரமா?
டெஸெர்ட் தவிர எல்லாமே உப்புதான். அதனை தமிப்படுத்தும் திறமை எனக்கு இல்லை. கண்டமாதிரி எழுதி எனக்கும் புரியாமல் படிக்கிறவங்களுக்கும் புரியாமல் இருப்பதைவிட ஆங்கிலம் பரவாயில்லை அல்லவா?
நீக்குநீங்கள் தந்திருக்கும் உணவுகள் எல்லாமே ஸ்டார்ட்டர்ஸ் என்று தெரிகிறது. மெயின் கோர்ஸ் என்ன?
பதிலளிநீக்குஆனால் உண்மையில் ஸ்டேட்டஸ் சாப்பிட்ட உடனே வயிறு ரொம்பி விடும். அவர்கள் தரும் மெயின் கோர்ஸ் எதுவும் எனக்கும் பிடித்தமாக இருக்காது என்பதால் அவற்றை தவிர்த்து விடுவேன்.
அட... இந்த கமெண்டை எதிர்பார்க்கவில்லை. முதலில் தந்தது ஒன்றுதான் ஸ்டார்ட்டர். மற்றதெல்லாம் ஒவ்வொரு டிஷ்.
நீக்குநாம மெயின் கோர்ஸ் என்று பழக்கப்பட்டது அரிசி, பிரியாணி போன்ற உணவு வகைகளுக்கு. இப்படி எதுவும் கிடையாது.
உங்கள் மகளை போல, நானும் புதிய உணவகங்கள், புதிய வகை உணவுகளை சுவைப்பதற்கு ஆர்வமாக இருப்பேன்!
பதிலளிநீக்குஅது ஒரு நல்ல ஆட்டிடியூட் என்று எனக்கு புரிகிறது ஸ்ரீராம். ஆனால் என்னால் என்னை மாற்றிக்கொள்ள இயலவில்லை. என் மனது சில ஐட்டங்களை சரி..சாப்பிடலாம் என்று சொல்வதற்கே ஏகப்பட்ட வருடங்கள் எடுத்துக்கொள்கிறது. மனது சொல்லாமல் நான் சாப்பிடுவதில்லை.
நீக்குஉதாரணமாக, பாவ் பாஜி-மனைவி சூப்பரா பண்ணுவா, ஆனால் நான் அதை ஏற்றுக்கொண்டு சாப்பிட்டுப்பார்க்க 15 வருடங்கள் ஆகிவிட்டது என்று சொன்னால் நம்பவேண்டும். இதுபோல பானி பூரி வகையறா (அதில் ஓட்டை போட்டு புளிஜலம் விடுவாங்களே அதை இன்னமும் நான் டேஸ்ட் பார்க்கலை. மனசுக்குப் பிடிக்கலை), தாகிபூரி...
மனசுக்குப் பிடிக்காமலேயே நான் டேஸ்ட் செய்தது ஒன்றே ஒன்றுதான். 2002ல் நான் UK ஒரு சாஃப்ட்வேர் செலக்ட் செய்ய துறைத் தலைவர்களுடனும், என் பாஸுடனும் சென்றிருந்தேன். 4 நாட்கள், சுமார் 800-1000 கிமீ பல இடங்களுக்குச் சென்றோம். நானோ பழங்களைத் தவிர வேறு எதுவும் சாப்பிடவில்லை. மனதில் பசிக்குது. ஃபேஷன் துறைத் தலைவர் அதைப் புரிந்துகொண்டு ஒரு இடத்தில் தாய் ரெஸ்டாரண்டில் என்னை ரைஸ், சப்ஜி (அவங்க ரெஸ்டாரண்டில் ஏதோ பெயர்), நல்லா இருக்கும்னு சாப்பிடச்சொன்னார். நான் ரொம்ப அலட்டிக்காமல் சாப்பிட்டுவிட்டேன். நன்றாகத்தான் இருந்தது.
