திங்கள், 3 டிசம்பர், 2012

ஹலோ யார் பேசறது?

"குறையொன்றுமில்லை.... மறைமூர்த்தி கண்ணா..." மேஜை மேலிருந்த செல்ஃபோன் பாடி அழைத்தது. அழைப்பு வந்திருப்பதைச் சொன்னது!
                                                          

ராகவன் சற்று நேரம் அதை எடுப்பதா வேண்டாமா என்று பார்த்துக் கொண்டிருந்து விட்டு, 'ராம கிருஷ்ணன் அழைக்கிறார்' என்னும் திரையைப் பார்த்து விட்டு பட்டனை அமுக்கி,"ஹல்லோ..." என்றான்.

மறு முனைக் குரல் "யார் பேசறது ?" என்று அதட்டியது!

ராகவன் அலைபேசியை முகத்தை விட்டு விலக்கி திரையை ஒருமுறை பார்த்தவன், மறுபடி காதில் வைத்து பொறுமையாக  "நீங்கள் யார் ?" என வினவ, 

                                                

மறு முனை "உங்களுக்கு இந்த அழைப்பு யாரிடமிருந்து வருகிறது என்பது தெரியாதா?" என்றது!
   
ராகவன் அமைதியாக "இந்த ஃபோனில் விடியோ வசதி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே" என்றான்.

மறு முனை " அதில்லை சார், என் கஸ்டமர் ஒருவர் அவர் ஃபோனை இங்கே வைத்து விட்டுப் போய் விட்டார் எனத் தோன்றுகிறது.  அதை பையன் எடுத்துக் கொடுத்தான். உரியவர்களிடம் சேர்க்க நினைத்தேன். அதனால் தான் அதிலிருந்து நண்பர் என்று மார்க் செய்திருக்கும் பெயரில் இந்த நம்பர் இருந்ததால் நான் உங்கள் நம்பரை அழைத்தேன்" என்றார் 

ராகவன் " அட நண்பர்கள் என்றால் இப்படி அல்லவோ இருக்க வேண்டும் !  என்ன ஆச்சரியம் பாருங்கள்! இதுவும் என் கடையில் யாரோ விட்டு விட்டுப் போன ஃபோன் தான். அதனால்தான் நானும் இப்படி எச்சரிக்கையாகப் பேச வேண்டியதாயிற்று!" என்றான்.

     

23 கருத்துகள்:

  1. மனிதராக இருந்தால் இப்படியல்லவா இருக்கவேண்டும்

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா ஹா !!!

    செம சிரிப்பு நண்பா, கடைசியில் இப்படி எதிர்பார்க்கவில்லை.

    ம்ம்ம்ம் கலக்குறீங்க.

    பதிலளிநீக்கு
  3. வித்தியாசமாக இருக்கு சிந்தனை! அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. அட நண்பர்கள் என்றால் இப்படி அல்லவோ இருக்க வேண்டும் !

    பதிலளிநீக்கு
  5. ஃபோனை மறந்து விட்டுட்டுப் போறதுல கூட நண்பர்களுக்குள்ளே என்னவொரு ஒத்துமை:-)))

    பதிலளிநீக்கு
  6. அட! இப்படியெல்லாம் கூட நடக்குதா...

    பதிலளிநீக்கு
  7. கடைசில வைச்சீங்களே ஒரு ட்விஸ்ட்டு . Geetha santhanam

    பதிலளிநீக்கு
  8. ஹல்ல்ல்ல்ல்ல்லோவ்.... யாருங்க இப்படி ரெண்டு பேரும் கலாட்டா பண்றது???

    கேட்டாக்க போனை விட்டுட்டு போயிட்டாங்க அப்டின்னு சொல்றது??

    செம்ம சிரிப்புப்பா...

    பயமா தான் இருக்கு... போன் வந்தால் இனி சர்வ ஜாக்ரதையா இருக்கணும்...

    பதிலளிநீக்கு
  9. வரவர எல்லாரும் கதையில சூப்பர் ட்விஸ்ட் வைக்க ஆரம்பிச்சிட்டாங்க!! இதனாலேயே நான் கதை எழுதும்போது என்ன ட்விஸ்ட் வைக்கறதுன்னு பயங்கரமா யோசிக்க வேண்டியிருக்கு!! :-)))))))

    பதிலளிநீக்கு
  10. நான் வாசித்து முடிய லேபிளைப் பார்த்தேன் !

    பதிலளிநீக்கு
  11. //ராகவன் அமைதியாக "இந்த ஃபோனில் விடியோ வசதி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே" என்றான்.// அருமையான டைமிங் சார்

    //ராகவன் " அட நண்பர்கள் என்றால் இப்படி அல்லவோ இருக்க வேண்டும் ! என்ன ஆச்சரியம் பாருங்கள்! இதுவும் என் கடையில் யாரோ விட்டு விட்டுப் போன ஃபோன் தான். அதனால்தான் நானும் இப்படி எச்சரிக்கையாகப் பேச வேண்டியதாயிற்று!" என்றான்// எனக்கு முதலில் இது புரியவே இல்லை, ஏதோ குழப்புவதாக மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே இருந்தேன்....

    புரிந்ததும் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்... உங்களிடம் பல்ப் வாங்கியதில்.... அருமை சார் :-)

    பதிலளிநீக்கு
  12. எப்படியோ நண்பர்கள் அலைபேசியை தவறவிடுவதிலும் நண்பர்களே. என் புரிதல் சரிதானே ஐயா...

    பதிலளிநீக்கு
  13. இதுக்குத் தான் நாங்க ரெண்டு பேரும் வெளியே போறச்சே செல்போனே எடுத்துட்டுப் போகிறதில்லை. போனாலும், அது கைப்பையிலே உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே எங்கேயோ இருக்கும். வெளியே இருக்கும் சப்தங்களிலே அழைப்பு வந்தாலும் காதிலேயே விழாதுங்கற அளவிலே வைச்சிருப்போம்! இப்போ என்ன சொல்வீங்க? இப்போ என்ன சொல்வீங்க? இப்போ என்ன சொல்வீங்க? :):P:P:P:P

    பதிலளிநீக்கு
  14. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (11/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு:
    http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    பதிலளிநீக்கு
  15. அன்புடையீர்,

    வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/11.html

    பதிலளிநீக்கு
  16. அன்புள்ள ‘எங்கள் ப்ளாக் ‘ K.G.கவுதமன் அவர்களுக்கு வணக்கம்! உங்கள் ப்ளாக்கின் வாசகர்களில் நானும் ஒருவன். இந்த ப்ளாக்கில் ஸ்ரீராம் அடிக்கடி வந்து போவார். உங்கள் இருவருடைய எழுத்துக்களுமே ச்வாரஸ்யம்தான்.

    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அய்யா அவர்கள், தங்களின் வலைத்தளத்தினை இன்றைய (11.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    வலைச்சர இணைப்பு இதோ:
    வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்
    http://blogintamil.blogspot.in/2015/06/11.html

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!