மகாராஷ்டிரா
டெச்சா - ठेचा
பூண்டு
வேர்க்கடலை பச்சை மிளகாய் சட்னி
ராதா சுரேஷ்

2
மேசைக்கரண்டி சமையல் எண்ணெய்
30
பச்சை மிளகாய், முழுதாக, காம்புகள் நீக்கப்பட்டவை
15
பூண்டு பற்கள்,
½
தேக்கரண்டி உப்பு
2-3
கொத்தமல்லி தண்டுகள் மற்றும் இலைகள்
2
மேசைக்கரண்டி வறுத்த, தோல் நீக்கிய வேர்க்கடலை
ஒரு
தவாவில் அல்லது வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டைச் சேர்க்கவும்.
அவை எல்லாப் பக்கங்களிலும் நன்றாக வதங்கட்டும் – இதற்கு 2-3 நிமிடங்கள் ஆகும்.
வதக்கிய
எல்லாவற்றையும் ஒரு சின்ன உரலில் போட்டு அதோடு கொத்தமல்லி தண்டுகள், இலைகள், வேர்க்கடலை,
உப்பு எல்லாம் சேர்த்து குழவியால் கொரகொரப்பான விழுதாக இடிக்கவும்.
மஹாராஷ்ட்ரா
பூண்டு வேர்க்கடலை பச்சை மிளகாய் சட்னி தயார்.

============================================================================================
இட்லியே நீ வாழ்க..
நடுவில்
யார் உன்னை முந்திச் சென்றாலும்
உண்போர் மனதில் என்றும் நீ.
இட்லி...
நீ பிள்ளையார் மாதிரி
ஹோட்டலில் ஆர்டர் கொடுப்போர்
பெரும்பாலும்
சுக்லாம்பரதாரம் சொல்வது போல
"முதலில் இரண்டு இட்லி"
என்றுதான் தொடங்குகிறார்கள்!
உண்ணும் பதிவுகள் என்றுமே சுவாரஸ்யமானவை! இட்லி அப்பா மாதிரி. முதலில் பிடிக்கும். குறிப்பிட்ட வயதில் அதன்மேல் கோபமும் வெறுப்பும் வரும். குறிப்பிட்ட வயது கடந்தவுடன் மேகம் கலைந்தது போல மறுபடி அதன்மேல் பிடிப்பு உண்டாகி விடும், அதன் அருமை தெரிந்து விடும்!
இட்லிக்கு அரைக்கும் மாவிலேயே எதையெதையோ கலந்து ரகளை செய்ய ஆரம்பித்து விட்டோம்! அவல், பீட்ரூட் (உடனே வார்த்து விடவேண்டும்) உருளைக்கிழங்கு இப்படி...
வீட்டில் அன்பாய் ஆடு வளர்ப்பார்கள், கொஞ்சிக் குலாவுவார்கள். ஒரு விசேஷ தினத்தில் அதை அறுத்து சாப்பிட்டு விடுவார்கள். அதுபோல மாவு அரைத்து. இட்லி குண்டானில் துணியெல்லாம் அன்பாய்க் கட்டி, அழகாய் இட்லி வேகவைத்து எடுத்து தட்டில் கொட்டி...அப்புறம் அதன்மேல் கத்தி கபடாவுடன் பாய்ந்து துண்டாக்கி, காரப்பொடி தடவி கொதிக்கும் எண்ணெயில் பொரித்தெடுத்து என்று கொலை செய்வோம்!
பிரமையா நிஜமா தெரியவில்லை, கல்லுரலில் ஆட்டி வார்க்கும் இட்லிதான் ருசியாகத் தெரிகிறது.பஞ்சுபோல இட்லியைப் பார்த்து பலநாட்கள் ஆகிறது! இப்போதெல்லாம் இட்லியே செயற்கையாக இருக்கிறது! ஆயிரம் வழிமுறைகளைக் கையாண்டாலும் வீட்டிலும் பஞ்சு போல இட்லி பலநாட்கள் வருவதில்லை.
அன்று இட்லிகள் தினம் என்று தெரியாமலேயே அதை நினைவு கூர்ந்தேன்.
எப்படி என்றால், நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஒரு குண்டன் வந்து எங்களிடம் 'பசிக்கிறது.. இட்லிக்கு பத்து பைசா கொடு' என்று கேட்பான். ஒருநாள் பார்த்தல் நாங்கள் தியேட்டரில் சிறிய வகுப்பில் அமர்ந்து படம் பார்க்கிறோம், அவன் மேல்வகுப்பில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தான். பத்துப் பத்து பைசாவாக பார்த்துப் பார்த்துச் சேர்த்த காசு!
இவனை நினைவுறுத்தும் வகையில் சமீபத்தில் அதே மாதிரி டிராயர் அணிந்த குண்டன் ஒருவன் வந்து என்னை நிறுத்தி 'பஸ் மிஸ் ஆகிவிட்டது இருவது ரூபா கொடு' என்றான் நேற்று. அங்கே உள்ளே பஸ்ஸே வராத இடம் அது. பஸ் பிடிக்க இரண்டு கிலோமீட்டர் நடக்கவேண்டும்!
இட்லி குண்டன் (குண்டான் அல்ல!) நினைவு வந்து விட்டது!
வீட்டு இட்லி இந்தக் காலத்தில் நல்லா வருவதில்லை. காரணம் அவை குக்கர் தட்டு இட்லிகள்.
பதிலளிநீக்குஇட்லி நல்லா இருக்கணும் என்றால் துணி போட்டு பழைய முறையில் இட்லி வார்க்கணும். அதை யாரு செய்யறா?
