சென்றவாரம் புளமங்கை என்று திருமுறைகளில் கூறப்படும் புள்ளமங்கை ஆடுதுறை நாதர் கோயில் வெளிப்பிரகார சிற்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதன் தொடர்ச்சி இந்த வாரம்.
இன்றைக்கு தஞ்சாவூர் என்று அழைக்கும் நிலப்பகுதிக்கு எவ்வாறு தஞ்சை என்று பெயர் வந்தது? எப்போதிலிருந்து அந்தப் பெயர் இருக்கிறது? பல்லவர் காலத்துக் கல்வெட்டு (சிராப்பள்ளி மலைக்கோட்டையில் இருக்கும் குடவரைக்கோயில்) ‘தஞ்சஹரக’ தஞ்சையை வென்றவன் என்று இருக்கிறது. அதனால் ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பே தஞ்சை என்ற பெயர் இருந்திருக்கவேண்டும்.
திவ்யப்பிரபந்தத்தில், பூதத்தாழ்வார் (முதலாழ்வார்களில் ஒருவர்) இரண்டாம் திருவந்தாதியில்,
“தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்” என்று குறிப்பிட்டிருக்கிறார். பூதத்தாழ்வார் 5-6 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கையாழ்வார்,
“வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி” என்று தன் பெரிய திருமொழியில் முதல் பத்திலேயே குறிப்பிட்டிருக்கிறார் (இதுதான் அவர் முதல் முதலாகச் சொல்லும் திவ்யதேசம்… குடந்தை என்ற வார்த்தை வரும் பாசுரத்தை விட்டுவிட்டால்)
அவரே, இரண்டாம் திருமொழி, ஐந்தாம் பத்தில், கடல் மல்லைத் தலசயனத்தைப் பற்றிப் பாடும்போது,
உடம்புருவில் மூன்றொன்றாய் மூர்த்தி வேறாய்
உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்று மேய்த்து
விளையாட வல்லானை, வரைமீகானில்
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கு ஓர் பெருநெறியை, வையம் காக்கும்
கடும்பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்;
கடிபொழில் சூழ் கடல் மல்லைத் தலசயனத்தே..
‘தஞ்சைக் கோயில்’ என்று தஞ்சாவூரைக் குறிப்பிடுகிறார்.
தஞ்சைப் பகுதியை ஆண்டவர்கள் முத்தரையர்கள். சோழர்களின் (சிற்றரசர்களாக இருந்தபோது) ஆரம்பகாலத் தலைநகரம் உறையூர் (முற்காலச் சோழர்கள் காலத்தில் பூம்புகார் தவிர, நிலப்பகுதியில் அமைந்திருந்த தலைநகரம் உறையூர். பிறகு பழையாறை அவர்களது தலைநகரமாயிற்று. அவர்கள் பல்லவ அரசனான கம்பவர்மனை வென்று (விஜயாலயச் சோழன்) சோழ அரசை ஸ்தாபித்து பிறகு தஞ்சைப் பகுதியை ஆண்டுகொண்டிருந்த முத்தரையர்களையும் வென்று தஞ்சையையும் சேர்த்து பெரிய சோழப் பிரதேசமாக ஆக்கியிருக்கவேண்டும் அப்படித்தான் பிற்காலச் சோழர்களின் உதயம் ஆரம்பமானது.
சிற்பங்களின் அழகை வியக்கும்போது, நாம் அந்த இடங்கள் தற்போது எப்படி இருக்கின்றன, அதைச் சீர் செய்யாவிட்டால் என்ன ஆகும் என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும் அல்லவா? படத்தில் உள்ளது அகழி அமைப்பில் உள்ள கோயில்.
இந்தக் கோயில் அகழி அமைப்புடைய கர்ப்பக்ரஹம். கீழ்ப்பகுதியில் கருங்கல் கட்டமைப்பையும் மேற்பகுதியில் சுதை அமைப்பையும் கொண்டுள்ளது. இதுபோன்ற அமைப்பைப் பல கோயில்களில் கண்டிருக்கிறேன். அதிலிருந்து, முதலில் கோயில் கட்டப்பட்டபோது இத்தகைய அகழி அமைப்புடைய கர்ப்பக்ரஹம் மற்றும் பிற்காலங்களில் அதனைச் சுற்றி உட்பிரகாரங்களும் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும் (பிற கோயில்களில்).
இங்குள்ள மஹிஷாசுரமர்த்தினி (துர்கை) தனிச் சிறப்புடைய சிற்பம். திருநாகேஸ்வரம், பட்டீஸ்வரம் மற்றும் புள்ளமங்கை ஆகிய மூன்று கோயில்களிலும் உள்ள துர்க்கை ஒரே சிற்பியால் வடிவமைக்கப்பட்டது என்றும் இவை மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது. இந்த துர்க்கை சிலை, கருங்கல் குடை நிழலில், எருமையின் தலைமீது நின்ற வடிவத்தில் உள்ளது. கரங்களில் சங்கு, சக்கரம், வாள், வில், கதை, சூலாயுதம், கேடயம், அங்குசம் முதலிய எட்டு ஆயுதங்கள் ஏந்தி, இருபுறமும் கலைமானும் சிங்கமும் கூடியதாக இருக்கிறது. இந்த துர்க்கையின் இருபுறமும் இரு வீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவது போன்றும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போன்றும் காட்சி விரிகிறது.
