ஆரோக்கியச் சமையல் மறுபடி! மறுபடி ஹேமாவின் கைவண்ணம்.
சர்க்கரை
நோயாளிகள் எல்லாம் இருப்பார்களே... இது எப்படி ஆரோக்கியச் சமையல்
என்பவர்களுக்கு... ஓட்ஸ் என்றாலே ஆரோக்கியம்தானே!!! ஹிஹிஹி...
ஓட்ஸை
எடுத்து இலேசாக வறுத்துக் கொள்ளவும். கொஞ்சம் முந்திரிப் பருப்புகளையும்
வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஒருமாதிரி இருக்கும் ஓட்ஸ் வாசனையை மாற்ற
முந்திரிப்பருப்பு உதவும்!
ஒன்றுக்கு முக்கால் அளவு
சர்க்கரை எடுத்திருந்தார் ஹேமா. எனக்கென்னமோ இன்னும் ஸ்வீட் இருக்கலாம்
என்று தோன்றியது. எனவே சர்க்கரை அளவை படிக்கும் உங்கள் இஷ்டத்துக்கே
விட்டு விடுகிறேன்.
வாணலியில் சர்க்கரை மூழ்கும் அளவு
தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி கிளறி, பாகு பதம் வந்ததும் - ஓரளவு வந்தாலே
போதும் - அதில் மாவை வீட்டுக் கிளறி இறக்குமுன் ஒன்று அல்லது இரண்டு முட்டை
நெய் வீட்டுக் கிளறி இறக்கவும்.
( "ஆமாம் ஹேமா... முட்டை, முட்டை என்கிறீர்களே... முட்டை அசைவம் இல்லையோ?"
"ச்சீ... அல்பம்.... முட்டை என்பதை ஒரு டீஸ்பூன் என்று சொல்லலாம்"
"அப்போ அப்படியே சொல்லி விட வேண்டியதுதானே..")
ஏற்கெனவே ஒரு 'முட்டை' நெய் ஊற்றி பரத்தி வைத்திருக்கும் தட்டில் பரப்பி வில்லைகளிட்டு விடலாம்.
மசூர்பாகில், கடலை மாவுக்குப்பதில் ஓட்ஸ் போட்டிருக்கா? ஓட்ஸை அரைப்பதைப் பற்றி ஒண்ணும் சொல்லலியே?
பதிலளிநீக்கு"முட்டை" - எந்தச் சொல்லாடல் நான் திருனெல்வேலியில் இருக்கும்போது (30 வருடங்களுக்கு முன்) கேட்டது. எங்க பெரியம்மா, ஒரு முட்டை எண்ணெய் விட்டுக்கோன்னுலாம் சொல்லுவா. இது எந்தப் பகுதியில் பேசும் வழக்கம்?
படத்தைப் பார்த்தா சாஃப்டா இருக்குமா கடினமா இருக்குமான்னு தெரியலை. பேசாம, புதிர்ல முதலில் 1000 பாயிண்ட்ஸ் வாங்குறவங்களுக்கு பார்சல் பண்ணினா நல்லது.
நான் கொஞ்சம் liquid ஆக இதைச் செய்து வருகிறேன் . பாகு பதம் என்கிற கவனம் தேவை இல்லை . but nevertheless innovative
பதிலளிநீக்குஆமாம், நெல்லைத்தமிழன். அரைத்துக் கொள்ளவேண்டும். அந்த வரி விடுபட்டுப்போய் விட்டது! முட்டை கணக்கு எனக்கும் தெரியும். சும்மா தமாஷுக்குச் சொன்னேன்!
பதிலளிநீக்கு//பேசாம, புதிர்ல முதலில் 1000 பாயிண்ட்ஸ் வாங்குறவங்களுக்கு பார்சல் பண்ணினா நல்லது. //
ஹா... ஹா... ஹா... ஆனால் சாப்டா softஆ நல்லாத்தான் இருந்தது நெல்லைத்த தமிழன்.
