எனக்கு பஹ்ரைனில் Datamas என்ற கன்சல்டன்சி கம்பெனியில் ப்ராஜெக்ட் லீடர் என்ற பணி கிடைத்தது பற்றி சென்ற வாரம் எழுதியிருந்தேன். அங்கு வேலையில் சேரும் முன்பாக என் மனைவியை சென்னைக்கு அனுப்பிவிட்டேன்.
நான் துபாயிலும் ஒரு கன்சல்டன்சி கம்பெனியில் மேனேஜர் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் அப்போது எனக்கு ஒரு கன்சல்டன்சி கம்பெனியில் என்னுடைய முக்கியமான வேலை என்ன என்பது அதிகம் தெரிந்திருக்கவில்லை. அதனால் என்னுடைய திறமையைக் காண்பிக்கும் சந்தர்ப்பம் வரவில்லை. ஒவ்வொரு சர்வீஸ் கம்பெனியிலும் மேனேஜரின் பொறுப்பு கம்பெனிக்கு பண வரவை உறுதிப்படுத்துவது. எவ்வளவுக்கு எவ்வளவு நம்மால் கம்பெனிக்கு வரவு அதிகரிக்கிறது என்பது முக்கியம். பயனாளி கம்பெனிகளின் நல்லெண்ணம் முக்கியம் என்றாலும், பணமே பிரதானம். இதனை நான் பஹ்ரைன் கம்பெனியில் வேலை பார்த்தபோதுதான் தெரிந்துகொண்டேன்.
பஹ்ரைனில் புது கம்பெனியில் வேலையில் சேர்ந்தேன். கம்பெனி அலுவலகம் இருந்த பெரிய கட்டிடத்திலேயே எனக்கு ஒரு flat கொடுத்தார்கள். கம்பெனியின் சாஃப்ட்வேர் அப்ளிகேஷன் informixல் எழுதப்பட்டிருந்தது. எனக்கு இன்ஃபார்மிக்ஸ் கற்றுக்கொள்வதிலோ இல்லை அவர்களுடைய அப்ளிகேஷனைப் புரிந்துகொள்வதிலோ ரொம்ப சிரமம் இருக்கவில்லை. எதையாவது சாதிக்கவேண்டும் என்ற ஆசை இருந்த நேரம் அது. நம்முடைய திறமை வெளிப்படவேண்டும் என்று எண்ணின காலம் அது. அதனால் மிகக் கடுமையாக உழைத்தேன். இந்த அப்ளிகேஷன் சாஃப்ட்வேரை (நம்ம டேலி போன்ற சாஃப்ட்வேரை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் இது பல மடங்கு பெரியது) பல கம்பெனிகள் வாங்கி, உபயோகித்து வருவார்கள். அவர்களுடைய இடத்துக்குச் சென்று சப்போர்ட் செய்யவேண்டும், தேவையானவற்றை டெவெலப் செய்யவேண்டும் (Software எழுதணும்). கிளையண்ட் கம்பெனிக்குச் சென்றால், என்னுடைய வேலை நேரம் முடிந்துவிட்டது கிளம்புகிறேன் என்று ஒரு நாளும் சொல்லமாட்டேன். சில நேரங்களில் இரவும் உட்கார்ந்து வேலையை முடிப்பேன். எனக்கு முதலில் பஹ்ரைனில் இருந்த ஒரு பெரிய manufacturing companyயின் software support பணியைக் கொடுத்தார்கள்.
துபாயில் இருந்தபோது எங்கள் சாஃப்ட்வேர் அப்ளிகேஷனை ஒரு கம்பெனியில் இன்ஸ்டால் செய்து implement செய்ய, நாங்கள் 10,000 திர்ஹாம் வாங்கினோம் என்றால் பஹ்ரைனில் 10,000 தினாருக்குக் குறைவாக எந்த ஒரு ப்ராஜெக்டையும் எடுத்துக்கொள்வதில்லை (1 பஹ்ரைன் தினார் சுமார் 10 UAE திர்ஹாம்). அதாவது கொஞ்சம் சிறிய கம்பெனியிலிருந்து பஹ்ரைனில் பெரிய கன்சல்டன்சி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன் என்று தெரிவதற்காக இதனை எழுதினேன்.
இதற்கிடையில், என்னுடைய மாமனாருக்கு, நாங்கள் திருமணமாகி ஏழு மாதங்களில் இருவரும் பிரிந்திருப்பது விருப்பமாயில்லை. அவரிடம் நான், மூன்று மாதங்கள் time கேட்டேன். என் அப்பாவும், மாமனாரும் ஆதிகாலத்திலிருந்தே குடும்ப நண்பர்கள். அதனால் என் அப்பா, அவரிடம், டிசம்பருக்குள் மனைவியைக் கூட்டிச் சென்றுவிடுவான், அப்படி இல்லையென்றால், அவனே திரும்ப வந்துவிடுவான் என்று சொல்லியிருந்தார். அவர்கள் இருவரும் குடும்ப நண்பர்கள் என்பதால் எனக்கு அழுத்தம் தரவில்லை. பஹ்ரைனில், ஃபேமிலி விசாவிற்கு குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவோ அதைவிட மிக அதிகமான சம்பளம் எனக்கு. அதுமட்டுமன்றி கம்பெனி எனக்கு வீடு கொடுக்கும் என்றெல்லாம் காண்டிராக்டில் இருந்தது. அதனால் என்னுடைய ரெசிடண்ட் விசா தயாரானதும், உடனே ஃபேமிலி விசா அப்ளை செய்யலாம் உடனே கிடைத்துவிடும் என்று என் பாஸ் சொல்லியிருந்தார். நான் அவரிடம், ஏதேனும் காரணத்தால் டிசம்பர் 31க்குள் மனைவிக்கு விசா கிடைக்கவில்லை என்றால் நான் கம்பெனியிலிருந்து ரிசைன் பண்ணிவிடுவேன் என்று சொல்லியிருந்தேன். வேலைக்குச் சேர்ந்தது செப்டம்பரில். இரண்டு மாதங்களில் கிளையண்ட் கம்பெனியின் முக்கியஸ்தர்கள் என்னைப் பற்றி நல்லவிதமாகச் சொல்வதும், நான் அதிக நேரம் உழைப்பதும் கம்பெனி பொது மேலாளருக்கு என்னைப் பற்றி நல்ல எண்ணத்தை உருவாக்கியிருந்தது.
