
ஒரு திருமணத்துக்கோ வரவேற்புக்கோ செல்லும்போது என்னதான் அவசரமாக இருந்தாலும் முதல் பந்தியில் அமர்வதை தவிர்த்து விடுவதே நல்லது என்பது என் கட்சி.
அவசரமாகச் செல்ல வேண்டும் என்றால் இரண்டாம் பந்தியில் அமரலாம். மேலும் அதற்கு மேலான பந்திகளில் அமர்ந்தால் சில ஐட்டங்கள் குறைய வாய்ப்பும் இருக்கும்!!
ஆனால் முதல் பந்தியில் ஏன் அமரக்கூடாது என்பதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது.
காரணம், இருக்கிற எல்லா வரிசை இலைகளிலும் முக்கால்வாசி எல்லாவற்றையும் பரிமாறி வைத்து விடுவார்கள். பார்க்கும்போதே ஒரு அவெர்ஷன் வரும். பரிமாறுபவர்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
இலையில் அமர்ந்தபின் ஒவ்வொன்றாய் பரிமாறினால், என்னென்ன பரிமாறுகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கும். வேண்டாதவற்றை தடுத்து நிறுத்தவும் முடியும். அனாவசியமாக வேஸ்ட் ஆகாது, அல்லது கஷ்டப்பட்டு உள்ளே தள்ள வேண்டாம். அப்படியே சாப்பிடாமல் வைத்து விடலாமே என்பீர்கள். என்னால் அது முடியாது. இலையை சுத்தமாக காலி செய்வதே வழக்கம்.
உட்கார்ந்தபின் பரிமாறுவதில் சில ஐட்டங்களை உடனுக்குடன் காலி செய்வதும் வசதி.
தயாராயிருக்கும் இலையில் வெட்கமின்றி சென்று அமர்ந்தால், இலையில் என்னென்ன இருக்கிறது என்று அனுமானித்து எடுக்கும் முன்னரே பரிமாறுபவர்கள் சாதம், சாம்பாருடன் நிற்பார்கள்!
அப்புறம் என்று சொல்லவும் முடியாது. அந்த அப்புறம் எவ்வளவு நேரம் கழித்து வருமோ... வருமோ அல்லது வராமலே போகுமோ....!
==========================================================================================

ராமர் க்ஷத்ரியர், அவர் வில்லாளியும் கூட. வேட்டையாடிய விலங்குகளை தசரத குடும்பம் சமைத்து உண்டிருக்கும். அரசர்கள் எல்லோருமே அசைவத்தை விரும்பிச் சாப்பிட்டது அந்நாளில் இயல்பாகவே இருந்திருக்கும்.
அரச குமாரரான ராமரை, அக்கால வழக்கப்படி தெய்வத்துக்குச் சமமாக வைத்து வணங்கியிருப்பார்கள். ராமசரிதையை வால்மிகி எழுதிய பின் அவரது புகழ் ராமாயணமாக நாடெங்கும் பரவி நிலை பெற்று விட்டது.
அன்று போல் இன்றும் ராமர் வணங்கப் பட்டாலும் ராமருக்கு சைவ நைவேத்தியங்களே படைக்கப்படுகின்றன. அசைவம் உண்ட ராமர்
காலப்போக்கில் சைவராகி விட்டார். அசைவ-சைவ உணவுகளில் ஏற்றத் தாழ்வு இல்லை. எல்லாம் உணவே.
ஆலயங்களில் பலிபீடங்கள் பிரமாண்டமாக இருப்பது, ஒரு காலத்தில் மிருகங்களை பலிபீடத்தில் வைத்து வெட்டி, இறைவனுக்குப் படைத்த நினைவின் எச்சங்களே.
இன்று ராமர் புலால் உண்டிருப்பார் என்பதை ஏற்காத சமூகமாக இந்திய சமூகம் கட்டமைக்கப் பட்டு வெகுகாலமாகி விட்டது.
அடித்தட்டு மக்கள்தான் இன்றும் தங்கள் தெய்வங்களுக்கு மாமிசப் படையல் படைத்து வழிபட்டு புராதனத் தொடர்பு அறுபடாமல் காப்பாற்றி வருகின்றனர்.
-வண்ணநிலவன்
===================================================================================
தாராசுரம்...
\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \
நியூஸ் ரூம் - காபூல்: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவர், தனக்கு 140 வயதாகிறது என தெரிவித்துள்ளார். அவர் கூறும் தகவல்களை தலிபான் அரசு சரிபார்த்து வருகிறது. - பெங்களூரு: தனது குழந்தையின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை, விமான பணிப்பெண் திருடிவிட்டதாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். (20 கிராம், 80,000 மதிப்பு என்கிறார்!)
- கைகலாசா என்றொரு நாடு இல்லை. நித்யானந்தா எங்கே? கைலாஸா நாட்டை உருவாக்குவதற்காக அமேசான் காடுகளில் சிறு பகுதியை வாங்க நினைத்து சீடர்கள் காது, நாடு கடத்தல்!
- ரோஷினி சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஊராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தாய் கவுசல்யா வேலைக்கு சென்று வருகிறார். அவர் வேலைக்கு சென்று விட்டு வருவதற்குள் வீட்டு வேலைகளை செய் து வைக்கும்படி மகள் ரோஷினியிடம் கூறி சென்றிருக்கிறார். அதைச் செய்து வைக்காததால் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் தனது தாய் தன்னை அடிப்பாரோ? என பயந்த மாணவி ரோஷினி, தனது தம்பி கண் எதிரேயே வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது
- சென்னை: மேற்கு மாம்பலத்தில் வீடு புகுந்து திருடிய இருவர், நெதர்லாந்து நாட்டிற்கு சென்றிருந்த வீட்டு உரிமையாளரின் மொபைல் போனில் ஒலித்த அலாரத்தால் வசமாக சிக்கினர்.
- புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே ஆட்டை திருடி, சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டபோது, அதே சந்தையில் தன் எஜமானரை பார்த்த ஆடு, ஓடிச்சென்று அவரிடம் தஞ்சமடைய, ஆடு திருடிய நபர் ஓட்டம் பிடித்தார். அவரை வியாபாரிகள் சுற்றிவளைத்து பிடித்தனர்.
- தான் 'கொலை செய்த' மனைவி நேரில் வந்ததால் அதிர்ச்சியான நபர்.
- மும்பை : மஹாராஷ்டிராவில் முகலாய மன்னர் அவுரங்கசீபின் கல்லறை அமைந்துள்ள குல்தாபாத் நகரம், ரத்னாபூர் என பெயர் மாற்றப்படவுள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
- ஆண்களுக்கு சேலை உடுத்தி 100 நாள் வேலையில் மோசடி யாத்கிர் : கர்நாடகாவில் நடந்த ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றியதாக, சேலை அணிந்து ஆண்கள் போஸ் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, மாவட்ட பஞ்சாயத்து அதிகாரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
- சென்னை : 'நடிகர் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டின் மீது, எந்த உரிமையும் கோர மாட்டேன்' என, அவரது மூத்த மகன் ராம்குமார் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண மனு தாக்கல் செய்யப்பட்டது. [அண்ணன் என்னடா தம்பி என்னடா]
- சுமார் 10,000 ஆண்டுகளுக்குமுன் அழிந்துபோன ஓர் பிரம்மாண்ட ஓநாய் இனத்துக்கு (டையர் -பயங்கர ஓநாய்கள்) அமெரிக்க விஞ்ஞானிகள் மீண்டும் உரு கொடுத்து உருவாக்கியுள்ளனர்.
- வாஷிங்டன்: அமெரிக்காவின் பொருட்களுக்கு 34 சதவீதத்தில் இருந்து 84 சதவீதமாக வரியை சீனா உயர்த்தி உள்ளது. இதனால் இருநாடுகளுக்கு இடையே வர்த்தகப்போர் தீவிரம் அடைந்துள்ளது.
- வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் சரிந்து வருகிறது.
- இனி ஆதார் நகல் வேண்டாம்; வருகிறது புதிய செயலி. புதுடில்லி : பல சேவைகளை பெறுவதற்கு, ஆதார் அட்டை நகல் தருவதை தவிர்த்து, டிஜிட்டல் முறையில் ஆதார் சரிபார்ப்பு வசதி வழங்கும் புதிய 'மொபைல் போன்' செயலி விரைவில் அறிமுகமாக உள்ளது.
-
வட்டி விகிதம் 6 சதவிகிதமாக குறைவதால் வீடு, வாகனக் கடன் வட்டிகள் குறையுமாம்.
- பெங்களூருவில் குடிநீர் கட்டணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உயர்கிறதாம்!
== == = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =+
முதல் இரவுக்குள் நுழையும் புதுமணத்தடிகம்பதிகள். தேசு என்னும் வேதாந்த தேசிகன் ஒரு பெருமையான நல்ல குடும்பத்திலிருந்து வந்தவன் என்றாலும் பிணம் தூக்குபவன் ஆகிப்போகிறான். அவனுக்கும் ஒரு உடனடிக்காதல் வந்து விடுகிறது. பெண்ணுக்கும் இவன் உருவம் பார்த்து பிடித்துப் போகிறது. திருமணம் முடிந்து முதலிரவு அறையில்... அவன் ஆளுமை மிக்கவள்.
.............. இத்தனை குழப்பங்கள் வருமா என்ன? ஆனால் தேசுவுக்குள் நடந்த இந்தப் போராட்டம் மட்டும் நிஜமாய் ஆடியது. சந்தோஷம் என்ற உணர்வு அமிழ்ந்து போய் ஏதோ ஒரு விதமான பயமும் துக்கமும் மனசைப் பேயாய் அலைக்கழித்தது.
அம்மா அப்பா இவர்கள் இல்லாததால் ஏற்படும் ஒரு விதமான தனிமை இந்த துக்கத்தை ஏற்படுத்துகிறதா? இல்லை, தன் பக்கத்தில் பொங்கிப் பொங்கி உட்கார்ந்து இருக்கும் கல்யாணியைப் பார்த்து இந்த அவஸ்தை ஏற்படுகிறதா என்று புரியவில்லை.
எத்தனை திடமும் நம்பிக்கையும் இந்தப் பெண்ணிடம் என்ற உணர்வே தன்னை அடித்துப் போடுவதாகத் தேசுவுக்குத் தோன்றியது. இந்தப் பத்து வருடத்தில் யாரும் அவனை இத்தனை பாதித்ததில்லை. தன் தகுதிக்கு மீறிய எது கிடைத்தாலும் அதற்காய் அச்சப்படும் ஒரு மனிதனாய்த் தேசு அவதிப்பட்டான். வேறு யாருக்கும் தெரியா விட்டாலும் தன் மனசைப் பொறுத்தவரை தான் கல்யாணிக்குத் தகுந்தவன்தானா என்று மனசு கிடந்து அல்லாடியது. நரசிம்மனின் கல்யாணத்தில் வைத்து அம்பி சொன்ன விஷயங்கள் மீண்டும் நினைவுக்கு வந்தது.
'எத்தனையோ விதத்தில் தன் உணர்வுகளைச் சமாதானப்படுத்திக் கொள்ளும் வசதி ஓர் ஆணுக்கு உண்டு. ஆனால் பெண் அப்படி அல்லவே. ஒரு நேர்மையான பெண் தன் உணர்வுகளை நசுக்கியே நரைத்துப் போகிறாள். அவள் முகத்தில் இருபத்து நாலு, இருபத்தாறு வயசில் கிழடு தட்டிப் போவதுகூட இதனால்தான். இந்த உணர்ச்சி நசுக்கல்களுக்குப் பதிலாக ஏதோ ஒன்று கழுத்தை நீட்டி வாங்கிக் கொண்டு இந்த மட்டும் போதும் என்று அமைதி அடைவதைத் தவிர வேறு என்ன இருக்கிறது? ஒரு அவஸ்தையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் பொருட்டு ஒருவன் கைகளில் விழுந்து பின் அந்த அவஸ்தையின் மருந்து இதுதான் என்று உணர்ந்து அந்த உணர்த்தலோடு சேர்ந்து இந்த பெண்களுக்கு ஒரு ஞானம் வந்து விடுகிறதோ!'
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நான் வந்த பிறகுதான் அது நடந்ததா.. அதெல்லாம் தப்பு.. ஓபனாக பேசிய இளையராஜா..
"நான் திரைத்துறைக்கு வந்து ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் நான் ஒவ்வொரு ராகத்திலும் ரசித்தே இசையமைப்பேன். நான் இசையமைக்கும் பாடல் முதலில் எனக்கு பிடித்தால்தான் மற்றவர்களுக்கு பிடிக்கும். இப்படி ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செய்வதால்தான் என்னுடைய இசையை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. வித்தியாசமாகவும் தெரிகிறது. நான் இசையமைத்த பல பாடல்கள் எனக்கே பாடம் சொல்லிக்கொடுத்திருக்கிறது. இயக்குநரும், தயாரிப்பாளரும் கேட்கிறார்கள் என்பதற்கு மட்டும் ஒரு பாடலை கொடுத்தால் அது ரசிகர்களிடம் கண்டிப்பாக எடுபடாது என்பதுதான் உண்மை.
ரசனைதான் முக்கியம்: ஒரு பாடலுக்கு எதிர்பார்ப்பே இல்லை என்றால் அங்கு ரசனை மட்டும்தான் முக்கியமான ஒன்றாக இருக்கும். எல்லையே இல்லாத கற்பனைதான் பாடலுக்கு முக்கியம். எத்தனை ட்யூன்களை போட்டாலும் பாட்டுக்கு எது தேவையோ அதை மட்டும் கொடுப்பது எல்லாம் ஒரு யுக்திதான்.
திருக்குறள் ஏன் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் இருக்கிறது. அதற்கும் குறைவாகவே அதில் இருக்கும் பொருளை தர முடியும். பல பாடல்களுக்கு நான் முதல் வரி எழுதியிருக்கிறேன். இசையமைக்கும்போது வரிகள் தானாகவே வந்துவிடுகின்றன. நான் 2000ஆம் வருடவாக்கில் வெண்பா எழுத முயற்சித்தேன். ஆனால் இலக்கணப்படி எழுதினால் நினைத்ததை என்னால் சொல்ல முடியவில்லை.
இலக்கணம் தேவையில்லை: நினைத்ததை சொல்ல வேண்டுமென்றால் இலக்கணம் தேவையில்லை. பிறகு கேப் விட்டு எழுதினேன். பாடலாசிரியர்கள், கவிஞர்களிடமெல்லாம் பேசினேன். அப்படியே அவை என்னை மெருகேற்றிவிட்டன. நான் வந்த பிறகுதான் பாடல் பாமர மக்களுக்கான மொழியில் வந்தது என்று சொல்வது தவறு. நான் வருவதற்கு முன்னரும் அப்படிப்பட்ட நிலைதான் இருந்தது. எனவே அப்படி சொல்லாதீர்கள். ஏகப்பட்ட பாடல்களை உதாரணமாக சொல்ல முடியும். அனைத்து நல்ல வார்த்தைகளும் நான் இசையமைக்கும் பாடல்களில் அதுவாகவே வந்து அமர்ந்துகொள்ளும். ரசனைதான் ஒரு பாடலுக்கு ரொம்ப முக்கியம்.
இசை தெரியும் என்று நம்பவில்லை: எந்த வேலை பார்த்தாலும் அது முழுமையாக தெரிந்தால்தான் அந்த வேலை முழுமையடையும். இப்போதுவரைக்கும் எனக்கு இசை தெரியும் என்று நான் நம்பவில்லை. அப்போ இசை தெரிந்தவர்களுக்காக நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு தேடவேண்டும். இசை தெரியாதவர் வாயில் என்ன வருகிறதோ அதை பாடுவார். இசை என்பது கணக்கு போட்டு வருவதில்லை. இசையை கட்டுக்குள் வைத்து வெளியிட்டால் அது யாருக்குள்ளும் கனெக்ட் ஆகாது. அழகோடு, இயல்போடு இருந்தால்தான் அது மக்களை சென்றடையும்"
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
வியர்த்த இரவுகளின்
தனிமையில்
தென்றலாய்
உன் நினைவுகள்... 2013
================================================================================
பொக்கிஷம் :
ஆட்கள் வருவதற்கு முன்னால் விசேஷங்களில் உணவில் கொஞ்சம் பரிமாறிவைத்து நான் பார்த்ததே இல்லை. அந்த முறை தவறு. திருப்பதி அன்னதானத்தில் மாத்திரம் துவையல், சர்க்கரைப் பொங்கல்/பாயசம் முன்னரே பரிமாறி வைப்பதைப் பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்குநீங்கள் அப்படி சந்தித்திராதது ஆச்சர்யம்தான் நெல்லை. பல திருமண மற்றும் சில விழா விருந்துகளில் நான் சந்தித்திருக்கிறேன். நான் இரண்டாவதாக இணைத்திருக்கும் படம் நான் சென்ற ஒரு விழா விருந்து படம்தான்.
நீக்குஅப்படீன்னா அவங்க கேடரிங் தொழிலுக்கு லாயக்கில்லை. இவங்கள்லாம் இப்படியே போனா, சாதம் போட்டு குழம்பு விட்டு பிசைந்து வைத்த பிறகுதான் சாப்பிடறவங்களை உட்காரச் சொல்லுவாங்க போலிருக்கு
நீக்குவிரைவிலேயே இப்படியான ஒரு பார்ட்டியை நீங்கள் சந்திக்க வாழ்த்துகிறேன்!!!
