நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
14.3.25
பார்த்து போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
"அப்படியே மனச என்னமோ பண்ணிடுச்சிங்க" மாதிரி பாட்டுகளைக் கேட்டிருக்கிறீர்களா? நீங்கள் என்னென்ன பட்டியலிடுவீர்கள்?
அவ்வப்போது மாறும். நிறைய இருக்கும்.
சில நாட்களாக என்னுள் இறங்கி என்னைத் தொல்லை படுத்திக்கொண்டிருக்கும் ராகத்தை, பாடல்களை இங்கு பகிர்கிறேன்.
முதலில் மகனின் இசையில்.
ஷ்ரேயா கோஷல் குரல் கேட்டிருக்கிறீர்களா? அரைக்கிலோ வெண்ணெய் சாப்பிட்டு விட்டுதான் ஒவ்வொரு பாடலையும் பாடுவாரோ என்று தோன்ற வைக்கும் குரல். அந்தக் குரலே உங்களை அப்படியே இழுத்துக் கொண்டு பாட்டுக்குள் மூழ்கடித்து விடும். போதாக்குறைக்கு டியூனும் அமைந்து விட்டால்?
காதலி தன் மனதில் இருக்கும் காதலன் பற்றி உருகிப் பாடும் பாடல் இது 7G ரெயின்போ காலனி படத்தில் யுவன் இசையில் முத்துக்குமார் பாடலை ஷ்ரேயா பாடுகிறார்.
படத்தில் ஆண்குரல் பாடல் மட்டுமே இடம்பெறும். முதலில் இந்தப்பாடல் இருப்பது எனக்கு தெரியாதிருந்தது.
எனக்குத் தெரிந்த ஒரு பெண் மருத்துவருக்கு இந்தப் பாடல் உயிர். இன்றளவும் அவருடைய ஃபோனின் ரிங்டோன் இந்தப் பாடல்தான். அவரை நான் அப்பொழுது ஒருமுறை "ஏதாவது ஒரு பாடல் இரண்டு வரி பாடுங்களேன்.." என்றபோது அவர் இந்தப் பாடலின் சரண வரிகளை உருகிப் பாடிய பாடல். நான்கு வரிகள் பாடி, அப்புறம் உணர்ச்சி மிகுதியால் பாடாமல் நிறுத்தி விட்டார். நன்றாகவே பாடினார்.
ராகத்தின் சாயல் சரணங்களில் நன்றாகவே தெரியும்.
நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன்
ஹோ ஓ உன்னில் இன்று
என்னை பார்க்கிறேன்
எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் உனக்கு கண்ணே
உன்னால்தானே நானே வாழ்கிறேன்
ஹோ ஓ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமா
ஆ தூது பேசும் கொலுசின் ஒளியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போனவளையலின் வண்ணமா ஆஆ
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள்
உந்தன் கையில்
தோளில் சாய்ந்து கதைகள் பேச நமது விதியில் இல்லை
முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு
பேசி போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா ஆ ஆ
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழிகள் என்னை மறக்குமா
ஆஆஆ தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்
வந்து வந்து போகும்
திருட்டு போன தடயம் இருந்தும்
திரும்பி வருவேன் நானும்
ஒரு தருணம் என்னடா காதலா
உன்னுள் வாழ்கிறேன்
நினைத்து
நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில்
வருவேன் உன்னால்
தானே நானே வாழ்கிறேன்
ஹோ ஓ உன்னில் இன்று
என்னை பார்க்கிறேன்
================
இந்த ராகத்தில் மகனின் பாடலைக் கேட்டோம். அப்பாவின் பாடலுக்கு போவோமா....
இந்தப் பாடல் ஆரம்பிக்கும்போது நமக்கு வரும் உணர்வை எப்படிச் சொல்வது?
எவ்வளவு உயரத்தில் தொடங்குகிறார் பாருங்கள்... உணர்வின் உச்சம் அங்கு தொடங்குகிறது.
