"வாங்க எ சா! மும்பை கிரிக்கட் கிரவுண்டில் ரொம்ப அடிச்சுட்டாங்களாமே? அப்படியா? ஏன் எங்க டிபார்ட்மெண்டில் புகார் கொடுக்கவில்லை? கொடுத்திருந்தா உங்களை அடிச்சவங்களைக் கண்டுபிடித்து, முட்டிக்கு முட்டி தட்டி இருப்போமே!"
"ரொம்ப சிம்பிள் லாஜிக். நான் 'RAVANADESAM' அணி வெற்றி பெறும் என்று எழுதிக் கொடுத்திருந்தேன். அதை இந்தக் குரங்கு (வேறு யாரு? சோபனாதான்!) எங்கள் ப்ளாக் ல போட்டுடுச்சு. சும்மா விடுவாங்களா - அகில உலக இந்திய கிரிக்கட் அரைகுறை ரசிகர் கூட்டம்? லாடம் கட்டி அடிச்சுட்டாங்க! ஆனால் என்ன? - என்னை அடிச்சவங்க எல்லோரும் இந்திய அணி வெற்றி பெறவேண்டும் என்று வெறி கொண்டவர்கள். நான் கூறி இருந்ததும் இந்திய அணி வெற்றி பெறும் என்பதைத்தான்.
"நாந்தான் இந்திய அணி வெற்றி பெற்ற மறு நிமிடமே, நீங்க சொன்னதன் அர்த்தத்தை எங்கள் ப்ளாக் ல போட்டேனே சாமி!" என்றார் சோபனா!
"நான் புகார் கொடுத்தாலும் நீங்க பிடிச்சா முட்டிக்கு முட்டி தட்டு படப் போறது, இந்திய அணி ஆதரவு ரசிகர்கள்தான்! அதனால நான் புகார் கொடுக்கவில்லை. மேலும் அதே ரசிகர்கள்தான் என்னை மறுநாள் ஆஸ்பத்திரியில் சேர்த்தவர்கள்!
"எந்த ஆஸ்பத்திரியில்? பைத்தியகார ஆஸ்பத்திரியிலா?" என்று கேட்டு சிரித்தார் சோபனா.
"ஆமாம் இப்போ சிரி! அப்போ முதல் பதிவில் என்னை மாட்டி விட்டவள் நீதானே!"
"சரி சரி - சண்டை முடித்து சமாதானமா போங்க! இந்த வெடி குண்டு கேஸ்ல நீங்க யாரையாவது விசாரணை செய்யவேண்டுமா?" என்று கேட்டார் ரங்கன்.
"ரங்கன் சார்! போக்குவரத்துக் காவலர் பொன்னுசாமியை 'டூட்டி' முடிந்ததும் இங்கே வந்து போகச் சொல்லுங்க."
"சரிம்மா. ஆனால் அவர் சொன்னது எல்லாவற்றையும் என்னுடைய செல்லில் வீடியோ எடுத்து வைத்திருக்கின்றேன். அதோடு குண்டு வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் அப்படியே சிதறிய பொருட்களையும், சிதிலமான கார் பாகங்களையும் ஃபோட்டோவும், வீடியோவும் எடுத்து வைத்துள்ளேன். எல்லாவற்றின் காப்பியும் இதோ இந்த பென் டிரைவில் இருக்கு. இதை எல்லாம் பார்த்தால் பிறகு பொன்னுசாமியை பார்க்க வேண்டியதே அவசியம் இருக்காது."
"சோணகிரி சார் - பென் டிரைவில் இருப்பதை அப்படியே நாம் ஹார்ட் டிரைவுக்குக் காபி செய்துகொண்டுவிட்டு பென் டிரைவை ரங்கன் சார் கிட்ட திருப்பிக் குடுங்க."
"அப்படி என்றால் பொன்னுசாமியை இங்கே பார்க்கவேண்டும் என்கிற அவசியம் இல்லைதானே சோபனா?"
"சார். நீங்க போலீஸ்காரர். போலீஸ் விசாரணை செய்யும்பொழுது, யாராக இருந்தாலும் ரொம்ப எச்சரிக்கை உணர்வோடு, அளவோடுதான் பதில் சொல்லுவார்கள். எங்கேயாவது கொஞ்சம் அதிகமாக எதையாவது சொன்னால் நீங்க விட்டு விடுவீங்களா? கோர்ட், கேஸ், சாட்சி, குறுக்கு விசாரணை, நெடுக்கு விசாரணை என்று இழுத்து அவரை நொந்து நூடுல்ஸ் ஆக்கி விடுவீர்கள். மேலும் போலீஸ்காரர்கள் பெரும்பாலும் வண்டியில் பூட்டப்பட்ட குதிரை மாதிரி, Blinkers கட்டிக் கொண்டு செயல்படுபவர்கள். யாரேனும் ஒருவரை சந்தேகிக்கின்றீர்கள் என்றால், அந்த திசையிலேயே பெரும்பாலும் விசாரணை வண்டியை ஓட்டுவீர்கள். நடுவிலே அசல் குற்றவாளியே வந்து நின்றுகொண்டு, லிப்ட் கேட்டால் கூட வண்டியை நிறுத்தமாட்டீர்கள். அதனால பொன்னுசாமியை நாங்க பார்த்து, கொஞ்சம் கேள்விகள் மட்டும் கேட்டுவிட்டு, அனுப்பிடறோம். நீங்க வழக்கம் போல உங்க ஆபீசில் இருந்துகொண்டு, இங்கே நடப்பது எல்லாவற்றையும் வெப் காம் மூலமாக உங்கள் கம்பியூட்டரில் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருங்கள். பிறகு நீங்க என்ன சொல்லணுமோ அதை சொல்லுங்க."
