எங்கள் B+ செய்திகள்.
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....
=======================================================================
1) ஜெய்ப்பூரைச் சேர்ந்த தையல் தொழிலாளி ஹஃபீஸ் என்பவர் மகன் முகம்மது
யூசுஃப் வயது ஆறே மாதம். பிறக்கும்போதே கல்லீரலைக் குடலுடன் இணைக்கும்
நாளங்கள் இன்ல்லாது பிறந்த இந்தக் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்க,
மருத்துவமனை தன் கட்டணத்தைக் குறைத்தும் கூட 6 லட்சத்துக்கும் மேல்
செலவாகும் என்ற நிலையில் அந்த மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும்
நோயாளிகள் ஆறுதலளித்துப் பெருமளவு தொகையை அவர்களே (3 லட்சம் வரை)
சேகரித்துக் கொடுத்து உதவியிருக்கும் செய்தி வெங்கட் நாகராஜ் பக்கங்களில் படிக்க முடிந்தது.
2) நகரமும் இல்லாத கிராமமும் அல்லாத அவிநாசி பகுதியில், ஒரு பழைய மொபட் வாகனத்தின் பின்னால் சின்ன, சின்ன பொருட்களை வைத்து விற்பனை செய்துகொண்டு செல்கிறார் பெரியவர் ஒருவர். அவரது சட்டையின் பின் பகுதியில், 'எனக்கு காது கேட்காது' என்று எழுதி ஒட்டியுள்ளார். காரணம் அறிய அவரை நிறுத்தி சைகையால் பேசிய போது, அவர் நம் கண்களையும், உதடுகளையும் பார்த்தே என்ன கேட்கிறோம் என்பதை புரிந்துகொண்டு பதில் தருகிறார். பெயர் கல்யாணசுந்தரம், வயது 74. திருப்பூர் பகுதியில் நன்றாக வாழ்ந்திருக்கிறார், அவரது மகன் ஒருவர் இன்றைக்கும் நாற்பது பேரை வைத்து திருப்பூரில் தொழில் நடத்திவருகிறார் என்பது பேச்சின் மூலம் தெரியவந்ததே தவிர, பழைய விஷயத்தின் ஆழத்திற்கு போக அவர் பிரியப்படவில்லை. யார் எங்கே இருந்தாலும் நல்லாயிருக்கட்டும், இப்ப நம்ம கதையை பேசுவோம் என்கிறார் மனைவியோடு அவிநாசி வந்தவருக்கு கவுரமாக, நியாயமாக, எளிமையாக குடும்பம் நடத்த ஒரு தொழில் தேவைப்பட்டது. ஊக்கு, ஹேர்பின், லஞ்ச்பாக்ஸ், விசிறி உள்ளிட்ட பல்வேறு வித பொருட்களை மொத்தமாக வாங்கி, மொபட்டில் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். இவரது பொருட்களின் மதிப்பு இரண்டு ரூபாயில் இருந்து இருபது ரூபாய் வரைதான். ஒரு நாளைக்கு பெட்ரோல் உள்ளிட்ட செலவு போக நூறில் இருந்து நூற்றைம்பது ரூபாய் வரை கிடைக்கிறது. அது போதும் இந்த கிழவனும், கிழவியும் (மணைவி) கவுரமாக சாப்பிட்டு வாழ என்கிறார்.
எப்போது என்று சொல்லத் தெரியவில்லை கொஞ்சம், கொஞ்சமாக காது அதன் கேட்கும் திறனை இழந்து விட்டது, ரொம்ப சத்தமாக பேசினால் இடது பக்கம் லேசாக கேட்கும் அதுவும் சில சமயம்தான். அதனால் என்னைப் பொறுத்தவரை காது கேட்காதவன்தான், ஆனால் அதைப் பற்றி கவலையேதும் இல்லை. இதன் காரணமாக இவர் தான் விற்கும் பொருட்களின் மீது விலையை ஒட்டிவைத்துள்ளார். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் லாபம் வைத்தே இவர் விற்பது, இவரது வாடிக்கையாளர்களுக்கு தெரியும் என்பதால், யாரும் இவரிடம் பேரம் பேசாமல் பொருளை எடுத்துக் கொண்டு காசு கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். காசு கொடுக்காவிட்டாலும் இவர் கேட்கமாட்டார், அந்த அளவிற்கு மனிதர் நல்லவர். கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகள் சிலருக்கு இவராகவே நல்ல நாள் போன்ற தினங்களில் இலவசமாக பொருட்கள் தந்து சந்தோஷப்படுத்துவதும் உண்டு. பழகியவர்களுக்கு என்னைப்பற்றி தெரியும், புதிதாக என்னை பார்ப்பவர்களுக்கு என்னைப்பற்றி தெரியாமல் சிரமப்படக்கூடாது என்பதற்காகவும், ரோட்டில் போகும் போது பின்னால் வரும் வாகன ஓட்டிகள் என் நிலையைத் தெரிந்து கொண்டால் வீணாக "ஹார்ன் சத்தம்' கொடுத்து அவதிப்பட வேண்டாம் பாருங்கள், அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்.

இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை என்கிறார், உண்மைதானே.. ஒய்வு எடுக்க
வேண்டிய வயதில், களைத்து போகாமல் உழைத்து பிழைக்கும் கல்யாணசுந்தரத்தை
நினைத்து, உழைக்காமல் "இலவசங்களை' நம்பி வாழ்பவர்கள்தான் வெட்கப்பட
வேண்டும், உண்மையில் இவரை நினைத்து நாமும், நாடும் பெருமைப்படத்தான்
வேண்டும். (தினமலர்)
3) கண் பார்வை இல்லாமல், பனைமரம் ஏறி, ஓலைகளை வெட்டி விற்கும் முருகாண்டி:
சொந்த ஊர் வெள்ளரியோடை; ராமநாதபுரத்திலிருந்து, 70 கி.மீ., தொலைவில்
உள்ளது. அப்பாவும், அம்மாவும், நெருங்கிய உறவு முறையில் திருமணம்
செய்ததால், பிறவியிலேயே, கண்பார்வை இல்லை. சிறிய வயதிலேயே, அப்பா இறந்து
விட்டார்.அம்மா, பனை ஓலையில் பாய் முடைஞ்சு, அதை விற்று வரும் பணத்தில்,
என்னையும், தங்கச்சியையும், வளர்த்தார். என் குருட்டு தன்மையைக் காரணம்
காட்டி, வீட்டிலேயே முடக்க நினைக்காமல், என்னை ஊக்கப்படுத்தினார். 10
வயதில், பனை மரம் ஏற்றி விட்டு, மரம் ஏற பழக்கினார்.அதனால், பனை மரங்களில்
ஏறி, ஓலை வெட்டும் வேலை செய்து, குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன்.
தங்கைக்கும், நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தேன்.என் மனைவி
கலாவதிக்கு, சரியாக நடக்க வராது. எந்த குறையுமின்றி, எங்களுக்கு, இரண்டு
பெண் குழந்தைகள் பிறந்தன. இருவரையும், பெரிய படிப்பு படிக்க வைத்து, நல்ல
வேலைக்கு அனுப்ப வேண்டும் என்ற குறிக்கோளில், துவக்க பள்ளிக் கூடத்தில்
சேர்த்தேன்.அம்மாவின் மருத்துவ செலவும், பிள்ளைகளின் படிப்பு செலவும்
அதிகரித்ததால், மிகவும் கஷ்டப்பட்டேன். ஊரில் உள்ளவர்கள், "இவ்வளவு
கஷ்டத்தில், பிள்ளைகளை ஏன் படிக்க வைக்கணும்? படிப்பை நிறுத்திடு'ன்னு
சொன்னாங்க. யார் சொன்னதையும் காதில் வாங்காமல், படிக்க வைக்க வேண்டும்
என்று, வைராக்கியம்.பெரிய மகள் சிம்புரா ஷாலினி, 9ம்வகுப்பும்;
சின்ன மகள் லாவண்யா, 7ம் வகுப்பும் படிக்கின்றனர். கண்பார்வை இல்லாமல், மரம் ஏறுவதால், மரப் பட்டைகள், கை, கால்களை கிழித்து, புண்ணாகி வலிக்கும். நான் கஷ்டப்படுவதை, அவர்கள் பார்ப்பதால், படிப்பில் கவனம் செலுத்தி, நன்றாக படிக்கின்றனர். முதல் மூன்று ரேங்குகள் வாங்குகின்றனர்.ஷாலினி கலெக்டராகவும், லாவண்யா டாக்டராகவும் ஆக ஆசைப்படுகின்றனர். அவங்க லட்சியத்தை நிறைவேற்றவே, இவ்வளவு கஷ்டப்படுகிறேன். (தினமலர்)
4) காரை வேகமாக ஓட்டி, படுகாயமடைய வைத்த போதிலும், காரை ஓட்டிய பெண்ணை தண்டிக்க விரும்பாத நபர், "விபத்திற்கு இழப்பீடாக, 400 கம்பளிகளை ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும்' என்ற வினோத கோரிக்கையை முன்வைத்து, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
டில்லியை சேர்ந்தவர் தேவேந்தர் குப்தா. ஜனவரி மாதம், அலுவலகம் சென்று, இரவில், "பைக்'கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால், பைக்கை நிறுத்தி இருந்தார்.அப்போது, அசுர வேகத்தில் பின்னால் வந்த கார், தேவேந்தர் குப்தா பைக் மீது மோதி, அவரை தூக்கி வீசியது. அந்த காரை, ருச்சி அகுஜா என்ற, பெண் ஓட்டி வந்தார். உடல் முழுக்க பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில், உயிருக்கு போராடிய குப்தாவை கண்டுகொள்ளாமல், அந்த பெண், காரை ஓட்டிச் சென்று விட்டார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிர் பிழைத்த குப்தா, படுகாயமடைய வைத்த ருச்சி அகுஜா மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ருச்சி மீதான தண்டனை நிரூபிக்கப்படுமானால், அவருக்கு பல ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் கிடைக்க வாய்ப்பு இருந்தது.
