சனி, 21 ஜனவரி, 2012

உள் பெட்டியிலிருந்து 1 2012

       
இரண்டில் ஒன்று !
   
ரோடில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டும் ஒரு நூறு ரூபாய் நோட்டும் கிடக்கிறது. எதை எடுப்பாய்...?

"நிச்சயம் ஐநூறு ரூபாய் நோட்டைத்தான்..."

"முட்டாளே! ஏன்? இரண்டையும் எடுக்கக் கூடாது என்று யாராவது சொன்னார்களா?"
-----------------------------------------------------------

அரை மனிதன்! 

குருட்டுப் பெண் எல்லோருக்கும் இனிப்பு கொடுத்துக் கொண்டிருந்தாள். அவள் கண் தெரியாதவள் என்று அறிந்திருந்த மாணவன் ஆடை இல்லாமல் குளியறையிலிருந்து வந்து இனிப்பை எடுத்துக் கொண்டான்.
      
"என்ன விஷயம்...? எதற்கு ஸ்வீட்?"    
    
"எனக்குக் கண் கிடைத்து விட்டது"
-----------------------------------------------------------

கோன் பனேகா குரோர்பதி?
  
'நீ ஒரு கோடீஸ்வரன் ஆனால்..' என்ற தலைப்பில் உளமார யோசித்து ஒரு கட்டுரை எழுதச் சொன்னார் ஆசிரியர்.

எல்லோரும் எழுதத் துவங்க, ஒரு மாணவன் மட்டும் சும்மா இருந்தான். ஆசிரியர் காரணம் கேட்டார்.
   
"என்னுடய காரியதரிசிக்காகக் காத்திருக்கிறேன் அய்யா..."  
----------------------------------------------------

இருள் கணங்கள்

வாழ்வில் நாம் எல்லாவற்றையும் விட மேலாக நினைக்கும் சிலரது வாழ்வில் நாம் ஒரு வந்து செல்லும் விருந்தாளி போலத்தான் என்று அவ்வப்போது நிரூபிக்கும் தருணங்கள்.

எனக்காக கவலைப் பட நிறைய இதயங்கள் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் வாழ்க்கை பெரும்பாலும் அதை என் கற்பனை என்றே நிரூபிக்கிறது. 
-----------------------------------------------------------
   
 தத்துபித்துவம்
 
எதை இழக்கிறோம் என்று வருந்துவதை விட, எதை விட்டுச் செல்கிறோம் என்பது முக்கியம்.
-----------------------------------------------------------

நட்பு என்பது ....

எப்படி மறக்கிறோம் என்பதல்ல, எப்படி மன்னிக்கிறோம் என்பதில்
(முன்பு வந்தது : துரோகத்தை மன்னித்து விடு. ஆனால் மறக்காதே)

எப்படி கேட்கிறோம் என்பதில் அல்ல, எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதில்  
(முன்பு வந்தது : நான் சொல்வதற்குத்தான் நான் பொறுப்பு. நீங்கள் புரிந்து கொள்வதற்கல்ல)

எப்படிப் பார்க்கிறோம் என்பதில் அல்ல, எதை உணர்கிறோம் என்பதில்,

எப்படி நழுவ விடுகிறோம் என்பதில் அல்ல, எப்படி தக்க வைத்துக் கொள்கிறோம் என்பதில்.
 -----------------------------------------------------------
  
ஆயுள் தண்டனை 

அன்பை சொல்லி விட ஒரு நிமிடம் போதும் ஆனால் அதை நிரூபிக்க ஒரு வாழ்க்கை காலம் வேண்டும்.
 -----------------------------------------------------------
       
சந்தோஷம் வேண்டுமா

அருகில் இல்லாத மூன்றாவது மனிதர்களைப் பற்றி பேசவோ நினைக்கவோ கூடாது. அதே சமயம் அந்த மூன்றாவது நபர்கள் நம்மைப் பற்றி என்ன பேசுவார்கள், நினைப்பார்கள் என்று எண்ணவும் கூடாது.
-----------------------------------------------------------

சூஸ் த பெஸ்ட்./ ஆப்ஷன் உங்கள் சாய்ஸ் 

காலையில் உங்களுக்கு இரண்டு வாய்ப்பு.
தொடர்ந்து தூங்கிக் 
கனவைத் தொடர்வது
அல்லது எழுந்து கனவைத் 
துரத்துவது...  

-----------------------------------------------------------

தனிமையில் இனிமை 

பலருக்கு நடுவில் இருந்தாலும் 
தனியாக இருப்பது 
போல் உணர்ந்த பிறகு
தனிமை
சோகம் தரவில்லை
சுகம்தான் தருகிறது.   
-----------------------------------------------------------

உறவுடைப்பு

பொய்கள் உறவைக் காக்கின்றன. உண்மைகளோ உறவை  உடைக்கின்றன.   
========================   
              

13 கருத்துகள்:

  1. குருட்டுப் பெண் சூப்பர்;)
    உண்மைதான் சில பல பொய்கள் உறவைக் காப்பாற்றுகின்றன.

    பல நேரங்களில் ஹனிமை இனிமை,ஆனால் நட்பு வரும்போது இன்னோரு இனிமை.கவலைப்பட இதயங்கள் இருப்பது உண்மைதான். அவர்கள் இதயமுமிதையே சொல்கிறதோ.

    பதிலளிநீக்கு
  2. தத்துவங்கள் எல்லாமே அருமை. சிந்திக்க வைக்கிற உண்மைகளும் கூட. நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  3. முதலிரண்டும் வாய்விட்டுச் சிரிக்கவும், கடைசி இரண்டும் சிந்தித்து ரசிககவும் வைத்தன. அருமை ஸார்!

    பதிலளிநீக்கு
  4. ஆப்ஷன் உங்கள் சாய்ஸ் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  5. எல்லாமே அருமை.
    அதிலும்,இருள் கணங்கள், நட்பு என்பது,ஆப்ஷன் உங்கள் சாய்ஸ் அகியவை பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல சிந்தனைகள். நன்றாக சிந்திக்க வைக்கிறது - அனைத்துமே.

    பதிலளிநீக்கு
  7. நீதியை நகைச்சுவையாகவும்
    நகைச்சுவையை நீதி போலவும்
    சொன்ன அற்புத பதிவு அருமை

    பதிலளிநீக்கு
  8. உள்பெட்டியில் எல்லா விஷயங்களும் ஒவ்வொன்றைச் சொன்னாலும் தத்துப் பித்துவம்,இருள் தருணங்கள் பதிகிறது மனதில் !

    பதிலளிநீக்கு
  9. 'இருள் தருணங்கள்', 'தனிமை இனிமை' இரண்டும் அருமை.

    பதிலளிநீக்கு
  10. சந்தோஷம் வேண்டுமா

    அருகில் இல்லாத மூன்றாவது மனிதர்களைப் பற்றி பேசவோ நினைக்கவோ கூடாது. அதே சமயம் அந்த மூன்றாவது நபர்கள் நம்மைப் பற்றி என்ன பேசுவார்கள், நினைப்பார்கள் என்று எண்ணவும் கூடாது.//

    உண்மை, பெரும்பாலானவர்கள் செய்வது இதுவே. இதனாலேயே பல மனச்சங்கடங்கள், நட்பு முறிவுகள், சரியான புரிதல் இல்லாமை இத்யாதி இத்யாதி.

    பதிலளிநீக்கு
  11. அருமையான மணமிக்க கதம்ப மாலை
    பயனுள்ள அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி,வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. தத்துவங்கள் எல்லாமே அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!