23.3.26

"திங்க"க்கிழமை  : மாங்காய் சாம்பார், சேனை சீவல் (சிப்ஸ்) JKC - + உணவு – மாறிவரும் ரசனை - நெல்லைத்தமிழன்


மாங்காய் சாம்பார், சேனை சீவல் (சிப்ஸ்)

 JKC

வர வர இந்தப்பகுதியில், என்ன, எப்படி, எதை சமைப்பது என்று எழுதுவதில் ஒரு விவஸ்தை இல்லாமல் ஆகி விட்டது. ஐம்பது வருடமாக சாம்பார் செய்து சாப்பிடுபவர்களுக்கு சாம்பார் செய்வது பற்றி ஒரு பாடம் …பார்ப்பார்களா? !!!. பொறுங்க, இது 50 வருடம் சாம்பார் சாப்பிட்டும் சரவணபவன் ஹோட்டல் சாம்பாருக்கு சப்பு கொட்டுபவர்களுக்காக மட்டும்.

 மாறுதலுக்காக ஒரு மாங்காய் சாம்பார். மாறுதல்? …புலி இல்லா சாம்பார். சே …புளி இல்லா சாம்பார்.  

 30 நாள் 30 சாம்பார் செய்யும் நீங்கள் உங்களுக்கு பிடித்த சாம்பார் செய்ய தொடங்குங்கள். அதில் போடும் தான்களை நீக்கிவிட்டு சின்ன வெங்காயம், மாங்காய், தக்காளி மட்டும் சேர்த்து சாம்பார் செய்யுங்கள். புளி கரைசல் சேர்க்காதீர்கள். அவ்வளவு  தான். அதுதான் மாங்காய் சாம்பார். இந்த மாங்கா (சாம்பார்) மடையன் செய்த சாம்பார் பா(ப)டம் கீழே

டிரம்ப் அண்ணாச்சி என்னதான் மிரட்டினாலும் பருவகாலம் மட்டும் நான் மாறியே தீருவேன் என்று அடம் பிடிக்கிறது. மார்ச்சில் பூத்து ஏப்ரலில் காய்க்கும் பக்கத்து வீடு மாமரம் ஜனுவரியில் பூத்து பெப்ருவரியில் காய்க்க ஆரம்பித்துட்டுது. கிளை, காய் பாரம் தாங்காமல் ஒடிந்து விழ கொஞ்சம் மாங்காய்கள் எங்களுக்கும் கொடுத்தார்கள். வடுமாங்காய் செய்யும் வடு மாங்காயும் இல்லை, ஆவக்காய் செய்யும் அளவு முற்றலும் இல்லை. நடுத்தரம். நறுக்கி மிளகாய்ப்பொடி போட்டால் நாலு நாளைக்குத்தான் நன்றாக இருக்கும். ஆலோசித்ததில் புளி இல்லாமல் மாங்காய் தக்காளி போட்டு சாம்பார் வைத்தால் என்ன என்று தோன்றியது. அதனால் தான் இந்த சாம்பார்.  நன்றாகவே இருந்தது…. எனக்கு. 

 துவரம்பருப்பு, கட்டிப்பெருங்காயம், விளக்கெண்ணெய் ½ ஸ்பூன் சேர்த்து குக்கரில் வேக வைத்து  மசித்துக்கொள்ளவும். நான் துவரம் பருப்புடன் கொஞ்சம் மைசூர் பருப்பு எனப்படும் canadian lentils சேர்த்துக்கொள்வது வழக்கம். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்பொடி, சாம்பார் பொடி, மிளகாய் பொடி, மல்லிப்பொடி, உப்பு சேர்த்து நெடி அடங்கும் வரை கொதிக்க விடவும். நெடி அடங்கியபின் கழுவிய மாங்காய் துண்டங்கள், தக்காளி துண்டுகள், கடைந்த பருப்பு,  வேண்டிய தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். மாங்காய் வெந்தபின் கடுகு, வற்றல் மிளகாய், வெந்தயம் அல்லது சீரகம், காயப் பொடி, தாளித்து இறக்கவும்.  அதிகம் கொதிக்க விட வேண்டாம், மாங்காய் கரைந்து விடும். 

 

என்ன கேரட் பற்றி சொல்லவே இல்லையே என்று கேட்கிறீர்களா? மேக்கப் போடும்போது கடைசியில் கன்னத்தில் ரோஸ் பவுடர் கொஞ்சம் போடுவது போல், கவர்ச்சிக்காக.   

சரி அடுத்து சேனை சீவல் செய்யலாம்.

சேனை சீவல்  

சேனை துண்டு ஒன்று எடுத்து தோல் சீவி சின்ன துண்டுகளாக நறுக்கி பஜ்ஜி சீவல் கட்டையில் பஜ்ஜிக்கு சீவுவது போல் சீவி எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவி, உலர்த்திக்கொள்ளுங்கள். 

 

வாணலியில் எண்ணெய்யில் பொறித்து எடுத்து உப்பு மிளகுதூள் பிரட்டி காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவும். 

திப்பிச திலகம் கீதா மாமி இந்த திப்பிசத்திற்கு ஒரு செர்டிபிகேட் தருவாரா?   

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

திங்கள் - உணவு மாறிவரும் ரசனை 

நெல்லைத் தமிழன்

சென்ற வாரத்தில் பானுமதி வெங்கடேஸ்வரன் மேடத்தின் முட்டையில்லா சாக்லட் கேக்பதிவிற்கு துரை செல்வராஜ் சாரின் ஒரு பின்னூட்டம் இவ்வாறு இருந்தது. 

அந்தக் காலத்தில் #₹%& கபே
என்று கடைகள்... சாப்பிடுவதற்கு மன நிம்மதி..

இப்போது டீக்கடையில் கூட முட்டை போண்டா
சிக்கன் பகோடா, பீப் வறுவல்....

