8.1.26

சூர்ய சந்திரனும் குருவும்

 

நாம் தொடங்கும் செயல்கள் எந்தவித தடங்கலும் இல்லாமல் நடைபெற வேண்டுமென்றால் நாம் வணங்க வேண்டியது விநாயக பெருமானை என்பது எல்லோருக்குமே தெரியும்.  மனித வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களான கல்வி கற்க தொடங்குவது, திருமண வாழ்க்கையை தொடங்குவது, பயணங்களை தொடங்குவது, போர் காலங்கள் போன்ற எல்லா காலங்களிலும் விநாயகரை இந்த சிறப்பான பதினாறு பெயர்களை சொல்லி வணங்கி விட்டு தொடங்கினால் அந்த செயல்கள் எல்லாவற்றிலும் எந்தவித தடங்கல்களும் வராது. 


சுமுகஸ்ச்ச ஏக தந்தஸ்ச கபிலோ கஜகர்ணக 

லம்போதரஸ்ச விகடோ விக்நராஜோ விநாயக 

தூமகேதூர் கணாத்யக்ஷ பாலச்சந்த்ரோ கஜானந 

வக்ரதுண்ட: சூர்ப்பகர்னோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:

ஷோடசைச்ச நாமானி ய: படேத் ஸ்ருணுயாதபி 

வித்யாராம்பே விவாஹே ச பிரவேசே நிர்கமே ததா

ஸங்க்ராமே ஸர்வ கார்யேஷு விக்நஸ்தஸ்ய ந ஜாயதே   

  • மங்கள முகம் வாய்ந்த சுமுகர், 
  • ஒற்றைக் கொம்பை உடைய ஏக தந்தர், 
  • கபில நிறம் வாய்ந்த கபிலர், 
  • யானைக் காதுகள் உள்ள கஜ கர்ணகர், 
  • பெரும் வயிற்றோடு கூடிய லம்போதரர், 
  • குள்ளத் தோற்றமுள்ள விகடர்,  
  • சகல விக்கினங்களுக்கும் ராஜாவான விக்கினராஜர்,  
  • எல்லா விக்கினங்களையும் அழிக்கக்கூடிய விநாயகர் 
  • நெருப்பை போல் ஒளி வீசக்கூடிய தூமகேது, 
  • பூத கணங்களுக்கு தலைவராக விளங்கும் கணாத்யக்ஷர், 
  • நெற்றியில் பிறைச் சந்திரனை சூடிய பால சந்திரன், 
  • யானைத் தோற்றமுள்ள கஜானனர், 
  • வளைந்த தும்பிக்கையை கொண்ட வக்கிரதுண்டர் 
  • முறம் போன்ற அகலமான காதுகள் கொண்ட சூர்ப்பகர்ணர், 
  • தம்மை வணங்கி நிற்கும் அடியவர்களுக்கு அருள் புரியும் ஹேரம்பர்
  • கந்த பெருமானுக்கு மூத்தவரான ஸ்கந்த பூர்வஜர் 
  • என்னும் பதினாறு பெயர்களையும் வித்தைகளை கற்க தொடங்கும் பொழுதும்,  
  • வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுதும் போர் காலத்திலும்      
  • யாராவது வாசித்தாலும் அல்லது செவி குளிர கேட்டாலும் அவர்களுக்கு எந்தவித விக்கினங்களும் சம்பவிக்காது. 
கல்சுரல் ஷாக்:

நாம் வளர்ந்த சூழலிலிருந்து மாறுபட்ட ஒரு சூழலுக்குச் செல்லும் பொழுது நமக்கு ஏற்படும் அதிர்ச்சிதான் கல்சுரல் ஷாக். கனடாவில் நான் சந்தித்த சில விஷயங்கள் எனக்கு ஏற்படுத்திய பாதிப்பகள்:

என் பேத்தியின் பிறந்த நாளுக்கு அவள் தன் தோழிகள் சிலரை அழைத்திருந்தாள். பார்ட்டி முடிந்து அவர்கள் சென்றதும், நான் அவளிடம், "குண்டா இருந்தாளே அந்தப் பெண்ணின் பேர் என்ன?" என்று கேட்டதும், அவள் மிகவும் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்தாள். குண்டு என்று நான் குறிப்பிட்டது பாடி ஷேமிங்காம்(உருவ கேலி). நம் ஊரில் நாம் வெகு சகஜமாக குண்டாக, கருப்பாக, சொட்டைத் தலை, நெடுநெடுவென்று ஒட்டடை குச்சி போல என்றெல்லாம் சொல்வோம். உருவ கேலி காமெடியை சினிமாவில் ரசித்தவர்களாயிற்றே நாம்.

அதைப்போல என் பேத்திகள் என் மகளிடம் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கும்பொழுது, நான் என் மகளிடம் ஏதாவது சொன்னாலோ, கேட்டாலோ, "பாட்டி யூ ஹேவ் டு வெய்ட் ஃபார் யுவர் டர்ன்" என்பாள் ஐந்து வயதாகும் சிறிய பேத்தி. நாம் என்னதான் முக்கியமாக பேசிக்கொண்டிருந்தாலும் பெரியவர்கள் ஏதாவது சொன்னால் குறுக்கிடுறார்கள் என்று நினைக்க மாட்டோம். ஒரு நாள் அவளோடு வெளியே சென்ற பொழுது, பாட்டி, "அவுட்சைட் யூ ஷுட் நாட் டாக் வித் மி இன் டமில்" என்றாள், "ஏன்?" என்று கேட்டதற்கு, "வெளியே செல்லும் பொழுது மற்றவர்களுக்கு தமிழ் புரியாது, அதனால் நாம் தமிழில் பேசக்கூடாது" என்றாள். சொல்லுங்க குருவே என்று கேட்டுக் கொண்டேன். 

அவளுடைய தோழி ஒரு குழந்தை வீட்டிற்கு விளையாட வரும். தஞ்சாவூர் பட கிருஷ்ணன் போல கொழு கொழுவென்று அழகாக இருக்கும். அதன் கஸ்பு கன்னங்களில் முத்தம் கொடுக்க ஆசையாக இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் செய்யக் கூடாதாம். அந்தக் குழந்தை அனுமதித்தால்தான் முத்தம் கொடுக்கலாமாம். அந்தக் குழந்தை முத்தமிட என்னை அனுமதிக்கவில்லை. என்ன ஊரப்பா? ஒரு குழந்தைக்கு ஆசையா ஒரு முத்தம் கொடுக்க முடியவில்லை. 

அந்தப் பெண் என் மகளை ஆண்டி என்று அழைக்க மாட்டாள், "ஸாயிஜனனிஸ் மாம்" என்பாள். இங்கு அவர்களுடைய உறவினர்களை மட்டும்தான் அங்கிள்,ஆண்டி என்ற உறவெல்லாம் சொல்லி அழைப்பார்களாம். மற்றவர்களையெல்லாம் பெயரிட்டுதான் அழைக்கிறார்கள். என் பேத்திகளே கூட அண்டை வீட்டார்களை பெயர் சொல்லிதான் குறிப்பிடுகிறார்கள். கீதா ரங்கன் இங்கு வந்தால் என்ன செய்வார்?


இதைச் சொல்லும் பொழுது 'அவரும் நானும்' என்ற தொடரில் திருமதி.துர்கா ஸ்டாலின் விவரித்திருந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அவருக்கு திருமணமான புதிதில் ஒரு முறை கோபாலபுரம் வீட்டிற்கு நெடுஞ்செழியன் வந்திருந்தாராம். இவர் ஸ்டாலினிடம், "நெடுஞ்செழியன் வந்திருக்கிறார்" என்றதும், "நாவலர் என்று சொல்லாமல் அவர் பெயரையா சொல்கிறாய்?" என்று ஒரு அறை விட்டாராம்.

நாம் சாதாரணமாக முன்பின் அறிமுகமில்லாதவர்களுக்கு அவர்களின் தோற்றத்திற்கோ, உடைகளுக்கோ பாராட்டுகள் வழங்க மாட்டோம். இங்கு அப்படியில்லை, "நைஸ் டிரஸ், வெரி ப்ரிட்டி டிரஸ்" என்று பாராட்டுகிறார்கள். 

'பொம்பள சிரிச்சா போச்சு..'என்று சொல்லி பெண்கள் சிரிப்பதற்கே தடா சொன்னவர்கள் நாம். இங்கே பெண்கள் அட்டகாசமாக சிரிக்கிறார்கள்.

