வெள்ளி, 24 டிசம்பர், 2010

டிசம்பர் 24




சிலருக்குதான் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் இந்த கொடுப்பினை வாய்க்கிறது.

டிசம்பர் 24.

ஆயிரமாயிரம் மக்கள் மனதை கொள்ளை கொண்ட இரண்டு சாதனை இந்தியர்கள் இந்த தினத்தோடு சம்பந்தப் பட்டிருக்கிறார்கள்.

எம் ஜி ஆர்

டிசெம்பர் 24 தேதியில் மறைந்தவர்.

இவர் அரசியல் வாழ்வை விட்டு விடுவோம். 1935 இல் சதிலீலாவதியில் தொடங்கிய இவர் திரை வாழ்வு எந்த உயரத்துக்கு வந்தது என்பதை நாடறியும்.

எம் ஜி ஆர் ஃபார்முலா என்ற ஒன்று பின்னாளில் ஸ்பெஷலாக அறியப் படும் அளவு இவரது திரைப் படங்கள் அமைந்தன. இவர் பாடல் காட்சிகளில் நடிக்கும் ஸ்டைலே தனிதான்...இரண்டு கைகளையும் மாற்றி மாற்றி நெஞ்சில் வைத்து தொடங்கி வானத்தைக் காட்டி இவர் பாடும் ஸ்டைல் தனி. பெரிய நடனம் என்று கிடையாது. பெரிய நடிப்பு என்று கூட ஒன்று கிடையாது. எது இவரை தமிழக மக்களின் மனம் கவர்ந்த வெற்றி நாயகனாக வைத்திருந்தது என்பது ஆச்சர்யம்.


அவர் படங்களில் அவர் சொன்ன ஸ்பெஷல் ஹீரோயிசம். அவர் பட ஹீரோ குடிக்க மாட்டார்...தவறு செய்ய மாட்டார். தவறு செய்பவர்களை சும்மா விட மாட்டார். பகுத்தறிவுப் பாசறையில் வந்த இவர் படத்தில் கடவுள் என்றால் என்ன என்று விளக்கம் கொடுக்கும் பாடல் ஒன்று உண்டு. "கடவுள் இருக்கின்றார் கண்ணுக்குத் தெரிகின்றதா..." காற்று கண்ணுக்குத் தெரிகின்றதா, உணர முடிகிறது இல்லையா அதே போலதான் கடவுள்' என்ற கருத்தில் வரும் பாடல்.

இவர் பாடல்களில் பலப்பல நல்ல பாடல்கள். எல்லாவற்றையும் சொல்ல முடியாது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்கலீல் ஒன்று
"கண் போன போக்கிலே கால் போகலாமா..."

அதிலும் குறிப்பாக,
"திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்..வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்.."

அடுத்த இரண்டு வரிகளையும் எனது நோட்டில் எல்லாம் எழுதி வைத்திருந்தேன்...

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்..."

நிறைய நல்ல பாடல்கள் சொல்லலாம்...ஆனால் அடுத்த ஆளைப் பற்றி சொல்ல வேண்டுமே...!

முஹம்மத் ரஃபி.


டிசம்பர் 24 தேதியில் பிறந்தவர்.

இவர் குரல் கடவுளின் கொடை.

1924 ஆம் ஆண்டு பிறந்து 1980 ஆம் ஆண்டு மறைந்தவர்.

இவரைப் பற்றி சொல்ல வேண்டுமானால் இவர் பாடல்கள் கேட்டிருக்க வேண்டும். ரொம்பப் புகழ் பெற்ற பாடல்களாக சொல்ல வேண்டுமென்றால்,


சுராலியா ஹை தும் மேரே தில் கோ ...யாதோன் கி பாராத் பாடல்
கியாஹுவா தேரா வாதா .......................ஹம கிசிசே கம் நஹீன் பாடல்.
குங்குநாரஹிஹை ..................................ஆராதனா படப் பாடல்

தமிழ் நாட்டில் கூட தெரிந்திருக்கக் கூடிய பாடல்களைச் சொல்ல மேலே சொன்ன பாடல்கள். இவர் பாடிய நல்ல பாடல்கள் லிஸ்ட்டைச் சொல்ல இந்தப் பதிவு போதாது. தோஸ்த் படத்தில் இவர் பாடிய 'ஆவாஜ் மேன தூங்கா...' பாடல் கேட்டுப் பாருங்கள்.