நீக்குஎனக்கு எப்போதுமே முதல் பந்தியில், அதுவும் முதல் இரு பெஞ்சுகளுக்குள் சாப்பிடுவது வழக்கம். ஹோட்டல் என்றால் கேட்கவே வேண்டாம். 12 மணிக்கு மதிய உணவு என்றால் 11:50க்குப் போய் உட்கார்ந்துவிடுவேன். சமீபத்தில் கும்பகோணம் வெங்கட்ரமணாவில் காலை 9:30க்கு முதல் ஆளா மதிய உணவு சாப்பிடும் வழக்கம் வைத்துள்ளேன், அங்கு செல்லும்போது. எனக்கு அடுப்பிலிருந்து இறக்கிய உடனே சாப்பிடப் பிடிக்கும். ஆறியபிறகு அல்ல
பதிலளிநீக்குநீங்கள் சொல்லியுள்ளபடி ஏற்கெனவே பரிமாறி தயாராய் இல்லா பந்தி என்றால் முதல் பந்தியில் அமர எனக்கும் சம்மதம்தான். நான்கைந்து பேர்கள் அமரும் வரிசையில் நடுவில் மட்டும் மாட்டக்கூடாது! நான் வேகமாக சாப்பிட்டு விடுவேன். கைகழுவ எழுந்து செல்வது சிரமமாகும்.
நீக்குவண்ணநிலவன் எழுதியிருப்பது சரிதான், ஆனால் புரிந்துகொண்ட கருத்து தவறு. மக்கள், இறைவனுக்குப் படைப்பது, தாங்கள் உண்ணும் உணவை. பலர், அவர்களுடைய குருக்களின் உபதேசங்களுக்கு ஏற்ப சைவர்களாகிவிட்டதால் பலிபீடம் போன்னவை மாறிவிட்டன. வீட்டில் உணவுக் கலாச்சாரமும் மாறிவிட்டது. இவை காலத்தினால் ஏற்படுபவை.
பதிலளிநீக்குமாறியது சரிதான். ஆனால் அப்படி இருந்ததை சிலர் மறந்து விடுகிறார்கள், ஏற்றுக் கொள்வதில்லை என்பதால் அவர் அபப்டிக் சொல்லி இருக்கலாம்!
நீக்குகனிந்தவராக இளையராஜா மாறிவிட்டார். அதன் காரணம் இயற்கையாகவே அவர் மனதில் இருந்த நல்ல குணங்களும், ஒரு நேரத்தில் தன் புகழுக்கும் பணத்திற்கும் இறைவனின் கருணையே காரணம் என்ற புரிதல் மற்றவர்களைப்போல ஏற்படுவதும்தான்.
பதிலளிநீக்குஇளையராஜா, கார்த்திகை செல்வனுக்கும், தினத்தந்தி பெண் நிருபருக்கும் (எத்தனை ஞாபகம் வைத்துக் கொண்டாலும் அவர் பெயர் மறந்து விடுகிறது) கொடுத்த பெட்டிகள் பார்த்தேன். இயல்பாய், நன்றாய் இருந்தது. ரமணா அனுபவம் பற்றி அவர் சொல்வக்காது மனதில் ஏறவே இல்லை. பெரிய அனுபவமாய் சொல்கிறார்.
நீக்குஈசில நகைச்சுவை மீண்டும் வந்திருந்தாலும் ரசிக்க முடிந்தது
பதிலளிநீக்குஎல்லா ஜோக்ஸும் ரிப்பீட்டு என்று என் அக்காவும் மெசேஜ் அனுப்பி இருந்தார். மொத்தமாய் மாற்றி விட்டேன். பாருங்கள்!
நீக்குமுதல் பகுதியான பந்திக்கு முந்தாதே கச்சிதமாக முடிந்திருக்கிறது. இது மாதிரி இன்னொரு இதற்கு நேர் எதிரான பந்திக்கு முந்தாமல் போனதால் என்ன ஆயிற்று (கற்பனையாயினும்) என்பதைச் சேர்த்திருக்கலாம். அல்லது வேறொன்று. எழுத ஆரமித்து விட்டால் சும்மா புகுந்து விளையாடணும். அது வாசிப்பவரை பிரமிக்க வைக்க வேண்டும். அது போதும் ஜென்ம சாபல்யமான எழுத்து மேந்மைக்கு.
பதிலளிநீக்குஅதிசயமாக ஜீவி சார். நலமா? பந்திக்கு முந்தலைனா பல ஐட்டங்கள் வராது. என் பையன் ஊரிலிருந்த வர தாமதமாகி கடைசிப் பந்துக்குக் கூட்டிச் சென்றபோது வேறு இரண்டு இனிப்புகள். நான் போய் காரணம் கேட்டதற்கு, எல்லாம் முடிந்துவிட்டது, கடையில் வாங்கின இனிப்புகள்தாம் கடைசி இரண்டு பந்திகளுக்கு என்றார்கள்.
நீக்குவாங்க ஜீவி சார்... முந்தலைன்னா சில ஐட்டம் காணாமல் போகும் அபாயத்துக்காகத்தான் நான் இரண்டாம் பந்தி என்று சொல்லி இருக்கிறேன்! முந்தா விட்டால் என்கிற கர்ப்பிணி இயற்கையாக என்னிடம் எழவில்லை. எனவே நீங்கள் சொல்லலாம்!
நீக்குகடைசிப் பந்தியில் ஏதோ போட்டார்கள் என்று சாப்பிட்டு விட வேண்டியதுதான் நெல்லை. நான் சென்ற ஒரு விருந்தில் நான்காம் பந்தி என்று நினைக்கிறேன், ட்ரியோ என்று மாம்பாக்கம் செல்வதற்குள் அலுத்துவிட்டது. நான்காம் பந்தியில் தயிர் சாதத்துக்கு பதில் தயிர் சேமியா போட்டார்கள் பார்க்கணும்!
நீக்குநலம் தான் நெல்லை.
நீக்குஹி..ஹி.. அடுத்த வேலைக்கான முஸ்தீபுகளில் இருக்கிறேன்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கமும் நன்றியும்.
நீக்குஇளைய ராஜாவை அவர் துறை விஷயம் தெரிந்தவர் சொல்கிறார் என்ற ஞாபத்துடன் கடந்தால் வண்ண நிலவன் ஏன் இப்படிக் குழம்பிப் போனார் என்று திகைப்பாயிற்று.
பதிலளிநீக்குஸ்ரீராம அவதாரத்தை அவர் அரசராய் இருந்த காலத்தைத் தாண்டிய தெய்வ நிலையில் ஸ்ரீராமபிரானாய் மனத்திக் இருத்தி வழிபடுவாதால் இந்த அசைவ சமாச்சாரத்தை ஆழ்ந்த புரிதல் உணர்வோடு கடந்து போய் விடலாம்.
இளையராஜா ஒரு மேதை என்பதில் என் மனதுக்கு ஐயமில்லை. இறைவனால் அனுப்பப்பட்ட தேவ பிரதிநி அவர்.
நீக்குவண்ணநிலவன் திடீரென ஏனோ இபப்டி ஒரு கருத்தை பகிர்ந்திருக்கிறார். நான் கூட கூகுள் சென்று அவர் இதை எந்த கான்டெக்ஸ்ட்டில் சொல்லி இருப்பார் என்று தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை.
அத்தனைக்கும் ஆசைப்படு என்று ஜாக்கி சொல்கிறார். நீங்கள் என்னவென்றால் பந்திக்கு முந்தாதே என்கிறீர்கள். எது எப்படியோ கல்யாண விருந்துகள், பரிமாறப்படும் உணவுகள் ஆகிய அனைத்தும் மாறிவிட்டன. விரயம் கூடுதல்.
பதிலளிநீக்குஇங்கு கேரளத்தில் சத்ய எனப்படும் விருந்தே பிரதானம்.
சமணர்களை இந்து மதத்தில் கொண்டு வர செய்த "புலால் உண்ணாமை" கடைசியில் இந்து என்றால் சைவம், சைவர்கள் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டது.
எதுவானாலும் தனிமனிதன் உணவில் இதை உண்ணாதே அதை உண்ணாதே என்று மற்றவர்கள் அடக்காமல் (அடிக்காமல்) இருந்தால் சரி.
நெல்லைக்கு ஐராவதீஸ்வரர் பற்றி புது செய்திகளை தெரிவிக்கிறீர்களா?
தற்போது
வியர்க்கும் இரவுகள்
பழங்கனவுகள்
ஏ சி !
ஆனந்த விகடன் அட்டைப்பட ஜோக்குகள் முன்பே வாசித்ததாக நினைவு.
Jayakumar
மாற்றிவிட்டீர்கள். ஜோக்குகளைத்தான் சொல்கிறேன்.
