ராகவன் அலுவலகத்திலிருந்து திரும்பும் பொழுது மிகவும் களைத்திருந்தான். சாப்பாட்டுக்குப் பின் அன்றைய தினசரியை புரட்டிக் கொண்டிருந்தவன் அப்படியே தூங்கியும் போனான்.
சற்று நேரத்தில் யாரோ
அப்படியே இறுக்கிப் பிடிப்பது போல் உணர்ந்தான். கண்ணைத் திறந்து யார்
என்று பார்க்க வேண்டும் என்ற முயற்சிகள் பலனளிக்கவில்லை.
அப்பொழுது 'தட தட' என்று ஒரு இனம் கண்டு கொள்ள முடியாத
சப்தம் கேட்டதும் பதட்டத்தில் எழுந்திருக்க, எங்கும் ஒரே கும்மிருட்டு.
பூமி அதிர்ச்சியா இன்னும் வேறு ஏதாவத என்று நிதானிக்கும் முன்னரே அறையின்
ஒரு ஓரத்தில் போய் விழுந்தான்.
சரி, இது அதுவாகத்தான் இருக்க வேண்டும். இப்படி
நம்மால் என்ன நடக்கிறது என்பதைக் கூட நிதானிக்க முடிய வில்லையே என்று ஒரு
வருத்தத்துடன் மீண்டும் எழுந்துகொள்ள மனமின்றி அப்படியே கிடந்தான்.
"என்னங்க, உங்களுக்கு என்ன ஆயிற்று ?" என்று கமலாவின் குரல் கேட்டுக் கண் திறந்தவன் அப்படியே திகைத்துப போனான்.
"அப்போ
அவ்வளவும் கனவா?" என்று கேட்டவனுக்கு, "எவ்வளவும் ?" என்ற பதில் கிடைக்க,
குழப்பம் அதிகமானது. சுற்று முற்றும் பார்த்துத் தான் ஹாலில் இருக்கும்
சோபாவின் அருகில் படுத்திருப்பதை உணர்ந்து மீண்டும் "நான் எப்படி, இல்லை,
நீ எப்படி, இல்லை நம்ம வீடு.." என்று ஏதோ கூற ஆரம்பித்தான்.
பிறகு கமலா "முதலில் எழுந்து முகம் கழுவிக் கொண்டு
வந்து கா!பி சாப்பிடுங்கள். என்ன ஆனது என்பதெல்லாம் அப்புறம் பேசிக்
கொள்ளலாம்" எனவும், குளியலறைக்குள் நுழைந்தவன் எல்லாம் நேற்று மாலை இருந்த
மாதிரியே இருந்ததை நிதானித்துப் பார்த்து விட்டுப் பின் போய் பல் தேய்த்து
முகம் கழுவிக் கொண்டு, மேஜையில் இருந்த காப்பி டம்ப்ளரைக் கையில் எடுத்தவன்
மீண்டும் "அவ்வளவுமா கனவு" என்று முணுமுணுத்துக் கொண்டே குடிக்க
ஆரம்பித்தான்.
கமலா வந்து அருகில் உட்கார்ந்து கொண்டு "நேற்று
நீங்கள் சோபாவிலேயே தூங்கிப் போனீங்க. ஆனால் ஏன் கீழே இறங்கிப்
படுத்துக் கொண்டீர்கள் ?" என்று கேட்க, ராகவன் தான் விழித்துக் கொண்டது,
சோபாவிலிருந்து கீழே விழுந்தது, கேட்ட சப்தங்கள் எல்லாவற்றையும் சொல்லிக்
கொண்டே போக, கண்கள் அகல அதைக் கேட்ட கமலா,
"அப்போ நீங்க ராத்திரி எழுந்து அந்த கோரத்தைப் பார்க்கவே இல்லையா?" என்றாள் .
"என்ன,
என்ன விஷயம் ?" என்று கேட்ட ராகவனிடம் "ராத்திரி நம்ம மருந்துக்
கடைக்காரர் ஷட்டரைப் போட்டு விட்டுப் பூட்டுவதற்காக குனிந்தவரை ஒரு
லாரிக்காரர் இடித்து விட்டார். என்றதும் 'அடப் பாவமே" என்ற ராகவனை மேலும்
பேசவிடாமல் " கேளுங்க முதல்லே!" என்று தொடர்ந்த கமலா "மருந்துக்
கடைக்காரருக்கு சின்ன அடி தான்.