எல்லோரும் கேட்டிருக்கக் கூடிய ஒரு பாடல் "ராமையா ஒஸ்தாவையா..."

பாடல் இணைக்க முடியவில்லை. சில தொழில் நுட்பக் கோளாறுகள்! பாடல்களை மனதில் நீங்களே பாடிப் பாருங்கள்! தெரிந்த பாடல்களை மனத்திலும் பின்னூட்டத்திலும் அசை போடுங்கள்!

படங்கள் உதவி - நன்றி கூகிள், விக்கி, சுலேகா.காம்.

18 கருத்துகள்:

  1. இருவருக்கும் நிகரே இல்லை. :)

    பதிலளிநீக்கு
  2. முஹம்மத் ரஃபியை எனக்கு அதிகம் தெரியாது. எம்.ஜி.ஆர் மறக்க முடியாத மாமனிதர். பாடற்காட்சிகளில் புத்தர், விவேகானந்தர் போன்ற மகான்களை புகைப்படம் தவறாமல் இடம் பெறும். பகுத்தறிவாளர் என்றாலும், எம்மதத்தவரையும் புண்படுத்தாமல் வாழந்தவர். பொன்மனச்செம்மல் என்கிற பட்டம் அவரை தவிர யாருக்கு பொருந்தும்..

    பதிலளிநீக்கு
  3. ரபி பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. எம்.ஜி.ஆர் - மறக்க முடியாத மாமனிதர்

    பதிலளிநீக்கு
  5. என் சிறு வயதில் எனக்கு MGR பிடிக்காது. சிவாஜி ரசிகனாய் இருந்தது கூட காரணமாய் இருக்கலாம். அது அறியாப்பருவம். அப்புறம்.... ரஃபியின் பாடல்களில் "க்யா ஹுவா தேரா வாதா' என்ற பாடல் தமிழில் ' 'வெண்ணிலா வெள்ளித்தட்டு, வானிலே முல்லை மொட்டு என்று வந்ததே கேட்டிருக்கிறீர்களா? எது மூலம் ?
    இன்னொரு குறிப்பு - இதே தினத்தில் மறைந்தவர் திருமதி. பானுமதி ராமகிருஷ்ணா ' She is a legend.

    பதிலளிநீக்கு
  6. எம்.ஜி.ஆர் நல்ல நடிகர், பாத்திரத்திற்குத் தேவையான அளவோடு சிறப்பாக நடித்தவர். அவருக்கு உடல் நலம் சரியில்லாதபோது என் அக்கா, என் பாட்டி (நான் மிகவும் ஆச்சர்யப்பட்டு போனேன்), நான், ஏன் எங்கள் வீட்டில் வேலை செய்பவர்கூட அவர் விரைவில் நலம்பெற வேண்டிக்கொண்டோம். அவரைப் போல பெரும்பான்மை மக்களைக் கவர்ந்த ஒரு மனிதர் இனி பிறந்துதான் வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. பொன் மனச்செம்மல்,ஆட்சியிலும் முதல் மூன்று வருடம் மிகச் சிறந்து விளங்கினார்... நான் ஆணை இட்டால், நெஞ்சம் உண்டு ,தரை மேல் பிறக்க வைத்தான்.. இப்படி பல பாடல்கள் எப்ப கேட்டாலும் உற்சாகம் கொடுக்கும்...

    ரஃபி...எஸ்.பி.பி யால் இன்னமும் ஒவ்வொரு பேட்டியிலும் நினைவு கூறப்படுபவர்...யாதோன்கி பாரத்..தமிழ் பாட்டு புக் வாங்கி பாடிய ஞாபகம்..

