சோழர் கோயில்கள் தொகுப்பு – இதுவரை பார்த்தது பகுதி 1
சோழர்கள் சைவ சமயத்தில் ஒழுகியவர்கள். அனேகமாக எல்லா அரசர்களும் வைணவ சமயத்திற்கு எதிர்ப்பாக இல்லாமல், திருமால் கோயில்களுக்கும் திருப்பணி செய்திருந்தாலும், காவிரி நதிப்பாதை முழுவதும் சிவனுக்கான கோயில்கள் கட்டினார்கள்.
அந்த வரிசையில் நான் தாராசுரத்தில் ஆரம்பித்து (அதற்கு முன்னால் வசந்த வல்லபராயர் கோயில், பெங்களூரு. இதுவும் சோழர் காலத்தைய கோயில்தான்) ஜனவரி 2025ல் ஆரம்பித்து, கிட்டத்தட்ட 70 வாரங்களுக்கு மேல் ஒரு தொடராக எழுதினேன். இன்னும் எழுதாமல் விட்ட கோயில்கள் அனேகம்.
அவ்வப்போது அவற்றையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இதுவரை, சோழர் காலக் கோயில்களாக நாம் பார்த்தவற்றை படங்களாக இந்த வாரம் கொடுக்கிறேன். இது என்ன என்ன கோயில்களை இதுவரை பார்த்தோம் என்று நினைவுபடுத்திக்கொள்ள உதவும்.
வசந்த வல்லபராயர் கோயில், பெங்களூரில் உள்ளது. இதில் தெரிந்த ஒருவர் தமக்கு 80 வயது நெருங்குவதால் குழுவாக திவ்யப் பிரபந்தம் சேவிக்க நினைத்ததால் நாங்கள் சென்றிருந்த கோயில். மிகப் பழைமையான ஆலயம்.
வசந்த வல்லபராயர் கோயில், பெங்களூர்
ஸ்ரீ வசந்த வல்லபராய ஸ்வாமி மூலவர் (இணையம்) இரு புறமும் பூமி, நீளாதேவித் தாயார்.
பல முறை தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதார தலமான திருமண்டங்குடிக்குச் சென்றிருக்கிறோம். பொதுவாக அங்கு இருக்கும் அர்ச்சகர் ஒருவர் ரொம்ப நேரம் எடுத்துக்கொண்டு தல புராணம், சிறப்புகள் என்று சொல்லுவார். ஒவ்வொரு முறை செல்லும்போதும் இதனைச் சொல்லுவார். சட் என்று நகர்ந்துவிட முடியாது. ஆனால் கோயில் பிரசாதம் நன்றாக இருக்கும். ஒரு முறை புள்ளம்பூதம்குடிக்குச் செல்லும்போது வழி மாறி இந்தக் கோயிலுக்கு வந்தோம்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதாரஸ்தலம், திருமண்டங்குடி
மூலவர் ரங்கநாதர், நின்ற திருக்கோலம், தொண்டரடிப்பொடி ஆழ்வார் சந்நிதி.
அதனை
அடுத்து, சோழர்
தலைமுறையில் 18ம் தலைமுறையான
இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலின் சிற்பங்களைத்
தொடர்ந்து பல வாரங்கள் பார்த்தோம். அத்துடன் சோழர் வரலாற்றையும் எழுத ஆரம்பித்தேன்.
அத்துடன் அருகில் இருந்த தெய்வநாயகி அம்மன் கோயிலையும் பார்த்தோம்.
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் நுழைவாயில் எதிரே உள்ள நந்தி. இங்குள்ள படிகள் தட்டினால் ஒவ்வொரு ஸ்வரம் எழுப்பும். அதனைப் பார்வையாளர்கள் உடைத்துவிடக்கூடாது என்பதற்காக இப்போது தடுப்பு போட்டு-வைத்திருக்கிறார்கள்.
ஐராவதீஸ்வரர் சந்நிதிக்கு முன்பாக உள்ள துவாரபாலகர்கள்.
உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன், நிலவு உலாவும்
நீள்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர்ச் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், அபிராமி அன்னையின் அருள் பெறுவோம்.