"சரிம்மா சோபனா. உங்க யாருக்காவது இன்றைக்கு நான் பெயில் எடுக்க வேண்டிய அவசியம் இருக்குமா?"
"ஆமாம் ரங்கன் சார். சம்பவம் நடந்தது எத்தனை மணிக்கு?"
"நேற்று இரவு ஏழு மணி சுமாருக்கு. "
"அதே நேரத்தில் இன்று இரவு நாங்கள் அங்கே சென்று பார்ப்போம். எங்களைப் பற்றி உங்க அலுவலகத்தில் யாராவது புகார் பதிவு செய்தால், எங்களுக்கு பெயில் கொடுக்கத் தயாரா இருங்க."
"நாங்க அந்த இடத்தில் இருந்தவைகள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி ஃபோரன்சிக் லாபுக்கு அனுப்பிவிட்டு அந்த இடத்தில் மேப் வரைந்து வைத்திருக்கின்றோம். அங்கே போயி நீங்க என்ன ஸ்டடி செய்துவிடப் போகின்றீர்கள்?"
"சார் காரினுடைய நம்பர் ப்ளேட், சாசி ரெநிவல் ப்ளேட் - ஏதாவது கிடைத்ததா?"
"நம்பர் ப்ளேட் என்ன - நம்பரே என்ன என்று பொன்னுசாமி சொல்லுவார். ரெநுவல் ப்ளேட் உருகி போய் தாயத்து மாதிரி இருந்தது. சரி இதை எல்லாம் தேடித்தான் அங்கே போகப்போறீங்களா?"
"இல்லை சார். Gemba பற்றிக் கேள்விப் பட்டிருக்கீங்கதானே? அதுதான் இது."
"ஓ? Gemba வா? அது எனக்குத் தெரியும் சாமிக்குத் தெரியுமா என்று கேளு சோபனா!"
"எனக்கு ரம்பாதான் தெரியும். போன மாதம் அப்பாதுரை புண்ணியத்தில் பூனம் பாண்டே பத்தி தெரிந்துகொண்டேன். ஆனா அவரெல்லாம் ரம்பாவுக்குப் பக்கத்தில் கூட வரமுடியாது" என்றார் எ சாமியார்!
(தொடரும்)
நீலக் கமெண்ட்: Gemba பற்றி எல்லாம் நாங்க ஒண்ணும் கேள்வி கேட்பதாக இல்லை. அதனால் வாசகர்கள் Gemba பற்றி கூகிளிட்டுப் பார்த்து அதை இங்கே கருத்து உரைக்க வேண்டாம். அப்படிக் கருத்துப் பதிவு பண்ணினாலும் மற்ற வாசகர்கள் அதைப் படிக்கவேண்டாம் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்! (௦சோடா, சோடா!)
மெண்ட்: Gemba பற்றி எல்லாம் நாங்க ஒண்ணும் கேள்வி கேட்பதாக இல்லை. அதனால் வாசகர்கள் Gemba பற்றி கூகிளிட்டுப் பார்த்து அதை இங்கே கருத்து உரைக்க வேண்டாம். அப்படிக் கருத்துப் பதிவு பண்ணினாலும் மற்ற வாசகர்கள் அதைப் படிக்கவேண்டாம் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்! (௦சோடா, சோடா!)
பதிலளிநீக்கு....பில்ட் அப்பு..... பில்ட் அப்பு.... :-)))))
அப்பாதுரையை ரம்பாவுக்குப் பக்கத்தில் வரமுடியாது என்று சொல்ல எலக் சாமிக்கு என்ன அதிகாரம்? க்ரிகெட் ரசிகர்களை இவரை இன்னும் நையப் போட்டுத் தள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பதிலளிநீக்குஅப்பாதுரை கோவிச்சுக்காதீங்க - நான் சொன்னது பூனம் பாண்டே - எந்த அம்சத்திலும் ரம்பா பக்கத்தில் கூட வரமுடியாது என்று! என்னுடைய குருநாதர் நீங்க உங்களை எல்லாம் அப்பிடி சொல்வேனா!
பதிலளிநீக்குநீங்க இப்படி சொல்லும்போதே தெரியுது, Gemba ஏதோ பெரிய வம்பாதான் வரப்போகுதுன்னு. சீக்கிரம் சொல்லிடுங்க. இங்கேயும் ஏற்கெனவே வெயில் மண்டைய பொளக்குது.
பதிலளிநீக்குinteresting....
பதிலளிநீக்குசரி ....சொல்லல.சோடா தாங்க.இனிப்பு சோடாவாத் தரணும் !
பதிலளிநீக்குGemba பற்றி எல்லாம் நாங்க ஒண்ணும் கேள்வி கேட்பதாக இல்லை. //
பதிலளிநீக்குNice.