எல்லாமே ஸ்டார்டர்ஸ் போலத்தான் தெரிகிறது! நட்சத்திர ஹோட்டல் எனும்போது விலை இப்படித்தான் இருக்கும். தி.நகரில் பாட்டி வீடு என்று ஒரு உணவகம் உள்ளது. பாகீரதி அம்மாள் தெரு என்று நினைக்கிறேன். மதியமோ அல்லது இரவோ ஒரு முழு சாப்பாட்டின் விலை 800 லிருந்து 1000க்கும் மேலே!! ஒவ்வொரு ஐட்டத்தையும் பரிமாறி அதை சாப்பிட்டபின் தான் அடுத்த ஐட்டம் வரும். அதனால் சாப்பாடு முடிய இப்படித்தான் அதிக நேரமெடுக்கும். பாதி சாப்பாட்டிலேயே வயிறு நிரம்பி விடும்.
பதிலளிநீக்குவாங்க மனோ சாமிநாதன் மேடம்... ஸ்டார்டர்ஸ்னு சொல்லமுடியாது. ஆனால் மினியேச்சர் ஐட்டங்கள் என்று சொல்லலாம். ஒவ்வொன்றும் craft பண்ணி வந்தமாதிரி இருந்தது.
நீக்குபாட்டி வீடு உணவகத்தில் ஐட்டம் என்ன என்னன்னு சொல்லியிருந்தீங்கன்னா நல்லா புரிஞ்சிருக்கும். (வெப்சைட்ல நம்ம பாரம்பர்ய குழம்பு சாதம், கூட்டு கறி... என்று போட்டிருந்தாங்க). 800-1000 ரூ ரொம்ப அதிகமில்லையோ?
ஒரு தடவை ஜனவரி 1ம் தேதிக்கு சென்னைல ஒரு ஸ்பெஷல் மீல்ஸ் (சபாவைத் தொட்டடுத்திருக்கும் உணவு பரிமாறும் இடம்) 800 ரூ என்று சாப்பிட்ட நினைவு (படங்கள் இருக்கிறது). 200-250க்கு மேல மதிய உணவு ஒர்த் இல்லை என்பது என் எண்ணம். பெங்களூரிலும் 800 ரூபாய்க்கு மதிய உணவு சில வருடங்களுக்கு முன்பு சாப்ப்டிட்டிருக்கிறேன். ஒரு அனுபவம் என்ற அளவில் ஓகே மற்றபடி நம் பாரம்பர்ய தென்னிந்திய உணவுக்கு 200-250ஏ ஜாஸ்தி
உங்கள் இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துகள் நெல்லைத்தமிழன் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குதிருமண நாளுக்கு போய் வந்த ஓட்டல் உணவுகள் படம் விவரங்கள் அருமை.
வாங்க கோமதி அரசு மேடம். நன்றி.
நீக்குஅடடா நீண்ட நாட்கள் ஆகிட்டே, ஒருக்கால் புளொக்குகளை எட்டிப் பார்ப்பமே என வந்தால்.... அதாரது அண்ணிக்குப் பக்கத்தில ஒரு பெட்டியைக் கொண்டு வந்து வச்சது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
பதிலளிநீக்குவாங்க ..... எந்த அதிரா... ஓ ட்ரம்ப் செக் அதிராவா? நலமா? என்ன இப்படி பிசியாயிட்டீங்க? உங்க செக். எங்க போனாங்கன்னே தெரியலை. இப்படி சேர்ந்து காணாமல் போகலாமா?
நீக்கு"போகாதே போகாதே என் அதிரா... பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்"... ஹா ஹா ஹா பயந்திடாதையுங்கோ இது என் செக் எனக்குப் பாடும் பாட்டு... ஆனா மீ ஆரூஊஊஊஊ எந்த ஜலஜலப்புக்கும் அஞ்ஞாத சே சே டங்கு ஸ்லிப்பாகுதே அஞ்சாத புலாலியூர்ப் பூஸானந்தா ஆச்சே ஹா ஹா ஹா... ஏதும் கலகலப்பான போஸ்ட் எனில் எல்லோரும் ஒருக்கால் வந்து கும்மி அடிக்கலாம், ஆனா என்ன ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளில பிஸி அதுதான் பிரச்சனையே....
நீக்குநீங்க எல்லாம் ரிட்டயேர்ட் ஆயிட்டதால ஆப்பி:)) நானெல்லாம் இப்பத்தானே சுவீட் 16:) இனி எப்போ 60 ஆகி ரிட்டயேர்ட் ஆகிறதாம் ஹா ஹா ஹா:)))
என்னாது.... ரெட்டயேர்ட்டா? பதிவு போட்டிருப்பது நான். எனக்கோ உங்களைவிட சில நாட்கள் (மனசாட்சி வேண்டாமா? சே சே.. இந்த மாதிரி விஷயங்களில் மனசாட்சிக்கே இடம் கொடுக்கக்கூடாது) பெரியவன். மத்தவங்களைப் பத்தி நீங்க சொல்றதுக்கு நான் பதில் எழுதக்கூடாது.
