எங்கள் B+ செய்திகள்.
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....
====================================================================
தவித்த
வாய்க்கு தண்ணீர் தருவது தமிழர் மரபு. ஆனால், சென்னையில், தங்கத்தை
போலதண்ணீரையும் விலை கொடுத்து வாங்குவதால், அடுத்தவர்களின் தாகத்தை தீர்க்க
யாரும் தயாராக இல்லை என்பது தான் நிதர்சனம்.
இந்த நிலையில், தங்கள் சொந்த பணத்தில் மாதம், 12 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து பாதசாரிகளுக்கும்,பயணிகளுக்கும்
தரமான, "மினரல் வாட்டர்' வழங்கி, தாகத்தை தீர்த்து வருகின்றனர், சென்னை
விமானநிலையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அமைப்பு சாரா ஆட்டோ ஓட்டுனர் நலச்
சங்கத்தினர்.
சங்கத்தின்
முன்னாள் துணை செயலர் சரவணன்கூறியதாவது:கடந்த நான்கு ஆண்டுகளாக சங்கத்தின்
சார்பில், 24 மணிநேர இலவச குடிநீர் சேவையை வழங்கி வருகிறோம். நாளொன்றுக்கு,
15 முதல் 40 லிட்டர் வரை செலவாகிறது. இந்த வகையில் மாதம் 12 ஆயிரம் ரூபாய்
வரை குடிநீருக்காக செலவழிக்கிறோம். மீதி பணத்தை சங்க உறுப்பினர்களின் இல்ல
திருமணத்திற்கும், மருத்துவ செலவிற்கும்வழங்குகிறோம்.
விமான
நிலைய பாதசாரிகள், பஸ் பயணிகள், வாரசந்தைக்கு வருவோர், காவல்துறையினர்,
மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் என, அனைவரும் இந்தகுடிநீரை
அருந்துகின்றனர். எங்கள் சேவையை பற்றி அறிந்தவர்கள், ஒரு சிலர் பணம்
கொடுத்து, எங்கள் சேவையில் அவர்களும் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.
அவர்களின் பெயர்களை ஸ்டாண்டில் உள்ள தகவல் பலகையில் எழுதி நன்றி
தெரிவிப்போம்.இவ்வாறு சரவணன் கூறினார்.
3) குங்குமம்
தோழி டிசம்பர் 2012 இதழில் வெளியான ‘சுதா சந்திரனுடனான சந்திப்பு’
எனக்குப் பல ஞாபகங்களைக் கிளறிவிட்டுவிட்டது. முதல் நாள் வரை
பட்டுப்பூச்சி போலப் பறந்து திரிந்த என் 17 வயதே ஆன மகள் மிருதுபாஷிணிக்கு
நடந்த ஒரு விபத்து, இப்போதும் குலை பதறச் செய்கிறது...அப்போது நாங்கள்
ஹைதராபாத்தில் இருந்தோம்.
மிருதுபாஷிணி பொட்டி ஸ்ரீராமுலு பல்கலைக்கழகத்தில் ‘பி.ஏ. கிளாசிக்கல்
டான்ஸ்’ படித்துக் கொண்டிருந்தாள். அழகாகவும் துறுதுறுவென்றும்
இருந்ததால், அவ்வப்போது பல்கலைக்கழக நாடக்குழுவில் நடிக்கக்
கூப்பிடுவார்கள். உற்சாகமாகக் கலந்து கொள்வாள். நடனத்திலும் நடிப்பிலும்
அவ்வளவு ஈடுபாடு அவளுக்கு.
2000 மே 5... வாராங்கல் அருகில் நடந்த
ஒரு திருமணத்துக்கு குடும்பத்தோடு போயிருந்தோம். திருமண வீட்டார்
மண்டபத்திலிருந்து வாராங்கல்லுக்கு வர ஒரு ஜீப் ஏற்பாடு
செய்திருந்தார்கள். திருமணம் முடிந்து நாங்கள் ஜீப்பில் திரும்பினோம்.
