திங்கள், 14 ஜனவரி, 2019

"திங்க"க்கிழமை : ரசத்துக்குத் தனியாக, குழம்புக்குத் தனியாக என்று...

எப்போது பார்த்தாலும் சமையல் ரெசிப்பிகளைத்தான் கொடுக்க வேண்டுமா?  சில டிப்ஸ்களும் கொடுக்கலாமே... 
ஆங்காங்கே படித்த, பழைய, புதிய டிப்ஸ்கள் தொகுக்கப்பட்டுள்ளன...





மிக சீக்கிரம் வெந்துவிடும் காய்கறிகளை சாதத்துடன் சேர்த்து குக்கரில் வைக்காமல் இருப்பது நல்லது.  மாவாய்க் குழைந்து விடும்.



உருளைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு போன்ற கிழங்குகளை முடிந்தவரை தனியாக குக்கரில் வைத்து வேகவைப்பதே நல்லது.


உருளைக் கிழங்கை வேகவைக்கும் முன் ஒரு சிறு கீறல் போட்டு விட்டு வேகவைத்தால், வெந்தவுடன் தோலை உரிக்க அதன் ஒரு முனையைப் பிடித்து அமுக்கினால் போதும்.  கிழங்கு தோலை விட்டு வெளியே வந்து விழுந்து விடும்.


வாணலியில் கறி செய்தபின்னர், இறக்கியதும் வேறு பாத்திரத்துக்கு மாற்றி விடுதல் உசிதம்.  இல்லை என்றால் கறி கருப்பாக மாறிவிடும்!முடிந்தவரை காய்கறிகளை புதிதாகச் சமைத்தலே நல்லது.  அதேபோல நறுக்கியபின் காய்கறிகளைக் கழுவக் கூடாது.  அதற்கு முன்னரே நீரில் அலசிவிடவும்.  அடிக்கடி காய்கறிகளை அலசிக் கொண்டும் இருக்கக் கூடாது.


காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்குவதால் அதன் சத்துகள் வீணாகின்றன.  கொஞ்சம் பெரிதாகவே நறுக்கலாம்.  உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கு கிழங்கு ஆகியவற்றின் தோலிலும் சத்து உண்டு.


கேரட், முள்ளங்கி, வெங்காயம் ஆகியவற்றின் இலைகளில் வைட்டமின் A மற்றும் C சத்து இருப்பதால் அவற்றையும் வீணாக்காமல் சமைக்கலாம்.


செம்புப் பாத்திரத்தில் காய்கறிகளை வேகவைப்பதால் அவற்றின் வைட்டமின் ஸி சத்து வீணாகி விடுவதாக பழைய கல்கண்டு இதழ் ஒன்று குறிப்பு தருகிறது.

Image result for green vegetables images



முடிந்தவரை பச்சைக் காய்கறிகளை நீண்ட நேரம் வேகவிடாமல் இருப்பது நல்லது.  அதன் சத்துகள் வீணாகாமல் தடுக்கலாம்.
சோடா உப்பு, அஜினமோட்டோ  சமையலுக்கு உபயோகிக்கிறீர்களா?  வேண்டாமே!  சொந்தக் செலவில் சூனியம்!


முடிந்தவரை சமைத்த உணவுகளை மறுபடி மறுபடி சுடவைத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.  உடலுக்கும் நல்லது!

Image result for microwave oven images



ரசத்துக்குத் தனியாக, குழம்புக்குத் தனியாக என்றுதானே கரண்டி உபயோகிக்கிறீர்களா?  அது உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்!


டீ, காபி கலக்கும்போது சிறிது உப்பு சேர்க்கும் பழக்கம் சிலருக்கு உண்டு தெரியுமோ!  


பரிமாறும்போது சாப்பிடும் இலை, அல்லது தட்டுகளில் கரண்டி படாமல்தானே பரிமாறுவார்கள்?  அந்த ஆரோக்கியக் குறிப்பும் நீங்கள் அறிந்ததுதான் இல்லையா?


குழம்பு, கறி, ரசம் எடுக்கும் கரண்டிகளை பரிமாறும்போது  நடுவில் தரையில் வைத்துவிட மாட்டீர்கள் என்று தெரியும்.  முடி, தூசு முதலானவை ஒட்டிக் கொண்டு விடுமே..  உங்களுக்குத் தெரியுமே..


Image result for kitchen in night images



இரவில் சமையலறைகளில் 0 வாட் பல்பு எரிந்து கொண்டிருந்தால் கரப்பு நடமாட்டம் இருக்காது என்று ஒரு குறிப்பு சொல்கிறது.  சோதித்துப் பார்க்க வேண்டும்.


சமைத்த பொருட்கள் மிஞ்சிப்போய் வீணாகிறதே என்று பிரிட்ஜில் வைத்துச் சாப்பிடும் முறையைத் தவிருங்கள்.  ஆரோக்கியத்துக்கு நல்லது.  அளவாய்ச் சமைக்கலாம்.  அதிகமாகிவிட்டால் இல்லாதவருக்கு கொடுக்கலாம்.

Image result for vegetables in fridge images



பச்சை மிளகாயை பிரிட்ஜில் வைக்கும்போது காம்புகளைக் கிள்ளி விட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு வரும்.


வெங்காயத்தைக் கடைசியாக நறுக்குங்கள்.  முதலில் அதை நறுக்கி விட்டால் எல்லாக் காய்கறியில் அதன் வாசம் வந்து விடும்.  கத்தரிக்காய், வாழைக்காய் போன்றவற்றை நறுக்கியதும் தண்ணீரில் போட்டு வைக்கலாம்.  கத்தரிக்காய், வாழைக்காய் அரிந்த கத்தியினால் மற்ற காய்களை நறுக்குமுன் கழுவி விட்டு நறுக்குங்கள்.  இல்லாவிட்டால் அந்தக் காயில் கருப்பு, கருப்பாய்த் தெரியும்.


மறுநாள் சமையலுக்கு முதல் நாள் இரவே காய்களை நறுக்கி வைப்பதைத் தவிருங்கள்.  சமைக்கும் நேரம் காய்களை நறுக்குவதே சாலச் சிறந்தது.  முக்கியமாக வெங்காயத்தை முன்னரே நறுக்கி வைத்தால் அது விஷத்தன்மை உடையதாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.


கறிவேப்பிலை வாங்கி வந்ததும் தனித்தனி இலைகளாகச் சேர்த்து காற்றுப் புகாத டப்பாவில் வைக்கலாம்.


தோசைக்கல்லில் அவ்வப்போது எண்ணெயைத் தடவ ஒரு அரை வெங்காயத்தை வெட்டிப் பயன் படுத்தலாம். 


மஞ்சள் காமாலைக்கு 1972 ம் வருட சிகிச்சைகளில் ஒன்று : பாக்கு அளவு புளியைக் கரைத்து வடிகட்டி ஒரு சுண்டைக்காய் அளவு சுண்ணாம்பைக் கரைத்து காலை, பகல், மாலை தினம் மூன்று வேளை சாப்பிடவும்.  
அதற்கு மேலே சுத்தமான தண்ணீரைக் குடிக்கவும்.  எவ்விதப் பத்தியமும் தேவை இல்லை.  அதிக காரம், உப்பு, புளி, குறைத்து, பால், தயிர் அதிகம் எடுத்துக் கொள்ளவும்.   மஞ்சள் காமாலை குணமாகி விடும் என்று சொல்லியிருப்பவர் திருவொற்றியூர் காந்தி மருத்துவமனையில் மருத்துவராக இருந்த பண்டிட் பி வி சர்மாஜி.  இது வெளிவந்தது 28-5-72 கல்கி இதழில்.