எங்கெங்கு பார்த்தாலும் புலால் மயம்...

சைவ உணவு உண்போர்க்கு
மிகவும் கஷ்டம்..

ஹோட்டல் தொழில் வந்த ஆரம்ப காலத்தில் (என் நினைவிலிருந்து எழுதுகிறேன்) பெரும்பான்மையாக சைவ உணவகங்களே இருந்தன. அதிலும் பயணங்களின்போது பேருந்து நிறுத்தும் இடங்களிலெல்லாம் சைவ, அதிலும் பிராமணவகை உணவகங்களே இருந்தன. திருவள்ளுவர் போக்குவரத்துக்கழகம் ஆரம்பித்த புதிதில் (அதாவது நான் 77களில்) திருநெல்வேலிக்குப் பிரயாணம் செய்தபோது, வழியில் பேருந்து நிறுத்தும் இடத்தில் பிராமண பாஷையில் பொங்கல் உப்புமா இட்லி தயார். கொத்ஸு உண்டு. சாப்பிட வாங்கோஎன்று ஒருவர் கூவிக்கொண்டு வந்தது நினைவில் இருக்கிறது. நெல்லையிலும் என் அம்மா வழி உறவினர்கள் வீட்டிற்குச் சென்றால், அவ்வப்போது சந்திரவிலாஸிலிருந்து பேப்பர் ரோஸ்ட் வரும் (நியூஸ் பேப்பரின் மீது, இலையில் தோசையை வைத்து இரண்டடி நீளத்திற்குச் சுருட்டிக் கொடுப்பார்கள். சாம்பார் வாங்கிக்கொள்ள வீட்டிலிருந்து பாத்திரம் செல்லும்). பேப்பரில் சுருட்டி வருவதால்தான் பேப்பர் ரோஸ்ட் என்று நினைத்திருந்தேன். 

80களின் இறுதியில், 90களின் ஆரம்பத்தில் சரவண பவனும் பிராமணவகை உணவை சிறிது மேம்படுத்தி சைவ உணவு பாரம்பர்யத்தில் வழங்கிய உணவும் ரொம்பவே நன்றாக இருந்தது. திநகர் மற்றும் சுற்றுப்புறங்களில் கையேந்தி பவன்களும் சைவ உணவையே வழங்கிவந்தன. 77களிலிருந்தே கடைகளில் புரோட்டா கிடைப்பது சகஜமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தோசை சாப்பிடும் ஆசை போய் புரோட்டா சாப்பிடும் ஆசை, கடைகளில் சாப்பிடும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஏற்பட்டது. 

என் நினைவில் 2000க்குப் பிறகுதான் உணவில் மாற்றங்கள் வர ஆரம்பித்தது. நமக்குத் தெரிந்த தலப்பாக்கட்டி போன்ற பிரியாணி வகை கடைகள் வர ஆரம்பித்திருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. 2005க்குப் பிறகு பிரியாணிக்கடைகள் ஆங்காங்கே வர ஆரம்பித்தன. தி.நகர் ரங்கநாதன் தெருவில் இரண்டு நல்ல உணவகங்கள் (சைவம்), பழக்கடை ஜூஸ் கடை, கரும்புச்சாறு கடைகள் இருந்தது போக, அதன் பிறகான காலகட்டங்களில் அசைவ பிரியாணிக் கடைகள் வர ஆரம்பித்தன. தற்போது பார்க்கும் இடங்களிலெல்லாம் பிரியாணி, அசைவ வறுவல்கள் கடை மிக அதிகம். 

பிரியாணிக்கடைகள் அதிகமாகும்போது வாடிக்கையாளர்களின் உணவு டேஸ்டும் மாறிவிடும். அதனால்தான் சரவணபவனில் மாற்றம் வந்தது என்று நினைக்கிறேன். கேடரர்களும் காலத்தின் மாறுதல்களுக்கு ஏற்ப நூடுல்ஸ், சைனீஸ் உணவு, பிரியாணி, ஃப்ரைட் ரைஸ் என்று மாறிவிட்டனர். 

சைவ உணவே பிரதானம் என்று இருப்பவர்களும் மாறிவிடக் கூடாதே என்ற கவலையில், சைவ இறால் தொக்கு, சைவ சிக்கன் ஃப்ரை போன்ற வெரைட்டிகளை வழங்கும் உணவகங்களும் கேடரர்களும் தற்காலத்தில் வர ஆரம்பித்துள்ளனர். 

சைவ உணவகங்களில் வரும் மாற்றங்களை கொஞ்சம் விவரித்து எழுதினால் சர்ச்சையாகிவிடும். தற்காலங்களில் உரிமையாளர்கள் மாறுகின்றனர். பிரபல சங்கீதா உணவக பிராஞ்சுகளின் உரிமையாளர்களும் மாறுகின்றனர். கோயில் நகரங்களில் கோயிலின் அருகிலேயே அசைவ உணவகங்கள் நிறைய வந்துவிட்டன. 

கோயில்களில் வெளியிலிருந்து உணவு தயாரித்து, பிரசாதம் என்ற பெயரில் கடை வைத்து விற்பனை செய்வது கடந்த எட்டு ஆண்டுகளாக, குறிப்பாக ஐந்து ஆண்டுகளாக அதிகமாகிவிட்டது. அதை வியாபாரம் என்ற அளவில் பார்க்கும் எண்ணம் வந்தே ஐந்து ஆண்டாகிவிட்டது. காரணம் ஒரு ஏலதாரர், மொத்தமாக ஒரு இடத்தில் தயார் செய்து, திருவரங்கம், மற்றும் சுற்றியுள்ள கோயில்களில் ப்ரசாதம் என்று விற்கும் தன்மை அதிகமாகிவிட்டது. திருப்பதியில் லட்டு பிரசாதம் கொடுக்கிறார்கள், ஒப்பிலியப்பன் கோயில் மற்ற கோயில்களில் புளியோதரை, சில கோயில்களில் சர்க்கரைப் பொங்கல், அனுமார் கோயில்களில் மிளகுவடை. ஒருவேளை பக்தர்கள் இதுக்காகத்தான் அந்தக் கோயிலுக்குச் செல்கிறார்களோ என்று நினைத்து, எல்லாக் கோயில்களிலும் லட்டு, புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், மிளகுவடை என்று சரமாரியாக இதனை வியாபாரமாக்கிவிட்டார்கள். 