என்னுடைய விசா இரண்டு மாதங்களுக்குள் வந்துவிட்டது. உடனே கம்பெனி, என் மனைவியின் விசாவிற்காக அப்ளை செய்தது. அவர்கள் அப்ளை செய்த அடுத்த வாரமே எனக்கு இமிக்ரேஷன் அலுவலகத்திலிருந்து இண்டர்வியூக்கு வரச் சொன்னார்கள். இதுவே புதிய நடைமுறையாக என் அலுவலகத்திற்குத் தோன்றியது. பொதுவாக ஆட்டமேட்டிக்காக ஃபேமிலி விசா தருவதுதான் நடைமுறை. இண்டர்வியூவின்போது என்னுடைய மனைவியின் விசா தற்போது தரப்போவதில்லை, ஆறு மாதம் கழித்துப் பார்க்கலாம் என்று சொன்னார்கள். எனக்கு அதில் ரொம்பவே வருத்தம். வெளிநாட்டு வேலைக்காக நான் 89லிருந்து ஆசைப்பட்டிருந்தேன் (அது எதனால் என்று இன்னொரு பகுதியில் நிச்சயமாக எழுதுகிறேன்) இப்போது பஹ்ரைன் வேலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அதனை விட்டுச் செல்லவேண்டுமே என்ற வருத்தம் ஏற்பட்டது. கம்பெனி பொது மேலாளரிடம் நடந்ததைச் சொல்லி, நான் டிசம்பர் 31க்குள் கிளம்பிவிடுவேன் என்று சொன்னேன். அதற்கு அவர், ஃபேமிலி விசாவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நம் கம்பெனி ஸ்பான்ஸர் வலுவானவர். மீண்டும் அப்ளை பண்ணுவோம், உனக்குக் கிடைத்துவிடும் என்றார்.
அன்று இரவு வருத்தத்துடனே தூங்கச் சென்றேன். இரவில் எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் புட்டபர்த்தி சத்யசாய் பாபா, என் கையைப் பிடித்து ஒரு மாடிப்படி வழியாக வேகமாகக் கூட்டிச் சென்றார். அதன் முடிவில் பெரிய மொட்டை மாடியை அடைந்தோம். என்னைப் பார்த்து அவர், உன்னுடைய பிரச்சனை தீர்ந்தது. கவலைப்படாதே என்று சொல்லி மறைந்தார். (இதற்கு முன்பு எப்போது என் திருமணம் நிச்சயமாகும் என்று துபாயில் இருந்தபோது எனக்கு அவர் சொல்லியிருந்தார், கனவில்)
அடுத்த ஒரு வாரத்தில், நான் கிளையண்ட் இடத்தில் வேலையில் இருந்தபோது என் அலுவலகத்திலிருந்து போன் வந்தது. அலுவலக Finance Officer, என் மனைவியின் விசா வந்துவிட்டது என்றார். அது டிசம்பர் முதல் வாரம் என்று நினைவு. மகிழ்ச்சியுடன் நான் எங்களுக்கான குடியிருப்பில் தேவையான எல்லாவற்றையும் வாங்க ஆரம்பித்தேன். 1995 டிசம்பர் 31ல் மனைவி பஹ்ரைனுக்கு வந்துவிட்டார்.
எதையோ எழுத ஆரம்பித்து, எப்போதும்போல எங்கோ சென்றுவிட்டேன்.
அந்த கம்பெனியில், அலுவலகத்தை ஒட்டியே flats உண்டு. இரண்டு சிங்கிள் Bபெட் அறைகள். வெளியே common Kitchen, Washing machine, Bathroom என்று அமைந்திருக்கும். அங்கு தங்கியிருந்த சுமார் 10-12 பேர்களும் பேச்சலர்கள். அதாவது ஒவ்வொரு தளத்திலும் இரண்டு பேர்கள். இரண்டாவது, மூன்றாவது தளத்தில் 4 தனித்தனி bedrooms இருந்தன. அதில் மலையாளிகள், கோவாவைச் சேர்ந்தவர்கள், குஜராத்திகள் என்று பலதரப்பட்டவரும் இருந்தனர். நான் மாத்திரமே உணவு விஷயத்தில் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். (நான் வெஜ் கிடையாது, நான் வெஜ் ரெஸ்டாரெண்டுக்கும் வெஜ் சாப்பிடச் செல்லமாட்டேன், Egg கிடையாது, சிகரெட், குடி கிடையாது). எல்லோரும் நண்பர்களாகவே பழகினோம். யாரேனும் ஓரிருவர் விடுமுறை நாட்களில் விஸ்தாரமாக சமைக்கிறேன் என்று பொருட்கள் வாங்கி சமைப்பார்கள். பொருட்கள், மற்ற செலவு என்னவோ அதனை, சாப்பிடுபவர்கள் எல்லோரும் பகிர்ந்துகொள்வர். ஒரு நாள் ஒருவர் மிகப் பெரிய வாட்டர்மெலன் வாங்கி வந்து, அதைத் துண்டுகளாக்கி, சாப்பிடுபவர்களுக்கு மொத்தச் செலவைப் பகிர்ந்து ஒரு நோட்டில் எழுதிவிடுவார்கள்.
