'சொல்ல முடியுதா பாருங்க.' எங்கள் நவம்பர் இருபத்தேழாந்தேதி பதிவு.
சரியான பதில்கள் சொன்னவர்களுக்கு, எங்கள் பாராட்டுக்கள்.
இதோ பதில்கள்:
1) அப்புசாமி சீதாப்பாட்டி கதைகள் - பாக்கியம் ராமசாமி.
2) சமுதாய வீதி - நா பா
3) (அ) நில்லுங்கள் ராசாவே - ஒரு குறிப்பிட்ட நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கும்போது ஹிப்னடைஸ் செய்யப்பட்ட ஹீரோ அந்த அதிபரைக் கொலை செய்ய டியூன் செய்யப் பட்டிருப்பான். மற்றும் மூன்று நிமிஷம் கணேஷ். நிமிஷ நிமிஷ நிமிஷ என்று மூன்று முறை ஒலி வந்ததும் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் குண்டு வெடிக்கும்.
(ஆ) நிர்வாண நகரம் - குற்றங்களை உபயோகித்துக் கொண்டு தான் செய்தது போல நாடகமாடும் கதாநாயகன்!
(இ) சினிமாவுக்காகவே அவர் எழுதிய முதல் கதை நினைத்தாலே இனிக்கும். 'ப்ரியா' எடுக்கப் பட்ட விதத்தில் அதிருப்தியுற்று, 'உன்னைக் கண்ட நேரமெல்லாம்', 'மேற்கே ஒரு குற்றம்' எல்லாம் எழுதினார். அந்த வசனம் இரண்டாவது கதையில் வரும்.
4) (அ) மெர்க்குரிப் பூக்கள் (ஆ) மாலை நேரத்து மயக்கம், ஏதோ ஒரு நதியில்.(இ) முன் கதைச் சுருக்கம்.
5) காதலித்தால் போதுமா?
6) பி.வி.ஆர், எஸ் ஏ பி, கு ப ரா, எல் ஆர் வி, எஸ் வி எஸ் (நன்றி ஆர் வி எஸ்! ), ஆர் வி, தி.ஜ.ர.,.........
7) குமுதத்தில், வால்கள் என்ற பெயரில் தொடங்கி வால்தான் பாக்கி என்று தொடர்ந்த நகைச்சுவைத் தொடர்.
8) ராஜாஜி - திக்கற்ற பார்வதி, மகரிஷி - புவனா ஒரு கேள்விக்குறி, புஷ்பா தங்கதுரை - ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது.
9) யவனராணி - சாண்டில்யன்
10) மர்ம மனிதன் - தமிழ்வாணன்.
சரியா சொல்லிட்டீங்களே! வாழ்த்துக்கள்! :-)
பதிலளிநீக்குசித்ரா! கிண்டலா? சரி சரி !! :)))
பதிலளிநீக்குநா பதில் சொன்ன மூன்றுமே சரி. என்னை நானே முதுகில் தட்டி கொடுத்துகிறேன்.
பதிலளிநீக்குநான் சொன்னதுல மூணு சரி. ரொம்ப பிடிச்சிருந்துது இந்த புதிர். நன்றி.
பதிலளிநீக்குசார்! இந்த ஆறாவது புல்லெட் பாய்ண்ட்ல ஆர் வி எஸ் அப்படின்னு ஒரு பேர் போட்ருக்கீங்களே... அந்த எழுத்தாளர் யார் சார்? தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்கு... அப்படி ஒரு இலக்கியவாதி இருந்தாரா? எனக்கு
பதிலளிநீக்குமெய்சிலிர்க்குது சார்! ;-) ;-) ;-)
என்னவெச்சு காமெடி கீமடி எதுவும் பண்ணலையே.. .. ;-) ;-)
நான் சொன்ன ஒரு பதிலும் கரெக்ட்!
பதிலளிநீக்கு