நீக்குJayakumar
நான் சாப்பிடவேண்டாம் என்கிற அர்த்தத்தில் பந்திக்கு முந்தாதே என்று சொல்லவில்லையே... ஏற்கெனவே பரிமாறப்போப்பட்டிருப்பது பிடிக்காமல் இருப்பதால் சொல்கிறேன். பாருங்கள், நெல்லைக்கு இதுவரை அப்படி வாய்க்கவில்லையாம்! அவர் முதல் பந்தி என்று நினைத்து இரண்டாவது பந்தியில் சென்று அமர்ந்தாரோ என்னவோ!
நீக்குநான் முன்பு தாராசுரம் சென்றுவந்தபோது ஏராள புகைப்படங்களை எடுத்து இங்கும், பேஸ்புக்கிலும் பகிர்ந்திருந்தேன். அதில் மெமரிஸில் வந்த இரண்டை இங்கு பகிர்ந்தேன், நெல்லை அதே இடத்தைப் பற்றி ஞாயிறில் சொல்லி வருகிறார் என்று!
வியர்க்கும் இரவுகள் இப்போதும் பல வீடுகளில் உண்டு. ஒரு பெரிய கிண்ணத்தில் தேங்காய் சிரட்டைகளை வைத்து அதில் நீர் நிரப்பி ப்ரீசரில் வைத்து அதை எடுத்து இரவு படுக்கைக்கு அருகில் ஒரு துணி விரித்து அதில் அதை வைத்து மின்விசிறி போட்டு தூங்கினால் ஏஸி எபெக்ட் கிடைக்கிறதாம். வாட்ஸாப் கண்டுபிடிப்பு!
மாற்றப்பட்ட ஜோக்ஸ் ஓகே? அதிலும் ஒன்றிரண்டு முன்னர் வந்திருந்திருக்கலாம்.
உன் நினைவகள் மனசைத்
பதிலளிநீக்குதென்றாலாய்த் தழுவிடினும்
உடல் ஏன் இப்படி வியர்க்கிறது?
நடந்தவை படப்பிடிப்பாய்
நினைவில் தேங்கியிருப்பதாலா?
தெரியவில்லை.
இல்லை விரக தாபத்தால்.
நீக்குபடப்பிடிப்பாய் என்பதை படிமங்களாய் என்று மாற்றலாமா ஜீவி ஸார்?
நீக்குஏப்ரலிலேயே அக்னிநட்சத்திரம் போல வாட்டுகிறது வெய்யில். விரகமா? கஷ்டம்தான்!
நீக்குபடப்பிடிப்பாய் :::: அது ஒரு பெண்ணின் படபடபு ஸ்ரீராம்!
நீக்குஆண் எழுத்து -- பெண் எழுத்து என்று ஒன்றுமிலை என்ற நினஒவில் வந்த்ச்து.
படிமம் -- ஜெமோ காலத்து பிந்தைய செயற்கை எழுத்துப் பூச்சைக் கொடுத்து விடுமோ?
படப்பிடிப்பாய் :::: அது ஒரு பெண்ணின் படபடபு ஸ்ரீராம்!
நீக்குஆண் எழுத்து -- பெண் எழுத்து என்று ஒன்றுமிலை என்ற நினஒவில் வந்த்ச்து.
படிமம் -- ஜெமோ காலத்து பிந்தைய செயற்கை எழுத்துப் பூச்சைக் கொடுத்து விடுமோ?
வேறு மாதிரி யோசிக்கலாமா?
நீக்குநான் ரிஷப ராசி.
நீக்குரோஹிணி நட்சத்திரம்
புரிந்திருக்குமே!
வாசிப்பதை வேறு மாதிரி யோசிப்பதே என்னில் படிந்து விட்ட பழக்கமாய் போய் விட்டது.
இன்னும் வேறு மாதிரி யோசிக்கலாம் என்றேன்!
நீக்குஹிஹிஹி...
நான் கடக ராசி கடக லக்னம்!
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.
பந்திக்கு முந்து என்ற சொல்"வழக்கின்" தீர்ப்பை மாற்றி விட்டீர்கள். அருமை.
விருந்தில் பரிமாறுவது கஸ்டமென நினைப்பதால் இந்த முயற்சியோ ? என நானும் நினைத்ததுண்டு. பொதுவாக சாப்பிடும் நபர் இலையில் அமர்வதற்கு முன் பரிமாற கூடாதென்ற சம்பிரதாயம் திருமணம் போன்ற சாஸ்திர சம்பிரதாயமான இடங்களில் வழக்கொழிந்துப் போனதில் வருந்தத்தான்.
அந்த சாஸ்திரமும் ஒரு காரணம் தொட்டுத்தான் உருவானது. உணவு உண்ண அமர்கிறவர் கண்முன் பரிமாற வில்லையென்றால், அதில் சிறு பூச்சிகள், வந்தமர்ந்து கொண்டு, அதன் இயல்புபடி அது அமர்ந்த இடத்திலிருந்து எழ முடியாமல், (நாம் வந்ததைப் பார்த்ததும் உணவை சுவைக்கும் ஆர்வமும் அதற்கு போய் விடும். பாவம்..! அந்த பாவம் வேறு நமக்கு.. :))). ) நம் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் என்ற கருத்துதான் இந்த சாஸ்திரத்திற்கு விதையிட்டது. ஆனால், இது எப்படி சாத்தியமாயிற்று என நானும் இது போன்ற முன்கூட்டியே பரிமாறி வைத்திருப்பதை காணும் நேரங்களில் யோசித்திருக்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆக நீங்களும் இது மாதிரி முன் பரிமாறுதலைப் பார்த்திருக்கிறீர்கள். சரிதானே? நெல்லைக்குதான் இதில் அனுபவம் இல்லை போல... காரணம் சரிதான். மேலும் அவை ஆறி பழசாய் போய்விடுகின்றன. ஆனால் எத்தனை பந்திகளில் கடைசிவரை சூடாகவே பரிமாறுகிறார்கள் என்பதும் கேள்விக்குறி!
நீக்குகேடரிங் காரங்க இரண்டு விஷயத்தைச் சரியாச் செய்வாங்க. முதல் பந்தி, போனால் போகுது இரண்டாவது பந்தி, அப்புறம் மணமகன் மணமகள் பெற்றோர் அமரும் பந்தி. மத்ததெல்லாம் கொஞ்சம் இப்படி அப்படித்தான். பட்டப்பா ஒரு floor manager. Quality controlக்கு ஒரு ஆள், திருமண கோ ஆர்டினேட்டர் என்று மூன்று சீனியர் ஆட்கள் மூலமாக மேனேஜ் பண்ணுவதால் பிரச்சனை எந்தப் பந்தியிலும் எழுவதில்லை. ஆனால் காஸ்ட்லி
நீக்குபட்டப்பா போலவே எங்கள் ராஜா நன்றாகவே சமாளிக்கிறார். ராஜாவும் காஸ்டலிதான். ஆனால் தரம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவில் தங்களின் எண்ணங்களின் தொகுப்பு கட்டுரையை படித்ததில் "பந்திக்கு முந்து" என்ற சொல் "வழக்கின்" பல காரண காரியங்களை பல இடங்களில் ஆராய்ந்து வந்ததில் "பசி" உணர்வு எனக்கும் அதிகமாகி விட்டது. ஆனால், இந்த பந்தி ஏற்பாட்டிற்கும் நான்தான் முந்த வேண்டுமென்பதால், பிறகு வருகிறேன். ஆனால், ஒரளவிற்கு எல்லாமும் படித்து விட்டேன். மாற்றிய பொக்கிஷத்தை இனிதான் படித்து ரசிக்க வேண்டும்.
கவிதையும் புதிதாக இணைத்ததோ ? அருமை. இங்கு (பெங்களூரில்) பனி விலகி, வியர்க்க ஆரம்பித்து விட்டது.
தன் உடன் பிறப்பாகவே எப்போதும் சேர்ந்து வரும் காற்றில்லா கோப வெய்யிலின்
தாப(க்க)ம் கண்டு
மின் விசிறியை இப்போது பிரியத்துடன் நாடுகிறது
நம் மனம்.
நன்றி பிறகு வருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நான் காலை வேளைகளில் டிப்பன் சாப்பிடுவதில்லை. எனவே எனக்கு பிரச்னையில்லை!
நீக்குஅக்கவிதை முன்னரே இருந்ததே...
கோப வெய்யில் தாக்கியதில்
மின்விசிறியும்
வெப்ப நோய்கண்டு
சுடு காற்றையே
பரிசளிக்கிறான்!
இலையை சுத்தமாக காலி செய்வதே வழக்கம். //
பதிலளிநீக்குநானும்...
எனவே அதுக்கு ஏற்ப தான் போட்டுக்கொள்வது வழக்கம். முன்னாடியே போட்டு வைப்பது பிடிக்காத ஒன்று.
கீதா
ஹைஃபை கீதா...