அப்போது எனக்கு வாட்டர் மெலென் பிடிக்காது. மெனெக்கெட்டு என்னைக் கூப்பிட்டு, ஒரு சிறு துண்டு கொடுத்து, சாப்பிட்டுப் பார், எப்படி இருக்கு என்று கேட்பார்கள். பரவாயில்லாமல் இருக்கு, ஆனால் எனக்குப் பிடிக்காது என்று சொன்னால், அதனாலென்ன, இப்போது ஒரு சிறு துண்டு வாயில் போட்டுக்கொண்டாய் அல்லவா, உன் பெயரையும் எழுதிக்கொள்வோம் என்றார்கள். அதுபோல அங்கு புகழ் பெற்றிருந்த (தமிழ் உணவு) நஃபூரா என்ற சைவ உணவகத்தில் நாங்கள் மூன்று பேர் சென்று உணவு உண்டால் மொத்தமாக வரும் பில்லை மூவரும் பகிர்ந்துகொள்வோம். இதெல்லாம் எனக்கு அப்போது புதுசு. ஆனால் அனைவரும் நண்பர்களாகப் பழகினோம். என்னுடைய அனுபவத்தின்படி, நாம் நல்ல பழக்கங்களுடன் இருந்தால், பலருக்கும் இயல்பாகவே நம்மைப் பிடித்துவிடும்.
இப்படி இருக்கும்போது, அதாவது கம்பெனியில் சேர்ந்து இரண்டு மாதங்களுக்குள்ளாக ஒரு சம்பவம் நடந்தது. அடுத்த தளத்தில் இருந்த ஒரு கோவாவைச் சேர்ந்தவன், எங்கள் தளத்தின் common kitchenல் மீன்களைப் பொரித்தான். அந்த வாசனை வந்து, அறையிலிருந்து வெளியில் வந்த எனக்கு அது கொஞ்சம் பிடிக்காமல் போய்விட்டது. (அப்போது அவ்வளவு rigid ஆக இருந்தேன்) என் குணம் மற்றும் நடத்தையைப் பற்றி அறிந்த கம்பெனி பொது மேலாளர் என்னிடம், வீடு ஒன்றைப் பார்த்துக்கொண்டு சென்றுவிடு. கம்பெனி வீட்டு வாடகைப் படியைக் கொடுத்துவிடும் என்றார். அதனால் மனைவி வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ஒரு இரண்டு பெட்ரூம் அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்தேன். வீட்டிற்குத் தேவையான பொருட்களை மனைவிக்கு விசா வந்த பிறகு உடனே தயார் செய்தேன். 1995 டிசம்பர் கடைசி நாளில் மனைவி வந்து சேர்ந்தாள். அன்றிலிருந்து 2012 வரை நாங்கள் எல்லோரும் பஹ்ரைனில் இருந்தோம்.
இனி இந்த வாரப் புகைப்படங்கள் தொடர்கின்றன.

நாமிருவர்,நமக்கு இருவர்.. இல்லை இல்லை.. ஒரு ஆண், ஒரு பெண். இந்த நமக்கு இருவரை ஒரு சில ஆண்கள் தவறாகப் புரிந்துகொள்கிறார்களோ?

நான் ரொம்ப நாட்களாக, எப்படி விலங்குகளை வேட்டையாடுகிறார்கள் என்று
தெரியாமல் இருந்தேன். அதாவது அம்பு தைத்தால் விலங்கு இறந்துவிடும் என்று நினைத்தேன்
(அது எப்படி ஒரு அம்பில்..என்ற சந்தேகமும் வரும்). பிறகுதான் அம்பு எங்கு படவேண்டும்
என்பது வேடனுக்குத் தெரியும், பிறகு சிந்தியிருக்கும் ரத்தத்தை வைத்து தடம் பார்த்துச்
சென்று விலங்கைப் பிடிப்பான் என்பதை தொலைக்காட்சியில் பார்த்தேன். சில நேரங்களில் அம்பு
சரியாகப் படவில்லை என்றால், விலங்கு தொலைதூரம் சென்றுவிடும், வேறு விலங்குகளுக்கு அந்த
ரத்த வாசனையால் இரையாகிவிடும் என்பதையும் பார்த்தேன்.

இந்த
மாதிரி, மக்கள் கூட்டம் இல்லாத நாட்களில் கண்காணிப்பு வேலையைச் செய்துகொண்டிருப்பவருக்கு
என்ன செய்யலாம் என்பதே தெரியாமல் உட்கார்ந்திருப்பார். ஆனால் இப்போதெல்லாம் எல்லோரும்
யூடியூபில் ஆழ்ந்துவிடுகிறார்கள்.



இந்தக் குதிரை வாலைப் பார்க்கும்போது, எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது.
குதிரையின் வால் மயிர் சீராக இருக்கவேண்டும் என்பதற்காக, ஒரு ஷாம்பூ தயார் செய்தார்கள்.
பிறகு அதே ஃபார்முலாவை உபயோகித்து பெண்களுக்கு (குறிப்பாக பிலிப்பைன்ஸில்தான் இது ஆரம்பித்தது)
ஷாம்பூ தயாரித்துவிட்டனர். அவங்க தலைமுடி ஒரே சீராக இருக்கும். இந்த சப்ஜெக்டில் எழுத
ஆரம்பித்தால் நிறைய விஷயங்கள் உள்ளன. நான் இதனால் புரிந்துகொள்வது என்னவென்றால், உணவு
மற்றும் அலங்காரப் பொருட்களில் நம் முன்னோர் உபயோகித்ததை மாத்திரம் நாம் உபயோகிப்பது
நல்லது என்பதைத்தான்.