ஒவ்வொரு
பகுதியிலும் மிக அழகிய பெண் சிற்பங்கள். அங்க
அசைவுகள் மிக ஒயிலாக அமைந்துள்ளன. வசீகரமாகவும் விளங்கின. இதைப்போல
நான் லயித்துப் பார்த்த பெண் சிற்பங்கள் இராமசாமி கோயிலில் (கும்பகோணம்). ஆனால் அவை
சுமார் 550 ஆண்டுகளுக்கு முற்பட்டவையே. அவைகளை
நான் கண்டபோதும் ஒவ்வொரு சிலையின் முகபாவம் அதேபோன்று இருக்கிறதா அல்லது
வேறுபட்டிருக்கிறதா என்று உற்று நோக்கினேன். புகைப்படங்களும்
எடுத்தேன். அவையும் இந்தத் தொடரிலேயே வரும்.
எங்கும்
பூதகணங்கள். நம்மைப் பார்க்கிறார்கள்.
மகிஷாசுரமர்த்தினி. இவள் வரம்
வேண்டுபவர்களுக்கு வரத்தை அள்ளிக்கொடுப்பவள். இவளைப்போன்றே
இன்னும் இரண்டு தேவிகள் இருக்கின்றனர். ஒன்று
திருநாகேசுவரத்திலும், இன்னொன்று பட்டீஸ்வரத்திலும். இந்த
மூன்று துர்க்கை வடிவங்களையும் ஒரே சிற்பிதான் செதுக்கினான் எனச் சொல்கின்றனர்.
இராஜராஜ
சோழன் காலத்திற்கும் முற்பட்ட கல்வெட்டு எழுத்துகள்.
புள்ளமங்கை
கோயிலைச் சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஈசனை வழிபட மறக்கலாமா? இனி நாம் உள்ளே செல்லவேண்டியதுதான். அத்தனையும் அம்மையையும்
தரிசனம் செய்யாமல் இவ்வளவு நேரம் காலம் தாழ்த்திவிட்டோமே. குற்ற உணர்வுடன்
கோயிலுக்குள் செல்கிறோம்.
அடுத்த
பகுதியில் தொடர்வோம்.
(தொடரும்)
சிராப்பள்ளி மலைக்கோடை குடைவரைக்கோயில் - இது திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டைதானே?
பதிலளிநீக்குஅப்படினாக்க இது கூட ஒருகாலத்தில் சமணர்கள் இருந்தற்கான சான்றுகள் உள்ளனவோ? பக்கத்துலதானே சித்தன்னவாசல் எல்லாம் சமணர்கள் பயன்படுத்தியவை என்று சொல்லப்படுவதுண்டு.
மலைக்கோட்டை எப்பவோ பார்த்தது....
இது ரெண்டு பேரும் அதாவது பல்லவர் மற்றும் பாண்டியர் குடைவரை உள்ளது இல்லையா?
கீதா
வாங்க கீதா ரங்கன். நலமா? பயணமா?
நீக்குதிருச்சி மலைக்கோட்டை. அங்கு நான் இரண்டு குடைவரைப் பகுதியை இன்னும் நன்றாக்க் காணவேண்டியிருக்கிறது. பல்லவர் காலக் குடைவரைதான் முக்கியம்.
நெல்லை, பயணமா? எங்க? அட போங்க...வேலை...
நீக்குகீதா
எனக்கெல்லாம் இப்படிப் போய் எல்லாம் கண்டு சொல்ல ஆசை இருந்தாலும், நடக்காத விஷயம். தனியாகப் பிரயாணம் செய்தால் மட்டுமே சாத்தியம். எனக்குத் தைரியம் இருந்தாலும் ஆனால் அதற்கு வழி இல்லையே.
நீக்குகீதா
பூம்புஹார், உறையூர், பழையாறை எல்லாம் வாசிக்கும் போது சோழப் பேரரசு பற்றி எப்பவோ வாசித்த நினைவு வருகிறது.
பதிலளிநீக்குபாசுரத்தோடு விளக்கம் சூப்பர், நெல்லை
கீதா
உறையூரில் அந்த feel எனக்கு வரலை, மிகப் பழைய தலைநகராக இருந்தபோதும். ஆனால் பூம்புகார் மற்றும் பழையாறை அந்த உணர்வைக் கொடுத்தது.