நீக்குதயாராயிருக்கும் இலையில் வெட்கமின்றி சென்று அமர்ந்தால், இலையில் என்னென்ன இருக்கிறது என்று அனுமானித்து எடுக்கும் முன்னரே பரிமாறுபவர்கள் சாதம், சாம்பாருடன் நிற்பார்கள்!//
பதிலளிநீக்குஎன்னால் ரொம்ப வேகமாகச் சாப்பிட முடியாது. நான் சொல்லிடுவேன்...வேகமா பரிமாறஆ தீங்க. சாப்பிட டைம் கொடுங்க என்று சொல்லி, ஒரு வேளை, நாமமெதுவான சாப்பிட....அவங்க கொண்டு தரலைநா நான் எழிண்டுறுவென் ஹிஹிஹி...என் சாப்பாடும் அவ்வளவுதானே...!!!!
ஆனா எனக்கு விருந்துகளில் சாப்பிடுவதே கஷ்டம்... எல்லாம் ரு சிப்பேன் ஆனால். இனிப்பு தவிர. ஆனால் கொஞ்சம் கொஞ்சம்....
கீதா
அவ்வளவு மெதுவாக சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா...
நீக்குஎல்லோரும் சாப்பிட்டு எழுந்து போயிருப்பார்கள். நாம் மட்டும் அமர்ந்திருப்;போம். அந்த Bench ல் உள்ள சாப்பிட்ட இலைகளை எடுக்கும் ஆட்கள் வாளி கம்புடன் நம் அருகே நின்று நம்மை உற்று நோக்கிக் கொண்டிருப்பார்கள்..
"சீக்கிரம் எழுந்திட்டியானா க்ளீன் செய்து புது இலைகள் போடுவோம்' என்கிற வரிகள் அவர்கள் செய்கைகளில் தெரியும்.
அந்த புது வரிசையில் அமர்வதற்கு தயாராக பத்துபேர் நம்மைப் பார்த்தபடி நின்றிருப்பார்கள். சிலர் அருகில் பழைய இலை எதிரிலேயே இடமும் பிடித்திருப்பார்கள்.
சொல்லுங்கள்... நிம்மதியாய் மெதுவாய் தொடர்ந்து சாப்பிடுவீர்களா?
நான் மெனு என்ன என்று பார்த்துக்கொண்டு எல்லாம் வருகிறதா என்று செக் பண்ணிக்கொள்வேன், இல்லைனா கேடரிங் மேனேஜர்ட கேட்டுடுவேன்.
நீக்குஸ்ரீராம் டிட்டோ....சில சமயம் நம்ம இலையை எடுக்க ரெடியாக இருப்பாங்க. ஆமாம் நீங்க சொன்னதை அப்படியே டிட்டோ செய்யறேன். அதனாலதான் இப்பலாம் இந்த மாதிரியான சாப்பாடு என்றாலே கஷ்டமாகி வருகிறது.
நீக்குகீதாக்கா கூட முன்ன புலம்பியிருந்தாங்க.
//நான் மெனு என்ன என்று பார்த்துக்கொண்டு எல்லாம் வருகிறதா என்று செக் பண்ணிக்கொள்வேன், இல்லைனா கேடரிங் மேனேஜர்ட கேட்டுடுவேன்.//
ஆஹா இப்படியும் டெக்னிக் இருக்கா!!!
கீதா
பல சமயங்களில் மெனு என்று அவர்கள் நம் கண்ணில் காட்டுவதில்லை நெல்லை. உட்காரப்போகும்போது கண்ணில் பட்டவர்களும், முன் பின் பந்திகளில் கண்ணில் படுபவைகளும் நம் இலையிலும் விழுந்தால் சரி...
நீக்குநம் ராசி எப்படி தெரியுமா?
நல்ல ஒரு ஐட்டத்தை வரிசையாக பரிமாறிக்கொண்டு வருவார்கள். சர்ரியாக நம் இலைக்கு வரும்போது அது தீர்ந்து போகும். மறுபடி Fill செய்து கொண்டு வந்து நமக்கு அடுத்த இலையிலிருந்தோ, அல்லது அதற்கும் அடுத்த இலையிலிருந்தோ கண்டின்யு செய்வார்கள். சமயங்களில் நம் வரிசையே ஸ்கிப் ஆகி விடும்!
நான் பரிமாறும்போதே பெரும்பாலான ஐட்டங்களை காலி செய்து லபக்கி விடுவேன். அவர்களுக்கே இவனுக்கு போட்டோமா இல்லையான்னு சந்தேகம் வந்து விடும்!
நீக்குசமீபத்தைய திருமணத்தில் கேடரிங் எல்லாம் போடலைனு எனக்கு சந்தேகம் வந்தது. என் மனைவியும் சொன்னா. அதனால் திருமணத்துக்கான விருந்தில் மெனுவை போட்டோ எடுத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தால், எங்க இளநீர் பாயசம் என்று கேட்டால், சார் மெனுவை இரண்டு மாதங்களுக்கு முன்னால் பிரிண்ட் பண்ணிட்டோம், போன மாசம் மெனுவை மாற்றி பால் பாயசம் போடச்சொன்னார்கள் என்று சொல்லிட்டார். கேடரிங் பெயரைச் சொல்ல விரும்பலை, ஆனால் பல கேடரிங் பணம் வாங்கறதுல காண்பிக்கற ஆர்வத்துல, டெலிவர் பண்ணறதுல காண்பிக்க மாட்டேன் என்கிறார்கள். இத்தனைக்கும் 50-65 சதம் லாபம் உள்ள பிஸினெஸ் அது.
நீக்குஇந்த கேட்டரர் - மெனு பற்றி நிறைய சொல்லலாம். சம்பந்தப் பட்டவருடன் பேசும்போது அவர்கள் டீஃபால்ட்டாக வைத்திருக்கும் மெனுவை அனுப்புவதும், அப்புறம் இவர்கள் கஸ்டமைஸ் செய்வதும்.. மாற்றங்களை சொல்ல மறப்பதும்...
நீக்குஇப்ப கொடுக்கிற கமெண்ட் முன்னாடி ஒரு கமெண்ட் கொடுத்தேன்... அது பப்ளிஷே ஆகவில்லை. கரண்டும் போய்விட்டது. எனவே மொபைலில் இருந்து குரல் வழி அடுத்த கருத்துக்கு போகிறேன்.
பதிலளிநீக்குவண்ண நிலவன் அவர்கள் சொல்லியிருக்கும் கருத்து மிகவும் சரியே ஆனால் அதை மக்கள் குதர்க்கமாகப புரிந்து கொண்டால் அது அவர் மீது அல்ல தவறு மக்கள் மீது தான் தவறு.
கீதா
இங்கும் காலையிலிருந்து கரண்ட் போவதும் வருவதுமாக இருக்கிறது!
நீக்குவண்ணநிலவன் கருத்து உங்கள் அக்கருத்தே எனதும்!
/இலையை சுத்தமாக காலி செய்வதே வழக்கம். /
பதிலளிநீக்குநானும் அப்படித்தான்.. உணவை வம்பாக்க எனக்கும் பிடிக்காது. ஆனால். இந்த மாதிரி முன்னரே பரிமாறி விட்டால் சாப்பிடுவது (முழுவதும் காலி செய்வது)
சற்று சிரமம்தான்.
இப்போது இந்த வாழை இலையைக் கொண்டே ஒரு ஸ்வீட் (பர்பி மாதிரி) செய்வதை யூடியூபில் பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன். அது மாதிரி செய்தால் அதையும் வைக்க (பரிமாற) ஒரு வாழை இலை வேண்டுமே அதற்கெங்கே போவது எனவும் யோசித்திருக்கிறேன். நாமோ இலையையை காலி செய்யும் ரகத்தைச் சேர்ந்தவர்கள். ஹா ஹா ஹா நன்றி.
நானும் பார்த்திருக்கிறேன். வாழை இலைக்கு பதிலாக கப் ஐஸ்க்ரீம் கொடுக்கும் பிஸ்கட் கோன்போல எதிலாவது சாப்பாடு பரிமாறும் நாட்கள் வந்தால் இலையை மடித்து அப்படியே வாய்க்குள்ளே தள்ளி விடலாம்!
நீக்குஆம்.. உணவுக்கு பின் செரிமானத்திற்கு போடும் வெற்றிலைக்கு (பீடாவுக்கு) பதிலாக.. நாகேஷ் ஒரு திரைப்படத்தில் சொன்ன மாதிரி. " காய்கறி, மற்றும் அதன் இலைகளில் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த சக்தி இருக்கோ."
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனகவேல் காக்க
வாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குஇன்றைய பந்தி உளப் பூர்வமானது அல்ல...
பதிலளிநீக்குவெற்று ஆடம்பரம்..
ம்ம்ம்.. அப்படியும் சொல்லலாம்.