இங்கு எனக்கு அறிமுகமான இந்தியக் குடும்பத்தினர் 30 வருடங்களுக்கு முன்பே இங்கு குடியேறியவர்கள். அதில் குடும்பத் தலைவர் அமெரிக்காவில் இருக்கிறார். அவ்வப்பொழுது வருவார். இண்டு பெண்களில் ஒருத்திக்கு மணமாகி விட்டது. தாயோடு இருந்து கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு பெண், சில மாதங்களுக்கு முன் தனியாக வசிக்கத் தொடங்கி விட்டாள். சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியில் பணி புரிந்து கொண்டே மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீட்டில் தாய் மட்டும் தனியே வசிக்கிறார்.  "அந்த பெரிய வீட்டில் அவர் எப்படி தனியாக இருக்கிறார்?" என்று நான் கேட்டதற்கு என் மகள், உனக்கு ரொம்ப இண்டியனைஸ்ட் தாட்" என்கிறாள்.  இருக்கட்டும். இந்த ஊரில் இந்த கொட்டும் பனியில் தனியாக கோலை ஊன்றிக் கொண்டு நடக்கும், கடைகளுக்கு வரும் முதியவர்களை பார்க்கையில் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

ASHWIN என்னும் நான்



அஸ்வின் ரவிச்சந்திரன்  'நீயா நானா' கோபிநாத்திற்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள்:

நான் பள்ளியில் படித்த பொழுது மற்ற மாணவர்களுக்கு என்னோடு பேசுவதில் ஒரு தயக்கம் இருந்தது. ஏன் அவர்களின் பெற்றோர்களுக்கே என்னோடு தங்கள் குழந்தைகள் பழகினால் நான் அவர்களையும் மைதானத்திற்கு அழைத்துக் கொண்டு போய் விடுவேனோ? என்ற பயம் இருந்தது. படிப்புதான் முக்கியம் என்று கருதிய காலம். இப்போது நிலமை மாறியிருக்கிறது.

வாழ்க்கையின் ஒரு நாளைத் தெரிந்து கொள்ளணும் என்றால் டி20 பாரு. அதில் ஒன்றுமே கிடையாது. மேட்ச் நடக்கும் நாள் நமக்கு நல்லதாக இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும், அப்படி இல்லை என்றால் எதுவும் வொர்க் ஆகாது. 

வாழ்க்கையை புரிந்து கொள்ள டெஸ்ட் மாட்ச் பாருங்கள். டெஸ்ட் மாட்ச் என்பது ஒரு தவம். ஐந்து நாட்கள் ஆட வேண்டுமென்றால் மேட்சிற்கு மூன்று நாட்கள் முன்பு ரெடியாக வேண்டும். நீச்சல், ஜிம், சாப்பாடு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, போதுமான அளவு தூக்கம் இவையெல்லாம் அவசியம். கண்டிப்பாக இரவு 10 மணிக்கு தூங்கி விட வேண்டும். 10:30க்கு தூங்கினால் மறுநாள் உடம்பு ஃப்ரெஷ் ஆக இருக்காது. அரை மணி நேரம்தான் வித்தியாசம்,ஆனால் உடம்பு ப்ரெஷ் ஆக இருக்காது. இப்படி மூன்று நாட்கள் ரெடியானால் ஐந்து நாட்கள் மேட்ச் ஆட முடியும். இப்படி எட்டு நாட்கள் இருக்க வேண்டும். அடுத்த டெஸ்ட் மாட்ச் ஆட  இதேமாதிரி எட்டு நாட்கள். ஒருவன் நூறு டெஸ்ட் மாட்சுகள் ஆட வேண்டும் என்றால் எப்படிபட்ட வாழ்க்கை என்று யோசித்து பாருங்கள். 

மேலும் ஐந்து நாட்களும் ஒரே மாதிரி இருக்காது. முதல் நாள் இருந்த மாதிரி பிட்ச் மூன்றாம் நாள் இருக்காது. வெதர் ஒரே மாதிரி இருக்காது, இப்படி பல விஷயங்கள்.

எனக்கு பீசா மிகவும் பிடிக்கும். அதில் இருக்கும் க்ளூட்டன் உடல் எடையை அதிகரிக்கும். இது தெரிந்த பிறகு, க்ளூட்டன் இல்லாத பீசா கிடைக்கும் வரை, பதினைந்து ஆண்டுகளுக்கு நான் பீசா சாப்பிடவில்லை.  சச்சின் எல்லாம் நிறைய தியாகங்கள் செய்திருக்கிறார்.  

கிரிகெட் விளையாடுவது பணத்திற்காகவோ, புகழுக்காகவோ அல்ல, அது கொடுக்கும் சந்தோஷத்திற்காக.

இப்போது புதிதாக விளையாட வருகிறவர்கள் சீக்கிரம் இலக்கை அடைய வேண்டும் என நினைக்கிறார்கள். என் பக்கத்து வீட்டுக்காரர் சீக்கிரம் போக வேண்டிய இடத்திற்கு போய் விடலாம், என்னால் முடியாது. பொறுமை அவசியம்.

வாய்ப்புகளை வாங்காதீர்கள். வாய்ப்புகள் அமைய வேண்டும், அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். 

தங்கள் குழந்தைகளுக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுக்கும் பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்கள் குழந்தைகள் தமிழ் நாட்டிற்கு விளையாட வேண்டும், இந்தியாவிற்கு விளையாட வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்த்து அவர்களை விளையாடச் சொல்லாதீர்கள், சந்தோஷமாக, ஜாலியாக விளையாடச் சொல்லுங்கள். தேறி விடுவார்கள். பேஷனை(passion) பிரஷர் ஆக்கி விடாதீர்கள்.

வேகமாக பேசும் அஸ்வின் பந்தா எதுவும் இல்லாமல், இயல்பாக பேசுகிறார். இந்த பேட்டியில் தன்னுடைய பெற்றோர்கள் தனக்கு கொடுத்த ஊக்கத்தையும், உழைப்பையும் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

உயர்திணை
-----------------------
எத்தனை வலியிருந்தாலும் 
எல்லாம் சரியாகிவிடும் 
என்பது போல் 
தொடங்கியது காலை.
பழக்கப்படுத்திய அத்தனை 
அலுவல்களும் 
முறைப்படி நடந்தேறின.
முற்றுப் பெறாததை 
அப்படியொன்றும் கண்டுகொள்ளவில்லை மனம்.
அந்தி வந்ததை 
அசதி வந்ததும் 
உணரமுடிந்தது.
காலத்தை 
தூக்கத்தால் 
கட்டிப்போட முடிந்தது. 
இருட்டுக்குப் பழகியது போர்வை. 
அறிந்ததெல்லாம் அடங்கும் 
தன்னிச்சையாக. 

------------

காலம் கவலையுடன் காத்திருக்கும் 
நீ வரும் நாள் என்றென. 
நான் சொல்வேன் அதனிடம் 
நீதானே வரவேண்டும் என்பதென. 
காலம் சொல்லும் என்னிடம் 
இணையலாம் ஒரு புள்ளியில் என்று.
சரி என்று சொல்லிவிட்டு 
செல்கிறேன் நானும் இன்று.
சிரித்து காலம் சொல்லும் நீ
ஒருநாள் இல்லாமல் போவாயே என்று.
சிரித்தபடி நானும் சொல்கிறேன் 
முன்பும் இல்லாததாகவே இருந்தேன் என்று.
--------------

அழிவின் வழி
--------------------------
நான் வசிக்கும் இடத்தில் 
காகங்கள் தென்படுவதில்லை. 
உணவுக்காகவும் வருவதில்லை. 
கா கா வென்றால் 
சோறு என்று பொருள் சொன்ன 
காக்கைகள். 
ஊர் சுற்றிக் காக்கைகள். 
ஊரெல்லையில் 
வேற்றூரின் தொடக்கத்தில் 
காணக்கூடும். 
எனினும் புறாக்கள் வரும்.
ஒவ்வொரு மூலையின் 
விளிம்புகளிலும் அவை 
வந்து போகும் அடையாளங்கள். 
உணவுக்காக வருவதில்லை. 
காக்கையின் உணவை புறா 
உண்பதில்லை.
சிறகின் சிறு தோகைகள் 
சிதறிக்கிடக்கும். 
உலகம் சுற்றும் புறாக்கள். 
இதுவும் ஒருநாள் வராமல் போகும்.
குருவிகள் போயின. 
காக்கைகள் காணவில்லை. 
புறாக்கள் மட்டுமென்ன !
ஒர இனம் அழிவதற்கு 
வழிகள் 
கிடைத்துக் கொண்டேயிருக்கும். 

மேற்படி கவிதைகளை எழுதியவர் சங்கர சுப்பிரமணியன்
என்னும் ஓய்வு பெற்ற வருமான வரித் துறை அதிகாரி. படிப்பும், இசையும் இவருக்கு மிகவும் விருப்பமானவை. ஒற்றை மழைத்துளி என்னும் வாட்சாப் குழுவில் தன் கவிதைகளை பகிர்வார். பெங்களூரில் எங்கள் குடியிருப்பில் வசிக்கிறார்.

முதல் மரியாதைக்குரிய தகவல்கள்: 




பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான முதல் மரியாதை படம் ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாவெஸ்கியின் வாழ்க்கையில் நடந்ததை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதாம். சாதாரணமாக முழு கதையையும் கேட்காமல் எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளாத சிவாஜி, பாரதிராஜாவின் மேலிருந்த நம்பிக்கையால் அவருடைய கதாபாத்திரத்தை பற்றி மட்டும் பாரதிராஜா கூறியதை கேட்டு ஒப்புக் கொண்டாராம். 

முதல் நாள் படப்பிடிப்பிற்கு திரிசூலம் ராஜசேகர் போல மேக்கப் போட்டுக் கொண்டு வந்த சிவாஜியைப் பார்த்து அப்செட் ஆன பாரதிராஜா பேசாமல் நகர்ந்து போய் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தார். ஒன்றும் புரியாமல் எல்லோரும் முழிக்க, பாரதிராஜாவின் உதவியாளரான சித்ரா லட்சுமணனை அழைத்து விசாரித்திருக்கிறார். டைரக்டர் பேக்கப் சொல்லிவிட மொத்த யூனிட்டும் காலை சிற்றுண்டி சாப்பிடுவதா வேண்டாமா என்று தவித்திருக்கிறது. 