இன்னும் சில வருடங்களில் டீ, காபி,  பிறகு சைவ பிரியாணியையும் பிரசாத ஸ்டால்களில் கொண்டுவந்துவிடுவார்கள் என்று தோன்றியது. நல்லவேளை தற்போது சைட் டிஷ் என்று சாம்பார் சட்னி, காய் தருவதில்லை. அதுவும் வந்துவிடுமோ?

இதனால் பெறப்படும் நீதி என்ன என்றால், காலத்துக்கு ஏற்றபடி எல்லாமே மாறும். அதனை நினைத்து நாம் வருந்தக் கூடாது. மக்களின் ரசனை, ஆர்வம் எல்லாமே மாறிவிட்டதுதான் காரணம். ரொம்ப புலம்பினால், தள்ளு பெருசு.. என்று நம்மை ஒதுக்கிவிடுவார்கள்.

74 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இன்று ஜீவி சார் கதைப் பதிவை எதிர்பார்த்திருப்பாரோ

      நீக்கு
    2. ஹி..ஹி.. இல்லை, நெல்லை. திங்கட்கிழமையில் கைவைக்க லேசில் துணிய மாட்டார்கள். என்று தெரியும். இங்கே போதாக்குறைக்கு முக நூலில் வேறே!
      நேற்று செம்ம (!) வேலை. கங்கை கொண்ட சோழபுரம் என் மனங்கவர்ந்த
      பிரதேசம்! ஒரு சிறுகதைக்காக நிறைய தகவல்களை வாசித்து தெரிந்து கொண்டிருந்திருக்கிறேன். வர முடியாமல் போய் விட்டது. மன்னிக்கவும்.
      அதனால் தான் இன்று சீக்கிரமே வந்து விட்டேன். உங்களைப் பார்த்ததில் சந்தோஷம்.

      நீக்கு
    3. நேற்று கூட உங்களைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன் வாரம் ஒரு பாசுரம் புதிய பதிவுகள் எழுதிக்கொண்டிருந்தபோது. ஜீவி சார் மாதிரி சங்க இலக்கிய பாடல்களை வைத்துக்கொண்டு அதைத் தொடர்புபடுத்தி கதை எழுதுவது போன்று எனக்கு வரவில்லையே. அந்தத் திறமை இருந்திருந்தால் சிறப்பா எழுதலாமேன்னு யோசித்தேன். ஆனால் அது நேரமெடுக்கும் வேலை என நினைக்கிறேன்

      நீக்கு
  2. மாங்காய் சாம்பார் நன்று. நான் இதுவரை சாப்பிட்டதில்லை.

    திருவனந்தபுரத்தில் சென்ற வருடம் தங்கியபோது, மரத்தில் கைக்கெட்டும் தூரத்தில் கிளிமூக்கு மாங்காய் ஒன்றைக்கூட பறிக்க அனுமதி தரலை அந்த தங்குமிடக்கார்ர்.

    பதிலளிநீக்கு
  3. தினமும் சாம்பாருக்கு மாறுதலாக மோர்க்குழம்பு, வத்தக்குழம்பு, ரசம் இவற்றை வைத்துக் கொள்ளலாம்.
    வழக்கத்தில் மற்றவர்கள் கொள்ளாத வழக்கமாக சைடு சமாச்சாரங்களாக என்னன்னவோ ஒப்பனைகள் செய்ததை ரசித்தேன். குறிப்பாக அந்தக் கன்னத்துப் பூச்சு! ஓ! ரசனைகள் தாம் எத்தனை விதம்?.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருப்பது தான் அவற்றின் அழகு!

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. மாங்காய் சாம்பார், சேனை வறுவல் நல்ல பொருத்தம்.
    செய்முறையும், படங்களும் அருமை.

    "மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும் "என்பார்கள்.
    கோடையில் மாங்காய் சூடு என்றாலும் . கிளிமூக்கு மாங்காய் சீஸனில்
    மாங்காய், முருங்கைகாய் போட்டு சாம்பார் செய்து விடுவேன்.

    என் கணவருக்கு மாங்காய் சாம்பார் மிகவும் பிடிக்கும்.
    எல்லா காய்களும் போட்டு மாங்காய் போட்டு சாம்பார் செய்து விடுவேன்
    புளியை குறைத்து மாங்காய் போட்டு செய்வேன்.
    தன் மாங்காய் சாம்பார் செய்து விட வேண்டும்.

    கோடை விடுமுறையில் வருபவர்களுக்கு மாங்காய் மற்றும் காய்கள் , முருங்கை கீரை போட்டு கூட்டாம்ஞ்சோறு செய்து விடுவார்கள்.

    மாங்காய் சீஸனில் மாங்காயை சிறு துண்டுகளாய் வெட்டி. மிளகாய்த்தூள், மஞ்ச்ள் தூள், உப்பு போட்டு குலுக்கி அதில் பெருங்காயம் கடுகு தாளித்து கொட்டிய தீடீர் ஊறுகாய் பிடிக்கும் வீட்டில் எல்லோர்க்கும்.


    வறுத்த வெந்தய பொடி , மிளகாய் த்தூள் போட்டும் மாங்காய் ஊறுகாய் செய்வேன்.