உண்மை தெரிந்தால் நண்பன் மிகவும் வருத்தப்படுவான் என்று, அதனால் சுமங்கலிதான் என்று காட்டிக்கொள்ளும் தன் பிரியத்துக்குரிய தோழி, தன் கணவனை இழந்து விட்டாள் என்கிற அதிர்ச்சி தந்த உடல்நலக் குறைவைப் பொருட்படுத்தாமல், தோழியின் லட்சியமான அவள் மகளை நடனத்தில் சிறந்தவளாக்கும் முயற்சியில் 'இப்போது வேண்டாம், உன் உடல்நலம் சீராகட்டும்' என்று தடுக்கும் மருத்துவர், மற்றும் தன் நண்பனின் ஆட்சேபத்தையும் மீறி ஈடுபடும் ஒரு உன்னதக் கலைஞன்.
இந்த உணர்வை, இந்த சந்தர்ப்பத்தை எப்படி பாடலில் கொண்டுவருவது? அது இளையராஜாவுக்கு சாத்தியமாகி இருக்கிறது. SPB உணர்வுகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் - அபாரமாக. சரணத்தில் கேளுங்கள். மனதைத் தொலைத்து விடுவோம்.
பாடலை காட்சியுடன் ஒருமுறை ரசிக்கலாம். காட்சி இல்லாமல் பாடலை மட்டும் தனியாக ரசிக்கலாம். அப்படி தனியாக ரசித்து, கசியும் மனதை இசையாலேயே துடைக்கலாம்.
பாடலின் இடையில் வரும் காட்சி அமைப்பில் பாலுவுக்கும் தன் அம்மாவுக்குமான நட்பின் உயர்வு ஷைலுவுக்கு புரிய உண்மை உணர்ந்து தவறை உஙர்ந்து அவர் பாடும் இடம்.
"ஆச்சார்ய தேவோ பவா..." என்று பாடுமிடத்தில் இளையராஜாவின் பங்களிப்பு...
'நடராஜன் பாதத்தில் தலை சாயுமா' என்னும் இடத்தில உங்கள் கண்கள் கசிந்ததா என்று சொல்லுங்கள்.
இளையராஜா..... SPB....
நதியில் ஆடும் பூவனம், ஜனனி ஜனனி, காதல் ஓவியம் போன்ற பாடல்களை போலவே இந்தப் பாடலிலும் நடுவில் ஸ்லோக வரிகள் இடம்பெறுகின்றன- மிக மிக பொருத்தமாக, மிக மிக நெகிழ்ச்சியாக.
அந்த நேரத்தில் உங்கள் உணர்வுகபால் பொங்கி, அடக்க முடியாத ஆர்ப்பரித்தலிலிருந்து மெல்ல மெல்ல அமைதியான ஒரு பரவச நிலைக்கு வரும். அடுத்த சில நிமிடங்கள் நீங்கள் வேறு எந்த எண்ணங்களுக்கும் செல்லாமல் அப்படியே அந்த இசையில் மூழ்கி இருக்கலாம்.
இசைதான் எவ்வளவு உயர்ந்த கலை.
சமீபத்தில் ஒரு இசை நிகழ்ச்சியில் ஒரு கர்நாடக இசைப்பாடகர் - யாரென்று தெரியவில்லை, அல்லது நினைவில்லை, - இந்த ராகம் பாடும்போது இந்தப் பாடலின் ஸ்வரத்தைக் கொண்டு வருகிறார். முன் வரிசையில் அமர்ந்திருக்கும் இளையராஜா முகத்தில் புன்னகை.
SPB : ஸ: கா…….மா……….நீ…… கமகஸ மாகஸா S P ஷைலஜா : கஸா கஸா நீ ஸா
SPB : சங்கீத நாட்டியமே ஒரு யாகம் நிரிஸநிதமக கதமகரிஸநீ நிரிஸநிதமக பதநிஸரீஸ காரிமகதம கமதநிஸாநி தநிபதகமரிகஸா சங்கீத நாட்டியமே ஒரு யாகம்
SPB : தேகங்கள் எரியும் யாகங்கள் புரியும் ஆடுகிறேன் இது அமைதியின் கீதம் ஜீவிதமே ஒரு நாட்டியமாகும் உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே என்னுயிரைத் தேடுகிறேன் நானே
S P ஷைலஜா : ஆஆ……ஆஆ…… ஆண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம் பெண் : ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ…………………
சலங்கை ஒலி..... மிகவும் பிடித்த பாடல் இது... அந்தப் படமுமே ஒரு பெரும் முயற்சி. தோல்வியுற்ற கலைஞனை படமாக எடுப்பதற்கே பெரிய திறமையும் தைரியமும் வேண்டும்.