இது எதுவும் தெரியாத கமலா இட்லி வார்த்து சிவாஜிக்கு எடுத்து வந்திருக்கிறார். மரியாதைக்கு டைரக்டரையும் அவர் அழைக்கச் சொல்ல, பாரதிராஜாவை அழைத்து வந்திருக்கிறார்கள். மேக்கப்பை கலைத்து விட்டு உட்கார்ந்திருந்த சிவாஜியைப் பார்த்த பாரதிராஜா, " இதாண்ணே வேணும், இப்படித்தான் நீங்க நடிக்கணும்" என்றாராம். தான் மேக்கபில்லாமல் நடித்தால் தன் ரசிகர்கள் ஒப்புக் கொள்வார்களா? என்ற சந்தேகம் சிவாஜிக்கு இருந்ததாம். பாரதிராஜா அவரை கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்தாராம். 
தவிர படத்தில் அவருக்கு பெரிய வசனங்கள் கிடையாது. "நடந்து வாங்க, அந்த மரத்துல கை வச்சு நில்லுங்க, திரும்பி பாருங்க" என்றே அவரிடம் வேலை வாங்கி இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்த பொழுது பாரதிராஜா மீது கொஞ்சம் மனவருத்தத்தில்தான் இருந்திருக்கிறார் சிவாஜி. வசன ஒலிப்பதிவு கூட எல்லோருடைய போர்ஷனையும் முடித்து விட்டு கடைசியில்தான் சிவாஜியின் பகுதியை டப்பிங் பேச அழைத்திருக்கிறார்.

இளையராஜாவுக்கு பணம் கொடுத்த பொழுது, "படம் கண்டிப்பாக ஓடாது, என்னிடம்தான் பணம் கேட்டு வருவான், அதனால் எனக்கு பணம் வேண்டாம்" என்று திருப்பி கொடுத்து விட்டாராம். பஞ்சு அருணாச்சலம்," இந்தக் குதிரை அதிர்ஷ்டத்தில் கூட ஓடாது" என்ராராம். ஆனால் படம் நன்றாக ஓடி, வாசூலைக் குவிக்க, இளையராஜா "படம்தான் ஓடி விட்டதே, எனக்கு சேர வேண்டியதை கொடுத்து விடுங்களேன்" என்று கேட்டதற்கு பாரதிராஜா, "எப்போ வேணாம்ணு சொல்லிட்டியோ அதோட முடிஞ்சது, விட்டுடு" என்று தர மறுத்து விட்டாராம். 

ரஷ்யன் கல்சுரல் சென்டரில் இருந்து முதல் மரியாதை படம் வேண்டும், ஒரு ப்ரிண்டிற்கு எவ்வளவு செலவாகும்? என்று விசாரித்திருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் ஒரு பிரிண்டிர்கு இருபத்தைந்தாயிரம்தான் ஆகுமாம், பாரதிராஜா ஒரு லட்சம் ஆகும் என்று சொல்லியிருக்கிரார். உடனே ரஷ்யாவிற்கு 100 பிரிண்டுகள் வேண்டும் என்று கேட்டு ஒரு கோடிக்கு செக் வந்து விட்டதாம்.  

இப்படி பல தகவல்களை சொல்கிறது வகுப்பறை என்னும் வலைப்பூ. 


உங்கள் கிச்சன் சிங்க் உங்கள் குணத்தை சொல்லும்




சமைக்கும் பொழுதே கையோடு பாத்திரங்களை கழுவி சிங்கை சுத்தமாக வைத்திருக்கும் பெண்கள்

ஆளுமைத் திறன் கொண்டவர்களாக இருப்பார்களாம்

எதையும் ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செய்து முடிப்பார்களாம்

செய்வன திருந்தச் செய் என்னும் கொள்கை உடையவர்களாக இருப்பார்களாம். 

நேர மேலாண்மையில் சிறந்து விளங்குவதோடு, எதையும் திட்டமிடுவதில் வல்லுனர்களாக இருப்பார்களாம். 

திட்டமிடுவது என்பதில் சேமிப்பும் அடங்கும், எல்லா பணத்தையும் ஒரே இடத்தில் முடக்காமல், பிரித்து, பல வகையாக சேமிப்பார்களாம். 

பிரபலங்களின் திருமணங்கள்: 


M.S. சுப்புலட்சுமி,சதாசிவம் திருமணம்



இந்திரா,ஃபெரோஸ் திருமணம்


M.L.V. கணவருடன்


நூல் விமர்சனம்:

முரண்படும் திருமணங்கள் - வசந்தா கோவிந்தராஜன்

முக நூலில் வசந்தா வானமாமலை என்று அறியப்படும் வசந்தா கோவிந்தராஜன் சமீப காலத்தில்தான் எழுதத் துவங்கியிருக்கிறார் ஆனால் குறுகிய காலத்திலேயே நிறைய பரிசுகள் வாங்கி விட்டார். 

ஸ்ரீரங்கத்தில் கண்டிப்பான அப்பாவால் வளர்க்கப்படும் ராம் என்னும் ராமசந்திரன் அமெரிக்காவிற்கு மேல்படிப்பிற்குச் செல்கிறான். அதுவும் கூட அவன் அப்பா ஆசிரியராக பணி புரியும் பள்ளியின் தலைமை ஆசிரியர் தன் மகன் அமெரிக்காவில் பணி புரிவதைப் பற்றி மிகவும் அலட்டிக் கொள்வதைப் பார்த்து தன் மகனையும் அமெரிக்காவிற்க்கு அனுப்ப முடிவு செய்கிறார்.

அங்கு அவனுடன் படிக்கும் ஜெம்மா என்னும் அமெரிக்க பெண்ணுக்கும் அவனுக்கும் காதல் அரும்புகிறது. ஆனால் அதை அப்பா நிச்சயம் ஒப்புக் கொள்ள மாட்டார், தங்கைக்கு திருமணம் ஆகும் வரை பொறுத்திருந்து பின்னர் அவரிடம் சொல்லிக் கொள்ளலாம் என நினைக்கிறான். 

தங்கையை தன் தங்கை மகனுக்கே திருமணம் செய்து தருகிறார் அப்பா. மாப்பிள்ளை அதிகம் படிக்கவில்லை, அப்பாவின் வெல்ல மண்டியை கவனித்துக் கொள்கிறான். அந்த திருமணத்தில் மாப்பிள்ளையின் சித்தப்பா பெண்ணை ராமசந்திரனுக்கு பேசி முடிக்க அவர்கள் முடிவு செய்ததும் தன் காதலை தெரிவிக்க வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு. எதிர்பார்த்ததைப் போலவே அப்பா ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் ஜெம்மாஆசைப்பட்டது போல் இந்தியாவில் நடக்காமல், அமெரிக்காவில் கோவிலில் இந்திய முறைப்படி தாலி கட்டி திருமணம் நடக்கிறது. அமெரிக்க பெண்ணாக இருந்தாலும் ஒரு இந்தியப் பெண் போல நடந்து கொள்கிறாள் ஜெம்மா.

அதற்கு நேர் மாறாக இருக்கிறார் இந்திய மாப்பிள்ளை. மகளும் அண்ணன் அமெரிக்க பெண்ணை மணந்து கொண்டதை சாக்காக வைத்து தந்தையிடம் காசு பறிக்கிறாள். கணவன் டாஸ்மாக் கடையை ஏலத்தில் எடுக்க தந்தையிடம் பொய் சொல்லி பணம் வாங்க அவளே கணவனுக்கு ஆலோசனை சொல்கிறாள். கடைசியில் கணவன் ஒரு சின்ன வீடு செட்டப் செய்து இவளை புறக்கணிக்கிறான். ஒரு நாள் அவளை அடித்து கீழே தள்ள, அவள் கையில் இருந்த குழந்தைக்கு தலையில் பலமாக அடிபட, காது கேட்கும் சக்தியை இழக்கிறது.அதனால் பேச்சும் வரவில்லை. அதற்கு வைத்தியம் செய்யவும் கணவன் முன்வராததால் அவள் தாய்வீடு திரும்புகிறாள். அவள் திருமணத்திற்கு போட்ட நகைகளுக்குப் பதிலாக கவரிங் நகைகளை கொடுக்கிறான். சின்ன வீட்டின் உபதேசத்தால் டாஸ்மாக் கடையில் பொட்டலம் விற்க, கைதாகிறான். 

ஊரிலிருந்து வரும் ராம் தங்கைக்கு விவாகரத்து பெற்றுக் கொடுத்து, குழந்தையின் வைத்தியத்திற்காக பெற்றோர்களையும், தங்கையையும் சென்னைக்கு குடியேற்றுகிறான். தன் தவறுகளை உணர்ந்த தங்கை தான் ஒரு வேலையில் அமர்ந்ததும் அப்பாவையும் அமெரிக்கா அனுப்புகிறேன் என்று கூறி அம்மாவை அண்ணனோடு அனுப்பி வைக்கிறாள். 

அந்த வெள்ளைக்காரி ஆறு மாதத்தில் மகனை விட்டு பிரிந்து விடுவாள், இந்திய மாப்பிள்ளை நன்றாக தன் மகளை கவனித்துக் கொள்வார் என்ற கணிப்புகள் பொய்யாகின்றன. நாடு,மொழி, மதம், இனம் என்ற கண்ணுக்குத் தெரியாத கோடுகளால் நாம் பிளவு படுகிறோம் என்கிறார் கதாசிரியர்.