    மாயவரத்தில் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் கோடையில் மாங்காய், மற்றும் எலுமிச்சை ,வாழைக்காய் வரும் எங்கள் வீட்டுக்கு.

    பதிலளிநீக்கு
  6. படத்தில் இருக்கும் தேவஸ்தான பிரசாத ஸ்டால் எந்த ஊர் திருக்கோயில் சார்ந்தது, நெல்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு இருந்த திருவரங்கம் கோயில் பிரசாத ஸ்டால்

      நீக்கு
    2. "முன்பு இருந்த திருவரங்கம் கோயில்?" க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    3. பாத்தீங்களா கீசா மேடம். அர்த்தமே மாறிடுச்சே. திருவரங்கம் கோயிலில் முன்பிருந்த பிரசாத ஸ்டால்

      நீக்கு
    4. ஏன் ஸ்ரீ மட்டுமே இருக்கிறது கடை பெயர்ப் பலகையில்?

      நீக்கு
  7. /பேப்பரில் சுருட்டி வருவதால்தான் பேப்பர் ரோஸ்ட் என்று நினைத்திருந்தேன். /
    அவ்வளவு அப்பாவியாக இருந்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையாகவே அதுதான் காரணம் என்று இப்போவும் நம்பறேன். அப்போ இருந்த ருசி இப்போ சுத்தமா இல்லை என்பது வருத்தம்தான்

      நீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. ஒரு தடவை குறிப்பிட்டால் போதாதோ? பதிவில் தான் நா நடுங்க எத்தனை யாணிகள்?

    பதிலளிநீக்கு
  10. /இதனால் பெறப்படும் நீதி என்ன என்றால், காலத்துக்கு ஏற்றபடி எல்லாமே மாறும். அதனை நினைத்து நாம் வருந்தக் கூடாது. மக்களின் ரசனை, ஆர்வம் எல்லாமே மாறிவிட்டதுதான் காரணம். ரொம்ப புலம்பினால், தள்ளு பெருசு.. என்று நம்மை ஒதுக்கிவிடுவார்கள்./
    நல்ல அட்வைஸ். 1985 வாக்கில் நான் பெஸன்ட் நகரில் வசித்தபோது பெஸன்ட் நகர் பஸ் ஸ்டாண்டில் இருந்த உடுப்பி ஹோட்டலைத் தவிர வேறு உணவகம் கிடையாது. இன்றைக்கு நூற்றுக் கணக்கில் வகை வகையாக உணவகங்கள். ஆனால் துரை செல்வராஜ் அவர்கள் சொல்வது போல் எந்த உணவகத்துக்குப் போனாலும் சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக்கொள்வது போல்தான். காலத்தின் கோலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை சூர்யா சார். உணவுத் தயாரிப்பு விலை போன்ற எதிலும் அறம் துளிக்கூட இல்லை

      நீக்கு
  11. முன்பு கோயில்களுக்கு போனால் கட்டுசாதம் , இட்லி எடுத்து சென்று கோயில் தரிசனம் முடித்து ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிட்டு வருவோம்.
    உறவினர்கள் வரும் போது ஆளுக்கு ஒரு தூக்கு கொடுக்கப்படும் உணவு மூட்டைகள், தண்ணீர் கூஜாக்கள் எடுத்து செல்வோம்.

    இப்போது எல்லா கோயில்களிலும் பிரசாத ஸ்டால்கள் வைத்து இருப்பதால் உணவு சுமக்க வேண்டாம். சுமப்பதற்கும் யாரும் முன் வருவதும் இல்லை.

    சுவாமி மலை போனால் காலை உணவும் எடுத்து செல்ல வேண்டாம்.
    காலை வெண்பொங்கல், வடை, கிடைக்கும்.

    மதியம் புளியோதரை தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், , வடை வாங்கி மதியம் நேர உணவை முடித்துக் கொள்வோம்.


    //காலத்துக்கு ஏற்றபடி எல்லாமே மாறும். அதனை நினைத்து நாம் வருந்தக் கூடாது. மக்களின் ரசனை, ஆர்வம் எல்லாமே மாறிவிட்டதுதான் காரணம். ரொம்ப புலம்பினால், தள்ளு பெருசு.. என்று நம்மை ஒதுக்கிவிடுவார்கள்.//

    காலம் மிகவும் மாறி விட்டது . கடைகளில் விற்கும் உணவு மட்டும் பிடிக்க வேண்டும், பிடிக்கவில்லை என்றால் நெல்லைத் தமிழன் சொல்வது போல் ஒதுக்கப்படுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். இப்போ உள்ள தலைமுறை (என் பசங்க) நாம் அவர்கள் சாப்பிடும் உணவை ஏற்றுக்கொண்டு பாஸ்தா அது இது என மாறிக்கணும் எங்க போனாலும் தோசை அடை மோர்சாதம் உருளை ரோஸ்ட் சாம்பார் கூட்டு என ஜல்லியடிக்கக்கூடாது ன்றாங்க. மனைவிக்கு நோ ப்ராப்ளம் அவளுக்கு சந்தோஷமே. எனக்குத்தான் ரொம்ப கஷ்டம். சாப்பிட்டாமல் அல்லது பழத்தை வைத்து ஓட்டிவிடுவேன் ஆனால் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது மிகக் கடினம்

      நீக்கு
    2. எனக்கும் தயிர் சாதம் , தோசை, பிரட், பழங்கள் போதும் .வெளியிடங்களில் பையன், மகள், மருமகள், எனக்கு பிடித்த மாதிரி உணவுகளை வயிற்றை கெடுக்காத என் பற்களுக்கு எளிதான உணவை வாங்கி தருவார்கள்.