முன்சீட்டில் மிருதுபாஷிணி உட்கார்ந்திருந்தாள். அவள் பக்கத்தில் இரண்டு
குழந்தைகள்.
இன்றைக்கும் மிருதுபாஷிணி, சுதா சந்திரன் நடிக்கும் சீரியல்களை ரசித்துப் பார்க்கிறாள்.
அவர் நகையணியும் நேர்த்தி, ஆடை அலங்காரம், தூக்கலான மேக்கப் எல்லாமே
அவளுக்கு மிகவும் பிடிக்கும். என் பெண், ஒரு பெரிய விபத்திலிருந்து
மீண்டெழுந்து சாதாரணமாக வாழ்கிறாள் என்றால் அதற்கு சுதாவே காரணம்! அவரை
இதுவரை சந்தித்தது இல்லை. என்றாலும், எங்களுக்கு அவர் தன்னை அறியாமலேயே
செய்த உதவி ஒப்பற்றது. இதை என்னால் என்றைக்கும் மறக்கவே முடியாது. அவருக்கு
‘குங்குமம் தோழி’ மூலமாக நன்றி சொல்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
வேகமாக போய்க்கொண்டிருந்த ஜீப் திடீரென நிலை
தடுமாறி, கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோதியது. என் மகளைத் தவிர வேறு
யாருக்கும் அதிக காயம் இல்லை. அவளுடைய இடதுகால் தொடை எலும்பு சுக்கல்
சுக்கலாக உடைந்து போனது. நாங்கள் துடித்துப் போனோம். அவள் திரும்ப எழுந்து
நடப்பாள் என்கிற நம்பிக்கையையே இழந்து போனோம். சிகிச்சை முடிந்தாலும்
அவளால் நடக்க முடியவில்லை.
அழுகையும் வலியும் சுயபச்சாதாபமும்
கதறலுமாக அந்தச் சின்னப்பூ கதறும்போதுதான் அருமருந்தாக, வாராது வந்த
மாமணியாக உதவிக்கரம் நீட்டினார் சுதா சந்திரன். என் மகளுக்கு சுதா
சந்திரனை மிகவும் பிடிக்கும். ‘மயூரி’ படம் பார்த்திருந்தாள். நிஜமாகவே
அவருக்குக் கால் கிடையாது என்பது தெரிந்தது முதல் அவருடைய நடனத்தின் மீது
அவளுக்கு தனி ஈர்ப்பு!
இதைத்தான் நான் பயன்படுத்திக் கொண்டேன்...
அவள் வலிதாங்காமல் அழும்போதும், சுயபச்சாதாபத்தில் கதறும்போதும் சுதா
சந்திரனை ஞாபகப்படுத்துவேன். ‘‘அவர் காலை இழந்துவிட்டு நடனமே ஆடுகிறாரே...
குறைந்தபட்சம் நீ நடக்க வேண்டாமா? உன் காலை வெட்டிவிடவில்லை. அதைக்
காப்பாற்றத்தான் இந்தப் போராட்டம்! நீ அவரைப் போல சாதிக்கப் பிறந்தவள்’’
என்றெல்லாம் பேசுவேன்.
‘‘நீ நடக்கணும்... நடந்துதான் ஆகணும்’’
என்று அவள் உறங்கும்போது, அவள் கையை பிடித்த வண்ணம் ஒரு மந்திரம் போல
உச்சரித்துக்கொண்டே இருப்பேன். என் மகள் மெதுவாகத் தேறினாள். இரண்டு
ஊன்றுகோல் கட்டைகளை வைத்துக்கொண்டு நடந்து பழகினாள். கல்லூரிப்படிப்பு
முடித்து, எம்.பி.ஏ.யும் முடித்து இப்போது கட்டைகள் எதுவும் இல்லாமல்
சாதாரணமாக நடக்கிறாள்.
விப்ரோவில் அசிஸ்டென்ட் மேனேஜராக
பணியாற்றுகிறாள். 2012 டிசம்பர் 9 அன்று அவளுக்குத் திருமணமும் நடந்தது.
