புதன், 4 மே, 2011

இன்று பிறந்தவர்!


இந்த நாள்! பிறந்த நாள்!        

இன்று, இவருக்குப் பிறந்த நாள்.

இவர் இவ்வளவு பிரபலமாவார் என்று இவரே எதிர்பார்த்திருக்கமாட்டார்.
அந்த அளவுக்கு இவருடைய படங்களும் பாடல்களும் உலக அளவில் மிகவும் பிரபலம்.

இவருக்கு தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் பெரும் இரசிகர் கூட்டம் உள்ளது.

இவருக்கு ஒல்லியான உருவம். ஸ்லிம் என்ற ஒற்றைச் சொல் இவரைத்தான் குறிக்கும் என்றால் அது மிகையாகாது!

இவருடைய பிறந்த ஆண்டில் உள்ள நான்கு எண்களின் கூட்டுத் தொகை இருபத்து ஒன்று. இருபத்து ஒன்று என்ற எண்ணே எவ்வளவு கவர்ச்சியானது! இவருடைய வாழ்க்கையில் இருபத்தொரு வருட சாதனை ஒன்று உள்ளது.

இவருடைய படங்களை எங்கள் வாசகர்கள் நிறைய பேர் நிச்சயம் பார்த்திருப்பார்கள்.

இவர் பெயர் ஆங்கில எழுத்து T என்ற எழுத்தில் தொடங்கி, A என்ற எழுத்தில் முடியும்.

இவர் யார் என்ற சரியான பதிலை பதிபவர்களுக்கு பாயிண்டுகள் அளிக்க நாங்கள் தயார். பாயிண்டுகள் பெற நீங்க தயாரா?
         

15 கருத்துகள்:

  1. அவருடைய கவர்ச்சிப் படத்தையும் போட்டிருந்தால் சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவேன்!

    பதிலளிநீக்கு
  2. பாடல்கள்ன்னு போட்டு தியாகராஜா வரை சுத்தவிட்டுட்டிங்க... சரி ஆள் யாருன்னு தெரிஞ்சிரிச்சு...சாதனை என்னன்னு சொல்லிருங்க....

    பதிலளிநீக்கு
  3. யோசித்து கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா4 மே, 2011 அன்று 12:26 PM

    அவங்களுக்கு என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. தியாகராஜா - நன்றி

    http://holidayyear.com/birthdays.php

    சுட்டெடுக்க நெட்டு இருக்க கவலை ஏன் மகனே. கடவுளுக்கே எதுவும் தெரியவில்லை என்றால் "கூகிள்" ல தேடுகின்றாரம் நான் எம்மாத்திரம் !!

    லொள்ளு சாய்

    பதிலளிநீக்கு
  6. விஜய் / மோகன்குமார் - தம்மன்னா / த்ரிஷா ? அவர்களுக்கு இருபத்தொரு வயதே ஆகவில்லை (நொந்து போய்டுவாங்க !) - அவர்கள் எப்படி அத்தனை வருட சாதனை செய்யமுடியும்.

    பதிலளிநீக்கு
  7. திரிஷா என்று சொன்னவர்களுக்கு நூறு பாயிண்டுகளும், தியாகராஜா என்று சொன்னவர்களுக்கு ஐநூறு பாயிண்டுகளும் அளிக்கப்படுகின்றது. இவர்களின் இருபத்தொன்று சம்பந்தப்பட்ட சாதனை என்ன என்று சொல்பவர்களுக்கு முறையே இருநூறு / ஆயிரம் பாயிண்டுகள் அளிக்கப்படும்.

    பதிலளிநீக்கு
  8. விஜய் சார் - இரண்டு பேர் பிறந்த வருடங்களின் கூட்டுத் தொகையும் இருபத்தொன்று என்று பதிவிலேயே எழுதியிருக்கின்றோம். இரண்டு 'தி'களின் வாழ்க்கையில், இருபத்தொன்றின் சாதனை என்ன என்பதுதான் கேள்வி.

    பதிலளிநீக்கு
  9. google ஆண்டவர் உபயம்

    http://rajunaryanaswamy.blogspot.com/2010/08/saint-thyagaraj.html

    //Thyagaraja was constantly repeating the Rama Shadakshari mantra over 21 years and he completed in 1808 chanting 96 crores of Rama Nama.//

    பதிலளிநீக்கு
  10. பாலராஜன்கீதா அவர்களுக்கு ஆயிரம் பாயிண்டுகள் கொடுத்துட்டோம். திரிஷா பற்றி யாரும் விக்கிபீடியா பார்க்கவில்லையா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!