தாராசுரம் தெய்வநாயகி அம்மன் கோயில். என்னைச் சரணடை…. என் அருள் உனக்கு உண்டு. ஆமாம்.. இந்த முத்திரைக்கு ஒரு அர்த்தம் உண்டு. ஒருவன் சரணடைகிறான் என்றாலே, தாள் பணிகிறான் என்றே அர்த்தம், அதாவது காலில் விழுதல். அதனால்தான் என்னைச் சரணடை என்ற முத்திரை, திருப்பாதங்களைக் காட்டியவாறே இருக்கும்.
தாராசுரம் கோயில்களைப் பார்த்த பிறகு அடுத்து பழையாறை வட தளி சோமநாதஸ்வாமி திருக்கோயிலைப் பார்த்தோம். கோயிலுடன் திருநாவுக்கரசர் வரலாற்றையும் பார்த்தோம். அந்த ஊரில் பிறந்த மங்கையர்கரசி அவர்களின் சிலையையும் அந்தக் கோவிலில் கண்டோம். மகேந்திர பல்லவனின் வரலாறும் திருநாவுக்கரசருடன் சேர்ந்தது என்பதால், பல்லவர் கட்டிய குடவரைக் கோயில் உள்ள திருவெள்ளறையைச் சுருக்கமாகப் பார்த்தோம். பழையாறை வடதளி கோயிலில் உள்ள சோழ கமலாம்பிகை அம்மன் கோயிலையும் தரிசனம் செய்த பிறகு, நந்திபுர விண்ணகரம் என்று அழைக்கப்படுகிற நாதன் கோயில் வைணவ திவ்யதேசத்தைத் தரிசனம் செய்தோம்.
சோமநாதஸ்வாமி திருக்கோயிலின் ராஜகோபுரம் (பழையாறை வட தளி)
பழையாறை வட தளி சோமநாதஸ்வாமி தரிசனம். மங்கையர்கரசியின் பிறந்த ஊர்.
பழையாறை வடதளி சோம கமலாம்பிகை அம்மன்.
நந்திபுர விண்ணகரம், நாதன் கோயில் (பழையாறை)
நந்திபுர விண்ணகரப் பெருமான் மூலவர் வீற்றிருந்த கோலத்தில் ஜெகன்னாதப் பெருமாள் உபய நாச்சியார்களுடன். மூலவர் படத்தை மிக அழகாக எடுத்திருக்கிறார்கள்.
நந்திபுர
விண்ணகரம் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கோயில். இந்தக் கோயிலுக்கு
சுந்தரச் சோழரும் (8ம் நூற்றாண்டு) நிவந்தங்கள் விட்டிருக்கிறார். அந்தக் கோயிலைத்
தொடர்ந்து நாம் பார்த்த து, கொஞ்சம் தூரத்தில்
இருந்த பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை. இதனை இப்போது இராமனாதன் கோயில் என்று குறிப்பிடுகிறார்கள்
(ஏன் என்று புரியவில்லை).
பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை (இராமநாதன் கோயில் என்று குறிப்பிடுகிறார்கள்) கோயில் முகப்பிலேயே பெரிய அளவில் துவாரபாலகர்கள். இது பொதுவாக சோழர்களின் கோயில் அமைப்பு.
துவாரபாலகர்கள் மிக அழகாக இருக்கின்றன. இது பழுவேட்டரையர்களின் கலைப்படைப்பாக இருக்கலாம்.
பிற்பாடு, தென் தமிழகக் கோயிலுக்காக சோழர் வரலாறு பற்றி பிறர் எழுதியிருந்த ஒரு பழைய வரலாற்று நூலைப் படித்தபோது, பஞ்சவன் மாதேவிக்கு ஒரு புதல்வன் இருந்தான் என்றும் ஆட்சிப் போட்டிக்கு வரவே இல்லை என்றும் படித்தேன். அவனது மகனும் பொறுப்பில் இருந்திருக்கிறான்.
அதனைத்
தொடர்ந்து நாம் பார்த்த கோயில் தஞ்சை பெருவுடையார் கோயில்.
தஞ்சை பெருவுடையார் கோயில். இராஜராஜேச்வரம் கோயிலின் முழுப் பரிமாணமும் வெளிப்படுகிறதா? இதில் முன் மண்டபத்தின் மேல் இருக்கும் பகுதியில் இரண்டாவது தளம் அமைந்திருந்தது. அது பழுதுபட்டு இடிந்துவிட்டது. தற்போது முதல் தளம் மாத்திரமே இருக்கிறது.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
கருவூர்த்தேவர் சன்னிதி.
