திருஞானசம்பந்தர் அல்லியங்கோதை அம்பாள் சமேத ஸ்ரீ ஆலந்துறை நாதரை, ‘பாலுந்துறுதிரளாயின’ பதிகத்தால் பாடியிருப்பதைப் பார்த்தோம். மகேந்திரபல்லவன் காலத்தில்தான் அப்பர் (திருநாவுக்கரசர்) சுவாமிகள் வாழ்ந்தார். அவர் காலத்தில்தான் திருஞானசம்பந்தர் சிறு பிள்ளை. 9ம் நூற்றாண்டில் முதல் பராந்தக சோழன் காலத்தில் புள்ளமங்கை கோயில் கற்றளி ஆனது. அதற்கு முன்னால் இருந்த கோயிலுக்கு திருஞானசம்பந்தர் வந்து தரிசித்து இந்தப் பதிகம் இயற்றியிருக்கவேண்டும்.
விமானத்தின் கீழ், கருவறையின் வெளிப்புறச் சுவற்றில் லிங்கோத்பவர்.
லிங்கோத்பவருக்கு இரு புறமும் விஷ்ணு மற்றும் பிரமன்(?). இன்று செதுக்கியது போன்ற அழகு. இந்த மாதிரி சிற்பத்தின் முகங்களை மாதிரியாக வைத்துத்தான் கல்கியின் நாவல்களுக்கு மணியம் அவர்கள் ஓவியம் வரைந்திருப்பார்.
அரை அடிக்கும் குறைவான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிற்பத்தைப் பெரிதுபடுத்திக் காண்பித்துள்ளேன். அழகு குறையவில்லை.
கோவிலின் அடிப்பகுதியைத் தாங்குகின்ற பூதகணங்கள்.
சௌந்திர நாயகி அம்மன்.
நால்வர்
அணி. சைவ சமயக் குரவர்கள்
துவாரபாலகர்கள்.
துவாரபாலகர்களுடன் கூடிய முன் மண்டபம். எல்லா ஆலயங்களிலும் இந்த மாதிரி ஒரு இடத்தை 2 ரூபாய் விளக்கு வைப்பவர்களுக்காக ஒதுக்கிவிடுகிறார்கள். 2 ரூபாய் விளக்கு என்று அலட்சியமாகச் சொல்லவில்லை, ஆனால் ஆலயத்துக்கு விளக்குக்காக எண்ணெய், திரி முதலியன தந்தால் உபயோகம். சும்மா இந்த மாதிரி விளக்கை ஏற்றிவைப்பதில் என்ன பிரயோசனம் இருக்க முடியும்? இதனால் மற்றவர்களுக்கும் ஆலயத்திற்கும் இடைஞ்சல்தான். அதனால்தான் வேறு வழியில்லாமல் எல்லா ஆலயங்களிலும் ஒதுக்குப்புறமான இட த்தில் ஒரு டேபிளைப் போட்டு, இங்கே விளக்கேற்றுங்கள் என்று சொல்லிடறாங்க. பக்தர்களும் புண்ணியத்தை பக்கெட்டில் எடுத்துக்கொண்டு போகும் சந்தோஷத்துடன் 2 ரூபாய் விளக்கை ஏற்றுகிறார்கள். இதனால் யார் பயன் பெறுவார்கள்?
உன் தரிசனமன்றி வேறு
என்ன வேண்டும்?
அர்த்த மண்டபத்தின் விதானத்தில் வெளியே பார்த்தது போலே உள்ள சிற்பங்கள்.
கருவறை, அதற்கு முன் இருக்கும் மண்டபத்தின் தற்போதைய தோற்றம். விதானத்தில் இருக்கும் ஓவியம் பிற்காலத்தையது.
கோயிலின் மண்டபத்துக்கு வெளியே ஒரு சிறிய அறை போன்று உள்ளது. இதைத்தான் அந்தக்காலத்தில் மடப்பள்ளியாக அமைந்திருந்தனர். அது மிகவும் பழுதுபட்டிருந்தது. வௌவால்களின் குடில் போல எனக்குத் தோற்றம் தந்தது. அதிலும் சில சிற்பங்கள் கிடத்திவைக்கப்பட்டிருந்தன. அவைகளின் படங்கள் கீழே.