நீக்குஉறையூர் ஒரு வேளை மணல் மாரியால் பாதிக்கப்பட்டதால் அதன் புனிதம் கெட்டிருக்குமோ? தெரியலை. ஆனால் அதென்னமோ தெரியலை, நானும், மாமாவும் உறையூரில் வெக்காளி அம்மன் தரிசனம் பல முறை செய்திருக்கோம். ஆனால் பக்கத்திலேயே இருக்கும் நாச்சியார் கோயிலுக்குப் போனதில்லை. எவ்வளவோ முயன்றோம் முடியலை. மணல்மாரியைத் தடுக்கவெனவே வெக்காளி அம்மன் திரும்பி உட்கார்ந்திருப்பாள். அந்தக் கோலத்திலேயே இப்போவும் காணப்படுவாள். நம் மனதில் உள்ள பிரார்த்தனையை அங்கே சீட்டில் எழுதி உண்டியலில் சேர்க்கும் வழக்கம் முன்னால் இருந்தது. இப்போத் தெரியலை.
நீக்குமதுரை அனல்மாரியால் அழிந்தது. புகார் புனல் மாரியால் அழிந்தது. பண்டைய மூவேந்தர் தலைநகரங்களும் இப்படித் தான் அழிந்து பட்டன.
நீக்குஎனக்கு உறையூர் செல்லும் ஆசையை ஏற்படுத்திவிட்டீர்கள். திருச்சி வை.கோ சார் பேத்தி கல்யாணத்துக்கு ஏப்ரலில் போகலாமா என்று திட்டம் போடுகிறேன், நடக்குமா என்று தெரியலை.
நீக்குசிற்பங்கள் பார்க்க அழகு ஆனால் சுற்றிலும் இப்படி இருப்பது மனதிற்கு வேதனையாக இருக்கிறது.
பதிலளிநீக்குஇந்த அகழிகள் எல்லாம் ஒன்று பாதுகாப்பிற்கு மற்றொன்று மிகப் பெரிய பொறியியல் concept.
சுற்றிலும் நீர் இருப்பது இப்படியான மிகவும் கனமான கற்கள் கொண்டு எழுப்பியிருப்பவற்றிற்கு வறண்ட காலத்திலும் ஈரத்தன்மை பாதுகாப்பாக இருக்கும் என்ற நோக்கில்.
அவை எல்லாம் பாதுகாக்கப்படலை என்பதால்தான் இப்படியான கோயில்களில் விரிசல்கள் சிதைவுகள் எல்லாம்.
கீதா
கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்கணும். அப்போதுதான் கோயில் பாதுகாப்பாகவும் சுத்தமானதாகவும் இருக்கும்.
நீக்குஅதன் பிறகு அறநிலையத்துறை வந்து பெயின்ட் அடித்து பிரசாத ஸ்டால் போடுவாங்க.
ஏன் யாரும் வருவதில்லை? காரணம்? இப்ப வந்த கோயில்களில் கூட்டம் அதிகம் இருக்கிறதே!
நீக்குஓரு ஜோசியரைக் கொண்டு, இந்தக் கோயிலுக்குப் போனா இந்த பாக்கியம் கிடைக்கும் அந்த பாக்கியம் கிடைக்கும்னு ஒரு ஜோஸ்யம் சொல்லச் சொன்னாப் போச்சு...இல்லைனா யாராவது ஒருவர் சொன்னா போச்சு...விஷயம் காட்டுத் தீ போலப் பரவி கூட்டம் அள்ளாது?!!!!!!!!
கீதா
பெரும்பான்மையோர் பக்தி என்பது இப்படி ஆகிப் போனதால் சொன்னேன்
நீக்குகீதா
மக்களுக்கு ஏதேனும் பலன் இருக்கு என்று தெரியணும். அப்போதான் கோயில்களுக்குப் போவாங்க. பிரதோஷம் அன்று மாலை நரசிம்மருக்கு மாலை சார்த்தி வேண்டணும் என்ற செய்தி வந்தப்பறம் அந்தச் சன்னிதிக்கு கூட்டம் வருது. சந்தான கோபால கிருஷ்ணரை மடியில் வைத்துக்கொண்டு பிரார்த்தித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால் கும்பகோணம் சுற்றியுள்ள அனேகமா எல்லாக் கோயில்களிலும் சந்தான கோபால கிருஷ்ணரை வைத்துள்ளார்கள். ஜோஸ்யர்கள் சொல்லி கோயில்களில் கூட்டம் அதிகமாவது உண்மை.