      தயிர் சாதம் தங்கும் ஓட்டலில் செய்து கொடுத்து விடுவாள்.
      திடீர் இடியாப்பம் மைக்கோரோ ஓவனில் வைத்து தயார் செய்து தந்து விடுவாள், மாவு எடுத்து போய் தோசை செய்து கொடுத்து விடுவாள்.

      பேரன் ஒரு வாரம் லண்டனுக்கு பள்ளி டூர் போய் வந்தான்
      நேற்று வந்தவுடன் அம்மாவிடம் தயிர் சாதம் கேட்கிறான்.
      அது தான் கிடைக்கவில்லை என்று.
      அவனுக்கு இரவு கொஞ்சம் தயிர் சாதம் வேண்டும் எப்போதும்.

      நீக்கு
    3. எனக்கும் பசங்க இதைத் தந்துடுவாங்க. Flexible ஆ இருப்பாரான்னு ஆழம் பார்க்கிறாங்க ஹாஹா

      நான் தனியா இருக்கும்போது வெளிநாட்டுப் பயணம் போய் எத்தனை மணிக்கு திரும்பிவந்தாலும் சுடச்சுட சாதம் வெந்தயக் குழம்பு உருளை ரோஸ்ட் பண்ணிச் சாம்பிடுவேன்

      கவின் விருப்பம் சூப்பர்

      நீக்கு
  12. நெல்லைத்தமிழன் மக்களின் மாறிவரும் ரசனையை பற்றி அருமையாக சொல்லி விட்டார்.

    நெல்லை சொன்னது போல முன்பு உடுப்பி ஓட்டல், போத்தி ஓட்டல், சைவ ஓட்டல் என்ற பெயரில் நிறைய இருந்தது, நெல்லை மண்பானை சமையல் என்ற ஓட்டல்கள் இருந்தது.

    அப்புறம் செட்டி நாட்டு மெஸ் வந்தது.

    ஓட்டல்களில் இப்போது சிறுதானிய (மில்லட்) தோசைகள் வந்து விட்டது. அப்படி சிறுதானியம் வைத்து உணவு பல விதமாக செய்து தரும் பரம்பரிய உணவு என்ற பேரில் கடைகள் புதிதாக தோன்றி இருக்கிறது.

    பாதை ஓரங்களில் காலை நேரம் பல வித கஞ்சிகள், கூழ்கள் அதற்கு பக்கவாத்தியமாக கொத்தவரை வற்றல் , பல வித கலரில் வற்றல்கள், மோர் மிளகாய் என்றும்

    காலை நேரம், கார இனிப்பு பணியாரம், , மற்றும் இட்லி , பல வித தோசைகள் , ஆப்பம் , இடியாப்பம் பலவிதவடைகள் , போண்டா, அப்பம் விற்கும் கடையும் மதுரையில் பார்க்க முடியும்.

    மதியம் குழம்புகள், கலந்த சாதம் என்று விற்கிறார்கள். வீட்டில் சாதம் மட்டும் வைத்து கொள்ளலாம்.

    ஓட்டல்களிலும் 11 மணிக்கு காய், குழம்புகள் வாங்கி கொள்ளலாம் முன்பு கவரில் சுற்றி வைத்து இருப்பார்கள், இப்போது அழகிய டப்பக்களில் விற்கிறார்கள்.

    மதுரை முழுவதும் காலை முதல் இரவு வரை உணவுக்கு தட்டுபாடே இல்லை.

    காலையே டீ கடைக்கு தூக்குடன் போகும் குடும்பங்களை பார்த்து இருக்கிறேன் அம்மா வீட்டு பக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை அனுபவம் சூப்பர். நிறைய இடங்களில் காலையில் டீ காபி வாங்க தூக்கு கொண்டு போறதைக் கண்டிருக்கிறேன்

      மதுரை பிடித்த ஊர் நெல்லையும் அப்படியே

      நீக்கு
  13. என்ன இருந்தாலும் அமெரிக்க ஹிந்துக் கோயில்களில் இருக்கும் சிற்றுண்டிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தனித்த இட வசதி, அந்த நேர்த்தி,
    சுவை, கனிவான கவனிப்பு எல்லாம் இங்கு வராது தான்! கோயில் -- கோயில் சார்ந்த இடங்கள் என்று தனித்தன்மையுடன் அங்கிருக்கும் ஹிந்துக் கோயில்கள் இயங்குவது இயல்பாகவே நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ஜீவி சார். பெங்களூர் இஸ்கானிலும் உணவு நேர்த்தியைப் பார்க்கிறேன். மகள் யுகே கோயிலில் உணவு சூப்பர் இடமும் விசாலம் அழகு என்பாள்

      நீக்கு
    2. கீதாம்மா வரட்டும். ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோயில் அழகுகள் பற்றி நிறையச் சொல்லுவார். அங்கிருக்கும் நூலகமும் அவர் வாசித்த
      சி.சு. செல்லப்பாவின் சுதந்திர தாகம் நூலும் ஹூஸ்டன் கோயிலை நினைத்தாலே என் நினைவுக்கு வந்து விடும். அந்த அளவுக்கு அவர் விவரித்ததெல்லாம் மறக்க முடியாதது.

      நீக்கு
  14. ஆதங்கமான கருத்துரைக்கு நெல்லை அவர்களது
    கை வண்ணம் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  15. /// இன்னும் சில வருடங்களில் டீ, காபி, பிறகு
    சைவ பிரியாணியையும் பிரசாத ஸ்டால்களில்
    கொண்டுவந்துவிடுவார்கள் என்று தோன்றியது...///

    விரைவில் இந்நிலை வரக்கூடும்....

    பதிலளிநீக்கு
  16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  17. மக்களின் பிரியாணி மோகம்
    எல்லை கடந்து விட்டது...

