எல்லோரும் முதலிலேயே நிறைய எழுதி விட்டார்கள். நான் இப்போதுதான் படித்தேன். ஹிஹி..எனவே இப்போது எழுதுகிறேன்.
காலமும் இடமும் மட்டும் சொல்லி சின்னச் சின்னதாய் முதல் சில அத்தியாயங்கள் வரும்போது மண்டை காய்ந்து போனாலும், காரணமாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டே படிக்க வைத்தது. நாவலில் பின்னால் இதன் தொடர்பு என்ன என்று புரிய வேண்டுமே, அதற்கு இவற்றை இவற்றை எல்லாம் சரியாக நினைவில் வேண்டுமே என்ற கவலையும் இருந்தது.
கொஞ்சம் நம்ம மூன்றாம்சுழி அப்பாதுரை எழுதும் பாணியில் கதை!
அதேசமயம் நம்மூரில் விஜயகாந்த், அர்ஜுன், வெளியூரில் அர்னால்டும் செய்யும் காரியம்தான்கதை! தாய்நாட்டை அல்லது உலகைக் காக்கும் வேலை. மற்ற சாதாரண மக்களுக்கு இப்படி ஒன்று நடப்பது கூடத் தெரியாது.
பதினைந்து மூன்றில் வாங்கிப் படித்திருந்தாலும் சொந்தமாக ஒன்று வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்! :))) அனன்யாவுக்கு நன்றி சொல்லவேண்டும்.
ஒரே ஒரு இடம் மட்டும் சொல்லாமல் விட்டு விட்டாரா, நான்தான் கவனமாகப் படிக்கவில்லையா, அல்லது படித்துப் புரிந்து கொள்ளவில்லையா என்று புரியவில்லை. அது பெரிய விஷயம் இல்லை என்பதால் விட்டு விட்டேன். தேவராஜ் தன ஆட்களைத் தானே கொன்று டபுள் கேம் ஆடியிருப்பதாக அனந்த் நினைக்குமிடம்.
காலச்சக்கரம் நரசிம்மாவின் கதைகள் கூட இதேபோன்றதொரு அமைப்பில் இருப்பதனாலேயே எனக்கு சுவாரஸ்யமாகப் பட்டன. இந்திரா சௌந்தரராஜன் கூட இதுபோன்ற மர்மக் கதைகள் எழுதி இருக்கலாம். படித்ததில்லை. பாலகணேஷ் முன்பு ஓரிரு பதிவுகளில் சொல்லியிருந்ததிலிருந்து அவர் கதைகள் படிக்கவேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது.
நம்ப முடியாத வேகமும், கருவும் கதைக்கு பலம் சேர்க்கின்றன. எந்த இடத்திலும் போரடிக்கவில்லை.
6174
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
தாங்கள் படித்த அனுபவத்தை வைத்து பகிர்ந்த பதிவை பார்க்கும் போது புத்தகத்தை வேண்டி படிக்கச்சொல்லுகிறது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
பதிலளிநீக்குத.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
படித்துப் பிடித்ததன் பகிர்வு! மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். சிறப்பான விமர்சனம்.
பதிலளிநீக்குஅனன்யா என்னிடமும் படிக்க சொல்லி சொல்லியிருக்கிறாள். படிக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். அந்த எண்ணத்திற்க்கு வலுசேர்க்கிறது, தங்கள் விமர்சனம்.
பதிலளிநீக்குநல்லா சொல்லியிருக்கீங்க.. தேவராஜ் பத்தி நீங்க சொல்லியிருக்கிறது எனக்கு சரியா நினைவில் இல்லை.. :)
பதிலளிநீக்குஅருமையான விமர்சனம். கதையை படிக்க ஆவலை ஏற்படுத்துகிறது.
பதிலளிநீக்குஇந்திரா செளந்தரராஜன் கதைகள் படித்து இருக்கிறேன். நல்ல விறு விறுப்பாய் இருக்கும் சித்தர்கள் பாடல்களும் அதில் இடம் பெறும்.
கொஞ்சம் நம்ம மூன்றாம்சுழி அப்பாதுரை எழுதும் பாணியில் கதை! //
பதிலளிநீக்குகதை அமானுஷ்யம் நிறைந்த திகில் கதையாய் இருக்கும் இல்லையா!
படிக்க நன்றாக இருக்கும்.
நீங்க சொல்றதைப் பார்த்தால் அப்பாதுரையும், சுஜாதாவும் கலந்து கட்டி அடிச்சிருப்பாங்க போல! :)))
பதிலளிநீக்குஇந்தக் கதையையோ, இதன் பெயரையோ இன்று தான் முதல் முதலாகக் கேள்விப் படுகிறேன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். :)))))
கீதாசாம்பசிவம் அவர்களின் கருத்தே
பதிலளிநீக்குஎன் கருத்தும்,,,
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
What a coincidence! கடந்த நான்கு நாட்களாக இந்த வீட்டிலிருக்கும் இந்த (நூலக) புத்தகத்தை படிக்கலாமா வேண்டாமா என்ற யோசித்தபடியிருந்தேன். படித்து விடுகிறேன்.
பதிலளிநீக்குஅருமையான விமர்சனம்..
பதிலளிநீக்குவிமர்சனம் அருமை. படிக்கத்தூண்டுகிறது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஅத்தனை நீள புத்தகத்தைப் படித்து விமரிசனம் செய்வது சாதாரணமல்ல. செய்திருக்கிறீர்கள் என்பதே பாராட்ட வேண்டியது.
புதிர்கள் என்றவுடன் ஆவல் அதிகரிக்கிறது...!
பதிலளிநீக்குகாலங்காத்தால இந்த புத்தகம் பற்றிய தகவலும் ஒரு விமரிசனமும் படித்து ‘வெச்சாங்கடா வேட்டு ஒரு முந்நூறு ரூபாய்க்கு’ ங்கற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது. அவரின் மூஞ்சி புத்தகம் பக்கம் போனா நிறைய ப்ராமிஸும் சாத்தியங்களும் கண்ணில் படுகிறது. அப்றம் என்ன. வாங்கிப் படிச்சு மனசில ஓடுற எண்னங்கள பகிர வேண்டியது தான - இப்பத்திக்கு வேறு பொளப்புன்னு உண்டுமா என்ன? ஆனா இங்க இருக்கிற பதிவுகளப் பாத்தா நாம ரொம்ப லேட்டுன்னு புரியுது. ம்ஹூம் என்ன பண்றது!
பதிலளிநீக்குநீங்க சொல்றதைப் பார்த்தால் மெகா சீரியலாய் டிவியில் வந்து விடும் போலிருக்கே !
பதிலளிநீக்குபல்சக்கரம்... படிக்கச் சொல்கிறது.
பதிலளிநீக்குநல்லதொரு விமர்சனம் ஸ்ரீராம் சார்... ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாகச் சென்றாலும் தொடர்ந்து வாசிக்க வைக்கும் கதை
பதிலளிநீக்குநல்ல விமர்சனம். படிக்க முயல்கிறேன்.
பதிலளிநீக்கு