தஞ்சை
பெருவுடையார் கோயில் துவாரபாலகர். தென் தமிழகத்தில்தான் பெரிய சிற்பங்கள் இருக்கிறது
போலிருக்கிறதே என்று பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் ஒரு முறை எழுதியிருந்தார். அவர்
தஞ்சையை விதிவிலக்காக எண்ணினாரா என்று தெரியவில்லை.
ராஜராஜன் திருவாயில், தஞ்சை பெருவுடையார் கோயில். மன்னன் இராஜராஜன் வருவான் என்று காத்திருக்கவில்லை.
தஞ்சை பெருவுடையார் கோயிலைப் பற்றி பல வாரங்கள் பார்த்தோம். இடையில் போரடிக்க க் கூடாதே என்று என்னுடைய மெக்சிகோ பயணத் தொடரை 14 வாரங்கள் எழுதியிருந்தேன். அதன் பிறகு தொடர்ந்த தஞ்சை பெருவுடையார் கோயில் படங்கள், கடைசியில் இராஜராஜ சோழனின் பள்ளிப்படையுடன் முடிவடைந்தது.
இராஜராஜன் பள்ளிப்படை
இதைச் சாக்கிட்டு சோழர்களின் வரலாற்றை விரிவாகப் பார்த்தோம். தொடர்ந்து வரலாறு மற்றும் கோயில் சிற்பங்களைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது அயர்ச்சியாக இருக்குமோ என்று எண்ணி, ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் காட்சி சாலையில் இருந்தவைகளை மூன்று வாரத் தொடராகப் பகிர்ந்துகொண்டேன்.
பிறகு
கோயில் தரிசனம் தொடரில் மற்ற கோயில்களைப் பார்க ஆரம்பித்தோம். அதுபற்றி அடுத்த வாரம்
பார்க்கலாம்.
(தொடரும்)
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம். வாழ்க வளமுடன்.
நீக்குபதிவு அருமை. இன்றைய தரிசனம் அற்புதம்.
பதிலளிநீக்குஸ்ரீ வசந்த வல்லபராய ஸ்வாமி மூலவர் தரிசனம் அருமை.
பாத தரிசனம் பாப விமோசனம் என்பார்கள்.
//என்னைச் சரணடை…. என் அருள் உனக்கு உண்டு. ஆமாம்.. இந்த முத்திரைக்கு ஒரு அர்த்தம் உண்டு. ஒருவன் சரணடைகிறான் என்றாலே, தாள் பணிகிறான் என்றே அர்த்தம், அதாவது காலில் விழுதல். அதனால்தான் என்னைச் சரணடை என்ற முத்திரை, திருப்பாதங்களைக் காட்டியவாறே இருக்கும்.//
தாளினை சரண் அடைந்தால் நிம்மதி, அமைதி கிடைக்கும். எது வந்தாலும் இறைவன் பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கை வரும்..
மிக்க நன்றி. இதுவரை பார்த்த கோயில்கள் என தெய்வ தரிசனங்களை பிரதானமாகப் பகிர்ந்தேன்.
நீக்குஇதுவரை பார்த்த கோயில்கள் தரிசனம் மீண்டும் கிடைத்தது, நன்றி.
பதிலளிநீக்குசுவாமி, அம்மன் , பெருமாள் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
இன்று பகிர்ந்த கோயில்கள் அனைத்தும் எத்தனை முறை பார்த்தாலும் அலுகாத கோயில்கள் .
எனக்கு எந்த ஒரு கோயிலையுமே, சரி இத்தனை முறை தரிசனம் செய்தாகிவிட்டது என்ற மனம் வந்ததில்லை. குலதெய்வம் என்றில்லை எந்தக் கோயிலையுமே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தரிசனம் செய்யும் ஆவல் உண்டு.
நீக்குஉறவினர்களில் சிலர், எதற்காக தொடர்ந்து பயணம், ஒரு தடவை தரிசனம் செய்தால் கோதாதா என்றெல்லாம் சொல்வர்.
முருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா. வாங்க துரை செல்வராஜு சார்.
நீக்குநலம் வாழ்க
பதிலளிநீக்குவாழிய நலம்.
நீக்குகாலையிலேயே இனிய தரிசனம்...
பதிலளிநீக்குஅழகிய படங்கள்... சிறப்பு
மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.
நீக்குபழையாறை செல்வதற்கு வெகு நாளாகவே ஆவல்...