இந்த
counterல் வெயில் காலத்தில் குளிர் பானங்கள்,
ஐஸ்க்ரீம் போன்றவை விற்பார்களாக இருக்கும். அழகாக இருக்கிறது இல்லையா?









Rock Garden என்னளவில் ஓகேதான். ரொம்ப நல்லா இருந்தது என்று சொல்வதற்கில்லை. இருந்தாலும் புதிய இடமொன்றைக் கண்ட மகிழ்ச்சி.
Rock
Gardenஐ முழுமையாகப் பார்த்த பிறகு மலம்புழா அணைக்கட்டு இருந்த பகுதிக்குச் சென்றோம்.
அது பற்றி அடுத்த வாரம்.
(தொடரும்)
====================================================================================

காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி.
நீக்குநிறைய வேலைகள் இருந்தாலும் பதிவுகளுக்கு, உள்ளேன் ஐயானு ஆஜர் வச்சிடறீங்க.
வணக்கம் சகோதரரே
நீக்குநான் உள்ளேன் ஐயாவுக்கு அப்புறமும் பாடங்களை படித்திருக்கிறேன். கிளாஸ் ஒர்க்கும் செய்திருக்கிறேன். :)) ஆனால், நேற்று உங்கள் பதிவுக்கு வர இயலவில்லை. மன்னிக்கவும். இன்று காலையில்தான் உங்களின் நேற்றைய அருமையான பதிவையும் படித்தேன். மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். பதிவில் நிறைய விபரங்களை தெரிந்து கொண்டேன். ஐயங்கார் பற்றிய தெளிவாக்கத்தை அறிந்து கொண்டேன்.எத்தனை மகான்கள் அவதரித்து, ஸ்ரீ ரங்கநாதனின் அன்புக்குடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை படிக்கும் போதே, மெய் சிலிர்த்துப் போகிறது.
இரண்டாம் சன்னதியில் நம் பெருமானை அருகிலிருந்து தரிசிக்கும் பேறு பெற்ற உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் என் அன்பான வாழ்த்துகள். மறுபடி ஒரு முறை நாங்களும் ஸ்ரீரங்கம் சென்று நீங்கள் விவரித்த சன்னதிகளை, பார்த்தவிடங்களை பார்க்கும் ஆவல் எனக்குள்ளும் மிகுதியாக எழுகிறது. அதற்கு இறைவனும் மனதாற நினைத்து அழைக்க வேண்டும்.பிரார்த்திக்கிறேன்.
நேற்றைய பதிவுக்கும் இங்கேயே நீங்கள் உடனே கவனித்து விடுவீர்கள் என்ற ஆசையில் என் கருத்தை எழுதி விட்டேன். தவறாயின் மன்னிக்கவும்.
இங்கு எங்கள் வீட்டில் குழந்தைகளுக்கும் பள்ளி விடுமுறை ஆரம்பித்து விட்டது. நாளையிலிருந்து ஒரு பயணம் யதேச்சையாக எங்களுக்கு அமைந்துள்ளது. வரும் வாரம் முழுவதும் பதிவுகளுக்கு வருவது சற்று சிரமந்தான்.( விடுமுறை கடிதம்.) முடிந்தால் கண்டிப்பாக வருகிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் பள்ளியிலும் உள்ளேன் ஐயா என்று சொல்லும் பழக்கம் இருந்ததா?
நீக்குஎந்த ஊர் பயணம் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறீர்களே. நாங்களும் இந்த மாத கடைசி வாரத்தில் குளிர் பிரதேசப் பயணம் ஒன்று வைத்துள்ளோம். ஒரு சில மாத்த்தில் நெடிய விடுமுறை எடுக்க வாய்ப்பிருப்பதால் பதிவுகளை எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
திருவரங்கம் பயணமும் எம்பெருமான் தரிசனமும் நிச்சயம் உங்களுக்கு வாய்க்கும்.
அம்மா பசிக்குதே.... நான் இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஇந்த தர்ம சிந்தனைதான் வெற்றிலை பாக்கில் வாக்காளர்களைத் தனக்கு வாக்களிக்க வேண்டும் எனச் சத்தியம் செய்யச் சொன்ன முறைக்கு உத்வேகமோ?
வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் நவராத்தி நல் வாழ்த்துகள்.
உங்களுடைய அலுவலக வேலைகள், அந்தப்பணியின் சுமைகள் பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது. நாம் சேரும் வேலையில் ஒரு நல்ல இடத்திற்கு வருவதற்கு கவனமான பொறுப்பும், திறமையும், மன உறுதியும் கண்டிப்பாக வேண்டும். கூடவே இறைவனின் நல்லாசியும் இவை அனைத்தும் அமையப் பெற்ற தங்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். இறைவன் தங்களுக்கு எப்போதும் நல்லதையே தர வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன்
வெளிநாட்டு வேலைகளில், அங்கு குடும்பத்தை அமைத்துக் கொள்வது எவ்வளவு சிரமங்கள் இருக்கிறதென்பதை விவரமாக எழுதியிருக்கிறீர்கள். படித்து தெரிந்து கொண்டேன்.
நீங்கள் சென்ற பாலக்காடு சுற்றுலா படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. குதிரை, மான், பறவைகள் போன்றவைகளை மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெண்களின் தலைமுடிக்கான ஷாம்பு பற்றிய விபரங்களும் தெரிந்து கொண்டேன். அதனால்தான் அப்போது (பெண்கள் சடை போடுவதை நிறுத்தி) "குதிரை வால் கொண்டை" என்பது பிரசித்தியானதோ.? இப்போது அனைவரும் தலை விரித்துச் செல்வது பேஷனாகி விட்டது. நாகரீகங்கள் மாறிக் கொண்டே இருக்கிறது. அத்தனைப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உழைப்பு கண்டிப்பா வேணும். திறமை.... அது அவ்வளவு முக்கியமில்லை, காரணம் அது அவன் வழங்குவது அல்லவா? நம் முயற்சியினால் பெறுவது அல்லவே.
