கண்ணன் என் காதலன்னு கேள்விப்பட்டிருப்பீங்க.. கண்ணன் என் தோழன்னு சொல்லக் கேட்டிருப்பீங்க... கண்ணன் ஒரு கடன்காரன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
31.1.25
24.1.25
29.11.24
2.8.24
ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
கேட்கவும், பகிரவும் மனதில் நிற்கும் சில பாடல்களைத் தேடுவதும், அது கிடைக்காமல் போவதும் அவ்வப்போது நிகழும்.. அது கிடைக்காமல் போகும். அப்புறம் வேறு பாடலுக்குப் போய் அதைப் பகிர்வேன். அப்படி சில நாட்களாக நான் தேடிக்கொண்டிருந்த பாடல் "கற்பூர ஒளியினிலே கந்தா உன் காட்சி கண்டேன்" பாடல். கே வீரமணி பாடிய பாடல்.
17.5.24
காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள்
தவசீலன் எழுதிய பாடலுக்கு கே வீரமணி இசையில் பி சுசீலா பாடிய பாடல்.
10.11.23
8.9.23
வெள்ளி வீடியோ : தெய்வத்தால் உருவான பந்தம் விலகாது மகராணியே
ஜெயவிஜயா என்று சகோதரர்கள் பாடிய சில பக்திப் பாடல்கள் சிலவற்றை
7.7.23
வெள்ளி வீடியோ : இணைந்து நில்லு நீ அணைந்து கொள்ளு நான் எங்கோ போவேன் அங்கேயெல்லாம் உன்னை எடுத்து
பாடல் உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகமாக இருக்கலாம். கரகரப்ரியா ராகத்தில் அமைந்துள்ள இந்தப் பாடல் எனக்கு அந்த ராகத்துக்கு கொஞ்ச நாள் முத்திரைப் பாடலாக இருந்தது. மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.
30.12.22
வெள்ளி வீடியோ : அன்பென்னும் ஆனந்தப் பூங்காவிலே நீ பண் பாட வாராய் செந்தேனே
பாடலை எழுதியவர் உளுந்தூர்பேட்டை ஷண்முகம். இசை டி ஆர் பாப்பா.. பாடியிருப்பவர் சீர்காழி கோவிந்தராஜன்.
4.11.22
வெள்ளி வீடியோ : கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும் பெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்
சூலமங்கலம் சகோதரிகள், T M சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் என்று பக்தி பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில், அதே பாடல்களே மறுபடி மறுபடி ஒலித்துக் கொண்டிருக்க, ஒருநாள் திடீரென எனக்குத் தெரிந்து மூன்று பாடல்கள் புதிதாக ஒலித்தன.
19.8.22
வெள்ளி வீடியோ : பயத்தில் மனது தவிக்கின்றது... இருந்தும் விருந்தை நினைக்கின்றது
இந்த ஆல்பத்திலிருந்து சில பாடல்களை ஏற்கெனவே பகிர்ந்தாயிற்று. இன்று இன்னுமொரு பாடல். இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு..
13.5.22
வெள்ளி வீடியோ : அழுது விட்டேன் சும்மா... நீ அன்பு செய்வாய் அம்மா
தமிழ்நம்பியின் பாடல். இசையமைத்து, தானே பாடி இருக்கிறார் டி எம் எஸ். யதேச்சையாக எடுத்தாலும் இதை மே 8 அன்னையர் தினம் அன்று அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.
21.1.22
வெள்ளி வீடியோ : நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை
இன்று இரண்டு பி. சுசீலா பாடல்கள். இரண்டும் பெண் பார்க்கப்படும்போது பாடப்படுபவை. இரண்டும் எம் எஸ் விஸ்வநாதன். இரண்டும் சிவாஜி கணேசன் படம்!
30.12.21
மறவாதே மனமே ...
சஞ்சீவியின் சந்தேகங்கள் படித்து ரசித்திருக்கிறீர்களா? குமுதத்தில் வந்த துணுக்குத்தொடர்.
24.12.21
வெள்ளி வீடியோ : மீன் கடிக்கும் மெல்லிதழை நான் கடித்தால் ஆகாதா...
இன்று சித்திர பாடல்களின் தொகுப்பு. நிறைய பாடல்கள் இருந்தாலும் என் தெரிவில் சில பாடல்கள். வெவ்வேறு பாடகர்கள் பாடிய சித்திர பாடல்கள்.
23.12.21
ஆனந்தம்.. ஆனந்தம்... ஆனந்தமே...
இந்தத் திருமணத்தில் ஒரு சிரிப்பான நிகழ்வு. ஒவ்வொருவரிடமும் சொல்லும்போதும் நானும் பாஸும்தான் தாரை வார்த்துக் கொடுப்பதாய்ச் சொல்லிக் கொண்டிருந்தேன். யாரும் ஒன்றும் திருத்தவில்லை. .
17.12.21
வெள்ளி வீடியோ : பொன்னைக் கொடுத்தேனும் பூவைக் கொடுத்தேனும் போற்றும் உறவல்லவோ
1968 ல் மலையாளத்தில் வெளிவந்த அத்யாபிகா என்கிற மலையாளப்படத்தினைப் பார்த்து கவரப்பட்ட கே எஸ் கோபாலகிருஷ்ணன் அதை தமிழில் 1969 ல் குலவிளக்கு என்கிற பெயரில் எடுத்து தமிழ் மக்களை பிழிய பிழிய அழ வைத்தார்.
10.12.21
வெள்ளி வீடியோ : மானமே ஆடைகளாம் மரியாதை பொன் நகையாம் நாணமாம் துணை இருந்தால் போதுமே
ஜோதிலக்ஷ்மியின் முதல் தமிழ்ப்படத்திலிருந்து ஒரு பாடல் இன்று பகிரப்போகிறேன் என்று சொன்னால் அடிக்க வருவீர்கள். ஆனால் உண்மையைத்தான் சொல்கிறேன்.
3.12.21
வெள்ளி வீடியோ : கொஞ்சும் திலகம் நெஞ்சில் பதிய குளிர வேண்டும் இரவு..
1976 ல் வெளியான படம் கிருஹப்ரவேசம். சிவாஜி, கே ஆர் விஜயா, சிவகுமார் நடித்தது. வழக்கம்போல உணர்ச்சிக்குவியலான படம். சிவாஜிக்கு கை விளங்காமல் போய்விடும் என்று ஞாபகம். லாரி டிரைவராய் வருவார். சிவாஜியும் சிவகுமாரும் அண்ணன் தம்பி, நடுவில் மதிப்பிழந்து, பின்னர் சேரும் கதை என்று நினைவு. சிவாஜி தம்பதியினருக்கு குழந்தையின்மை, சிவகுமார் ஜெயாவுக்குக் குழந்தை இருப்பது போன்ற பிரச்னைகள்.
2.12.21
உலகம் பெரிது சாலைகள் சிறிது...
ஆபீஸிலிருந்து வீடு திரும்ப, சிக்னலில் யு டர்ன் எடுக்கக் காத்திருந்த வேளையில், எதிர் திசையிலிருந்து சினிமாவில் வருவதுபோல வாகனங்களுக்கு மத்தியில் சிறு இடைவெளியில் திடீரென வளைந்து திரும்பியது ஒரு பைக்.