    நல்ல பகிர்விற்கு நன்றி....

    பதிலளிநீக்கு
  8. தந்தை பெரியாரை விட்டுட்டீர்களே... அவரும் டிசம்பர் 24 ஆம் தேதி தான் மறைந்தார்.

    பதிலளிநீக்கு
  9. //டிசெம்பர் 24 தேதியில் மறைந்தவர்//

    ஐயோ மறக்கமாட்டேங்க இந்த நாளை. என்பத்தேளேம் வருடம் நான் மெடிக்கல் ரேப் ஆக இருந்தேன். சென்னையில் இருந்து அரக்கோணம், ஆரணி, செய்யாறு, காஞ்சிவரம் போன்ற ஊர்கள் எனக்கு அவுட் ஆப் ஸ்டேஷன் ட்ரிப் வரும். டிசம்பர் இருப்பத்து மூன்றாம் தேதி மதியம் அங்கே போனவன், அரக்கோணம் ஸ்டேஷன் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் (முப்பத்தைந்து ரூபாய் தான் அலவன்ஸ் எனக்கு அப்போது !!) ரூம் போட்டு தங்கி இருந்தேன். மூட்டை பூச்சிக்கு கடிபட்டி காலை இரண்டு மணிக்கு தான் படுத்தேன். காலை டொய்ங் டொய்ங் என்று இசை வந்தவுடன் கிழே இறங்கி வந்தேன். கேட்டால் தலைவர் செத்துட்டார் ரூம் காலி செய்யுங்கள் என்று துரத்தி விட்டார்கள். அரக்கோணம் ஸ்டேஷன் ட்ரைன் வந்தால் பார்ப்போம் என்றார்கள். ஒன்று வந்தது காலை பத்து மணிக்கு. அது திருநின்றவூர் வரை நின்று நின்று சென்றது. அதற்குமேல் கிளம்பாது என்று கலாட்டா செய்தவர்கள் சொன்னவுடன் நான் அங்கிருந்து நடந்தே நடக்க ஆரம்பித்தேன். நான் இருந்த பாத்ரூம் அளவு திருவல்லிக்கேணி மான்ஷன் செல்லும்போது எம்.ஜி.யாரின் உடல் அடைக்கமே செய்யப்பட்டுவிட்டது.

    எம்.ஜி.யாரின் குடும்ப டாக்டர் (டாக்டர் பி.ஆர். சுப்ரமணியம் - பி.ஆர்.எஸ்) என் அம்மா வழி சித்தப்பா (என் சின்ன தாத்தா) - அவரும் துண்டை காணும் துணியை காணும் என்று ராமாவரத்தில் இருந்து வந்ததை அவரின் டிரைவர் சொல்லி கேட்டு இருக்கின்றேன்.

    நான்கு நாள் திருவல்லிகேணியில் கடைக்காரர்கள் வைத்த விலைக்கு பொருள்கள் ? பாதி நாள் வெறும் வயிற்றில் ஈர துணி தான்.

    மறக்கமாட்டேன். என் ஏரியா மேனேஜர் நைசாக விசிட் கான்செல் பண்ணி எஸ்கேப் ஆகிவிட்டார்.

    பதிலளிநீக்கு
  10. December 24th is also the death anniversary of Mr Norman Vincent Peale, a great writer of books like 'The power of positive thinking' etc.

    பதிலளிநீக்கு
  11. அச்சரப்பாக்கம் அசத்து25 டிசம்பர், 2010 அன்று 9:16 AM

    அய்யா, எங்க வீட்டு எருமைக் கன்னுக்குட்டி ஒன்று கூட (இருபது வருங்களுக்கு முன்பு) டிசம்பர் இருபத்துநான்கு அன்று இறந்து போய்விட்டது. அதைப் பற்றி எழுதி நான் எங்கள் ப்ளாக் மெயிலுக்கு அனுப்பவா?