தேவியரின் சிற்பங்கள் மிக அழகு. ஆனால் அவை எங்கு வைக்கப்பட்டிருந்தனவோ.
அந்தக் கோயிலில் சிறிய போஸ்டரில் எழுதியிருந்தது, இரவு படுக்கும் முன் கீழுள்ள பாசுரத்தைச் சொல்லிவிட்டுப் படுக்கவேண்டும் என்று.
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின்னஞ்சழுத்தைக்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப்பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே
இது பட்டினத்தார் இயற்றிய திரு ஏகம்பமாலையில் வரும் பாசுரம். ஈசனுடைய ‘நமசிவாய’ என்ற திருநாமத்தைக் கல்லாத, கருதாத, கசிந்துருகி உருகாத, நினையாத, சொல்லாத, துதியாத, தொழாத மற்றும் எல்லாப் பிழையையும் பொருத்தருள்வாய் கச்சி ஏகாம்பரநாதனே என்பது பாசுரத்தின் பொருள்.
ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட (கற்றளியாக) புள்ளமங்கைக் கோயிலையும் அதன் சிற்பங்களையும் முழுமையாகப் பார்த்துவிட்டோம் என்ற மகிழ்வுடன் அங்கிருந்து கிளம்பினோம். மீண்டும் இங்கு வருவோமா என்ற சந்தேகம் மனதில் எழுந்தது. இந்தக் கோயிலின் பெருமையையை பெரிய பதாகையில் அனைவரும் சுலபமாகப் புரிந்துகொள்ளுமாறு எழுதிவைத்தால், அல்லது சிறு கையேடு விற்பனை செய்தால் பார்ப்பவர்களும் புரிந்துகொண்டு சிற்பங்களின் சிறப்பை அனுபவிக்குமாறு இருக்குமே என்று தோன்றியது.
ஆனாலும் இது ஒரு பாடல் பெற்ற திருத்தலம் என்பதையும் நம் நினைவில் வைக்கவேண்டும்.
இங்கு இறைவன் பிரம்மபுரீஸ்வரர். அவரைத் தொழுதுவிட்டு அந்த இடத்தைவிட்டுச் சென்றோம். சோழர் காலத்தைய கோயில்கள் அனைத்தையும் தொகுத்து வழங்குவது என்பது இயலாத காரியம். ஆனால் சோழர் வரலாற்றிலேயே மிக முக்கிய மூன்று கோயில்களில், இராஜராஜ சோழனின் தஞ்சை பெருவுடையார் கோயிலைப் பார்த்தோம். அதற்கு முன்பு சாளுக்கிய சோழ வம்ச அரசனின் தாராசுரம் ஐராவதீஸ்வரர் தெய்வநாயகி அம்மை கோயில்களைக் கண்டுகளித்தோம். இடையில் சோழ சாம்ராஜ்யத்தை உச்சத்துக்குக் கொண்டு சென்ற கங்கைகொண்ட சோழன் இராஜேந்திரனின் கங்கைகொண்ட சோழீச்வரத்தை மாத்திரம் காணாமல் போகமுடியுமா? அதை பிறகு பார்ப்போம்.
- - - - - - - - - - - - - - - -
லிங்கோத்பவருக்கு இரு புறமும் இருக்கும் ப்ரம்மா விஷ்ணு சிற்பங்கள் கொள்ளை அழகு!
பதிலளிநீக்குவாங்க சூர்யா சார்... ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் பொலிவோடு இருக்கின்றன. லிங்கோத்பவரைப் பெரிதுபடுத்திப் பார்த்தால் முடியைத் தேடும் பிரம்மா, அடியைத் தேடும் வராகமூர்த்தியைக் காணலாம்.
நீக்கு/நால்வர் அணி. சைவ சமயக் குரவர்கள்/
பதிலளிநீக்குஉங்களுக்கு ரொம்பவே குறும்புதான் நெல்லை.....சைவ சமயக் குரவர்களை "நால்வர் அணி" என்றா அழைக்க வேண்டும்? "நால்வர் அணி" என்றால் எனக்கு ஞாபகம் வருவதெல்லாம் நாவலர், பண்ருட்டியார், திருநாவுக்கரசு, காளிமுத்து சேர்ந்து ஜெயலலிதாவுக்கு எதிராக அணி திரண்டதுதான் 😃
ஹா ஹா ஹா.. அவர்கள் அணி சேர்ந்தது ஈசனோடு ஐக்கியமாக. இவர்கள் அணி சேர்ந்தது அதிகாரம் பணம் சுருட்ட.
நீக்கு/பக்தர்களும் புண்ணியத்தை பக்கெட்டில் எடுத்துக்கொண்டு போகும் சந்தோஷத்துடன் 2 ரூபாய் விளக்கை ஏற்றுகிறார்கள். இதனால் யார் பயன் பெறுவார்கள்?/
பதிலளிநீக்குஎன் சிறு வயதில் ஏதோ ஒரு சில கோவில்களில் நவக்ரக சன்னிதிகளில் குறிப்பிட்ட நாள்களில் மட்டும் இம்மாதிரி விளக்கேற்றுவார்கள். இப்போது எங்கு பார்த்தாலும் எல்லா நாட்களிலும் இப்படி விளக்கேற்றுகிறார்கள். நீங்கள் கூறுவது போல் அந்த நாட்களில் என் பாட்டி எண்ணை வாங்கி விளக்கேற்றுவதற்கு குருக்களுக்குக் கொடுத்து விடுவார். இந்த நவீன கால விளக்கேற்றும் பழக்கம் உருவாவதற்கு முதல் காரணம் டீவி சானலில் ஜோஸ்யம் சொல்லும் நபர்கள் (காழியூர் நாரயணன், ஷெல்லி போன்றோர்)...சிம்ம/கடக ராசி அன்பர்கள் பரிகாரம் செய்தால் நல்லது என்று ஒரு ஸ்டேட்மெண்ட்...எங்கே என்றால், அருகிலுள்ள கோவிலில் என்பார்கள். கோவில் மேனேஜ்மெண்ட்டுக்கும் இது ஒரு பிஸினஸ் ஐடியாவாகப் போய் விட்டது...உடனே விளக்கு விற்பதற்கு ஏலம் விட்டு விடுவார்கள். இதில் கொடுமை என்னவென்றால், அந்த ஏலக்காரர் அதே விளக்குகளையே cost control என்று ரீசைக்கிள் செய்து விடுவார். சில சமயங்களில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கையே அணைத்துவிட்டு அடுத்த கஸ்டமருக்கு தயார் செய்து விடுவார்.
சூர்யா சார்... நாம மூளை இருந்தும் உபயோகப்படுத்தாமல் மனதை ஏமாற்றிக்கொள்கிறோம். ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய்க்கு நெய் விளக்கா? இதை ஏற்றுவதால் என்ன பயன்? என்றெல்லாம் யோசிப்பதில்லை.
நீக்குஜோசியர்கள் காட்டில் மழை. நீங்க எந்த ஜோசியரையும் உடனே பார்க்க முடியாது. ஆயிரம் இரண்டாயிரம் என ஃபீஸ். அதுவும் அரசியல் தொடர்புன்னா, பிரம்மஶ்ரீ ஆயிடுவாங்க, சாதாரண மக்களை அலட்சியம் செய்வாங்க. இதை எழுதினால் பதிவு போலாயிடும். இதிலும் அறமுள்ளவர்கள் இருக்கிறார்கள்.
கோயில் வாசல்களில் விற்பவை எவைகளையும் நான் வாங்குவதில்லை.
அல்லியங்கோதை அம்பாள்//
பதிலளிநீக்குபெயர் என்ன அழகு இல்ல? கோதை எனும் பெயர் பொதுவாக ஆண்டாளைக் குறிக்கும் பெயர் இங்கும் இருக்கிறதே. கோதை என்றால் கூந்தல், பூமாலை என்ற பொருளும் சொல்லப்படும் அதனால்தான் சூடிக் கொடுத்த நாச்சியார் - கோதை....
அல்லியங்ககோதை என்றால் அல்லி/ஆம்பல் மலர்களால் கோர்க்கப்பட்ட மாலை அணிந்தவள், அலல்து அதைப் போன்ற கூந்தலுடையவள் அம்பிகை என்ற பொருளில் வரும் என்று நினைக்கிறேன்.
கீதா
வாங்க கீதா ரங்கன். இன்று காலையில்தான் நேற்றைய பதிவில் உங்கள் திறமைகளைப் பற்றி எழுதியிருந்தேன்.
நீக்குலிங்கோத்பவர் இருபுறமும் உள்ள சிற்பங்கள் செம அழகு. ஒன்று விஷ்ணு என்று தெரிகிறது. மற்றொன்று பிரமன் மாதிரிதான் தெரிகிறது உற்றுப் பார்த்தால் சைடில் இரு முகங்கள்...
பதிலளிநீக்குகீதா
நாலாவது முகத்துக்கு கர்ப்பக்கிரஹத்துக்குள் சென்றுதான் பார்க்கணும். மிக அழகு இல்லையா?
நீக்குஅதற்கு அடுத்த சிற்பம் ஒரு வேளை பெரிது படுத்தியதால் பிக்ஸல் கூடி சரியா தெரியலையோ? சிற்பம் அழகாகதான் இருக்கு.
பதிலளிநீக்குகீதா
ஆறு சென்டிமீட்டரில் உள்ள சிற்பம். தூரத்திலிருந்து மிக மிக அழகு. பெரிதாகப் போட்டால் அதன் சிறப்பு மங்கிவிடுகிறது.
நீக்குபல சிவன் கோவில்களிலும் சுவற்றின் அடியில் இப்படிப் பூதகணங்களைக் காண முடிகிறது மேலிலும் கீழிலும் ஆங்காங்கே.
பதிலளிநீக்குகீதா
சௌந்திர நாயகி பெயர் ஆஹா
பதிலளிநீக்குகடவுளே இப்படி நந்தியெம்பெருமானைச் சுற்றி டைல்ஸ் பதித்து அந்த aesthetic sense யே போக்கிவிடுகிறார்கள். ஏம்பா கல்லா கிடைக்கலை பதிக்க?
கீதா
நெல்லை, ஆலயங்களில் விளக்கு ஏற்றுவதைப் பற்றிய உங்கள் கருத்தை அப்படியே டிட்டோ செய்கிறேன்.
பதிலளிநீக்குஇங்கு அருகில் இருக்கும் கோவிலில் கோவிலுக்குள் ஏற்றக் கூடாது என்று ஆங்காங்கே போர்ட் வைத்துஇருக்கிறார்கள். கோவில் வெளியில் ஒரு உலோகத்தால் ஆன மேசை போட்டு வைச்சிருக்காங்க....உள்ளே ஏற்றக் கூடாதென்று. அக ஒளியை ஏற்றுவதற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தால் நாட்டில் எத்தனையோ கெடுதல்கள் இல்லாமல் போகும்....சண்டை சச்சரவுகள் இல்லாமல் போகும்...இதோ இப்போதைய போர் உட்பட.
கீதா
விளக்கேற்றுவது அவரவர் நம்பிக்கை ஆனால் அந்த 2 ரூபாய் விளக்கிற்குக் கொடுக்கப்படும் எண்ணை, நெய் எதுவும் சுத்தமானவை கிடையாது. கலப்படம்.
பதிலளிநீக்குகீதா
லிங்கோத்பவர் அழகு. ரசித்துப் பார்த்தேன்.
பதிலளிநீக்குகருவறை முன் விதான ஓவியம் பிற்காலம் என்பது தெரிகிறது, நெல்லை.
பாவம் வௌவால்கள் குடியிருந்துவிட்டுப் போகட்டும். மண்டபத்துக்கு வெளியில்தானே....மனிதர்கள் செய்யும் அட்டூஷியத்தை விடவா? பாவம் அந்த உயிர்கள் இறைவனின் அருளைப் பெறட்டும்.
கீதா
கல்லாப் பிழையும் - எனக்கு மனப்பாடம். தினமும் மனதில் வந்துவிடும்.
பதிலளிநீக்குபடங்களும் விவரங்களும் அருமை, நெல்லை.
கீதா
முருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா.
நீக்குகலைப் பொக்கிஷம்
பதிலளிநீக்குபுள்ளமங்கை கற்றளி...
தங்களால் ஆலந்துறையார் தரிசனம்...
மகிழ்ச்சி.. நன்றி..
வாங்க துரை செல்வராஜ் சார். எனக்குமே அதிகாலையில் அவர் தரிசனம் பதிவின் வாயிலாக கிடைத்ததில் மகிழ்ச்சி
நீக்குகோயில் வாசலில்
பதிலளிநீக்குவிற்பவைகளை நானும்
வாங்குவதில்லை...
மிக நல்ல வழக்கம். ஆனால் துளசி மாலை ஓக்கே
நீக்குதட்சணை வைப்பதோடு சரி..
பதிலளிநீக்குஅவர்களது சேவைக்கு நம்மால் இயன்றது. அரசு ஒன்றும் செய்வதில்லை
நீக்குஉதிரிப்பூக்கள் சமர்ப்பிப்பேன்...
பதிலளிநீக்குகோவில் கோபுரங்களை படமெடுத்திருக்கும் கோணங்கள் ரசிக்க வைக்கின்றன. பிரும்மா, விஷ்ணு சிற்பம் அழகு.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குதிருஞான சம்பந்தன் அருளிய பதிகங்களை பாடி இறைவனை தரிசனம் செய்து கொண்டேன்.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் மிக அருமை,
கோயிலின் வெளிப்பிரகாரம் படங்கள் ,மற்றும் கோயில் படங்கள் எல்லாம் மிக அருமை.
//லிங்கோத்பவருக்கு இரு புறமும் விஷ்ணு மற்றும் பிரமன்(?). இன்று செதுக்கியது போன்ற அழகு. இந்த மாதிரி சிற்பத்தின் முகங்களை மாதிரியாக வைத்துத்தான் கல்கியின் நாவல்களுக்கு மணியம் அவர்கள் ஓவியம் வரைந்திருப்பார்.//
மணியம் செல்வன் அவர்கள் வரைந்த ஓவியம் போலவே பார்த்திபன் கனவு, மற்றும் சிவாகாமி சபதம் படங்களில் தலை அலங்காரம் செய்யப்பட்டது என்று சொல்வார்கள். அவ்வளவு அழகாய் வரைந்து இருப்பார்.
லிங்கோத்பவருக்கு இரு புறமும் விஷ்ணு இருவரும் அழகு.
பதிலளிநீக்குஆலந்துறை நாதர், செளந்தரநாயகி இருவரையும் நன்றாக தரிசனம் செய்து கொண்டேன். நித்தியபடி விளக்கு எரிக்க எண்ணெய் வாங்கி கொடுங்கள் என்று ஜோதிடர் சொன்னால் கொடுத்து இருப்பார்கள். அவர்கள் இத்தனை விளக்கு போடுங்கள் அத்தனை விளக்கு போடுங்கள் நீங்கள் நினைத்தது நடக்கும் எனும் போது அவர்கள் என்ன செய்வார்கள்.?
துவாரபாலகர்களுடன் கூடிய முன் மண்டபம். பார்க்க அழகு.
பதிலளிநீக்கு//அர்த்த மண்டபத்தின் விதானத்தில் வெளியே பார்த்தது போலே உள்ள சிற்பங்கள்.//
நடன மங்கை அந்த இருட்டு இவை எல்லாம் மெளனமாய் கதை சொல்வது போல் இருக்கிறது.
கச்சி ஏகாம்பரநாதன் பாடலை (பட்டினத்தார் பாட்டு.)
பதிலளிநீக்குமாலை வழிபாட்டில் அடிக்கடி பாடும் பாடல் .
பாடல் பகிர்வு விளக்கத்திற்கு நன்றி.
//தேவியரின் சிற்பங்கள் மிக அழகு. ஆனால் அவை எங்கு வைக்கப்பட்டிருந்தனவோ.//
அதில் சாஸ்தாவும் இருக்கிறார்.(நான்காவது சிலை)
கோவில் கோபுரம் விமானம் கட்டிடம் அழகாக உள்ளது.
பதிலளிநீக்குலிங்கோத்பவருக்கு இரு புறமும் இருக்கும் விஷ்ணு சிலைகளின் வடிவமைப்பு கவர்கிறது.
ஆலந்துறை நாதரை வணங்கிக் கொண்டோம் அழகாக இருக்கிறார் .
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அழகிய கோவிலை விரிவாக காணத்தந்த உங்களுக்கு நன்றி.
//உன் தரிசனமன்றி வேறு என்ன வேண்டும்?//
பதிலளிநீக்குஆமாம், அது போதும்.