    தஞ்சை வீதி ஒன்றில் பிள்ளையார் கோயிலுக்கு
    நேர் எதிரில் பிரியாணிக் கடை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் பாட்டுக்கு அவர் இது பாட்டுக்கு இது என்பது மக்களின் உணர்வாக மாறிவிட்டது. இவர்களைத்தான் கருணாநிதி சோற்றால் அடித்த பிண்டங்கள் என்றாரோ?

      நீக்கு
  18. கும்பகோணத்தில் கோயில ஒன்றைச்
    சுற்றி பிரியாணி மற்றும் சுட்ட கறிக்
    கடைகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்தேன்.‌ஒன்றும் செய்ய ஏலாது. கோயிலுக்குள் வரலையே என ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்

      நீக்கு
  19. மட்டன் பிரியாணிக்காக
    எல்லை கடந்த பெண்ணைத் தான்
    தமிழகம் அறியுமே!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது பிரியாணிக்கா இல்லை அதைக் கொண்டு வந்தவனுக்கா

      நீக்கு
  20. //சைவ பிரியாணியையும் பிரசாத ஸ்டால்களில் கொண்டுவந்துவிடுவார்கள் என்று தோன்றியது//

    கோவையில் கோயில்களில் தக்காளி சாதம் பிராயாணி கறி மசாலா போட்டு கொடுக்கிறார்கள். எங்கள் கொழுந்தனார் வீட்டுப்பக்க கோயில்களில்
    என் ஓர்ப்படி புலப்புவாள் இப்படி பிரசாதம் கொடுக்கிறர்களே என்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன அநியாயம் பாருங்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பரோட்டா சப்பாத்தி குருமா குஸ்கா என எல்லாமே மாடல் அரசில் வந்துவிடும் போலிருக்கு. மக்களுக்கு இறைவனைவிட வயிறு பெரிதாகிவிட்டதோ

      நீக்கு
    2. மனிதன் தனக்கு பிடித்ததை இறைவனுக்கு படைத்து சாப்பிடுகிறான் நெல்லை. கண்ணப்பர் தான் சாப்பிடும் உணவை அவருக்கு படைத்தான்.
      தினம் நாம் சாப்பிடும் உனவை மனதார இரைவனுக்கு படித்து சாப்பிடுவது போல


      ஓர்படி பக்கத்தில் இருக்கும் கோயில் தனியார் கோயில்கள்அறரநிலைத்துறை கோயில் இல்லை.
      அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அன்பாய் கொடுக்கும் உணவை மறுக்க கூடாது என்று வாங்கி வந்து வீட்டில் வேலை செய்யும் பாட்டிக்கு கொடுத்து விடுவாள்.

      கோயில்களில் கொடுக்கும் அன்னதான உணவை நீறைய பேர் வாங்கி கீழே போட்டு போவதை பார்க்கும் போது மனது வேதனை படும். எங்கள் வீட்டில் உணவை வேஸ்ட் செய்யக்கூடாது என்பார்கள்
      கோபித்துக் கொண்டு சாப்பிடவில்லை என்றால் அம்மா இன்று உன் பேரில் உணவு எழுதபடவில்லை என்பார்கள்(இறைவன் உனக்கு படியளக்கவில்லை என்பார்கள்.)

      https://www.youtube.com/watch?v=1_VSUIzk5aw&t=23s
      இந்த :உண்டி" என்ற படத்தை பார்த்தால் உணவை வீணாக்க பிடிக்காது அனைவருக்கும்.

      நீக்கு
    3. தினம் நாம் சாப்பிடும் உணவை மனதார இறைவனுக்கு படைத்து (கண்டருள செய்து) சாப்பிடுவது போல

      நீக்கு
    4. நான் என்ன சாப்பிட்டாலும் இறைவனுக்குப் படைத்துவிட்டுத்தான் சாப்பிடுவேன். ஆனால் கோயில் பிரசாதம் இன்ன இன்ன என்று ஒரு முறை இருக்கு இல்லையா? அதனால அதில் புதுமையை மனம் ஏற்பதில்லை

      நீக்கு
  21. மாங்காய் சாம்பார் - சுவை. சேனை சிப்ஸ் - அதுவும் கொள்ளாம். முன்பு கல்யாணங்களில் இந்த வகை சிப்ஸ் கிடைத்தது. இப்போது பெரும்பாலும் கிடைப்பதில்லை!

    காலப் போக்கில் பல விஷயங்கள் மாறிவிட்டன. சைவம் மட்டுமே சாப்பிடும் பலருக்கு இன்றைய உணவகங்கள் சரிப்பட்டு வருவதில்லை. பல இடங்களில் சாப்பிட ஒன்றும் கிடைக்காமல் பழங்களையும், பழரசங்களையும் மட்டுமே உண்ண வேண்டிய கட்டாயம். கடைசியில் சொன்னது போல, ”தள்ளு பெருசு” என்று சொல்லி விடுவார்கள்! அதனால் நாமாக ஒதுங்கிக் கொள்வது நல்லது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா. வெங்கட்... தில்லி க்கு விதவித உணவுகளை ஒரு பிடி பிடிக்க ஒரு வாரம் பத்து நாட்கள் போகும் எண்ணம் இருக்கு. திட்டமிடும்போது உங்கள்ட கேட்டுக்கறேன்

      நீக்கு
  22. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  23. /// கோயில்களில் தக்காளி சாதம் பிராயாணி கறி மசாலா போட்டு கொடுக்கிறார்கள். எங்கள் கொழுந்தனார் வீட்டுப்பக்க கோயில்களில்... ////

    தஞ்சையிலும் உபயதாரர்கள் இப்படி தயாரித்து வழங்குகின்றனர்...