    பதிலளிநீக்கு
  12. நல்ல பதிவு ஸ்ரீராம்.
    எம் ஜி ஆர் ,ரஃபி இருவரும்
    வேறு வேறு விதமாக அசத்தியவர்கள்.
    முதலவரைப் பார்த்தாலே வியப்படையவைப்பது அவர்து ஆரோக்கியம். நல்ல் முகம். ஓ இவர் காப்பாற்றப் பிறந்தவர் என்கிற இமேஜ்.
    இரண்டாமவர் உருக வைத்துவிடுவார் பாட்டினால். சௌத்வீன் கா சாந்த்,சாஹூங்கா மை துஜே ஆஜ் சவேரெ''
    மேரே மெஹபூப், யெ மேரா ப்ரெம் பத்ர, ......இன்னும் ஆயிரம் இருக்குமா பிடித்த பாடல் மட்டும்?
    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  13. திருமதி பானுமதியையும் நினைவுறுத்தியது பெரு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  14. எம்.ஜி.ஆரின் காதல் பாடல்கல்களுக்கு அடிமை நான். தத்துவ பாடல்களுக்கும் பெரும் விசிறி நான். இவரின் பாடல்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால் அது ஒரு தொடர் பின்னூட்டமாக போய் கொண்டே இருக்கும்.
    'நினைத்ததை நடத்தியே முடித்தவர்' அவர். இந்த திறமை ஒன்றுக்காகவே அவரை மறக்க முடியாது.
    அவரின் தத்துவ பாடல்களில் வரும் சில வரிகளை அப்படியே நடத்தி காட்டியவர். அதில் என்னால் மறக்க முடியாதது 'உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்', 'தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா!', 'கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தரவேண்டும், உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உலகம் அழ வேண்டும்'. உலகத்தை அழ வைத்தாரோ இல்லையோ, அவர் உடல் நிலை சரி இல்லாதபோது தமிழகமே அழுதது.
    எல்லாவற்றையும் விட அவர் தோற்றத்தில் அப்படி ஒரு வசீகரம். 'எங்கே அவள், என்றே மனம்' இந்த பாடலின் காட்சியில் அவர் white and white suit அணிந்து கொண்டிருப்பார். என்னை பொறுத்தவரை இந்த உடை வேறு எந்த ஒரு நடிகருக்கும் இந்த அளவு பொருந்தி இருக்குமா என்பது சந்தேகம் தான். இதற்காகவே நான் இந்த பாடல் காட்சியை பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன்.

    எனக்கு ரபியை விட கிஷோர் குமார் தான் மிகவும் பிடித்த பாடகர். இருந்தாலும் ரபி பாடிய சில பாடல்களை மிகவும் ரசிப்பேன். 'teri bindhiya re', 'khoya khoya chaand', 'dil pukare', 'tere mere sapne' போன்ற இந்த பாடல்களுக்காகவே இவரை மறக்க முடியாது. எனக்கு தெரிந்து நிறைய பேருக்கு ரபியை மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  15. M.G.R மக்களால் எப்போதும் மறக்கமுடியாதவர்..

    பதிலளிநீக்கு
  16. எம்ஜிஆர் நினைவு நாளா? (எதற்கும் கேட்டு வைக்கிறேன்; பிறந்தநாள் என்று பின்னூட்டம் போட்டுவிடக்கூடாதே?) அவருடைய அரசியலை மறந்து சினிமாவை மட்டும் நினைத்து மகிழ ஒரு வாய்ப்பு. தமிழ்நாட்டு சாணக்கியன்.

    பானுமதி ராமகிருஷ்ணா இறந்த செய்தியில் வருத்தம். ரங்கோன் ராதா படம் சமீபத்தில் பார்த்தேன்; சிவாஜி அட்டகாசம் என்றால் சிவாஜியை அப்படி உருட்டி உள்ளங்கையில் வைத்து சாப்பிடுகிறார் ஒரு காட்சியில். இவர் படங்கள் அதிகம் பார்க்கவில்லையே என்று தோன்றியது.

