மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்கு!
ஹிஹிஹி, குதம்பைச் சித்தரின் பாடல் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா!
இதிலே மாங்காய்ப் பால் தேங்காய்ப் பால் இரண்டும் உண்டே!
புத்தகம் அடுக்கும் வேலை ஆரம்பிச்சுப் பாதியிலேயே
நிக்குது! அவ்வளவு சுறுசுறுப்பு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எல்லாம் இந்தக் கணினி நடுவில்
படுத்துடுச்சா! அந்தக் கவலை! மருத்துவர் வரதும் போறதுமா இருக்கவே மத்தியான நேரங்கள்
அதில் போய்விட்டன! புத்தகங்கள் வேலை அப்படியே நின்னிருக்கு! அதைச் சீக்கிரமாச் சரி
செய்யணும். எப்படினு தெரியலை! அது கிடக்கட்டும்.
இப்போச் சில மாசங்களாக நம்ம வழக்கமான சாப்பாடு சாம்பார்,
அல்லது குழம்பு, ரசம், கறி, கூட்டு முறையை மாற்றியாச்சு. நம்ம ரங்க்ஸே அதிசயமாப் பொடி
ஏதேனும் பண்ணி வைனு சொல்லிப் பருப்புப் பொடி, கொத்துமல்லி விதைப் பொடி பண்ணி வைச்சிருக்கேன்.
புளிக்காய்ச்சலும் செய்து வைச்சிருக்கேன். அதிலே ஒரு தில்லுமுல்லுவும் பண்ணினேன். ஹெஹெஹெ!
அதைத் தனியாச் சொல்றேன். இப்போ மாங்காய் சாதம் பண்ணினதைப் பத்திச் சொல்லப் போறேன்.
மாங்காய் என்ன மலிவா விற்றாலும் நம்ம ரங்க்ஸுக்கு மாங்காய்ப் பச்சடியோ அல்லது மாங்காய்
சாதமோ அல்லது மாங்காய் சாம்பாரோ அல்லது மாங்காய் போட்ட மோர்க்குழம்பு அல்லது அவியலில்
மாங்காய் சேர்த்தால் அலர்ஜியோ அலர்ஜி! மாங்காய்னா ஊறுகாய்க்கு மட்டும் எனத் திடமான
நம்பிக்கை கொண்ட பேர்வழி! எவ்வளவோ சொல்லியும் அவரை இந்த விஷயத்தில் மாத்த முடியலை!
நீ பண்ணிச் சாப்பிட்டுக்கோனு சொல்லிடுவார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
இப்படியாகத் தானே ரெண்டு பேரும் எதிரும் புதிருமா
இருக்கக் கூடிய காலகட்டத்திலே ஒரு நாள் திடீர்னு பார்த்தால் மாங்காய் (கல்லாமை) வாங்கி
வந்தார். என்னமோ அதிசயம் பாருங்க! போன வாரம் ஒரு மாங்காய் வாங்கிட்டு
வந்தார். ஒட்டு மாங்காய் என இந்தப் பக்கங்களிலும் கல்லாமை மாங்காய் என மதுரையிலும்
சொல்வோம். அதைப் பார்த்தாலே பச்சடி பண்ணு, பண்ணுனு சொன்னது! அதிலே கொஞ்சம் போல் தோல்
சீவி எடுத்துக் கொண்டு பச்சடிக்குனு தனியா வைச்சேன். நான் மட்டும் தான் சாப்பிடணும்!
:( பரவாயில்லை, துணிந்து நில் மனமே என என்னை நானே தைரியப் படுத்திக் கொண்டேன். ஆனாலும்
பாருங்க, இதுக்கெல்லாம் கூட நாங்க "கத்தி" ச் சண்டை போட்டுப்போம். ஏன், சாப்பிட்டா
என்ன நு நானும் நான் சாப்பிடலைனா உனக்கென்னனு அவரும் "கத்தி!" எடுக்காத குறையாச்
சண்டை. அரைகுறையாக் காதிலே வாங்கிக்கற அக்கம்பக்கத்தினருக்கு இது பழகிப் போயிருந்தாலும்
இதுங்களுக்கு வேறே வேலையே இல்லையானும் தோணும். ஹெஹெஹெ!