    பதிலளிநீக்கு
  24. பலதரப்பட்ட அடியார் பெருமக்களும் அன்பின் வழி நின்று நாயன்மார் என ஆராதிக்கப்படும் போது சைவ பிரியாணியும் கறி மசாலா தூளும் பெரிய விஷயங்கள் இல்லை...

    பதிலளிநீக்கு
  25. 2026 தேர்தலில் ஜெயித்து வருகின்ற
    அரசு இறைச்சி மீன் வறுவல் கடைகளை
    கோயிலுக்குள் அனுமதித்து சட்டம் இயற்றினால்
    நாம் என்ன செய்ய முடியும்?....

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் உணவு படக்குறிப்புகளுடன் நன்றாக உள்ளது. மாங்காய் சீசனில் மாங்காய் மட்டும் (புளி இல்லாமல்) போட்டு நானும் சாம்பார் செய்துள்ளேன்.(ஆயுர்வேத மருந்து சாப்பிடும் போது) "மா" சம்பந்த பட்டது வாய்வு தொந்தரவு சிலருக்கு வரும். சாம்பார், சேனைக்கிழங்கு செய்முறை நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    /இன்னும் சில வருடங்களில் டீ, காபி, பிறகு சைவ பிரியாணியையும் பிரசாத ஸ்டால்களில் கொண்டுவந்துவிடுவார்கள் என்று தோன்றியது. நல்லவேளை தற்போது சைட் டிஷ் என்று சாம்பார் சட்னி, காய் தருவதில்லை. அதுவும் வந்துவிடுமோ?

    இதனால் பெறப்படும் நீதி என்ன என்றால், காலத்துக்கு ஏற்றபடி எல்லாமே மாறும். அதனை நினைத்து நாம் வருந்தக் கூடாது. மக்களின் ரசனை, ஆர்வம் எல்லாமே மாறிவிட்டதுதான் காரணம். ரொம்ப புலம்பினால், தள்ளு பெருசு.. என்று நம்மை ஒதுக்கிவிடுவார்கள்./

    உண்மைதான் சகோதரர் நெ. தமிழர் கணிப்பு சரியே..! மாறி வரும் காலங்களில் நாமம் மாற வேண்டியதுள்ளது. இல்லாவிட்டால், இளைய தலைமுறைகள் நம்மை விட்டு ஒதுங்குவதோடு மட்டுமின்றி, ஒதுக்கியும் வைத்து விடுவார்கள். ஆக மொத்தம் சைவமாக என்ன கிடைக்கிறதோ அதை சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும். பிடிப்பதில்லையென்றால் பட்டினிதான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். அனுபவ வார்த்தை. உண்மைதான் ஊரோடு ஒட்டி வாழறோமோ இல்லையோ உறவோடு ஒட்டித்தான் வாழணும்

      நீக்கு
  28. "திப்பிச திலகம் கீதா மாமி இந்த திப்பிசத்திற்கு ஒரு செர்டிபிகேட் தருவாரா?"

    @ஜேகேசி சார், இதிலே திப்பிசம் ஒண்ணுமே காணோமே! ஆகவே நோ திப்பிசம் ப்ரான்ட் உணவு வகை இது. :))))

    பதிலளிநீக்கு
  29. என்னோட அப்பா வீட்டில் மாவடுவும் நீர் எலுமிச்சை ஊறுகாயும் தவிர்த்து வேறே ஊறுகாய் போட்டதில்லை. இந்தத் துண்டம் மாங்காய் ஊறுகாய் கூடத் தாத்தா வீட்டில் எங்க பாட்டி அடிக்கடி போடுவார். அங்கே சாப்பிட்டது தான். மாங்காயில் பச்சடி கூட எங்க வீடுகளில் எல்லாம் ஸ்ராத்தம் அன்னிக்கும், சித்திரை வருஷப் பிறப்பு அன்னிக்கும் மட்டுமே பண்ணுவாங்க. மற்ற மாங்காய்ப் பருவ காலங்களில் எல்லாம் பண்ணினதே இல்லை. ஆகவே மாங்காய் சாம்பாரெல்லாம் கல்யாணம் ஆகி வந்தப்புறமாப் புக்கத்திலும் குடித்தனம் வந்தப்போப் பக்கத்துப் போர்ஷன் பாலக்காட்டு மாமி மூலமாகவுமே தெரிந்து கொண்டேன். அவங்க அவியலில் கூட மாங்காய் சேர்ப்பாங்க.