பதிலளிநீக்குஉங்களுக்கு அருகில்தானே உள்ளது. திருநாவுக்கரசர் சம்பந்தப்பட்ட வடதளி கோயிலை தரிசிக்காமல் இருக்கலாமா?
நீக்கு" இது வரை கண்டது " என்பதை சுவையாக, சுருக்கமாகச் சொன்னது அருமை. நம்ம இயலாத அளவு புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் ! பொறாமையே வந்து விடும் போல உணர்கிறேன் !!
பதிலளிநீக்குவாங்க ராமன் சார்... எத்தனை கோயில் போனால் என்ன? பக்தி உணர்வு வந்தபாடில்லை. சிவ்வாக்கியர் பாடல் நினைவுக்கு வருகிறது. மந்திரங்கள் முணு முணுத்தால் என்ன? கோயில் கோயிலாகச் சுற்றினால் என்ன? நம் உள்ளில் உறைந்திருக்கும் இறைவனை அறியாமல் இருக்கிறாயே.. என்ன பயன் என்ற பொருளில் வரும்.
நீக்குநம்ப என்பது நம்ம என்று பதிவாகியுள்ளது. ஆட்டோ கரெக்ட் அதிகப் பிரசங்கம்.
பதிலளிநீக்குஇதெல்லாம் சகஜம். படிக்கும்போதே புரிந்துவிடும் சார். உங்களைப் பற்றி நினைக்கும்போது உங்கள் அமைதியான குணமே மனதில் தோன்றுகிறது. வாழ்க வளமுடன்.
நீக்குகைத்தலபேசியின் தொடு திரை
பதிலளிநீக்குபழுதாகி உள்ளது... பொடி எழுத்துக்களும் சரிவரத்
தெரிவதில்லை
விரைவில் சரி செய்துவிடுங்கள். கைபேசியில் படிப்பது எப்போதுமே மிகச் சிரம்ம்.
நீக்குகைபேசி சரி செய்ய நான் ரொம்ப அவசரப் படுவேன். நீங்கள் நிதானமாக இருப்பது வியப்பளிக்கிறது.
நீக்குசெல்பேசி செயலிழந்தால் சிந்தனை கால் ஒடியும்
நல்பேசி ஆக்கிடவே கை துடிக்கும்
புதிதொன்று வாங்கிவிட எண்ணம் வரும்.
எதிரே காண்கின்ற ஏழை ரிப்பேர் ஷாப்
நம்பிக் கொடுப்போமா என்னதான் ஆகிவிடும்
வம்பாகிப் போனால் வாங்கிடலாம் புதிதொன்று.
செல்பேசி செயலிழந்தால் சிந்தனை காலொடியும்
நீக்குநல்பேசி ஆக்கிடவே நம்கையும் துடிக்கும்
புதிதொன்று வாங்கிவிட எண்ண மனமெண்ணும்
எதிரெதிரில் காணுகின்ற சிறிய ரிப்பேர் ஷாப்பும்
நம்பிக்கை கொடுக்காது நம் மனமே குழப்பும்
வம்பாகிப் போனாலென் வாங்குவோமே புதிது
எண்ணமெல்லாம் நல்லதுதான் எண்ணிப் பார்த்தால்
கொண்டவளைக் கேட்காமல் செய்வதாமோ?
கொண்டவளின் அனுமதிக்கு வாய் பார்த்தே நிற்க
நீக்குவைகுண்ட வாசலும் மூடிக்கொண்டு இறுகுமே
'திரும்பிப் பார்க்கிறேன்' போல ஒரு பதிவா? பெரிய கோவில் முன்மண்டப இரண்டாவது தளம் இடிந்து விழுவதற்கு முன் இருக்கும் படம் இருக்கிறதா என்று தேடிப் பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குஅது பழைய படங்களை (1900களில்) இணையத்தில் தேடினால் கிடைக்கும்.
நீக்குரொம்பவே கோயில் கோயிலாக சிற்பங்களை எழுதி போரடிப்பதுபோல் தோன்றியதால், இரண்டு பகுதிகளாகத் திரும்பிப் பார்த்து வேறு தீமில் எழுதலாம் என்று எண்ணம்.
/// நீங்கள் நிதானமாக
பதிலளிநீக்குஇருப்பது வியப்பளிக்கிறது.///
ஒளிவு மறைவுடன் சொல்வதானால்
₹%&%&%% பிரச்னை...