சரி, சரி, பாயின்டுக்கு வந்துடறேன். மாங்காய் மிச்சம்
இருந்ததைத் துருவினேன். துருவும்போதே என்ன செய்யலாம் என யோசனை! அப்போப் பார்த்து ரங்க்ஸ்
இதை வேணா மாங்காய் சாதமாப் பண்ணிடுனு சொன்னாரா! எனக்கு மயக்கமே வந்துடுத்து! ஙே என
நான் முழிக்க, மாங்காய் சாதம்! என்றார். நிஜம்மாவா என வாயைப் பிளந்த நான் மூட வெகு
நேரம் ஆச்சு! சரி எங்கேயானும் மாறிடப் போறாரேனு அவசரம் அவசரமா அதைத் துருவி எடுத்துட்டுப்
போனால் என்னைக் கூப்பிட்டு, "இங்கே பார்!" எனக் காட்டினார். அதிலே தினமலர்
வார மலர்/பெண்கள் மலர், ஏதோ ஒரு மலர் அதிலே மாங்காய் சாதம் ரெசிபி ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
மாங்காய்த்
துருவல்
மாங்காத் துருவல் ஒரு கிண்ணம், பச்சை மிளகாய் 3, இஞ்சி
ஒரு துண்டு, தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், ஜீரகம் (தேவையானல்), மஞ்சள் பொடி
கால் டீஸ்பூன், மிளகாய்ப் பொடி அரை டீஸ்பூன், வெந்தயப் பொடி கால் டீஸ்பூன், உப்பு தேவையான
அளவுக்கு.
இஞ்சி, பச்சை மிளகாய், ஜீரகம்
நல்லெண்ணெய் அரைக்கிண்ணம், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு,
வேர்க்கடலை, கருகப்பிலை, பெருங்காயம் தாளிக்க.
தேவையானால் ஒரே ஒரு மி.வத்தல் தாளிக்கலாம். அவரவர் காரத்தைப் பொறுத்து.
தேங்காய்த் துருவல்
தாளிதம்
முதலில் பச்சை மிளகாய், இஞ்சி, தே.துருவலை ஜீரகத்தோடு சேர்த்து நன்கு அரைக்கவும். அடுப்பில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காயம், மி.வத்தல், கருகப்பிலை போட்டுத் தாளித்துக் கொண்டு உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலையையும் போடவும். அல்லது இவற்றைப் பின்னர் தனியாகத் தாளிக்கவும். இந்த எண்ணெயில் தாளிதத்தைத் தனியாக எடுத்து வைத்து விட்டுப் பின்னரும் சேர்க்கலாம். நான் அப்படியே இதில் மாங்காய் விழுதைப் போட்டு, அரைத்த விழுது, மஞ்சள் பொடி, மி.பொடி போட்டுக் கிளறினேன். நன்கு கிளறி எண்ணெய் பிரிந்து வரும் சமயம் கீழே இறக்கி வெந்தயப் பொடி சேர்க்கவும். தாளிதம் கரகரப்பாக இருக்கணும் எனில் மாங்காய் விழுதுடன் அரைத்த விழுது, மி.பொடி, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கிவிட்டுத் தனியே கடைசியில் தாளித்து இப்போது தாளிதத்தைப் போட்டுக் கலக்கலாம். இம்முறையில் தாளிதம் கரகரப்பாக இருக்கும்.
தேவையானால் கொத்துமல்லி சேர்க்கவும். இதில் கொத்துமல்லி அவ்வளவு சுவை கூட்டவில்லை. இதுக்குத் தொட்டுக்க நான் செய்தது பச்சை மோர்க்குழம்பு! இதைச் சூடு செய்ய வேண்டாம்.
அரைத்த விழுது!
மாங்காய் விழுதுடன்
கலந்து வதக்குதல்
சாதம் கலந்தாச்சு!
பக்கத்தில்
பச்சை மோர்க்குழம்பு. சிலர் இதுக்குத் தேங்காய்த் துருவல் சேர்ப்பதில்லை. அவரவர் விருப்பம்!
நல்ல கெட்டியான
மொரில் தேவையான உப்பு, மஞ்சள் பொடி போட்டுக் கலந்து வைக்கவும்.