நீக்குவெளி நாட்டில் மனைவியையிஉம் கூட்டிச் சென்று வாழ்க்கை நடத்துவது எல்லோருக்கும் அமைவதில்லை. அதற்கே இறைவனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
சத்யசாய் பாபா கனவில் வந்தது நடக்கவிருப்பதைச் சொன்னது வியப்பாயிருக்கிறது.
பதிலளிநீக்குசில நிகழ்வுகளைப் பகிர்ந்தால் அதில் ஆணவம் தென்பட்டு விடுமோ என நினைப்பேன். சத்யசாயி பாபா என் கனவுல் நான் நடந்து செல்லும் திசைக்கு எதிர்ப்புறத்தில் காரில் இருந்து என்னிடம் கை அசைத்தார், போய் வருகிறேன் என்ற மாதிரி. பிறகு சில மாதங்களில் ஆபீஸ் பயணமாக பெங்களூர் வந்த அன்று அவர் மறைந்துவிட்டார் என்பதை செய்தித்தாளில் பார்த்தேன்.
நீக்குஅதற்கு முன்பு ஒரு தடவை, போர்டில் ஒரு தேதி எழுதி அதில் நாம் சந்திப்போம் எனச் சொல்லி, பிறகு அதை அழித்து வேறு தேதி எழுதி, பிறகு அதையும் அழித்து வேறு தேதி எழுதினார். ஆனால் அவரை நேரில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
// ஒரு நாள் ஒருவர் மிகப் பெரிய வாட்டர்மெலன் வாங்கி வந்து, அதைத் துண்டுகளாக்கி, சாப்பிடுபவர்களுக்கு மொத்தச் செலவைப் பகிர்ந்து ஒரு நோட்டில் எழுதிவிடுவார்கள். //
பதிலளிநீக்குஇந்த இடத்தில் ஏதோ விடுபட்டது போல தோன்றவில்லை?!! வரிகளின் அமைப்பு.
இந்த மாதிரி ஒரு துண்டு அல்லது ஒரு வாய் கொடுத்து சாப்பிடவைத்த்து 'நீயும் சாப்பிட்டே.. ஸோ நீயும் ஷேர் செய்யணும்' என்று சொன்ன சம்பவம் என் இளைய மகனும் அவன் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டபோது ஏற்பட்டதாக சொல்லி இருக்கிறான்.
வாங்க ஶ்ரீராம்.. சில நேரங்களில் எழுத்தில் நினைத்த வாக்கியம் விடுபட்டுப் போய்விடுகிறது.
நீக்குஇந்த மாதிரி நிகழ்வுகள் நெருக்கத்தை உண்டாக்கும் ஆனால் cost effective கிடையாது. நான் தென் தமிழகத்தைச் சேர்ந்தவன். அப்போதைய காலகட்டத்தில் சிகரெட் பிடிப்பவனிடம் நட்பு வைத்துக்கொள்வதே குற்றம், பெண்களிடம் பேசுவதே குற்றம் என்ற மாதிரியான மனநிலை கொண்டிருந்தேன். இது பற்றி பிறகு எழுதுகிறேன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய மனசாட்சியம் பதிவு அருமையாக உள்ளது. திரு. ராமன் அவர்கள், தெளிவாகவும், நகைச்சுவை உணர்வுடனும், நன்றாக எழுதி வருகிறார். அவருக்கு என் வாழ்த்துக்களும், வணக்கங்களும்.
இந்தப்பாடலை அடிக்கடி நானும் கேட்டுள்ளேன். நாங்களும் எங்கள் அம்மாவிடம் பாடி திட்டு வாங்கியுள்ளோம் ஆனால் அந்தக்கால பாடலின் வரிகள் வித்தியாசமானவைதான். .பாடல் இடம் பெற்ற அந்தப்படத்தைப் பற்றிய விபரங்களையும் தெரிந்து கொண்டேன் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம். வாழ்க வளமுடன்.
நீக்குஉன்னுடைய பிரச்சனை தீர்ந்தது. கவலைப்படாதே என்று சொல்லி மறைந்தார். (இதற்கு முன்பு எப்போது என் திருமணம் நிச்சயமாகும் என்று
பதிலளிநீக்குதுபாயில் இருந்தபோது எனக்கு அவர் சொல்லியிருந்தார், கனவில்)
இருமுறை கனவில் வந்து உங்கள் சஞ்சலங்களை தீர்த்து இருக்கிறார்.
வெளி நாட்டு வேலையின் அனுபவங்கள் . திருமணம் நடந்துமனைவியை அழைத்து செல்ல முடியாமல் இருந்தது பின் அது பாபாவின் அருளால் நல்ல படியாக நடந்தது இதை படிக்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.
எல்லாம் இறைவனின் கருணை என்றே நினைத்துக்கொள்கிறேன். எத்தனையோ என்னிலும் திறமையானவர்கள் இருக்க எனக்கு வாய்ப்புகளும் நல்ல வாழ்க்கையும் கொடுத்த அவன் கருணை அளப்பரியது
நீக்குஇந்த வாரப் புகைப்படங்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குமலம்புழா அணைக்கட்டு நன்றாக இருக்கும் பார்த்து இருக்கிறேன். .அடுத்த பதிவில் பார்க்கலாம்.
பாலக்காடு முதல் முதலாகப் போனபோதே அந்த ஊரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அணைக்கட்டுக்கும் நான் போன சமயம் கூட்டம் இல்லை. பிறகு இன்னொரு பயணத்தில் மனைவியையும் அழைத்துச் சென்றேன்.