ரசப்பொடி தனியாகச் செய்து வைத்திருந்தீர்களானால், அதில் காய்ந்த கறிவேப்பிலை இலைகளை போட்டு வைத்தால் வாசனையாக இருக்கும்.  இதேபோல காய்ந்த கறிவேப்பிலை இலைகளை பருப்புகளில் போட்டு வைத்தால் புழு பூச்சி வராது.


மிளகாய் நறுக்கி, கைகள் எரிந்தால், நல்லெண்ணெய் தடவி சோப்பு நீரில் கழுவலாம்.  சேனைக்கிழங்கு நறுக்கி கைகள் அரித்தால், புளி நீரில் கை கழுவலாம்!


வைட்டமின் ஏ சத்து இருக்கும் கொத்துமல்லியை பச்சையாகவே கூடச் சாப்பிடலாம்.


பிரிட்ஜை மாசம் ஒருமுறையாவது சுத்தம் செய்கிறீர்கள்தானே?


ஃபிளாஸ்க் சும்மா இருக்கும்போது அதில் ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு வைத்தால், அதில் ஒரு ஸ்மெல் வருமே, அதைத் தவிர்க்கலாமாம்.

Image result for cutting onion images



வெங்காயம் நறுக்கும்போது கண்ணில் எரிச்சல் வந்து நீர் வராமல் இருக்க, ஒன்று, அதை தண்ணீருக்குள் வைத்திருந்து நறுக்கலாம்.  பிரீஸரில் சிறிது நேரம் வைத்திருந்து விட்டு நறுக்கலாம். ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொண்டு அதன் அருகில் அமர்ந்து நறுக்கலாம்.


கண்ணாடி டம்ளரில் வெந்நீர் ஊற்றவேண்டுமா?  உடைந்துவிடும் என்று தயக்கமாக இருக்கிறதா?  உள்ளே ஒரு உலோக ஸ்பூனைப் போட்டு விட்டு எவ்வளவு சூடான வெந்நீரை வேண்டுமானாலும் ஊற்றலாமாம்.  அப்படியும் உடைந்தால் எப்படி உடைந்தது என்று தமிழ்வாணனைத்தான் கேட்கவேண்டும்!  பழைய கல்கண்டில் வந்திருப்பது இது!  அவர் இல்லாததால் லேனாவிடம் கேட்கலாம்!

Image result for fat man images



பருமனாக இருப்பவர்கள் அதிகாலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சம்பழச் சாறும் தேனும் கலந்து சாப்பிட்டு வர,  உடல் இளைக்குமாம்.

===============================================================================================



எப்படிச் சாப்பிட வேண்டும்?  என்ன சாப்பிட வேண்டும்?

உணவு வீணாவதை தவிர்க்க, அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் நித்யஸ்ரீ: 

ஊட்டச் சத்துகளை, 'மைக்ரோ மற்றும் மேக்ரோ' என, இரு வகையாகப் பிரிக்கலாம். இதில் எந்த வகையை அதிகமாக உட்கொண்டாலும், பக்கவிளைவுகள் பரிசாகக் கிடைக்கும்.

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவை, மேக்ரோ ஊட்டச்சத்துகள். ஒரு நாளுக்கு, கல்லீரலில், 400 கிராம் வரை தான் கார்போஹைட்ரேட் சேர வேண்டும். 

Image result for carbohydrates food images


கார்போஹைட்ரேட் உணவுகளான, சாதம் மற்றும் அரிசி சார்ந்த உணவுகளை தேவைக்கும் அதிகமாக சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், உடலின் தேவைக்கும் அதிகமான கார்போஹைட்ரேட், கொழுப்பாக உடலில் சேரும். இன்னொருபுறம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகமாகி, சர்க்கரை நோயில் முடியும். 


ப்ரிஜ்ஜில் வைத்த உணவை சாப்பிடுவது மிகவும் தவறு. ஜில் உணவுகளை மீண்டும் சூடுபடுத்தும்போது, அதில் உள்ள பெரும்பாலான ஊட்டச்சத்துகள் வெளியேறி விடுவதோடு, ஏதாவது ஒரு சத்து மட்டும் அதிகளவு கூடிவிடும். 

Image result for kaara kuzhambu images


காரக் குழம்பு வகைகளை மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிடுவதால், அதில் இருக்கும் சோடியம் அளவு அதிகமாகி ரத்தக் கொதிப்பை வரவழைக்கும். அசைவ உணவு வகைகளைச் சூடு செய்து சாப்பிடும்போது, அதில் இருக்கும் கொழுப்புகள் எல்லாம் கெட்ட கொழுப்பாக மாறி உடலில் சேர்ந்து உடற் பருமனுக்கு வழி வகுக்கும்.

விட்டமின் 'ஏ, சி, இ, டி' இரும்புச் சத்து போன்றவை, மைக்ரோ ஊட்டச்சத்துகள். பழங்கள், கீரை வகைகள், தயிர், காய்கறிகளில் இவை அதிகம் உள்ளன. மைக்ரோ சத்துகளை சமமாகச் சாப்பிடும் போது, உடலில், 'மெட்டாபாலிசம்' சரியாக இருக்கும்.

தொடர்ந்து, ஒரே வகை பழம், காய் என்று அதிக அளவில் சாப்பிடும்போது, இவற்றில் ஏதாவது ஒரு சத்து மட்டும் அதிகமானால், உடலில் மற்ற சத்துகளை வேலை செய்ய விடாமலும், புதிதாக ஒரு பிரச்னையையும் உண்டு பண்ணி, ஒரு குறைபாடாக மாற்றிவிடும்.

நீர்ச்சத்துள்ள உணவை அதிகளவு சாப்பிடும்போது, அவை உடலில் தங்காமல், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். எனினும், சிறுநீரகத்திற்கான அதிகப்படி வேலையை தவிர்க்கலாம்.

இதெல்லாம், மன ரீதியாக அழுத்தத்தை ஏற்படுத்தும். அதேபோல், குடும்பம், குழந்தை, வேலைச்சுமை காரணங்களால், பசிக்கும் நேரத்தில் சாப்பிடாமல் இருந்து, பசி அடங்கிய பின் வலுக்கட்டாயமாக சாப்பிடுவதும் கெடுதல்களையே தரும்.

வீணாகாத அளவுக்கு திட்டமிட்டுச் சமைப்பது நல்லது. அப்படியே மிகுந்து போனாலும், வேலை பார்க்கும் பெண் அல்லது யாருக்காவது கொடுக்கலாம். வீணாகும் உணவை விட, உங்கள் ஆரோக்கியம் முக்கியம்.



தினமலரில் இருந்து...


===================================================================================================



Image result for mixer grinder images



மிக்சியில் பொருள் இல்லாமல் இயக்கக் கூடாது! 

மிக்சி வாங்கும்போது பரிசீலிக்க வேண்டிய, வாங்கிய பின் கவனம் செலுத்த வேண்டிய விவரங்களை கூறும், 'பட்டர்பிளை' நிறுவனத்தின் தர உத்தரவாதப் பிரிவின் சீனியர் மேனேஜர் சண்முகவேலு: 

வீட்டில் அதிகம் பேர் இருந்தால், நிறைய மற்றும் அடிக்கடி அரைக்க வேண்டி யிருக்கும். அந்த நிலையில், அதிக வாட்ஸ் உள்ள மிக்சியை வாங்குவது நல்லது. குறைந்த வாட்ஸ் உள்ள மிக்சியை வாங்கி, 'ஓவர் லோடு' போட்டு, காலை, இரவு என அரைத்தால், மின்சாரம் செலவாவதுடன், மோட்டார் விரைவில் பழுதடைந்துவிடும். 