திரும்பவும் கடையைத திறந்து மருந்து
போட்டுக் கொள்ள உள்ளே போனவர் தன்னை இடித்த லாரிக்காரர் நிதானம் இழந்ததால்
பக்கத்தில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் கம்பத்தில் மோதி, அதனால் ஏற்பட்ட மின்
சக்தி துண்டிப்பினால் சற்று நேரம் தடவி தடவி டார்ச் லைட் எடுத்து, பின்
மருந்து எடுத்தவர், அப்படியே ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டே தூங்கிப் போனாரா
இல்லை மயக்கமானாரானு தெரியவில்லை. காலையில் பால் வாங்கப் போன பாச்சா மாமா
அவரை எழுப்பி விஷயத்தைக் கேட்டவர், "அப்படீன்னா ராத்திரி இங்கே நடந்த
விவகாரங்கள் எதுவும் உங்களுக்குத் தெரியாதா [ இதென்னடா இது, அரபிக்
கதைகளில் வருகிற ....கதை மாதிரி ?] என்று கேட்டு விட்டு அவரிடம் லாரி
டிரான்ஸ்பார்மரில் மோதிய கதையை சொல்ல, அவர் அந்த லாரி தன்னைத் தான் முதலில்
இடித்தது என்றதும், "அப்படியா சேதி" என்ற பாச்சா அதற்குப்பின் மின் வாரிய ஊழியர்கள் விரைந்து
வந்து டிரிப் ஆகியிருந்த டிரான்சஸ்ஃபார்மரை மீண்டும் உயிர்ப்பித்துவிட்டுப்
போனதையும் லாரி டிரைவர் தானே முன் வந்து கம்பத்தை இடித்ததை ஒப்புக்
கொண்டதையும் சொன்னாராம் என்று முடித்தாள் கமலா.
"அது சரி" நீங்க என் கீழே இறங்கிப் படுத்துக் கொண்டீர்கள் ?"என்றவளிடம்,
ராகவன் தன் அனுபவத்தை மீண்டும் விவரிக்க, சட்டையில் ஒரு மூலை
கிழிந்திருந்ததைப் பார்த்த கமலா "நீங்கள் கீழே விழுந்தது எப்படி என்று
தெரிந்து விட்டது" என்றாள்.
கண்டு பிடிக்க உங்களுக்கும் கொஞ்சம் க்ளூ.
எதெல்லாம் கனவு, எதெல்லாம் உண்மை என்று நீங்களே முடிவு கட்டுங்கள்.
நல்ல புதிர்தான்! தூக்கத்தில் சோபாவில் சட்டை மாட்டிக்கொண்டதை தவறாக எண்ணி இருப்பார் என்று நினைக்கிறேன்! நல்ல பகிர்வு நன்றி!
பதிலளிநீக்குயாராச்சும் சொல்ல வாங்க...
பதிலளிநீக்குஅப்படியே பாத்துட்டுப் போயிருறேன்.
ரொம்ப பிச்சுக்க வைக்கிறதே மூளையை:)! பதிலுக்கு நானும் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு//சட்டையில் ஒட்டிக் கொண்ட ஃபோன் சார்ஜர்//
பதிலளிநீக்குசார்ஜர் பிளக் ஆன் செய்தே இருந்திருக்க வேண்டும். அந்த சார்ஜர் சட்டைப்பையில் மாட்டிக்கொண்டதால், உடலில் உரசிக் கொண்டிருந்திருக்கிறது. டரான்ஸ்ஃபார்மரில் லாரி இடித்தபோது, பவர் ஃப்ளக்சுவேஷனால்(??) சார்ஜர் வழியே ஷாக் அடித்து, போய் விழுந்திருக்கிறார்.
சரியா?