நீக்குஇன்றைய மனசாட்சியம் நன்றாக இருக்கிறது. பழைய கால சினிமாக்களை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குவேதாள உலகம் தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன், அதில் "ராஜீவி ராஜீவி" என்று டி.ஆர் மகாலிங்கம் ஒரு சுழலும் இருக்கையில் அமர்ந்து அழைப்பார் அது நினைவு இருக்கிறது.
"அம்மா பசிக்குது பாடல்" சிலோன் ரேடியோவில் கேட்டு இருக்கிறேன்.
வேதாள உலகம் படத்தில் இன்னொரு விஷயம் அதே ராஜீவியை மணக்க மகாலிங்கத்தின் அப்பாவும் வந்து கல்லாகி இருப்பார்.
நீக்குசாரங்கபாணி ராஜீவி வேதாளம் சாப்பாடு என்று சுழலுவார்.
நாளை முதல் வலை பக்கம் வர முடியாது கொலு ஆரம்பிக்ககிறது. வீட்டுக்கு ஊரிலிருந்து உறவினர் வந்து இருக்கிறார்கள். கொலு பார்க்க வருபவர்களை உபசரிப்பது என்று நேரம் சரியாக இருக்கும்.
பதிலளிநீக்கு// The song "Ayyaya Paarkka Kannu Koosuthey" is based on the Brazilian singer Carmen Miranda's "I, Yi, Yi, Yi, Yi (I Like You Very Much)"//
பதிலளிநீக்குஅந்தக் காலத்திலேயே காபி அடித்திருக்கிறார்கள்!!!
நெல்லையின் பஹ்ரைன் அனுபவங்கள் மிக மிக ஆச்சரியமானதாக உள்ளது. அவருக்கு வேலை கிடைத்தது மட்டுமில்லாமல், அவர் மனைவியையும் அவர் குறித்த காலத்துக்குள் அழைத்துக் கொள்ள முயன்றதும் பாபாவின் தரிசனம் அவருக்குக் கனவில் கிடைத்ததும் ரொம்பவே ஆச்சரியம் தான். இன்னும் சில நண்பர்களும் சொல்லுவார்கள். பாபா நேரிலேயே வந்து இதைக் கொடுத்தார்/ இதைச் சொன்னார் என்பார்கள். அவையும் உண்மையில் நடந்திருக்கும். ஆனால் நாங்க அவரைப் பார்க்க வேண்டி பெண்களூரில் ஒயிட் ஃபீல்ட் சென்றப்போப் பார்க்க முடியலை. அப்போதான் புட்டபர்த்தி கிளம்பிப் போனார் என்றார்கள்.
பதிலளிநீக்குவாங்க கீதா சாம்பசிவம் மேடம். இத்தனை நிகழ்ந்தும் நான் நேரில் அவரைப் போய்ப் பார்க்கணும் என்ற முயற்சி எடுக்கவில்லை. நடக்கவும் இல்லை. எனக்கு பல வருடங்கள் எங்கு சென்றாலும் பாபாவின் படம் அந்த இடத்தில் இருப்பது ஆச்சர்யமாக இருக்கும்.
நீக்குஎன் அண்ணா குடும்பம் புட்டபர்த்தி சாய்பாபா பக்தர்கள். அங்கேயே அந்தத் தெருவிலேயே இன்னொரு வீட்டிலும் சாய்பாபா பக்தர்கள். அனைவரும் சேர்ந்து வியாழன், ஞாயிறு மாலைகளில் பஜனை நடத்துவார்கள். அதிலெல்லாம் போய்க் கலந்து கொண்டிருக்கோம். கல்யாணம் ஆன புதுசிலேயே பக்கத்துப் போர்ஷன் மாமி வீட்டில் சாய்பாபா பஜனை நடக்கும். அப்போதிலிருந்தே கேள்விப் பட்டாலும் ஈடுபாடு தோன்றியதில்லை. அவருக்கும் அப்படியே. ஆனால் முழுக்க முழுக்க சாய் பக்தர்களான என் அண்ணா, என் சம்பந்தி(பெண்ணின் புக்ககம்) ஆகியோர் நேர் மாறாக பாபா என்றால் கண்ணீர் விடும் ரகம். ஆனால் இத்தகைய ஆச்சரியமான கனவுகளோ, நிகழ்வுகளோ ஏற்பட்டதாகத் தெரியலை. அல்லது அவங்க சொல்லலை.
பதிலளிநீக்குபலரும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில்லை. எல்லா ஆன்மீக அனுபவங்களும் பெர்சனலானது என்று நினைக்கிறேன். நான் பகிர்ந்திருக்கிறேன்.
நீக்குஎனக்கு பல முறை பறப்பது போல கனவு வரும். என்னால் பறக்க முடியும் என்று நான் நிஜமாகவே நம்பினேன். சமீபத்தில் கூட அப்படி ஒரு கனவு வந்தது. எதனால் என்று தெரியலை.