வாங்க நெல்லை... நடுவில் கொஞ்ச நாள் ச்சே இட்லியா வேணாம்னு தோன்றியதா உங்களுக்கு?
நீக்குநான் எப்போவுமே இலுப்பச்சட்டி (சீனாச்சட்டி)யில் துணி போட்டுத் தான் இட்லி வார்ப்பேன். இப்போ இலுப்பச்சட்டி (சீனாச்சட்டி)யைத் தூக்கமுடியலைனு எவர்சில்வரில் கடாய் போலத் தட்டுக்களுடன் வாங்கிப் பத்துப் பனிரண்டு வருஷங்களாக அதில் தான் துணி போட்டு இட்லி, யார் வந்தாலும்.
நீக்குஅம்மா அப்படிதான் இட்லி வாரத்துக்கு கொண்டிருந்தார். நாங்கள் சுலபமாக இருக்கிறதென்று திருமணத்துக்குப்பின் மாறினோம். இப்போது பழசின் அருமையை மனம் விரும்புகிறது.
நீக்குசிறிய வயதிலிருந்தே, இட்லி, என் அம்மா வார்த்ததும் நான் மி.பொடி எண்ணெய் தயாராக இருக்கும் என் தட்டில் எடுக்க முடியாத சூட்டுடன் அம்மா போடுவார்.
பதிலளிநீக்குஅரிசி உளுந்து ஊற வைத்து, பிறகு அரைத்து, மாவு பொங்கி, அடுப்பில் இட்லியாக வருவதற்கு பத்து மணி நேரங்களுக்கு மேல் ஆகும். அதற்கான உழைப்பு வேறு.
ஆனால் அதெல்லாம் மனதில் தோன்றாமல் நிமிடத்துக்கு ஒரு இட்லி என சுடச் சுட காலி பண்ணியது நினைவுக்கு வருது.
அம்மாவுக்கு என்ன செய்திருக்கிறேன்? உனக்கோர் கைம்மாறு நான் ஒன்றிலேன், உவத்த நீர் போல எந்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன் என்ற பிரபந்த வரிகள் நினைவுக்கு வருது
ஆமாம். இப்போல்லாம் இட்லி குண்டானில் துணி வைத்து இட்லி வார்க்கும் முறையே இருப்பதில்லை. சாலையில் தாண்டிச் செல்லும்போது ஏதாவது ஒரு கடையில் அப்போதுதான் அடுப்பிலிருந்து இறக்கி துணியிலிருந்து இட்லிகளை சூடாக பிய்த்தெடுத்தால் கால்கள் அங்கு நிற்கிறதோ இல்லையோ மனம் அங்கு நின்று விடுகிறது! மிகவும் பிரியமான ஒரு வஸ்துவைப் பார்ப்பது போல ஒரு மிருது மனதில் உண்டாகிறது!
நீக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குஎன்னவாம் !!! - ?
நீக்குமுன்னேற்றம் என்னும் பெயரில் மாறி வரும் பழக்கங்கள். :(
நீக்குகர்நாடகாவில் நான் பார்த்த அடுக்கு இட்லி வேகவைக்கும் பாத்திரம் (இதன் பெயர் சொல்லத் தெரியலை). மனைவியிடம் பல முறை சொல்லி, நான் 12-15 இட்லி வார்க்கும் அந்த அடுக்கு வாங்கறேன். அதில் இட்லி பண்ணி சாப்பிட ஆசை என்றதற்கு, இட்லி பண்ணச் சொல்லுவதே அபூர்வம், கார்போ என்று சொல்லி 2-3 இட்லியே சாப்பிடுவதில்லை, இதற்கு எதற்கு இடத்தை அடைத்து இன்னொன்று எனச் சொல்லிவிட்டாள்.
பதிலளிநீக்குஅவர் சொல்வதும் சரிதானே...
நீக்குஎங்கள் வீட்டில் பெரிய குக்கர் இரண்டு வைத்திருப்போம். அதுதவிர மினி இட்லி குக்கர் இரண்டு.. சட்டென்று வீட்டுக்கு விருந்தினர் வந்து விட்டால் 'இருங்கள் எங்கள் வீட்டு குக்கர் பனிரெண்டு பனிரெண்டரைதான் வார்க்கும்' என்று சொல்ல முடியாதே... வார்த்து வைத்தாலும் ஆறிவிடும்!
குக்கரில் எல்லாம் இட்லி வைச்சதே இல்லை. எவர்சில்வரில் இட்லிப்பானை ஒண்ணு 20 வருஷம் முன்னாடி வாங்கினேன். அதிலே 16 இட்லிகள் பண்ணலாம். யாரானும் வந்தால் அதையும் இன்னொரு பக்கம் இட்லிக்கென இருக்கும் இரும்புச்சட்டி(எவர்சில்வர் சட்டி)யிலுமாக வைப்பேன். இதில் ஏழு இட்லிகள் வரும். இரண்டையும் வைச்சுட்டு இன்னொரு அடுப்பில் சாம்பாரையும் வைச்சுட்டுச் சட்னியும் அரைச்சு வைச்சால் அரை மணி, மிஞ்சிப் போனால் 45 நிமிஷங்களில் நாலு பேராவது சாப்பிடலாம்.
நீக்குகுக்கரில் கூட துணி வைத்து இட்லி வார்த்தால் நல்லாத்தான் இருக்கும்.
