Thursday, September 9, 2010

என்ன தோன்றுகிறது?

ஏதேனும் ஒரு படத்தைப் பார்க்கும்பொழுது, ஏதேனும் ஒரு நினைவு வரும்.
இங்கே உள்ள படத்தைப் பாருங்கள்.  

உடனே உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை பதியுங்கள். 
ஒரே படம் - ஒவ்வொருவருடைய நினைவும் எவ்வளவு வேறுபடுகிறது என்பது வியப்பாக இருக்கும்.  


      (௦பெரிய கதையாக இருந்தால், engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பிடுங்க !!)

45 comments:

LK said...

appavum magalum

குரோம்பேட்டைக் குறும்பன் said...

புள்ளை பிடிக்கறவன் ....?
சாரி ....
புல்லை மிதிக்கிறவன் !!!

Vidhoosh said...

புயல் / hurricane போதுதான் பறவைகள் இத்தனை தாழப் பார்க்கும்.. இவர்கள் இருவரும் அங்கென்ன செய்கிறார்கள்.. ???? எப்படி கண்ணை இத்தனை திறந்து வைத்துக்கொண்டு பார்க்க முடிகிறது?

Vidhoosh said...

followup

Vidhoosh said...

///புயல் / hurricane போதுதான் பறவைகள் இத்தனை தாழப் பார்க்கும்.. இவர்கள் இருவரும் அங்கென்ன செய்கிறார்கள்.. ???? எப்படி கண்ணை இத்தனை திறந்து வைத்துக்கொண்டு பார்க்க முடிகிறது? ////

இத்தனை தாழப் பார்க்கும்.. என்பதை இத்தனை தாழப் *பறக்கும் ..* என்றே படிக்கவும்.

முனைவர்.இரா.குணசீலன் said...

இளமை நிலையில்லாதது...

Chitra said...

சிறுமி: ஆடி காத்துல அம்மி பறக்கும்பாங்க.... இங்கே காக்காதான் கீழே பறக்குது. ஏன்?
கூட வருபவர்: ????? முடியல. இந்த காத்து என்னையும் தூக்கிட்டு எங்காவது போய் இருந்து இருக்கலாம்.

Greenmale said...

அச்சம் இல்லாத மகள் ~ தந்தை கையில் பாதுகாப்பாக..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

பதிவு எதுவும் சிக்கலன்னா, இப்படி ஒரு படத்தை போட்டு கேள்வி கேட்டு இன்னும் எத்தனை நாள்தான் ஓட்டப் போறீங்களோன்னு தான் முதல்ல தோணுது
:)

geetha santhanam said...

மகள்: அப்பா, ஆஃபீஸில் எல்லாரும் காக்கா பிடிச்சுதான் முன்னேறாங்க, எனக்கு வரமாட்டேங்குது அப்படின்னு சொல்வியே. இங்கே நிறைய காக்கா கீழே பறக்குது. நான் வேணா பிடிச்சு தரட்டா?

---geetha

தமிழ் உதயம் said...

மொத்தத்தில் ஒரு அழகான மனதை கவர்ந்த ஓவியம்

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

/ஒரு படத்தைப் பார்க்கும்பொழுது, ஏதேனும் ஒரு நினைவு வரும்/

அப்படி ஒரு அவசியம், கட்டாயம் இருக்கிறதா என்ன!?

நினைவுகள் என்பது தூண்டப்படுபவை (triggerred) என்ற அளவில் மட்டும் சரி!

பார்வையில் படுகிற அத்தனையும் தூண்டுபவை அல்ல!

Engal said...

krish sir,
consent to be nothing?
consent to be no thin(kin)g? !!

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

//consent to be nothing?
consent to be no thin(kin)g? !!/

ரெண்டும் ஒண்ணு தான்!

"சும்மா இரு சொல்லற என்றலுமே ' என்ற அருணகிரிநாதரின் அநுபூதி நிலையைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

குரோம்பேட்டைக் குறும்பன் said...

அப்பா (நினைக்கின்றார்) : வாக்கிங் போகும்போது கூட என்ன வாய் ஓயாம பேச்சு? அம்மா எட்டடி பாய்ந்தால் இந்தக் குட்டி பதினாறடி பாய்கிறதே!