மேல்நாட்டு மருமகள் படத்தை பார்த்தது போல இருக்கிறது. சரளமான நடை படிக்க வைக்கிறது. அவர் அமெரிக்காவில் பார்த்த விஷயங்களை கதையில் புகுத்திய சாதுர்யத்தை பாராட்டலாம். 

லஷ்மி, ரமணி சந்திரன் கதைகளை ரசிப்பவர்களுக்கு பிடிக்கும்.   
 

அனுஷ்காவிற்கு பிறகு அழகிகள் வராததால் ஸ்ரீராம் புகைப்படங்கள் பகிர்வதை நிறுத்தி விட்டார். ஒரு வேளை ஸ்ரீலீலாவிற்குப் பிறகு  தொடரலாம்.  அந்தக் கால வைஜெயந்தி மாலாவை நினைவூட்டுகிறார் பராசக்தி கதாநாயகி.



131 கருத்துகள்:

  1. கட்டவிழ்ந்த படைப்பூக்கம் மடை திறந்தாற்போல் பெருகிப்பாய்ந்திருக்கிறது!! அபாரம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் திறந்த பாராட்டிற்கு மிக்க நன்றி! __/\__ __/\__.

      நீக்கு
    2. என்னாலும் வியாழன் பதிவிற்கு பொறுப்பேற்று திறம்பட செய்ய முடியும் என்று நம்பி ஒரு நாள் ஆசிரியர் பதவி தந்து கௌரவித்த ஸ்ரீராமுக்கும் என் நன்றிகள். __/\__ __/\__

      நீக்கு
    3. அழைப்பை ஏற்று சிறப்பு செய்த உங்களுக்கும் நன்றி.

      நீக்கு
  2. கல்சுரல் ஷாக்... பலவற்றைச் சந்திக்கும்போது, கேட்கும்போது எனக்கும் அப்படித்தான் இருந்தது.

    சில நேரங்களில் இப்போதுள்ள தலைமுறை, அவர்கள் சார்ந்த உலகம் வேறு என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

    நம் தலைமுறை, அதற்கு முந்தைய தலைமுறையில் நிகழ்ந்தவைகளை அவர்களால் ஜீரணித்துக்கொள்ள இயலாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.

      நீக்கு
  3. கண் பட்டுவிடாமலிருக்க, இசுடாலின் மற்றும் ஃபெரோஸ் கான் படங்களை இணைத்திருக்கிறீர்களோ? ;-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா....   [சிக்கனமாக சிரிக்கிறேனாம்!]

      நீக்கு
    2. ஹா ஹா ஹா! துர்கா ஸ்டாலினை கொஞ்சம் பிடிக்கும்.

      நீக்கு
    3. இங்கு 'அன்பே வா' நாகேஷ் வசனத்தை நினைவு கூர்கிறேன்! எம் ஜி ஆர் பர்ஸ் பற்றி..

      நீக்கு
  4. அஸ்வின் பேட்டிகள், முதல் மரியாதை பற்றியவை பலமுறை பார்த்தது. படித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஸ்வின் அவரே ஒரு யூ டியூப் வைத்திருக்கிறார். பெரும்பாலும் ஆண்கள் பார்த்திருப்பார்கள். மு.ம. செய்திகள் எனக்கே புதிது. அத்னால்தான் பகிர்ந்து கொண்டேன். நன்றி.

      நீக்கு
  5. வியாழன் ஃபார்மாட்டும் மாறி விட்டதா?
    ஷோளிங்கர் யாத்திரைக் கட்டுரை முடிந்து விட்டதா? அல்லது சிறு இடைவெளியா?
    இன்றைய வியாழன் பதிவு மொத்தமும் பானுமதி வெங்கடேஸ்வரனின் கைவண்ணமா? சிறப்பாகச் செய்துள்ளார்.
    திருமணப் புகைப் படங்கள் சிறப்பு!
    ஸ்ரீராம் புகைப்படங்களைப் பகிர்வதற்கு ஸ்ரீலீலா தகுதியானவரே! ஆனால் நெல்லை ஒத்துக்கொள்வாரா (தமன்னா ஸ்கேலில் ஸ்ரீலீலாவுக்கு எத்தனை மார்க் கிடைக்குமோ? 😃) என்று தெரியவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய கதாநாயகிகள் அழகாய்த்தான் இருப்பாங்க, இருக்காங்க. பல படங்களுக்கு அவங்க தேறுவாங்களா என்பதுதான் சந்தேகம். சமீபத்தைய தமன்னா பார்க்கச் சகிக்கலை என்பதையும் சொல்லிவிடுகிறேன். பில்லா ஒன்றில் பார்த்த நயனைப் பிறகு காண இயலாத்து போல

      நீக்கு
    2. ஸ்ரீலீலா என்னைக் கவரவில்லை!

      நீக்கு
    3. //வியாழன் பதிவு மொத்தமும் பானுமதி வெங்கடேஸ்வரனின் கைவண்ணமா? சிறப்பாகச் செய்துள்ளார்.// நன்றி.

      நீக்கு
  6. எம் எஸ், இந்திரா, எம் எல் வி.. இந்த மூவரில் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர் யாராயிருக்கும்? ஒருவர் கண்டிப்பான, ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கையால் மிளிர்ந்தார். இன்னொருவர், தன் ஆசையினால், கணவனைக்கூட புறம் தள்ளிவிட்டு பெரிய நிலையை அடைந்தார். இன்னொருவருக்கு சொல்பேச்சு கேட்காத மகளால் துயரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்மூவருக்குள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர் எம்.எஸ் தான் என்பது என் கருத்து.

      நீக்கு
    2. அப்படியா சொல்கிறீர்கள் சூர்யா ஸார்?

      நீக்கு
    3. எம்.எஸ். அவர்களுக்கும் சில குறைகள் இருந்திருக்கின்றன. அவை அனைத்தையும் தன்னுடைய தியாகம், பொறுமை, உழைப்பு, பக்தி இவற்றால் தாண்டி வந்தவர்.

      நீக்கு
    4. அதே தான் பானுக்கா.

      கீதா

      நீக்கு
  7. கீதா ரங்கன் இங்கு வந்தால் என்ன செய்வார்//

    ஹாஹாஹா பானுக்கா சிரித்துவிட்டேன்.

    பானுக்கா, கீதாவுக்கு அப்படியான கலாச்சாரம் பழக்கம் என்பதால் ஷாக் வராது எந்தக் கலாச்சாரத்தையும் ஏற்கும் மனம். அங்கு எப்படியோ அப்படி கூப்பிட்டுக்கலாம்!!!! ஹிஹிஹி

    இரண்டாவது என் மனதிற்கு நெருக்கமாக உணரும் போது மட்டும்தான் அண்ணா, அக்கா, மற்றும் பெயர் சொல்லி அழைப்பது. அல்லாமல் இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என் மனதிற்கு நெருக்கமாக உணரும் போது மட்டும்தான் அண்ணா, அக்கா, மற்றும் பெயர் சொல்லி அழைப்பது. // நம்ம நாச்சியார் பாசமலராக்கும், பாத்துக்கிடுங்க! ஆனாலும், அகராதிலேயே தம்பி, தங்கை மட்டும் கெடெயாது, கேட்டேளா? :-)

      நீக்கு
    2. //நம்ம நாச்சியார் பாசமலராக்கும், பாத்துக்கிடுங்க! ஆனாலும், அகராதிலேயே தம்பி, தங்கை மட்டும் கெடெயாது, கேட்டேளா? :-)// ஹாஹாஹா.. அப்படி போடுங்க.. அவரையும் நெல்லை கீதா ரங்கன்கா என்பார். இரண்டு பேரும் ஒரே ஜில்லா. :))

      நீக்கு
    3. ஹாஹாஹா சிரித்து முடியலை திவாமா!!!!! அண்ட் பானுக்கா....

      ஊர்ப்பழக்கமுங்க....ஆனாலும் நான் சின்னப் பொண்ணுதானுங்க. நம்ம ஸ்ரீராம், நெல்லை சின்ன பசங்களைப் போல...சரி சரி உங்களையும் அந்த லிஸ்ட்ல இனி சேர்த்துக்கிட்டா போச்சு.

      //தம்பி, தங்கை மட்டும் கெடெயாது, கேட்டேளா? :-)//

      அதெல்லாம் பெயர் சொல்லிடுவேனாக்கும்.

      பானுக்கா அது எனக்கும் நெல்லைக்கும் அப்பப்ப போட்டி வந்துடும்!!!

      ஓரு சில நொடிகள் அப்பால பொறந்துட்டாலும் அவருக்கு நான் அக்காவாம்!!!!

      கீதா

      நீக்கு
  8. அக்கா இன்னொன்னு மகனுக்குச் சின்ன வயசுலயே ஒன்று சொல்லியிருக்கேன். நானும் அவனும் மட்டும் என்றால் தமிழில். கூடவே பலமொழி பேசும் நண்பர்கள் இருந்தால் ஆங்கிலத்தில்தான் உரையாட வேண்டும் என்று. இப்போதும் அப்படித்தான்.