நீக்குகர்நாடகாவில் இட்லி ரவை போட்டுத்தான் இட்லி மாவு தயார் செய்வர். கடைகளிலும் இட்லி ரவை கிடைக்கும்.
பதிலளிநீக்குஅந்த இட்லி எனக்கு ரொம்பப் பிடிக்கும். வெறும் இட்லிகள் மாத்திரம் வாங்கி, மி.பொடி எண்ணெய் தடவி, நெடிய இரயில் பயணங்களுக்கு எடுத்துச் சென்றிருக்கிறேன்.
துகள் துகளாக இட்லி இருந்தாலே எனக்கு அலர்ஜி.
நீக்குஇட்லி பஞ்சு போல, தொட்டாலே... அட பார்த்தாலே அமுங்கறா மாதிரி இருக்கணும். அதுல சூடான சாம்பார் ஊற்றி சட்னி போட்டு..... ஸ்ஸ்ஸ்ஸ்......
என் மாமியாருக்கு கல்லுரலில் அரைப்பதே அலர்ஜி. ஆகவே அரைக்கும் வேலைகளே செய்ய மாட்டார் என்பதால் இந்த இட்லி ரவை தான் எப்போவும் தயாராக இருக்கும். அதில் தான் இட்லியே வார்ப்பார். ஒவ்வொரு இட்லியும் குண்டு குண்டாக இருக்கும். இரண்டு சாப்பிட்டாலே வயிறு நிறைஞ்சுடும். நான் வந்தப்புறமாத் தான் அரிசியையும் அரைச்சு இட்லி, தோசை. அதுவரை தோசைனாலே வெந்திய தோசை தான். அதே போல் அடை, அரிசி உப்புமா, பொங்கல் வகையறாத் தான் டிஃபனே. அதையும் ராத்திரிக்குப் பண்ணுவாங்க. சாயங்காலம் டிஃபனை அறிமுகம் செய்தது எங்க புக்ககத்தில் நான் தான். நான் இல்லைனா டிஃபனும் இருக்காது. :)))
நீக்குகாலப் போக்கில் நாங்களும் மாலை டிஃபனைத் தவிர்த்துவிட்டுச் சாயங்காலம் ஏதேனும் எளிமையான டிஃபன் சுண்டல், பக்ஷணங்கள்னு கொஞ்சமாச் சாப்பிட்டுவிட்டு இரவுக்கே இந்த டிஃபன் வகையறாவை வைச்சுக்க ஆரம்பிச்சுட்டோம். காலையிலும் டிஃபன் என்பது மாறிப் பின்னர் கஞ்சியாக மாறிப் போனது. இங்கே அதுவுமே இல்லை. ப்ரெட், வெண்ணெய் தான். தோசைக்கல்லில் போட்டு ரோஸ்ட் செய்தோ அல்லது செய்யமலோ சாப்பிடுகிறேன். ஒரு ஸ்லைஸ் ப்ரெடே பெரிதாக இருக்கு. இல்லைனா புளிப்பு ப்ரெட் ஒண்ணுச் சின்னச் சின்னதாக ஸ்லைஸ்களோடு வரும். அது அவ்வளவா எனக்குப் பிடிக்கிறதில்லை. ப்ரெட் தோசைக்கல்லில் போட்டு நன்கு ரோஸ்ட் செய்து அதை தோசை மிளகாய்ப் பொடியோடு சாப்பிட்டால் தோசை சாப்பிட்ட எஃபெக்ட் கொடுக்கும். நான் சட்னி வகைகளும் வைச்சிருப்பேன். அதில் தடவி சான்ட்விச் போலப் பண்ணிச் சாப்பிட்டுப்பேன். :D
நீக்குநான் மாலை வேளைகளில் ஏதாவது சாப்பிட்டால் இரவு ஒன்றும் சாப்பிட மாட்டேன். வயிறு 'டம்'மென்று ஆகிவிடுகிறது.
நீக்குநெல்லை, இட்லி ரவை போட்டு செய்வது நல்லாருக்குன்னாலும், இட்லி அரிசி போட்டு அரைத்து அந்த இட்லி பைண்டிங் தனி ருசி, நெல்லை. இங்கு பெரும்பாலான ஹோட்டல்களில் கர்நாடகா ஹோட்டல்களில் இட்லி ரவை போட்டுதான் செய்யறாங்க.
நீக்குஅது சாம்பார் டக்குனு ஊறிடும்தான்
ஆனால் இங்கிருக்கும் தமிழ்க்கார உணவகங்களில் இட்லி நம்ம ஊர்ப்பக்கம் செய்வது போல்தான் செய்யறாங்க. அது தனி..
கீதா
இங்கே மாலை வேளைகளில் வட இந்திய ஸ்நாக்ஸ் வகைகள். எல்லாத்திலும் மசாலா தூக்கலாக இருப்பதால் எனக்கு ஒத்துக்கறதில்லை. ஆகவே நான் அதெல்லாம் எடுத்துக்கவே மாட்டேன். வாழைப்பழம் ருசி இல்லைனாலும் பெரிது, பெரிதாக இருக்கும். அதிலே ஒண்ணை எடுத்துப்பேன். இங்கே எண்ணெயில் போட்டுப் பண்ணும் பஜ்ஜி, போண்டா போன்றவை பண்ணுவதே இல்லை. எப்போவானும் மருமகள் வங்காளிகள் பண்ணுவது போல் தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றிப் பண்ணுவாள். அதில் உள்ளே காய்களும் திக்காக இருக்கும். மாவும் ரொம்பவேத் திக்காக இருக்கும். ஆகவே ஒண்ணுக்கு மேல் சாப்பிட முடியாது. ப்ரெடில் பண்ணினாள் எனில் நான் ஆறரை மணி போல் அதை எடுத்துக் கொண்டு ராத்திரி ஒண்ணும் வேண்டாம்னு சொல்ல்லிடுவேன்.
