** லத்திகாவுக்கே 'லத்தி' சார்ஜா!
# ஆத்தூர் அருகே நரபலி முயற்சி ?
** யார் அந்த நரபலி? ஆத்தூர் அருகே என்ன முயற்சி செய்தார் அவர்?
** இப்பிடித்தான் முதல் டெஸ்டும் ஆரம்பித்தது. அப்புறம் என்ன ஆச்சு?
# 20 கி.மீ., நடைப்போட்டி : இந்திய வீரருக்கு வெண்கலம்.
** எவ்வளவோ தடைப் போட்டிகளில் அன்றாடம் ஜெயித்து வரும் இந்தியருக்கு, நடைப்போட்டி சர்வ சாதாரணம்!
# மின்சார ரயில் தப்பியது.
** பவர் கட்டா?
# பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் இந்தியா அல்ல :முஷாரப்.
** அது சரி. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் எது - அதையும் சொல்லிடுங்க சார்!
# அடுத்த காமன்வெல்த் போட்டி: பெண்களுக்கான மல்யுத்தம் நீக்கம்: இந்தியாவுக்கு எதிராக சதி!
** இன்றளவில் இந்தியா இன்னும் இருபது தங்கப் பதக்கங்களை பெற்றுள்ள மற்ற போட்டிகளுக்கும் ஏதாவது வேட்டு வைப்பார்களா?
# நிலவில் காய்கறிகள் விளைவிப்பது சாத்தியமா? ** விளைவிப்பது சாத்தியமாக இருக்கலாம்; ஆனால் விலை(க்கு) விப்பது (விற்பது) சாத்தியமா?
# இந்திய ஜனநாயக கட்சி தமிழகத்தில் தனித்து போட்டி.
** எங்களைக் கேட்டால், தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவிக்கும் கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்து, போட்டியிடலாம்.
# அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு இணையாக கூட்டம்? விஷப்பரீட்சையில் காங்.,
** இதுல என்னங்க விஷப்பரிட்சை? 'பிரியாணிப் பொட்டலங்கள் தயார் செய்தால் போதாதா?' என்கிறார் 'விஷ'யமறிந்த தொண்டர் ஒருவர்!
all are superb..
பதிலளிநீக்குபத்தும் முத்து.........வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு/'பிரியாணிப் பொட்டலங்கள் தயார் செய்தால் போதாதா?' என்கிறார் 'விஷ'யமறிந்த தொண்டர் ஒருவர்! /
பதிலளிநீக்குகுவார்ட்டர் இல்லாம கூட்டம் சேராதே. ‘விஷ’மக்காரத் தொண்டரோ
10.10.10 விட மாட்டேங்கிறிங்க.
பதிலளிநீக்குபத்து பத்து பத்து பத்தும் போது பத்து தேய்க்கிற மாதிரி ஞானக்கண்ல ஒரு படம் தோணுது.
பதிலளிநீக்கு//ஆனால் விலை(க்கு) விப்பது (விற்பது) சாத்தியமா?//
பதிலளிநீக்குவாங்கத் தயார்னு சொல்லுங்க! விலை விச்சுடுவோம்!
//அது சரி. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் எது - அதையும் சொல்லிடுங்க சார்! //
இதை பர்வேஸ் முஷாரப் வந்து தான் சொல்லணுமாக்கும்! நம்மை ஆள்கிரார்களே, அந்தப் புண்ணாக்குகள் தான்!
அப்பாதுரை சார்!
பதிலளிநீக்குபத்துப் பத்துன்னு நல்லாப் பளபளன்னு தேச்சிருக்காங்கன்னா சொல்றீங்க! எனக்கென்னவோ இந்தப்பத்துப் போடற பழக்கம் குறைஞ்சாத் தேவலைன்னுதான் தோணுது!
நாகரீகமான கமெண்டுகள்!
பதிலளிநீக்குபத்து செய்திகளுக்கும் , பத்து கமெண்டுகளுக்கும் பத்துவின் பத்து பாராட்டுகள்...
பதிலளிநீக்குபத்துப் பாட்டு.. பதிற்றுப் பத்து.. போல் இங்கு பத்து விஷயம் பத்தி பத்தி பத்தி-யாய் (..... because because because is a conjunction !!) எழுதியுள்ளீர்கள். நன்று. பத்துப் பத்தாக எழுதவேண்டும் என்று தத்து பித்தாக எழுதாமைக்கு நன்றி. ( நான்தான் அப்படி எழுதுகிறேனோ? )
பதிலளிநீக்குஇரண்டு விஷயங்கள் இடிக்கின்றன. நகைச்சுவைக்காக "நரபலி" "மின்சார ரயில்" செய்திகளை ஜோக்-காக நினைப்பது தவறு. வேண்டுமென்றால் ஒன்று செய்யாலாம். இந்த மின்சார ரயில் பாதையில் பாறையை வைத்தவனை(ளை?) நரபலி கொடுக்கும் ஆளிடம் சேர்த்து விடலாம்.
ளை-யை அடைப்புக் குறியில் எழுதிவிட்டேன் என்றாலும் - பெண்கள் இதுபோன்ற தவறுகள் செய்வது குறைவு தான் என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
(அப்பா தாய்க்குலத்திடமிருந்து தப்பித்தேன்!!)
என்ன ஒரே பத்துப் போட்டபடி இருக்கீங்க !
பதிலளிநீக்குஅ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு இணையாக கூட்டம்? விஷப்பரீட்சையில் காங்.,
பதிலளிநீக்கு** இதுல என்னங்க விஷப்பரிட்சை? 'பிரியாணிப் பொட்டலங்கள் தயார் செய்தால் போதாதா?' என்கிறார் 'விஷ'யமறிந்த தொண்டர் ஒருவர்!
...:-)
நல்லா கலாய்க்கிறீங்க....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்..