நீக்குஎல்லாப் பெருமாள் கோயில்களிலும் சந்தான கோபால கிருஷ்ணன் விக்ரஹம் கட்டாயமாய் இருக்கும் நெல்லை. மூலஸ்தானத்திலேயே வைச்சிருப்பாங்க. நாம் கேட்டுக் கொண்டால் அதை எடுத்து வந்து தம்பதிகள் கைகளில் கொடுத்து மனைவியை மடியில் வைச்சுக்கச் சொல்லிப்பூஜை செய்வாங்க. எங்க பையருக்கும், மாட்டுப்பெண்ணிற்கும் நாலைந்து பெருமாள் கோயில் சந்தான கோபால கிருஷ்ணனை வைச்சு இந்த வழிபாட்டைச் செய்திருக்கோம். அதைத் தவிர்த்து வீட்டிலேயே ருக், யஜூர், சாமம் 3 வேதங்களின் பண்டிதர்களை வைச்சுப் புத்ரகாமேஷ்டி ஜபம் பண்ணி இருக்கோம். ஒவ்வொரு வேதத்திற்கும் 10 பேர், மொத்தம் 30 பண்டிதர்கள். அவர்களில் வைணவர்களும் இருந்தார்கள். மறுப்பு ஏதும் சொல்லாமல் எங்க வீட்டில் சாப்பிடவும் செய்தார்கள். ஸ்ரீமுஷ்ணம் வராஹப் பெருமாள் சந்நிதியில் சந்தான கோபால கிருஷ்ணர் அழகோ அழகு. இதைத் தவிர தொட்டமளூர் கூட்டிண்டு போய் அங்கேயும் வழிபாடு செய்திருக்கோம். தொட்டமளூருக்கு மட்டும் 3 தாம் போனோம். எஙக பூர்விக ஊரான பரவாக்கரை வேங்கடநாதப் பெருமாள் கோயிலிலும் சந்தான கோபால கிருஷ்ணர் இருந்தார்.
நீக்குதொட்டமளூரில் நானும் என் தம்பிக்காக வேண்டியிருக்கேன். ஜபம் பண்ண வருபவர்கள், அந்த வீட்டில் நியமனம் நல்லா இருக்கு என்று தோன்றினால் சாப்பிடுவாங்க. எங்க வீட்டிலேயே விசேஷங்களுக்கு வரும் சில வாத்தியார், கோயில்ல கைங்கர்யம் பண்ணறாங்கன்னா, சாப்பிட மாட்டாங்க. பால் மாத்திரம்தான் சாப்பிடுவாங்க.
நீக்குசந்தானகோபால கிருஷ்ணர் எல்லா கோயில்களிலும் இருக்காங்களா? அது புதிதாக வந்த செயல்னு நினைத்தேன் கீசா மேடம்.
இப்படி நீர் நிலைகள் சுற்றி உருவாக்கப்பட்டதன் மற்றொரு காரணம் நிலத்தடி நீர் எப்போதும் வறண்டு போகாமல் இருக்கத்தான். அதுவும் தமிழ்நாட்டுப் பகுதியில் பெரும்பான்மை நிலத்தடியில் பாறைகள் அதிகமான அதாவது தக்காண பீட பூமி....
பதிலளிநீக்குநிலத்தடி நீர் உறிஞ்சப்பட உறிஞ்சப்பட, நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகள் எனும் லிஸ்டில் சேர்ந்துவிடும்.
கீதா
நீரின்றி அமையாது உலகம்.
நீக்குதிருமலை கோயிலிலும் மூலஸ்தானத்தைச் சுற்றி இதே அமைப்பு உள்ளது. திருமஞ்ச தீர்த்தத்தை உடனேயே உறிஞ்சி வெளியேற்ற அங்கு மோட்டார் பம்ப் வைத்திருப்பதையும் பார்த்தேன்.
ஓ ...இது இப்பதான் தெரிந்து கொள்கிறேன், நெல்லை.
நீக்குதிருமலை இருப்பது மலைப்பகுதி இல்லையா.
இப்படி இன்னும் பல கோயில்களில் இருக்கின்றன என்பதும் தெரிகிறது. கொஞ்சம் இணையத்தில் பார்த்தேன் நெல்லை. அது பாதுகாப்பிற்காக பின்ன பல வருஷங்கள் கோயில்கள் நிலைத்திருக்க வேண்டும் இல்லையா.
கீதா
ஒரு படத்தில் நடுவில் தென்னை மரம் தெரிவது அந்தக் கோணம் ரொம்ப அழகா இருக்கு...என்னவோ சிற்பங்களின் நடுவில் இருப்பது போன்று
பதிலளிநீக்கு6 வது படத்தில் ஒரு சிற்பம் பறப்பது போல் கால்கள் மடிந்து இருப்பது....அது என்ன சிற்பம் வித்தியாசமாக இருக்கு
7 வது படத்தில் இடப்புறம் (நாம் பார்க்கும் போது) தாங்கி நிற்பவர் என்னவோ அப்பகுதி உடைந்து கீழ விழுந்திடாம இருக்கணும்னு தாங்கி நிற்பது போல இருக்கிறது. அந்த நுனிப்பகுதி கொஞ்சம் உடைந்து அல்லது விரிந்து உசந்து இருப்பது போன்று இருக்கு
கீதா
தென்னைமரம் பின்னணி இத்தகைய கோயில் படங்களை அழகுற அமையச்செய்துவிடுகிறது.
நீக்குபிரமன் ஈசனின் முடியைக் காண முயல்கிறான்.
தாங்கி இருக்கும் சிற்பம் பல இடங்களில் கோபுரத்தில் இந்தக் கோயிலில் உள்ளது.
தாங்கி நிற்கும் சிற்பம் தெரிகிறது நெல்லை.....அந்த இடத்தில் மட்டும் அந்த நுனி அப்படி கொஞ்சம் தூக்கிட்டு இருக்கு ஸோ அப்படித் தோன்றியது
நீக்குஓ அந்தச் சிற்பம் பிரமன் ஈசனின் முடியைக் காண முயலும் சிற்பமா...தெரிந்து கொண்டேன்.