நீக்குஹோட்டலைக்குப் போனால் மனைவி தோசை ஆர்டர் செய்வாள், நிச்சயம் சூடாத்தான் வரும் என்று. இட்லி சூடாக வர, பெரும்பாலும் முன்வினைப் பயன் இருந்தால் இருபது தடவை ஹோட்டல்களில் இட்லி ஆர்டர் செய்தால் இரண்டு தடவை சூடாக வந்தாலே அதிகம்.
பதிலளிநீக்குஅவங்க, சுடச் சுட சாம்பார் விட்டாலே போதும், கஸ்டமர்களுக்கு சூடான இட்லினா, பாக்ஸ்ஸில் வைத்திருப்பதைப் போடலாம்னு சொல்றாங்க.
அவர்கள் ஆயிரக்கணக்கில் மெஷினில் ஏற்கனவே இட்லி வார்த்து வைத்து ஹாட்பேக்கில் வைத்திருக்கிறார்கள். அது வேலைக்காகாகது.
நீக்குஒருமுறை சங்கீதா சென்றபோது "இட்லி காலியாயிடுச்சு இப்போதான் இறக்கப் போறாங்க.. லேட்டாகும்.. வேறு ஏதும் கொண்டு வரவா" என்று சர்வர் கேட்டதும், 'அட கடவுளே.. இன்று எனக்கு என்ன ஒரு அதிருஷ்டம்' என்று நினைத்துக்கொண்டு, புது ரத்தம் பாய்ந்தது போல நிமிர்ந்து "காத்திருக்கிறேன்... எவ்வளவு நேரமானாலும் சரி.. இரண்டு இல்லை, ஆறு இட்லி கொண்டு வாருங்கள்" என்று சொல்லி விட்டேன்!
:))))))
நீக்குமற்றபடி, மிஞ்சின காய்கறிகளைச் சேர்த்து, கேரட் இட்லி, பீட்ரூட் இட்லி, கீரை இட்லி... உடலுக்கு நல்லது என ஜல்லியடிப்பது எனக்குப் பிடிப்பதில்லை.
பதிலளிநீக்குகாரணம் என் அம்மா எனக்குச் செய்து தராதவைகள் என் விருப்பமாக இருந்ததே இல்லை.
இதெல்லாம்தான் இப்போல்லாம் எப்பவும் செய்யறோமே...
நீக்குஅதுசரி, டெச்சா பற்றி ஒரு வரி கூட எழுதவில்லையே நீங்கள்....
ஹி,ஹி,ஹி, நானும். பெயரைப் பார்த்ததும் என்னமோ, ஏதோனு நினைச்சு வந்தால் இந்தச் சட்னி மஹாராஷ்ட்ராவில் சாபுதானா(ஜவ்வரிசி)வில் பண்ணும் வடைக்குத் தொட்டுக்கக் கொடுப்பாங்க. நானுமே சாபுதானா வடை பண்ணினால் இந்தச் சட்னி (வழக்கம்போல் பூண்டு இல்லாமல்) பண்ணுவேன். அவங்க நல்ல காரம் சுரீர்னு மண்டையை ஏதோ பண்ணும். அந்த அளவுக்காரம் போடுவாங்க. நான் அத்தனை போட்டதில்லை. ஆனால் வேர்க்கடலை வைச்சால் என்னமோ நம்மவருக்குப் பிடிக்காது. அரை மனசாகத் தொட்டுப்பார்.
நீக்குஅந்தக் காரட், பீட்ரூட் இட்லி வகைகளைக் கிட்டேயே சேர்ப்பதில்லை. சிலர் சீராளம் போல் பண்ணலாமே என்பார்கள். அதுவும் நான் அதிகமா அடை மாவு மிஞ்சினால் புளிக்க ஆரம்பிச்சுட்டால் பண்ணுவேன். அதுவும் மாலை டிஃபனுக்குக் காஃபி, டீயோடு சாப்பிடும்படியாகப் பண்ணுவேன். எப்போவானும் நிறைய இட்லி இருந்தால் இட்லியை உதிர்த்துப் போட்டு இட்லி உப்புமா வெங்காயம் போட்டு.
நீக்குஇன்னிக்கி மெயின் டிஷ் அவ்வளவாக யாரும் ஆதரவு கொடுக்காம சும்மா நிரப்ப போட்ட இட்லியை எல்லோரும் எடுக்கறாங்க... ஹிஹிஹிஹி...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா .அக்கா.. வணக்கம். உடம்பு தேவலாமா? அப்பப்போ தேட வச்சுடறீங்க!
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குஇந்த தடவை உங்களையெல்லாம் சற்று தேட வைத்ததற்கும் என் உடல்நிலை சரியில்லாமல் போனதுதான் காரணம். இன்று பரவாயில்லை. என்னவோ படுத்தல்கள்.எல்லாம் இறைவன் செயல்.
இன்றைய திங்களில் மகாராஷ்டிரா டெச்சா செய்முறை படங்கள் விளக்கங்களுடன் நன்றாக உள்ளது. ஒரு மாதம் வரை கு. சா பெட்டியில் பாதுகாத்து உண்ணலாம் போல.. இட்லி, தோசை, சாதத்திற்கு நல்ல உபயோகமான துணை.நல்லதொரு சமையல் பகிர்வுக்கு மிக்க நன்றி.