புரிந்தது...எல்லாம் சரியாகும் துரை செல்வராஜு சார்.
நீக்குஅன்பின் நெல்லை அவர்களுக்கு நன்றி..
நீக்குஇன்றைய பகிர்வில் பார்த்த கோவில்களை மீண்டும் படங்களுடன் நினைவில் கொண்டுவந்தது அருமை. மீண்டும் மனதில் இருத்திக் கொண்டோம்.
பதிலளிநீக்குவாங்க மாதேவி அவர்கள். மிக்க நன்றி
நீக்குவழக்கம்போல் போய்ப் பார்க்கத் தூண்டும் படங்கள்...
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் சார்... நன்றி
நீக்குபகிர்வு மிக அருமை. எதை எல்லாம் பார்த்தோம் என நமக்கு நாமே தெரிஞ்சுக்க முடியும். நல்ல தரிசனங்கள் செய்து வைத்தமைக்கு நெல்லைக்கு நன்றி. இன்னொரு விஷயம் காவிரிக்கரை எங்கும் சிவாலயங்கள் எழுப்பினவன் விஜயாலய சோழன் மகன் முதலாம் ஆதித்த சோழன். காவிரி உற்பத்தி ஸ்தானத்தில் ஆரம்பித்துக் கடைசியில் கடலில் கலக்கும் பூம்புகார் வரை சுமார் 108 சிவாலயங்களைக் கற்றளிகளாக எழுப்பினதாக அன்பில் செப்பேடுகள் குறிப்பிடும்.
பதிலளிநீக்குமற்ற 70 மாடக்கோயில்கள் அனைத்தும் கோச்செங்கணான் என்னும் சோழ அரசனால் எழுப்பப் பட்டவை. இவன் சங்க காலத்தைச் சேர்ந்தவன்னு படிச்ச நினைவு. இவன் பிறக்கும் நேரத்தை முன்னரே ஜோதிடர்கள் குறிப்பிட்டுச் சொன்னபடியால் இவனைப் பெற்ற சோழ ராணி வலி வந்து பிரசவ வலியில் துடிக்கும் சமயத்திலும் குழந்தை நல்ல நேரத்தில் பிறக்கவேண்டும் என்பதற்காகத் தன்னைத் தலை கீழாகத் தொங்க விட்டுக் கட்டும்படி சொன்னாள் என்பார்கள். குழந்தை அதிக நேரம் வயிற்றில் இருந்ததால் குழந்தை பிறக்கும்போது கண்கள் செக்கச் செவேர் என இருக்க அன்னை அவனைச் "செங்கண்ணானே!" என அழைக்க அவன் பெயரே "கோச்செங்கணான்" என ஆயிற்று என்பார்கள். ஆனாலும் ஆதித்த சோழன் கட்டிய சிவாலயங்களே பிற்காலத்தில் பிரபலம் அடைந்தன.
வாங்க கீதா சாம்பசிவம் மேடம். சோழன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில் என்று பாசுரம் வரும். கோச்செங்கணான் நீங்கள் குறிப்பிட்டதுபோல கிபி 400-600க்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம்.
நீக்குகோச்செங்கணான் நாயன்மாரிலும் ஒருத்தர். திருவானைக்காக் கோயில் இவர் கட்டியவற்றுள் சிறப்பு வாய்ந்தது. முற்பிறவியில் சிலந்தியாக இருந்த சிவகணங்களில் ஒருவரான கோச்செங்கணான் மறு பிறவியில் ராஜகுமாரனாகப் பிறந்து முற்பிறவியின் நினைவால் யானை புக முடியாவண்ணம் 70 மாடக் கோயில்களை எழுப்பியதாக வரலாறு. பழையாறு சோமேஸ்வரர் கோயில் கூட ஒரு மாடக் கோயில் தான் என நினைக்கிறேன். இன்னம்பூர் இன்னம்பூநாதர் கோயில் இதற்கு மாறாக யானையான ஐராவதம் வந்து வணங்குவதற்கேற்றபடி வாசல் அகலப்படுத்திக் கட்டப்பட்டது என்பார்கள். கஜப்ருஷ்ட விமானம். முன்னெல்லாம் எந்தக் கோயிலுக்குப் போனாலும் நாங்க ரெண்டு பேருமே விமானம் எத்தகையது என்னும் ஆராய்ச்சியில் இறங்குவோம். அது ஒரு காலம்.