குரோம்பேட்டைக் குறும்பன் said...

மகள் : "அப்பா! இன்னிக்கும் என்னை Creche ல விட்டுவிட்டு, நீ ஆஃபீஸ் போகவேணுமா? இன்னிக்குப் புயல் அடிக்கும்னு வித்யா அத்தை சொன்னாங்க. பேசாம வீட்டுக்கே திரும்பிப் போயிடலாம் அப்பா. ப்ளீஸ்!"

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

இப்பப் புரியுதா?

consent to be no thin(kin)g? !!ன்னு!

Engal said...

// இப்பப் புரியுதா? //

ஆக்சுவலா, இப்பத்தான் புரியல.

When I think that I am not thinking, then it is evident that I am thinking.

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...
This comment has been removed by the author.
சைவகொத்துப்பரோட்டா said...

தங்கையுடன், அண்ணன் செல்கிறார்!!

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

ஆக்சுவலா என்ன புரியணும்?

என்னமாச்சும் தோணுதான்னு ஒண்ணைக் கெளப்பி விட்டீங்க! நம்ம குரோம்பேட்டை குறும்பன் வரிசையா என்னென்னமோ தோணுதுன்னு சொல்லிக்கிட்டே வர்றாரு! இன்னும் என்னென்ன தோணப் போகுதோ தெரியலே!

கெளப்பி விடாத வரைக்கும் ஒண்ணுமே தோணாதுன்றதுதான் சரி!

அதைத் தான் முதல்லேயே சொன்னேன்! நினைவுகள் தூண்டப்படுபவை என்ற வரை சரி! ஆனால் பார்க்கிற எல்லாமே தூண்டுபவை அல்ல!

கோனார் நோட்சுக்குக் கட்டணம் ஒரு ஐம்பது யூரோ அனுப்பி வைங்க!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

எனக்கு அந்த காக்கா எல்லாம் பிடிச்சுக் கொடு..பூஊஊஊஊ

ஹேமா said...

ஐந்தறிவு வளைகிறது
ஆறறிவு அழிகிறது
நிமிர்ந்து நிற்பதால்
திமிரும் தைரியமும்.

மனிதனல்ல எதிர்க்க
இயற்கை இது.
வளைந்து கொடு
வாழப்பழகு !

மோ.சி. பாலன் said...

புயலில் தோன்றுமா புன்னகை?
இது இலையுதிர் காலம்:
உடை உதிர்த்த மரங்கள்
நாணத்தால் தரையிறங்கிய பறவைகள்
இயற்கையின் சுழற்சியைக் காண
இவர்களும் சுற்றுகின்றனர்.....
தோளில் தொங்குவது என்ன?
புகைப்படத்தில் அடங்கியதோ புகைப்படக் கருவி?

குரோம்பேட்டைக் குறும்பன் said...

// கோனார் நோட்சுக்குக் கட்டணம் ஒரு ஐம்பது யூரோ அனுப்பி வைங்க!//

உங்க பேரு கிருஷ்ணமூர்த்தியா அல்லது சாரு வா?

எங்கள் said...

எல் கே கூறிய அப்பாவும் மகளும் என்பதுதான் முதலில் எங்களுக்கும் தோன்றியது.
கு கு வித்தியாசமாக ஏதேதோ சொல்லி இருக்கின்றார்.
விதூஷ் பறவைகள் தாழப் பறப்பதைப் பற்றிக் கூறியுள்ளார். 'தட்டான் தாழப் பறந்தால் தவறாமல் மழை பொழியும்' என்று கேள்விப் பட்டுள்ளோம். பறவைகள் பற்றி இப்போதான் கேள்விப்படுகின்றோம்.
முனைவர் குணசீலன் கூறியுள்ள கருத்து இலையுதிர் காலத்தை ஒட்டியது என்று நினைக்கின்றோம்.
சித்ரா அவர்களின் கற்பனை நயமான நகைச்சுவை.
Greenmale சொல்லியிருப்பதில் ஒரு சந்தேகம் - தந்தை கைகளில் பாதுகாப்பாக இருப்பதால்தான் அச்சிறுமியிடம் அச்சம் இல்லையா?
பெ சொ வி அவர்களே! 'என்ன பாட்டுப் பாட? என்ன தாளம் போட?' என்று இசைஞானி ஒரு பாட்டாகப் பாடியது போல இருக்கா? ஒரு வித்தியாசமான பதிவைப் போட்டு வாசகர்கள் எண்ணங்கள் என்ன - ஒரே படம் ஒவ்வொருவர் மனத்திலும் என்னென்ன எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது என்று பார்க்க ஆசைப்பட்டோம் - அதன் விளைவுதான் இந்தப் பதிவு
(தொடரும்)