    உங்கள் பேத்தி சொன்ன எல்லாத்தையும் அப்படியே டிட்டோ செய்கிறேன். சூப்பர் குழந்தை!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கொள்கை கீதா.. உயர ஐந்து!

      நீக்கு
    2. //உயர ஐந்து// என்னே, என்னே! உம் தமிழ்ப்பற்று கண்டு யாம் இறும்பூது எய்துகிறோம்!!

      நீக்கு
    3. ஹாஹாஹா....ஸ்ரீராம் நன்றி. எல்லாமே அனுபவம் தானே நம்மைப் புடம் போடுவது!

      கீதா

      நீக்கு
    4. //உயர ஐந்து!// அபுரி

      நீக்கு
    5. திவாமாண்ணா, பானுக்கா,

      அது நான் எப்பவும் 4 அடியார்ன்னு சொல்லிப்பேனே அதுக்கு...

      ஸ்ரீராம் வாய்ஸில் 'ம்' சைலன்ட் ஆகிடுச்சு. இல்லைனா டைப்பும் போது கூகுளே அப்படிப் போட்டுவிட்டது! சரியா ஸ்ரீராம்?

      கீதா

      நீக்கு
    6. சும்மா!!! கலாய்ச்சல்தான்....மேலே....

      பானுக்கா அடிக்கடி ஹை ஃபைவ் னு சொல்லிப்பேனா...அதைத்தான் உயர ஐந்துன்னு!!!

      திவாமா கருத்து பார்த்துச் சிரித்துவிட்டேன்..

      கீதா

      நீக்கு
    7. நல்லதொரு ரகசிய வார்த்தை. முதலில் வாழ்த்தை இப்படி ✋கை விரித்து சுட்டிக் காட்டிட ஒரு வசதியாக இது இருக்குமோன்னு நினைத்தேன். பிறகு ஹைஃபைவுக்கும் இப்படித்தானே என்பது புரிந்தது. எப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள் நீங்கள்.. (சகோதரர்ஸ்ரீ ராம்...) உங்கள் யோசனைக்கும் ஒரு ✋.(இது வாழ்த்து) . :))

      நீக்கு
    8. ஆஹா.. ஆஹா... எடுங்கள் ஒரு வில்லை!

      நீக்கு
    9. எந்த வில்லை...! புரிய"வில்லை"..! நிஜமான "வில்லை" என்றால், அது உங்களிடமிருந்துதான் (ஸ்ரீராம் அல்லவா?) நீங்கள்தான் எடுக்க வேண்டும். இன்றைய ஜோக்கில் வாட்சப் மூலம் வந்த இனிப்பகள் மாதிரி வலைத்தளம் மூலம் எனக்கு வந்த "வில்லை" (மிட்டாய்.. அதற்கும் "வில்லை" என்ற ஒரு பெயர் உண்டே..! ) என்றால், அது இன்னமும் என் கைக்கு எட்ட"வில்லை"..! . வந்து சேர"வில்லை" :)))

      நீக்கு
    10. வார்த்தை விளையாட்டில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான் கமலா.

      நீக்கு
  9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    ஆஹா... இன்றைய வியாழனில் புதியதோர் முயற்சியாக, அனைத்துமே வேறு பதிவரின் பகிர்வுகள். நல்லது. தொடரட்டும்.

    முதல் மரியாதை - இந்தப் படம் குறித்து நிறையவே தகவல்கள் வந்த வண்ணமே இருக்கின்றன. சில நாட்களாக படத்தின் காட்சிகள் முகநூலைத் திறந்தாலே வருகின்றன.

    கல்சுரல் ஷாக் - இருக்கத்தான் செய்யும். உள் நாட்டில் கூட நம் மாநிலத்திலிருந்து வெளி மாநிலத்திற்குச் செல்லும்போது பல விஷயங்கள் இப்படித்தான் இருக்கின்றன.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  10. அஸ்வினின் பேட்டி சூப்பர். நல்ல கருத்துகள். அனுபவத்திலும் அவர் நிறைய கற்றிருக்கிறார், மனம் பக்குவமும் இருக்கிறது என்றும் தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. சங்கரன் சுப்ரமண்யம் அவர்களின் முதல் கவிதையும் மூன்றாம் கவிதையும் சூப்பர். நடுவில் இருப்பது தத்துவம்?

    எதிர்க்கவிதைகள் இரண்டு பேரிடம் இருந்து வரும் என்று இன்றைய காலநிலை சொல்கிறது!!!!!!

    ஸ்ரீராம், ஜெ கே அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா இதில் என் பெயரை ஆபத்து அறியாமல் அறிவித்து விட்டார்...  எனவே நான் ப்ளேடு போடுவதென தீருமானித்து...

      காகம், புறா மட்டுமா காணோம் 
      கணக்கிலடங்கா விஷயங்கள் 
      காணாமல்போய் 
      கனகாலம்  ஆகிவிட்டது!

      கண்ணிலிருந்து காட்சியிலிருந்து
      ஒவ்வொன்றாய் மறைந்தது போல  
      காலம் முழுவதும் தொடரும் 
      என்று சொல்லப்பட்ட  
      காதலும் கரைந்து போனதே..  
      கணினியின் 
      டெம்பரவரி ஃபைல்ஸ் போல 
      காதலும், திருமணமும்  
      தற்காலிக உணர்வாகி 
      மீண்டும் மீண்டும் 
      அழித்து எழுதப்படுகிறதே...

      ஆகமொத்தம் 
      மனிதமே மறைந்துபோய்
      காலங்கள் ஓடிவிட்டது 
      மற்றவற்றை என்ன சொல்ல!

      நீக்கு
    2. ப்ளேடு நல்ல ஷார்ப்! ஸ்ரீராம்!!!

      நல்லாருக்கு ஸ்ரீராம். ஜெ கே அண்ணா வார்த்தைகளை,மடக்கிப் போட்டுன்னு' அடிக்கடிச் சொல்வதானாலும் இதுவும் இயற்கையோடு யதார்த்தத்தையும் இணைத்துக் கொண்டு வந்திட்டீங்க!

      கீதா

      நீக்கு
    3. // ப்ளேடு நல்ல ஷார்ப்! ஸ்ரீராம்!!! //

      ரொம்ப அறுத்துட்டேங்கறீங்களா !

      நீக்கு
    4. ஆஹா! நீங்கள் ஆசுகவிதான் சந்தேகமில்லை. அருமை! அரு௷! என்ன செய்வது? பொற்காசு பரிசளிக்க நான் அரசி இல்லையே?

      நீக்கு
    5. ஹா.. ஹா.. ஹா... நன்றி!

      நீக்கு
    6. ஸ்ரீராம், மொண்ணையா இருந்தாதானே ப்ளேடு! ஷார்ப்பானா கருத்தை ஷார்ப்பா சொல்லிட்கீங்கன்னு!!!
      கூடவே சொல்லிருக்கேனே கவிதை பத்தி!!.

      கீதா

      நீக்கு
  12. இதற்கு முன் ஒரு வியாழன் பதிவுக்கு நெல்லை பொறுப்பேற்றுக் கொண்டாரே.. நினைவில்லையா? இந்தப் பதிவை ரசித்தீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ்ஸூ பானுக்கா கலக்கிட்டீங்க

      கீதா

      நீக்கு
  13. முதல் மரியாதை குறித்து இப்படி செய்தியா.? நான் கண்டது வேறொன்று இளையராஜா படத்தின் கடைசி க்ளைமேக்ஸில் பாட்டின் இசையை இப்படி வைத்தால்தான் படத்தை தூக்கி நிறுத்தும் என்று சொல்லி வைத்து அது சக்ஸஸ் ஆனதாக வாசித்த/கேட்ட நினைவு. யுட்யூபில் என்று நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை கீதா.. பானு அக்கா சொல்லி இருப்பது சரி. ஆனால் அந்த பண விஷயம் எனக்கு தெரியாது!

      நீக்கு
    2. ஓ! ஓகே ஓகே....

      அந்தப் பண விஷயம் எனக்கும் தெரியாது.

      கீதா

      நீக்கு
  14. ஆளுமைத் திறன் கொண்டவர்களாக இருப்பார்களாம்//

    இதைப் பற்றிச் சொல்ல நிறைய உண்டு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லுங்க சொல்லுங்க. கேட்க நாங்கள் தயார்.

      நீக்கு
    2. ஹாஹாஹா....அது பலருக்கும் போரடிச்சிரும்...சுவாரசியமாகச் சொல்ல யோசிக்கணும் நிறைய!!

      கீதா

      நீக்கு
  15. வகுப்பறை தளத்துக்கு முன்னர் ரெகுலராக சென்றதுண்டு.  வாத்தியாரைப் படித்ததுண்டு.  இப்போதெல்லாம் ஆப்சென்ட் ஆகிவிட்டேன்!

    பதிலளிநீக்கு
  16. பழைய கருப்பு வெள்ளைப் படங்கள் தனிக்கவர்ச்சிதான்.

    வசந்தா கோவிந்தராஜன் அவங்க போன முறை ஸ்வர்ணாம்பாள் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவங்க.

    இங்கும் அவர் கதையை போட்டிருக்கிறோமே...

    கல்லூரிக்காலத்தில் ரமணிச்சந்திரன் கதைகள் என் நட்புகள் ரொம்பவே சிலாகிப்பாங்க மில்ஸ் அண்ட் பூன் கதை போன்று என்று சொல்வாங்க. அவங்க சொல்லி ஒன்றிரண்டு வாசித்தேன் ஆனால் அதன் பின் அப்பக்கம் செல்லத் தோன்றவில்லை. நல்ல மனதுடையவர் என்று வாசித்த நினைவு.