மிக்சி மற்றும் ஜாரில், ஜாரையும், மிக்சியை யும் இணைக்கும், வெள்ளை நிறத்தில் சுழலும் கப்ளர், நைலானிலும்; ஜாரின் மூடி, பாலிகார்பனேட்டாலும் செய்யப்பட்டவையா என, கேட்டு வாங்க வேண்டும். மிக்சி இயங்கும் வேகத்தைக் கட்டுப்படுத்த, பட்டன்களை விட, ரெகுலேட்டர் இருப்பது தான் பாதுகாப்பு.

அரைக்கும் போது, ஜாரிலிருந்து தண்ணீர் வெளியேறினால், அது மிக்சியில் தேங்காமல் வெளியேற வசதியிருக்க வேண்டும். 

மிக்சி இயங்கும்போது அதிர்வில் நகராமல் இருக்க அடி பாகத்தில், 'வேக்குவம் புஷ்' அவசியம்.

எத்தனை வாட்ஸ் என்று கேட்டு வாங்குவதுடன், ஐ.எஸ்.ஐ., ஸ்டாண்டர்ட் சர்டிபி கேட் இருக்கிறதா என, கவனிக்க வேண்டும். 

அத்துடன், ஜாரில் கலந்திருக்கும் நிக்கல், 4 சதவீதத்துக்கு குறையக் கூடாது.மிக்சியில் பொருள் இல்லாமல் ஒருபோதும் இயக்கக்கூடாது. 

அவசரப்படாமல் ஜாடியை சரியாகப் பொருத்தியே இயக்க வேண்டும். 

'ஓவர்லோடு' எப்போதும் கூடாது; அது பழுதாகும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.மிக்சியின் அடிப்பகுதியில், மெல்லிய பாலித்தீன் கவர், துணி போன்றவை இல்லாது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.   ஏனெனில், மோட்டார் இயங்கும்போது அதன் விசையில் இது உள் இழுக்கப்பட்டு சிக்கிக் கொள்ளலாம்.

மிக்சியை தொடர்ச்சியாக, 30 நிமிடங்களுக்கு மேல் இயக்கக் கூடாது. மிக்சியை இயக்குவதற்கு வசதியான உயரத்தில் வைப்பதுடன், மிக்சி இருக்கும் மேடைக்கு மேற்புறம், 'ஸ்விட்ச் போர்டு' இருக்க வேண்டும்.

பிளேடின் அடியில் படிந்த உணவு காய்ந்ததும், சுத்தம் செய்ய சிரமமாகும் என்பதால், ஜார்களை பயன்படுத்திய பின் உடனடியாக கழுவ வேண்டும்.

'வோல்டேஜ்' சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பதுடன், அரைக்கும்போது மிக்சி சட்டென்று நின்றுவிட்டால், சில நொடிகள் காத்திருந்து மீண்டும் இயக்கவும்.

ஜாரில் குறைந்த  அளவு என்பது, பிளேடு உள்ள உயரம் வரை; அதிகளவு என்பது, பாதியளவு மட்டுமே. அதாவது அதிகபட்சம், ஜாரின் பாதி வரையில் பொருட்களை நிரப்பி அரைக்கலாம்.

தினமலரில் இருந்து...


137 கருத்துகள்:

  1. வந்தாச்சு, நாளைக்கெல்லாம் வர முடியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை கீதாக்காவும் - ரெண்டு கீதாக்களும் கை கோர்த்து குதிச்சுருக்கோம் பாருங்க....

      இனியகாலை வணக்கம் கீதாக்கா

      கீதா

      நீக்கு
    2. வாங்க கீதா அக்கா.. ஆ... ச்சர்யம்! இனிய காலை வணக்கம்.

      நீக்கு
    3. காலை, மதிய, இரவு வணக்கம் தி/கீதா!

      நீக்கு
  2. இனிய “திங்க” காலை வணக்கம் மற்றும் இனிய போஹி/போளி வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்..
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை! ஸ்ரீராம் இன்று திங்க டிப்ஸ் பதிவா சூப்பர்!!!

      வரேன் வரேன்...இன்னிக்கு போஹி கொஞ்சம் பிஸி டே...நாளை வரை...

      கீதா

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். இன்று ஆரம்பம் கீதா அண்ட் கீதா!

      நீக்கு
  3. எல்லோரும் வந்தாச்சா? பொங்கல் வாழ்த்துகள் இங்கு வந்திருக்கும் வரப்போகும் அனைவருக்கும். இவை எல்லாமே ம்ம்ம்ம்ம் பயனுள்ள குறிப்புகளே எனினும் அனைவருக்கும் தெரிந்திருக்குமோ என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் தெரிவிச்ச எல்லோருக்கும் வணக்கம். இன்று நோ போளி தினம்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமா சாப்பிடறதை நிறுத்திட்டாரே! ரொம்பவே டென்ஷன் ஆயிக்கிறார். நீரிழிவு மருந்துகள் சாப்பிட்டும் இன்னமும் 70-- 110 காட்டலையேனு கோபம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! 125-- 180 க்குள் கட்டுப்பட்டிருக்கேனு சந்தோஷப்பட்டுக் கொண்டு ஒரு போளியானும் சாப்பிடலாம். எங்கே! :(

      நீக்கு
    2. பதிவர்கள்ட யாரிடமாவது இன்று அரங்கம் வரும் வாய்ப்பு இருக்கான்னு கேட்டு, போளி செய்திருக்கலாமே. கொண்டாட்டத்துக்கு கொண்டாட்டம். (செய்முறையும் மறந்துவிடாது)

      அனைவருக்கும் போகி தின வாழ்த்துகள்

      நீக்கு
    3. சுகர் குறைய நடைபயிற்சி மிக அவசியம்.....என்து புதிய வேலையின் காராணமாக வேலை இடத்திலேயே தினமும் குறைந்தது 5 மைல் நடக்கவேண்டியிருக்கிறது..அதனால் எனது சுகர் மிகவும் குறைந்து போய் இருக்கிறது....கடந்த 10 வ்ருடமாக சுகர் இருந்தது சில மாதங்களுக்கு முன்பு பரிசோதனை செய்து பார்த்த போது சுகர் குறைந்து இப்போதுpre diabetic நிலைக்கு வந்து இருக்கிறது டாகடர் மருந்துகளை பாதியளவு குறைத்து விட்டார் என்ன இன்னு இரவு நேர டின்னருக்கு அப்புறம் ஸ்வீட் சாப்பிடும் பழக்கம் போகவில்லை

      நீக்கு
    4. யாரும் வராப்போல் தெரியலை! பண்டிகை தினத்தன்று அவங்கவங்க வீடுகளில் உறவுகளோடு தான் இருப்பாங்க! :)

      நீக்கு
  6. ஏகப்பட்ட டிப்ஸ்.... சில தெரிந்தவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிந்தவை ஆயினும் மறந்தவையாய் இருக்குமான்னு... ஹிஹிஹி...

      நீக்கு
    2. @மதுரைத் தமிழரே, என்னை விட அவர் நிறையவே நடக்கிறார். ஆனால் என்னமோ தெரியலை, ஒரு இட்லி கூடப் போனாலும், பாதி தோசை, பாதி சப்பாத்தி கூடப் போனாலும் சர்க்கரை எகிறுகிறது.எனக்குச் சாப்பிட்டபின்னர் சர்க்கரை ஏறுவதில்லை. அவருக்கு நேர்மாறாக எகிறிக்குதிக்கும் சமயங்களில்.

      நீக்கு
  7. இப்போ நம்மோட உண்மையான கருத்துகளைப் பதியலாமா? முதல்லே நான் குக்கரில் சாதம் வைப்பதை நிறுத்தியே பல வருடங்கள் ஆச்சு. நேரடியாகவே வடிக்கிறேன். உ.கி. சேம்பு மட்டும் தவிர்க்க முடியாமல் குக்கரில் வேக வைக்கிறேன். அதுவும் சின்ன குக்கரில். கிழங்கைப் போட்டுவிட்டு மேலே ஆவி வந்ததும் வெயிட்டைப் போட்டுட்டு குக்கரை நிறுத்தி விடுவேன். பின்னர் பத்து நிமிடம் கழித்துத் திறந்தால் கிழங்கு தேவையான பதத்துக்கு வெந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் இன்னமும் குக்கரில்தான் சாதம் வடிக்கிறோம்! கிழங்குகள் வெயிட் போட்டு ஒரு விசிலில் எடுப்போம்.

