தஞ்சை பெரிய கோயிலைப் பார்த்து பிரமித்த நாம், தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழமொழி மெய்யா என்று பார்க்க வேண்டாமா?
கல்கியின் எழுத்தினால், தமிழகத்தில் இராஜராஜ சோழனின் வரலாறு அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். சுந்தரச் சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் அகால மரணம் எய்த, அவனுக்குப் பின், தம்பியான அருண்மொழி பட்டமேற்க முடியாமல், சிற்றப்பன் உத்தமச் சோழன் என்ற பெயரில் பட்த்திற்கு வந்தான். உத்தமச் சோழன் பதினைந்து ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தின் அரசனாக இருந்து மறைந்த பிறகு அருண்மொழி, இராஜராஜன் என்ற பெயரில் பட்டத்திற்கு வந்தான். அவன் பிறந்த வருடம் 947-948. தந்தை சுந்தரச் சோழன் மறையும்போது, கிட்டத்தட்ட 28 வயது ஆகியிருந்தது. அதற்கு 7 ஆண்டுகள் முன்பாகவே (அதாவது ஆதித்த கரிகாலன் மறைந்ததும்), சுந்தரச் சோழனின் பெரியப்பா கண்டராதித்தரின் மகன் அரசாட்சிக்கு ஆசைப்பட்ட தால், நியாயப்படி அரசுரிமை தனக்குத்தான் உரியது என்று உரிமை கோரியதால், அவனையே இளவரசனாக ஆக்கினர். சுந்தரச் சோழர் உடல் நலம் இல்லாது இருந்ததால், உத்தமச் சோழன் என்ற பெயரில் சோழ அரசனானான். அவனுக்குப் பிறகு அரியணை அருண்மொழிக்குச் சேரவேண்டும் என்ற ஒப்பந்தம் இருந்தது. உத்தமச் சோழன் 985ல் மறைந்த தும், அருண்மொழித்தேவர் சோழ அரசனானார். அவர் ஆட்சிக்கு வந்து 3ம் ஆண்டு வெட்டப்பட்ட கல்வெட்டுகளில்தான் ராஜ ராஜத் தேவர் என்ற பெயர் அருண்மொழிக்கு வழங்கலாயிற்று.
ஒரு அரசன் பட்டத்திற்கு வருவதற்கே பல வருடங்களாகிவிடும். அவனுக்கு அரசுரிமை இருந்து (அதாவது மூத்த மகன்), வீரனாகவும் இருந்தால், அவனை நாட்டின் ஒரு பகுதியின் படைத்தளபதியாக ஆக்குவார்கள், இளவரசனாகவும் அறிவிப்பார்கள். இளவரசன் என்று பட்டம் பெற்றுவிட்டாலே, அவனைக் காக்க தனியாக ஒரு படை உருவாகிவிடும். (வேளக்காரப் படை). இளவரசனை இவர்களை மீறி யாரும் சந்திக்க முடியாது. பாதுகாக்கப்படும் இளவரசனுக்கு ஏதேனும் ஆனால், இவர்கள்தாம் பொறுப்பு. பிற்கால அரசனாகப்போகும் இந்த இளவரசனுக்கு எல்லாவற்றிலும் பயிற்சியும், கல்வியும், பொறுப்பும் கொடுக்கப்படும்.
இன்றைக்கு நாம் அரசியல் கட்சிகளில் பார்ப்பதுபோல, அடுத்த வாரிசு அதாவது இளவரசன் உதயமாகிவிட்டால், அவனுக்கென்று தனிப்பட்ட நம்பிக்கையானவர்கள், நண்பர்கள், ஒற்றர்கள் என்று பல தரப்பினரும் உருவாகிவிடுவர். அவர்களுக்கும் அரசனுடையவர்களுக்கும் உரசல் நடந்துதான் ஆகவேண்டும். அதனால், அரசனுக்கும் இளவரசனுக்கும் நல்ல புரிதல் இருக்கவேண்டும். தந்தை தனயன் இவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரே ரத்தம் என்பதால், இருவரும் இணைந்துதான் இராஜ்ஜியத்தைக் கட்டிக்காப்பாற்ற வேண்டும். அவர்களும் சாதாரண மனிதர்களே என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இருந்தாலும் நமது பொது நம்பிக்கை, அரசர்கள் தர்மம் வழுவாது நடந்தார்கள், அவர்களுக்கு ஆலோசனை சொல்ல உரிய அமைச்சர் பெருமக்கள் இருந்தார்கள் என்பதுதான். எப்படி அரசனுக்கும் இளவரசனுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் நடைபெற்றிருக்கும், எதை வைத்து தகவல்களைச் சரிபார்ப்பார்கள், ஒற்றர்கள் யாருடைய கைப்பாவையாக ஆகியிருப்பார்களா என்பதெல்லாம் நாவலுக்கு ஏற்ற கருக்கள்.
சுந்தரச் சோழன் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளிலேயே தன் மூத்த மகனை இளவரசனாக ஆக்கிவிடுகிறான் (ஆதித்த கரிகாலன்). அதுபோல, ராஜராஜ சோழன் என்ற பெயர் சூட்டிக்கொண்ட காலத்திலேயே (அதாவது தன் மூன்றாம் ஆண்டு அரசாட்சியின்போதே) தன்னுடைய மகன் இராஜேந்திர சோழனை இளவரசனாக ஆக்கியிருக்கவேண்டும்.