மி.வத்தல் ஒன்று அல்லது இரண்டு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு தலா அரை டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் அல்லது இரும்புக் கரண்டியில் தாளிக்க எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, கருகப்பிலை, மி.வத்தல் ஒன்று பெருங்காய்ம் போட்டுத் தாளிக்கவும். அரைத்த விழுதை மோரில் போட்டுக் கலந்து விட்டுத் தாளித்ததை அதில் சேர்க்கவும். இதற்கு வெண்டைக்காய் வற்றல் இருந்தால் தாளிக்கும் எண்ணெயிலேயே வறுத்துச் சேர்க்கலாம்.
============================================================================================================


எனக்கு சின்ன வயதிலிருந்தே மாங்காய் மிகவும் பிடிக்கும். மாங்காய் ஊறுகாய் புதிது ரொம்பவே பிடிக்கும். மாங்காய் சாதம், அதிலும் கிளிமூக்கு மாங்காய் சாதம் யம்மி. செய்முறை நன்று.
பதிலளிநீக்குவீட்டில் இப்போ மூன்று மாங்காய்கள் உள்ளன. (ச்ராத்தத்துக்கு வாங்கியது). செய்யச் சொல்லணும்.
மாங்காய் சாத்த்துக்கு எனக்குத் தொட்டுக்கொள்ள ஒன்றும் வேண்டாம். சிறிய அளவு இந்தக் குழம்பு பண்ணச் சொல்கிறேன்.
பதிலளிநீக்குஅரை மாம்பழத்தில்... ஹிஹி.. ஊறுகாய், மோர் சாத்த்திற்கு மாம்பழம்... ஐயோ பாவம் ஜென்மங்கள் என நினைத்துக்கொள்வேன். அவரவர் ரசனை
பதிலளிநீக்குநெல்லை அறுபதுகள்/எழுபதுகளின் சென்னையைப் பார்த்ததில்லைனு நினைக்கிறேன். அப்போல்லாம் சென்னையில் வீதிக்கு வீதி இரண்டு, மூன்று தள்ளுவண்டிகளில் மாங்காய் பத்தை உப்பு, மிளகாய்ப் பொடி தடவி ஒரே மாதிரியாக நறுக்கிக் கொடுப்பார்கள். அப்போல்லாம் அது தான் பெரும்பாலும் சென்னை வாழ் மக்களின் சிறு தீனி. பீச்சுக்குப் போனாலும் மாங்காய் பத்தை, சுண்டல், முறுக்குத் தான் முன்னெல்லாம் பார்க்கலாம். பின்னர் தான் எழுபதுகளின் கடைசியில் இந்த பஜ்ஜி எல்லாம் வர ஆரம்பிச்சு மிளகாய் பஜ்ஜி பிரபலம் ஆனது. இந்த மாங்காய் பத்தை முழுவதும் பழுத்துப் போன மாங்காயில் எல்லாம் போட மாட்டார்கள். கல்லாமை மாங்காயே உள்ளே கொஞ்சம் மஞ்சளாக விரைவில் ஆகிடும். ஆனாலும் மாங்காய் அழுத்தமாகவே இருக்கும். அதில் தான் துண்டங்கள் போட்டு உப்பு, மிளகாய்ப் பொடி போட்டுத் துண்டம் மாங்காய் பண்ணுவேன். இந்த மாதிரி மாங்காய்களில் தான் மாங்காய் பத்தையும் போடுவார்கள். இப்போல்லாம் தெரியாது. பொதுவாகத் துண்டம் மாங்காய் ஒரு வாரம் இருக்கணும்னா மஞ்சளாக மாறாத காயிலேதான் பண்ணுவோம். நாலைந்து மாங்காய்கள் வாங்கும்போது அவற்றில் ஒன்றிலாவது இப்படி அகப்படும். அப்போ அதைத் தனியாகப் போட்டு வைச்சுப்பேன். மற்றபடி சாப்பாட்டில் மாம்பழம் போட்டுப்பதோ, மாம்பழமோ, மாங்காய்ப் பச்சடியோ சாப்பாட்டில் தொட்டுப்பதோ கிடையாது. அவ்வளவு பிடிக்காது. மாங்காய்ப் பச்சடியைத் தனியாகத் தான் சாப்பிடுவேன். மாம்பழம் சாயங்காலங்களில் நறுக்கிச் சாப்பிடுவேன். எப்போவானும் அப்படியே முழுசாகச் சாப்பிட்டிருக்கேன். அதிலும் பெரும்பாலும் ருமானி தான் பிடிக்கும்.