நீக்குஆனால் எல்லோரும் பிளாக் படித்து கருத்து எழுதி, வம்புகள் வளர்த்து... என்ற காலம் போய்விட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது. இப்போல்லாம் ஒரு சில பிளாக்குகளே உயிர்ப்புடன் இருக்கின்றன.
எனக்கும் யூடியூப் பார்க்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது, அதிலும் ஷார்ட்ஸ். என்ன ஒண்ணு... ஷார்ட்ஸில் கமெண்ட் போட முடியாது என்பதால்தான் சில யூடியூப் பார்க்கிறேன். சிலர் 'பாரணை'லாம் பண்ணிட்டு யூடியூப் காணொளி போட்டால் பார்க்கிறேன். இல்லைனா ஒரே மீன் வாசனையாகிவிடுகிறது என் லேப்டாப்பில்.
///இதுபற்றி எங்கள் பிளாக்குக்கு எழுதலாமா கூடாதா என்று ரொம்பவே யோசித்தேன்.//
பதிலளிநீக்குஅதெல்லாம் ஸ்ரீராம் ஒண்ணும் நினைக்க மாட்டார் நீங்கள் ஓசிக்காதையுங்கோ அனுப்புங்கோ ஹா ஹா ஹா...
விலைஉயர்ந்த ரெஸ்ரோரண்டுகள்தான் போகப் பிடிக்குது ஆனா போயிட்டு வெளியே வரும்போது பசியோடு தான் வரோணும், ஹா ஹா ஹா மூக்குப் பொடிபோல தான் அழகழகா இருக்கும் அதிலும் அசைவம் எனில் கொஞ்சம் போஸன் பெரிதாக இருக்கும் சைவம் எனில் கஸ்டம்தான்.
கரெக்ட்டா மெனுக்கார்ட்டைப் பார்த்து படங்களுக்கான பெயர்களையும் ஒழுங்கா எழுதிட்டீங்களே...
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்... இது ஏற்கனவே முடிஞ்சுதெல்லோ.
ஹா ஹா ஹா.. போய்ட்டு வரும்போது பசியோடதான் வரணும்... ஆனால் இந்த ரெஸ்டாரன்டில் வயிறு நிரம்பியது. ஆனால் நார்மல் ரெஸ்டாரன்டில் சாப்பிட்டது போல இல்லை.
நீக்குதிருமண நாள் வாழ்த்துக்கு நன்றி. ஆனால் அது முடிஞ்சு ஆறு மாதம் ஆகிட்டல்லோ.
பதிவு மிக சுவாரசியம். ரசித்துப் படித்தேன். நானும் நெ.த போலவே நினைக்கும் நபர்தான் எனினும் பல்லைக் கடித்துக் கொண்டு மஷ்ரூம் மாதிரி வஸ்துக்களை வாயில் இட்டது உண்டு.
பதிலளிநீக்குவாங்க ராமன் சார்... பிட்சாவில் நான் கவனிக்காமல் மஷ்ரூம் சாப்பிட்டால் ஒன்றும் தோன்றாது. ஆனால் பொதுவா மஷ்ரூம்னாலே எனக்கு மனதில் அசைவம் என்று பதிந்து, கொஞ்சம் அசூயையாக இருக்கும். என் பெண் ஒரு தடவை, எதையோ வாங்கி அதற்கு மஷ்ரூம் பாக்கெட் இலவசமா கிடைக்க, அதை வீட்டில் வைத்திருந்தால். எனக்கு ரொம்ப கோபம் வந்து உடனே தூரப்போடச் சொல்லிவிட்டேன் (ஆனால் இனிமேல் வீட்டில் நான் மஷ்ரூமைப் பற்றி எந்த கமெண்டும் அடிக்கமுடியாது. அதுதான் புதிய உறவினருக்கு மிகவும் பிடிக்கும்..ஆனால் எங்க வீட்டில் பண்ணமாட்டோம். முருங்கை சம்பந்தமானதும்)
நீக்கு