:))
நன்றி அபயா அருணா.
பதிலளிநீக்குஅட! ஸ்வீட்டு நல்லாத்தான் இருக்கு...ஆனால் என்ன...நாங்களே ரொம்ப ஸ்வீட்டுங்கோ....இருந்தாலும் ஈர்க்குதுதான் ஸ்வீட்டு ரொம்ப பிடிக்குமே...
பதிலளிநீக்குகீதா: அவல் மைசூர்ப்பாகு, சிறுதானிய மைசூர்ப்பாகு (அதாங்க வரகு ,சாமை,தினை எல்லாம் போட்டு..இல்லை தனித்தனியாக....) இதுவும் சாப்பிட முடியாது என்றாலும் செய்து பார்ப்பதில் என்ன!! ஹும் டிசையர் சர்க்கரை போட்டுச் செய்துப் பார்த்துட வேண்டியதுதான்...
அட தோழி ஹேமா எங்க ஊர்ப்பக்கமா??!! முட்டை அதான் இந்தக் கேள்வி...ஒரு முட்டை என்றால் நீங்கள் சொல்லும் அளவு...ஒரு முட்டைக் கரண்டி என்றால் முட்டை போன்று அளவில்குபெரிய குழி கரண்டி இருக்குமே அந்த அளவு எங்கள் வீட்டில் சொல்லுவது வழக்கம்.
மைசூர் பாகு...போல ஓட்ஸ்பாகா...செய்திடலாம்...
பதிலளிநீக்குஓட்ஸ்பாகு நன்றாக இருக்கிறது. மைசூர்பாகுக்கு நிறைய நெய் வேண்டும். இதற்கு இரண்டு மூன்று முட்டை நெய் போதும் என்பது நல்லா இருக்கே!
பதிலளிநீக்குஓட்சை மாவாக்கிக் கொள்ள வேண்டுமா /அதில் மாவை வீட்டுக் கிளறி இறக்குமுன் ஒன்று அல்லது இரண்டு முட்டை நெய் வீட்டுக் கிளறி இறக்கவும்./
பதிலளிநீக்குஸூப்பர் அயிட்டம் நண்பரே
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகடலைமாவு போட்டு மைசூர்பாகு என்று பொருந்தாத பெயர் வைப்பதை விட ஓட்ஸ்மாவு போட்டு தயாரித்து அந்தப் பெயரையே வைத்திருப்பது நன்றாகத்தான் உள்ளது. சமயம் வாய்க்கும் போது செய்து பார்த்து விடுகிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
செய்துப் பார்க்க வேண்டிய
பதிலளிநீக்குபட்டியலில் சேர்த்தாச்சு..
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
சாப்பிடத் தோன்றுகிறது நண்பரே
பதிலளிநீக்குஇப்படியும் ஒரு பாகு உண்டா?
பதிலளிநீக்குஅனியாயத்துக்குப் பாகு பதிவு எல்லாம் போடுகிறீர்கள்.
பதிலளிநீக்கும்ஹூம் நான் ஒத்துக்க மாட்டேன். இருந்தாலும் பார்க்க நன்றாக இருக்குன்னு சொல்லிக்கிறேன்.
கீதா எங்கே காணோம்.
எந்த முட்டை(அளவு ) என்று சொல்லி விடுங்கள்,அந்த அளவு கலந்து கொள்கிறோம் :)
பதிலளிநீக்குவித்தியாசமான சமையல் வகை. செய்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி !
இந்த பாகும் நன்றாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. செய்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்குசெஞ்சு பார்த்திட வேண்டிய குறிப்புதான் குட்
பதிலளிநீக்குகீதா மேடம் எங்கே? இதைப் பர்றியும், இதைப்போல் வேறு செய்முறையும் சொல்லுவார் என்று பார்த்தேன்.