நீக்குசும்மா கலாய்த்தேன் கீசா மேடம்.
நீக்குபெங்களூரில்தான் கிளிமூக்கு மாங்காய் மாதிரி இருக்கும் மாங்காய், சீசன் முடிவில் வரும். அது புளிக்காது. ஊறுகாய்க்கு ஆனது இல்லை. வெறும்னயே பத்தை போட்டுச் சாப்பிடலாம். மிளகாய்பொடி உப்பு போட்டால் கூடுதல் ருசி. இது கிலோ 20-30ரூபாய்க்கெல்லாம் இந்த முறை கிடைத்து நிறைய வாங்கினேன். ஒரு புதன் கிழமை படம் பகிர்கிறேன்.
உணவுக்கான வெண்பாக்கள்... மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஅப்போதிருந்த தமிழாசிரியர்கள்... அவர்களின் தமிழறிவு... அதைவிட மாணவர்களின் ஆர்வம்.
இப்போது கற்பனைதான் செய்ய இயலும்.
வெண்பாக்களில் தளை தட்டுகிறதா என பின்பு வந்து பார்க்கிறேன்.
தங்கநிற உருளைதான் வறுநீ... சரியாக இருக்குமோ?
வெங்காய என்பதை ஒத்துப் போக தங்காது தான் சரி. பாடலை சரளமாகச் சொல்லிப் பார்த்து சரியாக இருந்தால் தளை அசை தொடை எதுவும் பார்க்க வேண்டாம் என்பது என் கட்சி ! இலக்கணச் சிறை வளர்ச்சிக்குத் தடை.
நீக்குதங்காதுருளை= கிழங்கின் ஒருபகுதி வாணலியில் அதிகம் தங்கி கருகிப் போகாமல் என்று சமத்காரமும் செய்யலாம் !
அல்லது பாக்கி இல்லாமல், நல்ல ருசியுடன் செய்யப்படுவதால், மீதி தங்காத உருளைனும் எடுத்துக்கலாம். ஆக மொத்தம் தி பதிவுக்கேற்ற சிந்தனை
நீக்குஅனைவரின் நலத்துக்கும் பிரார்த்தனைகள். கீதாவின் மாங்காய்ப் புராணம் படு ஜோர்.
பதிலளிநீக்குஇப்போது அங்கே மாங்காய்க்காலமா. துண்டம் போட்ட மாங்காய் மிக சுவை. மாங்காய் சம்பந்தப் பட்ட எல்லா செய்முறையும் மிக அருமை. மாங்காய்க் குழம்பு பிரமாதமாக இருந்திருக்கும். நேர்த்தியான படங்களுடன்
பதிலளிநீக்குகீதா அழகாகச் சொல்லி இருக்கிறார்.
மாங்காய காலம் மார்ச் இரண்டாம் வாரம் முதல் ஜூலை வரை (கிளிமூக்கில் ஆரம்பித்து நீலனில் முடியும் பெங்களூரில். சென்னையில் ருமானியுடன் முடியும்) செப்டம்பர் கடைசியிலிருந்து கிளிமூக்கு கிலோ 150-200 ரூவில் வர ஆரம்க்கும், கார்த்திகைக்காக
நீக்குதிருச்சியில் வருடம் முழுவதும் மாங்காய்க் காலம் தான். எங்க அம்பத்தூர் வீட்டு மாமரங்களில் ஐப்பசிக்கப்புறமாக் கார்த்திகை, மார்கழியில் ஒரு குறிப்பிட்ட மரம் கார் மாங்காய் என நிறையக் காய்த்துத் தள்ளும்.
நீக்குஅறந்தை நாராயணனின் சூடு பறக்கும் கட்டுரை!! அம்மாடி!!!
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபதில் பாடலை எழுதிய வகுப்பு ஆசிரியரும், அதற்கும் பின் பாட்டு எழுதிய ராமன் சாரும் பிரமாதமாக ரசிக்க வைக்கிறார்.
பதிலளிநீக்குமாங்காய் சாதம் செய்முறையும், படங்களும் அருமை.
பதிலளிநீக்குசார் இருக்கும் போது போட்ட பதிவு . நினைவுகள் அருமை.