சமீபத்தில் இளையராஜாவின் காணொளியில், முதல் மரியாதை, முதல் காட்சிக்கான இசையை முதல்முறை பார்த்துவிட்டு பாரதிராஜா இளையராஜாவின் கையைப் பிடித்துக்கொண்டு கண்ணீர்விட்டாராம். படம் பிடிக்கவில்லை என்பது என் தனிப்பட்ட ரசனை, இசையமைப்பது என் தொழில் என்பது இளையராஜாவின் பதில் என்ன மாதிரியான கலைஞன் இளையராஜா. கற்பனையே பண்ணமுடியாது, எப்படி எங்கோ இருந்த இளையராஜாவை காலம் எங்கோ கொண்டுபோய் வைத்துவிட்டது என்று.
முதல் மரியாதை பற்றி நானும் படித்திருக்கிறேன். இளையராஜாவின் திறமை அபாரமானது. கடவுள் இதுமாதிரி சில கலைஞர்களை மனிதர்களின் மனப்பரவசத்துக்காக அனுப்பி வைக்கிறார்.
இதை நானும் பார்த்தேன் காணொளியில் சொல்லியிருப்பதை....க்ளைமாக்ஸ் பிடிக்கலை ராஜாவுக்கு ஆனால் இசை .அமைத்தார்....அந்த இசை க்ளைமாக்ஸை இன்னும் ..அதைத் தூக்கி நிறுதத்தியதாகவும் சொல்லப்பட்டது,.....
இதை நானும் பார்த்தேன் காணொளியில் சொல்லியிருப்பதை....க்ளைமாக்ஸ் பிடிக்கலை ராஜாவுக்கு ஆனால் இசை .அமைத்தார்....அந்த இசை க்ளைமாக்ஸை இன்னும் ..அதைத் தூக்கி நிறுதத்தியதாகவும் சொல்லப்பட்டது,.....
நாதவினோதங்கள், மௌனமான நேரம், எல்லோரும் ரசிக்கும் தகிடதகிமி, ஓம் நமசிவாய.. பாடல்கள் மிகவும் ரசிக்கும்படி இருக்கும். நான் மிக விரும்பும் வரிசை, நாத, மௌனமான, வேதம்
இளையராஜாவின் திறமை நாதவினோதங்கள் படத்துல பளிச்சுனு தெரியுது என்பது என் அபிப்ராயம். கலைஞனின் எதிர்பார்ப்பு பிறகு ஏமாற்றமடைவதை நமக்குக் கடத்தியிருப்பார், சினிமா கோணத்தில்.
இல்லை, நெல்லை அந்தப் பாடலில் எதிர்பார்ப்பும் உவகையும் மட்டும்தான். ஏமாற்றம் பாடலாக வராது.
சொல்லப்போனால் அந்தப் பாடலின் இறுதிப்பகுதியை இப்போதே கேட்கமுடியாது. வெட்டி விட்டார்கள். தெலுங்கில் சித்தாரா படத்தில் 'கின்னர சாமி ஒச்சிசிந்தம்மா வெண்ணெலா பைசேஸி 'பாடல் கேட்டிருக்கிறீர்களா? அதை அங்கு கொண்டுபோய்விட்டார்.
சில பாடல்கள் கேட்கும்போது, சில பாசுரங்களை நான் சேவிக்கும்போது, மனது கனக்கும் கண்ணில் நீர் வரும், குரல் தழுதழுக்கும். சில நேரங்களில் எதனால் இது நிகழ்கிறது என்றே புரியாது.
குறையொன்றும் இல்லை பாடிக்கொண்டே அல்லது கேட்டுக்கொண்டே வரும்போது கடைசியில் எம் எஸ் அம்மா "ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா" என்று பாடும்போது கண்கள் கலங்கி விடும்.