இட்லி நல்ல உணவு. நான் திருமணமாவதற்கு முன்பு வரை தினம்ம் காலையில் இட்லி சாப்பிட்டு வளர்ந்தவள் . என் பிரிய உணவே இட்லிதான். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஒரு Full Body Medical CheckUp செய்து விடுவதுதான் கமலா அக்கா? அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறதே...
நீக்குடெச்சாவையும் இட்லியையும் ரசித்ததற்கு நன்றி!
ஶ்ரீராம்... நாங்கள் நல்ல பெரிய ஹாஸ்பிடலில் நாளை முழு ஹெல்த் செக்கப் போகிறோம். அது எல்லாவற்றையும் கண்டுபிடிக்காது.
நீக்கு@Nellai! Blessings and prayers are with you two.
நீக்குஉடல் நலத்தைக் கவனிச்சுக்கோங்க கமலா மேடம். வரலைனதும் நான் எங்கேயானும் வெளி ஊருக்குப் போயிருப்பீங்கனு நினைச்சேன். பொதுவாக நீங்க அதிகம் உங்க உடல் நலத்தில் கவனம் வைப்பதில்லைனு தோணும். ஆகவே நன்றாகச் சாப்பிட்டு மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டு முடிந்தவரை ஓய்வில் இருங்க.
நீக்கு// அது எல்லாவற்றையும் கண்டுபிடிக்காது.//
நீக்குநெல்லை.. எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு. எல்லா செக்கப்பும் செய்யும் பேக்கேஜும் இருக்கு. பர்டிகுலரா ஏதாவது பார்க்கணும்னா சின்ன பேக்கேஜ் அதுல இது இருக்கறதா பார்த்து செலெக்ட் செய்யலாம்.
எந்த செக்கப் பண்ணிக்கணும் என்பதிலும் குழப்பம். நாளை தெரியும். ஒருவருக்கு 8-10 ரூ ஆகும் என நினைக்கிறேன்.
நீக்குநல்லதோர் சட்னி செய்முறை. முயற்சித்துப் பார்க்கலாம்.
பதிலளிநீக்குஇட்லி - சாஃப்ட் ஆக இருந்தால் நல்லது தான். பல வீடுகளில் இப்போது மாவை கடையில் தான் வாங்குகிறார்கள். அதில் இட்லி, தோசை ருசி எல்லாம் நன்றாக இருக்காது. இட்லி மீது வெறுப்பு ஏற்பட்டது இல்லை. அப்பாவிற்கு அப்படி ஒரு வெறுப்பு இருந்தது. அம்மாவிடம், இட்லியா என்று கேட்கும்போதே குரலில் வெறுப்பு தெரியும்.
வாங்க வெங்கட்... வீட்டிலேயே மாவு அரைத்தால் கூட உளுந்து சில சமயங்களில் உதயம் அது இது என்று பிராண்டட் வாங்கினாலும் ஒரு மாதிரி இருக்கிறது.
நீக்குஎனக்கும் இட்லி மேல் அப்படி ஒரு அவெர்ஷன் நடுவில் இருந்ததது. இப்போது என்னவோ அதீதக் காதல் வந்து விட்டது!
நீக்குஇந்த வெறுப்புக்கு அடிப்படை காரணம்... வீட்டில் நபர்கள் அதிகம் இருந்தால் இட்லி அல்லது ரவா உப்புமாதான் அம்மாக்களின் முதல் சாய்ஸ். சுலபத்துல வேலையை முடித்துவிடலாம். தோசை சப்பாத்தினா ஒண்ணொண்ணா பண்ணணும்.
நீக்குஉப்புமா ஒண்ணும் மோசமான டிஃபன் இல்லை. அதுக்கும் எண்ணெய், சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், தேவையானால் காய்கள்னு தேவை. எந்த உப்புமாப் பண்ணினாலும் இறக்கும்போது கொஞ்சம் நெய் சேர்த்துக் கிளறினால் உப்புமாவின் சுவை அதிகரிக்கும். இங்கே கூட அடிக்கடி கேழ்வரகு சேமியாவில் உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவை உப்புமா, அவல் உப்புமா, ரவை உப்புமானு பண்ணுவாள் மருமகள். அரிசி உப்புமாப் பண்ணியதில்லை. அவங்களுக்குப் பிடிக்காதுனு நினைக்கிறேன். ஆனால் அரிசி உப்புமா முறையாக வெண்கல உருளியில் பண்ணிச் சாப்பிடணும். அதில் அடியில் மொறுமொறுவென வரும் முறுகலைச் சாப்பிட எங்க வீட்டில் நாங்க மூணு பேரும் போட்டி போடுவோம். இங்கே மருமகளுக்கு அதெல்லாம் தெரியலை. :)) அப்படியானு ஆச்சரியமாக் கேட்டுட்டுச் சிறு தானிய உப்புமாவின் அடி முறுகலைச் சுரண்டிக் குப்பையில் போட்டுவிட்டாள். எனக்குத் தான் அன்னிக்கு மனசே சரியில்லை. :(
நீக்குஇன்னிக்குப் பண்ணின அரிசி உப்புமா மறுநாள் காலையில் சாப்பிட்டால் இன்னமும் ருசியாக இருக்கும். அதுவும் முதல்நாள் மத்தியானம் பண்ணின வத்தல் குழம்போடு.
நீக்குஅரிசி உப்புமாவும் மி.பொடி தடவிய இட்லியும்தான் மறுநாள் சாப்பிட சூப்பராக இருக்கும்.