நீக்குதாராசுரம் அந்த சன்னதி மண்டபம் தூண்கள் நெல்லையின் பதிவிலும் பார்த்த நினைவு.
பதிலளிநீக்குஸ்ரீராம் நான் கற்பனை பண்ணிப் பார்த்தேன் தெரிஞ்சாங்க..யாருனா நம்ம ராஜாராஜ சோழன் படம் மக்கள் எல்லாம் கண்ணுல தெரிஞ்சாங்க. ஹிஹிஹிஹி ஒரிஜினல் மன்னர் பரிவாரம் அல்ல. பின்ன நமக்கு இதுதானே பார்த்து பழக்கம்!! அவர்களின் பின் பக்கம்...அவங்க அங்க அந்த ராஜ உடையில் இருட்ந்தாப்ல!!!!
கீதா
யாரை? த்ரிஷாவையா சொல்றீங்க?
நீக்கு6 அடி உயர பேருந்தில் 7 அடி உயர நடத்துனர் பாவம் கழுத்துவலி வந்துவிடுமே. பேசாம அவர சீட்டுல உட்காரச் சொல்லிட்டு, மக்கள் அவர்கிட்ட போய் டிக்கெட் எடுத்தா ஓகே..
பதிலளிநீக்குகைலாசா நாடு பத்தி நானும் நியூஸ் பார்த்தேன். அதானே நித்தி எங்க?!!
ரோஷினி அப்பெண் குழந்தை பாவம். அப்படினா அக்குழந்தைக்கு என்ன மன அழுத்தம் இருந்திருக்கு பாருங்க....தினமும் இப்படி ஆகுமோ என்னவோ ஸ்கூல் போற குழந்தைய இப்படி....என்னவோ மனசு கஷ்டப்படுது இதெல்லாம் பார்க்கும் போது
பெங்களூரில், குடிநீர்க்கட்டணம் உயர்வதோடு போர் இருக்கும் வீடுகளில் அதற்குத் தனியாகக் கட்டணம் கட்ட வேண்டும்.
கீதா
__/\__
நீக்குகல்மண்டபம் இன்னும் என் கைக்கு வரவில்லை!!!! ஹாஹாஹா....அப்பாவின் கையில்.
பதிலளிநீக்குஎழுத்து, ஆளுமை மிக்கதாக இருக்கிறது ஈர்க்கிறது
கீதா
படித்தபின் கலவையான உணர்வுகள்.
நீக்குராஜாவை ரசித்து வாசித்தேன்/. எனக்கு அவர் இசை ரொம்பப் பிடிக்கும்...அவர் தேர்ந்தெடுக்கும் ராகங்களும் அதைக் கொண்டு வரும் விதமும், நிஜமாகவே கர்நாடக இசை பின்புலம் இல்லாமல் அமைப்பது என்பது மிகப் பெரிய விஷயம். அது போல எஸ்பிபி பாடுவது.
பதிலளிநீக்குகீதா
ஆனால் ராஜா சொல்லும்போது நான் ராகம் என்று பார்த்து போடுவதில்லை. அந்த நேரம் தானாக வரும். அதன் நுணுக்கங்களும் யு டியூபர்ஸ் சொல்வதை நானும் படிக்கிறேன். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்கிறார்.
நீக்குஅவரது மூகாம்பிகை அம்மன் அனுபவமும், ரமணர் அனுபவமும் சிலிர்க்க வைப்பவை.
ஓ...அந்தக் காணொளி பார்க்கணும் ஸ்ரீராம். அவர் பார்த்து போடுகிறாரா இல்லையான்னு தெரியலை ஆனா அவர் நோட்ஸ் எழுதித்தானே இசை அமைக்கிறார். ஸோ அவரை அறியாமல் அவை வந்து உடுகாருமாக இருக்கும்.
நீக்குஅவர் திருக்குறள் பத்தி சொன்ன அந்த வரி மட்டும் கொஞ்சம் புரியலை...இப்ப இருக்கற வரிய வாசிக்கறப்ப அது வேறு ஒரு பொருள் கொடுக்கிறது
கீதா
கசடற கற்றால் அதற்குத் தக்கதாகத்தானே நிற்பார்கள்? எனவே கசடற கற்க என்று சொன்னாலே போதும்.என்கிறார்.
நீக்குஅசோக தர்ஷினி தினத்தந்தி இன்டர்வியூ என்றும், கார்த்திகை செல்வன் இன்டர்வியூ என்றும் தேடுங்கள் கிடைக்கும்.
கவிதை நல்லாருக்கு ஸ்ரீராம். மறக்காம பொறுக்கியாச்சு!
பதிலளிநீக்குகீதா
ஹிஹிஹி...
நீக்குநானும் இச்செய்தியை படித்தவுடன் .எப்படி இவரால் தினமும் இந்த வேலையை செய்ய முடியுமென கவலையுற்றேன்
பதிலளிநீக்கு/6 அடி உயர பேருந்தில் 7 அடி உயர நடத்துனர் பாவம் கழுத்துவலி வந்துவிடுமே. பேசாம அவர சீட்டுல உட்காரச் சொல்லிட்டு, மக்கள் அவர்கிட்ட போய் டிக்கெட் எடுத்தா ஓகே../
ஆம். உங்கள் ஐடியா நல்ல ஐடியா... இதை அவ்வூர் அரசு, மக்கள் செயல்படுத்தினால் நல்லது.
அவருக்கென்று உள்ள இருக்கையில் அமரச் சொன்னால், மக்கள் ஏறும் போதே டிக்கெட் வாங்கிக் கொண்டால் ஆயிற்று. நாமும் இதை முன்பு (தமிழ் நாட்டில் இருக்கும் போது ) பலவிடங்களில் பார்த்துள்ளோம். இப்போது நாங்கள் பஸ்ஸில் பயணிப்பதே இல்லை. நன்றி சகோதரி.
இல்லாவிட்டால் பஸ்ஸின் மேற்கூரையை இவர் தலை வைக்குமிடத்தில் ஓபன் செய்து வைத்து விடலாம்!!!!!
நீக்குஆ!! அப்ப பஸ் முழுவதும் ஓப்பனா இருக்கணுமே அவர் நடந்துகிட்டே இல்லையா இருப்பார்!!! இல்லைனா ஏறும் இடத்தில் நின்று கொண்டு டிக்கெட்டை கொடுத்துக் கொண்டே உள்ளே ஏறச் சொல்லணும் பயணிகளை ஆனா அது கஷ்டம.
நீக்குகீதா
கமலாக்கா, அப்படி சென்னையில் சில நடத்துனர்கள் செய்வதைப் பார்த்திருக்கிறேன். கூட்டமா இருந்துச்சுனா உட்கார்ந்துட்டு பாஸ் பண்ணச் சொல்வாங்க பணத்தையும் டிக்கெட்டையும். அப்படித் தோன்றியது
நீக்குகீதா
பஸ்ஸின் நடுப்பகுதியை மட்டும்மேலேற்றி விடவேண்டியதுதான். இல்லாவிட்டால் இவர் முட்டிக்கால் போட்டுக்கொண்டே வேலை பார்க்க வேண்டியதுதான்! ஹா.. ஹா.. ஹா...
நீக்குஅப்படியென்றால் அவர் பஸ்ஸில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டயிருக்க முடியுமா? இரண்டாவதாக தன் தலையை அவர் தினமும் பாதுகாப்பதும் சிரமம். தன் "தலை தப்பியது தம்பிரான் புண்ணியமென" தினம் தினம் கவலை கொள்ளல் வேண்டும்.
நீக்குஅடாடா.. ஒரு உயரந்தான் எத்தனை பிரச்சனைகளைத் தருகிறது. என் இளைய மகனும் நல்ல உயரம். நான், அவர் நின்று கொண்டிருந்தால், அண்ணாந்துதான் அவரிடம் பேச வேண்டும்.
உயரமானவர்களுக்கு ரெடிமேட் ட்ரெஸ் எடுப்பது, செருப்பு வாங்குவது எல்லாமே சிரமம்தான்.
நீக்குபொக்கிஷம் ஜோக்ஸ் புடவை, குழந்தைக்கு ஊட்டுதல், தோசை எல்லாம் புன்சிரிக்க வைத்தன்.
பதிலளிநீக்குநல்லகாலம் பிறக்குது ரிபீட்டட்.
.
ஸ்ரீராம் இனி என்ன பண்ணுங்க, ப்ளாகல் போட்டதை எடுத்து தனி ஃபோல்டர்ல போட்டு வைச்சுருங்க.
எனக்கும் மறந்துரும் ஸோ shared in blog, to be shared in blog இப்படி ரெண்டு ஃபோல்டர் போட்டு வைச்சிருக்கேன்...ப்ளாக்ல போடும் போதே அதை பகிர்ந்தாச்சுன்னுற ஃபோல்டர் ல போட்டிடறேன். இப்ப பதிவுல படங்கள் எல்லாம் போடணுமே அதுக்கு இப்படி...