    டிசம்பர் 24ம் தேதி சாவதற்கு உகந்த நாள் போலிருக்கிறதே? பாருங்கள், எருமைக் கன்னுக்குட்டி கூட வாகனத்துக்குச் சொந்தக்காரரைத் தேடிப் போயிருக்கிறதே?

    பதிலளிநீக்கு
  17. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானம்பாடிகள்,

    வாங்க தமிழ் உதயம், ரஃபி தேன் குரலுக்கு சொந்தக்காரர். தெரிந்தெடுத்துக் கேட்டால் நிறைய ரசிக்கலாம்.

    நன்றி எல்கே,

    நன்றி விஜய்,

    சிவகுமாரன், சந்தேகமே வேண்டாம் ஹிந்தி தான் ஒரிஜினல். அதற்கு நேஷனல் அவார்ட் வாங்கினார் ரஃபி. நிறைய பாடல்கள் ஹிந்தியிலிருந்து இங்கு இறக்கப் பட்டுள்ளன. ரஃபி பாடலிலேயே இன்னொரு உதாரணம் தில் புகாரே ஆரே ஆரே ஆரே.. தமிழில் 'நானத்தாலே கன்னம் மெல்ல மெல்ல..' பானுமதி நினைவுநாள் பற்றி சொன்னதற்கு நன்றி.

    வருக geetha santhanam, அந்த உணர்வு தமிழக மக்கள் பெரும்பாலானோருக்கு உண்டு!

    நன்றி பத்மநாபன்,

    உண்மைதான் ஆதி, ஆனால் சென்ற புதன் கிழமை டிவியில் சித்ரஹார் பார்த்துக் கொண்டிருந்தபோது ரஃபி பிறந்த நாள் பற்றி அறிந்து, வெள்ளி டிவிக்களில் எம் ஜி ஆர் பற்றி அறிந்து இடப்பட்ட இடுகை இது...மேலும் இரண்டுமே சினிமா சம்பந்தப் பட்டதும் கூட...!

    சாய், உங்கள் இந்த அனுபவத்தை சொல்லியிருக்கிறேர்கள்,

    நன்றி குரோம்பேட்டை குறும்பன்,

    நன்றி அ.அ.,

    வருகைக்கு நன்றி வல்லிசிம்ஹன், நீங்கள் சொன்ன பாடல்களும் இன்னும் நிறைய ரஃபி பாடல்களும் ஸ்டாக் இருக்கிறது! கேட்கத் தெவிட்டாது.

    நன்றி மீனாக்ஷி, எனக்கும் கிஷோர் இன்னும் ரொம்...பப் பிடிக்கும்.

    நன்றி பாபு,

    வருகைக்கு நன்றி அப்பாதுரை, பானுமதி திரையுலகில் ஆளுமை மிகுந்தவர் என்று படித்திருக்கிறேன். அறிவு ஜீவி. நாடோடி மன்னன் என்று படித்ததாக ஞாபகம். அந்தப் படத்தின் படப்பிடிப்பில் முந்தைய படங்களில் பத்தோடு பதினொன்றாக நடித்த எம் ஜி ஆரோடு ஜோடியாக நடிக்க ஒத்துக் கொண்டாலும் பானுமதி சில சிக்கல்கள் தர, எம் ஜி ஆர் மிகுந்த ஆலோசனைக்குப் பின் அவரை இடைவேளைக்குப் பின் 'படமாக்கி' விட்டாராம்!

    பதிலளிநீக்கு
  18. //சாய், உங்கள் இந்த அனுபவத்தை சொல்லியிருக்கிறேர்கள்,//

    வயசு ஆனதால் பேசியதையே பேசிக்கொண்டு இருக்கின்றேன் என்று நினைக்கின்றேன் !! எருமைக்குட்டியை எடுத்துசென்ற எமனிடம் போகும் வேளை வந்துவிட்டது போலிருக்கு !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!