நீக்குஎன்னதான் நீங்க உப்புமாவுக்கு முட்டுக்கொடுத்தாலும், வித வித பெயர்கள் அலங்காரமாகக் கொடுத்தாலும் உப்புமா உப்புமாதான். ஹா ஹா. அதையும் ஹோட்டல்ல வாங்கிச் சாப்பிடறவங்க ஐயோ பாவம் கேஸ்
இப்போ இப்போ நான் இட்லி தோசையை விட உப்புமாக்களை ரசிக்க ஆரம்பிச்சுட்டேன்னு கீதா, கீதா அக்காவுக்கெல்லாம் தெரியும்! குறிப்பா கோதுமை ரவா உப்புமா, குருணை உப்புமா, & பிடி கொழுக்கட்டை மாதிரி... ஈவன் சேமியா ஆனியன் உப்புமா.
நீக்குயெஸ்ஸு இப்ப ஸ்ரீராம் உப்புமா ரசிகன் ஆகிவிட்டார்!!
நீக்குகீதா
:))
நீக்கு"காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி.. கடவுள் செய்த குற்றமடி...!"
பயந்துடாதீங்க.. பாட்டு பாடினேன்!
முன்னெல்லாம் அதாவது எண்பதுகளுக்கு முன்னால் காலை நேரம் ஓட்டலுக்குப் போனால் அங்கே காஃபி, உப்புமா மட்டும் உடனே கிடைக்கும். ஆறு, ஆறரைக்குப் பின்னர் முதலில் பொங்கல் வரும், பின்னர் ஏழு, ஏழரை போல் இட்லி, வடை. இப்போல்லாம் ஓட்டல்களில் உப்புமாவும் போடறாங்களா என்னனு எல்லாம் தெரியாது. நான் போய்க் கொண்டிருந்தவரை ஓட்டல்களில் முதலில் காஃபி ஐந்தரைக்குள், பின்னர் ஆறரைக்குள்ளாகப் பொங்கல், வடை பின்னர் ஏழு மணிக்கு மேல் இட்லி, தோசைகள், பூரி போன்றவை வருகின்றன.
நீக்குKisaan இல் இந்த Chilli Peanut Thecha Chutney packet ஆக கிடைக்கிறது. 100 கிராம் 49/-. செய்யேன் endru என்று சொல்ல இல்லத்தரசி fridge இல் இருந்து எடுத்து பாக்கெட் காண்பித்தார். :)
பதிலளிநீக்குஆமாம்.. நானும் விளம்பரங்களிலிருந்து பார்த்திருக்கிறேன்.
நீக்குஇங்கே பையர் வைச்சிருக்கார். ஆனால் பூண்டு இருப்பதால் நான் அந்தப் பக்கமே திரும்புவதில்லை. :))) அதில் உள்ள பொருட்கள் லிஸ்ட் கூடப்பார்க்காததால் இந்தச் சட்னிதான் அதுனு தெரிஞ்சுக்கவும் இல்லை. இந்தச் சட்னிக்கு இந்தப்பெயர் என்பதே இன்னிக்குத் தான் தெரியும். :)))
நீக்குஎனக்கு கடையில் இவற்றைப் பார்க்கும்போதும் அதை வாங்கும் விருப்பமே வரவில்லை.
நீக்குஅதேபோல தண்ணி மாதிரி ஒரு பாக்கெட் பார்த்தேன். ஒரு வாரத்துக்குள்ள செலவு செய்யணுமாம். பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வச்சா சாம்பார் ரெடி!
மகாராஷ்டிர டெக்சா நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குபச்சைமிளகாயுடன் கச்சான் சேர்த்து செய்ததில்லை. பச்சை மிளகாய் வதக்காமல் வெங்காயம், கறிவேப்பிலை ,உப்பு ஒரு மேசைக்கரண்டி தேங்காயுடன் இடித்திருக்கிறோம்.
இட்லி எவர்சில்வர் இட்லிப் பானைதான்பல காலமாக வைக்கிறோம் பதினான்கு ஒருதடவைக்கு வரும். இட்லி குக்கர் புதிதாக இருந்தது உறவினருக்கு குடுத்துவிட்டோம்.
கச்சான்என்றால்? வாங்க மாதேவி.. நாங்கள் ஒரு ஈடுக்கு 24 இட்லி வரும் குக்கர் வைத்திருக்கிறோம்!
நீக்குஸ்ரீராம், கச்சான் என்றால் நிலக்கடலை
நீக்குகீதா
oho...
நீக்குமகாராஷ்டிரா டெச்சா - ठेचा, சூப்பர் செய்முறை, ஸ்ரீராம். ஃபைனல் படம் நல்லாருக்கு.
பதிலளிநீக்குநம்ம வீட்டில் செய்ததுண்டு. ஆனா மிளகாய் இவ்வளவு வைப்பதில்லை. கொஞ்சம் காரம் கம்மியாக.
பெரும்பாலும் மஹாராஷ்ட்ரா குறிப்புகள் செய்து பார்த்ததுண்டு பார்ப்பதுண்டு
கீதா
அப்பா... நீங்கதான் ஆர்தடாக்ஸ்சா முதல்லேருந்து வர்றீங்க.. வாங்க கீதா...
நீக்குராதா அவங்க வித்தியாசமான குறிப்புகள் கொடுக்கறாங்க.
பதிலளிநீக்குகீதா
KGS பெண் இவர். இவரும் சரி, மருமகளும் சரி.. விதம் விதமா டிஷஸ் செய்வாங்க..