அதேபோல பாலமுரளியின் ஆபேரி நகுமோமு வில் இரண்டாவது சரணத்தில் 'ஜெகமேலனி பரமாத்மா எவரிகோ என்று பாடும்போது குரல் உச்சஸ்தாயியை எட்டும்போது,
மணமகள் படத்தில் சின்னஞ்சிறு கிளியே பாடலில் ஆண்குரல் உன் கண்ணில் நீர்வழிந்தால் பாடும்போதே இளகத் தொடங்கும் மனம் 'என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா ' வரி வரும்போது உடைந்து விடும்!
நாளையிலிருந்து இரு வாரப் பயணம், கொஞ்சம் கடினமான பயணம். எபிக்கு மற்ற தளங்களுக்கு வருவது கொஞ்சம் கஷ்டம்னு நினைக்கிறேன், ஞாயிறுக்கு வந்துவிடுவேன்னு தோணுது.
இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் இதுவரை கேட்டதில்லை. ஆனால், இப்போது கேட்டு ரசித்தேன்.
/அரைக்கிலோ வெண்ணெய் சாப்பிட்டு விட்டுதான் ஒவ்வொரு பாடலையும் பாடுவாரோ என்று தோன்ற வைக்கும் குரல்.. /
உண்மை. ஷ்ரேயா கோஷல் அவர்களின் பாடல்கள் இனிமையானவை. நம்மை இந்த உலகத்தையே மறக்கச் செய்து வேறு உலகத்திற்கு கொண்டு விடும் அளவுக்கு இனிமையானவை.
இரண்டாவது சலங்கை ஒலி பாடல்கள் அனைத்துமே கேட்க கேட்க திகட்டாதது. இன்றைய பகிர்வினை பாடலையும் ஏற்கனவே பலமுறை கேட்டதுடன் இப்போதும் கேட்டு ரசித்தேன். இரண்டுமே கண்களில் நீரை வரவழைக்கும் பாடல்கள்.
இன்று இரண்டு பாடல்களையும் உங்கள் விமர்சனத்துடன் கேட்டு ரசிக்கும் போது மிகவும் பரவசமானேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
ஹூம்.. எப்படிப்பட்ட பாடகர்களும் இசையமைப்பாளர்களும் தம் குரலால், இசையால் நம்மை மயக்கிய தமிழ் திரைப்பட உலகம் இப்படி ஒரு வெகு சாதாரண நிலைக்கு வந்து விட்டதென்று வருத்தமாகத் தான் இருந்தது. உச்சம் தொட்ட எதுவும் இப்படியான தரை தட்டும் நிலைக்கு இறங்கித் தான் மீண்டும் உச்சம் பெற வேண்டும் என்பது இறைவன் வகுத்த இயற்கை நியதியோ என்னவோ தெரியவில்லை. அப்படியாயின் தனிப்பட்ட நபர்கள் இதற்கு காரணமாக மாட்டார்கள் என்பதை மட்டும் யூகித்து உணர்ந்து கொள்ள முடிகிறது. மீண்டும் ஒரு உச்சத்திற்கான ஆரம்ப அடித்தளமே இதுவென்ற எண்ணமே மேலோங்கிறது.
வேறு மொழியில் தமிழ் வார்த்தைகளை அந்தப் பாடகிக்கு எழுதித் தந்திருப்பார்கள் போலிருக்கு. அவற்றை உச்சரிப்பதில் அவர் படும் சிரமம் நன்றாகத் தெரிகிறது. இசையில் அடங்காத வார்த்தைக் கோர்வைகள் இன்னொரு பக்கம் பாடுகிறவருக்கு சோதனையாக வந்து சேர்ந்திருக்கிறது. மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து சொதப்பி விட்டார்கள்
உருகினேன் என்ற வார்த்தை பார்த்து என்னன்ன திரைப்படப் பாடல்களுக்கெல்லாம் உருகினோம் என்று என் மனதில் ஒரு லிஸ்ட்டே ஓடியது. அம்மாடி!.. கண்ணதாசனும், வாலியும், எமெஸ்வியும் இளையராஜாவும், சுசீலாம்மாவும், டிஎம்ஸூம், ஜேசுதாசும் சேர்ந்து கொண்டு எப்படியெல்லாம் நம்மை உருக்கியிருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்ப்பதே நெஞ்சைப் பிழிய வைக்கும் உருக்கமாக இருந்தது.