பதிலளிநீக்குஓட்ஸ் நெய் குடிக்காது போல உள்ளது. பாகு என்றதைப் படித்து என்ன பதமாக இருக்கும் என்று படிக்காமலே யோசனை போயிற்று. கரண்டி முட்டை என்பது அலுமினியத்தில் செய்த குட்டிக் கரண்டி.நெய், எண்ணெய் முதலானவைகளின் முகத்தலளவை. நெய்குத்த மகராஜி எந்த கடையில் வாங்கினாளோ இந்தக் கரண்டி முட்டையை. அவ்வளவு சின்னதாயிருக்கு என்ற வார்த்தைகள் ஸகஜம்.ஒரு டீஸ்பூன் கூட கொள்ளளவு பூரவும் இருக்காது. ஓட்ஸ் பாகு பாங்காக இருக்கு. அன்புடன்
பதிலளிநீக்குநன்றி துளஸிஜி. நீங்களே ஸ்வீட்னா இது உங்களுக்கு ஆவாதுதான்!!!!
பதிலளிநீக்குகீதா ரெங்கன் : தோழி ஹேமா உங்க ஊர்ப்பக்கம் இல்லை. அவிங்க கும்பகோணம் பக்கம்! நன்றி!
பதிலளிநீக்குநன்றி சகோதரி உமையாள் காயத்ரி.
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு மேடம். நான் செய்து பார்க்கவில்லை. எனவே அவர்கள் சொல்லியிருப்பதை ஆமோதிக்கிறேன்!
பதிலளிநீக்குஆமாம் ஜி எம் பி சார். மாவாக்கிக் கொள்ளவேண்டும். முதல் பின்னூட்டத்துக்கான பதிலில் சொல்லியிருக்கிறேனே..
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜீ.
பதிலளிநீக்குநன்றி சகோதரி கமலா ஹரிஹரன்,
பதிலளிநீக்குநன்றி ரமணி ஸார்.
பதிலளிநீக்குநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
பதிலளிநீக்குநன்றி நண்பர் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. ஆம், இப்படியும் ஒரு பாக் செய்து கொண்டுவந்து தந்து விட்டார் தோழி ஹேமா.
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா... நன்றி வல்லிம்மா. நீங்கள் சாப்பிடக் கூடாதா? பரவாயில்லை, ஒரே ஒரு பீஸ் எடுத்துக் கொள்ளுங்களேன்!
பதிலளிநீக்குஸ்பூன் முட்டை பகவான்ஜீ!!!! நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பர் S P செந்தில்குமார்.
பதிலளிநீக்குசெய்துபார்த்துச் சொல்லுங்கள் ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்.
பதிலளிநீக்குசெய்து பார்த்து விட்டு ரிப்போர்ட் செய்யுங்கள் மதுரைத் தமிழன்!!
பதிலளிநீக்குஇன்றைய பதிவுக்கு ஒன்றும் பின்னூட்டத்தைக் காணோமே நெல்லைத்த தமிழன்! நானும் கீதா அக்காவைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!
பதிலளிநீக்குநன்றி காமாட்சியம்மா. அழகிய விவரங்களுடன் அன்பான பின்னூட்டத்துக்கு நன்றி.
பதிலளிநீக்குஓட்ஸ்பாகு! பேரே நல்லா இருக்கே.... சாப்பிட்டு பார்க்கணும் போல இருக்கு!
பதிலளிநீக்குஓட்ஸை அரைக்கணுமா... அப்படியே போடணுமா.... சொல்லலையே...
பதிலளிநீக்குஓட்ஸ் நம்ம ஊர் சீதோஷ்ணத்துக்கு ஏற்றதில்லை என்பதால் வாங்கறதே இல்லை! :) இதைப் பத்திப் படிச்ச ஒரு கட்டுரையை இங்கே பகிர்ந்தால் ஓட்ஸ் பிரியர்கள் அடிக்க வருவாங்க! :)
பதிலளிநீக்குஎல்லோரும் என்னைத் தேடி இருக்கீங்க போல! ஹிஹிஹி, நான் ஒளிஞ்சுண்டு இருந்தேனாக்கும்!
பதிலளிநீக்கு