பதிலளிநீக்குகோச்செங்கணான் முதலில் மாடக்கோயிலை (அதாவது இரு நிலைக் கோயில்கள், ஆனால் மூலவர் இரண்டாம் நிலை, படிக்கட்டுகளில் ஏறி கருவறையை அடைவது போன்று) எழுப்பினர் என்பர். அவர் எழுப்பிய கோயிலாக திருநறையூர் (நாச்சியார் கோயில்) மணிமாடக் கோயில் என்பர். இதனை வியாக்கியானத்தில், கடைசியாக வைணவ சமயத்தை அடைந்தார் என்பதுபோலக் குறிப்பிட்டிருந்தாலும், இந்த மன்னன், வைணவக் கோயில் ஒன்றையும் சமைத்தான் என்றே கொள்ளவேண்டும்.
நீக்குநீங்கள் எழுதும் காலத்தில் நிறைய படித்தவர்கள், ஆர்வமுடையவர்கள் இணையத்தில் வலம் வந்தனர். இப்போது அந்த ஆர்வம் குறைந்துவிட்டது என்று எனக்குத் தோன்றுகிறது. (இன்னம்பூர் என்ற ஊர் பலகையைப் பார்த்ததும் உங்கள் நினைவு வந்தது என்று ஒரு முறை எழுதியிருக்கிறேன்)
நாச்சியார் கோயில் வழியாகத் தான் கும்பகோணத்தில் இருந்து கருவிலி போகணும். கருவிலி நாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம். இந்த விஷயமே என்னோடகல்யாணப் பேச்சு வார்த்தைக்காக ஜாதகம் கொடுத்து ஜாதகம் வாங்க அப்பா கருவிலிக்குப் போனப்போ அங்கே கோயிலுக்குப் போயிருந்தப்போப் பார்த்திருக்கார். சரித்திர ஆர்வலரான அவருக்கு இந்த ஊர், கோயில் மேல் ஆர்வம். ஆனால் மாமனார், மாமியாருக்கு அது புரியலையாம். பின்னர் குருக்களைக் கேட்டு அப்பா தெளிவு பெற்றேன் என்பார். இந்த விஷயம் ஊர்க்காரங்க யாரும் அது வரை கேட்டதே இல்லைனும் அப்பாவிடம் குருக்கள் சொல்லி இருக்கார்.
நீக்குநாச்சியார் கோயிலுக்குப் பல முறை போயிருக்கோம். கல் கருடன் வீதி உலா வரும்போது போக நினைத்துப் போக முடியலை. நாச்சியார் கோயில் வெண்கலப் பாத்திரங்கள் கடையில் பெண்ணுக்குக் கல்யாணத்துக்காகக் குத்து விளக்கு வாங்கினோம். ஒரு தரம் வைகுண்ட ஏகாதசி அன்னிக்குப் பெருமாளை வீதி உலாவில் தரிசித்திருக்கோம். ஆனால் பல்லக்கில் தான் வந்தார் பெருமாள். அங்கே உள்ள ஆகாசமாரியம்மன் கோயிலுக்குப் போகாமல் வர மாட்டோம். வைகாசி மாதம் ஒவ்வொரு வருடமும் சமயபுரம் மாரியம்மன் ஆகாசம் வழியாக அங்கே வருவதாக ஐதிகம். நான் கல்யாணம் ஆகிப் போன ஒரு வாரத்திலேயே இந்தத் திருவிழா நடக்கவே கருவிலியில் இருந்து வண்டி கட்டிக் கொண்டு திருவிழாவுக்குப் போனோம். எனக்கு அது அப்போது புது அனுபவம். மாட்டு வண்டியில் போய்க் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டது எல்லாம் புதுசா இருந்தது.
நீக்குநாச்சியார் கோயில் கல்கருட சேவைக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். ஒரு தடவை நான் மாத்திரமே சென்றிருந்தேன். கல்கருடன் வீதிக்கு வரும்போது அருகிலேயே தாயாரையும் ஏளப்பண்ணுவார்கள். நான் தோள் கொடுத்திருக்கிறேன் (ஒரு சில நிமிடம் ப்ளஸ் போட்டோ). என்னமா தோள் வலிக்குது. கல்கருடனை ஏளப்பண்ணுபவர்களிடம் நான் ஆசைப்பட்டுக் கேட்கவில்லை. ஹாஹா. படத்தை ஒரு புதனன்று பகிர்கிறேன்.
