திருக்கடையூர் செல்ல புவனேஸ்வர்- ராமேஸ்வரம் ரயிலில் ஏற எக்மோர் சென்றோம்.
எந்த நடைமேடையில் ரயில் வரும் என்று பார்த்துக் கொண்டிருந்தோம். சகோதரி,
சகோதரி கணவர் உடன் இருந்தனர்.
சகோதரி கொஞ்சம் அப்பாவி. பந்தியில்
சாப்பிட உட்கார்ந்திருப்பார். அவருக்கு
சாம்பார் அல்லது சட்னி வேண்டும் என்று தேவை இருக்கும். பரிமாறுபவர் சற்று
தூரத்தில் வரும்போதே அவரையே வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தொடங்குவார்.
ஏற்கெனவே கையைக் குறி பார்த்து சாம்பார் வேண்டுமோ, சட்னியோ அல்லது ஸ்வீட்
வேண்டுமோ, அந்த
இடத்தில் ஆள் காட்டி விரலை அடையாளம் வைத்திருப்பார். பரிமாறுபவர் தாண்டிச்
செல்லும்போது அவரைக் கூப்பிட எல்லாம் மாட்டார். அவரையே பார்ப்பார். அவர்
திரும்பி இவரைப் பார்க்கும்போது இலையில் அடையாளம் வைத்துள்ள விரலைத்
தட்டுவார். அவருக்கு எப்படி இவர் கேட்பது புரியும்? அவர் பேசாமல் சென்று
விட, சகோதரி ஏமாற்றத்தில் திரும்பி என்னைப் பரிதாபமாகப் பார்ப்பார்.
அருகிலேயே
இருந்த படிக்கட்டுகளைக் காண்பித்த என் சகோதரி "நான் எஸ்கலேட்டரில் ஏறியதே
இல்லை" என்று கூறி அது எப்படி இருக்கும் என்று விசாரித்துக்
கொண்டிருந்தார். அதில் ஏறும்போது எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
என்றெல்லாம் சகோதரி கணவர் கூறிக் கொண்டிருந்தார்.
அறிவிப்புப் பலகையில் 4வது நடைமேடைக்கு வண்டி வந்து சேரும் என்று அறிவிப்பு வரவே, நாங்கள் எப்படி அங்கு செல்வது என்று பார்த்து விட்டு, சகோதரி கணவரிடம் 'படி ஏறி அந்தப் பக்கம் சென்று விடலாம்' என்று சொன்னேன். வைகை, பல்லவன் வரும் நடைமேடையில் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அக்காவை எஸ்கலேட்டரில் இந்த வயதான காலத்தில் ஏற்றி ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பது என் கருத்து.
அறிவிப்புப் பலகையில் 4வது நடைமேடைக்கு வண்டி வந்து சேரும் என்று அறிவிப்பு வரவே, நாங்கள் எப்படி அங்கு செல்வது என்று பார்த்து விட்டு, சகோதரி கணவரிடம் 'படி ஏறி அந்தப் பக்கம் சென்று விடலாம்' என்று சொன்னேன். வைகை, பல்லவன் வரும் நடைமேடையில் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அக்காவை எஸ்கலேட்டரில் இந்த வயதான காலத்தில் ஏற்றி ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பது என் கருத்து.
"அவள் எஸ்கலேட்டரில் ஏறியதில்லை என்கிறாள். அதிலேயே போவோம்" என்று
கூறியவர் மனைவி கையிலிருந்த பையையும் தானே வாங்கிக் கொண்டு நடக்கலானார்.
"சும்மா சாதாரணமா கால் வைச்சு ஏறிடணும். குதிக்கக் கூடாது. அது பாட்டுக்க ஓடிக் கொண்டேயிருக்கும். நாம எப்பவும் சாதாரணமா நடக்கறா மாதிரி அதில் ஏறி விட வேண்டும்" என்று வழிமுறைகளை மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டே நடக்க, சகோதரி முகத்தில் பயத்துடன் கூடிய ஆர்வம் தெரிந்தது.
நான், 'ஆரம்பத்தில் இங்குதான் இறங்கத் தெரியாமல் இறங்கி அதிலேயே கால் மாட்டிக் கொண்டு' என்று விபத்து நேர்ந்த சிறுமி பற்றி சொன்னேன். மாமா என்னை முறைத்தார்.