கீதா
பத்தாவது படத்தில் இருக்கும் பெண் சிற்பம் கையை வைத்திருப்பது - "இங்க பாருங்க.....நான் என்ன சொல்ல வரேன்னா....புரிஞ்சுக்கோங்க. ரொம்பக் கஷ்டப்பட்டு கட்டியிருககங்க. கொஞ்சம் பராமரிப்பங்கப்பா" ஹாஹாஹா
பதிலளிநீக்குகீதா
அழகான நர்த்தன நிலையை, இப்படிச் சொல்லுவதாக்க் கற்பனை செய்துட்டீங்களே. நீங்க அங்க போகும்போது அவள் இறங்கி வந்து உங்கள்ட சண்டை போடாமல் இருந்தால் சரிதான்.
நீக்குதெரியுது நெல்லை...அது ஒரு அழகான நடன முத்திரை என்று....சும்மா ரொம்ப சீரியஸா இல்லாம....
நீக்குபின்ன பராமரிக்கவும் வேணும்ல...
கீதா
முருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா. வாங்க துரை செல்வராஜு சார்.
நீக்கு///அதன் பிறகு
பதிலளிநீக்குஅறநிலையத்துறை வந்து
பெயின்ட் அடித்து பிரசாத ஸ்டால்
போடுவாங்க..///
பெரிய உண்டியலும்
வைப்பார்கள்!..
இல்லை. முதலிலேயே உண்டியல் வைத்தாகிவிட்டது.
நீக்குதஞ்சை என்ற பெயர்
பதிலளிநீக்குதேடல் அற்புதம்...
நன்றி துரை செல்வராஜு சார்.
நீக்குஅழகான படங்கள்
பதிலளிநீக்குசிறப்பான தகவல்கள்...
நெல்லை அவர்களுக்கு நன்றி
மிக்க நன்றி
நீக்குதஞ்சை என்ற பெயர்
பதிலளிநீக்குதேடல் விவரங்கள் அற்புதம்...
ஒவ்வொரு ஊரின் பெயரும் எப்போதிலிருந்து இருக்கிறது, எப்போது மாறியது எனக் கண்டுபிடிக்க முயலும்போது நிறைய தெரிந்துகொள்ள முடிகிறது.
நீக்குபுள்ளமங்கை
பதிலளிநீக்குஆலந்துறையார் கோயில்:..
ஆமாம். எதனால் ஆடுதுறையார் என எழுதியிருக்கிறேன் என்று பார்க்கணும். பார்த்து நிச்சயம் சொல்கிறேன்.
நீக்குஒவ்வொரு பகுதியிலும் மிக அழகிய பெண் சிற்பங்கள். அங்க அசைவுகள் மிக ஒயிலாக அமைந்துள்ளன. வசீகரமாகவும் விளங்கின.//
பதிலளிநீக்குஆமாம். ரொம்ப ஒயிலாக இருக்கின்றன. இந்த விளக்கத்தின் மேலுள்ள படத்தில் உள்ள பெண் சிற்பம்...."அட ஒதுங்குங்கப்பா....வழிவிடுங்க...நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க..." !!!!!!!!!!!!!!!!
கீதா
ஹா ஹா ஹா. பெண்களின் சிற்பம் ரசிக்கும்படி இருக்கும் என்பதும் உண்மை.
நீக்குகர்பக்கிரஹத்தைச் சுற்றி அகழி இருப்பது என்பதும் நான் மேலே சொல்லியிருப்பது போல என்றே தோன்றுகிறது. அறிவியல்படி....
பதிலளிநீக்குகீதா
திருமஞ்சன தீர்த்தம் வெளியேறவேண்டும். கர்பக் கிரஹத்துக்கும், உட் பிரகாரத்திற்கும் இடைவெளி இருக்கணும். மழை பெய்தால் தண்ணீர் உள்வாங்கிக்கொண்டு வெளியேற.. என்று பல காரணங்கள்
நீக்குபூதகணங்கள் - செக்யூரிட்டி கார்ட்ஸ்ங்கோ....அதான் மக்கள் ஒழுங்கா சிதைக்காம தொடாம பார்க்கறோமான்னு பார்த்துட்டுருக்காங்க போல!!!!ன
பதிலளிநீக்குசில இடங்களில் இங்கு எழுதி வைச்சிருக்காங்க. சிற்பங்களைத் தொடாமல் பார்க்க வேண்டும் என்று.
கீதா
பூத கணங்களை செக்யூரிட்டி கார்ட்ஸ் ரேஞ்சுக்குக் கொண்டுபோயிட்டீங்களே. சிற்பங்களைத் தொடக்கூடாது உண்மை. குழந்தை அழகாச் சிரிச்சதுன்னா, கிள்ளிப் பார்ப்பாங்களா? நம் செல்வத்தை நாம் மதிப்புடன் நடத்தணும்
நீக்குநெல்லை நீங்க விவரித்திருக்கும் துர்கை வடிவம் எங்க? ஒரு வேளை நான் கவனிக்கலையோ? மகிஷாசுரமர்த்தினி தெரியுது அதற்கும் மேலே நீங்கள் விவரித்திருக்கும் துர்கை வடிவம்...