    வசந்தா கோவிந்தராஜன் என்னைத் தனிப்பட்ட முறையிலும் தொடர்பு கொண்டார். நான் பதில் கொடுத்தேன் என்றாலும் இன்னும் அதன் பின் தொடரவில்லை. நேரப் பளுவினால்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ரமணி சந்திரன், மில்ஸ் அண்ட் பூன் எல்லாம் ஒரே ரகம்.

      நீக்கு
  17. மொக்கை ஜோக்!!!! ஹாஹாஹா...நீங்களே சொல்லிட்டீங்கக்கா..

    கடைசிப் படம் சூப்பர் அந்த பொம்மை. அது என்னன்னு கேட்டிருக்கலாமோ...நாங்க ஏதாச்சும் சொல்லிருப்போம் யூகத்தில்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிஸ்கெட் ஜார்.

      நீக்கு
    2. பிஸ்கட் ஜார் கூட என்ன அழகா செய்யறாங்க இல்லையா? ! பானுக்கா?
      நான் இப்படி நிறைய பார்க்கிறேன் வித விதமான வடிவங்களில்.

      கீதா

      நீக்கு
  18. முதல் மரியாதை படத்தை சென்னை சாந்தியில் பார்த்தது என்பதைத் தவிர வேறு அபிமானங்கள் கிடையாது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் மரியாதை படத்தை உங்களால் ரசிக்க முடியவில்லையா?

      நீக்கு
    2. அந்தப் படம் அருமையான படம். தெக்கத்திச் சீமையைச் சேர்ந்தவன் என்பதால் ரசிக்க முடிந்தது.

      நீக்கு
    3. பக்கத்துச் சீமையாயிருந்தாலும் என்னாலும்  ரசிக்க முடிந்தது!!

      நீக்கு
  19. ​இந்த வாரம் வியாழன் என்னவோ வியாழன் போல் இல்லை. சாதாரணமாக தமிழ் தவிர மற்ற மொழிகளை வியாழன் அன்று பயன் படுத்தாத நீங்கள் கணபதி பூஜையுடன் ஆரம்பித்தது வியப்பாக இருக்கிறது.
    சட்டென்று பாதை மாறி பேத்தி, கனடா என்று கட்டுரை வந்தபோது திகைப்பு, பின்னர் தான் அது பா வெ அவர்கள் எழுதியது என்று புரிகிறது ...

    கவிதைகளை மடக்கிப்போட்ட வாக்கியங்களாகத் தான் கருத வேண்டியிருந்தாலும் இரண்டாவது கவிதையின் கரு சிறப்பாக உள்ளது. space time are relative. காலத்தில் பயணித்தால் நிகழ்வும் காலமும் ஒன்றாகும். நல்ல விளக்கம். இதைத்தான் சூன்யத்தில் இருந்து சூன்யம் வரை என்று சொல்கிறார்களோ? இந்தக் கவிதைகளை தேர்ந்தெடுத்தது நீங்கள் இல்லையா? //பெங்களூரில் எங்கள் குடியிருப்பில் வசிக்கிறார்.//

    அப்படி படிப்படியாக வாசித்து வரும்போது முழு பதிவும் பா வெ யில் படைப்பு என்று மண்டையில் உறைக்கும்போது தான் ஏன் மற்ற நாட்களில் ஸ்ரீ ராமின் வியாழன் முத்திரை இடம் பெற்றது என்பதை உணர முடிகிறது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு நாள் முதல்வர் போல இன்றைக்கு நான் ஒரு நாள் அசிரியர்.

      நீக்கு
    2. ​ஆம் ஒரு நாள் "அ"சிரியர் . பல நாள் சென்றாலே "ஆ"சிரியர்.

      Jayakumar

      நீக்கு
  20. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. ​முதல் கவிதை //காலத்தை தூக்கத்தால் கட்டிப்போட முடிந்தது// என்பதே முரண். தூக்கம் காலத்தை புறக்கணிக்கிறது என்பதே சரி என்று தோன்றுகிறது.

    காலம் என்பது என்ன?
    அண்டத்தில் காலம் உண்டோ?
    காலத்தை அறிவது பருப்பொருள்
    பருப்பொருள் இல்லையேல்
    காலமும் இல்லை.

    மூன்றாவது கவிதை புறா காகம் பற்றியது.
    நான் தினமும் மதியம் உண்ணுமுன் ஒரு பிடி சோறை காக்கைக்கு வைப்பது வழக்கம் . வழக்கம் போல் காகங்களும் வந்து உட்கொள்ளும். சில நாட்களில் எங்கிருந்தாவது புறாக்கள் வந்து சோற்றை உண்ணும்போது காகங்கள் மாறி நின்று புறாக்கள் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டே இருக்கும்.

    காகங்கள் முன்னோர்கள்?
    புறாக்கள் ?
    புறாவை பார்த்து
    வழி விடும் காகங்கள்!
    ஏன்?
    தாழ்ந்தவர் உயர்ந்தவர்
    பாகுபாடு பிறவிகளிலும்
    தொடர்கிறதொ?

    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா,

      //காலத்தை தூக்கத்தால் கட்டிப் போட முடிந்தது//

      இது கண்டிப்பாக முடியாது. காலம் போய்க்கொண்டேதானே இருக்கும்...தூக்கத்தில் கூடக் காலம் நகர்ந்து கொண்டேதானே இருக்கும்.

      அதை நான் இப்படிப் பார்த்தேன்...கொஞ்ச நேரமேனும் காலத்தைப் பற்றி நினைக்காமல் நல்ல தூக்கம் என்பதாக.

      உங்களின் அந்த காகம் புறாக் கவிதை யின் பொருளைப் பற்றி நான் அடிக்கடி யோசித்ததுண்டு.

      கீதா

      நீக்கு
    2. யோசித்தது வேறு வகையாக...உருவகப்படுத்தி...

      கீதா

      நீக்கு
    3. கீதாவின் கருத்தை வழி மொழிகிறேன்.

      நீக்கு
    4. புறாக்கள் VS காகங்கள் பற்றிய உங்கள் கவிதை சிந்தனையைத் தூண்டுகிறது.

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பத்தை கோர்த்து கட்ட முடிவு செய்து அதை சிறப்பாக செய்திருக்கும் சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆரம்பமே பிள்ளையார் துதி மனதை நிறைத்து விட்டது. அவரை நினையாமல் ஒரு செயலேது..?

    கல்சுரல் ஷாக்கை ரசித்தேன். இது இப்போது எல்லாவிதத்திலும் ஜெனரேஷன் ஷாக் ஆகி விட்டது. அவர்களது நடவடிக்கைகள், ரசனைகளை பார்க்கும் போது இப்போதுள்ள குழந்தைகள் அதி புத்திசாலிகளா..? இல்லை நாம்தான் அடி முட்டாளாகவே இருக்கிறோமா எனப் புரியவில்லை. ஆனால் ஒரு நதியாக நாம் வளைந்தால்தான் மீதியுள்ள காலத்தை கடக்க முடிமென்ற சிறிதான புத்திசாலித்தனம் நமக்கும் வருகிறது. மீதியை படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா யாரும் அடி முட்டாளும் இல்லை யாரும் அதி புத்திசாலியும் இல்லை. அவரவர் சூழலுக்கு ஏற்ப அனுபவங்களோடு கற்றுக் கொள்வதுதான். அடுத்தாப்ல சொல்லிருக்கீங்க பாருங்க் நதியாகன்னு...அது..அது...!!!!

      ஆனால் தேக்கம் மட்டும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் நாம்!!

      கீதா

      நீக்கு
    2. நதியாக வளைய முடியாத நான் என்ன செய்வேன் என்று யோசிக்கிறேன்.

      நீக்கு
    3. வாங்க கமலா. முதல் இரண்டு பகுதிகளுக்கு கருத்து போட்டு விட்ட வேகத்திலிருந்து உங்களை அவை கவர்ந்திருக்கிறது என்பது புரிகிறது. ம்ற்ரவை பற்றியும் உங்கள் அபிப்பிராயம் அறிய ஆவல்.

      நீக்கு
    4. நெல்லை, எல்லாத்துக்கும் நதியாக வளைய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. வளைய வேண்டியதுக்கு மட்டும் வளைந்து கொடுத்தால் போதும் அது முக்கியம். ஆனால் எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுத்தால் அதுக்கு வேறு பெயர்!

      நாம் நம் authenticity இல்லாமல் இருக்கிறோம் அல்லது இழந்துவிடுகிறோம்..

      நதியின் ஓட்டத்திலிருந்து இது ஒரு பாடம்தான். சீறிப்பாயும் நதியை யாராலும் தடுக்க முடியாதே! அதுக்கு வேறு ஒரு விளக்கம். இப்படி நதியின் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிளக்கம் உருவகப்படுத்திச் சொல்லலாம்தான்.

      கீதா

      நீக்கு
    5. /ஆனால் தேக்கம் மட்டும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் நாம்!!/

      உண்மை.. குப்பை கூளங்கள் என வேண்டாதவையான தேக்கங்கள் வந்து விட்டால், நம் மனமே நம் எதிரியாகி விடும். சரியாக சொன்னீர்கள். நன்றி.

