ஜோதிடம் தெரிந்த நண்பர் ஒருவர் தொலைபேசினார். 'அட்சய திரிதியைக்கு ஒன்றும் வாங்கவில்லையா?' என்று கேட்டார்.
'யாரு அது? திரிஷாவின் தங்கச்சியா? அவருக்கு நாங்கள் என்ன வாங்குவது?' என்று கேட்டோம்.
'நெசமாவே உங்களுக்கு அட்சய திரிதியைப் பற்றி ஒன்றும் தெரியாதா? அல்லது நடிக்கிறீர்களா?' என்று கேட்டார்.
'உங்களுக்கு அட்சய திரிதியைப் பற்றி எவ்வளவு வருடங்களாகத் தெரியும்?'
'எனக்கா? எனக்கு பத்து வருடங்களாகத்தான் தெரியும்.'
'எப்படித் தெரியும்?'
'டி வி சானல்களில் பார்த்துத்தான் தெரியும்.'
'டி வி சானல்களில் யார் அதிகம் இது பற்றி பேசுகிறார்கள்?'
'ஜோதிடர்கள்'
'அதுதான் சமாச்சாரம்! சிலர் வாங்கினால் நல்லது என்கிறார்கள். சிலர் தானம் கொடுத்தால் நல்லது என்கிறார்கள். அதனால் நான் தானம் வாங்கிக்கொள்வது என்று முடிவு செய்துவிட்டேன்! நீ ஏதாவது எனக்குத் தருகிறாயா?'
'ஓ? அப்படி வருகிறாயா? சரி. இலவசமாக உனக்கு ஒரு ஐடியா மட்டும் தருகின்றேன். அதைச் செய். இன்றைக்கு மே ஐந்தாம்தேதி. வருடம், மாதம் தேதி கூட்டுத் தொகை கூட ஐந்து வருகிறது. இன்றைக்கு, கூட்டுத் தொகை ஐந்து வருகின்ற மணி / நிமிட சமயத்தில் ஒரு பதிவு போடு. எங்கள் ப்ளாக் நியூமராலாஜி ஐந்து, ஐந்து ஆசிரியர்கள். இப்படி ஒரே ஐந்து மயமாக இருப்பதால், இந்த அட்சய திரிதையில் நான் சொன்ன மாதிரி ஒரு பதிவு போட்டால், அடுத்த அட்சய திரிதயைக்குள் உங்கள் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை பல மடங்குகள் அதிகரிக்கும். இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் இடுபவர்கள் அடுத்த அட்சய திருதியைக்குள் அதிகப் பிரபலம் அடைவார்கள்.'
'இது என்னப்பா! மூர் மார்க்கெட் பிளாட்ஃபாரத்தில் விற்கிற மருந்து வியாபாரி மாதிரி ஏதேதோ சொல்லிகிட்டே போறே!'
'ப்ளாக் எழுதிப் போட்டுவிடுகிறாயா?'
'சரி - போடுகிறேன். ஒரு சின்ன சந்தேகம். பதிவு எழுதாவிட்டால் என்ன ஆகும்?'
' #$#$%% ^%^%$$# **(&^) @ !! ?? << "_+<, !! '
'சரி சரி பதிவு எழுதிவிடுகிறேன், ஆளை விடு'
***** ******
மனைவி: என்னங்க, அட்சய திரிதியைக்கு எதையாவது வாங்கியே ஆகணுமாம். டிரைவர் இன்றைக்கு லீவு. காரை நீங்களே ஓட்டி என்னை தி நகர்ல கொண்டுபோய் விடுங்க!
கணவன்: எதையாவது வாங்கியே ஆகணும் என்று சொல்லிச் சொல்லி, ஏன் என் உயிரை வாங்குறே?'
***** *****
விற்பவர்களா இருந்தா சந்தோஷப்படலாம். வாங்குபவர்களா இருந்தா கஷ்டப்படலாம்.
பதிலளிநீக்குஅட்சய திரிதியை அன்று அன்ன தானமே சிறந்தது.
பதிலளிநீக்குஎன்னால் ஆரம்பிக்கப்பட்டு என்று பல நண்பர்களுடன் இணைந்து ஆதரவற்ற, ஊனமுற்றவர்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக அட்சய திரிதியை அன்று அன்ன தானம் செய்து வருகிறோம்.
விஜய்
Well done (doing) vijay...
பதிலளிநீக்குவிஜய் சார். மிகவும் நல்ல விஷயம். தொடர்ந்து செய்யுங்கள். எங்கள் உதவி எந்த வகையிலாவது வேண்டும் என்றால், எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
பதிலளிநீக்குhahaha sriviji
பதிலளிநீக்குஅட்சய திருதியை சமிப காலத்தில் ஆரம்பித்த வியாபார யுக்தி... அவரவர் நம்பிக்கை..
பதிலளிநீக்குவிஜய் அவர்களது செயல் பாராட்டுக்குரியது..
இது போல் ஒரு காரணம் வைத்துக் கொண்டு முடிந்ததை கல்விக்கு உதவி செய்யலாம்..
உண்மையில் தேவைப்பட்டு அதே சமயத்தில் கஷ்டபடுபவர்களுக்கு செய்யும் உதவி கண்டிப்பாக பல மடங்கு நன்மையும் திருப்தியும் தரும் அ.திருதியை நாள் என்று மட்டும் இல்லை எல்லா நாளும் தான்.
அட்சய திருதியை வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகாயலாங்கடைக்காரந்தான் அட்சயதிரிதியைக்கு தள்ளுபடி விற்பனை போடலை:))
பதிலளிநீக்குமனைவி: என்னங்க, அட்சய திரிதியைக்கு எதையாவது வாங்கியே ஆகணுமாம். டிரைவர் இன்றைக்கு லீவு. காரை நீங்களே ஓட்டி என்னை தி நகர்ல கொண்டுபோய் விடுங்க!
பதிலளிநீக்குகணவன்: எதையாவது வாங்கியே ஆகணும் என்று சொல்லிச் சொல்லி, ஏன் என் உயிரை வாங்குறே?'
....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... செம கமென்ட்!
அட்சய திரிதியை கிண்டல் செய்றீங்களா? உங்களுக்குவேணா நம்பிக்கை இல்லாம இருக்கலாம், ஆனா அது நிஜமாவே நல்லதுதான் செய்யுது. சந்தேகம்னா, நகைக்கடை ஒனர்களைக் கேட்டுப்பாருங்க!! :-)))))))))
பதிலளிநீக்கு