திங்கள், 21 ஜனவரி, 2019

திங்க கிழமை 190121 : க மி பூ மி கலக்கல்


அய்யா ஆசிரியரே! 

இது திங்கற கிழமைப் பதிவு. இதுல பூமி சாமி என்றெல்லாம் எதுக்கு போட்டு பயமுறுத்துறீங்க? 

ஏதேனும் பெயர் வைக்கணுமில்லே! 

+++++++++++++++++++++++++++++++++++





தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை : 40 கிராம்.
மிளகு : ஒரு மேஜைக்கரண்டி.
பூண்டு : 80 கிராம். (உரித்த பின் பூண்டு பற்கள் மட்டும் அறுபது கிராம் ஆகிவிடும்) 
மிளகாய் வற்றல் : இரண்டு. 
உளுத்தம்பருப்பு இரண்டு மேஜைக்கரண்டி.
நல்லெண்ணெய் : 100 மி லி.
புளி : இரண்டு கோலிகுண்டு அளவு.
உப்பு : தேவைக்கேற்றாற்போல். 
பெருங்காயப் பொடி : ஒரு சிட்டிகை.
மஞ்சள் பொடி : ஒரு சிட்டிகை.

+++++++++++++++++++++++++++++++++++

கறிவேப்பிலை பதினைந்து அல்லது இருபது ஆர்க்குகள் எடுத்து ஆய்ந்துகொண்டால், அது நாற்பது கிராம் அளவுக்கு வரக்கூடும். (என் பகுதியில் கறிவேப்பிலை மூன்று ரூபாய்க்கட்டு வாங்கினால், அதில் இலைகள் மட்டும் இருபத்தெட்டு கிராம் உள்ளது. ஐந்து ரூபாய்க்கட்டு வாங்கினால் இலைகள் முப்பத்துநான்கு கிராம் உள்ளது. doodhwaala app மூலம் நூறு கிராம் கட்டு வாங்கினால், அதில் இலைகள் அறுபது கிராம் வரும். கூட்டிக் கழிச்சு நீங்களே ஒரு திட்டம் போட்டுக்குங்க!)


செய்முறை : 

#0 : பூண்டு பற்களை உரித்து வைத்துக்கொள்ளவும். (நான் பூண்டு பற்களை உரிக்கும் முன்பு, அவற்றை மைக்ரோ வேவ் ஓவனில் பத்து வினாடிகள் சூடு செய்து எடுத்து, ஆறிய பின்பு உரிப்பேன். சுலபமாக உரிக்க வரும்.) 





+ கறிவேப்பிலை இலைகளை, சுத்தமான தண்ணீரில் நன்கு அலசி, தண்ணீரை வடித்து, இலைகளை ஒரு தட்டில் போட்டு வைக்கவும். 


+ ஒரு பாத்திரத்தில், நூற்றைம்பது மி லி தண்ணீர் விட்டு, புளியை அதில் கரைத்துக்கொள்ளவும். புளிச்சக்கைகளை அகற்றிவிடவும். இந்தப் புளிக் கரைசலில், மஞ்சள் பொடி போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, எல்லாவற்றையும் நான்கு கட்சிக் கூட்டணி போல நன்றாகக் கலக்கி வெச்சுக்குங்க!




#1 வாணலியை அடுப்பில் வைக்கவும்.

+ இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விடவும்.

+ அடுப்பைப் பற்றவைக்கவும். (இந்த நேரத்தில் காயத்ரி ஜப மந்திரம் சொல்வது மகா சிரேஷ்டம் என்று மூதறிஞர்கள் சொல்கிறார்கள்) 

+ எண்ணெய் காய்ந்ததும், முதலில் மிளகாய் வற்றலைக் கிள்ளிப்போடவும் (எண்ணெயில்தான்!) 

+ பத்து வினாடிகளுக்குப் பிறகு, பெருங்காயப்பொடி போடவும். (ஆமாம் - எண்ணெயில்தான்!)

+ மிளகைப் போடவும். 

+ மிளகு எண்ணெயில் வெடிக்கும்போது, உளுத்தம்பருப்பைப் போடவும். 

+ உளுத்தம்பருப்பு பொன்னிறம் வந்தவுடன், அடுப்பை அணைத்துக்கொள்ளவும். ( ஹி ஹி அப்படிச் செய்தால், சுட்டுடும்! ) அடுப்பை off செய்யவும். 