      நீக்கு
    2. குக்கரில் சாம்பாருக்கு பருப்பு வைப்பதோடு குக்கர் உபயோகம் முடிந்துவிடும் எங்கள் வீட்டில்

      நீக்கு
    3. அம்பேரிக்காவிலும் நான் அடிகனமான பாத்திரத்திலேயே சாதமும் வைப்பேன். பருப்புக்குனு தனியா ஒரு பாத்திரத்திலே போட்டு வேக வைப்பேன். குக்கரை முடிந்தவரை தவிர்க்கப் பார்ப்பேன். எங்க ரெண்டு பேருக்குனு வரச்சே நிச்சயமாக் குக்கரில் சமைப்பதில்லை. சிலர் நேரடியாக சாதம் வைத்தால் சாப்பிடுவதில்லை. குக்கர் சாதம் தான் வேணும் என்பார்கள். அப்போக் குக்கரில் வைப்பேன்.

      நீக்கு
    4. கீதாக்கா மீ டூ...டைரக்டாகத்தான் சாதம் வடிக்கிறேன்....அப்புறம் பருப்பு மட்டும் குக்கரில் ஏனென்றால் அது மையாக இருக்கனும் என்பதால்...அதுவும் பருப்பைகொஞ்சம் நேரம் ஊறவைத்து விட்டு வைத்தால் நன்றாக வேகிறது.

      கிழங்கும் நான் கூடியவரை டைரக்டாகத்தான்...உ. கி பராத்தா செய்வது என்றால் குக்கரில். சேம்பு டைரக்டாக வெந்தாலே வெந்துடுது பதத்துக்கு. அதுவும் சீக்கிரம். இல்லைனா நீங்க சொல்லிருக்காப்புல ஸ்டீம் வந்தது வெயிட் போட்டு அடுப்பை அணைத்துவிடுவது....

      நானும் குக்கரைக் கூடியவரை தவிர்ப்பது...

      யெஸ் அக்கா சிலருக்கு நேரடியாக சாதம் வடித்தல் பிடிப்பதில்லை நானும் அப்பத்தான் குக்கர்...

      போளி செய்யனும் அப்புறமா வரேன்....

      கீதா

      நீக்கு
    5. என்ன... எல்லோரும் குக்கரில் சாதம் வடிப்பது என்னவோ செய்யக்கூடாத உடல் நலக் கேடுபோல் சொல்றீங்க. இது எனக்குப் புதிதா இருக்கு.

      நானும் அங்க இருக்கும்போது நேரடியா சாதம் வடித்திருக்கிறேன். அதுல என்ன அட்வாண்டேஜ்னா, வடித்த கஞ்சியில் சிறிது பால் விட்டு, ஜீனி போட்டு நான் குடித்துவிடுவேன். சாதமும் விரைவிரையா வரும்.

      நீக்கு
    6. கஞ்சிக்கு சீனியா? கர்ர்ர்ர்:) பாலும் உப்பும்தான் போடுவார்கள்:)...

      நீக்கு
    7. சிவப்பரிசி எனில் ஓகே, வெள்ளை அரிசி எனில் அதில் கொழுப்பாம், குடிக்கக் கூடாதாம் என மிரட்டுகிறார்கள்...

      நீக்கு
    8. நெ.த. பல வருடங்கள் முன்னரே எனக்கு ஆஸ்த்மாவுக்கு வைத்தியம் செய்கையில் ஆயுர்வேத மருத்துவர் எல்.மகாதேவன், (தெரிசனங்கோப்பு, நாகர்கோயில்) குக்கர் சாதம் சாப்பிடுவதை நிறுத்தச் சொன்னார். அதே போல் மூட்டு வலிக்கு மருந்து கொடுத்த அலோபதி மருத்துவரும் நிறையத் தண்ணீர் ஊற்றிக் கஞ்சி வடித்துச் சாப்பிடும்படி அறிவுறுத்தினார்.

      நீக்கு
    9. அதிரடி சொல்வது சரி! கஞ்சியில் கொஞ்சம் வெந்தயம் சேர்த்துப் பால்/தேங்காய்ப்பால், உப்புச் சேர்த்தே குடிப்போம்.

      நீக்கு
  8. பருப்பு கூடக் கல்சட்டியில்! குக்கரில் வேக வைத்தால் எப்போவானும் நிறையச் சமைக்கையில் பருப்பு மட்டும் தனியாகப் போட்டுக் கூட அழுத்தம் கொடுத்து 3 விசில் கொடுத்தால் தான் பருப்புக் குழைவாக வருது. சாம்பாரில் பருப்புத் தெரிந்தால் இங்கே அவ்வளவாப் பிடிக்கிறதில்லை. ஆகவே குழைய வேண்டி இருக்கும். ஆனால் எனக்குத் தெரிந்து என் அம்மாவெல்லாம் உ.கி. சே.கி. மற்றும் சி.கி. பெ.கி. கறி சமைக்கையில் வாணலியில் அல்லது சீனாச்சட்டியில் கிழங்குகளைப் போட்டு வேகவைத்துத் தான் பார்த்திருக்கேன். அப்போக் குக்கர் என்றால் என்னவென்றே தெரியாது. கிழங்குகளும் நன்றாக வெந்தன. சேனை, சேம்பு, கருணைக்கிழங்குகளை அரிசி களைந்த தண்ணீரில் வேக விடுவார்கள். தோசை மாவெல்லாம் வெளியே தான் இருக்கும். புளிப்பு வந்ததில்லை! இப்போ? வெயில் காலத்தில் காலை அரைத்தால் மாலை பொங்கிப் புளிப்பு வருது! என்ன காரணமோ? சீதோஷ்ணத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதோ? அப்படி எனில் அது இம்மாதிரியான மாற்றங்களை உணவுப் பொருட்களில் ஏற்படுத்துமா? அல்லது அந்தக்காலகட்டங்களில் கைகளால் அரைத்துக் கொண்டிருந்தோம். இப்போது இயந்திரம் என்பதாலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உ கி, சே கி எல்லாம் என் அம்மாவும் அபப்டி வேகவைத்துப் பார்த்திருக்கிறன். இப்போ நாங்கள் அப்படி எல்லாம் இல்லை! பருப்பும் அவ்வண்ணமே! பருப்பு குக்கரில் குழைய வேறது.

      இரண்டாம் நாள், மூன்றாம் நாளில் தோசை மாவு லேசான புளிப்புடன் வார்த்துத் தருவாள் அம்மா. அது வேறு சுவையில் நன்றாக இருக்கும்!

      அப்போதைய புளிப்பு - இப்போதைய புளிப்பு நம் மனப்பிரமையோ?

      நீக்கு
    2. நானும் இப்போவரை எதுக்கும் குக்கர் பாவிப்பதில்லை கீசாக்கா, ஆனா வைத்திருக்கிறேன்.

      நீக்கு
    3. இங்கேயும் பத்து லிட்டர் குக்கரில் இருந்து 3 லிட்டர் வரை வைச்சிருக்கேன். ப்ரஷர் பானும் உள்ளது. விசேஷங்களில் சமைக்கவரும் மாமிகள் குக்கரைத் தான் விரும்புகின்றனர். ஆகவே அதுவும் தேவையாகவே உள்ளது.

