செவ்வாய், 19 அக்டோபர், 2010

கேள்வி பிறந்தது இன்று !



சில திட்டங்கள், எண்ணக்கரு (concept) நிலையிலிருந்து, உயிர்த்தோற்ற (reality) நிலையை அடைய எடுத்துக் கொள்ளும் காலம் ஆச்சரியமாக இருக்கும். 

உதாரணத்திற்கு பதிவு எழுத ஒரு யோசனை இரவு எட்டு மணிக்கு தோன்றுகிறது என்று வைத்துக் கொள்வோம். எட்டு மணி துவங்கி, அதை உருவமைத்து,  கணினி விசைப் பலகையில் தட்டி, படங்கள் சேர்த்து, சேமித்து வைத்து, வெளியிடு என்று விசை தட்டும் நேரம் வரை ஆகின்ற நேரம்தான் இந்த கர்ப்ப காலம். இந்தப் பதிவு 19/10/2010 இந்திய நேரம், இரவு எட்டு மணிக்கு தோன்றிய சிந்தனை, பதிவிடப்பட்ட நேரம் என்ன என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். 

எங்கள் ப்ளாகில் சென்ற மாதம் இடப்பட்ட 'என்ன தோன்றுகிறது?' பதிவு பத்தே நிமிடங்களில் எண்ணக்கரு நிலையிலிருந்து, 'குவா குவா' நிலைக்கு வந்தது. 

சில பதிவுகள் இன்னும் கர்ப்ப நிலைமையிலேயே இருந்துவருகின்றன. 

தமிழ் நாட்டில், நாற்பத்தைந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு இரயில் பாதை அமைப்பதற்கு போடப் பட்ட திட்டம் ஒன்று எண்ணக்கரு நிலையிலிருந்து, 'ஊ ... ஜிக் ..... ஜிக் ...' நிலை வருவதற்கு, அறுபத்து மூன்று வருடங்கள் ஆயிற்று! 

எந்த ஊர்? எந்த வழி? எந்த வருடம் தொடங்கி, எந்த வருடம் வரை? உங்களுக்குத் தெரியுமா?      

                  

11 கருத்துகள்:

  1. அறுபத்தி முணு வருஷத்துல முடிஞ்சிடுச்சா.
    சதமடிக்க விருப்பமில்ல போலும். பதிலையும் நீங்களே சொல்லிடுங்க.

    பதிலளிநீக்கு
  2. சஸ்பென்ஸ் தாங்கல சார். சீக்கிரம் விடையைச் சொல்லிடுங்க.

    பதிலளிநீக்கு
  3. சேலம் கரூர் போடறேன்னு சொல்லி இன்னும் போட்டப் பாடில்லை. இந்த ரெகார்டை பிரேக் பண்ணிடும்

    பதிலளிநீக்கு
  4. 1853ல பாம்பேக்கும் தானேக்கும் இந்தியால மொமொதலா ரயில் விட்டாங்க..
    இதை எதுக்கு சொல்லுறேனா.. நீங்க கேட்ட கேள்விக்கு பதில் தெரியலை.. அதனால எனக்கு தெரிஞ்ச ரயில் சம்பந்தப் பட்ட செய்திய (பதிலா ) சொல்லுறேன்..

    பதிலளிநீக்கு
  5. வழக்கம்போல் காத்திருக்கிறேன் பதிலுக்கு.

    பதிலளிநீக்கு
  6. இதுவரையிலும் யாரும் சரியான விடை அளிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  7. சார்! நான் ஜி.கே ல வீக்கு. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ரயில் விட்டுருக்கேன். ;-)

    பதிலளிநீக்கு
  8. பாலராஜன் கீதா அவர்களுக்கு 100/100.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!