"சும்மா சாதாரணமா கால் வைச்சு ஏறிடணும். குதிக்கக் கூடாது. அது பாட்டுக்க ஓடிக் கொண்டேயிருக்கும். நாம எப்பவும் சாதாரணமா நடக்கறா மாதிரி அதில் ஏறி விட வேண்டும்" என்று வழிமுறைகளை மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டே நடக்க, சகோதரி முகத்தில் பயத்துடன் கூடிய ஆர்வம் தெரிந்தது.
நான், 'ஆரம்பத்தில் இங்குதான் இறங்கத் தெரியாமல் இறங்கி அதிலேயே கால் மாட்டிக் கொண்டு' என்று விபத்து நேர்ந்த சிறுமி பற்றி சொன்னேன். மாமா என்னை முறைத்தார்.
அந்த இடமும் வந்தது. எல்லோரும் கூட்டம் கூட்டமாக அதில் சென்று ஏறிக்
கொண்டிருந்தார்கள். எவ்வளவு சொல்லியும். அல்லது நிறைய எச்சரிக்கைகள்
சொல்லிக் குழப்பியதாலேயே அக்கா அந்த இடம் வந்ததும் தண்ணீருக்குள்
இறங்குபவர் போல ஆழம் பார்க்கத் தொடங்க, கணவர் "அதான் சொன்னேன்ல" என்று
அதட்டிய அதட்டலில் 'டொம்' மென்று 'உள்ளே' குதித்தார். "இப்ப நடக்கணுமா,
வேண்டாமா" என்றார் பின்குறிப்பாக.
"நாங்கள் லேட் ஆச்சுன்னா அப்படியே இதிலேயே ஏறி ஓடுவோம். நீ அப்படியே நில்லு! அதுவே மேலே போகும்"
"முதல் வரி தேவையா இப்போ?" என்றேன்.
"நீ சொன்னதுக்கு இது பெரிய விஷயம் இல்லை" என்றார்.
"இறங்கும்போதும் குதிக்காமல் கேஷுவலா நடந்து தாண்டு" என்றார் மனைவியிடம்.
மறுபடியும் சகோதரி முகத்தில் தீவிரம். இறங்குமிடம் நெருங்கியது. காத்திருந்து மறுபடி குதித்து பேலன்ஸ் செய்து நின்றார். இரண்டொருவர் திரும்பிப் பார்த்து விட்டுச் சென்றனர்.
வலது பக்கம் திரும்பி 4 வது நடைமேடையைத் தேடினோம். நாங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட ஒருவர் திரும்பி, "அப்படியே கீழே இறங்குங்கள்" என்றார்! (ஒரு மாதிரியாகப் பார்த்ததாகத்தான் நினைவு!!)
"நாங்கள் லேட் ஆச்சுன்னா அப்படியே இதிலேயே ஏறி ஓடுவோம். நீ அப்படியே நில்லு! அதுவே மேலே போகும்"
"முதல் வரி தேவையா இப்போ?" என்றேன்.
"நீ சொன்னதுக்கு இது பெரிய விஷயம் இல்லை" என்றார்.
"இறங்கும்போதும் குதிக்காமல் கேஷுவலா நடந்து தாண்டு" என்றார் மனைவியிடம்.
மறுபடியும் சகோதரி முகத்தில் தீவிரம். இறங்குமிடம் நெருங்கியது. காத்திருந்து மறுபடி குதித்து பேலன்ஸ் செய்து நின்றார். இரண்டொருவர் திரும்பிப் பார்த்து விட்டுச் சென்றனர்.
வலது பக்கம் திரும்பி 4 வது நடைமேடையைத் தேடினோம். நாங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட ஒருவர் திரும்பி, "அப்படியே கீழே இறங்குங்கள்" என்றார்! (ஒரு மாதிரியாகப் பார்த்ததாகத்தான் நினைவு!!)
எனக்குப் புரிந்தது. இறங்கினோம். மாமாவுக்குச் சந்தேகம். "ஸ்ரீ... இது அதே பிளாட்பாரம் மாதிரி இல்லை? நாம் அங்கேயே இறங்கி விட்டோமோ?"
"அட ஆமாம்! வாங்க"
அவர் அப்படியும் படிக்கட்டின் ஓரம் வழியாக நடந்துசென்று ஆராய்ந்து விட்டு வந்து சிரிக்கத் தொடங்கினார்.