+ இந்தக் கலவையை ஒரு தட்டில் போட்டு, ஆற வைக்கவும். (சூடான வாணலியைக் கையால் தொடாதீர்கள். இடுக்கியைக் கொண்டு கையாளவும்) 

#2 வாணலியை மீண்டும் அடுப்பிலேற்றி, அடுப்பைப் பற்றவைத்து, கழுவி வைத்துள்ள கறிவேப்பிலை இலைகளை, வாணலியில் போட்டு வாட்டவும். இலைகள் மொறு மொறுவென்று ஆகவேண்டும். ஆனால் பழுப்பு நிறம் ஆகிவிடக்கூடாது. 

+ வாட்டிய இலைகளை ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்.

# 3 : உ ப + மி கலவையை, மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். 

+ கறிவேப்பிலை இலைகளை அந்தக் கலவையுடன் சேர்த்து மீண்டும் மிக்சியை இயக்கவும். எல்லாம் சேர்ந்த கலவையை, ஒரு பாத்திரத்தில் எடுத்து வெச்சுக்குங்க.




# 4 மீண்டும் வாணலி ^ அடுப்பிலேற்றி, நூறு மி லி நல்லெண்ணையை விட்டு, எண்ணெய் காய்ந்ததும் .... 

+  உரித்த பூண்டு பற்களை எண்ணெயிலிட்டு, வேகவிட வேண்டும். எண்ணெய், பூண்டு பற்கள் எல்லாம் மூழ்குகின்ற அளவுக்கு இருக்கவேண்டும்.




+ பூண்டு பற்கள் பொன்னிறமாக ஆனதும், கறிவேப்பிலைக் கலவையை முதலில் போடவும். 

+ பிறகு, சற்றும் தாமதிக்காமல், புளிகரைசல் ( நாலு கட்சிக் கூட்டணியை ) ஊற்றவும். 




+ வாணலியில் உள்ள கலவையை நன்கு கலக்கி, அல்வா பதம் வந்ததும், அடுப்பை அணைக் ... சாரி ஆஃப் செய்யவும்.




$ இந்தக் கலவையை, இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, சூடான பச்சரிசி சாதத்தில் கலந்து, மேற்கொண்டு இரண்டு தேக்கரண்டி செக்கு நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து, சுட்ட அப்பளம் சைடில் (சாப்)பிட்டுக்கொண்டு .......   சாப்பிட்டால் ... ஆஹா .....  சுவையோ சுவை!

$ இந்தக் கலவையை, கை படாமல் ஸ்பூனால் எடுத்து, ஒரு பாத்திரத்தில் அல்லது பாட்டிலில் போட்டு  ஃபிரிட்ஜில் வைத்திருந்து ஒரு வாரம் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். 

==================================

இந்த சமையல் குறிப்பை சொன்னவர் : ஜனவரி இருபத்திரெண்டாம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்போகும் திருமதி மீனாக்ஷி கௌதமன். 

எழுத்து வடிவம் : கௌதமன்.

==================================
    

87 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்ம, துரை அண்ணா தொடரும் எல்லாருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ கௌதம் அண்ணாவா!!! அண்ணா இனிய காலை வணக்கம்!!! அதான் என்னடா இது 6 மணி பதிவு 5.30க்கு வந்துருச்சுன்னு பார்த்தேன்!!!

      கீதா

      நீக்கு
    2. கறிவேப்பிலை மிளகு பூண்டு மிளகாய் வற்றல் கலக்கல் குழம்பு!!!!!

      சூப்பர்!!! கறிவேப்பிலை குழம்பு ரெசிப்பியில் பூண்டு போட்டு செஞ்சு நான் கறிவேப்பிலை பூண்டு குழம்புன்னு சொல்லிடறது....

      இந்த வெதருக்குத் தேவையான சூப்பரா இருக்கும் குழம்பு அண்ணா....பொருள் எல்லாம் இதெ எப்படி செய்துருக்கீங்கனு பார்க்கறேன்..