பதிலளிநீக்குசிற்பங்கள் வெகு அழகு. ராஜ ராஜ சோழன் காலத்துக்கும் முற்பட்ட கல்வெட்டு எழுத்துகள் வித்தியாசம் தெரிகிறது
கீதா
Nellai says that Mahishasura mardhini only. Actually she is Vishnu Durgai.
நீக்குஓ ஓகே அக்கா புரிந்தது.
நீக்குகீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ஞாயிறு பயணமா இன்று?
நீக்குஇன்று எங்கேயும் பயணமில்லை. சென்ற மாதம் வரை நல்ல குளிரில் கூட சனி, ஞாயிறன்று சில பயணங்கள் அமைந்தன. எங்கள் குழந்தைகள் கிளம்(ப்)பினால்தான் எனக்கும் இந்த கோவில், மால், ஊர் சுற்றுவது போன்ற பயணங்கள் கிடைக்கும். இல்லையென்றால், வீடே சுவர்க்கம். "கடவ கைலாசம். வாயிலி வைகுண்டம்" என இருக்க வேண்டியதுதான்.:))
நீக்குஹாஹாஹா நெல்லை...நீங்க கால்ல நாலு சக்கரம் எட்டுச் சக்கரம்னு கட்டிட்டு போயிட்டே இருக்கீங்கன்னா எங்க எல்லாரையும் கேக்கறீங்களே!!!!
நீக்குநேத்து சனி நீராடி லேட்டு இன்று?
கீதா
கமலா ஹரிஹரன் மேடம் (இனி எல்லார் பேரையும் சுருக்கி தட்டச்சு செய்யவேண்டியதுதான்).... இனி வெயில் வர ஆரம்பித்துவிட்டது. அதனால் பயணங்கள் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்-அதாவது சனி ஞாயிறு வெளியில் செல்வது.
நீக்குகீதா ரங்கன்... ஞாயிறு மாத்திரம் யோகா கிடையாது. அதனால் இன்று 6 3/4க்குத்தான் எழுந்தேன். பிறகு 10 கிமீ நடை. நெடிய சுதர்ஷன் க்ரியா-75 நிமிடங்கள். அப்புறம் நீச்சல் (நாளை கிடையாது). பிறகுதான் அதாவது 1 மணிக்குத்தான் தோசை, டிஃபன் சாம்பார், தேங்காய் சட்னி சாப்பிட்டேன். டயட்டுல இருக்கேனாமாம்.
நீக்குகொஞ்சம் பிஸியா, 12-1 மணி வரை என்னை வைத்துக்கொள்கிறேன். பிறகுதான் தளங்களுக்கு வரணும். ஆனால் பாருங்க, அடுத்த ஞாயிறு பதிவுகளுக்காக எழுத ஆரம்பித்தால், அதிலேயே 3-4 மணி நேரம் போய்விடுகிறது.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய ஞாயிறு பதிவு அருமை. தஞ்சை என்று பெயர் வர குறித்த காரணமும், பாடல்களும் படிக்க நன்றாக இருந்தன. சோழர்களின் ஆட்சி விரிவு பெற்ற வரலாறும் முன்பு படித்ததுதான்./ ஆனால் மறந்ததுந்தான். நீங்கள் இப்போது நினைவூட்டியமைக்கும் உங்கள் கடின ஆராய்ச்சிக்கும் நன்றி.
கோவில் சிற்பங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. நீங்களும் அவைகளைப்பற்றிய சிறப்பான தகவல்களை எழுதியுள்ளீர்கள். படங்கள் எடுத்த கோணங்கள் அனைத்தையும் பார்த்து ரசித்தேன். மகிஷாசுரமர்த்தினி சிற்பம் குறித்தும் (இது மூன்று கோவிலிலும் ஒரே சிற்பித்தான் செதுக்கி வடிவமைத்தார் என்பது) உங்கள் பதிவின் மூலம்தான் முன்பு பிடித்துள்ளதாக நினைக்கிறேன். மிகவும் அழகாகவும், தெளிவாகவும் கருணையே வடிவமாகவும் அம்மன் காட்சித் தருகிறார். தரிசித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி க.ஹ.மேடம்... இனி வாரத் தொடரில் ஏதாவது ஒரு தெய்வ தரிசனத்தைக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம்
நீக்குபூதத்தாழ்வார் அருளிய பாசுர பகிர்வில் தஞ்சை கோயிலை குறிப்பிடுவது
பதிலளிநீக்குஅருமை. பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி.
புள்ளமங்கை கோயில் சிற்பங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது.
துர்க்கையை வணங்கி கொண்டேன்.பட்டீஸ்வரத்தில் உள்ளது போல தான் இருக்கிறது. ஒரே சிறிபி என்று தெரிந்து கொண்டேன்.