என் கனவு நனவான நாள் அது! ‘மற்ற பெண்களைப் போல அவளும் திருமணம்
செய்துகொண்டு வாழ வேண்டும்’ என்று ஒரு தாயாக நான் ஆசைப்படுவது நியாயம்தானே?
4) பெரம்பலூர் மாவட்ட கலெக்டர், அதிரடியான மாவட்ட ஆட்சி தலைவர்.
ஒரு நாள் பேரூந்தில் மக்களோடு மக்களாக பயணித்து கொண்டே அவர்களுடைய
பிரச்சினைகளை விசாரிப்பார். இன்னொரு நாள் மாறு வேடத்தில் திரை
அரங்குகளுக்கு சென்று டிக்கெட்டுகளுக்கு சரியான தொகை தான் வசூலிக்கிறார்களா
என்று விசாரிப்பார். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஓர் அலுவலகத்திற்கு
அதிகாரிகளுக்கே தெரியாமல் விசிட் அடிப்பார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக இயங்குபவர்கள் கைகளில் நிச்சயம் தாரேஸ் அஹம்மதுவின் மொபைல் எண்கள் இருக்கும்
இந்த நிலையில், தங்கள் சொந்த பணத்தில் மாதம், 12 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து பாதசாரிகளுக்கும்,பயணிகளுக்கும் தரமான, "மினரல் வாட்டர்' வழங்கி, தாகத்தை தீர்த்து வருகின்றனர், சென்னை விமானநிலையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அமைப்பு சாரா ஆட்டோ ஓட்டுனர் நலச் சங்கத்தினர்.
விமான நிலைய பாதசாரிகள், பஸ் பயணிகள், வாரசந்தைக்கு வருவோர், காவல்துறையினர், மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் என, அனைவரும் இந்தகுடிநீரை அருந்துகின்றனர். எங்கள் சேவையை பற்றி அறிந்தவர்கள், ஒரு சிலர் பணம் கொடுத்து, எங்கள் சேவையில் அவர்களும் பங்கெடுத்துக் கொள்கின்றனர். அவர்களின் பெயர்களை ஸ்டாண்டில் உள்ள தகவல் பலகையில் எழுதி நன்றி தெரிவிப்போம்.இவ்வாறு சரவணன் கூறினார்.
மிருதுபாஷிணி பொட்டி ஸ்ரீராமுலு பல்கலைக்கழகத்தில் ‘பி.ஏ. கிளாசிக்கல் டான்ஸ்’ படித்துக் கொண்டிருந்தாள். அழகாகவும் துறுதுறுவென்றும் இருந்ததால், அவ்வப்போது பல்கலைக்கழக நாடக்குழுவில் நடிக்கக் கூப்பிடுவார்கள். உற்சாகமாகக் கலந்து கொள்வாள். நடனத்திலும் நடிப்பிலும் அவ்வளவு ஈடுபாடு அவளுக்கு.
2000 மே 5... வாராங்கல் அருகில் நடந்த ஒரு திருமணத்துக்கு குடும்பத்தோடு போயிருந்தோம். திருமண வீட்டார் மண்டபத்திலிருந்து வாராங்கல்லுக்கு வர ஒரு ஜீப் ஏற்பாடு செய்திருந்தார்கள். திருமணம் முடிந்து நாங்கள் ஜீப்பில் திரும்பினோம். முன்சீட்டில் மிருதுபாஷிணி உட்கார்ந்திருந்தாள். அவள் பக்கத்தில் இரண்டு குழந்தைகள்.