ஆக, எழும்பூர் முதல், 4 வது நடைமேடைக் குழப்பத்தில் எங்கள் சகோதரியின் எஸ்கலேட்டர் ஆசை தீர்ந்தது. ரொம்ப நேரம் கண்ணில் நீர் வர, சிரித்துக் கொண்டிருந்தோம்.
ஆஹா... சிலசமயம் குழந்தைத்தனமாக இப்படியும் நேர்ந்து விடுகிறது இல்லை..? ஆனாலும் மனசில் அசைபோட்டு ரசிக்கத் தக்க ரம்யம் இது மாதிரி நிகழ்வுகளில் இருக்கத்தான் செய்கிறது!
பதிலளிநீக்குஹாஹாஹா, எஸ்கலேட்டர்னாலே எனக்கு அலர்ஜி, என்னோட அலர்ஜியைப் போக்க எங்க பையர் ஹூஸ்டனின் மாலில் பெரும் முயற்சி செய்து தோற்றுப் போனார். அதுக்கப்புறமா லிஃப்ட் அல்லது படிகள் தான் உபயம். படி ஏறி இறங்கிடலாம் போலிருக்கு, இந்த எஸ்கலேட்டரில் போக. :)))
பதிலளிநீக்குஅது சரி, பல்லவன், வைகை எல்லாம் நாலாவது நடைமேடையிலிருந்து தானே கிளம்பிட்டு இருந்தது? இப்போ மாத்திட்டாங்களா? ஹிஹிஹி, அல்லது நீங்க நாலாவது நடைமேடையிலேயே நிற்பது தெரியலையா?
பதிலளிநீக்குபி.கு. நீங்க தான் அசடு வழியணுமா என்ன? நாங்களும் வழிவோமுல்ல! :)))))))))
இதைச் சொல்ல மறந்துட்டேனே, உங்க பதிவை நானாத் தான் வந்து பார்க்க வேண்டி இருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அப்டேட் ஆகிறதே இல்லை. :(
பதிலளிநீக்குநடைபாதை புரியுது, நடைமேடை?
பதிலளிநீக்குஎரர் மெசேஜ் வருது! :))) நடைமேடை=ப்ளாட்ஃபார்ம் அப்பாதுரை,
பதிலளிநீக்குஎளிய தமிழில் சொல்லிட்டேன். நடைமேடைனு சொல்வது நம்ம வழக்கம். அது எங்கள் ப்ளாகுக்கும் தொத்திண்டிருக்கு போல! :))))))
இப்போது எல்லா இடங்களிலும் வந்து விட்டது. 20 வருடங்களுக்கு முன் ஓரிரு கடைகளில் மட்டுமே பெங்களூரில் எஸ்கலேட்டர் உண்டு. பலர் இப்படித் திணறுகிற, ஏறியதும் கண்ணில் நீர்வரச் சிரித்து நிற்பதைப் பார்க்க நேர்ந்ததுண்டு:)!
பதிலளிநீக்குஎனக்கு ஜோடியாக இருப்பார் போலிருக்கிறதே உங்கள் சகோதரி.
பதிலளிநீக்குபோனவாரம் தான் அதில் முதல்முறையாக வெற்றிகரமாக (ஏற மட்டும்!) ஏறினேன். இனிமேல் தான் இறங்கக் கற்றுக் கொள்ளணும்!
இதோ என் பதிவு:http://wp.me/p244Wx-sZ
இந்த பதிவு போட்டதைப் பற்றி உங்க சகோதரி கிட்ட சொல்லிட்டீங்களா?
பதிலளிநீக்கு//முதல் வரி தேவையா இப்போ?" என்றேன்.// ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஆமா சார் எழும்பூரில் இந்தக் குழப்பம் உண்டு.. ஆனால் அடிக்கடி செல்லும் உங்களுக்கே இப்படி ஒரு குழப்பமா...
ஒரு அப்பாவி அக்காவை வைத்து சிறிது சிறிது விளையாண்டு இருக்கிறீகள்... :-)
பதிலளிநீக்குஉண்மைதான் பாலகணேஷ். ரொம்ப நேரம் சிரித்துக் கொண்டிருந்தோம்! நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்.
வாங்க கீதா மேடம்... ரஞ்சனி மேடம் கூட இதே போல அனுபவத்தை எழுதியதற்கான லிங்க் கொடுத்திருக்கிறார். அவரும் சமீபத்தில்தான் எழுதியிருக்கிறார். சீனுவும் எங்கள் பதிவுகள் அப்டேட் ஆகவில்லைன்னு சொல்லியிருக்கார். கூகிளாண்டவருக்கு ஒரு தேங்காய் உடைக்க வேண்டிக்கலாம்னு யோசனை!