//குளியலறைக்குள் நுழைந்தவன்.. பின் போய் பல் தேய்த்து முகம் கழுவிக் கொண்டு //
பதிலளிநீக்குமுதலில் படத்தை எங்கிருந்தோ லாவிக் கொண்டு வந்து இங்கு போட்டு விட்டு பின் அதற்கேற்ற மாதிரி இரண்டொரு வார்தைகளை இடையே எழுதுவீர்களா, இல்லை...
ஒரு மடக்கிப் போட்ட மன வரிகள்:
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
இல்லை, எங்கணுமாய்
படங்களின் அழுத்தத்தில்
பம்மி விழிபிதுங்கும் பதிவுகள்
வாழ்க, இணையமெங்கும் படங்களை
வாரி இறைத்திருக்கும்,பரோபகாரர்கள்!
குழப்பமா இருக்கு எனக்கு !
பதிலளிநீக்குதெளிவாகக் குழப்புகிறீர்கள்
பதிலளிநீக்குசுவாரஸ்யத்திற்கும் குறைவில்லை
அதனால் இரண்டு முறைப் படித்தேன்
வாழ்த்துக்கள்
எல்லாம் 21 ஆம் தேதி பீதி:)தலையை எங்கயோ இடித்துக் கொண்டு இருக்கிறீர்கள் ராகவன். கமலா, அவருக்கு வேப்பிலை அடிக்கச் சொல்லுங்க.:)
பதிலளிநீக்குசொல்லுங்கண்ணே.. சொல்லுங்க
பதிலளிநீக்குசம்பவங்கள் ஒன்றோடு ஒன்று முடிச்சுப்போட்டுக் கொண்டிருக்கின்றன் ...
பதிலளிநீக்குகனவுல கீழே விழுந்து கிளிஞ்சிருகலாம்..
பதிலளிநீக்குஎது எப்படியோ புதிருக்கான விடை தெரியாமலா போக போகுது
முதல் முறை படிச்சபோது புரியல. திரும்ப படிச்சேன். அப்பவும் ரொம்ப ஒண்ணும் புரியல. சோபாவில் தூங்கி கொண்டிருந்த ராகவன் தூக்கத்தில் திரும்பும்போது கால் மரத்துபோய் கீழே விழுந்திருக்கலாம். அப்படி விழும்போது பாக்கெட்டில் கனெக்ட் ஆகி இருந்த செல்போன் ஒயர் இழுபட்டு பாக்கெட் கிழிந்திருக்கலாம். இருந்தாலும் நீங்க ஒருதடவை தெளிவா சொல்லிடுங்க.
பதிலளிநீக்குகதையைப் படிச்சு ஒண்ணும் புரியாம தலையை பிச்சுகிட்டு....
பதிலளிநீக்குஹெல்ப்!ஹெல்ப்...!
நாளைக்கு இருப்போமோ இல்லையோ, இப்பவே சொல்லிடுங்க ப்ளீஸ்!
//டிசம்பர் 21 //
பதிலளிநீக்குதனித்துவமான தேதி, அடிக்கோடிட்டுச் சொல்ல வேண்டிய தேதி, மாயமான தேதி கூட.
19-ம் தேதியே தி கிரேட் 21 பற்றிக் கனவா?.. :)))
இங்கே வந்து படிக்கிற இந்த நிமிடம் வரை இன்னிக்குத் தேதியையே மறந்துட்டேன். :)))))
பதிலளிநீக்குஎப்படி விழுந்திருப்பார் என்பதில் நான் ஹுசைனம்மா கட்சி. நானும் அதான் நினைச்சேன். திடீர்னு ஷாக் அடிச்சிருக்கும்னு.
பதிலளிநீக்குஅனைவருக்கும் நன்றிகள்.
ஜீவி சார்... எழுத்துக்குத்தான் படம்.. படத்துக்கு அல்ல! :)) கூகிளாண்டவர் இருக்கக் கவலை ஏன்? மனவரிகள் எங்களையும் மடக்கியது.
ஹுஸைநம்மா, மீனாக்ஷி, ஜீவி சார் எல்லோருமே சரிதான்! ஜீவி சாரின் இரண்டாவது பின்னூட்டம் சொல்வது போல யாருக்கு என்ன கற்பனை வந்தாலும் சரிதான்! :))