      கீதா

      நீக்கு
    3. அண்ணா அண்ணிக்கு எங்கள் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

      கீதா

      நீக்கு
    4. கௌ அண்ணா நானும் பூண்டு போட்டு செய்வதுண்டு ஆனா இவ்வளவு அளவு போட்டதில்லை...கம்மியாத்தான் போடுவேன்......இத்தனை போட்டு முயற்சி செய்ஞ்சுட்டா போச்சு....கறிவேப்பிலை வாசனையை பூண்டு அமுக்கிவிடாதோ?!!!

      கீதா

      நீக்கு
    5. (என் பகுதியில் கறிவேப்பிலை மூன்று ரூபாய்க்கட்டு வாங்கினால், அதில் இலைகள் மட்டும் இருபத்தெட்டு கிராம் உள்ளது. ஐந்து ரூபாய்க்கட்டு வாங்கினால் இலைகள் முப்பத்துநான்கு கிராம் உள்ளது. doodhwaala app மூலம் நூறு கிராம் கட்டு வாங்கினால், அதில் இலைகள் அறுபது கிராம் வரும். கூட்டிக் கழிச்சு நீங்களே ஒரு திட்டம் போட்டுக்குங்க!)//

      ஹா அஹ ஹா ஹா ஹா நான் ஓடிட்டேன்...நமக்கும் கணக்குக்கும் ஹிஹிஹிஹி...அது சரி இம்பூட்டுப் பொறுமையா கிராம் கணக்கு எழுதறீங்களே அண்ணா!!!!

      அதுவும் செய் முறையிலும் சூப்பரா கிராம் கணக்கு தோலுடன் இவ்வளவு தோல் எடுத்தா இவ்வளவுன்னு....சமையல் ஷோ நடத்தறவங்க கூட இப்படிச் சொன்னதில்லை!!

      பேசாம நீங்க ஒரு ஷோ பண்ணலாம் அண்ணா...இடைல காமெடியும் பண்ணுவீங்க ஸோ கல கலன்னு இருக்கும் ஷோ..!!

      கீதா

      நீக்கு
    6. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    7. ஆஆஆ வெல்கம்ப்க் கீதா... பொங்கல் ஓவரா சாப்பிட்டதால வர முடியாமல் போச்சுப்போல:).. நேற்றைய போஸ்ட்டிலும் பார்த்தனே....

      நீக்கு
  2. பதில்கள்
    1. கீதாக்கா இனிய காலை வணக்கம்...

      கீதா

      நீக்கு
    2. வணக்கம், பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே!

      நீக்கு
    3. இனிய காலை வணக்கம் கீதா அக்கா.

      நீக்கு
    4. ஹா ஹா ஹா ஹா ஹா சூப்பர் பாட்டு கீதாக்கா..!!!!

      கீதா

      நீக்கு
  3. கருகப்பிலை, மிளகு, பூண்டு, மி.வத்தல் போட்டுத் துவையலா? குழம்பா? படிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
  4. எல்லாம் சரி தான். மனைவிக்கு கௌரவம் கொடுத்துட்டீங்க! நான் பூண்டு இல்லாமல் சி.வெ. போட்டுப் பண்ணிக்கறேன். பூண்டு ஒண்ணு இருந்தாலே ஒத்துக்காது. இதிலே சுமார் 100 கிராம்! ம்ஹூம், சிவெ. போதும். மத்தது டிட்டோ.

    பதிலளிநீக்கு
  5. ஓ, இன்னிக்குத் திருமதி கௌதமன் பிறந்த நாளா? இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவவும் 22 ஆம்... நம்ம கட்சி நம்ம கட்சி .....ஹா ஹா ஹா 4ம் நம்பரெனச் சொன்னேன்:)..

      நீக்கு
    2. நாளைக்கா? ஓக்கே, நாளைக்கும் சொல்லிட்டாப் போச்சு! அதிரடி, நான் ஐந்தாம் நம்பர்! எனக்கு என்ன ஜோசியம்? ஜொள்ளுங்க, ஜொள்ளுங்க! கேட்கலாம்.

      நீக்கு
    3. ஆஆஆ கீசாக்கா அஞ்சாஆஅ... சுழட்டல் பேர்வழி என்பினம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)

      நீக்கு
    4. அ.அ. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒழுங்காச் சொல்லுங்க!