இதில் நாம் குறிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டியது, ராஜராஜ சோழனுக்கு நிறைய மனைவியர் இருந்தார்கள். அவனுடைய பட்டமகிஷி உலகமகாதேவி (தந்தி சக்தி விடங்கி என்ற பெயர்). ராஜராஜ சோழனின் இரண்டாம் மனைவி வானமா தேவி (திரிபுவன மாதேவி). இவள் சேரர் குல இளவரசி. வானமாதேவியின் மகன் நம் ராஜேந்திர சோழன். ராஜராஜ சோழனின் இன்னொரு மனைவி பஞ்சவன் மாதேவி, பழுவேட்டரையர் குலத்தைச் சார்ந்தவர். சுமார் பதினைந்து மனைவியரைப் பெற்றிருந்தான் ராஜராஜ சோழன். அதிக மனைவியர்கள் அரசனுக்கு அமைவது இயல்பு. இதன் மூலம் பிற அரசர்களோடு, குலங்களோடு மணத் தொடர்பு ஏற்படுவதால் அரசருக்கு பகை குறையும், பல குலங்களின் ஆதரவும் இருக்கும். உதாரணமாக ராஜராஜன் சோழனின் மனைவியருள் ஒருவர் மீனவன் மாதேவியார். இவர் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். இராஜராஜன் கடல் கடந்து படையெடுத்துச் சென்றதை நினைத்தால் இதனைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு மகன் மாத்திரம் இருந்தால் அரசுரிமைப் பிரச்சனையோ இல்லை குலங்களிடையே மனவருத்தமோ ஏற்படாது. ராஜராஜனுக்கு இராஜேந்திரன் ஒரே மகன். அவனைத் தவிர ராஜராஜனுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர்.
அருண்மொழித்தேவன், உத்தமச் சோழனுக்குப் பிறகு அரியணை ஏறினான். தன்னுடைய அரசில் அவன், உத்தமச் சோழனின் மகனான மதுராந்தகன் கண்டராதித்தனை கோயில்களைக் கண்காணிக்கும் பணியில் அமர்த்தியிருந்தான் (சோழ சாம்ராஜ்யத்தின் அறநிலையத்துறை போலிருக்கு). பிற்பாடு ஒரு பிரச்சனையில் இவனது பதவி பறிக்கப்பட்டது.
ராஜராஜ சோழன் சைவ சமயத்தைக் கடைபிடித்தான், அவனது சமய அறிவு, பக்தி அவனது பாட்டி செம்பியன் மாதேவியால் (கண்டராதித்தர் மனைவி) அவனுக்கு சிறு வயதிலிருந்தே ஊட்டப்பட்டது. அளவில்லாத வீரம், கடல் கடந்து இலங்கைக்கு அப்பாலும் பல போர்களில் வென்றது, படைபலத்தை அளவில்லாமல் பெருக்கியது, திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி என்பவரைக் கொண்டு ஏடுபடுத்தியது, பிற சமயங்களான வைணவம், பௌத்தம், ஜைனம் போன்றவற்றிர்க்கும் ஆதரவளித்தது என்று பல சிறப்புகளைப் பெற்றிருந்தாலும், ராஜராஜ சோழன் என்றதும் நமக்கு நினைவுக்கு வரும் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியதன் மூலம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் நினைவில் நிலைத்துவிட்டான்.
இராஜராஜன் 1012ல் ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்திருக்கவேண்டும். அதற்குப் பிறகு இரண்டாண்டுகள் இருந்து 1014ல் மறைந்திருக்கவேண்டும். திருவிசை நல்லூர் கோயிலில் துலாபாரம் அளித்ததும், தன் மனைவி உலகமஹா தேவியுடன் ஹிரண்யகர்பம் புகுந்ததும் (இது பற்றி ஏற்கனவே பார்த்திருக்கிறோம். தங்கத்தால் செய்த பசுவில் நுழைந்து வெளிவருவது, பிறகு அந்த தங்கப் பசுவைத் தானம் செய்துவிடுவது) கல்வெட்டுகளினால் தெரியவருகிறது.
அருண்மொழியின் 23-25ம் வயதில் பிறந்தவன் ராஜேந்திரன். (970ல்). தந்தை அரசனாக ஆனபோது அவனுக்கு 14 வயது இருக்கலாம். தந்தை 26 ஆண்டுகள் அரசாண்ட பிறகு, ஆட்சிப் பொறுப்பு இராஜேந்திரனுக்கு வந்தது. அதனால் ராஜேந்திர சோழன் முடிசூடிக்கொண்ட போது அவனுடைய வயது சுமார் 40 என்று வைத்துக்கொள்ளலாம்.
யாரை வேண்டுமானாலும் இளவரசனாக ஆக்கிவிட முடியாது. அவன் படைத் தளபதிகள், மண்டல அதிகாரிகள் என்று பலருடைய நம்பிக்கையைப் பெறுபவனாக இருக்கவேண்டும். உரிய பயிற்சிகளுக்குப் பிறகு, அவனை நாட்டின் ஒரு பகுதியின் சேனைத் தலைவனாக (மாதண்ட நாயகர்) ஆக்குவர். போரில் கலந்துகொண்டு படைகளைத் தலைமை தாங்கும் திறமையும் வெற்றிபெறும் திறமையும் இருக்கவேண்டும்.
இராஜராஜனுக்கு தஞ்சை தலைநகரமாக இருந்தது. தன்னுடைய பிள்ளைகளை எங்கு வளர்த்தான்? வரும் வாரங்களில் பார்க்க வாய்ப்பு இருக்கிறதா?
இனி வரும் வாரங்களில் நாம் காணப்போவது, தந்தையைப் போன்றே தனயனும் கட்டிய பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் படங்கள்.
கோவில் வளாகத்துக்குள் (த்வஜஸ்தம்பம் பகுதி) நுழைவதற்கு முன் இருக்கும் துவார பாலகர்கள்.
இந்த முறை சென்றிருந்தபோது கொடிமரத்துக்கு சிவராத்திரி வருவதை முன்னிட்டு கவசம் சார்த்தும் வேலை நடந்துகொண்டிருந்தது.
வைணவக் கோயில்களுக்குச் செல்லும்போது, துவஜஸ்தம்பம் (கொடிமரம்) அருகில் பக்தர்கள் விழுந்து வணங்குவதைப் பார்த்திருப்பீர்கள். அதைத் தாண்டிவிட்டால், வேறு எங்கும் விழுந்து வணங்கக்கூடாது. எந்த சன்னிதியிலும், இல்லை கோயிலின் வேறு எந்த இடத்திலும் விழுந்து வணங்குதல் கிடையாது (பலருக்கு இது தெரியாது). கோயிலுக்குள் ஆச்சார்யர்கள் வந்திருந்தாலும், அவரையும் விழுந்து வணங்கக் கூடாது. கொடிமர உச்சியில் கருடன் இருப்பதாக ஐதீகம். கருடன் வேதமயமானவன். கருடன் மூலவரை நோக்கியே இருப்பான். இருவருக்கும் இடையில் விழுந்து வணங்குவது கிடையாது.
என்னுடைய பார்வையில், இதைப் பின்பற்றாமல், ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் விழுந்து வணங்க ஆரம்பித்தால், யாரும் நிம்மதியாக தரிசனம் செய்தலோ, இல்லை அர்ச்சகர்கள் அவர்கள் கடமையைச் செய்தலோ இயலாது. இதற்காகவே இந்த ஒழுங்குமுறையை வைத்திருக்கிறார்கள்.
வைணவத்தில், இன்னொருவர் பாதத்தைத்
தொட்டு வணங்குவதும் கிடையாது.
பண்டரீபுரம் போன்ற இடங்களில் மூலவர் பாதத்தைத் தொட்டு வணங்கும்
வழிமுறை இருக்கிறது. அதைப்பற்றி இங்கு சொல்லவில்லை. இன்னொருவர்
காலைத் தொட்டு வணங்கும்போது, நம் பாவம்
அவர்களுக்குச் செல்கிறது.
முகப்பில் இருக்கும் தமிழ்க் கல்வெட்டு. இன்னும் நிறைய கல்வெட்டுகள் உள்ளன.
அசப்பில் தஞ்சை பெரியகோயிலுக்கு வந்துவிட்டோமோ என்ற தோற்றம் தரும்.
"என்னைப் பார்த்துத்தான் நாயக்கர் காலத்தில் தஞ்சைப் பெரிய கோயிலில் பிரம்மாண்டமான நந்தியை எழுப்பினார்களோ?"
முன்பு சென்றிருந்தபோது கோயிலின் வாயில் நடை சார்த்தியிருந்தது. ஆனால் இந்த
முறை திறந்திருந்தது.
அடுத்த
வாரம் தொடர்வோமா?
(தொடரும்)
முருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா. வாரத்தின் எல்லா நாளும் வெகு சீக்கிரம் எழுந்து பல்வேறு வேலைகள். இன்று யோகாவிற்கு விடுமுறை என்பதால் மிக மெதுவாக எழுந்தேன். (இரண்டே வேலைகள். 10 கிமீ நடை மற்றும் சுதர்சன க்ரியா. நண்பகலுக்கு முன்னால் உணவருந்துவதில்லை என்பதால் இன்று சீக்கிரம் எழவில்லை.
நீக்குகலை விருந்து....
பதிலளிநீக்குஅடுத்து வருகின்ற சில
வாரங்களுக்கு மகிழ்ச்சியே...
வாங்க துரை செல்வராஜு சார். இனி வரும் வாரங்களில் வரலாற்று விருந்தும் உண்டு.பலர் பார்த்திராத கோயில்களும் உண்டு.
நீக்கு// அவனைக் காக்க தனியாக ஒரு படை உருவாகிவிடும். (வேளக்காரப் படை). //
பதிலளிநீக்குகாலச்சக்கரம் நரசிம்மாவின் லேட்டஸ்ட் புதினம் 'நவகண்டநாயகி' இவர்களைப் பற்றியதுதான்.
வாங்க ஶ்ரீராம். காலச்சக்கரம் நரசிம்மாவின் விசிறி ஆகிவிட்டீர்கள். நவகண்ட நாயகி அவர்களைப் பற்றியா?
நீக்குஇன்றைய தொகுப்பு போல எபியில்
பதிலளிநீக்குஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு...
தனித்துவம்...
ஒரே மேஜையில் சாத்வீக உணவுடன்
புலால் உணவை பரிமாற வேண்டாம்...
நேற்றைய பதிப்பு ஒரு ஆச்சர்யம்.....
கடந்த ஓரிரு மாதங்கள் ஶ்ரீராம் முனைந்து பல்சுவையாக மாற்ற முயல்கிறார். அந்த முயற்சிக்கே பாராட்டு.
நீக்குஞாயிறு பகுதியில் மார்க்கச்சம் பற்றி படத்துடன் ஒரு பகுதியில் எழுதிவிட்டேன். கௌதமன் சாருக்கு அனுப்புவதற்குள் அந்த வரிகளை நீக்கணும் என நினைத்திருந்தேன். நீக்கி சாத்வீகமாக எழுதினேனா என நினைவில்லை.
:))) பார்த்த நினைவு இல்லை!
நீக்கு// ராஜராஜனுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். //
பதிலளிநீக்குஎனக்கு லஷ்மியை மட்டும் ஞாபகமிருக்கிறது. முத்துராமனை காதலிப்பார்!!
எனக்குத்தான் பயமாக இருக்கிறது... அடுத்து இராஜராஜன் சிலையைப் பார்த்துவிட்டு சிவாஜி போலவே இல்லையே... எப்படி இதுதான் ராஜராஜன் என்று எப்படி ஏற்றுக்கொள்வது எனச் சொல்லிவிடுவீர்களோ?
நீக்குஉங்கள் சகோதரி, ஞாயிறு மற்றும் சனி பதிவைப் பற்றி அபிப்ராயம் சொன்னார்களா?
:)))
நீக்குராஜ ராஜ சோழனுக்கு 7 மனைவிகள். விக்கிபீடியா சொல்லும்
நீக்குவிவரம் பார்த்தால் இரண்டு பையன்கள், இரண்டு பெண்கள் என்று தோன்றுகிறது.
ஒரு மகன் இராஜேந்திரன். இரண்டு பெண்கள். குந்தவை, மாதேவடிகளா நினைவில்லை.
நீக்குகங்கைகொண்ட சோழபுரம், தஞ்சை பெரிய கோயில் போலவே இருக்கு அசப்புல ஏமாந்திட வாய்ப்புண்டு. பதிவைத் திறந்ததும் இன்று மீண்டும் தஞ்சைக்கு வந்துவிட்டாரா நெல்லை என்று சட்டென்று தோன்றியது!!!
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா ரங்கன்... இரண்டுக்கும் ஒற்றுமைகள் நிறைய உண்டு. ஆனால் தஞ்சை பிரகதீஸ்வர்ர் கோயில் மெஜெஸ்டிக் என்று சொன்னால் மிகையல்ல.
நீக்குகங்கை கொண்ட சோழபுரம் போனதில்லை, நெல்லை. வாய்ப்பு மிஸ் ஆனது. ஆனால் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் நீங்கள் சொல்லியிருப்பது போல் மெஜெஸ்டிக்...
நீக்குகீதா
கண்டிப்பா கங்கைகொண்ட சோழபுரம், அதன் வெகு அருகிலேயே உள்ள நாதமுனிகள் திருவரசு, குருகைக்காவலப்பர் கோயில் மற்றும் பள்ளிகொண்ட பெருமாள் கோயில் சென்றுவாருங்கள் கீதா ரங்கன். அருமையான அனுபவமாக இருக்கும்.
நீக்குஅவனைக் காக்க தனியாக ஒரு படை உருவாகிவிடும். (வேளக்காரப் படை). இளவரசனை இவர்களை மீறி யாரும் சந்திக்க முடியாது.//
பதிலளிநீக்குBlack Cats!!! இது இப்பவும் தொடர்கிறது ஆனால் பாருங்க அடுத்தது சுத்தமா பொருந்தாது இப்ப!
//பிற்கால அரசனாகப்போகும் இந்த இளவரசனுக்கு எல்லாவற்றிலும் பயிற்சியும், கல்வியும், பொறுப்பும் கொடுக்கப்படும்.//
பாருங்க என்ன ஒரு பொறுப்பு. ஆனா இப்ப நினைச்சுப் பாருங்க!!!! வேற எதுக்கோ பயிற்சி கொடுக்கப்படுகிறது இல்லைனா கற்கப்படுகிறது! சொல்லவே வேண்டாம் புரிஞ்சுடும்!!!
கீதா
இப்போதும் கறுப்புப் பூனைப் படை, அரசருக்கு (அதாவது பாதுகாக்கும் தலைவனுக்கு) ஏதேனும் ஆனால் பாதிக்கப்படுவாங்களே... ஸ்ரீபெரும்பூதூர் கூட்டத்தில் நடந்ததுபோல.
நீக்குஇப்போல்லாம் யாரும் பயிற்சி பெற ஆர்வம் காட்டுவதில்லை. எடுத்த உடனேயே அதிகாரத்தைச் செலுத்த, அதிகாரத்தை தங்கள் சுய நலத்துக்குத் தவறாக உபயோகிக்கத்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். இதைப்பற்றி நிறைய உதாரணங்கள் சமீபத்தில் நடந்ததை எழுதலாம். ஆனால் அரசியலாகிவிடும்.
அடுத்த பாராவில் தொடத்தில் நீங்களும் இப்போதையதுக்கு வந்துட்டீங்க!!
பதிலளிநீக்குஒரு சில வீட்டில் மட்டும்தானே இந்த உரசல்கள்! ஆனா முக்கியமானவங்களில் தந்தைக்கும் தனயனுக்கும் நல்ல புரிதல் எல்லாம் இருக்கே!!!!! இணைந்து இராஜ்ஜியத்தைக் காப்பாத்திக்கறாங்க!
அரசனுக்கும் இளவரசனுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் நடைபெற்றிருக்கும், எதை வைத்து தகவல்களைச் சரிபார்ப்பார்கள், ஒற்றர்கள் யாருடைய கைப்பாவையாக ஆகியிருப்பார்களா என்பதெல்லாம் நாவலுக்கு ஏற்ற கருக்கள்.//
கல்கி எழுதியதில் சூப்பரா இருக்குமே இது.
கீதா
தற்போது உள்ள மாதிரி கட்சியைத் தூக்கி தனயனிடம் கொடுப்பது போலக் கிடையாது. இவ்வளவு பணம், ஆள் அம்பு இருக்கும்போதே, கட்சி மாநாட்டில் சீனியர் அமைச்சர் தனயனுக்கு சால்வை போர்த்தாமல் செல்லும் கெத்து காண்பிக்கும்போது, அந்தக் காலகட்டத்தில் எவ்வளவு ஜாக்கிரதையாகச் செயல்பட வேண்டியிருந்திருக்கும். அதுபோல, போர்த்திறன் எல்லாம் இருந்தால்தான் ஒத்துக்கொள்வார்கள். அரசனும் தனயனும் இணைந்து செயல்பட்டால்தான் இராஜ்ஜியம் நிலைத்து நிற்கும். இதெல்லாம் இருவருக்கும் நன்றாகவே புரிந்திருக்கும்.
நீக்குதந்தி சக்தி விடங்கி என்ற பெயர்)//
பதிலளிநீக்குஅட பெயரே வித்தியாசமாக இருக்கிறதே! பெயரும் அழகா இருக்கு.
இராஜ இராஜனுக்கு 15 மனைவியரா? சினிமாவுல காட்டவே இல்லையே! 3 பெண்களா? ஹூம் லக்ஷ்மி/குந்தவை மட்டும்தான் தெரியும் !!!! லேட்டஸ்ட் பொ செ ல கூட!!
கீதா
வாங்க கீதா மங்கன். ஏற்கனவே பெரும் பொருட்செலவுல சினிமாஸ்கோப்ல எடுத்து அடிவாங்கினாங்க. நீங்க என்னடான்னா இன்னும் பனிரண்டு நடிகைகளுக்கு பணம் செலவழித்து பார்ட்டும் கொடுத்திருக்கணும்கறீங்க. என்ன ஒரு நல்லெண்ணம்.
நீக்குஹாஹாஹாஹா....ஓ செலவு கிட்டலையா? அடியா?
நீக்குகீதா
கல்கியால் இராஜராஜன் சோழர் பற்றி பரவலாகத் தெரிந்தது என்றால் மிகையல்ல அது போலதான் ராஜ ராஜ சோழன் படமும், இப்ப வந்த பொன்னியின் செல்வனும்...அட்லீஸ்ட் இத்தலைமுறைக்கும் ஓர் அறிமுகம் கிடைத்ததே.
பதிலளிநீக்குகீதா
நீங்க எழுதினதுல உள்குத்து இருப்பதுபோலத்்தெரிகிறதே. திரிஷா வையும் விஜயையும் மனதில் நினைத்து எழுதலையே... ஏனென்றால் இப்போதைய தலைமுறையின் சரித்திர அறிவு அப்படிப்பட்டது.
நீக்குஹாஹாஹா....நெல்லை இப்ப நீங்க தான் கிளறிவிட்டீங்க!!!!!!!! நான் நல்லபிள்ளையா சொன்னாலும்.....
நீக்குகீதா
என்ன அர்த்தத்துல சொன்னீங்களோ தெரியலையே கீதா ரங்கன். ஒருவேளை நவீன விமலாதித்தனுக்கு உதவப் போயிட்டாங்களோ?
நீக்கு(சோழ சாம்ராஜ்யத்தின் அறநிலையத்துறை போலிருக்கு). பிற்பாடு ஒரு பிரச்சனையில் இவனது பதவி பறிக்கப்பட்டது.//
பதிலளிநீக்குஹாஹாஹா... என்ன பிரச்சனையோ!! இப்ப போல அப்பவும் இருந்திருக்குமோ என்னவோ!
கீதா
இப்ப போல என்று சொன்னது முன்னாள் அமைச்சர் அழகிரி, பிறகு அவரின் நிலை குறித்தா?
நீக்குஹாஹாஹா நான் சொல்ல மாட்டேனே! உங்களை விடவா எனக்குத் தெரியப் போகுது!?
நீக்குகீதா
படங்கள் எல்லாம் அட்டகாசம் நெல்லை. கொடிமரம் தூரத்தில் தெரியும் அந்தப் படம் அழகான கோணத்தில்....துவாரபாலகர்கள்....எல்லாமே அழகு
பதிலளிநீக்குகல்வெட்டில் ஓரிடத்தில் பாட்டம் வெட்டி, மயிலும்....வெட்டி என்று ஏதோ வார்த்தைகள் சுமாராகத் தெரிந்தன!!!
கீதா
ரசித்தமைக்கு மிக்க நன்றி கீதா சேச்சி (நாஞ்சில் நாட்டுப் பெண்)
நீக்குஒரே ஒரு மகன் இராஜேந்திரன்.
பதிலளிநீக்குஇரண்டு பெண்கள். குந்தவை, மாதேவடிகள்...
அளவான குடும்பம்...
என்ன இதைப்போய் அளவான குடும்பம்னு சொல்லிட்டீங்க? இதைப்பற்றி விஸ்தாரமா எழுதலாம். பல மனைவியர்கள் கொண்ட அரசர்கள் பல மனைவியரிடமும் குழந்தைகள் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளும், அரசுரிமையில் ஏற்படும் குழப்பங்களும் என.
நீக்குஅரச குடும்பத்துல மட்டுமா ...சாதாரண மனிதர்கள் குடும்பத்துலயும்தான்...இல்லையா நெல்லை?
நீக்குகீதா
கீதா ரங்கன்...இந்த அரசியல் கருத்துக்கு நான் பதில் சொல்லலை. நீங்க என்னவோ கனிமொழி, அழகிரி, முக முத்து, ஸ்டாலின், செல்வி இவங்களைப் பத்திச் சொல்லறமாதிரி இருக்கு. ஹா ஹா ஹா
நீக்குசமீபத்தில் இங்கே சென்று வந்தேன் - ஆனாலும் நின்று நிதானித்துப் பார்த்து, ரசிக்க முடியாத பயணம். அதனால் மீண்டும் செல்லும் எண்ணம் உண்டு.
பதிலளிநீக்குபடங்களும் தகவல்களும் நன்று. எனது சமீபத்திய பயணத்தின் போது ASI நபர்கள் உடன் வந்திருந்தார்கள் என்பதால் சில தகவல்களைச் சொன்னார்கள். அவர்களுடன் தொடர்பு கொண்டு அடுத்த பயணத்தில் இன்னும் தகவல்கள் சேகரிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.
வாங்க வெங்கட். ககொசோ அருகிலேயே பள்ளிகொண்ட பெருமாள் (நெல்லிக்குப்பம்), குருகைக்காவலப்பர் கோயில் இருக்கின்றன. இரண்டும் அருமையான கோயில்கள். சென்றுவாருங்கள்.
நீக்குகங்கை கொண்ட சோழபுரத்தின் அருகேயே இருந்திருக்கோம். இருக்கோம். ஆனாலும் இன்னமும் பார்க்க முடியலை. இத்தனைக்கும் அந்த வழியே அடிக்கடி பிரயாணம் செய்திருக்கோம். நெல்லையின் படங்கள் அனைத்தும் மிகவும் அழகாகவும் நன்றாகவும் அமைந்திருக்கின்றன. நந்தியின் சிற்பம் நன்றாக உள்ளது. துவாரபாலகர்களும். கல்வெட்டைப் பெரிது பண்ணிப் பார்க்கலாம்னு முயன்றால் வரலை. இணையப் பிரச்னை காரணமோ என்னமோ தெரியலை.
பதிலளிநீக்குவாங்க கீதா சாம்பசிவம் மேடம். நாங்கள் கும்பகோணத்திற்கு, கோயில்கள் தரிசனத்திற்காகவே ஏகப்பட்ட முறைகள் சென்றிருக்கிறோம். இதோ இந்த வாரமும். ஆனால் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு இரு தடவைகள் மட்டுமே சென்றிருக்கிறோம். திருவரசுகளுக்கு ஒரு முறை மாத்திரமே.
நீக்குஅந்த நாட்களில் இளவரசருக்கு எனத் தனியான சொத்து, ஆள்படை மற்ற வசதிகள் இருந்ததைப் போல் இளவரசிகளுக்கும் இருந்திருக்கின்றன என்பதைப் பொன்னியின் செல்வன் படித்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். இளவரசி குந்தவையின் பெயரால் பழையாறையில் சுந்தர சோழ ஆதுரசாலையும் அதன் நிவந்தங்களும் பொன்னியின் செல்வனில் குறிப்பிடப் படும். அதே போல் செம்பியன் மாதேவி அவர்களுக்கும் தனிப்பட்ட சொத்துக்கள் இருந்திருக்கின்றன என்பதும் அவர் கோயில்களின் திருப்பணியை ஏற்றுப் பல செங்கல் கோயில்களைக் கற்றளியாய் மாற்றினார் என்பதும் படிச்சிருப்போம். கோனேரிராஜபுரம் பிரபலமான நடராஜர் சிலையைச் செய்யுமாறு சிற்பிகளிடம் செம்பியன் மாதேவி அவர்கள் தான் கேட்டுக்கொண்டிருக்கார். அந்தச் சிலையும் அதை வடித்த சிற்பியும் இன்றளவும் ஓர் பேரதிசயமாக இருக்கிறார்கள் என்பதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். உண்மையில் கோனேரிராஜபுரம் நடராஜரைப் பார்க்கையில் நம்மையும் அறியாமல் உள்ளூர ஓர் பயம் கலந்த மரியாதையும் ஆச்சரியமும் ஏற்படும். படம் எடுக்கக் கூடாதுனு அங்கிருந்த குருக்கள் தடுத்து விட்டார். ஏனெனில் சிலையின் ஜீவத் தன்மை கருதித் தடுத்தார்.
பதிலளிநீக்குமகள்களுக்கும் சொத்து, உரிமை உண்டு. அதனால்தான் தன் அக்காவும் கோயிலுக்கு என்று கொடுத்ததை ராஜராஜன் கல்வெட்டில் பதித்துவைத்துள்ளான். புத்தர் கோயிலுக்கு குந்தவை நிறையச் செய்திருக்கிறார் (ஆதாரம் இருக்கிறது). செம்பியன் மாதேவிதான் கற்றளிகளாக பல கோயில்களை ஆக்கியது.
நீக்குகோனேரிராஜபுரம் செல்லும் ஆசை வந்துவிட்டது. நடத்திவைக்கவேண்டும்.
கல்வெட்டெல்லாம் படிக்க முடியலை. பெரிது பண்ணினாலும் கண்கள் பிரச்னை. கொடிமரம் படம் தூரப்பார்வையில் அபாரம்.
பதிலளிநீக்கு//திருவிசை நல்லூர் கோயிலில் துலாபாரம் அளித்ததும், தன் மனைவி உலகமஹா தேவியுடன் ஹிரண்யகர்பம் புகுந்ததும் (இது பற்றி ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.//
இதைப்பற்றி என் அருமை நண்பர் திரு திவாகர் அவர்கள் ஓர் ஆராய்ச்சி நாவல் எழுதி இருக்கார். ராஜராஜன் "சிவபாத சேகரன்" என்னும் பெயர் பெற்ற விபரங்களும் அதில் வரும். புத்தகம் ஸ்ரீரங்கத்தில் (வழக்கம் போல்)
வாங்க கீசா மேடம். எனக்கும் கல்வெட்டை முழுமையா படிக்க முடியலை. அதனால கவலை வேண்டாம்.
நீக்குஎன்ன புத்தகம் அது? எல்லாத்தையும் ஸ்ரீரங்கத்தில் வைத்துவிட்டீர்களா? துணைக்கு ஓரிரண்டு புத்தகங்களையாவது எடுத்துச் செல்லவில்லையா? அடுத்து திருவரங்கம் வரும்போது தகவல் தாருங்கள்.
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம்.
நீக்குசோழர் வரலாறு அருமையாக சொன்னீர்கள்.
பதிலளிநீக்குகங்கை கொண்ட சோழபுர கோயில் படங்கள் எல்லாம் அருமை.
கொடுமரம் முதலில் கிடையாது இப்போது புதிதாக வைக்கப்பட்டு இருப்பது அழகு. கொடிமரத்தை பல கோணங்களில் பல படங்கள் எடுத்து இருப்பது அருமை. அது போல துவாரபாலகர்களை வித விதமாக எடுத்து இருக்கும் படங்களும் அருமை.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஒன்று அன்று போய் வந்த நினைவுகள் வந்து போகிறது.
வாங்க கோமதி அரசு மேடம். எதனால் ஜனவரி முதல் தேதி இந்தக் கோயில் தரிசனம் என்று வைத்துக்கொண்டிருந்தீர்கள்? முன்பு கொடிமரம் இல்லையா?
நீக்குஜனவரி ஒன்று விடுமுறை என்பதால் பக்கத்தில் இருக்கும் கங்கை கொண்ட சோழபுரம் போகலாம் என்று முடிவு செய்தோம் , அப்போது எங்களிடம் கார் இல்லை, அக்கம் பக்கத்து பிள்ளைகள் என் மகனுடன் பஸ்ஸில் சென்றோம் .
நீக்குஅப்புறம் அந்த கோயில் பிடித்து விட்டது, காரும் வாங்கி விட்டோம், வீட்டுக்கு ஊரிலிருந்து யார் வந்தாலும் அழைத்து செல்ல ஆரம்பித்தோம். கங்கை கொண்ட சோழபுரம் பக்கத்தில் இருக்கும் குருவலப்பர் கோயிலுக்கும் போக ஆரம்பித்தோம்.
மகன் தன் நண்பர்களுடன் அடிக்கடி போக ஆரம்பித்தான்.
அப்புறம் ஆங்கில புத்தாண்டுக்கு கண்டிப்பாய் போக வேண்டும் என்று வழக்கப்படுத்தி கொண்டோம்.
ஐப்பசி அன்னாபிஷேகம் போய் பார்த்தோம்.
தமிழ் புத்தாண்டுக்கு திருவாவடுதுறை, திருவிடை மருதூர் வெள்ளை வேம்பு மாரியம்மன் கோயில் , ஒரு அனுமன் கோயில் மூன்றும் போவோம். அப்படி வழக்கப்படுத்தி கொண்டோம்.
முன்பு கொடிமரம் கிடையாது 152 வருடங்கள் ஆனது மீண்டும் கொடிமரம் வைப்பதற்கு என்று 2019 ஆம் ஆண்டு கொடிமரம் வைத்த போது சொல்கிறார்கள்.
நீக்குhttps://mathysblog.blogspot.com/2016/01/blog-post.html -1
https://mathysblog.blogspot.com/2016/01/2.html -2
என் பழைய பதிவுகளை பார்த்தால் கொடிமரம் இல்லாதது தெரியும்.
நிறைய பதிவுகள் போட்டு இருக்கிறேன். எல்லாவற்றிலும் கொடிமரம் இல்லாதது தெரியும்.
உங்கள் பதிவு மூலம் கொடிமரம் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
அடுத்த முறை திருவாவடுதுறை, திருவிடைமருதூர் இரண்டுக்கும் சென்றுவருகிறேன். தகவலுக்கு நன்றி (திருவிடைமருதூர் சென்றிருக்கிறேன்).
நீக்குஇந்த முறை குருகைக்காவலப்பர் கோயிலுக்கும் சென்றிருந்தோம். நிச்சயம் பதிவில் வரும். எவ்வளவு அருமையான தரிசனம் அது என்று எண்ணி வியக்கிறேன். அர்ச்சகர், புகைப்படம் எடுக்க அனுமதித்தார். நல்ல பெரிய கோயில் அது.
கொடிமரத் தகவலுக்கு நன்றி. பதிவைச் சென்று பார்க்கிறேன்.
நீக்குகுருகைக்காவலப்பர் கோயிலுக்கு போனீர்களா? மகிழ்ச்சி. அந்த கோயிலுக்கு இறைவன் அழைத்த அற்புத தருணத்தைபற்றி பதிவு போட்டு இருக்கிறேன்.
நீக்குஅது உள்ளூர் ஆட்கள் கூட வராமல் இருக்கும் போதும் போய் இருக்கிறோம் அப்புறம் கும்பாபிஷேகம் நடந்து நல்ல கூட்டம் வந்த போதும் போய் தரிசனம் செய்து பதிவு போட்டு இருக்கிறேன்.
நினைவுகளை பகிர வைத்தது உங்கள் பதிவு.
முதல் பின்னூட்டத்தில் கொடுமரம் என்று தவறுதலாக வந்து விட்டது, மன்னிக்கவும்.
பதிலளிநீக்குநாம் மாயவரத்தில் இருக்கும் போது கொடிமரம் இல்லையே கோயிலில் எந்த ஆண்டு கொடிமரம் வைத்தார்கள் என்று கூகுளில் தேடிய போது ஆனந்தவிகடன் பகிர்வு கிடைத்தது.
//அனைத்து மரங்களையும் கொடிமரமாகப் பயன்படுத்த முடியாது. 60 அடி நீளத்துக்கு ஒரே மரமாக எந்தவொரு கணுவோ குறையோ இல்லாமல் அனைத்து அம்சங்களும் பொருந்தி இருக்க வேண்டும். நம் பகுதிகளில் எங்குத் தேடியும் சரியான கொடிமரம் செய்யத் தகுதியான மரம் கிடைக்கவில்லை. சிலர், 'தூத்துக்குடி துறைமுகத்துக்குச் சென்று பாருங்கள், அங்குக் கிடைக்கும்' என்றார்கள். அங்குச் சென்று தேடியதில் நாங்கள் எதிர்பார்த்தபடியே சுமார் 60 அடி நீளத்துக்கு எந்தவித குறையும் இல்லாமல் ஒரே சீராக இருந்த மலேசியத் தேக்கு மரம் ஒன்று கிடைத்தது. அந்த மரம் ராஜேந்திர சோழன் ஆட்சி செலுத்திய மலேசியாவுக்கு உட்பட்ட கடாரம் தீவிலிருந்துதான் வந்திருந்தது. அந்த ஒரு மரத்தின் விலை மட்டும் சுமார் 14 லட்சம் என்று கூறினார்கள். அந்த மரத்தைத் தூத்துக்குடியிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்குக் கொண்டு வந்த செலவே ஒரு லட்சத்தைத் தாண்டியது. இங்குதான் ராஜேந்திரன் மற்றும் ஈசனின் துணை எங்களுக்கு இருப்பதைப் பரிபூரணமாக அறிந்துகொண்டோம்.//
2019 ஆம் ஆண்டு வைத்து இருக்கிறார்கள். மதுரை வந்த பின் 2016 ஆம ஆண்டு போய் இருந்தோம் தொடர் பதிவாக போட்டேன் .
கொடிமரம் வைத்தது மேலும் அழகாய் இருக்கிறது. விழாக்களும்(பிரம்மோற்சவம் நடந்து இருக்கிறது) நடப்பது மகிழ்ச்சி.
கொடிமரத்தின் பின்னால் இந்தக் கதை இருக்கிறதா? கொடிமரம் உளுத்துவிடக்கூடாது என்பதற்காக கவசத்தின் உள்ளே தானியங்கள் இடுவார்கள் (நீரை உறிஞ்சிக்கொள்ளும் என்பதற்காகவும்). அப்படியும் உளுத்துவிட்டால் புதிய கொடிமரம் வைப்பார்கள். தேரழுந்தூரில் புதிய கொடிமரம் வைத்ததைப் பார்த்தேன். அதுபோல இன்னொரு ஊரில். சட் என்று நினைவுக்கு வரவில்லை, கொடிமரத்தை எண்ணெயில் ஊறப்போட்டிருந்தார்கள். என் புகைப்படத் தொகுப்பில் நிச்சயம் இருக்கும்.
நீக்குவாசித்தேன். அடுத்த வாரப்பதிவிற்குக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குதொடருங்கள் நெல்லை.
வாங்க ஜீவி சார்... ஆமாம் உங்க கருத்து எதுவும் சொல்லலையே. தேறுமா தேறாதா? நன்றி
நீக்குஜமாயுங்கள்..
நீக்குஜீவி சார்... நீங்கள் குறிப்பிட்டிருந்த கருத்துகள் சரியானவைதான். அவற்றை எழுதும்போதும் கருத்திடும்போதும் கவனத்தில் வைக்கிறேன். நன்றி. (இதுவரை எழுதி அனுப்பிவிட்டவைகளை மாற்ற இயலாது)
நீக்குஅளவான குழந்தைகள் என்பதே
பதிலளிநீக்குஅளவான குடும்பம் என்றாகி விட்டது
ஆஹா... அப்படீன்னு சொல்றீங்களா?
நீக்குவரலாறுகள் கங்கை கொண்ட சோழபுரம் படங்கள் அனைத்தும் சூப்பர்.
பதிலளிநீக்குகங்கை கொண்ட சோழபுரத்தை நேரடியாக தரிசிக்காமல் விட்டோமே என்ற எண்ணம் எமக்கு இன்றும் உண்டு.
வருகின்றோம் அடுத்து காண....
வாங்க மாதேவி அவர்கள். மிக்க நன்றி
நீக்குhttps://mathysblog.blogspot.com/2014/07/blog-post_27.html
பதிலளிநீக்குமன்னன் மாளிகை மண்மேடு ஆனாலும் !
இந்த பதிவில் மேல் தளம் எல்லாம் போன படங்கள் இருக்கும்.