அவர் நகையணியும் நேர்த்தி, ஆடை அலங்காரம், தூக்கலான மேக்கப் எல்லாமே அவளுக்கு மிகவும் பிடிக்கும். என் பெண், ஒரு பெரிய விபத்திலிருந்து மீண்டெழுந்து சாதாரணமாக வாழ்கிறாள் என்றால் அதற்கு சுதாவே காரணம்! அவரை இதுவரை சந்தித்தது இல்லை. என்றாலும், எங்களுக்கு அவர் தன்னை அறியாமலேயே செய்த உதவி ஒப்பற்றது. இதை என்னால் என்றைக்கும் மறக்கவே முடியாது. அவருக்கு ‘குங்குமம் தோழி’ மூலமாக நன்றி சொல்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அழுகையும் வலியும் சுயபச்சாதாபமும் கதறலுமாக அந்தச் சின்னப்பூ கதறும்போதுதான் அருமருந்தாக, வாராது வந்த மாமணியாக உதவிக்கரம் நீட்டினார் சுதா சந்திரன். என் மகளுக்கு சுதா சந்திரனை மிகவும் பிடிக்கும். ‘மயூரி’ படம் பார்த்திருந்தாள். நிஜமாகவே அவருக்குக் கால் கிடையாது என்பது தெரிந்தது முதல் அவருடைய நடனத்தின் மீது அவளுக்கு தனி ஈர்ப்பு!
இதைத்தான் நான் பயன்படுத்திக் கொண்டேன்... அவள் வலிதாங்காமல் அழும்போதும், சுயபச்சாதாபத்தில் கதறும்போதும் சுதா சந்திரனை ஞாபகப்படுத்துவேன். ‘‘அவர் காலை இழந்துவிட்டு நடனமே ஆடுகிறாரே... குறைந்தபட்சம் நீ நடக்க வேண்டாமா? உன் காலை வெட்டிவிடவில்லை. அதைக் காப்பாற்றத்தான் இந்தப் போராட்டம்! நீ அவரைப் போல சாதிக்கப் பிறந்தவள்’’ என்றெல்லாம் பேசுவேன்.
‘‘நீ நடக்கணும்... நடந்துதான் ஆகணும்’’ என்று அவள் உறங்கும்போது, அவள் கையை பிடித்த வண்ணம் ஒரு மந்திரம் போல உச்சரித்துக்கொண்டே இருப்பேன். என் மகள் மெதுவாகத் தேறினாள். இரண்டு ஊன்றுகோல் கட்டைகளை வைத்துக்கொண்டு நடந்து பழகினாள். கல்லூரிப்படிப்பு முடித்து, எம்.பி.ஏ.யும் முடித்து இப்போது கட்டைகள் எதுவும் இல்லாமல் சாதாரணமாக நடக்கிறாள்.
விப்ரோவில் அசிஸ்டென்ட் மேனேஜராக பணியாற்றுகிறாள். 2012 டிசம்பர் 9 அன்று அவளுக்குத் திருமணமும் நடந்தது. என் கனவு நனவான நாள் அது! ‘மற்ற பெண்களைப் போல அவளும் திருமணம் செய்துகொண்டு வாழ வேண்டும்’ என்று ஒரு தாயாக நான் ஆசைப்படுவது நியாயம்தானே?
ஒரு நாள் பேரூந்தில் மக்களோடு மக்களாக பயணித்து கொண்டே அவர்களுடைய பிரச்சினைகளை விசாரிப்பார். இன்னொரு நாள் மாறு வேடத்தில் திரை அரங்குகளுக்கு சென்று டிக்கெட்டுகளுக்கு சரியான தொகை தான் வசூலிக்கிறார்களா என்று விசாரிப்பார். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஓர் அலுவலகத்திற்கு அதிகாரிகளுக்கே தெரியாமல் விசிட் அடிப்பார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக இயங்குபவர்கள் கைகளில் நிச்சயம் தாரேஸ் அஹம்மதுவின் மொபைல் எண்கள் இருக்கும்
குடி நீர் பிரச்சினையில் தொடங்கி, சாதிச் சண்டைகள் வரை எங்கே எது
நடந்தாலும் ஒரே ஓர் அழைப்பில் பிரச்சினையை முடித்து கொள்கிறார்கள்
பெரம்பலூர் மாவட்ட மக்கள்.
பதவி ஏற்று ஐந்து மாதங்களில் மக்களை
தேடி 45 ஆயிரம் மனுக்களை பெற்றுள்ளார், அதில் 75 சதவீத மனுக்கள் மீது
நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது.
இவரது பணியை பாராட்டி முதல்வர் பரிசு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நம் வாழ்த்துக்களையும் மாவட்ட கலெக்டருக்கு பகிர்வோம்...!