நீக்குஆமாம் சொல்லியிருக்கீங்க ஸ்ரீராம், இங்கு முன்பும் சில வந்திருக்கின்றனவே
நீக்குகீதா
Yessu....
நீக்குஇந்த Yessu கீசா மேடம் காப்பிரைட். அதுல கை வைக்காதீங்க
நீக்கு@Nellai, அது. அது! :)))))
நீக்குஇதை மிக்சில செய்வதை விட இப்படிச் சின்ன கல்லுரல்ல போட்டு இடிச்சா நல்லாருக்கும்
பதிலளிநீக்குகீதா
நல்ல ஐடியா.
நீக்குஅவங்களுமே கல்லுரல்லதான் போட்டு செஞ்சுருக்காங்க.
நீக்குஸ்ரீராம் நாம சாதாரணமா பூண்டு மிளகாய் சர்னி இல்லைனா பொடி செய்வோமே அதை கல்லுரல்ல போட்டு இடிச்சா அது தனி சுவை.
நம்ம வீட்டுல மசாலா எல்லாம் கூட சின்ன கல்லுரல்ல ஃப்ரெஷ்ஷா போட்டு தட்டி இடிச்சுதான் போடுவது. சில சமயம் ரொம்ப நைசா அரைக்க வேண்டாம்ன்றதுக்குக்கூட இப்படித் தட்டி..
கீதா
ஸ்ரீராம், இட்லில இங்கும் ரகளைகள் உண்டு.
பதிலளிநீக்குசின்ன கிரைண்டர் வைச்சிருப்பதால் அதில்தான் இட்லிக்கு அரைப்பது.
இங்கு சில சமயம் காலநிலை காலை வாரும்!!!
அப்ப தோசையாக்கிடுவோம்ல இல்லைனா வேறு ஏதாச்சும் ரகளை...
கீதா
இட்லில எங்கேதான் ரகளை இல்லை? விதம் விதமா அதை வதை செய்கிறோமே..!
நீக்குதுணி போட்டு குக்கரில் வார்ப்பதுண்டு. என்னிடம் இருந்த குண்டான் போயே போச்!
பதிலளிநீக்குபிரமையா நிஜமா தெரியவில்லை, கல்லுரலில் ஆட்டி வார்க்கும் இட்லிதான் ருசியாகத் தெரிகிறது//
ஸ்ரீராம் கிரைண்டர் இருக்குல்ல? அதில் உளுந்தை நல்லா புஸு புஸுன்னு ஆட்டினா வந்திடுமே.
பழைய காலம் போல இல்லைன்னு சொல்றதுக்கு....செய்முறை எல்லாம் விட, நான் குறிப்பாகப் பார்ப்பது பொருட்களின் தரம்.
கீதா
உளுந்து நல்லா புஸுபுஸுன்னு ஆட்டி கலந்தா கூட சமயங்களில் ரப்பர் பந்து மாதிரி வருகிறது!
நீக்குசமீபத்துப் பயணத்தில் எடுத்த படங்களோ? ஸ்ரீராம்?
பதிலளிநீக்குஇட்லி குண்டன்! உலகத்துல ஏழுபேர் ஒரே போலன்னு சொல்வாங்களே அப்படி இந்த குண்டன் வந்துவிட்டாரோ! பஸ் மிஸ் ஆகிவிட்டது என்று கேட்போர் நிறைய இருக்காங்க இப்ப.
கீதா
படம் நான் வேலைக்குப் போகும்போது எடுத்த படம். இரண்டு குண்டன்கள் என்னிடம் வந்திருக்கிறார்கள்!
நீக்குதிருவரங்கம் அமுது உணவகத்துல (இந்தத் தடவை மதியம் மூன்றுமணிக்கே கிளம்பிவிட்டதால் அங்க சாப்பிடலை. மாலை ஆறு மணிக்குதான் கடை) ரொம்ப சூடா இட்லி இருக்கும். எடுக்க எடுக்க போய் வாங்கலாம். சங்கீதா நிறுவனர் சொல்லியிருக்கார், அவர் ஹோட்டல்கள்ல இட்லி கஸ்டமர் இலைக்கு வர குறைந்தது ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகும் என்று.
பதிலளிநீக்குசூடா இட்லி என்னும் வார்த்தையே நாக்கில் ஜலம் ஊற வைத்து ஜாலம் செய்கிறது!
நீக்குபூண்டு போட்டுச் செய்வது வீட்டில் நடக்காது. எப்போதாவது அழகிய பூண்டு வாங்கிட்டு வருவேன். அது உலர்ந்து காற்றாக ஆகும் வரை சும்மாதான் இருக்கும்.
பதிலளிநீக்குபூண்டு வேணாம்.. வெங்காயம் வேணாம்... என்னவோ போங்க..
நீக்குநான் வந்தேன்.__/\__ ராதா கல்யாண மஹோத்ஸவத்தில் கலநு கொள்ள சென்று விட்டதால் மூன்று நாட்களாக வர இயலவில்லை.
பதிலளிநீக்குநானும் ராதா கல்யாண மகோத்ஸவத்தில்தான் கலந்துகொண்டேன்... நகரத்தார் பகுதியில்..இரண்டு நாட்கள்.
நீக்குநாங்கள் கோகுல் கல்யாணத்துக்கு தயார் ஆகிக் கொண்டிருக்கிறோம்!!
நீக்குமஹராஷ்ட்ர 'டெச்சா' .. தெரியாத பெயர், தெரிந்த ரெசிபி. செய்வதுண்டு இந்த அளவு பூண்டு கிடையாது. படங்கள் அருமை!
