வெள்ளி, 10 டிசம்பர், 2010

ஒண்ணா ரெண்டா தொடு!


            
நாம பதிவு போடும்போது ரெண்டு பிரச்னை...
சரியா பிரசுரம் ஆச்சா இல்லையான்னு... 
பிரசுரம் ஆகல்லேன்னா பிரச்னை இல்லை,
பிரசுரம் ஆகியிருந்தா ரெண்டு பிரச்னை. 
யாராவது படிச்சாங்களா இல்லையான்னு...
படிக்கலைன்னா பிரச்னை இல்லை,
படிச்சிருந்தா ரெண்டு பிரச்னை. 
படிச்சது புரிஞ்சிருக்குமா இல்லையான்னு...
புரியலன்னா பிரச்னை இல்லை.
புரிஞ்சிருந்தா ரெண்டு பிரச்னை.
படிச்சதும் கமெண்ட் எழுதுவாங்களா மாட்டங்களான்னு..
எழுதலைன்னா பிரச்னை இல்லை,
எழுதிட்டாங்கன்னா ரெண்டு பிரச்னை. 
திட்டி எழுதறாங்களா பாராட்டி எழுதறாங்களான்னு. 
திட்டி எழுதினா பிரச்னை இல்லை.
பாராட்டி எழுதினா ரெண்டு பிரச்னை.  
இங்கேயே நன்றி சொல்றதா, அவங்க பிளாக்குக்கு போய கமெண்ட் போடறதான்னு... 
இங்கேயே சொல்லிட்டா பிரச்னை இல்லை..  
அவங்க ப்ளாக் போனா ரெண்டு பிரச்னை. 
பழைய பதிவுக்கு பின்னூட்டம் போடணுமா, புது பதிவு போட்டிருப்பாங்களான்னு . 
பழைய பதிவுன்னா பிரச்னை இல்லை,
புது பதிவுன்னா ரெண்டு பிரச்னை...
கமெண்ட் படிச்சுட்டு விட்டுடுவாங்களா, திரும்ப நம்ம பதிவுக்கு வருவாங்களான்னு... 
விட்டுட்டா பிரச்னை இல்லை, 
திரும்ப நம்ம பதிவுக்கு வந்தா ரெண்டு பிரச்னை. 
ரசிப்பாங்களா மாட்டாங்களான்னு ..
ரசிக்கலைன்னா பிரச்னை இல்லை.
ரசிச்சா ரெண்டு பிரச்னை. 
உடனே அடுத்த பதிவு போடறதா, போடாம விடறதான்னு. 
போடாம விட்டா பிரச்னை இல்லை. 
   
நாம பதிவு போடும்போது ரெண்டு பிரச்னை.......  
மறுபடியும் ஆரம்பத்திலிருந்து படிக்கவும்....
                

19 கருத்துகள்:

  1. படிச்சிடேன்.இப்ப எனக்கு மூன்று பிரச்சனை.பின்னூட்டம் மட்டும் போடுவதா?இல்லை ஓட்டு மட்டும் போடுவதா?இல்லை இரண்டையும் செய்வதா?.நல்லாதான் இங்கே வந்தேன் இப்படி ஆயிடேனே.

    பதிலளிநீக்கு
  2. தலைப்பு படைப்பு கலாய்ப்பு எல்லாமே சூப்பரப்பூ:))))!

    பதிலளிநீக்கு
  3. இந்த பதிவு எழுதறக்கு முன்னாடி விசு நிகழ்ச்சி எதாவது பாத்தீங்களா?

    பதிலளிநீக்கு
  4. // meenakshi said...
    இந்த பதிவு எழுதறக்கு முன்னாடி விசு நிகழ்ச்சி எதாவது பாத்தீங்களா?//

    விசு நிகழ்ச்சி பாக்காம இருந்திருந்தா பிரச்னை இல்லைங்க.
    பார்த்திருந்தா இரண்டு பிரச்னைகள்.
    விசு நிகழ்ச்சி பற்றி பதிவு போடுவதா பதிவு போடாம விடறதா என்று.
    பதிவு போடாவிட்டா பிரச்னை இல்லை.
    பதிவு போட்டா இரண்டு பிரச்னைகள்.
    மறுபடியும் .....

    பதிலளிநீக்கு
  5. ரெண்டுல நீ ஒன்னை தொடு மாமான்னு கேட்கறீங்க...
    படிச்சாச்சு, கமென்ட் போட்டாச்சு.. அப்புறம்.. கலாட்டா சூப்பர்.. ;-)

    பதிலளிநீக்கு
  6. ரசித்தேன். விசுவை பத்தி எழுத நினைச்சேன், மீனாட்சி முந்திட்டாங்க.

    பதிலளிநீக்கு
  7. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... கமென்ட் போட்டு இருக்கேன்!
    பிரச்சனையா இல்லையானு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!

    பதிலளிநீக்கு
  8. ஆக.. நான் பின்னூட்டம் போடவில்லை என்றால் உங்களுக்கு பிரச்சினை. உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அது எனக்கும் பிரச்சினை தானே.. அதனால் தான் இது.

    பதிலளிநீக்கு
  9. எனக்கு இப்ப ஒரே ஒரு பிரச்சினைதாங்க. இப்ப சென்னையில் மழை, குளிர்னுதானே சொன்னாங்க. மண்டை காயற வெயில் வர நாளாகும்னு சொன்னாங்களே.

    பதிலளிநீக்கு
  10. அச்சோ அச்சோ....வீட்ல நாட்ல பிரச்சனைன்னு இண்ணைக்கு இங்க வந்தா ...இங்கயும் !

    பதிலளிநீக்கு
  11. //மறுபடியும் ஆரம்பத்திலிருந்து //

    இப்படியே புலம்பிகிட்டேயிருங்க, நாங்க கிளம்பறோம். :-)))))

    பதிலளிநீக்கு
  12. எனக்கும் இப்ப ரெண்டு பிரச்சனை... இதுக்கு ஹா ஹா சொல்லணுமா ஹி ஹி சொல்லணுமானு ...ஹா ஹா ஹி ஹி (ரெண்டும் சொல்லிட்டேன்...)

    பதிலளிநீக்கு
  13. நன்றி
    LK,
    ers,
    புலிகுட்டி,
    ராமலக்ஷ்மி,
    meenakshi,
    RVS,
    வானம்பாடிகள்,
    தமிழ் உதயம்,
    chitra,
    Ravikumar Karunaanidhi,
    மோ.சி.பாலன்,
    geetha santhanam,
    ஹேமா,
    ஹுஸைனம்மா,
    அஹம்மது இர்ஷாத்,
    அப்பாவி தங்கமணி,
    Gopi Ramamoorthy,
    அப்பாதுரை.

    வந்த ஒரு எஸ் எம் எஸ்ஸை பதிவுக்கு தகுந்தாற்போல மாற்றி எழுதியது. ஆதரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!