      நீக்கு
  23. கல்சுரல் ஷாக் பற்றி நிறையச் சொல்லி இருக்கேன். அதிலும் கல்யாணம் ஆகிப் புக்ககம் வந்ததுமே அவங்க பேச்சுக்களை எல்லாம் கேட்டு கல்சுரல் ஷாக்! அதிலும் என் கடைசி நாத்தனார், அவரின் தம்பியான பெரிய மைத்துனர், ஆறு வயதே ஆன சின்ன மைத்துனர் ஆகியோரெல்லாம் பேசுவதைப்பார்த்தால் மயக்கமே வந்துடுத்து!

    பதிலளிநீக்கு
  24. நேத்திக்கே என்னமோ மனசில் தோன்றியது இன்னிக்கு பானுமதியின் பங்களிப்பு இருக்கும்னு. வந்து பார்த்தால் முழுப் பதிவும் அவர் கைவண்ணம். பானுமதியின் பேத்திகள் சொன்ன மாதிரி என்னையும் நம்மவரையும் எங்க பெண்ணே சொல்லி எச்சரிப்பாள். பொது இடங்களில் தமிழில் பேசுவதைத் தவிர்ப்போம். அதோடு ஓட்டல்களுக்குச் சாப்பிடப் போனால் பரிமாறுபவரிடம் நான் எத்தனை மெதுவாக/பணிவாகப் பேசினாலும் பெண் உனக்கு நடந்துக்கவே தெரியலை அம்மா! என்பாள். நம்ம ஊரில் போல பேப்பர் நாப்கின் தேவைனோ, ஸ்பூன் அல்லது கத்தி தேவைன்னோ அவங்களிடம் நேரில் சொன்னால் ஏதோ தப்புச் செய்தாற்போலப் பெண் பதறிப் போவாள்.

    பதிலளிநீக்கு
  25. முதல் மரியாதை குறித்து இன்னமும் மேலதிகத் தகவல்கள் உள்ள ஒரு கட்டுரையை முகநூலில் ஏற்கெனவே படிச்சேன். இளையராஜா பணம் வாங்க முதலில் மறுத்ததும், பின்னர் கேட்டதும், பாரதிராஜா கொடுக்க மாட்டேன்னு சொன்னதும் அதனால் இருவருக்குள்ளும் வந்த மனஸ்தாபமும் பற்றி விரிவாகச் சொல்லி இருந்தாங்க. ஆனால் ஜிவாஜி இந்தப் படத்தில் வீட்டில் இருக்கிறாப்போல் இயல்பாக இருப்பார். மற்றப் படங்களில் நடிச்சாப்போல மிகை நடிப்பாக நடிக்கலை. அதுவே ஓர் ஆறுதல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறான தகவல்.  இளையராஜாவுக்கும் பாரதிராஜாவுக்கும் இந்த விஷயத்தில் மனஸ்தாபம் வரவில்லை.  இளையராஜா பணத்தை பெரிதாக மதிக்காமல் மணிரத்னம் உட்பட பலருக்கு பல படங்கள் காசே வாங்காமல் இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்பதை அறியவும்!  வைரமுத்து பிரிந்தபோது பாரதிராஜா அவருடன் சென்றார், இவர்களை அலட்சியப்படுத்தி.  அதுவும் ஒரு காரணம்.

      நீக்கு
  26. சங்கரசுப்ரமணியன் கவிதைகளும் முன்னரே பார்த்த மாதிரி இருக்கு. நடுக் கவிதை அருமை. காக்கைகள் எல்லாம் எங்கும் போகலை. புறாக்கள் பெருகி இருப்பது என்னமோ உண்மை. ஸ்ரீரங்கத்தில் எங்க குடியிருப்பு வளாகத்தில் புறாக்கள் அதிகம் ஆனதால் உடல்நிலைக்கு ஆபத்து என்பதால் வலை போட்டு அவற்றின் வருகையைத் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அபார்ட்மென்டுக்குக் கிட்டத்தட்ட எட்டாயிரம் வரை கொடுத்திருக்கோம் இதுக்காக. ஆனாலும் புறாக்கள் வராமல் இல்லை. :(

    பதிலளிநீக்கு
  27. சமையலறைத் தொட்டி முற்றம் எப்போவும் சுத்தமாக இருந்தால் தான் அதில் வேலை செய்யவே முடியும். நான் ஒரு நாளைக்கு நாலைந்து முறை கழுவிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சமையலறைத் தொட்டி முற்றம் எப்போவும் சுத்தமாக இருந்தால் தான் அதில் வேலை செய்யவே முடியும். நான் ஒரு நாளைக்கு நாலைந்து முறை கழுவிடுவேன்.// இந்த பகுதியை எழுதும்பொழுது உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். ரஞ்சனி அக்காவும் சிங்கில் பாத்திரம் கிடந்தால் பிடிக்காது என்று சொல்லியிருக்கிறார்.

      நீக்கு
  28. என்னதான் வெளிநாடு வசதியாக இருந்தாலும் வாழும் முறை பாராட்டுக்கு உரியதானாலும் அங்கே குடும்பம் என்பதன் பொருளோ, அதன் பந்தமோ ஒருவரை ஒருவர் இணைக்கும் அதன் தன்மையோ யாருக்கும் புரிஞ்சதாகச் சொல்ல முடியாது. திருமண பந்தமும் அப்படித்தான். அங்கே எல்லாம் ஓர் ஒப்பந்த அளவிலே தான் பார்க்கப்படுகிறது என்று தோன்றும். ஆனால் இங்கேயோ நேர்மாறாக இருந்தது. இப்போ அப்படி எல்லாம் இல்லை. எனக்குத் தெரிந்து பல சொந்தக்காரர்களின் குடும்பங்களில் திருமணம் ஆகிப் பத்துப் பதினைந்து வருடங்கள் ஆகியும் குழந்தை இருந்தும் பெண்கள் கணவனை விட்டுப் பிரிந்து வாழ்கிறார்கள். புக்ககத்துடன் தொடர்பு வைச்சுக்கிறது இல்லை. அதோடு திருமணமே முப்பது வயதுக்குத் தான் செய்துக்கறாங்க. குழந்தைப் பிறப்பும் தள்ளிப் போடப்படுகிறது. குழந்தை பிறந்தால் பார்த்துக் கொள்ளுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எழுதிட்டே போகலாம். :(

    பதிலளிநீக்கு
  29. திருமண விஷயத்தில் மூவருக்குமே நிறைவான வாழ்க்கைனு சொல்ல முடியாது. எம்.எஸ். காலப்போக்கில் தன்னை மாற்றிக்கொண்டு தோல்வியையே வெற்றியாக மாற்றிக் கொண்டு விட்டார். ஆனால் இந்திரா காந்தியெல்லாம் அப்படி இல்லை. எம்.எல்.வி.யும் கணவனுடன் அதிக வருடங்கள் சேர்ந்து வாழவில்லை. ஆனால் நாம் எம்.எல்.வியின் கச்சேரியும் கேட்டிருக்கேன். அவர் கணவர் விகடம் கிருஷ்ணமூர்த்தியின் விகடக் கச்சேரியும் கேட்டிருக்கேன். எம்.எஸ்ஸெல்லாம் அப்போது மதுரைக்கு அடிக்கடி வருவாரென்பதால் கிட்ட இருந்து பார்த்துக் கச்சேரிகள் கேட்டுனு இருந்தது. மதுரைக்கு இவங்கல்லாம் அடிக்கடி வருவாங்க.

    பதிலளிநீக்கு
  30. வசந்தா கோவிந்தராஜன் தெரியாதவர். கதைகளும் படிச்சதில்லை. விமரிசனம் படிக்கையில் குஞ்சுலு மாதிரிக் குழந்தைகளுக்கான கதை போல் மனதில் தோன்றியது. அது இப்போவே எனிட் பிளைடன் எல்லாம் பார்த்து முடித்து விட்டது. எனக்கெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கையில் கூட எனிட் பிளைடன் என்றால் தெரியாது. பின்னர் தான் எனிட் பிளைடன், மில்ஸ் அன்ட் பூன், ஆர்க்கி(ச்சி), எல்லாம் அறிமுகம்.

    பதிலளிநீக்கு
  31. கிரிக்கெட் வீரர் அஸ்வின் பற்றிய தகவல்களும் முகநூல் பகிர்வே! நகைச்சுவைத் துணுக்குகள் ஓகே ரகம். பதிவைத் திரும்பத் திரும்பத் தேடிப் பார்த்தும் சூரிய, சந்திரரோ, குருவோ அவங்களைப் பற்றிய தகவலோ கிடைக்கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானு = சூரியன்
      மதி = சந்திரன்
      குரு = வியாழன்.
      அதாவது இன்று!

      நீக்கு
    2. பெயர் விளக்கம் அருமை. இன்றைய பதிவின் தலைப்புக்கு சகோதரியின் பெயர் பொருத்தமாக அமைந்தது பதிவின் சிறப்பை விட சிறப்பாக அமைந்து விட்டது. அழகான பதிவிற்கும், சகோதரியின் நல்ல எழுத்திற்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். 👍.

      நீக்கு
    3. வாங்க கீதா அக்கா! உங்கள் கருத்துகளை தனித்தனியாக பதிவிட்டது சிறப்பு.
      உங்கள் உள்ளுணர்வு வியப்பு!