    பதிலளிநீக்கு
  30. ஜேகேசி சார் இதிலே புளி சேர்க்காமல் பண்ணி இருக்கார். ஆனால் நீர்க்கப் புளி கரைச்சு விட்டே என் மாமியார் பண்ணச் சொல்லுவாங்க. அதோடு சாம்பார்ப் பொடி மட்டுமே போடுவோம். மேலும் சின்னச் சின்ன மாங்காய்களாக முழு மாங்காய்களைப் போட்டே சாம்பார் வைப்பாங்க. இப்படித் துண்டங்களாகப் போட்டுப் பார்க்கவில்லை. மாங்காய்ப் பச்சடி வைக்கவும், மாங்காய் சாம்பார் வைக்கவும் என்றே என் மாமியாரிடம் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய கல்சட்டி உண்டு. அது நிறையப் பச்சடியும் பண்ணுவாங்க. எல்லோரும் அள்ளி அள்ளி விட்டுச் சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டு வாய் பிளந்து உட்கார்ந்திருப்பேன். அதே போல் மாங்காய் சாம்பாரும். தினம் வைக்கும் சாம்பாரெல்லாம் ராத்திரி வரை வரும். மாங்காய் சாம்பார் காலையிலேயே தீர்ந்து விடும். இதிலே என்ன வேடிக்கைன்னால் நம்ம ரங்க்ஸுக்கு மாங்காய்ப் பச்சடியும் பிடிக்காது. மாங்காய் சாம்பாரும் பிடிக்காது. மாமனாருக்கு ஏற்ற மாப்பிள்ளையாக அவற்றைப் பண்ணும் நாட்களிலே கடுப்படிப்பார். மாங்காய் இல்லாமல் கொஞ்சமாய் சாதம் போட்டுக் கொண்டு சாம்பார் மட்டும் விட்டுப்பார். மாங்காய்ப் பச்சடி கிட்டேவே வரக் கூடாது. எனக்கோ மாங்காய்ப் பச்சடி ரொம்பப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  31. என்ன இருந்தாலும் இந்த மாறி வரும் உணவு முறை எனக்குப் பிடிக்கலை. அதோடு நான் தினமும் சாம்பார் எல்லாம் வைக்க மாட்டேன். இட்லி, தோசைக்குத் தேவைப்படும் நாட்களில் கூடக் காலை உண்வாகச் சாப்பிட்டாலோ அல்லது இரவு உணவுக்குப் பண்ணினாலோ அப்போ சாம்பார் கொஞ்சமாக வைப்பேன். மற்றபடி சாப்பாட்டுக்கான சாம்பார் வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் பண்ணுவேன். செவ்வாய்க்கிழமையன்னிக்குப் பொடி போட்டு அடியில் தாளித்துக்கொட்டிய பருப்புக் குழம்பு. இதைப் பற்றி வத்தப்பருப்புக்குழம்பு என்னும் பெயரில் ஓர் பதிவும் போட்டிருக்கேன் அதோடு வாரம் ஒரு நாள் துவையல், கூட்டு போன்றவையும் ஒரு நாள் வெறும் மைசூர் ர்சம் மட்டுமாகவும் வைப்பதோடு அடிக்கடி கலந்த சாதங்கள் செய்துடுவேன். கலந்த சாதங்கள் செய்யும் நாட்களில் ரசம் வைக்காமல் கலந்த சாதம், தயிர் சாதம், ஊறுகாய், வெங்காயம் அல்லது வெள்ளரி, தக்காளி போட்டுப்பச்சடி அல்லது வெங்காயப் பச்சடி, வெள்ளரிக்காய், காரட், தக்காளி சாலட்னு பண்ணிடுவேன். தினமும் பருப்புப் போடுவதில்லை. இப்போ இங்கே வந்தப்புறமா ஆர்த்தோ சர்ஜன்கள் சொன்னதால் புளியோ, பருப்போ சேர்ப்பதே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் பொரிச்சாத்துமது, துவாதசிக்கு புளி சேர்க்காமல் பண்ணுவது செய்வீர்களா? மாமாவுக்குப் பிடிக்குமா?

      நீக்கு
  32. ///அது எப்படி?///

    எல்லாம் சமரசம் என்று ஆகி விட்டது... பொங்கல் புளியோதரை எல்லாம் மக்களுக்கு புளித்து விட்டன...

    விரும்பியோ விரும்பாமலோ மாற்றங்கள் திணிக்கப்பட்டு விட்டன...

    டொமாட்டோ ரைஸும் குஸ்கா போன்றவையும் உபயதாரர்கள் கொடுப்பவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லும் பாயின்ட் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

      நீக்கு
  33. சென்ற வருடம் சப்த ஸ்தானத்தின் போது
    கண்டியூரில் வெஜ் பிரியாணியும்
    குருமாவும் வழங்கப்பட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில்களில் பிரசாதமாக தோசை தரும்போது (திருப்பதிலயும் முன்பு கிடைத்திருக்கிறது) சட்னியோ மி பொடியோ தரலையேன்னு நினைத்துக்கொள்வேன்.கோயிலில் தயார் செய்த பிரசாதம் எதுவாக இருந்தால் என்ன? எண்ணம்தான் முக்கியம்

      நீக்கு
    2. கோயில் பிரசாதம் தோசை செய்முறையே தனிப்பட்ட ஒண்ணு அதை அப்படியே சாப்பிடலாம். நல்லாவே இருக்கும். அதிலே நெய்யிலே கிட்டத்தட்டப் பொரிச்சு எடுத்திருப்பாங்க. மிளகு, ஜீரகம் சேர்த்திருக்கும். எங்களுக்கு இதுக்கெல்லாம் தொட்டுக்க வேணும்னு தோணினதில்லை. ஆனால் ஸ்ரீரங்கத்தில் சில சமயம் பட்டாசாரியார்களிடமிருந்து நேரடியாக வாங்கும் தோசைகளை (ஐந்து ரூபாய்க்கு ஒரு தோசை தருவாங்க) வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்ததும் தக்காளிச் சட்னி அல்லது மிளகாய்ப் பொடியுடன் அன்றைய இரவு உணவாகச் சாப்பிட்டிருக்கோம். பின்னாட்களில் அதாவது 2014 க்குப் பின்னர் அறமற்றவர்களின் கெடுபிடியால் பட்டாசாரியார்கள் தங்கள் பங்கைக் கோயிலில் உள்ள பிரசாதக் கடைகளுக்கே கொடுக்கும்படி வற்புறுத்தப்பட்டதாகக் கேள்வி. :(

      நீக்கு
    3. அழகர்கோயில் கடலழகர் கோயில் தோசையை அப்படியே சாப்பிடலாம். மற்ற தோசைகளுக்கு மிபொடி சட்னி சாம்பார் வேண்டும்

      பரவாயில்லை உங்களுக்கு திருவரங்க பிரசாதம்லாம் கிடைச்சிருக்கு. அங்கே பதினைந்து வருடங்களா இருக்கீங்களா?

      நீக்கு
  34. /// இவர்களைத்தான் கருணாநிதி
    சோற்றால் அடித்த பிண்டங்கள்
    என்றாரோ?...///

    அவர் வாய்க்கு சர்க்கரை தான்
    போட வேண்டும்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!