நடன மங்கையர் தூணில் அழகாய் இருக்கிறார்கள்.
புள்ளமங்கை கோயிலை சுற்றி காட்டி விட்டீர்கள். உள்ளே இறைவனை தரிசிக்க முடிந்தால் மகிழ்ச்சி.
பூம்புகார் போனீர்களா? திருவெண்காடு போனீர்களா? திருவெண்காடு கோயில் துர்க்கை அவ்வளவு அழகாய் இருக்கும்.
வாங்க கோமதி அரசு மேடம். பூம்புகார் சென்றிருக்கிறேன். திருவெண்காடு சென்ற நினைவு இல்லை. போகணும். எத்தனை கோயில்களைத் தரிசிக்க வேண்டியிருக்கிறது என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. புள்ளமங்கையில் இறைவன் தரிசனம் கிடைத்தது.
நீக்குநீங்கள் சொன்ன மூன்று கோயில்களின் மஹிஷாசுர மர்த்தினி (துர்கை) யைப் பார்த்திருக்கேன். பட்டீஸ்வரம் துர்கை இவர்கள் இருவரையும் விட மிக உயரம் எனத் தோன்றுகிறது. இப்போதைய நாட்களின் கோயிலின் முக்கிய வாசலே துர்கை இருக்குமிடத்தில் ஆரம்பித்திருக்கிறது. எல்லாச் சிற்பங்களையும் ரசித்துப் பார்த்தாலும் மனம் ஒன்றவில்லை. காலை முதல் எச்சரிக்கைச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நிலைமை சீராகும் எனச் சொன்னார்கள். ஆனால் நிலைமை மாறவில்லை போல் தெரிகிறது. பின்னர் வரேன்.
பதிலளிநீக்குNot Pullamangai. I am sorry. :(
நீக்குவாங்க கீதா சாம்பசிவம். நான் கல்ஃப் தேசங்களில் 25 ஆண்டுகாலம் வாழ்ந்திருக்கிறேன். எச்சரிக்கைச் செய்திகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். கல்ஃப் தேசங்களில் அமெரிக்க ராணுவ முகாம்கள் உண்டு. மிகுந்த பாதுகாப்பான பிரதேசங்கள் அவை. அதனால் நீங்கள் கவலைகொள்ளவேண்டாம். தற்போது நடப்பவற்றை தீபாவளி பட்டாசு போல என்று நினைத்துக்கொள்ளுங்கள். பரவாது, பெரும் பிரச்சனைகளைக் கொண்டுவராது. அராபிய பிரதேசங்களை மீடியேஷனுக்குக் கூப்பிடும் முயற்சி அவை.
நீக்குகீதா சாம்பசிவம் மேடம் (இந்த மேடம் வார்த்தை எப்படி விட்டுப்போனது என்று யோசிக்கிறேன். உங்க கவலையைக் கண்டதும் உடனே எழுத ஆரம்பித்தேன்) தேனுபுரீஸ்வரர் கோயிலையும் தரிசித்திருக்கிறேன், சில தடவைகள். அருமையான கோயில். ஆனால் பாருங்க பட்டீஸ்வரம் என்றாலே அந்தக் கோயிலின் ஒரு சந்நிதியான துர்க்கை சன்னிதிக்குத்தான் அதிக கூட்டம். எத்தனைபேர் தேனுபுரீஸ்வரரை தரிசனம் செய்யாமல் சென்றுவிடுகிறார்களோ.
நீக்குவளைகுடா நாடுகள்
பதிலளிநீக்குஅமைதியில் வாழ
ட்டும்..
வேலை தேடிச் சென்ற
மக்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கட்டும்..
வளைகுடா நாடுகள் அமைதியாகத்தான் இருக்கும் துரை செல்வராஜு சார்... அங்குள்ளவர்கள் எப்போதுமே மகிழ்ச்சியாகத்தான் இருப்பார்கள், உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து பிழைக்க வந்தவர்கள்.
நீக்குஒரு தடவை நம்ம பசிதம்பரம், இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதியைத் தடை செய்தவுடன், கொஞ்சம் பயந்துகொண்டு, 100 கிலோக்கும் மேல் (7-8 மூட்டை) அரிசியை வாங்கி ஸ்டாக் செய்தேன், கொஞ்சம் அதிக பணம் கொடுத்து. பிறகுதான் உணர்ந்தேன், இந்தியா இல்லைனா பாகிஸ்தானிலிருந்து அரிசி, பாஸ்மதி ஏகப்பட்டது வரும், அதனால் பயந்திருக்க வேண்டியதில்லை என்று. அங்குள்ள அரசாங்கங்கள் தகுந்த நடவடிக்கைகளை உடனே எடுத்துவிடும்.
பெற்றெடுத்த நெஞ்சங்கள் இங்கே
பதிலளிநீக்குதவிக்கின்றன...