பதிலளிநீக்குராதாவிடம் சொல்லி விடுகிறேன்!
நீக்குஇட்லி புராணம் அருமை! நான் இட்லி வார்ப்பதெர்கென்று இரும்பு இலுப்பச்சட்டியும், ஏழு இட்லிகள் வார்க்கக் கூடிய இட்லி தட்டுகள் இரண்டும் வைத்திருக்கிறேன். அதில்தான் துணி போட்டு இட்லி வார்ப்பேன்.
பதிலளிநீக்குஆரம்பத்தில் சிறிய இட்லி குண்டான் தான் வைத்திருந்தோம். போகப் போக குடும்பம் பெருகவும், கெஸ்ட் வருகை கருத்தில் கொண்டும் பெரிது புதிது வாங்க வேண்டி இருந்தது.
நீக்குஇட்லி இலுப்பச் சட்டியை இட்லி குக்கர் புறம் தள்ளிய்து போல சின்ன உரலையெல்லாம் மிக்சி விரட்டி நாளாகி விட்டது. இடிக்கும் பொறுமை இளையதலைமுறைக்கு கிடையாது.
பதிலளிநீக்குஆரம்பத்தில் இந்த இட்லியைக் குக்கரில் வைக்கும் யோசனையைக் கொண்டு வந்ததே ப்ரெஸ்டிஜ் கம்பெனி தான். அவங்க தான் ப்ரீத்/ப்ரீத்தி என்னும் பெயரில் இட்லித் தட்டுக்களைக் கொண்டு வந்து அவங்களிடம் வாங்கும் குக்கரில் இதை வைச்சுக்கலாம் எனவும் குக்கரின் பயன்பாடு அதிகரிக்கும் எனவும் விளம்பரம் செய்தார்கள். ஆரம்பத்தில் 71/74 களில் இந்தத் தட்டுக்கள் குக்கரைச் செய்யும் அலுமினியத்தில் வந்ததோடு குக்கரோடு இலவசமாகவும் கொடுத்தாங்க. பின்னர் மற்றக் கம்பெனிகளும் பின்பற்றி அதோடு தனியாகப் பாத்திரமும் அலுமினியத்தில் குக்கர் போல் கொடுத்துத் தனியாக விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள். 74 இல் ராஜஸ்தான் போன நான் திரும்பி 80 ஆம் வருடம் வந்தப்போ இந்தக் குக்கரில் பற்பல மாற்றங்கள் வந்திருந்ததோடு இந்த ப்ரீத்தி இட்லித்தட்டுக்கள் இல்லாத வீடே இல்லை எனும்படி எல்லோரும் அதில் தான் இட்லி வார்த்தார்கள். நான் மட்டும் சீனாச்சட்டி, இட்லித்தட்டு என இருந்தேன். அதை இன்னமும் மாற்றவே இல்லை. பலரும் முக்கியமா என் அருமை நண்பரும் சகோதரரும் ஆன திரு திவாகர் வெங்கட்ராமன் எங்க வீட்டு இட்லிக்கு ரசிகர். :))))) சொல்லிக் கொண்டே இருப்பார். அதுவும் அவர் வந்த அன்னிக்கு அவருக்கு இட்லிகளை மாமா பாக் செய்து கொடுத்தார் என்பதில் அவருக்கு மிகவும் பெருமை, சந்தோஷம்.
நீக்குஆராய்ச்சி அருமை.
நீக்குஆராய்ச்சிஎயெல்லாம் இல்லை. உண்மையில் நடந்தவை. மாமா கூட அந்தத் தட்டுக்கள் தனியா விற்பனை செய்தால் வாங்கலாம்னு சொல்லுவார்/ ஏனெனில் இதெல்லாம் அறிமுகம் ஆகும் முன்னரே நாங்க கல்யாணம் ஆன உடனேயே நாலைந்து மாதத்துக்குள் குக்கர், காஸ் எல்லாம் வாங்கிட்டோம். இந்த இலவசம் கொடுக்கும் வழக்கமெல்லாம் அப்போ அவ்வளவா இல்லை. பின்னர் தான் வந்தது. எங்க நாத்தனாருக்கெல்லாம் குக்கர் வாங்கிக் கொடுக்கையில் இந்தத் தட்டுக்கள் அவங்களுக்குக் கிடைச்சிருக்கு. அதான்! :))))) இன்னமும் நினைவில் இவை எல்லாம் இருக்கு என்பதே உண்மை.
நீக்குபழைய பதிவுகளை படித்தேன்.
பதிலளிநீக்குஇளையாழ்வார் சரிதமும், பாசுர விளக்கமும் சிறப்பு.
கிருபானந்த வாரியாரின் கதை நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் அதை அவர் சொல்லக் கேட்டால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
முன்னெல்லாம் ஆடியோ காசெட்டுகள் கிடைச்சது. இப்போத் தெரியலை. நான் இதெல்லாம் கேட்க முடியலை. இப்போ வாட்சப் மூலம் வரும் துஷ்யந்த் ஸ்ரீதர், கல்யாணராமன், விட்டல்தாஸ் மஹராஜ், எப்போவானும் அபூர்வமா பகிரும் ஸ்ரீஹரிதாஸ்கிரி அவர்களின் கச்சேரிகள் ஆகியவை தான். முகநூலில் அதிகமா வருவது சிவஸ்ரீ ஸ்கந்தப் பிரசாதின் கச்சேரிகள், கதா காலட்சேபங்கள்.
நீக்கு