என்னைப் பொறுத்தவரை ஜாம்நகரில் ஒருத்தர் என்னிடம் ஷிர்டி பாபாவின் படமும் அவர் கதையும் அடங்கிய புத்தகம் பரிசளித்து வியாழக்கிழமை தோறும் புத்தகத்தைப் படித்து விரதம் இருந்து மாலை உணவு எடுத்துக்கும்படியும் பால் பாயசம் நிவேதனம் செய்யும் படியும் சொன்னார். கூடவே மௌன விரதமும் அன்று ஒரு நாள் மட்டும் இருக்கச் சொன்னார். 94/95 இல் சென்னை திரும்பியதும் இதைத் தொடர்ந்து செய்து வந்தேன். விரதம் இருப்பதிலோ அந்தப் புத்தகம் படிப்பதிலோ பிரச்னை இல்லை. ஆனால் மௌன விரதம் மட்டும் ரொம்பக் கஷ்டமாக இருந்தது. அதை நினைக்கையில் குஜராத்தில் குஜராத்தியப் பெண்கள் அனைவரும் நவராத்திரியில் ஒன்பது நாளும் நீர் அருந்தாமல் மாலை ஒரு வேளை மட்டும் எலுமிச்சைச் சாறு அருந்தி மௌன விரதம் இருப்பதும் திங்கட்கிழமைகளில் மஹாராஷ்ட்ராவில் சின்னக் குழந்தை முதல் பெரியோர் வரை சிவனுக்காக மௌன விரதம் இருந்து நீர் கூட அருந்தாமல் மாலையில் சாபுதானா கிச்சடி மட்டும் சாப்பிடுவதையும் (பள்ளிகளில் கூட அன்று விடுமுறை விடுவார்கள் எனவும் கேள்வி) பார்த்தும் கேட்டும் வியந்திருக்கேன். பல ஓட்டல்களில் அன்று சாபுதானா கிச்சடி தவிர்த்த உணவு ஏதும் இருக்காது. இப்படி எல்லாம் நம்மால் இருக்க முடியுமா என வியப்பாக இருக்கும்.
பதிலளிநீக்குபலர் இருக்கும் விரதங்களையும் கேட்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். விரதம் போன்றவை இருக்க நமக்கு வைராக்யம் வேண்டும். எனக்கும் நான் நினைத்தால், வைராக்யமாக இருப்பேன். அப்படி ஒரு சில யாத்திரைகளில் இனிப்புகளைச் சாப்பிடாமல் இருந்திருக்கிறேன், சாதம் சாப்பிடாமலும்.
நீக்குசாபுதானா கிச்சடி... ஆஹா.. என்ன ருசி என்ன ருசி. படத்தின் கிளைமாக்சின் போது தியேட்டரில் நுழைவது போல, விரதம் இருப்பவர்கள், விரதம் முடிக்கும் நேரம் அவர்கள் வீட்டுக்கு நான் சென்றால் கிடைக்கும்.
அசைவம் பொரிக்கும் வாசனை எங்களுக்கும் பிடிக்காது. ஆனால் கடவுள் அருளால் நாங்க இருந்தது எல்லாமே தனியான பங்களாக்கள். வீடு பெருக்கிச் சுத்தம் செய்வதோ தோட்டத்தைப் பராமரிப்பதோ ஆள் இல்லாமல் முடியாது. இறை அருளால் எங்கே போனாலும் உடனே வீடு தயாராக இருக்கும். அதோடு இல்லாமல் பால், தயிர், மோர், தண்ணீர் ஆகிய அத்தியாவசியங்களுக்குக் கஷ்டப்பட்டதில்லை இன்னி வரையிலும். ஒரு தரம் ஆழ்வார்ப்பேட்டையில் அண்ணா வீட்டுக்குப் போயிருந்தப்போ ராத்திரி பனிரண்டு மணிக்குத் தண்ணீர் லாரி வரும்னு தெருவே முழிச்சிருந்து தண்ணீர் பிடித்தார்கள். அண்ணா பையர் அப்போ ரொம்பச் சின்னவர் என்பதால் நடுத்தூக்கத்தில் முழிச்சுண்டு, "இன்னிக்கு என்ன தீபாவளியா? ஏன் புதுசெல்லாம் வாங்கலை?" என்றார். :)))) கஷ்டமே மறைந்து சிரிப்பு மேலோங்கினது. பின்னர் அம்பத்தூரில் வீடு கட்டிக் கொண்டு வந்த அவங்களுக்கு நேரம் ரொம்பவே மிச்சமாகி என்ன செய்யறதுனு தெரியலை. ராத்திரி ஒன்பது மணிக்கே படுத்துக்கலாம் என்பது ஒரு பெரிய சந்தோஷமாக இருந்தது.
பதிலளிநீக்கு//அசைவம் பொரிக்கும் வாசனை// நான் டிபிக்கல், ஆனியன் பூண்டு வாசனை இல்லாத வீட்டில் வளர்ந்தவன். மதுரைல படித்தபோது, பெரியார் பஸ் நிலையத்திலிருந்து யூனிவர்சிட்டிக்கு பஸ் போகும் பேருந்து நிலையத்துக்கு (ரொம்பப் பக்கம்) நடந்து போகும்போது இரவு அங்கு மீன் வறுப்பார்கள், நாற்றம் தாங்காது.
நீக்குதாய்வானில், ஐயையோ.... உணவுக்கான இரவு மார்க்கெட் போன்றவற்றில் மூக்கை வெட்டி வைத்துக்கொண்டுதான் நடக்கணும் போலிருக்கும். இருந்தாலும் படங்களுக்கும், பலவகை கடைகளையும் பார்க்கும் ஆசையில் அங்கெல்லாம் சுற்றியிருக்கிறேன்.
சொந்த வீட்டில், பிரச்சனை இல்லாமல் காலா காலத்தில் படுத்துக்கொண்டு, விச்ராந்தியாக இருக்கலாம் என்பதே பெரும் சந்தோஷத் தருணங்கள் அல்லவா?
நெல்லையைப் போல எனக்கும் எழுத ஆரம்பிச்சால் அலை அலையாக நினைவுகள். ஆகவே பதிவில் மேற்கொண்டு ராக் கார்டனெல்லாம் நெல்லை சொன்னாப்போல் சுமாரெல்லாம் இல்லை. நன்றாகவே அமைத்திருக்காங்க. நல்ல கற்பனா சக்தி. சண்டிகர் மாதிரி இல்லை என்பதால் நெல்லை சொல்லலாம்.