கீதா
இல்லை கீதா... ஆக்சுவலா பப்ளிஷ் செய்தவற்றை டெலிட் செய்து விடுவேன். சமயங்களில் எப்போதாவது மறந்து விடுகிறது, விட்டுப்போய் விடுகிறது.
நீக்குமேலும்,
இங்கு முன்பு தனித்தனியாக கிடைத்த ஆ வி அட்டைப்பட ஜோக்ஸை பகிர்ந்திருக்கிறேன். இப்போது கும்பலாக ஒரு இடத்தில் கிடைத்ததை பகிரும் போது ஏற்கெனவே தனித்தனியாக பகிர்ந்தும் அதில் வருகிறது!
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்று உடன் பிறப்புகளுக்குரிய நாளாம். (உடன் பிறப்புக்கள் தினம்) வலைத்தள உடன் பிறப்புகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். எல்லோரும் வாழ்க வளமுடன் என இறைவனை அன்போடு வேண்டிக் கொள்கிறேன். நன்றி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா.. நன்றி கமலா அக்கா. உங்களுக்கும் வாழ்த்துகள்.
நீக்குநன்றி சகோதரரே.
நீக்குஸ்ரீராமின் தலைப்புப் பார்த்ததும், கொஞ்சம் தாமதமாகத்தான் போகோணுமாக்கும் எனப் பிந்தி வந்தேனாக்கும்:))).
பதிலளிநீக்குவெளிநாட்டுக்கு வந்த காலத்திலிருந்து, பரிமாறிச் சாப்பிடும் வழக்கம் நின்றுவிட்டது, நாமே எடுத்துச் சாப்பிடும் வழக்கம் தான், இலங்கையிலும் இப்போ பெரும்பாலும் அப்படித்தான், பரிமாறும் பழக்கம் நின்றுவிட்டதென்றே சொல்லலாம்.
ஆனால் பரிமாறிச் சாப்பிடுவதிலும் ஒரு சந்தோசம் இருக்கு.
நாங்கள் முதல் பந்தியில் இடம் பிடிக்கும் ரகம்... நெருங்கிய உறவெனில் கடசிவரை நிற்போம் நிகழ்வில், அப்படியெனில் ஆறுதலாகச் சாப்பிடுவோம், ஏனைய இடங்களிலெல்லாம், அடிச்சுப்பிடிச்சு வாழ்த்திப்போட்டு முதலாவதாக சாப்பிட்டுப்போட்டு வெளியே வந்திடுவோம்:))..
///என்னால் அது முடியாது. இலையை சுத்தமாக காலி செய்வதே வழக்கம்.
///
ஹா ஹா ஹா இதேதான் என் ஆத்துக்காரரின் பழக்கமும்:)) முக்கி முக்கிச் சாப்பிட்டு முடிச்சிடுவார்.... அதே பழக்கம் பிள்ளைகளிலும் இருக்கு. அதனால பிடிக்காத இலைவகைகள் மரக்கறிகளைப் பார்க்கமுன் போட்டுவிட்டிடுவேன் ஹா ஹா ஹா.
ஆமாம், இங்கும் பஃபே ஸிஸ்டம் நிறைஆய்வே இருக்கு. ஆனால் அது போர் அதிரா... பரிமாறி சாப்பிடுவது விருப்பம். ஆனால் கேட்டு வாங்கி சாப்பிடுங்க என்று உபசாரம் செய்து செல்வார்கள். கேட்டால் போடுவதற்கு ஆளிருக்க மாட்டார்கள். லேசில் வராது!
நீக்குதேவையானதை மட்டுமே கேட்டு வாங்கி கொள்வது இலையை க்ளீன் செய்ய வசதியாய் இருக்கும். பக்கத்து இலையிலிருந்தெல்லாம் வாங்கி மாட்டிக்கொள்ள மாட்டேன்!
உறவுகள் தவிர நட்புகள் அழைப்பில் செல்லும் விழாக்களில் இப்படித்தான் - நீங்கள் சொல்லி இருப்பது போல,
நீக்குசெல்வது, வரிசையில் நின்று பரிசளிபபது, சாப்பிடுவது, பீடா போட்டுக்கொண்டு தேங்காய்ப்பை வாங்கிக்கொண்டு ஜூட் விடுவது...
இதோ.. இன்று கூட என் பால்ய நண்பன் பெண் திருமண வரவேற்புக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன். அவனைப் பற்றி எல்லாம் எபியில் எழுதி இருக்கிறேன்!
உண்மைதானே ஆதிகாலத்தில் அசைவத்தை அதுவும் பச்சையாக உண்டு வந்த சமூகத்திலிருந்து வந்த நாம்தானே எல்லோரும், நம் ஜீன்ஸ் இல் அது கொஞ்சமாவது இருக்கும்தானே..
பதிலளிநீக்குகண்ணப்ப நாயனார் கதை...
சில சமூக மக்கள் என்றில்லை ஸ்ரீராம், வெளிநாட்டில் இல்லை, இலங்கையில் சில பத்திரகாளி அம்மன் கோயில்களில் இன்னமும் அசைவம் சமைச்சுப் படைக்கின்றனர்... பலி கொடுப்பதென்பதுதான் இல்லாமல் போய் விட்டது.
ஆம், ஆதிகாலத்தில் இருந்ததுதான் அதிரா.. நான் இல்லை என்று சொல்லவில்லையே... அகத்தியர், வாதாபி கதை தெரியும்தானே? அதன் பிறகுதான் வழக்கங்கள் மாறத்தொடங்கின என்பார்கள்.
நீக்குசமீபத்தில ஒரு நியூஸ் படிச்சேன், வட இந்தியாவிலிருந்து, தமிழ் நாடு காட்டுகிறேன் வா என தாயைக் கூட்டிவந்து ஓரிடத்தில் இருக்க விட்டுப்போட்டுப் போய் விட்டாராம் மகன்.. எப்படி இப்படியெல்லாம் மனம் வருகிறது பெற்றோரைச் செய்ய... அவர்கள் எவ்வளவு பொல்லாதவர்களாக இருப்பினும், பெற்று ஆசையாக வளர்த்தவர்கள்தானே.
பதிலளிநீக்குபாவம் அந்த கண்டக்ரருக்காகவே அரசாங்கம் ஒரு பஸ் செய்து குடுக்க வேண்டும்.
தெரியாத ஊரில் தாயை தவிக்கத் தவிக்க விட்டுச் செல்லும் மகன் கதை பழைய்ய்ய கதை அதிரா....
நீக்குதேசு கதை 2ம் தடவை படிச்சும் எனக்குப் புரியவில்லை...என்ன சொல்ல வாறீங்கள் என.
பதிலளிநீக்குஇளையராஜா அவர்கள் எவ்ளோ திறமையானவர், ஆனால் சமீப காலங்களில் அவர் பற்றிய பல விசயங்கள் படிச்சபின் எனக்கு இப்போ அவரைப் பார்க்கவே பிடிப்பதில்லை, மனதில ஒரு வெறுப்பு.
படிப்பவரின் வர்ணனையை எடுத்துக் காட்டாக கொடுக்கும் பகிர்வுகளில் கதை தெரியாது. முதலிரவு அறைக்குள் வந்த மணமகன், மணமகள் பற்றி எழுத்தாளர் எழுத்து.. அப்போது அவன் சிந்தனை.. அவனுக்கு அழகிய பெண், புத்திசாலி பெண் என்பதெல்லாம் தனக்கு ரொம்ப அதிகம் என்று நினைக்கிறான். அவன் ஒரு பிணம் தூக்கி.
நீக்குஇளையராஜா பற்றி தவறான விஷயங்கள் உங்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளன. நான் அதற்கு வாதாட மாட்டேன். என்னைப் பொறுத்தவரை அவர் தேவன். ராக தேவன், இசைச்சித்தர். மேதை.
ஹா ஹா ஹா பொக்கிஷம் அனைத்தும் அருமை அழகு...
பதிலளிநீக்குகடசியில் இருப்பதற்கு ஒரு கதை இருக்கெல்லோ.
ஒரு வீட்டுக்கு ஒரு சாமியார் வருகிறார், வரவேற்று உணவு பரிமாறுகின்றனர், அப்போ மகிழ்ந்த சாமியார் கேட்கிறார், என்ன வரம் வேண்டும் என.. சாமி எங்களுக்கு குழந்தைகள் இல்லை என்கின்றனர்.
ஏதோ ஒன்றைக் கொடுத்து, இந்த ஊரில் போய்க் கோயிலில் ஒரு விளெக்கேற்றி வாருங்கள் என்றுவிட்டுப் போய் விடுகிறார்.