      நீக்கு
    5. மொத்தக் கூட்டுத் தொகை 8, இப்போச் சொல்லுங்க ஒழுங்கா! ஹிஹிஹி, (என்ன சொல்லுவீங்கனு தெரியும்.) பிறந்த தேதிக்கு மட்டும் 5 மொத்தக்கூட்டுத் தொகை 8

      நீக்கு
    6. கீசாக்கா 40 வயதுக்கு மேல், கூட்டு எண்தான் அதிகம் பவர் தருமாம்... அப்பூடி பார்க்கும்போது, 8 ம் நம்பர் உய்ர்த்த தொடங்கினால் கொஞ்சக்காலம் உயர்த்திக்கொண்டே போகுமாம் அதேபோல விழுத்த தொடங்கினாலும் அப்படியே கொஞ்சக்காலம் விழுத்துமாம்... டக்கு டக்கென மாறாது. கொஞ்சம் சுயநலமான நம்பர் எனச் சொல்லுவார்கள் மற்றும் 8 ம் நம்பர் 4 ம் நம்பரோடு எவ்ளோ பிரச்சனை வந்தாலும்... திரும்பவும் போய் ஒட்டிக் கொள்ளுமாம்.. 8 க்கு 4 கவர்ச்சி யாம்:)..

      நீக்கு
    7. அடுத்த புனைபெயர் 'அஸ்ட்ரோலஜி அதிரா'வா?

      நீக்கு
    8. // மொத்தக் கூட்டுத் தொகை 8, இப்போச் சொல்லுங்க ஒழுங்கா! ஹிஹிஹி, (என்ன சொல்லுவீங்கனு தெரியும்.) பிறந்த தேதிக்கு மட்டும் 5 மொத்தக்கூட்டுத் தொகை 8// ஐந்தாம் எண் பிறந்த தேதி எல்லோராலும் விரும்பப் படுபவர். நண்பர்களை விட்டுக்கொடுக்கமாட்டார். நீதிமான். அழகானவர். (என் பெண்ணும் ஐந்தாம் எண் பிறந்த தேதி, ஓவரால் எண் 8)

      நீக்கு
    9. //ஐந்தாம் எண் பிறந்த தேதி எல்லோராலும் விரும்பப் படுபவர். நண்பர்களை விட்டுக்கொடுக்கமாட்டார். நீதிமான். அழகானவர். (என் பெண்ணும் ஐந்தாம் எண் பிறந்த தேதி, ஓவரால் எண் 8)// ஹையா, ஜாலி,

      நீக்கு
    10. அதிரடி, எனக்கு ரொம்பவே உயர்வும் இல்லை, அதே போல் ரொம்பவே வீழ்ச்சியும் இல்லை. ஒரே மாதிரித்தான் அப்போப்போக் கீழே விழுந்து ஒரே இடத்தில் அடிபட்டுக்கொண்டு எழுந்துண்டு இருக்கேன். ஹிஹி

      இப்போக் கொஞ்சம் சீரியஸா, பொதுவாக இந்த எண் ஜோதிடம் சரியாவே வருவதில்லை. எனக்குப் பலர் சொன்னதும் கொஞ்சம் கூடப் பொருந்தாமல் இருந்து வருகிறது. பத்திரிகைகளில் போடுவது உள்பட. அதான் அதிரடியோட கருத்துப்படி என்ன சொல்கிறார்னு பார்த்தேன். :))))))

      நீக்கு
  6. திருமதி கௌதமன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. //ஜனவரி இருபத்திரெண்டாம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்போகும் திருமதி மீனாக்ஷி கௌதமன். //

    திருமதி மீனாக்ஷி கெளதமன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    அவர்களின் சமையல் குறிப்பு நன்றாக இருக்கிறது.

    நீங்கள் அதை உங்கள் பாணியில் நகைச்சுவையாக பகிர்ந்தவிதம் அருமை.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  10. நாளைய பிறந்தநாள் வாழ்த்துகளை இன்றே சொல்கிறேன். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  11. இனிய காலை வணக்கம் அனைவருக்கும். எங்களுக்கெல்லாம் இன்று சந்திர கிரஹணம். அதுக்கு மேலே செய்து சாப்பிட முடியாது. அருமையான ரெசிப்பி. மிக மிக நன்றி. கௌதமன் சார் திருமதி கௌதமன்உக்கு. அன்பு பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. இந்த பூண்டு ஒண்ணுதான் குழப்புது. அது இல்லாமலேயே இது அருமையா இருக்கும். பெருங்காயம் சேர்த்தால் போதுமானது.