நீக்குகல்கருட சேவை... அங்கு நாதஸ்வர கச்சேரி நடக்கும். கேட்டால் சிலிர்த்துவிடும். அதிலும் தவில் ஒருவர் அடிப்பார். சாப்பிட்ட சாப்பாடு உடனே நமக்கு செரித்துவிடும். என்ன திறமையான கலைஞர்கள்.. நிறைய பணம் கிடைக்காவிட்டாலும், அவர்கள் திறமைக்குக் குறைவில்லை. எப்போது இதனையெல்லாம் எழுதப்போகிறேன் என்று பல நேரங்களில் தோன்றும்.
நீக்குகருடசேவையின்போது, உணவு வழங்குவார்கள். அடடா..அவ்வளவு சுவையாக இருக்கும். சாப்பிட்ட பிறகு, கருட சேவைக்கு நேரமாகும் என்பதால் உடனே அருகில் திருவிண்ணகர் கோயிலுக்குச் சென்றேன். அப்போது பெருமாளை உறங்கப்பண்ணும் நேரம். அதற்கான பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல் கொடுத்தார்கள். ஏன் ருசியில்லாமல் இருந்தது என்று எனக்கு ஆச்சர்யம். காரணம் நாச்சியார் கோயிலில் அவ்வளவு உணவு சாப்பிட்டிருந்தேன் போலிருக்கிறது.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த ஞாயிறு தெய்வ தரிசன பகிர்வும் அருமையாக இருந்தது. தாங்கள் சென்று வந்த கோவில்கள், அங்குள்ள இறைவன் தரிசனங்கள் என பதிவு நன்றாக இருக்கிறது. அப்போது வசந்த வல்லபராயன் கோவிலைப் பற்றி நீங்கள் போட்டபதிவை படித்து விட்டு, நாங்களும் குடும்பத்துடன் பல மாதங்களுக்கு முன் சென்று வந்தோம். அங்கு இறைவன் தரிசனம் நன்றாக கிடைத்தது.
தாங்கள் சென்று வந்த கோவில்களைப் பற்றிய மீண்டும் ஒரு அலசலில் அத்தனை இறைவன், இறைவிகளையும் கண்குளிர கண்டுகந்தேன். நேற்று காலை வெளியே சென்ற நாங்கள் இரவுதான் வீட்டுக்குத் திரும்பினோம் . தாமதமாகி விட்டது. அதனால் உறங்குவதற்கு முன் பதிவை படித்தேன். இப்போதுதான் கருத்திடுகிறேன்.
பார்த்த கோவில்களுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லலாம் என்பது என் கருத்தும். வேறு எங்கும் செல்வதை விட கோவில்களுக்குச் சென்றால், இறை தரிசனங்கள் மனதில் ஆழமாக பதியும். அங்குள்ள இறைவனிடம் மனம் விட்டு பேசும் போது மனதில் ஒரு உற்சாகமும் வரும். தாங்களும் நிறைய கோவில்களுக்கு சென்றுள்ளீர்கள் . எல்லாமே இறைவன் அருள் இல்லாவிட்டால் எதுவும் நடப்பது கடினம். மனமார்ந்த வாழ்த்துகள். . கோவில்களைப் பற்றி சிறப்புக்களை வாரந்தோறும் எழுதி வருவதற்கும் அன்பான பாராட்டுக்கள். தங்களின் தெய்வீக பணி தொடரட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.
நீக்குநீங்கள் வசந்த வல்லபராயர் கோயிலுக்குச் சென்றுவந்தது கண்டு மகிழ்ந்தேன். அந்தக் காலத்தில் ஏரிகள் சூழ்ந்த காடு அது.
நேற்று காந்திபஜாரிலிருந்து வரும் வழியில் தொட்ட கணபதி கோவில் வாசலைப் பார்த்து உங்களை நினைத்துக்கொண்டேன்.
மனைவி, இன்றைக்கு பிள்ளையார் கொழுக்கட்டையை என்னைப் பண்ணச் சொன்னார். நான் காந்து பஜார் அருகில் டிவிஜி ரோடு, ஹோளிகே மனையில் ஒன்று 26 ரூ என்ற விலையில் வாங்க நினைத்திருக்கிறேன். நீங்கள் பண்ண ஆரம்பித்துவிட்டீர்களா?