சனி, 28 ஜூன், 2014

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்




1) கழுத்துக்குக் கீழே செயல்பாடற்ற நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே இவ்வளவையும் சாதித்திருக்கிறார் ராமகிருஷ்ணன்.
 
 
2) வி.கார்ட் ஸ்டெபிலைசர் என்றால், தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்நிறுவனத் தலைவர் கொச்சவுசேப் சிற்றிலப்பள்ளி என்பவரின் மனைவி ஷீலா. இவர், 'வி-ஸ்டார்' என்ற பெயரில், ரெடிமேட் ஆடைகளை தயாரித்து, விற்பனை செய்து வருகிறார். 
கணவரை போலவே, தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பெரிய பங்கை, ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும், செலவு செய்து வருகிறார். கேரளாவில், 'கிட்னி பவுண்டேஷன்' என்ற அமைப்பு, மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது சிறுநீரக கோளாறினால் அவதிப்படுவோருக்கு, இலவசமாக சிறுநீரகங்களை கொடுத்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த அமைப்பின் தலைமை பொறுப்பில் இருக்கும் கொச்சவுசேப், தன்னுடைய கிட்னி ஒன்றை, ஏழை ஒருவருக்கு தானம் அளித்து இருக்கிறார்.


3) ஜெயக்குமார் ஜெயித்த கதை (நன்றி சதீஷ்குமார் பிரணதார்த்திஹரன்)




 

4) பணம், காசு என அலையும் இந்த காலத்திலும் பணத்தை ஒரு பொருட் டாகப் பார்க்காமல் கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு மனிதநேயத்துடன் மருத்துவம் பார்த்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த டாக்டர் வி. ராமமூர்த்தி. 



 

5) ‘‘ஓடிக்கொண்டே இருந்திருந்தால் என்னை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்திருப்பேன்” என்கிறார் வெங்கடபூபதி.


(எங்கள் ப்ளாக் பிறந்து இன்றோடு ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. எனவே ஐந்து பாசிடிவ் செய்திகளோடு நிறுத்திவிட்டோம்!)
 

16 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா

    இன்றைய பகிர்வில் நல்ல தகவலை தந்துள்ளீர்கள் இவர்களின் சேவையை நினைக்கும் போது... நம்மைப்போன்றோர்கள் இந்த பூமியில் ஏன்வாழ்கிறோம் என்ற கேள்விதான் எழுகிறது நன்றி ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. பாஸிட்டிவ் பகிர்வுகள் மனதில் நேர்மறை சிந்தனைகளை விதைக்கின்றன.. பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  3. ஆய்க்குடி ராமகிருஷ்ணன் தானே. ஜனாதிபதி பரிசெல்லாம் வாங்கி இருக்கார். பல வருஷங்களாக இப்படி இருக்கார். நிறைய வந்திருக்கு இவரைப் பத்தி! அதான் + இலே நீங்களே எழுதினதா நினைச்சிருக்காங்க. :))))) பெங்களூரில் விபத்து நடந்தது. விமானப்படையோ, கப்பல் படையோ நேர்முகப் பேட்டியின் போது! நாற்பது வருடங்களுக்கு மேல் இருக்கும். :)

    பதிலளிநீக்கு
  4. டாக்டரைக் குறித்தும் அறிந்திருக்கிறேன். மூன்றாவது செய்தியை என்னால் படிக்க முடியலை. பெரிதாக்க முடியவும் இல்லை. :)

    பதிலளிநீக்கு
  5. நல்ல தகவல்கள் அண்ணா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. முதல் செய்தி நிறைய தடவை அவரைபற்றி படித்து இருக்கிறேன்.

    நல்ல மனம் கணவன் மனைவி இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    வெற்றிக்கு நண்பர்கள், மனைவியின் குடும்பம், எல்லாம் உதவியது மகிழ்ச்சி ஜெயக்குமார் அவர்களுக்கு.

    நானும் எங்கள் ஊர் டாகடர் திரு ராமமூர்த்தியை சந்திக்க வேண்டும் நினைத்துக் கொள்வேன் பார்த்தது இல்லை. ஆனால் என் மகனுக்கு கல்லூரியில் ஒருதடவை காலில் அடிபட்ட போது நண்பர்கள் இவரிடம் அழைத்து சென்ற இருக்கிறார்கள் 10ரூபாய் தான் வாங்கினார் என்று மகன் வியந்து பேசினான்.

    முதல் செய்தியில் உள்ள ராமகிருஷ்ணன் அவர்கள் வழிகாட்டியாக கொண்டு திரு வெங்கடபூபதி அவர்களும் அவர் வழியில் எல்லோருக்கும் உதவுவது மகிழ்ச்சி. தன் சோகத்தில் முடிந்த குடும்பவாழ்வை நினைத்துக் கொண்டு இருக்காமல் பிறருக்கு உதவ பெரிய மனம் வேண்டும்.
    அனைத்து செய்திகளும் நல்ல மனத்தை காட்டுகிரது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


    பதிலளிநீக்கு
  7. அருமையான செய்திகள்! இவர்களை போல் எல்லாரும் இருந்துவிட்டால் பூலோகம் சொர்கமே! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

  8. இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதால் நாட்டில் நிகழும் நல்லவை அறிய முடிகிறது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. முதலில் எங்கள் ப்ளாகிற்கு வாழ்த்துகள். ஐந்து ஆண்டுகள் ஓடியாச்சா.மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. வி ஸ்டார் நிறுவனத்தலைவிக்குமடாக்டர் ராமமூர்த்திக்கும், உறுப்புகள் செயலிழந்த நேரத்திலும் மற்றவர்களைக் கவனிக்கும் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கும் மனம் நிறைந்த வணக்கங்கள். நல்ல செய்திகளைக் கொடுத்து ஊக்குவிக்கும் எபிக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  11. (எங்கள் ப்ளாக் பிறந்து இன்றோடு ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. எனவே ஐந்து பாசிடிவ் செய்திகளோடு நிறுத்திவிட்டோம்!)//

    இதை எப்படி நேத்திக்குக் கவனிக்காமல் போனேன்னு தெரியலை! :)))) மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. நான் இப்பத்தான் கவனிச்சேன். அம்பது வருசமாயிடுச்சா?
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. அனைத்துமே அருமையான செய்திகள்.....

    ஐந்து வருடம் - வாழ்த்துகள் எங்கள் குழுவினருக்கு...

    பதிலளிநீக்கு
  14. நல்ல செய்திகள். தொகுப்புக்கு நன்றி.

    ஐந்தாம் ஆண்டு நிறைவுக்கு ஆசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்:)!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!