      நீக்கு
    4. எனக்குக் குக்கரில் பருப்பு குழைவதே இல்லை. இத்தனைக்கும் 2 மணி நேரமாவது ஊறும். பின்னர் வெந்நீர் வேறே வைத்து விடுவேன். அப்போதும் நெத்து நெத்தாக சாம்பாரில் இருந்து முழிச்சுப் பார்க்கும்.

      நீக்கு
    5. நான் குக்கரில் போடும்போது அரை டீஸ்பூன் நெய் இல்லேன்னா எண்ணெய் விடுவேன்கா

      நீக்கு
    6. வடக்கே இருந்தவரைக்கும் எண்ணெய் தடவிய பருப்பு வகைகளே வாங்குவோம் ஏஞ்சல்! இங்கே அப்படிக் கிடைப்பதில்லை என்பதால் தினமும் நல்லெண்ணெய் விட்டுத் தான் பருப்பு வேக வைப்பேன். பல்லாண்டுப் பழக்கம். நெய் விடுவதில்லை.

      நீக்கு
    7. என் பொண்ணுக்கு நெய் ரொம்ப பிடிக்கும்க்கா :) அதான் சேர்ப்பேன் .இங்கே எண்ணெய் சேர்த்ததும் இருக்கே :)

      நீக்கு
  9. புதன்கிழமை கேள்வி பதிலிலே கேட்டிருக்கணுமோ? எல்லோருக்கும் தலை சுத்தி இருக்கும்! இஃகி, இஃகி

    பதிலளிநீக்கு
  10. ஒரு குறிப்புக்கும் அடுத்த குறிப்புக்கும் சில வரிகள் இடைவெளிவிட்டு பதியலாமே படிக்க எளிதாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போப் போயிட்டு முடிஞ்சா மத்தியானம் வரேன். எல்லோருக்கும் இனிய போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், கனு வாழ்த்துகள்.

      நீக்கு
    2. அப்படிதான் வெளியிட்டிருந்தேன். அப்புறம் என்னவோ ஆகியிருக்கு. இப்போ சரி செய்திருக்கிறேன். நன்றி மதுரை...

      நீக்கு
  11. பெண்கள் காய்கறிகளை முதல் நாளிலேயே நறுக்கி வைப்பதற்கு பதிலாக தேவ்வைப்படும் போது கணவரிடம் கொடுத்து நறுக்கி கொடுக்க சொல்லாம் @அதிரா @ ஏஞ்சல் இந்த முறையைத்தான் பயன்படுத்துகிறார்களாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன மதுரைத் தமிழன்... இதை ஏதோ தவறு மாதிரிச் சொல்லறீங்க? கீரை ஆய்வதைத் தவிர, காய் கட் பண்ணறதை நான் ஆர்வத்தோடு செய்வேன். என் மனைவி, தான் பார்த்துக்கொள்கிறேன் என்றாலும், காய் வாங்குவது, திருத்தித் தருவது எனக்கு விருப்பமான வேலைகள்.

      நீக்கு
    2. நெல்லைதமிழன் நான் தவறாக சொல்லவில்லை..என் நிலையை நேரடியாக சொல்லாமல் கிண்டல் செய்து இருக்கிறேன் அவ்வளவுதான் நெல்லைதமிழன் நீங்க காய்கறிதான் கட் பண்ணி தருகிறீர்கள் நான் கட் பண்ணி சமைத்து அதன் பின் பாத்திரமும் கழுவி வைக்கிறேன்

      நீக்கு
    3. மதுரைத் தமிழன் - நான் அப்படியெல்லாம் என் மனைவிக்குத் தண்டனை தருவதில்லை. (சாப்பிடறதைப் பத்தி நீங்க எழுதாததுனால, அதை மட்டும் உங்க மனைவியைச் செய்யச் சொல்றீங்கன்னு அஸ்யூம் பண்ணிக்கறேன்). ஹா ஹா ஹா. சாப்பிட்டால் ரெண்டுபேரும் சேர்ந்துதான் சாப்பிடுவோம்.

      நீக்கு
    4. எங்க வீட்டில்(மாமியார் வீட்டில்) காய் நறுக்குவதில் இருந்து எல்லாமும் நாம் தான் செய்துக்கணும். ஆகவே முக்கியமான கஷ்டமான காய்களை முதல்நாளே முன்னெல்லாம் நறுக்கிடுவேன். வாழைத்தண்டு, வாழைப்பூ, கொத்தவரை, அவரை, பீன்ஸ் போன்றவற்றை! வெங்காயமெல்லாம் நறுக்கி வைச்சுக்க மாட்டேன். அவ்வப்போது தான். ஆனால் இப்போ அவசரம் ஏதும் இல்லை என்பதால் இப்போச் சமைக்க ஆரம்பிக்கையில் காயை நறுக்கிவிட்டுப் பின்னர் சமையல் ஆரம்பிப்பேன். ஆகவே வாழைக்காயைத் தண்ணீரில் குளிப்பாட்டுவது. கத்திரிக்காயைத் தண்ணீரில் போடுவது எல்லாம் இல்லை. நறுக்கி உடனே சமைத்து விடுவேன்.

      நீக்கு
    5. இப்போல்லாம் வெங்காயம்,கொத்தவரை, முட்டைக்கோஸ் போன்றவற்றை அவர் நறுக்கி விடுகிறார். என்னை விடுவதில்லை. ரொம்பப் பெரிசா நறுக்கறேனாம். :)))))

      நீக்கு
    6. அதே கீதாக்கா மாமியார் வீட்டில் நிறையப்பேர் என்றால் காய் நான் முதல் நாளே கட் செய்து வைத்துவிடுவேன்.

      இப்ப எல்லாம் ஆட்கள் கம்மி என்பதால் சமைக்கும் போது நறுக்குவது வழக்கம்...

      கீதாக்கா வெல்லப் போளி ஸ்வீட் வேண்டாம் என்றால் உப்பு போளியாச்சும் மாமாக்கு...செஞ்சுருக்கலாமே! பிடிக்காதோ??!!!!

      கீதா

      நீக்கு
    7. ஸ்ஸ்ஸ்ஸ் :) மதுரைத்தமிழன் :) அந்த உண்மை எப்படி உங்களுக்கு தெரியும்

      ஆனா என்னை விட நேர்த்தியா வெஜிடபிள்ஸ் கீரை எல்லாம் என் கணவர்தான் வெட்டி தருவார்

      நீக்கு
  12. அனைவருக்கும் காலை வணக்கம். மெதுவாக வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. இப்படி தனித்தனியாக என்று கூட கொள்ளலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகப் புரியவில்லை. என்றாலும் நன்றி ஜம்புலிங்கம் ஸார்.

      நீக்கு
  14. சமையலறையில் சிவப்புநிற விளக்கு எரிய விட்டால் கரப்பான் பூச்சிகள் வெளியே வராது ஆனால் அது எல்லா இடுக்குகளிலும் தந் குடும்பங்களோடு அதன் பணியை செவ்வனே ஆற்றிக்கொண்டிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்னவோ உண்மைதான் பட்டாபிராமன் ஸார்.

      நீக்கு
    2. சமையலறை சிங்கை நன்கு கழுவி விட்டுப் பின்னர் ஒரு முறை(தினம் வேண்டாம், வாரம் ஒரு தரம்) ஹிட் அடித்துவிட்டால் கரப்பார் தலைகாட்டுவதில்லை! ஒவ்வொரு முறை கரப்பைக் கொல்ல ஹிட் அடிக்கையில் மானசிகமாக ஏஞ்சலிடம் மன்னிப்புக் கேட்டுடுவேன். :)))) ஆனால் சாப்பாட்டில் அதுவும் கூட வந்துட்டால் என்ன செய்யறது? அதான் கண்ணை மூடிக் கொண்டு அடிச்சுடுவேன். :))))))

      நீக்கு
    3. கர்ர்ர்ர் :) ஹாஹ்சா உண்மையில் கரப்பான்ஸையும் லவ் பண்ண வச்சதே நம்ம மோகன்ஜி ஹீரோ பாண்டுதான் :)

      நீக்கு
  15. பயனுள்ள குறிப்புகள் ஜி
    அயல்தேசங்களில் பேச்சலர்கள் அன்றாடம் உபயோகப்படுத்துவது முதல்நாள் அல்லது பத்து மணிநேரம் முன்பு வெட்டி வைத்த காய்கறிகளே...