நதியில் ஆடும் பூவனம், ஜனனி ஜனனி, காதல் ஓவியம் போன்ற பாடல்களை போலவே இந்தப் பாடலிலும் நடுவில் ஸ்லோக வரிகள் இடம்பெறுகின்றன- மிக மிக பொருத்தமாக, மிக மிக நெகிழ்ச்சியாக.
ஆமாம்! டிட்டோ.....ஜனனி ஜனனி கேட்க கேட்க ....எனக்குக் கண்டிப்பாகக் கண்ணில் நீர் துளிர்க்கும்...
அந்த நேரத்தில் உங்கள் உணர்வுகபால் பொங்கி, அடக்க முடியாத ஆர்ப்பரித்தலிலிருந்து மெல்ல மெல்ல அமைதியான ஒரு பரவச நிலைக்கு வரும்.
முதல் பாடலை விட சலங்கை ஒலி பாடல் எனக்கு மிகவும் பிடித்தது ஜி
பதிலளிநீக்குஅதிகாலையில் நல்லதொரு கீதம் மனதுக்கு இதமானது.
நன்றி தேவகோட்டை ஜி.
நீக்குகாக்க காக்க கனகவேல் காக்க..
பதிலளிநீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க....
நீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
///சரணத்தில் கேளுங்கள். மனதைத் தொலைத்து விடுவோம்///
பதிலளிநீக்குஉண்மை.. உண்மை...
நன்றி செல்வாண்ணா.
நீக்குசலங்கை ஒலி..... மிகவும் பிடித்த பாடல் இது... அந்தப் படமுமே ஒரு பெரும் முயற்சி. தோல்வியுற்ற கலைஞனை படமாக எடுப்பதற்கே பெரிய திறமையும் தைரியமும் வேண்டும்.
பதிலளிநீக்குசமீபத்தில் இளையராஜாவின் காணொளியில், முதல் மரியாதை, முதல் காட்சிக்கான இசையை முதல்முறை பார்த்துவிட்டு பாரதிராஜா இளையராஜாவின் கையைப் பிடித்துக்கொண்டு கண்ணீர்விட்டாராம். படம் பிடிக்கவில்லை என்பது என் தனிப்பட்ட ரசனை, இசையமைப்பது என் தொழில் என்பது இளையராஜாவின் பதில் என்ன மாதிரியான கலைஞன் இளையராஜா. கற்பனையே பண்ணமுடியாது, எப்படி எங்கோ இருந்த இளையராஜாவை காலம் எங்கோ கொண்டுபோய் வைத்துவிட்டது என்று.
முதல் மரியாதை பற்றி நானும் படித்திருக்கிறேன். இளையராஜாவின் திறமை அபாரமானது. கடவுள் இதுமாதிரி சில கலைஞர்களை மனிதர்களின் மனப்பரவசத்துக்காக அனுப்பி வைக்கிறார்.
நீக்குஇதை நானும் பார்த்தேன் காணொளியில் சொல்லியிருப்பதை....க்ளைமாக்ஸ் பிடிக்கலை ராஜாவுக்கு ஆனால் இசை .அமைத்தார்....அந்த இசை க்ளைமாக்ஸை இன்னும் ..அதைத் தூக்கி நிறுதத்தியதாகவும் சொல்லப்பட்டது,.....
நீக்குகீதா
இதை நானும் பார்த்தேன் காணொளியில் சொல்லியிருப்பதை....க்ளைமாக்ஸ் பிடிக்கலை ராஜாவுக்கு ஆனால் இசை .அமைத்தார்....அந்த இசை க்ளைமாக்ஸை இன்னும் ..அதைத் தூக்கி நிறுதத்தியதாகவும் சொல்லப்பட்டது,.....
நீக்குகீதா
ராஜா ராஜாதான்....எனக்கு ரொம்பப் பிடித்த விஷ்யமே ஒவ்வொரு கருவிக்குமான ட்யூனை நோட்ஸில் கொடுப்பது!! அசாத்தியம் இது.
நீக்குகீதா
இந்த இரண்டு பாடல்களுமே மனதை நோக அடிப்பவை...
பதிலளிநீக்குகாதில் விழும்போது சரி..