பச்சை மோர்குழம்பு அருமை.
கிளிமூக்கு மாங்காய் காலத்தில் மாங்காய் சாதம், மாங்காய் ஊறுகாய், மாங்காய் பச்சடி, மாங்காய் முருங்கைகாய் போட்ட சாம்பார் செய்வது எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்.
மனசாட்சியம் - 5 இன்றைய பகிர்வு அருமை.
பதிலளிநீக்குதனியார் பள்ளிகளில் பக்கத்தில் இருக்கும் நண்பர்களுடன் கூட தமிழில் பேசக்கூடாது என்று கண்டித்து வைத்து இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் தான் உரையாட வேண்டும்.
அமெரிக்காவில் இருக்கும் குழந்தைகள் என் பேரனும் தமிழ்பள்ளியில் சேர்ந்து தமிழ் கற்கிறார்கள். வீட்டில் எங்களுடன் , உறவுகளுடன் தமிழில் பேசுகிறான்.பேரன் தமிழ் கதைகள் எழுதுகிறான், நாடகங்கள் தயார் செய்கிறான்.
கவின் விதிவிலக்கு என்றே நினைக்கிறேன். தாய் மொழியில் பேசி சிந்தித்தால்தான் நம் கலாச்சாரம் அந்தத் தலைமுறைக்கு வரும்.
நீக்குநூற்றுக்கு நூறு உண்மை.
நீக்குஅறந்தை நாராயணன் கட்டுரை பகிர்வு நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபாரதிபற்றி அறந்தை நாராயணன் கட்டுரை அருமை. அந்தக் கால கம்யூனிஸ்ட்களில் நியாயவாதிகள் நிறையப்பேர் இருந்தார்கள். இந்தக்கால செஞ்சட்டைகள்போல் எலெக்ஷன் டயத்தில் இருபது கோடி வாங்கிக்கொண்டு, இடுப்பிலிருந்து துணி நழுவுவதுகூடத் தெரியாமல் இளித்துத் திரிந்தவர்கள் அல்லர் !
பதிலளிநீக்குமுதல்லே வெண்பாக்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். "திங்க"ற கிழமைக்கேற்றபடியான பொருள் கொண்ட கட்டுரையை எழுதி மேலும் சிறப்புச் சேர்த்த திரு ராமன் அவர்களுக்கு நமஸ்காரங்களும், நன்றியும்._/\_
பதிலளிநீக்குஎனக்கும் நல்ல சிறந்த தமிழ்ப்புலமை வாய்ந்த தமிழாசிரியர்கள் கிடைத்தனர். அதனால் தான் ஓரளவுக்குத் தமிழில் ஞானம், ஆர்வம் உள்ளது.
பதிலளிநீக்குஅறந்தை நாராயணனின் பாரதி நூற்றாண்டு விழாக்கட்டுரையைப் படிச்சேன். இப்போதெல்லாம் தோழர்கள் பாரதியைப் போற்றுவதாகவோ விழா எடுப்பதாகவோ செய்திகளைப் பார்க்க முடியலை. அநேகமாக ஜெயகாந்தனோடு முடிஞ்சு போச்சுப்போல!
அறந்தை நாராயணன் எந்த கம்யூனிஸ்டுகளைச் சொல்லுகிறார் என்று ஒரு கணம் திடுக்கிட்டுவிட்டேன்.
பதிலளிநீக்குஅ.நா உட்பட அந்தக் கால கம்யூனிஸ்டுகள் இப்போதிருக்கும் தேச துரோகிகளை, திருடர்களை,, ஊழல்வாதிகளை மன்னிக்கவும்..கம்யூனிஸ்டுகளை பார்த்தால் என்ன சொல்லுவார்கள்?
மாங்காய் சாதம் செய்முறை அருமை. எங்கள் வீட்டிலும் பிடிக்கும்.
பதிலளிநீக்குமாங்காய் காரக் கறியும், மாங்காய் , தேங்காய்ப்பால் சொதியும்,பச்சடி ,சம்பல் ,ஊறுகாய், என்பனவும் நன்றாக இருக்கும்..எங்கள் ஊர் வீட்டில் மாமரம் உள்ளது வற்றலும் போட்டு எடுப்போம்.
வெண்பாக்கள் நன்றாக உள்ளன.