    காரணம் ஒவ்வொருவரும் அவரவர் வேலையை செய்வது நேரம் கிடைக்கும்போதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி... வெள்ளி அன்று வாரத்துக்கு உண்டான சப்ஜிக்களைத் தயார் செய்து மற்ற நாட்களில் சாதம் மட்டும் வடிக்கும் குடும்பங்களை அங்கு கண்டிருக்கிறேன். அண்டா அண்டாவாக இட்லி/தோசைமாவு எப்போதும் ஃப்ரிட்ஜில் இருக்கும்படியாக அரைத்து வைக்கும் குடும்பங்களும் உண்டு.

      நீக்கு
    2. வாங்க கில்லர்ஜி... பேச்சிலர் வாழ்க்கையின் கஷ்டங்களே தனி!

      நீக்கு
  16. வித்தியாசமான தி பதிவு ஶ்ரீராம். Compile செய்து வெளியிட்டமைக்கு பாராட்டுகள்.

    குழம்பு ரசக் கரண்டிகள் வேறு வேறா? நான் கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வதுபோல (மேலேர்ந்து எடுத்தா பசும்பால், கீழே உள்ள பைப்பில் வருவது எருமைப்பால்), மேலாப்புல எடுத்தா ரசம், பாத்திரத்தில் உள்ளே கரண்டியை விட்டு எடுத்தால் சாம்பார் என்று நினைத்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை. பாராட்டுக்கு நன்றி. வீட்டில் காய்கறி இல்லாத நாளில் வேறு வழி இல்லாமல் ஒரு துவையலும் பச்சை மோர்க்குழம்பும் மட்டும் செய்வோம். பார்த்தால் அன்று எல்லோரும் 'இது நல்லாருக்கே..' என்று சாப்பிடுவார்கள்....!

      நீக்கு
    2. எங்க வீட்டில் எல்லாத்துக்கும் தனித்தனிக்கரண்டிகள் தான். அவற்றைப் பயன்படுத்திவிட்டுப் பின்னர் உபயோகிக்கணும் எனில் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் போட்டு வைத்துவிட்டு எடுத்துப்போம். வேலை முடிஞ்சதும் நன்கு கழுவித் தேய்த்துவிட்டுக் காய வைச்சு எடுத்து வைச்சுக்கலாம்.

      நீக்கு
    3. எங்க வீட்டில் வாரம் ஒரு நாள் புதன் அல்லது சனி, ஞாயிறுகளில் துவையல்/பொடி, ரசம், கூட்டு என வைப்பேன். தொட்டுக்க டாங்கர் பச்சடி, நெல்லிக்காய்ப் பச்சடி, தக்காளிப் பச்சடி இப்படி ஏதேனும். கலந்த சாதம் எனில் அன்னிக்குப் பச்சை மோர்க்குழம்பு அல்லது வெங்காயப் பச்சடி அல்லது காரட் பச்சடி செய்யும் சாதத்தைப் பொறுத்து!

      நீக்கு
    4. வேலை முடிச்சு வந்தா நோ கரன்ட்...அப்புறம் கரன்ட் வந்தா நெட் இல்லை...இப்பத்தான் ரெண்டும் சரியாகி...வர முடிந்தது..

      நெல்லை இங்க நம்ம வீட்டுல குழம்பு , ரசம் என்றெல்லாம் இரண்டு கிடையாது...ஏதேனும் ஒன்றுதான் இல்லைனா கலந்த சாதம்...ஸ்ரீராம் சொல்லியிருப்பது இல்லைனா கீதாக்கா சொல்லியிருக்கும் டிஷஸ் இல்லைனா சப்பத்தி சப்ஜி...அம்புட்டுத்தான்...மாமியார் வீட்டில் இப்ப - முன்பு அல்ல முன்பு எல்லாத்த்க்கும் தனி தனி கரண்டிதான் - ஆனா இப்ப ஒரே கரண்டிதான் குழம்பு அண்ட் ரசம் ஒரே கரண்டிதான்...புளி விட்டு செய்திருந்தால்...மோர்க்குழம்பு, ரசம் என்றால்...தனி தனி கரண்டி. அது போல புளி பேஸ் குழம்பு கூட்டு (தேங்காய் இல்லாமல்) அண்ட் மோர் ரசம் என்றால் தனி தனி கரண்டி...இல்லைனா ஒரே கரண்டிதான்.. மச்சினர் யூஸ் செய்கிறார். மீறுவதும் இல்லை... எனக்கும் அதே பழக்கமாகிவிட்டது..

      கீதா

      நீக்கு
    5. நெல்லை பங்களூருவுக்கு ஷிஃப்ட் ஆகிட்டீங்களா!!!!! ஹா ஹா ஹா (மேல் தெளிவு ரசம்....கீழ குயம்புன்னு)

      கீதா

      நீக்கு
  17. போளி செய்பவர்கள் கண்டிப்பாக போளியை எனக்கு அனுப்பி வைக்கவும் அப்படி இல்லையென்றால் உங்கள் ஸ்மார்ட் போனும் லேப்டாப்பு அடுத்த ஒரு வாரத்திற்கு வேலை செய்யாது என்பதை என் ஞான அறிவின் மூலம் அறிந்து சொல்லுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ட்றுத்துக்கு இப்போ என்னதான் பிரச்சனை?:).. உங்கள் இடத்தில் இன்றுதானே பொங்கல்... பேசாமல் பொயிங்குங்கோ... சே சே பொங்குங்கோ:)..

      நீக்கு
    2. போளி அளவாய் செய்து காலி பண்ணியாச்சு!!!

      நீக்கு
    3. யெஸ் யெஸ் ஸ்ரீராம் இங்கும் போளி அளவாய் செய்து காலி பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கும் கொடுத்து முடிஞ்சாச்சு...

      தேங்காய் பூரண போளி, க ப வெல்லம் போட்ட போளி, க ப சர்க்கரை போட்ட மங்களூர் போளி, க ப உப்பு போளி என்று எல்லாம் செஞ்சு குழந்தைகளுக்கும் கொடுத்து முடிஞ்சாச்சு...

      கீதா

      நீக்கு
  18. ஆஹா புதன் கிழமையில் மாற்றம் வருமென எதிர்பார்த்திருக்க, திங்களில் மாற்றம் வர வச்சிட்டீங்க:)...
    இடைக்கிடை இப்படி மாற்றம் நல்லதே.

    பதிலளிநீக்கு
  19. அழகிய ரிப்ஸ், பாதி தெரிந்தவைதான், தெரிந்தாலும் நடைமுறையில் சிலது கடைப்பிடிக்க முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். வெண்கலப்பானையில் ஆறாவது படிக்கும்போதே சாதம் வடித்தவன் நான். ஆனால் இப்போது குக்கர்தான். சிப்பில் தட்டு ஒன்று கூட இப்போது வீட்டில் கிடையாது!

      நீக்கு
    2. அப்ப அப்படி... இப்ப இப்படி!

      நீக்கு
  20. ///'ஓவர்லோடு' எப்போதும் கூடாது///
    இது மனிசருக்கும் பொருந்தும் ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. உண்மை.. அதுவும் இப்போது என் நிலையில்முற்றிலும் உண்மை. வெண்பொங்கல், போளி, வடை, சாம்பார் சாதம், வெண்டைக்காய் பொரியல், ரசம் சாதம், மோர்சாதம் சாப்பிட்டு விட்டு தூக்கக் கலக்கத்துடன் ரைப்புகிறேன்!!!