நானாக விரும்பிக் கேட்பதில்லை..
இசையின் தன்மை அப்படி
என்னால் கேட்காமல் இருக்க முடியாது செல்வாண்ணா...
நீக்குநாதவினோதங்கள், மௌனமான நேரம், எல்லோரும் ரசிக்கும் தகிடதகிமி, ஓம் நமசிவாய.. பாடல்கள் மிகவும் ரசிக்கும்படி இருக்கும். நான் மிக விரும்பும் வரிசை, நாத, மௌனமான, வேதம்
பதிலளிநீக்குசலங்கை ஒலி படத்தில் எனக்கும் எல்லா பாடல்களும் பிடிக்கும். இது சம்திங் ஸ்பெஷல்!
நீக்குதகிட ததிமி பாடல் ஆரம்பிக்கும் தாளம்.. வான் போலே வண்ணம் கொண்டு பாடல் ஆரம்பிக்கும் இசை... மௌனமான நேரம் பாடல் தொடங்கும் மென்மையான அமைதியசான தன்மை...
இளையராஜாவின் திறமை நாதவினோதங்கள் படத்துல பளிச்சுனு தெரியுது என்பது என் அபிப்ராயம். கலைஞனின் எதிர்பார்ப்பு பிறகு ஏமாற்றமடைவதை நமக்குக் கடத்தியிருப்பார், சினிமா கோணத்தில்.
நீக்குஇல்லை, நெல்லை அந்தப் பாடலில் எதிர்பார்ப்பும் உவகையும் மட்டும்தான். ஏமாற்றம் பாடலாக வராது.
நீக்குசொல்லப்போனால் அந்தப் பாடலின் இறுதிப்பகுதியை இப்போதே கேட்கமுடியாது. வெட்டி விட்டார்கள். தெலுங்கில் சித்தாரா படத்தில் 'கின்னர சாமி ஒச்சிசிந்தம்மா வெண்ணெலா பைசேஸி 'பாடல் கேட்டிருக்கிறீர்களா? அதை அங்கு கொண்டுபோய்விட்டார்.
முதல் பாடல் ஷ்ரேயா அவர்களே சூப்பர் சிங்கரில் பாடிக் கேட்டிருக்கிறேன். தனியா கேட்டதில்லை. நல்லா இருக்கும்.
பதிலளிநீக்குஎனக்கு ஷ்ரேயா கோஷலின் வேறு சில பாடல்களும் பிடிக்கும்.
நீக்குமன்னிப்பாயா,, நீயும் நானும் சேரும் நேரமே .போல.
சில பாடல்கள் கேட்கும்போது, சில பாசுரங்களை நான் சேவிக்கும்போது, மனது கனக்கும் கண்ணில் நீர் வரும், குரல் தழுதழுக்கும். சில நேரங்களில் எதனால் இது நிகழ்கிறது என்றே புரியாது.
பதிலளிநீக்குஅதேதான்.. அதேதான்...
நீக்குகுறையொன்றும் இல்லை பாடிக்கொண்டே அல்லது கேட்டுக்கொண்டே வரும்போது கடைசியில் எம் எஸ் அம்மா "ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா" என்று பாடும்போது கண்கள் கலங்கி விடும்.
அதேபோல பாலமுரளியின் ஆபேரி நகுமோமு வில் இரண்டாவது சரணத்தில் 'ஜெகமேலனி பரமாத்மா எவரிகோ என்று பாடும்போது குரல் உச்சஸ்தாயியை எட்டும்போது,
மணமகள் படத்தில் சின்னஞ்சிறு கிளியே பாடலில் ஆண்குரல் உன் கண்ணில் நீர்வழிந்தால் பாடும்போதே இளகத் தொடங்கும் மனம் 'என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா ' வரி வரும்போது உடைந்து விடும்!
எனக்கு ஆபேரி பிடிக்கும்.
நீக்குசமீபத்தில் அனிருத் பாடிய 'கண்ணம்மா உன்ன மனசில்க் நினைக்கறேன்' பாட்டு ஏன் பிடித்தது என்று ஆராயும்போது அது ஆபேரி ராக பேஸ் என்று தெரிந்தது.