எங்கள் said...

கீதா சந்தானம் அவர்களின் கருத்து - சிறுமி சொல்வதைப்போன்ற வார்த்தைகள், வித்தியாசமான, அதே நேரத்தில் முற்றிலும் நடக்கக்கூடிய, உரையாடல்தான். நன்றாகச் சொல்லியிருக்கின்றார்.

தமிழ் உதயம் இரசித்திருக்கின்றார். நாங்கள் சுட்ட பலனைப் பெற்றோம்.

கிருஷ்ணமூர்த்தி சாரும் குரோம்பேட்டைக் குறும்பனும் நன்றாகக் கும்மி அடித்திருக்கின்றார்கள்.

சைவகொத்துப்பரோட்டா - குழந்தைகளுக்கு இடையே போதிய இல்லை இல்லை அதீத இடைவெளியைப் பார்த்திருக்கின்றார்!

கீதா சந்தானம் அவர்களின் கருத்துப் படி, காக்கா பிடிச்சுத் தரட்டுமா என்று கேட்ட சிறுமி, தேனம்மை அவர்களின் கருத்துப்படி - காக்கைகளைப் பிடித்துக் கொடுக்கவேண்டும் என்று அடம பிடிப்பதைப் பார்த்தீர்களா!

ஹேமாவும், மோ சி பாலனும் கவிதை பாடிக் கலக்கிவிட்டார்கள்.

இதுவரையிலும் இந்தப் பதிவு சம்பந்தமாக கருத்துரைத்தவர்களுக்கும், கவிதை எழுதியவர்களுக்கும், கும்மி அடித்தவர்களுக்கும் எங்கள் நன்றி.

மேலும் கருத்துரைகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

meenakshi said...

அப்பா, ஜோரா காத்தடிக்கறது, காக்கா கத்தறது, எனக்கு பயமா இருக்கு, என்னை தூக்கிக்கோ!

அப்பாவி தங்கமணி said...

Daughter excited to share her cute little school stories to dad in their evening leisure walk... lovely picture... reminded me of my dad

விஜய் said...

இரண்டு பேருக்கு இடையில் இவ்வளவு இடைவெளியா ?

அண்ணன் தங்கையாக நினைவு வருகிறது

விஜய்

எங்கள் said...

நன்றி மீனாக்ஷி, அப்பாவி தங்கமணி, விஜய்.
அப்பாவி தங்கமணி சொல்வது போல, இந்தப் படத்தை அப்பா பார்த்தால் தன மகளையும், மகள் பார்த்தால் தன தந்தையையும் நினைப்பார்கள் என்று சொல்கிறார் எங்கள் மனோ தத்துவ மேதை. காக்கைகள் பார்த்தால் என்ன நினைக்கும் என்று அவர் சொல்லவில்லை.

Madhavan said...

ஏதாவது வித்தியாசமா சொல்லனும்னு படத்த திரும்ப திரும்ப பாத்துகிட்டே இருக்குறேன்.. தோணிச்சின்னா கண்டிப்பா சொல்லுறேன்..

மோ.சி. பாலன் said...

கிளைகள் அசைந்தாட
இலைகள் குதித்தாட
குயில்கள் குனிந்தாட
நீங்கள் மட்டும் நடமாடுவதேன்?
நடம் ஆடுங்கள்!

மோ.சி. பாலன் said...