    இதில் கருவேப்பிலைக்கு பதில் கொத்தமல்லி போட்டாலும் சூப்பரா இருக்கும்

    கௌதமன் சாரின் குறிப்பு மிகப் பயனுள்ளது.

    பதிலளிநீக்கு
  13. உங்க மனைவிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிச்சிக்கறேன்.

    அடுத்த வாரம் ஒரு இனிப்பு செய்முறையோடு வாங்க (நாளைக்குச் செய்வதை)

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்தியவர்களுக்கு நன்றி. பாராட்டுகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  16. சுவையான குறிப்பு.

    அட்வான்ஸ் ஆக பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. ஸ்ரீராம்.... இந்த வியாழனுக்குள் பக்கப்பார்வை ஒன்றரை மில்லியனைத் தாண்டிவிடுமா? பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // (சூடான வாணலியைக் கையால் தொடாதீர்கள். இடுக்கியைக் கொண்டு கையாளவும்) //

      //பத்து வினாடிகளுக்குப் பிறகு, பெருங்காயப்பொடி போடவும்//

      ஹா ஹா ஹா ஹா நெல்லை அண்ட் ஸ்ரீராம் அண்ட் ஏஞ்சல்....பாருங்க சமையற் குறிப்பை கௌ அண்ணா எப்படி எல்லாம் நுனுக்கமா இந்த அமுதசுரபிக்காகப் போட வேண்டியிருக்கு பாருங்க!!! கரெக்டுதானே!! ஹையோ என் வம்புல உங்க மூனுபேரையும் சேர்த்துக்கிட்டேன்...அதுவும் கௌ அண்ணா வேற கூட்டணி அது இதுன்னு எழுதிட்டாரா...ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    2. ஹையோ இதைப் படிக்காமல் கீழே கொமெண்ட் போட்டிட்டனே ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)...

      கீத்ஸ் நீங்க இண்டைக்கும் ஓவ் எடுத்திருக்கலாம் கர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
  18. வாழ்த்தியவர்களுக்கு நன்றி. பாராட்டுகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. கௌ அண்ணா கலக்கிட்டீங்க!! நான் பொதுவா க வே குழம்பு பூண்டு இல்லாம செய்வேன்....சில சமயம் சேர்த்து செய்வேன் ஆனா பூண்டு கொஞ்சம் தான் சேர்ப்பேனா ஸோ...இப்ப....

    நான் நீங்க சொல்லியிருக்கும் அளவு பூண்டு அதாவது 80 கி எடுத்து 60 கி உரித்த பின் ஆன அளவு என்ன என்னோட அளவு 67கி காமிக்குது ஹிஹிஹிஹி!!!!!!) ரெடியாக்கி வைச்சுட்டேன்..நாளைக்கு இதான் குழம்பு...

    கீதா

    பதிலளிநீக்கு
  20. சுவாரஸ்ய செய்முறை ...சூப்பர்

    பதிலளிநீக்கு
  21. இந்த குழம்பைப் பூண்டு கறிவேப்பிலைக் குழம்பென்று சொல்லுவோம் நாங்கள். அருமையான ஃபைவ்ஸ்டார் ஹோட்டல் குறிப்பு. பின்னும் ஒருபிடி சாப்பிடுவார்கள். ஆசிரியர் கௌதமன் அவர்கள் எழுதியிருப்பதும் நல்ல முறை.மீனாட்சி கௌதமன் வழிமுறைகள் ஸ்வாரஸ்யம்.அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளும், அன்பான ஆசிகளும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  22. கமிபூமி /// இது எந்த நாட்டுப் பாசை:)... சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)...

    வித்தியாசமான ஒரு துவையல்... பார்க்கும்போதே கமகம வாசனை வருவதுபோல ஒரு பீலிங்...

    இங்கு மூன்று நெட்டுக் கறிவேப்பிலை 99 பென்ஸ்...

    பதிலளிநீக்கு
  23. நல்லவேளை த்ர்ளிவாச் சொல்லியிருக்கிறீங்க, சட்டியில் போடவும் என:), நான் ஒழுங்காப் போட்டிருப்பேன் சொல்லாட்டிலும்:), ஆனா அஞ்சுதான் பக்கத்து வளவுக்குள் போட்டிருப்பா:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல் வாங்க! தக்க பதிலடி கொடுங்க.