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர் நாளைக்கு சக்கரைப்பொங்கலுக்கும் வடைக்கும் கொஞ்சம் இடம் வையுங்கோ ஶ்ரீராம்:)..

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஹா....ஸ்ரீராம் பசங்க இருக்கறதால..இவ்வளவு ஐட்டம் ...வேண்டியிருக்கும்....சூப்பர் மெனு...

      ...சென்னைல இருந்தா நம்ம வீட்டுலயும் எல்லாமே செஞ்சுருப்பேன் ஏன்னா மக்கள்...இங்க ரெண்டு பேர் ஸோ போளி, சப்பாத்தி, மிக்ஸ்ட் காய் சப்ஜி (வெ நா கிடையாது! ) அம்புட்டுத்தான்...

      நாளை வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளிப்பு கூட்டு..வடை? ம்ம்ம் தெரியலை.. யோசனையில் இருக்கு...

      கீதா

      நீக்கு
    4. இது ஒரு ஒரு வாய்தான் வரும் என்பதால் கவலை இல்லை!

      நீக்கு
  21. டிப்ஸ் அருமை. கவனத்தில் கொள்ளவேண்டியவற்றை குறித்துகொண்டேன்

    பதிலளிநீக்கு
  22. இதே போல் கிட்சன் டிப்ஸ் என்று ஒரு பதிவு எழுதலாம் என்று நான் நினைத்தேன், நீங்கள் செய்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் ஒன்று வெளியிடுங்கள். புதிதாய் ஏதாவது விஷயம் இருந்தால் தெரிந்து கொள்ளலாம். அங்கும் கலந்து பேசலாம்!

      நீக்கு
  23. பயனுள்ள பகிர்வு.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  24. கத்தரிக்காய், வாழைக்காய், வாழைப்பூ போன்றவற்றை நறுக்குகையில் கத்தியில் மட்டுமில்லாமல் கைகளிலும் நல்லெண்ணெயோ, தே. எண்ணெயோ தடவிக்கொள்ளணும். இல்லைனா கைகள், முக்கியமாய் விரல்கள் கறுப்பாகிவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அதே கீதாக்கா பலாப்பழம் உரிக்கும் போதும் கையில் பிசின் ஒட்டாமல் இருக்க எண்ணெய் தடவிக்கனுமே...

      கேரளால கை உறை போட்டுட்டு சிலர் செய்வாங்க. காய்க்கும் சரி பலாவுக்கும் சரி..

      கீதா

      நீக்கு
    2. அதிரா என்னிடகும் கிளவுஸ் இருக்கு. கிஃப்டா வந்துச்சு. டக்கென்று நினைவுக்கு வராது. முன்பெல்லாம் பயன்படுத்தி பழக்கம் இல்லாமல் போனதால். நினைவு வந்தால் மாட்டிக் கொள்வேன். இப்ப அதை எடுத்து கிச்சனில் கண்ணில் படுவது போல வைத்துக் கொண்டாலும் ஹிஹிஹிஹி பல சமயங்களில் மாட்ட வருவதில்லை...அதுவும் வாழை கத்தரி கட் செய்யும் போது...கத்தரி கூட பரவால்ல...வாழைக்காய், பூ இதுதான்....எண்னெய்தான் யூஸ் செய்யுறேன்...இனி நினைவு வைச்சு யூஸ் செய்யனும்...

      கீதா

      நீக்கு
    3. பலாப்பழம் முழுசா வாங்கினது எல்லாம் என் மாமனார் காலத்தோடு போச்சு. இப்போச் சுளைகளை வாங்கினாலே நான் மட்டும் தான் திங்கணும். குழந்தைகளுக்குப்பிடிக்கிறதில்லை. அவர் சாப்பிட மாட்டார். :))) ஆகவே சுளைகள் கூட வாங்கறதே இல்லை.

      நீக்கு
    4. க்ளவுஸ் எல்லாம் போடுவதில்லை. எண்ணெய் தடவிக் கொண்டது உண்டு. ஆனாலும் கைநிறம் மாறுவது நடக்கும்!

      நீக்கு
  25. எல்லா டிப்ஸும் இப்பத்தான் வாசிச்சு முடிச்சேன் ஸ்ரீராம்...

    சூப்பர். தெரிந்தவை என்றாலும் சில பழக்கவழக்கங்கள் விட்டுப் போனதால், மாறிவிட்டதால் சிலது இப்ப பின்பற்றும் சூழலும் இல்லாமல் போச்சு..

    ஆனா பயனுள்ளவை அனைத்தும்...சூப்பர் மாறுதலான திங்கவுக்கு உதவும் டிப்ஸ்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிந்த டிப்ஸ்களாக இருந்தாலும் பெரும்பாலும் நாம் செய்வதில்லை கீதா... அல்லது நான்...!!!

      நீக்கு
  26. அக்காஸ், அண்ணாஸ், தம்பிஸ், நட்பூச் எல்லோருக்கும் இனிய பொங்கல், மாட்டுப் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! இப்பவே சொல்லிடறேன்...நாளை காலையில் ஒரு வேளை தாமதமாக வரலாம்...அதனால்தான்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

      நீக்கு
    2. ரெண்டு தங்கச்சிங்களை மறந்துட்டாங்க கீதா :)

      நீக்கு
  27. ///கேரட், முள்ளங்கி, வெங்காயம் ஆகியவற்றின் இலைகளில் வைட்டமின் A மற்றும் C சத்து இருப்பதால் அவற்றையும் வீணாக்காமல் சமைக்கலாம்.//


    கேரட் இலைகளை கொஞ்சம் கேரட் சேர்த்து பொரியல் செய்வேன் சூப்பரா இருக்கும் அதுபோல நூல்கோல் டர்னிப் இலைகளை அந்த காயுடன் சமைப்பேன்
    மைக்ரோவேவ் எங்க வீட்ல அலங்காரப்பொருள் ..
    3 வருஷமாச்சு அதை பயன்படுத்துவதில்லை .எனக்கு மைக்ரோவேவில் சூடு பண்ணுவதே பிடிக்காது ..அதோட ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதும் பிடிக்காது :) அன்னிக்கே சமையல் அன்னிக்கே முடிச்சிடுவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வ்வ்வ் மைக்குறோ வேவ் இல்லாட்டில் எப்பூடிக் குடும்பம் நடத்துறதாம்ம்ம்ம்ம்:) ஓவரா யாரும் பயப்பிடாதீங்க:)... என்னதான் கவனமா இருந்தாலும்:), எமன் அங்கிள் பாசமா வந்து கூப்பிட்டால் போய்த்தானே ஆகோணும்:)... ச்ச்சோ ஆகவும் இறுக்கமாக இருக்காமல் கொஞ்சம் விட்டுப்பிடிச்சு வாழலாம் எனத்தான் நான் நினைப்பேன்ன்:)...

      நீக்கு
    2. எல்லாக்காய்களின் இலைகளையும் கழுவிப் பொடியாக நறுக்கிக் கொண்டு வெந்தயக்கீரை, கொ.மல்லி, புதினா சேர்த்துக் கடலைமாவில் உப்பு, காரம், பெ.பொடி போட்டு அதில் கலந்து கொஞ்சமாய் நீர் விட்டுக் கொண்டு பகோடாவாகப் போட்டு எடுக்கலாம். அல்லது வெங்காயத் தாள்களுடன் சேர்த்துத் தக்காளியும் சேர்த்து வதக்கிச் சப்பாத்திக் கூட்டுச் செய்யலாம். ஜீரா ரைஸ் போன்றவற்றிற்கு இந்தக் கூட்டு நல்ல துணை.

