ஞாயிறு, 22 மே, 2011

ஞாயிறு - 98


23 கருத்துகள்:

  1. நங்கநல்லூர் ரங்கா தியேடரில் மதிய ஷோ தில்லானா மோகனாம்பாள். மொத்தம் ஐந்து பேரோ என்னவோ சிதறி உட்கார்ந்திருந்தோம். படம் தொடங்குமுன் தியேடர்காரர் வந்து, "எல்லாரும் ஒண்ணா ஒக்காருங்க சார், சேத்து fan போடுறோம்.. இல்லின்னா ஆளாளுக்கு fan போட முடியாதுங்க" என்றார்.

    பதிலளிநீக்கு
  2. கோடையின் வெம்மைக்கு இதமாக , பதமான பச்சை பசேல்...

    பதிலளிநீக்கு
  3. அப்பாதுரை சார்! ரங்கா தியேட்டருக்குப் பக்கத்தில் இருந்த ரவி அரவை நிலையம் சொந்தக்காரர் (என்னுடைய சொந்தக்காரரும் கூட) பார்த்து பேசிக் கொண்டிருந்து விட்டு , ரங்கா தியேட்டரில் தில்லானா மோகனாம்பாள் படத்தைப் பார்க்க நானும் அன்று வந்திருந்தேன். நீங்கள் சொன்னது சரிதான். தியேட்டர்காரர் வந்து கேட்டார், எல்லோரும் ஒரே இடத்தில் உட்கார வேண்டும் என்று. ஆனால் நீங்க நெருங்கி உட்கார மறுத்ததுடன் - தியேட்டர்காரரிடம் ஒரு fan மட்டும் போட்டு ஓட்டினால், டிக்கெட் பணத்தில் பாதிப் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஒரே போடாகப் போட்டதையும் கேட்ட ஞாபகம்!

    பதிலளிநீக்கு
  4. 'எங்கள்' ஆசிரியர் குழுவோ..?

    ஜூன் ஐந்திற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. // Madhavan Srinivasagopalan said...
    'எங்கள்' ஆசிரியர் குழுவோ..?

    ஜூன் ஐந்திற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..//

    இவர்களில் தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கின்றார்களா என்பதே சந்தேகம். அப்படி இருக்கையில், இவர்களில் யாராவது தமிழ் எழுதத் தெரிந்தவர்கள் இருப்பார்களா என்ன?

    ஜூன் ஐந்தா? எங்கள் பிறந்த தேதி ஜூன் இருபத்தெட்டு!

    பதிலளிநீக்கு
  6. ஆமா, புல்தரை ஏன் இப்படி அங்கங்கே மேடு மேடா எழும்பியிருக்கு? இதிலே lawn mover-ஐ எப்படி ஓட்டுவாங்க? கஷ்டம் இல்லே? உக்கார, நடக்கக்கூட சவாலாத்தான் இருக்கும். யாராவது வாக்கிங் போறேன்னு வந்தா, பேய்முழி முழிச்சுட்டு நிப்பாங்க. உக்காந்திருக்கவங்களும் பார்க்ல விளையாடலாம்னு வந்தவங்கதானோ?

    ஆனா, ஒவ்வொரு மேட்டிலயும் பார்டர் வச்சா மாதிரி ஒரு காஞ்ச இலை விழுந்து கிடக்கறது அழகாருக்கு.

    பதிலளிநீக்கு
  7. சொல்ல மறந்துவிட்டோம்! இது எங்கள் 750 ஆவது பதிவு.

    பதிலளிநீக்கு
  8. எல்லாரையும் எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே !

    750 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.
    தொடருங்கள்...தொடர்கிறோம் !

    பதிலளிநீக்கு
  9. ஆ! ரவி அரவை நிலையமா? தியேடர் தெருக்கோடியில் ஒரு வீட்டில் வைஜயந்திமாலா (மாதிரி - அப்படீன்னு என் ப்ரன்ட் சொல்வான்) இருப்பாங்களே, அந்த வீடா?

    பதிலளிநீக்கு
  10. 750 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.
    Super Sunday.அருமை.

    பதிலளிநீக்கு
  11. // அப்பாதுரை said...
    ஆ! ரவி அரவை நிலையமா? தியேடர் தெருக்கோடியில் ஒரு வீட்டில் வைஜயந்திமாலா (மாதிரி - அப்படீன்னு என் ப்ரன்ட் சொல்வான்) இருப்பாங்களே, அந்த வீடா?//

    ரவி அரவை நிலையத்திற்கு இடது பக்க வீட்டில் ஒரு 'வத்த மிளகா' தான் பார்த்த ஞாபகம். வைஜயந்தி மாலா யாரும் கிடையாது. இன்னொரு பக்கம் வேறு ஒரு கடை இருந்ததாக ஞாபகம்!

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள். ஆயிரம் காண்க!

    பதிலளிநீக்கு
  13. நானும் அரைச்சு அரைச்சு பாக்குறேன் - ரவி அரவை நிலையம் நினைவுக்கு வரமாட்டேங்குதே! ராஜேஸ்வரி கோவில் பக்கம் ஒரு வத்த மிளகாய் எனக்கு ரொம்ப ப்ரெண்டு சார்.

    பதிலளிநீக்கு
  14. //ஜூன் ஐந்தா? எங்கள் பிறந்த தேதி ஜூன் இருபத்தெட்டு! //

    என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ஜூன் ஐந்திற்கே..
    எதற்கு தெரியவில்லையா அல்லது நடிக்கிறீர்களா ..?

    ஜூன் இருபத்தெட்டிற்கு -- தனி வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  15. ரவி அரவை நிலையத்தில் பணி செய்து கொண்டிருந்த பணியாளர் (பெயர் மணி?) தீவிர எம் ஜி யார் ரசிகர். ரங்கா தியேட்டரில் எம் ஜி யார் படம் வந்தால் - 'ஓய்! எம் ஜி யார் படம் போட்டிருக்கான் ஓய்! நான் பார்க்கணும் ஓய்!' என்று சொல்லி மாலை பெர்மிஷன் பெற்றுக் கொண்டு, படத்திற்குச் சென்றுவிடுவார். அப்போ மாவரைக்கும் மிஷினை என்னுடைய சொந்தக்காரரே கையாள வேண்டியது இருக்கும்! ரவி அரவை நிலையத்திலிருந்து ஐம்பது அடி நடந்து இடது புறம திரும்பினால் ரங்கா தியேட்டர் என்று ஞாபகம்.

    பதிலளிநீக்கு
  16. 750க்கு வாழ்த்துக்கள்..பல்லாயிரமாக பல்கி பெருக வாழ்த்துக்கள்

    //ஜூன் ஐந்திற்கே // நூறாம் ஞாயிறுக்கும் முன் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. கௌதமன் சார் மற்றும் துரை - தில்லானா மோகனாம்பாள் / வைஜயந்திமாலா பாலி என்று நீங்கள் 1800 கதை பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள் !! எனக்கு தெரிந்து நங்கநல்லூரில் கொசுவை தவிர ஒன்றும் நினைவுக்கு வருவதில்லை !

    பதிலளிநீக்கு
  18. 750 ஆவது பதிவிற்கு வாழ்த்து தெரிவித்த எல்லோருக்கும் எங்கள் நன்றி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!