ஞாயிறு, 22 ஜூன், 2014

ஞாயிறு 259 :: மேலும் ஒரு கல்வெட்டு!

                                             
                                        

19 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.
    அரிய வரலாற்றுப்பொக்கிஷம் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. அகிலன் எழுதிய, "வேங்கையின் மைந்தன்" நாவலில் இந்த விபரங்களை வைத்தே எழுதி இருப்பார். கொடும்பாளூர் இளவரசன் ஒருவனும், வந்தியத் தேவனும் ஈழம் சென்று பாண்டிய நாட்டு மணிமுடியையும், இந்திரன் அளித்த ரத்தினஹாரத்தையும் எடுத்து வந்த சாகசங்கள் வரும். வீட்டிலேயே புத்தகம் இருந்தது. கல்கி பைன்டிங். காணாமல் போனது எப்போனு தெரியலை! :(

    பதிலளிநீக்கு
  3. வரலாற்றுச்சிறப்பு மிக்க கல்வெட்டு ..
    பகிர்வுக்கு நன்றிகள்.!

    பதிலளிநீக்கு
  4. நிவந்தனங்கள் அப்படின்னா என்ன நயினா ?

    செட்டில்மெண்ட் பத்திரமாக இருக்குமோ ? அதை அவங்க
    பத்திரமா வச்சுக்கணுமே ? கவலையா கீது.

    நிவந்தனங்கள் அப்படின்னா என்ன நயினா ?

    செட்டில்மெண்ட் பத்திரமாக இருக்குமோ ? அதை அவங்க
    பத்திரமா வச்சுக்கணுமே ? கவலையா கீது.

    சுப்பு தாத்தா
    www.kandhanaithuthi.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. நிவந்தனங்கள் தானமாக அளிக்கப்பட்டவைகளைக்குறிக்கும். :)

    பதிலளிநீக்கு
  6. மன்னிக்கவும், அது நிவந்தங்கள் னு நினைக்கிறேன். நிவந்தனங்கள்னு வராது. அப்புறமா வந்து சரி பார்த்துக்கிறேன். அவசரம் இப்போ.

    பதிலளிநீக்கு
  7. நிவந்த(ன)ம் என்றால் என்ன? அந்தக்கால ராஜா / ராணிகள், தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட சில நிலங்களை கோயிலுக்கு தானமாகக் கொடுத்ததை நிவந்தம் என்று கல்வெட்டுகளில் பதிந்திருக்கின்றார்கள்.

    பதிலளிநீக்கு
  8. நிவந்தம், பெயர்ச்சொல்.

    நிபந்தனையுடன் ஒப்பந்தம்
    கோவில் சேவை.
    மொழிபெயர்ப்புகள்
    conditional grant ஆங்கிலம்
    விளக்கம்
    சோழர் ஆட்சிகாலத்தில் ஒரு கிராமத்தையோ/ஊரையோ ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு ஆண்டுதோறும் இவ்வளவு பொருள்/சேவைகளைச் செய்தால் வரி விலக்கு என்று அறிவிக்கும் வழக்கமிருந்தது. சில நேரங்களில் கோவிலின் முழு பராமரிப்பையும் அவ்வூர்களே ஏற்றுக்கொள்ளும். இது அவ்வூர்களை நிவந்தம் செய்து தருவதாக வழங்கபட்டது.
    பயன்பாடு
    அன்றைக்கு பரஞ்ஜோதிசோழன் 15 காசுகள் கொடுத்து நிவந்தம் ஏற்படுத்தினான். அந்த காசுகள் கொண்டு ஆடுகள் வாங்க நிவந்தம் கொடுக்கப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது(தினமலர் செய்தி)
    (இலக்கியப் பயன்பாடு)

    பதிலளிநீக்கு
  9. வரி விலக்கை இறையிலி எனக்குறிப்பிடும் வழக்கம் இருந்து வந்தது. :) இதன் மூலம் சில கிராமங்களே அப்படி இறையிலி கிராமங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

    பதிலளிநீக்கு
  10. வரலாற்றை சொல்லும் கல்வெட்டு! கல்வெட்டைப் பற்றிய கல்வெட்டு! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. கீதா சாம்பசிவம் சொன்னது போல எனக்கும் இந்தக் கல்வெட்டைப்படித்தபோது, அகிலன் எழுதிய ' வேங்கையின் மைந்தன்' தான் நினைவுக்கு வந்தது. கொடும்பாளூர் இளவரசன் இளங்கோவும் இலங்கை இளவரசி ரோகிணியும் நேசிக்கும் காட்சிகளை அத்தனை அற்புதமாக அகிலன் எழுதியிருப்பார். ஓவியர் வினுவும் போட்டி போட்டுக்கொண்டு அத்தனை அழகாய் வரைந்திருப்பார். இன்னும் அந்த நாவல் அந்த ஓவியங்களுடன் என்னிடம் இருக்கிறது! மலரும் நினைவுகளை தூண்டி விட்டதற்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  12. அருமையான கல்வெட்டு பகிர்வு.

    பதிலளிநீக்கு
  13. கல்வெட்டுப் பொக்கிஷம். இன்னும் பத்திரமாக இருப்பது அருமை. சரித்திரங்களை நிலைநிறுத்தும் இந்தக் லவெட்டுகளைப் போற்றுவோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!