அனிருத் பாடிய கண்ணம்மா உன்ன பாட்டு கேட்டேன் ஸ்ரீராம் இப்பதன....அது ஆபேரி பேஸ்....தெரியுது..
நீக்குகீதா
முக்காலா முக்காபுலாவும் ஆபேரி பேஸ்தான் கண்ணம்மா உன்ன....இந்தப் பாட்டிலிருந்து அந்தப் பாட்டுக்குத் தாவிச்சு...
நீக்குகீதா
நாளையிலிருந்து இரு வாரப் பயணம், கொஞ்சம் கடினமான பயணம். எபிக்கு மற்ற தளங்களுக்கு வருவது கொஞ்சம் கஷ்டம்னு நினைக்கிறேன், ஞாயிறுக்கு வந்துவிடுவேன்னு தோணுது.
பதிலளிநீக்கும்ம்ம்......
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம், நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் இதுவரை கேட்டதில்லை. ஆனால், இப்போது கேட்டு ரசித்தேன்.
/அரைக்கிலோ வெண்ணெய் சாப்பிட்டு விட்டுதான் ஒவ்வொரு பாடலையும் பாடுவாரோ என்று தோன்ற வைக்கும் குரல்.. /
உண்மை. ஷ்ரேயா கோஷல் அவர்களின் பாடல்கள் இனிமையானவை. நம்மை இந்த உலகத்தையே மறக்கச் செய்து வேறு உலகத்திற்கு கொண்டு விடும் அளவுக்கு இனிமையானவை.
இரண்டாவது சலங்கை ஒலி பாடல்கள் அனைத்துமே கேட்க கேட்க திகட்டாதது. இன்றைய பகிர்வினை பாடலையும் ஏற்கனவே பலமுறை கேட்டதுடன் இப்போதும் கேட்டு ரசித்தேன். இரண்டுமே கண்களில் நீரை வரவழைக்கும் பாடல்கள்.
இன்று இரண்டு பாடல்களையும் உங்கள் விமர்சனத்துடன் கேட்டு ரசிக்கும் போது மிகவும் பரவசமானேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பரவசமானதற்கு நன்றி கமலா அக்கா. இரண்டு பாடல்கள் குறித்தும் இன்னொரு முக்கியமான குறிப்பு உள்ளது. பார்ப்போம்.
நீக்குமுதல் பாடல்?..
பதிலளிநீக்குஹூம்.. எப்படிப்பட்ட பாடகர்களும் இசையமைப்பாளர்களும் தம் குரலால், இசையால் நம்மை மயக்கிய தமிழ் திரைப்பட உலகம் இப்படி ஒரு வெகு சாதாரண நிலைக்கு வந்து விட்டதென்று வருத்தமாகத் தான் இருந்தது. உச்சம் தொட்ட எதுவும் இப்படியான தரை தட்டும் நிலைக்கு இறங்கித் தான் மீண்டும் உச்சம் பெற வேண்டும் என்பது இறைவன் வகுத்த இயற்கை நியதியோ என்னவோ தெரியவில்லை. அப்படியாயின் தனிப்பட்ட நபர்கள் இதற்கு காரணமாக மாட்டார்கள் என்பதை மட்டும் யூகித்து உணர்ந்து கொள்ள முடிகிறது. மீண்டும் ஒரு உச்சத்திற்கான ஆரம்ப அடித்தளமே இதுவென்ற எண்ணமே மேலோங்கிறது.
உங்கள் சிரமம் புரிகிறது ஜீவி ஸார்.
நீக்குவேறு மொழியில் தமிழ் வார்த்தைகளை அந்தப் பாடகிக்கு எழுதித் தந்திருப்பார்கள் போலிருக்கு. அவற்றை உச்சரிப்பதில் அவர் படும் சிரமம் நன்றாகத் தெரிகிறது. இசையில் அடங்காத வார்த்தைக் கோர்வைகள் இன்னொரு பக்கம் பாடுகிறவருக்கு சோதனையாக வந்து சேர்ந்திருக்கிறது.
நீக்குமொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து சொதப்பி விட்டார்கள்
உருகினேன் என்ற வார்த்தை பார்த்து என்னன்ன திரைப்படப் பாடல்களுக்கெல்லாம் உருகினோம் என்று என் மனதில் ஒரு லிஸ்ட்டே ஓடியது.