      நீக்கு
    3. இதுவரையிலும் நான் கேரட், டர்னிப், முள்ளங்கி இலைகளை சமைத்ததில்லை தெரியுமோ?

      நீக்கு
    4. ஹாஹா சமைங்க ரொம்ப ருசியான காம்போ ரசம் ரைஸ் கூட .நாங்க நாகர்கோயில்காரங்க தேங்கா இல்லாம சமையலில்லை :)

      நீக்கு
  28. ப்ரிட்ஜில் ஒரு குட்டி பாட்டில் மூடியில் கொஞ்சம் பேக்கிங் சோடா போட்டு வச்சா நல்லது ப்ரிட்ஜ் நல்ல வாசமா இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேசிக்காய் பிழிஞ்ச கோது வச்சாலே சூப்பரா இருக்கும்...

      நீக்கு
    2. ஏஞ்சல் நீங்க சொல்லியிருப்பதும் செஞ்சுருக்கேன்...அதிரா நீங்க சொல்லிருக்கறதும் செஞ்சிருக்கேன் எலுமிச்சை அப்படியே கட் செய்து வைத்தாலும் சரி ஒரு கிண்ணத்தில் பிழிந்து வைத்தாலும் சரி...

      குக்கரில் சாதம் வைக்கும் போது, அடியில் தண்ணீரில் எலுமிச்சை பிழிந்த தோலைபோட்டால் குக்கர் அடி தண்ணீர் கரை படிவதில்லை.

      கீதா

      நீக்கு
    3. //ப்ரிட்ஜில் ஒரு குட்டி பாட்டில் மூடியில் கொஞ்சம் பேக்கிங் சோடா போட்டு வச்சா//

      //தேசிக்காய் பிழிஞ்ச கோது வச்சாலே//

      ஆ... ஆ... கேள்விப்பட்டிருக்கிறேன்.

      நீக்கு
  29. கறிவேப்பிலையை இலைகளை உருவி பேப்பர் என்வலப்பில் போட்டு மூடி ப்ரீசரில் வைச்ச FRESHNESS அப்படியே இருக்கும் இது இது இது :) ஸ்கொட்டிஷ் ரேடியோ குறிப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்ததில்லை. அதே போல முருங்கை இலைகளை செய்தித்தாளில் வைத்து மூடி பின்ன எடுத்தால் போல பொலவென தனியாய் வந்து விடும் என்றார்கள் (யாரோ) அதுவும் செய்ததில்லை. கறிவேப்பிலை இலைகளை டப்பர்வேர் டப்பாவில் அப்படி உருவிப்போட்டு வைத்ததுண்டு!

      நீக்கு
  30. அஜினோமோட்டா லாம் என்னன்னே தெரியாதது அநேகமா நிறைய சிப்ஸில் அதை சேர்க்கிறாங்கன்னு கேள்விப்பட்டேன் TANGY சுவைக்கு ..அதெல்லாம் வாங்குறதில்லை

    பதிலளிநீக்கு
  31. ஸ்ரீராம்ஜி, மற்ற எங்கள்பிளாக் ஆசிரியர்கள், நம் நண்பர்கள், சகோதரிகள் அனைவருக்கும் மகிழ்வான உழவர்திருநாள் வாழ்த்துகள்.

    ஸ்ரீராம்ஜி அருமையான டிப்ஸ். அனைத்தும் சிறப்பு. எங்கள் வீடுகளில் எப்போதுமே பானையில்தான் சோறு வடிப்பது வழக்கம். அதுவும் விறகு அடுப்பில்தான். கேஸ் அடுப்பு டீ போட, ஆப்பம் சுட என்று சிலதிற்கு மட்டும்.

    எங்கள் வீட்டில் சில காய்கள், பழங்கள் கட் செய்ய ரப்பர் க்லௌஸ் அல்லது கத்தி படும் விரல்களில் மட்டும் தொப்பி போன்ற உறை பயன்படுத்துவதுண்டு. காய் கட் செய்வதும் கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்வதுண்டு. பலகை எதுவும் வைத்துக் கொள்ளாமல், கையிலேயே வைத்து தோல் சீவுவது, காய் கட் செய்வது என்று செய்வது வழக்கம். ஒரு பாத்திரம் மட்டுமே வைத்துக் கொள்வதுண்டு.

    எங்கள் பகுதியில் உள்ள கோயிலில் இன்றிலிருந்து வெள்ளி வரை திருவிழா. நான் இம்முறை பொறுப்பாளராக இருப்பதால் நன்கொடை கலெக்ஷன் என்று பிஸி. வெள்ளி வரை பிசிதான். வெள்ளி என்று மகள் கோயிலில் ஓட்டம் துள்ளல் நடனம் ஆடுகிறாள். நிறைய நிகழ்ச்சிகள் இடம் பெறும். கோயில் பணிகள் கல்லூரி வீட்டு பணிகள் என்று அதனால்தான் பதிவுகள் வாசிக்க நேரம் இல்லாமல் போயிற்று.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளஸிஜி... பெரிய பொறுப்புகள் எல்லாம் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். பொழுதை பயனுள்ளதாகவும், சுவாரஸ்யமாகவும் கழிக்கிறீர்கள் என்று தெரிகிறது. உங்கள் மகளுக்கு எங்கள் வாழ்த்துகள்.

      நீக்கு
  32. கோர்வையாக எழுதியிருக்கிறீர்கள். அதது செய்யும்போது ஞாபகம் வரும். யாவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். உபயோகமான பதிவு. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி காமாட்சி அம்மா. உங்களுக்கு எங்கள் நமஸ்காரங்களும் வாழ்த்துகளும்.

      நீக்கு
  33. அருமையான குறிப்புகள்!
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  34. அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
    அனைத்தும் அருமையான டிப்ஸ்
    இரண்டு நாள் கழித்து வந்து கருத்துகள் இடுகிறேன்.
    வேலை சரியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா.

      ஆமாம். பொங்கல் சமயம் எல்லோரும் பிஸி.

      நீக்கு
  35. பயனுள்ள குறிப்புகள் எல்லாம்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  36. புதுமை இனிமை!! வேண்டுமென்றே லேட்டாக வந்தேன், நிறைய குறிப்புகள் கிடைக்கும் என்றே! :)) சில குறிப்புகள் படித்திருந்தாலும் புதுப்பித்துக் கொள்ள முடிகிறது என்பது உண்மையே.
    என் பங்குக்கு: சமைத்த பதார்த்தங்களின் மூடியை எடுக்கும் போது நிறைய பேர் மூடியை அப்படியே கீழே வைக்கிறார்கள் - கீழே இருக்கும் தூசுகள் ஒட்டி, திரும்ப மூடும் போது உள்ளே விழலாம். ஸோ, மூடியைத் தலைகீழாக வைக்க வேண்டும்!

    எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா... ஹா... நல்ல டெக்னிக் மி கி மா... நீங்கள் சொல்லி இருப்பதுவும் நல்ல குறிப்பு.

      நீக்கு
  37. சோடா உப்பு, அஜினமோட்டோ சமையலுக்கு உபயோகிக்கிறீர்களா? வேண்டாமே! சொந்தக் செலவில் சூனியம்!//
    நான் உபயோகிக்க மாட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஜினோமோட்டோ பார்த்ததே இல்லை. சோடா உப்பு மட்டும் குளிர்சாதனப் பெட்டிக்காக வாங்கி வைப்பேன். பயன்படுத்துவது இல்லை.

      நீக்கு
  38. கல்கண்டு பத்திரிக்கையில் வரும் குறிப்புகளை முன்பு எழுதி வைக்கும் பழக்கம் இருந்தது எனக்கு.
    என் சித்தி முக்கிய குறிப்புகளை கட் செய்து ஒரு ஆல்பம் தயார் செய்து வைத்து இருந்தார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!