நேற்று தர கனி இருந்தது
இன்று தர இலை இருந்தது
நாளையும் காற்று தரும் மரம்.
மகளே,
இன்று என் கரம் தந்தேன்.
நாளை என்பது உன் கரங்களில்.

மோ.சி. பாலன் said...

வெறும் சிலுவையாய் இருந்துவிட்டுப் போகிறேன்.
இயேசுவை விட்டு விடுங்கள்.
காகங்களே என் மீது அமராதீர்கள்.
இந்த ஆள் ஆணி வைத்திருக்கக் கூடும்.

மோ.சி. பாலன் said...

இலைகளால் மெத்தை இடுகிறேன்.

உன் பிள்ளையின் பாதங்களும்,
என் கிளைகளின் நிழலும்
சுடு நிலத்தில் படவேண்டாம்.

எங்கள் said...

மோ சி பாலன் - அசத்திட்டீங்க வெரி குட். நல்லா இருக்கு. சூப்பர்!

அப்பாதுரை said...

கப்பன் பார்க்கில் கொஞ்சம் நடக்கலாமே என்று கிளம்பியவன் எங்கே தொலைந்து போனேன் என்று தெரியவில்லை; ஒரு சிறிய மரச்சோலையில் மாட்டிக் கொண்டேன். இருளும் காற்றும் இறங்கி வர என் கண் மங்கத் தொடங்கியது. மாலைக்கண் உள்ளவருக்கு என் நிலை புரியும். தாக்கம் தொடங்கியதால் எல்லாம் தலை கீழாக இருப்பது போல் தோன்றியது. தரையில் இலைகளும் பறவைகளும். மழை தூரல். தலைசுற்றத் தொடங்க, எப்படியாவது வெளியேறி மழை வலுக்குமுன் எங்கேயாவது ஒதுங்கலாம் என்று தடுமாறி நடந்த போது அந்தச் சிறுமியைப் பார்த்தேன். 'வா, நான் துணைக்கு வரேன்' என்று என் கையைப் பிடித்து அழைத்துப் போனாள். நன்றி சொல்ல நினைத்தபடி நாலடி நடந்த எனக்கு இந்த இடத்தில் இவள் எப்படி வந்தாள் என்று தோன்றியது. அவளை இடுக்கிக் குனிந்து பார்த்தேன். முட்டைக் கண்கள்! பலமாகச் சிரித்தாள். என் பார்வை அவளுக்குப் புரிந்து விட்டது. மேலிருந்து மூன்று பிசாசுகள் மரக்கிளைகளில் புகை போல் இறங்கி வரத்தொடங்கின.

(நிசமாவே இதுதாங்க உடனே தோணிச்சு)

சாய் said...

"அப்பா காத்து, மழைன்னு வருதுப்பா. வீட்டுக்கு போகவேண்டாம். இங்கேயே நனைவோமா"

சாய் said...

Geethu

Class imagination

Greenmale said...

மோ.சி. பாலன் said...
நேற்று தர கனி இருந்தது
இன்று தர இலை இருந்தது
நாளையும் காற்று தரும் மரம்.
மகளே,
இன்று என் கரம் தந்தேன்.
நாளை என்பது உன் கரங்களில்

அற்புதம் பாலன் அவர்களே.....

Greenmale said...

Greenmale சொல்லியிருப்பதில் ஒரு சந்தேகம் - தந்தை கைகளில் பாதுகாப்பாக இருப்பதால்தான் அச்சிறுமியிடம் அச்சம் இல்லையா?

என் சிறு வயதில், என் தந்தையின் கரங்களில் எனக்கு தோன்றிய அதே பாதுகாப்பு இந்த படத்தில் உணர முடிகிறது எங்கல்ஸ்.

சாய் said...

அற்புதம் பாலன்

ramalingam said...

அதிக பின்னூட்டம் வாங்க முப்பது வழிகள். அதில் ஒரு வழி "என்ன தோன்றுகிறது".

எங்கள் said...

ராமலிங்கம் சார்!
ஐயோ!
ஐ யம் பாவம்
என்கிறார் பதிவாசிரியர், உங்க கமெண்ட் பார்த்து!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!