இவர்களும் போய் விளக்கேற்றி வந்ததும், வருடம் ஒரு குழந்தையாக குழந்தைகள் பிறந்துகொண்டே இருக்கின்றன இவர்களால் முடியவில்லை எப்படி நிறுத்துவதென.
பின்பு ஒருநாள் அச்சாமியார் மீண்டும் வருகிறார். வீட்டில் மனைவி மட்டுமே உள்ளார்..
சாமியார்: உன் கணவர் எங்கேயம்மா?
அந்த மனைவி: சாமி!! நாங்கள் ஏற்றிவைத்துப்போட்டு வந்த விளக்கை அணைச்சுப்போட்டு வரப் போயிருக்கிறார்:)))
ஹா.. ஹா... ஹா.. விளக்கை எதற்கு அணைக்கணும்? மனைவியை அணைப்பதை நிறுத்தினால் போதாதோ...!!!!
நீக்குஅதிரா எழுதிய கடைசி வரியே எனக்குச் சிரிப்பைக் கொடுத்தது. அதற்கு மறுமொழி...இன்னும் சூப்பர். ஹா ஹா ஹா
நீக்கு:-))
நீக்குமுன்பே இப்படி எல்லாவற்றையும் பரிமாறி வைத்து இருப்பதை பார்த்து இருக்கிறேன், எனக்கும் அதில் உடன்பாடு இல்லை.
பதிலளிநீக்குநீங்கள் சொன்னது போல் நாம் அமர்ந்த பின் பரிமாற ஆரம்பித்தால் நமக்கு பிடித்த நம் உடம்புக்கு ஒத்துக் கொல்வதை மட்டும் வாங்கி கொள்ளலாம்.
எனக்கும், என் கணவருக்கும், நான், மற்றும் ரூமேனி ரொட்டி, பிரியாணி ஆகியவை பிடிக்காது. வாங்க மாட்டோம்.
தேவையானதை வாங்கி கொண்டு சாப்பிடலாம்.
இல்லையென்றால் அனைத்தும் வீண்.
வாங்க கோமதி அக்கா.....
நீக்குSo, நீங்களும் அப்படியான பந்திகளைப் பார்த்திருக்கிறீர்கள். நெல்லைக்குச் சொல்லுங்கள்!!! அவர்கள் சோம்பேறித்தனத்துக்கு திருமணம் செய்பவர்களுக்கு கெட்டபெயர்!
பந்திக்கு முந்தாதே தலைப்பு உங்கள் பதிவை படித்தவுடன் புரிந்தது.
பதிலளிநீக்குஓ.. படிப்பதற்கு முன் என்னவாக இருக்கும் என்று கற்பனை வந்ததது?
நீக்குபழைய புராண வரலாறுகளை படித்தால் தெரியும் .
பதிலளிநீக்குஆதிகாலத்தில் மனிதன் அதிரா சொன்னது போல சமைக்காமல் மிருகங்களை வேட்டையாடி தானே உண்டார்கள்.
இவைகளைபற்றி இராமாயணம், மகாபாரதம் நூல்களில் உள்ளது.
மாமிசங்களை படைத்து இறைவனை வழிபட்டு இருக்கிறார்கள்.
இராமாயணத்தில் குகன் இராமருக்கு மீனும், தேனும் கொடுத்தாக சொல்லப்படுகிறது.
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாடலில் அன்னைக்கு பிடித்த உணவு என்று சொல்ல்ப்படுகிறது.
கல்கத்தாகாளிக்கு உயிர்பலி உண்டு இன்றும்.
நிறைய கோயில்களில் உயிர்பலி இருந்து இருக்கிறது
ரக்தவர்ணா மாம்ஸநிஷ்டா
குடாந்ந ப்ரீத மாநஸா |
ஸமஸ்த பக்த ஸுகதா
லாகிந்யம்பா ஸ்வரூபிணீ || 103
இன்று மஹாவீர் ஜெயந்தி. புத்தம், சமணம் வந்த பின் மனிதன் புலால் மறுப்பு செய்து இருக்கிறான்.
அழகிய ஸ்லோகத்துடன் விளக்கி இருக்கிறீர்கள். ஒவ்வொன்றுக்கும் நம் புராணங்களிலேயே விளக்கம் இருக்கிறது. நன்றி கோமதி அக்கா. புத்தம் சமணம் வருவதற்கு முன்னரே புலால் மறுப்பும் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. மரக்கறியை கண்டவுடனேயே பலர் மாறி இருப்பார்கள்.
நீக்கு//மாமிசங்களை படைத்து இறைவனை வழிபட்டு இருக்கிறார்கள்.
நீக்குஇராமாயணத்தில் குகன் இராமருக்கு மீனும், தேனும் கொடுத்தாக சொல்லப்படுகிறது.
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாடலில் அன்னைக்கு பிடித்த உணவு என்று சொல்ல்ப்படுகிறது.// இதே கருத்துதான் எனக்கும் தோன்றியது. நான் சொன்னால் பதில் கருத்து வேற மாதிரி வரும் என்பதால் சொல்லவில்லை.
__/\__
நீக்குதாராசுரம் படங்கள் இன்றும் இடம் பெற்று விட்டது, மணி நெல்லைத்தமிழன் தாராசுரம் பதிவில் இல்லை போலும்.
பதிலளிநீக்குஆமாம் அக்கா... யதேச்சையாக பேஸ்புக் மெமரீஸில் வந்தததும் எடுத்து இங்கே பகிர்ந்து விட்டேன்!
நீக்குஆட்டை திருடி சந்தையில் விற்கவந்தவரிடமிருந்து ஆடு வளர்த்தவரை நோக்கி ஓடியது நெகிழ்வு.
பதிலளிநீக்குஆனாலும் பாடல் நினைவுக்கு வந்து தொலைத்தது, "இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே ! இதுதான் உலகமே !
ஓரு போதும் நம்பிடாதே! "
அதேதான் எனக்கும் தோன்றியது. இதை வைத்து ஒரு கதை எழுதவும் நினைத்தேன்.
நீக்குபொக்கிஷ பகிர்வுகள் அருமை. கடைசி நல்லகாலம் பொறக்குது மட்டும் மீண்டும் வந்து இருக்கு.
பதிலளிநீக்குஓ... மறுபடியுமா? இதோடு ஆ வி அட்டைப்பட ஜோக்ஸ் ஓவர் அக்கா.... அப்புறம் என்ன என்று சேகரிக்கணும்!
நீக்குஎன் சின்ன வயதில் தரையில்தான் சாப்பாடு. அப்போதெல்லாம் ஒரு பந்தி முடிந்ததும், விளகுமாற்றால் பெருக்கி விட்டு சாக்கைப் போட்டு துடைத்து விடுவார்கள். அது பிடிக்காததால் முதல் பந்தியிலேயே சாப்பிட்டு விடுவேன். இப்போதெல்லாம் மேஜையில் காகித விரிப்பு விரித்து விடுகிறார்களே, so no problem. உங்கள் மகன் ராகுல் திருமண வரவேற்பில் முதல் பந்தியில் முதல் மூன்று ஆட்களாக நான், உமா மகேஸ்வரி, கீதா மூவரும் சாபிட்டோம். :))
பதிலளிநீக்குஎன் திருமணத்தில் தரையில் அமர்ந்துதான் சாப்பாடு! தரையில் அமர்ந்து சாப்பிடும் பந்திகளில் முன்னரே பரிமாறி வைக்க முடியாது என்பது கூடுதல் சிறப்பு!
நீக்குஎங்கள் இல்லத் திருமண விழாவில் முன்னரே பரிமாறி வைக்கவில்லை என்று நம்புகிறேன்! நான் வந்து பார்க்க முடியவில்லை. வந்தவர்களை கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது!
சரித்திர பிரஸித்தி பெற்ற கோவில்களுக்குச் செல்லும் போதெல்லாம் எனக்கும் கூட, "இங்குதான் அந்த ராஜா நின்றிருப்பாரோ?, அவருடன் ராணியும் வந்திருப்பாரா?" என்றும் தோன்றும். ஒவ்வொரு முறை ஸ்ரீரெங்கம் கோவிலுக்குச் செல்லும் போதும் அதன் துவஜஸ்தம்பத்திற்கு அருகில் நமகரிக்கும் பொழுது ஆண்டாளின் நினைவு வராமல் போகாது.
பதிலளிநீக்குஅதே... அதே... அந்த சிலிர்ப்புதான் எனக்கும்!
நீக்குபந்தி.. /வேண்டாதவற்றை தடுத்து நிறுத்தவும் முடியும்./ மிகச் சரி.
பதிலளிநீக்குகோயில் மணி, பிரகாரக் காட்சிகள்.. சரித்திரத்தின் சாட்சிகள்.
நியூஸ் ரூம் தொகுப்புக்கு நன்றி. சிறுமியின் தற்கொலை வருத்தம் அளிக்கிறது.
பதிவு நன்று.
நன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு.