புதன், 6 மார்ச், 2013

(ம)ம.போ.ம.வ.... நிலவும் மயிலும்

                                           
                                                   
                                                    
                                                   நலமா நிலவே...

                                                   வில(க்)கிச் சென்ற நீ

                                                   ஏன் உன் நினைவுகளை மட்டும்
                                                   என்னிடம் விட்டுச் சென்றாய்?

                                                   

                                                    தளும்புகிறது இன்னும்
                                                    என் மனசு
                                                    வில(க்)கிய
                                                    காரணமறியாது..

                                                   தொலைக்காமல்

                                                   வைத்திருக்கிறேன் உன்
                                                   நினைவுகளைப் பத்திரமாக.
                                                   கலையவில்லை இன்னும்
                                                   உன் கனவுகள் என்னிடம்...

                                                  

                                                   நலமா நிலவே..

                                                   நான் துளியாவது

                                                   மிச்சமிருக்கிறேனா
                                                   உன்
                                                   நினைவில்?


====================================

மயில் பெண்ணே....

                                                

                                                வண்ணத் தோகை
                                                அமையாத
                                                சோகமா மயில் பெண்ணே...


                                               

                                                நிறம் என்னும்
                                                வரம்
                                                உடலிலும்
                                                அமையாத வருத்தமா கண்ணே..

                                                கைம்மையின்

                                                நிறமல்ல,
                                                களங்கமில்லா நிறம் அது!


                                                

                                                நிறத்தில் என்ன இருக்கிறது?

                                                வெண்மை
                                                தூய்மையின் நிறம்
                                                என்று
                                                யார் சொல்வார்
                                                உன்னிடம்?   

                         

25 கருத்துகள்:

  1. வரவர என் மூளை டல்லாகிக்கொண்டு வருகிறது. ம)ம.போ.ம.வ....என்றால் என்னவென்று புரியமாட்டேனென்கிறது? என்ன செய்யலாம்?

    பதிலளிநீக்கு
  2. கவிதைகள் நல்லா இருக்கு....

    டைட்டில் ?

    பதிலளிநீக்கு
  3. அத் ஒண்ணும் இல்லை. கீதாசாம்பசிவம் அவர்களிடமிருந்து இது பிடித்துக் கொண்டுவிட்டது. ஷார்ட் ஹாண்ட்:)
    புரியாது. சொன்னவரே விளக்கவேண்டும்:)
    கவிதைகள் எளிமை, அருமை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. படங்களுக்கு ஏற்ற அருமையான கவிதை.
    காதலி ஏன் பிரிந்து சென்றாள் உண்மை அறிய துடிக்கும் கவிதை.

    மலரும் நினைவுகளில் ” மறந்து போகாத மனவலியை தரும் ”கவிதையா? தலைப்புக்கு சரியான விளக்கமா ஸ்ரீராம்.


    கைம்மையின்
    நிறமல்ல,
    களங்கமில்லா நிறம் அது!//

    அருமை.

    பதிலளிநீக்கு
  5. அருமை. தலைப்புக்கான விளக்கம் அறியக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. கவிதைகள் எல்லாம் அருமை....

    நீங்களும் சுருக்க ஆரம்பித்து விட்டீர்களே...!

    பதிலளிநீக்கு
  7. கவிதைகள் அருமை.

    // நிறத்தில் என்ன இருக்கிறது?
    வெண்மை
    தூய்மையின் நிறம்
    என்று
    யார் சொல்வார்
    உன்னிடம்? //

    அற்புதமாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  8. க.எ.ந.இ.ரொ.ர. அ.ச.எ.ஆ?தி?பா.கூ.ச???

    பதிலளிநீக்கு
  9. (மடக்கி) மடக்கிப் போட்ட மனவரிகள் என்று கொஞ்சநாள் முன்பு தலைப்பிட்டு 3 கவிதைகள் எங்கள் ப்ளாக்கில் வெளியாகின! அதே தலைப்பில் என்பதால் அதை அடைப்புக்குள் இட்டு, துணைத் தலைப்பாக 'நிலவும் மலரும்' என்று இட்டு இன்று ஒரு பதிவு.. எங்கள் நண்பர்களுக்கு அது நினைவிலிருக்கும் என்று நினைத்தேன்! மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு
  10. கோமதி அரசு மேடம்.. நீங்கள் சொல்லியிருக்கும் விளக்கம் கூட நன்றாயிருக்கிறது.

    கந்தசாமி சார்... தலைப்பு தந்தக் குழப்பத்தில் உள்ளே படிக்கவேயில்லை நீங்கள்! :)))

    நன்றி வெங்கட் நாகராஜ்.

    வல்லிம்மா... அளுதுடுவேன்....! :)))

    நன்றி ராமலக்ஷ்மி... தலைப்புக்கு விளக்கம் கொடுத்தாச்!

    நன்றி கணேஷ்..

    நன்றி D D

    நன்றி ராம்வி.

    கீதா மேடம்... நீ.வ.சொ.உ.பி.எ.பு

    பதிலளிநீக்கு
  11. அதாவது.......நீங்களே வந்து சொன்னால்தான் உங்கள் பின்னூட்டம் எங்களுக்குப் புரியும்! :)))))

    பதிலளிநீக்கு
  12. நன்றி:). இனி மறக்க மாட்டோம். இதே அடைமொழியில் தொடரலாம்!

    பதிலளிநீக்கு
  13. (ம)ம.போ.ம.வ.... நிலவும் மயிலும்//இப்படி எல்லாம் தலைப்பிட்டு மூளையை ரொம்ப காயவைக்கின்றீர்களே சார்.

    பதிலளிநீக்கு
  14. ஏ இ கொ வெ உ.....

    //ஏ இ கொ வெ உ..... // இதற்கு என்ன அர்த்தம் என்று மறந்தாலும் மறந்து விடுவேன், இங்கேயே சொல்லி விடுகிறேன் ஏன் இந்தக் கொலைவெறி உங்களுக்கு

    பதிலளிநீக்கு
  15. ஹிஹி, ஸ்ரீராம், அவ்வளவு கஷ்டமாவா இருக்கு? உங்களோட புதிரை அவிழ்த்துட்டேன். பதிலை அப்புறமாப் பார்த்தேங்கறது வேறே விஷயம் ஆனால் புரிஞ்சுண்டேன்.:)))))

    நான் சொன்னது:

    க.எ.ந.இ.=கவிதைகள் எல்லாம் நல்லா இருக்கு

    ரொ.ர.= ரொம்ப ரசிச்சேன். அ.ச.எ.ஆ?=அது சரி என்ன ஆச்சு?
    தி?=திடீர்னு?
    பா.கூ.ச???=பாஸ் கூட சண்டையா? :)))))))))

    பதிலளிநீக்கு
  16. (மடக்கி) மடக்கிப் போட்ட மனவரிகள் என்று கொஞ்சநாள் முன்பு தலைப்பிட்டு 3 கவிதைகள் எங்கள் ப்ளாக்கில் வெளியாகின! //
    ஆஹா ! இது தான் தலைப்பா! மன்னித்துக் கொள்ளுங்கள் நான் ஏதோ சொல்லிவிட்டேன்.

    பதிலளிநீக்கு

  17. ஆஹா...படங்களோட சேர்ந்து கவிதை அழகு! கோமதி மேடம் உங்கள் தலைப்பு கூட நல்ல தான் இருக்கு

    பதிலளிநீக்கு
  18. மன்சிக்கோப்பா ஸ்ரீராம்.
    மறந்து போச்சு. கவிதைகள் எல்லாமெ அழகாக் கவிதை மாதிரியே இருக்கு.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. படம் எடுத்தவங்க சரியா எடுக்கக்கூடாதோ? மொதல் படத்துல பொம்பளை (தானே?) என்ன கலர் புடவை கட்டியிருக்காங்கனே தெரியலியே?

    பதிலளிநீக்கு
  20. முதல் படத்தில் பொம்பளை என்ன கலர் புடவை கட்டியிருக்காங்கன்னே தெரியலியே!
    அப்பாதுரை சார் கண்ணாடி பவர் செக் செஞ்சிக்குங்க. அவங்க போட்டிருப்பது பாண்ட், சர்ட்.

    பதிலளிநீக்கு
  21. நிலவும் மயிலும் அழகு.
    கவிதை மிக அழகு.
    ஆனால் டைட்டில் தான் புரியவில்லை.
    எனக்குத்தான் புரியவில்லை என்று நினைத்தேன்.பின்னூட்டத்தை பார்த்த பிறகு நிறைய பேர் என்னை மாதிரி இருக்கிறார்கள் என்பது திருப்தியளிக்கிறது.

    பகிர்விற்கு நன்றி.



    பதிலளிநீக்கு
  22. வரிகளும் படங்களும் அழகு! வாழ்த்துக்களும் நன்றியும்!

    பதிலளிநீக்கு
  23. தலைப்பும், வரிகளும், பின்னூட்டங்களும் அருமை...:)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!