அது சஞ்சலத்தினால் ஏற்படுவது. யாருக்கும் எதுவும் ஆகாது என்பதே என் நம்பிக்கை
நீக்குநேற்றில் இருந்து எச்சரிக்கைச் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இன்று வேலை நாள் இந்த மாதத்தின் முதல் நாள் தொடங்கியிருந்தாலும் வீட்டிலிருந்து வேலை, குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள்னு வைச்சிருந்தாங்க. இப்போ வேலை மட்டும் வீட்டிலிருந்து செய்யறார் எங்க பையர். குழந்தைகளுக்குப் பள்ளி விடுமுறைனு அறிவிச்சிருக்காங்க. காலை ஏழரை எட்டு மணி போல ஒரு அலார்ம் வந்தது. பின்னர் ஏதும் இல்லை.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குபட்டீஸ்வரம் துர்க்கையின்
பதிலளிநீக்குகையில் கிளி இருக்கும்...
கடந்த இரண்டு பயணங்களில் பட்டீஸ்வரம் செல்லவில்லை. வரும் 20ம் தேதி போகப்பார்க்கணும்.
நீக்குஅப்படியா? சில வருடங்கள் ஆகிவிட்டபடியால் நினைவில் இல்லை. ஆனாலும் 2, 3 முறைகளுக்கும் மேலே போயிருக்கோம். வேண்டுத;ல் நிறைவேற்றவே 2 தரம் போனோம்.
நீக்குபட்டீஸ்வரம் துர்க்கை, பைரவர்
பதிலளிநீக்குதிருமேனிகள் பழையாறை சிதைவில்
இருந்து மீட்கப்பட்டவை..
அப்படியா? நான் நினைத்தேன், தேனுபுரீஸ்வரர் ஆலயத்தின் ஒரு சந்நிதியிலிருந்து கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள் என்று.
நீக்குதஞ்சையை பற்றி ஆழ்வார்கள் பாடியிருப்பது சிறப்பு எனினும் தஞ்சையின் தஞ்சை என்பதிற்க்கான பெயர்க்காரணம் கிடைக்கவில்லையே?
பதிலளிநீக்குஉங்களுக்கு கோழியூர் தெரியும் என்று நினைக்கிறேன்
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார்... தஞ்சையின் பெயர்க்காரணம்... பார்க்கிறேன். கோழியூர் என்பது முற்காலச் சோழர்களின் தலைநகரமாக இருந்தது. பிறகு அதன் பெயர் உறையூர் என்று ஆகிவிட்டது. கோழியூர் என்ற பெயர்க்காரணம், கோழி, யானையுடன் வீரத்துடன் சண்டையிட முயன்றது என்று நினைவு. கரிகால் பெருவளத்தான் காலம்.
நீக்குதஞ்சாசுரன் வதம் நடந்த காரணத்தால் தஞ்சாவூர் எனப் பெயரிட்டு அழைப்பதாகச் சொல்லுவார்கள்.
பதிலளிநீக்குஇதுவும் இன்னும் சில காரணங்களும் சொல்வார்கள் கீசா மேடம். தண்+செய் என்று புனைந்து ஒரு காரணத்தையும் பார்த்தேன். வயல்களினால் குளிச்சியாக இருக்கும் ஊராம் (ஆமாம் அப்போ தஞ்சாவுர்ல ஏசி விற்காதுன்னு சொல்லுங்க)
நீக்குதஞ்சை பெயர் காரணம் அறிந்தோம்.
பதிலளிநீக்குசிலைகளும் படங்களும் விவரிப்புகளும் நன்று.
பெண்சிலைகள் ஆச்சரியப்படும் வகை கவிநயத்துடன் செதுக்கப்பட்டு இருக்கின்றன.
பராமரிப்பு குறைந்து இருப்பதுதான் கவலை கொள்ள வைக்கிறது.
வாங்க மாதேவி அவர்கள். பதிவை ரசித்தமைக்கு நன்றி
நீக்குWhere is Sriram?
பதிலளிநீக்குஸ்ரீராம் இப்போல்லாம் ரொம்பவே பிஸி. அவருக்கே தோணும், ஏண்டாப்பா நிறைய தினங்களில் ஸ்டாண்டர்ட் பதிவை மாத்தி புதுசு புதுசாக மாத்தினதால், அனேகமா செவ்வாய், சனி, ஞாயிறு தவிர மத்த நாளெல்லாம் அவர்தானே பதில் சொல்லணும்? (புதனில் கேஜிஜி வரலைனா)
நீக்கு/// அப்படியா? நான் நினைத்தேன், தேனுபுரீஸ்வரர் ஆலயத்தின் ஒரு சந்நிதியிலிருந்து கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள் என்று.... ///
பதிலளிநீக்குகோவிந்த தீக்ஷிதர் முயற்சியால் உருவானதே தேனுபுரீஸ்வரர் கோயிலில் தனித்து விளங்குகின்ற துர்க்கையின் சந்நிதி...
அப்படியா துரை செல்வராஜு சார்? கோவிந்த தீக்ஷிதர்தான் கும்பகோணம் ராமசாமி கோயிலையும் அதற்கு எதிரில் உள்ள பெரிய கடை வீதியையும் உருவாக்கியவர்.
நீக்கு