அப்பாதுரை... சட்டென எல்லாவற்றையும் மாற்றி விட்டேன்! நன்றி!!
நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி ரஞ்சனி மேடம். படித்து, பின்னூட்டமிட்டு, பதிலும் பெற்று, அதற்கும் பதில் சொல்லி விட்டேன்!!!! :))))
வாங்க ஹேமா(HVL).. இன்னும் சொல்லவில்லை! சொன்னாலும் கோபித்துக் கொள்ள மாட்டார்! கீழேயே என் அசட்டுத்தனமும் கலந்திருக்கு இல்லையா...!
வாங்க சீனு... காணோமேன்னு தேடினேன்.
முதன் முதலில் 1978 லில் கல்கத்தாவில் எஸ்கலேட்டரில் ஏறி இருக்கிறேன் அது தான் முதல் அனுபவம். அது ஒரு வங்கியில் அமைத்து இருந்தார்கள். அப்புறம் பலவருடங்கள் கழித்து டெல்லி மெட்ரோ ஸ்டேஷ்ன் பார்க்க போனபோது. அதன் பின் பயம் போய் விட்டது அமெரிக்கவில் எல்லா மால்களிலும், ரயில் நிலையங்களிலும் ஏறி பழகி விட்டது. முதலில் கால் வைக்கும் போது கொஞ்சம் பயம் தான். சென்னையிலும் போர்டர்கள் எஸ்கலேட்டரைத்தான் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் பின் ஓட அது தான் வசதியாக இருக்கிறது.
பதிலளிநீக்கு//திருக்கடையூர் செல்ல புவனேஸ்வர்- ராமேஸ்வரம் ரயிலில் ஏற எக்மோர் சென்றோம். //
பதிலளிநீக்குஅட, ஒரு ஊருக்குச் செல்வதைச் சொல்ல எத்தனை ஊர் பாருங்கள்!
//நடைமேடைனு சொல்வது நம்ம வழக்கம். //
பதிலளிநீக்குமுதல் முதல் இப்படிச் சொல்வதை ஒருவர் ஆரம்பித்து வைத்தார். அந்த ஒருவர் இவர் இல்லை. அப்புறம் இப்படிச் சொல்வது இவர் வழக்கமானது. அப்புறம் மற்றவரும் இப்படிச் சொல்ல ஆரம்பிக்கும் பொழுது இவர் அந்த யாரோ ஒருவரை சுத்தமாக மறந்தே போய்...
இவர் உங்களுக்குத் தெரியும். ஆனா, அந்த யாரோ ஒருவரைத் தெரியாமலி- ருக்கலாம்! அப்படியானால், அந்த யாரோ ஒருவர் யார்?..
எப்பவும் நினைத்துப் பார்த்துச் சிரிப்பதற்கென்றே இப்படி சில பசுமையான நினைவுகள் அமைந்து விடுகின்றன :-)
பதிலளிநீக்குஉறவுகளுக்குள்ளான சீண்டலும், சிணுங்கலும் அற்புதமாக பதிவாகியிருக்கிறது. 'முதல் வரி தேவையா இப்போ?' என்ற இடத்தில்
பதிலளிநீக்குஅக்காவும் அப்படியே செய்துவிடப் போகிறாரே என்கிற பயமும் அந்த முதல் வரியை தானும் சொல்லிக் காட்டி அக்காவை குழப்பிவிடாதவாறு அக்காவின் கணவருக்கு தெரியப்படுத்தியவாறே அவரிடம் எரிச்சல் கொள்வதும் "நீ சொன்னதுக்கு இது பெரிய விஷயம் இல்லை" என்ற அத்திம்பேரின் அதே வழியில் அவரின் பதிலடியும்....
//"இறங்கும்போதும் குதிக்காமல் கேஷுவலா நடந்து தாண்டு" என்றார் மனைவியிடம்.//
'எதைச் செய்யக்கூடாதோ அதைச் சொல்லி அப்படிச் செய்யாதே' என்று சொல்வது சிலர் வழக்கம்!
அந்த 'வழக்கம்' அப்படியே இந்த வரிகளில் வந்திருக்கிறது!