      நீக்கு
    2. வந்தாச்சு :) அது ஒண்ணுமில்ல சார் பூனை ரெண்டு மூணு நாளைக்கு என்னை கலாட்டா செய்ற மாதிரி ஒரு சந்தர்ப்பம் அமைச்சு கொடுத்திட்டேன் :) அதில் ஒரே அட்டகாசம் //ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் ..பூஸாரே எதோ மை .பொ .டை ..நல்லா சிரிச்சி கலாய்ச்சிக்கோங்க

      நீக்கு
    3. எல்லாத்திலயும் கவனமா ஆராட்சி பண்ணும் ஆராட்சி அம்புஜம்:) “அதில” மட்டும் எப்பூடி ஓடிப்போய்க் காலை வச்சா ? ஹா ஹா ஹா என்னால சிரிச்சு முடியுதில்ல:)..

      நீக்கு
    4. https://data.whicdn.com/images/324588339/original.gif

      நீக்கு
    5. https://thumbs.gfycat.com/OffbeatFaroffElk-max-1mb.gif

      நீக்கு
  24. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... நாளைக்கு பேர்த்டே என்பதால் , கெள அண்ணன் ஒரு லவ் ஸ்டோரி எழுதி நாளைக்கு வெளியிட்டிருக்கலாம் கிவ்ட்டாக:)...

    https://goo.gl/images/o88Yua

    பதிலளிநீக்கு
  25. ஊட்டம்மிணியிடம் இவ்வளவு விஸ்தாரமாய் சமையல் ரெசிப்பி குறிப்பாக கேட்டெழுதி அதையே பிறந்தநாள் தகவலாய்ச் சொன்னவருக்கும் சேர்த்தே அட்வான்ஸ் வாழ்த்துக்களை சொல்லிடறேன்! அதிகமாய்ப் பூண்டு சேர்த்தால் நல்லது இல்லை என்கிற தகவலையும் இங்கேயே சொல்லிடலாமா கௌதமன் சார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிகமாக பூண்டு சேர்த்தாலும் எல்லாவற்றையும் ஒரே நாளில், ஒரே ஆள் சாப்பிடப்போவதில்லை. ஒரு வேளை சாதத்தில் நான்கு பூண்டு பற்கள் இருந்தால் அதிகம்! வாழ்த்துகளுக்கு நன்றி!

      நீக்கு
  26. அஆவ் !! மீ அரைவ்ட் :)
    முதலில் கௌதமன் சாரின் wife க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன் .
    @கௌதமன் சார் இந்த குறிப்புடன் ஒரு ஸ்வீட்ட்டையும் செய்து இன்னிக்கு அசத்தி இருக்கலாமே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏஞ்சல். ஸ்வீட் இன்று செய்துள்ளேன்.

      நீக்கு
    2. ஏதோ ஒரு செவ்வாயில் எதிர்பார்க்கலாமா கெள அண்ணன் சுவீட் ஐ?

      நீக்கு
    3. செவ்வாயில் கதைதானே வரும்? சமையல் சமாச்சாரங்கள் திங்கள் அல்லவோ?

      நீக்கு
  27. இங்கே கறிவேப்பிலை முந்தா நாள் பார்த்தது £1.49 திடீர்னு 99 பென்ஸ் ஆகும் ..
    அவியல் செய்ற நேரம் மட்டும் வாங்குவேன்

    செய்முறை சூப்பரா இருக்கு கட்டாயம் செய்து விட்டு சொல்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறக்காமல் எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

      நீக்கு
  28. எனக்கு பூண்டு பிடிகாது மாமிக்கு பிறண்டநாள் வாழ்துகள் இன் அட்வான்ஸ்

    பதிலளிநீக்கு
  29. நிறைய பிழைகள் பிடிகாது டு பி பிடிக்காது பிறண்ட நாள் ஷுட் பி பிறந்த நாள் வாழ்துகள் ஷுட் பி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  30. நான் விரும்பும் ரெஸிபி.இரண்டு மூன்றுநாட்கள் வைத்து சாப்பிடலாம் என்பதால் கூடுதல் விருப்பமும் கூட.பகிர்வுக்குவாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!