அம்மாடி!.. கண்ணதாசனும், வாலியும், எமெஸ்வியும் இளையராஜாவும், சுசீலாம்மாவும், டிஎம்ஸூம், ஜேசுதாசும் சேர்ந்து கொண்டு எப்படியெல்லாம் நம்மை உருக்கியிருக்கிறார்கள்
என்று நினைத்துப் பார்ப்பதே நெஞ்சைப் பிழிய வைக்கும் உருக்கமாக இருந்தது.
நன்றி ஜீவி ஸார். அவர் தமிழ் உச்சரிப்பில் சிரமப்படுவதாக எனக்குத் தோன்றவில்லை.
நீக்குஉங்களுக்குப் பிடித்த பாடல்களைதான் முதலியிலேயே கேட்டிருந்தேன். எனக்கு என் ரசனை என்றால், உங்களுக்கு உங்கள் ரசனை.
எனக்குமே இந்த பாடல்கள் மட்டுமே அந்த ரகம் இல்லை என்பதும் சொல்லவேண்டும்.
நதியில் ஆடும் பூவனம், ஜனனி ஜனனி, காதல் ஓவியம் போன்ற பாடல்களை போலவே இந்தப் பாடலிலும் நடுவில் ஸ்லோக வரிகள் இடம்பெறுகின்றன- மிக மிக பொருத்தமாக, மிக மிக நெகிழ்ச்சியாக.
பதிலளிநீக்குஆமாம்! டிட்டோ.....ஜனனி ஜனனி கேட்க கேட்க ....எனக்குக் கண்டிப்பாகக் கண்ணில் நீர் துளிர்க்கும்...
அந்த நேரத்தில் உங்கள் உணர்வுகபால் பொங்கி, அடக்க முடியாத ஆர்ப்பரித்தலிலிருந்து மெல்ல மெல்ல அமைதியான ஒரு பரவச நிலைக்கு வரும்.
யெஸ்ஸு யெஸ்ஸு...
கீதா
குறிப்பாக இன்றைய இரண்டாவது பாடலில்.
நீக்குபேரமைதி.
வேதம் பாடம் ரொம்பப் பிடித்த பாடல் அது போல ஸ்ரேயா கோஷல் பாடலும் பிடித்த பாடல். யுவனின் இசை அமைத்த நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று.
பதிலளிநீக்குஷ்ரேயா கோஷல் நீங்க சொன்னாப்ல குரல் வழுக்கிக் கொண்டு போகும். இதெல்லாம் ஒரு வரம் தான்.
தமிழும் அழகா பாடறாங்க.
கீதா
ஆமாம். கடவுள் நல்ல குரல்வளத்தைக் கொடுத்திருக்கார்.
நீக்குஇரண்டாவது பாட்டு சொல்லவே வேண்டாம்...பிடித்த பாடல்.
பதிலளிநீக்குதலைவர் கலக்கியிருப்பார் இதில்....
என்ன ஒரு உணர்வு இல்லையா
கீதா
ஆமாம். மனம் விம்மும்.
நீக்குஇரண்டாவது பாடல் ஹம்ஸாநந்தி...
பதிலளிநீக்குமுதல் பாடல்? ஆபேரி? சாயல்?
கீதா
முதல் பாடலும் அதேதான்.
நீக்குநினைத்து நினைத்துப் பார்த்தேன் செம மெலடி.
பதிலளிநீக்குகீதா
Yes.
நீக்குஇரண்டு பாடல்களும் அருமையான பாடல்.
பதிலளிநீக்குமனதை நெகிழ வைத்து கண்ணில் நீரை வரவழைக்கும் பாடல்கள்.
உங்கள் விமர்சனமும் அருமை.
நன்றி கோமதி அக்கா.
நீக்குபாடல்களை ரசித்து அருமையாக விளக்கியுள்ளீர்கள்.நாமும் ரசித்தோம் .
பதிலளிநீக்குஇரண்டுபாடல்களும் . கேட்டிருக்கிறேன். இப்பொழுதும் கேட்டேன் நன்றி.
நன்றி மாதேவி.
நீக்கு