அனுபவப்பட்டதை கதை போல சுவாரஸ்யமாகச் சொன்னதற்கு
கங்கிராட்ஸ்!
ஜீவி சார்..
பதிலளிநீக்குபின்னூட்டத்தில் புதிர்? இவரைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் யார்?
//அட, ஒரு ஊருக்குச் செல்வதைச் சொல்ல எத்தனை ஊர் பாருங்கள்!//
அப்போ இப்படி இன்னும் எலாபரெட் செய்திருக்கலாம்! திருக்கடையூர் செல்ல புவனேஸ்வர்- ராமேஸ்வரம் ரயிலில் ஏறி மாயவரத்தில் அல்லது சீர்காழியில் இறங்கி திருப்பாதிரிப்புலியூர் வழியாக போகலாம் என்று எக்மோர் சென்றோம்! எப்படி?
வார்த்தைகளின் அமைப்பை ரசித்ததற்கும் நன்றி.
நன்றி அமைதிச்சாரல்.
பதிலளிநீக்குஜீவி சார்... 'இலக்கியம்' பதிவு படிக்கவில்லையா?
பதிலளிநீக்குஉங்கள் அக்காவின் எஸ்கலேட்டர் அனுபவம் சிரிப்பை வரவழைத்து விட்டது.
பதிலளிநீக்குநன்றி ஸாதிகா.
பதிலளிநீக்குஎத்தனைத் தேங்காய் உடைத்தீர்கள்:)?
பதிலளிநீக்குஒருவாறாக இன்று விட்டுப்போன எல்லாப் பதிவுகளும் ரீடரில் அப்டேட் ஆகிவிட்டன!
//எத்தனைத் தேங்காய் உடைத்தீர்கள்:)? //
பதிலளிநீக்குஎல்லாப் புகழும் 'திடங்கொண்டு போராடு' சீனுவுக்கே!
நல்ல அனுபவம்தான்! எங்கள் பெற்றோரை காசி யாத்திரை அனுப்ப எக்மோர் சென்ற போது நாங்களும் முதல் முறையாக எஸ்கலேட்டர் அனுபவம் பெற்றோம்! முதலில் ஒருமாதிரி பயம் இருந்தது உண்மைதான்! சுவாரஸ்யமான பதிவு! நன்றி!
பதிலளிநீக்குஇந்த அனுபவம் இப்பவும் ந்ந்டுக்கம். நீங்க சிரிச்சதை அக்காகிட்டப் போய்ச் சொல்றேன் பாருங்க.
பதிலளிநீக்கு:)
அருமையான அனுபவ விவரிப்பு.
கீழ இறங்கும்போது கண்ணை மூடிக்கணும்னு தோணும். நம்ம ஊர் தேவலைம்மா. வெளீயூர்ல அதுவும் ஸ்விஸ்ல நெட்ட நெடுவா குறுகலா இருக்கும்பாருங்க. நடுக்கம்தான்.
நன்றி கோமதி அரசு மேடம்...
பதிலளிநீக்கு1978 இல்.... அட!
போர்ட்டர்கள் பின்னால் ஓட...:)))
நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி 'தளிர்'சுரேஷ்.
நன்றி வல்லிம்மா. நான் சிரிச்சது என் அசட்டுத் தனத்துக்குத்தானே...! எனவே நீங்கள் தாராளமாகச் சொல்லலாம்! :))
கல்கத்தாவில் என் கணவரின் அண்ணா ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவில் அமைக்கப்பட்டு இருந்த எஸ்கலேட்டர் பார்க்க அழைத்துப் போனார்கள். முதல் முதலில் ஏறிய அனுபவம் அப்போது தான். 1978ல் காசி போக சாரின் அண்ணாவீட்டில் தங்கி கல்கத்தா சுற்றிப்பார்த்து விட்டு பின் காசி போய் வந்தோம்.
பதிலளிநீக்குமுதன் முதலில் பெங்களூர் அபிநயா சினிமா தியேட்டரில் எஸ்கலேட்டர் அனுபவம் ..
பதிலளிநீக்குபிறகு பல விமான நிலையங்கள்..
இப்போது கோவை ப்ரூக் பீல்டு மால என்று பழகிவிட்டது ..
Sollunga Daddy Sollunga..
பதிலளிநீக்குWhy do we call it 'escalator' which is used to bring the people 'downstairs' too..?
I hate Escalator
பதிலளிநீக்கு