பதவி ஏற்று ஐந்து மாதங்களில் மக்களை தேடி 45 ஆயிரம் மனுக்களை பெற்றுள்ளார், அதில் 75 சதவீத மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது.
இவரது பணியை பாராட்டி முதல்வர் பரிசு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நம் வாழ்த்துக்களையும் மாவட்ட கலெக்டருக்கு பகிர்வோம்...!
காலையில் இந்த பாஸிடிவ் செய்திகளை படிக்கும் பொழுதே பரவசமாக உள்ளது.தொடருஙக்ள்.
பதிலளிநீக்கு1,2: திரு நாராயணன் கிருஷ்ணன், ‘அமைப்பு சாரா’ ஆட்டோ ஓட்டுனர் நலச் சங்கத்தினர் ஆகியோரின் மக்களுக்கான சேவை மகத்தானது.
பதிலளிநீக்கு3. நெகிழ்வான அந்தக் கட்டுரையை தோழியில் நானும் வாசித்திருந்தேன்.
4./ 75 சதவீத மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது./
ஆச்சரியப்படுத்துகிறார்.
தொகுப்புக்கு நன்றி.
பாசிட்டிவ் செய்திகள் தொகுப்புக்கு பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குதிரு.நாராயணன் அவர்களை என்ன சொல்லி பாராட்டினாலும் அது குறைவே. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குவி. ஆட்டோ ஓட்டுனர் சங்கத்திற்கு வாழ்த்துக்கள்.
மிருதுபாஷினியும் ஒரு உதாரணமாகவே திகழ்வாள்.
பெரம்பலூர் கலெக்டர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருப்பதில் வியப்பில்லை தான்.
இவ்வளவு பாசிட்டிவ் செய்திகளைப்
பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.
நல்ல பாசிட்டிவ்வான தொகுப்பு... நன்றி...
பதிலளிநீக்குசரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇந்த மாதிரி செய்திகளைப்படிக்கும் பொழுது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. நாமும் ஏதாவது உபயோகமாக செய்ய வேண்டும் என்கிற உந்துதல் எழுகிறது.
சிறப்பான பதிவு.
அன்பும் கருணையும் நிறைந்த உதவி செய்யும் செய்தி.
பதிலளிநீக்குதன்னம்பிக்கை ஊட்டும் செய்தி.
மக்களுக்கு உதவ காத்து இருக்கும் கலெக்டர் எல்லாம் அருமையான செய்திகள்.இப்படி நாள் தோரும் நல்லவைகளையே என்றும் கேட்க வேண்டும்.
உங்களுக்கு வாழ்த்துக்கள்.
அனைத்தும் டானீக் ஊட்டும் செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்கு1. இவரைப் பற்றி பல பத்திரிகைகளில் படித்துள்ளேன்... மதுரைக்காரர் கேட்டரிங் பணியை விட்டுவிட்டு ஆதரவற்றோருக்கு ஆதரவளித்து வரும் இவரின் செயலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
பதிலளிநீக்கு5. நிஜ ஹீரோ அவர் தான்
அருமையான தொகுப்பு சார்
பாஸிட்டிவ் செய்திகள் ரொம்ப நல்லாயிருக்கு.
பதிலளிநீக்குபாசிடிவ் செய்தியில் இடம்பெற்ற கதாநாயக நாயகியருக்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குபாசிடிவ் செய்திகளை தேடித்தரும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஒவ்வொரு சனிக்கிழமையும் + செய்திகளைப் படிக்கும் போது மனம் பூரிக்கிறது. வாரத்த்தின் ஒவ்வொரு நாளும் சனிக்கிழமையாக இருந்தால் கூட நல்லதுதான்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் எங்கள் ப்ளாக்.
நம்பிக்கையூட்டும் செய்திகள் அனைத்தும் மனதுக்கு இதம் அளித்தன. பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குஇந்த மாதிரி கொஞ்சம் பேராவது இருப்பதால் தான் நாடு செழிக்கிறது.
வாழ்த்துக்கள்.