நேற்று முன்தினம், வழக்கு விசாரிக்கப்பட்டது."ருச்சி செய்த குற்றத்திற்கு என்ன இழப்பீடு கோருகிறீர்கள்?'' என, நீதிபதி, பாதிக்கப்பட்ட தேவேந்தர் குப்தாவிடம் கேட்டார். "என் மீது அவர் காரை மோதியது கூட தவறில்லை; நான் ரத்த வெள்ளத்தில் கிடந்த போது, கண்டுகொள்ளாமல் சென்றது தான் எனக்கு தவறாக படுகிறது. இதற்காக அவரிடம் இருந்து பணம் எதையும் பெற விரும்பவில்லை. செய்த தவறுக்கு தண்டனையாக, டில்லி குளிரில் அவதிப்படும் ஏழைகளில், 400 பேருக்கு, ருச்சி அகுஜா, கம்பளிகளை வழங்க வேண்டும்,'' என்றார்.
விசாரணைக்கு வந்திருந்த ருச்சி உட்பட, நீதிமன்றத்தில் இருந்த அனை வருக்கும், ஆச்சர்யமாக போனது. "இப்படியும் ஒரு நல்ல மனிதர் இருக்கிறாரே' என, பலரும் வியந்தனர்.தேவேந்தரின் கோரிக்கையை, ருச்சி ஏற்கிறாரா, இல்லையா என்பதை, பிப்ரவரி 16ம் தேதி தெரிவிக்குமாறு கூறி, விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார். (முகநூல்).

இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாகவும், அவர்கள் மேல் மிகவும் மரியாதையும் ஏற்படுகிறது.
பதிலளிநீக்குஅப்பாவின் கஷ்டத்தை உணர்ந்து படிக்கும் அந்த குழந்தைகள் நிச்சயம் சாதனை படைக்கும்.
இரண்டு மூன்று செய்திகள் மனதிற்கு வருத்தம் அளித்தாலும், சிறந்த முன் உதாரனங்கலாகப் படுகிறார்கள்.... நான்கு வினோதமான மனிதர்
பதிலளிநீக்குஅனைத்துச் செய்திகளும் மனதுக்கு ஆறுதலாக இருக்கின்றன.
பதிலளிநீக்குருசிக்கு இந்த தண்டனை போதாது.
தேவேந்தர் குப்தா போன்ற மனிதர்களும் இருக்க தான் செய்கிறார்கள் !
பதிலளிநீக்குதங்கள் பதிவுக்கு வந்தால்தான்
பதிலளிநீக்குபாஸிடிவ் செய்திகளைப் படித்து
மனம் மகிழ்வு கொள்கிறது
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
கடைசிச் செய்திக்கு மனம் நெகிழ்ந்தது.
பதிலளிநீக்குஇன்றைய சூழ்நிலையில் மனதுக்கு இதமான செய்திகள்.
பதிலளிநீக்கு/ஒய்வு எடுக்க வேண்டிய வயதில், களைத்து போகாமல் உழைத்து பிழைக்கும் கல்யாணசுந்தரத்தை நினைத்து, உழைக்காமல் "இலவசங்களை' நம்பி வாழ்பவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்,/
பதிலளிநீக்குஉண்மைதான். இதுபோன்ற ஒரு பெரியவர் குறித்து விரைவில் பகிர்ந்திடுகிறேன்.
நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளார் குப்தா!
மாற்றுத் திறனாளிகளான திரு கல்யாண சுந்தரமும், திரு முருகாண்டியும், தங்களுக்கு இருக்கும் மற்ற திறன்களால் வாழ்க்கையை தைரியமாக எதிர் கொள்ளும் போது, எல்லாத் திறன்களும் அமைந்திருந்தும், உளநலம் இல்லாமையால் தற்கொலை செய்துகொள்ளும் மனிதர்களை பற்றி என்ன சொல்வது?
பதிலளிநீக்குவரும் புத்தாண்டு நமக்கு பல பல பாசிடிவ் செய்திகளைக் கொடுக்கட்டும்.
எங்கள் ப்ளாகின் ஆசிரியர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
எல்லாச் செய்திகளுமே மனதுக்கு இதமளிக்கின்றன. தேடிப்பிடித்துப் பகிரும் உ(எ)ங்களுக்கு நன்றி!
பதிலளிநீக்கு