பதிலளிநீக்குஇன்றைக்கு மனசாட்சியும் திரைத்துறைக்குப் போய் மூழ்கிவிட்டது. இந்தப் படங்களெல்லாம் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் "அம்மா பசிக்குதே!" பாடல் மட்டும் கேட்டிருக்கேன். வீட்டில் பாடக் கூடாது என்பார்கள். வேதாள உலகம் படம் பத்தித் தெரியும். ஆனால் பார்த்தது இல்லை. பழைய படங்களில் நான் பார்த்தது எனில் ஔவையாரும், பார்த்திபன் கனவும் தான். இப்போ கோமதி அரசு சொன்னதால் "கோமதியின் காதலன்" படம் தேடிப்பிடிச்சுப் படிக்க நினைச்சிருக்கேன். டி.ஆர்.ராமசந்திரனாமே அதில்? அடுத்த வீட்டுப் பெண் ஒண்ணு போதுமே? சாது மிரண்டால் படத்திலும் நல்லாவே நடிச்சிருப்பார். மிஸ்ஸியம்மா, மாயாபஜாரும் பார்த்திருக்கேன். மாயாபஜார் தியேட்டரிலேயே மாமா வீட்டில் கூட்டிப் போய்ப் பார்த்தேன். :) மிஸ்ஸியம்மா வழக்கம் போல் தொலைக்காட்சி தயவு
இந்தத் தொடர் எழுத ஆரம்பித்தது ஜெயகுமார் சாரை மனதில் வைத்து. ஆனால் படிக்க அவர் இல்லை.
நீக்குஎப்போதுமே கோயில் உலா எழுத எனக்கு ரொம்பவே மெனெக்கிட வேண்டியிருக்கு. அதனால் அதற்கு மாற்றாக இந்தத் தொடரை எழுத ஆரம்பித்தேன். இன்னும் சில காலத்துக்கு பயணங்கள், முன்பு பயணம் செய்த இடங்கள் என்று எழுதலாம் (ஞாயிறுக்கு) என்று தோன்றுகிறது
உங்கள் ஆபீஸ் அலுவல்கள் பாபாவின் ஆசீர்வாதங்கள் படிக்கும்போது மனதை உருக்கியது. பாபாவின் அருள் கிடைப்பது அவரவர் பாக்கியம். நாங்களும் ஷீரடி பாபா , சாயி பாபா பக்தர்கள்தாம்.
பதிலளிநீக்குஸ்ரோன் சிற்பங்கள் சில தத்துவமாக இருக்கின்றன. நரியின் பாய்ச்சல், வாத்தியக் கோஷ்டி, கங்காரு, குதிரை என குறிப்பிட்டு சொல்லலாம்.
இன்றைய மனசாட்சியம் பகுதியில் ' அம்மா பசிக்குது....' பாடல் கேட்டு இருக்கிறேன்.
வாங்க மாதேவி அவர்கள். ஆன்மீக அனுபவங்கள் அவரவர்களுக்கு ஏற்படும்போது அது தரும் ஆச்சர்யமும் நிம்மதியும் சொல்லி மாளாது. பிற்காலத்தில் நிறைய பேரின் அனுபவங்கள் படித்திருக்கிறேன். இமயமலையில் ஒரு இதய குரு புத்தகத்தில் ஷீர்டி பாபாவின் நிகழ்வைப் படித்து அசந்துபோயிருக்கிறேன்.
நீக்குஇந்த ராக் கார்டன், சண்டீகரின் காப்பியா! இல்ல, இவுகதான் ஒரிஜினலா?
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் சார். நிச்சயம் சண்டிகரின் காப்பியாகத்தான் இருக்கணும். இது சுமாராகத்தான் இருந்தது.
நீக்குஒரு விசா ப்ரச்னைக்காக பாபா இப்படி ஓடி வந்திருக்கிறாரே...நீங்கள் அவரை வேண்டியதாகவும் சொல்லவில்லையே?
பதிலளிநீக்குபாபா பக்தர்கள், அவர்கள் சொல்லும் கதைகள் .. நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன், சோமாலியாவிலும், கென்யாவிலும் (இந்திய நண்பர்கள் குடும்பங்களிலிருந்துதான்). சோமாலியாவின் மொகதிஷுவில், ஷிர்டி பாபா பஜன் என வியாழக்கிழமை கூடுவார்கள் யாராவது ஒரு இந்தியரின் வீட்டில். என்னையும் அழைத்திருந்தார்கள். போயிருந்திருக்கிறேன். ஒரு சோஷியல் கெட்-டுகெதர் என்பதாக அதைப் பார்த்தேன். கலந்துகொண்டு பிரசாதம் எடுத்துக்கொண்டதுண்டு. மற்றபடி, அதில் ஆழ்ந்திருந்தேன் எனச் சொல்வதற்கில்லை. எங்கள் குடும்பங்களிலும் சில ஷிர்டி பாபா பக்தர்கள் உண்டு.
நான் நிச்சயம் வேண்டவில்லை. எதனால் அவர் வந்து குறை தீர்த்தார் என்பது தெரியாது. ஆனால் இந்த சில நிகழ்வுகள் எனக்கு ரொம்பவே ஆச்சர்யமும் அதிசயத்தையும் அளித்தது.
நீக்குஷீர்டி சாயிபாபாவின் சரிதையை ஏழு நாட்களில் படித்து முடித்தால் (அதற்குரிய முறையுடன்) நாம் வேண்டிக்கொண்டது நிகழும் என்பார்கள். உண்மையாகவே நான் சோதித்துத் தெரிந்துகொண்டேன்.
ஓ..
நீக்குவேதாள உலகம் படம், VHS கேசட் போட்டு, வீட்டில் உட்கார்ந்து பார்த்திருக்கிறேன், 80-களின் இறுதியில் சோமாலியாவில் இருந்தபோது.
பதிலளிநீக்கு