      நீக்கு
    4. @கீதாஅக்கா: கல்சுரல் ஷாக் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது வாஸ்தவமே. ஜில்லா விட்டு ஜில்லா வந்து திருமணம் செய்து கொள்ளும் பொழுது இது சகஜமே. சென்னையில் எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்தவர் திருநெல்வேலி சைவப் பிள்ளைமார். அவர் டில்லி, பம்பாய் போன்ற இடங்களில் பிறந்து வள்ர்ந்தவர். திருநெல்வேலியில் திருமணம் செய்து கொண்டு வந்த பொழுது தனக்கு கல்சுரல் ஷாக் ஏற்பட்டதாகச் சொன்னார்.

      நீக்கு
    5. //விமரிசனம் படிக்கையில் குஞ்சுலு மாதிரிக் குழந்தைகளுக்கான கதை போல் மனதில் தோன்றியது.// :))

      நீக்கு
  32. பானுமதி பெயரிலேயே சூரியனும், சந்திரனும் இருப்பதைத் தான் அப்படி சூசகமாய்ச் சொல்லி இருக்கீங்களோ? அப்போ குரு யார்?

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் சகோதரி

    /மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீட்டில் தாய் மட்டும் தனியே வசிக்கிறார். "அந்த பெரிய வீட்டில் அவர் எப்படி தனியாக இருக்கிறார்?" என்று நான் கேட்டதற்கு என் மகள், உனக்கு ரொம்ப இண்டியனைஸ்ட் தாட்" என்கிறாள். இருக்கட்டும். இந்த ஊரில் இந்த கொட்டும் பனியில் தனியாக கோலை ஊன்றிக் கொண்டு நடக்கும், கடைகளுக்கு வரும் முதியவர்களை பார்க்கையில் பரிதாபமாகத்தான் இருக்கிறது./

    உங்களின் தாட்தான் எனக்கும் உண்டு. இங்கும் சிலரை இப்படி தனியாக இருப்பதை சந்திக்க நேர்ந்தால், "எப்படி இவர்களால் தனியாக இருக்க முடிகிறது" என்ற தவிப்பு எனக்குள்ளும் எழும். அது என்னுள்ளிருக்கும் ஒரு பயத்தின் காரணமாகவும் எழலாம்.

    கவிதைகள் நன்றாக உள்ளது. மூன்றாவது கவிதை மனதை வருத்தியது. இப்படி வரிசையாக பறவை இனங்கள் காணாமல் போவதற்கு நாமும் காரணமாக இருக்கிறோமோ என்ற சிந்தனையை அதிகம் உண்டாக்கியது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு அடுத்த தலைமுறையினருக்கு முதுமையில் தனிமை பழகி விடுமோ? என்று தோன்ற்னாலும். முதியவர்களை பராமரிக்க வேண்டும் என்னும் நம் பாரம்பரிய சிந்தனை மாறிவிடக் கூடாது.

      நீக்கு
  34. வணக்கம் சகோதரி

    முதல் மரியாதை பிரச்சனைகளைப்பற்றி இப்போதுதான் அறிகிறேன்.
    பிரபலங்களின் திருமண போட்டோக்கள் அருமையாக உள்ளது. வசந்தா கோவிந்த ராஜன் அவர்களது கதை நன்றாக உள்ளது. நல்ல மனமென்பது எந்த நாட்டில் வசித்தாலும், அனைவருக்குமே அமையாததுதானே..!

    அழகான நடிகை, ஜோக் என அனைத்தையும் ரசித்தேன். அந்த பிஸ்கட் வைத்துக்கொள்ளும் ஜாடி போன்ற அமைப்பு கண்களை கவர்கிறது. இந்த வாரம் பல தகவல்களுடன் வந்து கலக்கியிருக்கும் தங்களது திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள் சகோதரி. பகிர்வனைத்திற்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிரிக்கெட் வீரர் அஸ்வின் அவர்களது பேட்டி நன்றாக உள்ளது. இதை தொலைக்காட்சியில் பார்த்து கேட்டதாக நினைவு. ஏனெனில் எங்கள் பெரிய மகன் கிரிகெட் போட்டிகளை, செய்திகளை விடாமல் பார்ப்பார். நன்றி.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      இந்த வருட ஆரம்பத்திலிருந்து எபியின் மாற்றங்களை ரசிக்கிறேன். அதற்கே உங்களுக்கு 100க்கு 100 மார்க் தரலாம். அதனால் நானும் நூறாவதையும், தந்து விட்டேன். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. நன்றி கமலா அக்கா... எல்லாம் உங்கள் ஆதரவு..

      நீக்கு
    4. அஸ்வின் ரவிச்சந்திரனின் பேட்டியை யூ ட்யூபிலிருந்து எடுத்தேன். தங்களின் பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  35. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  36. இன்று பானுமதி அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக செய்து இருக்கிறார்.


    //விநாயகரை இந்த சிறப்பான பதினாறு பெயர்களை சொல்லி வணங்கி விட்டு தொடங்கினால் அந்த செயல்கள் எல்லாவற்றிலும் எந்தவித தடங்கல்களும் வராது. //

    விநாயகரை வணங்கி இன்றைய பதிவை ஆரம்பித்து இருக்கிறார். பானு திறப்பட செய்து விட்டார்.

    குண்டாய் என்று சொல்லக்கூடாது, கொஞ்சம் பூசினார் போல , கொஞ்சம் வளப்பமாக இருக்கிறார் என்று சொல்வார்கள் நம் பக்கமும். நெட்டையாக, முடி குறைவாக , சதை பற்றே இல்லாமல்,பல் கொஞ்சம் தூக்கலாக , கலர் கொஞ்சம் கம்மியாக , மாநிறம்( மாசெவலையாய்) இப்படியும் சொல்வார்கள்.


    ஆனால் நீங்கள் சொல்வது போலவும் இயல்பாக பேசி விடுவார்கள் .



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குண்டாய் என்று சொல்லக்கூடாது, கொஞ்சம் பூசினார் போல , கொஞ்சம் வளப்பமாக இருக்கிறார் என்று சொல்வார்கள் நம் பக்கமும். // ஆமாம் மற்றவர்களிடம் பேசும்பொழுது அப்படித்தான் குறிப்பிடுவோம், வீட்டிற்க்குள் கூட அப்படித்தான் பேச வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.

      நீக்கு
  37. அஸ்வின் ரவிச்சந்திரன் பேட்டி, சங்கரசுப்பிரமணியன் அவர்கள் கவிதை, முதல் மரியாதை படச்செய்தி, பொக்கிஷ பகிர்வாய்பழைய படங்கள் நகைச்சுவை என்று அனைத்து பகுதியும் அருமை.

    பதிலளிநீக்கு
  38. அந்தந்தப் பகுதி தலைப்புகளை கொட்டை எழுத்தில் (Bold letters) போட வேண்டும். ஒரு பகுதி வாசிப்பிலிருந்து இன்னொரு பகுதிக்குப் போவதை சட்டென்று வித்தியாசப்படுத்த இது உதவும்.

    பதிலளிநீக்கு
  39. மூன்று திருமண புகைப்படங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அருமை.
    இந்திரா -- ஃபெரோஸ் திருமணப் புகைப்படத்தில் தம்பதியர் இருவர் முன்னால்
    வெள்ளைத் திட்டாக இருப்பது என்னவென்று தெரிகிறதா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்திரா -- ஃபெரோஸ் திருமணப் புகைப்படத்தில் தம்பதியர் இருவர் முன்னால்
      வெள்ளைத் திட்டாக இருப்பது என்னவென்று தெரிகிறதா?..// தெரியவில்லையே.. அக்னி குண்டத்தின் மீது வெள்ளைத் திட்டாக ஒன்று புலப்படுகிறது, என்னது அது?

      நீக்கு
    2. அக்னி குணத்தைத் தான் சொன்னேன். நீங்களும் அதைத் துல்லியமாகச் சொன்னதில் எனக்கு திருப்தி. நேரு குடும்பத்தை மத மாற்றம் செய்வதில் சிலருக்கு அல்ப திருப்தி. அவர்கள் முகத்தில் கரி பூசுவதற்கு தான் அரிதாகக் கிடைக்கும் இந்தப் புகைப்படச் சான்றுகள். துல்லியமான தங்கள் பதிலுக்கு நன்றி.

      நீக்கு
    3. அக்னி குண்டம் என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
    4. ஃபெரோஸ் கான் இந்தத் திருமணத்துக்காகத் தானே ஃபெரோஸ் காந்தியாக ஆனார்? காந்தியைப் பற்றிக் கூடச் சிலர் கூறுவதும் நம்ப முடியாததுதான்.

      நீக்கு
    5. அக்னி வளர்த்ததால் ஃபெரோஸ் கானைப் பற்றிய உண்மை மாறி விடுமா? பார்சிகளுக்கும் அக்னி முக்கியம். சூரிய வழிபாடு முக்கியம்.

      நீக்கு
    6. சேச்சே...   பெரோஸ்கான் தூய்மையான ஹிந்து.  அது மட்டுமல்ல ஷேக் ஆபத்துல்லாவும்...  ச்சே..  அப்துல்லாவும் ஹிந்துதான்.  அவர் மோதிலாலின் பிள்ளையும் அல்ல.

      நீக்கு
    7. @Sriram, hehehehehehehe. நேத்திக்குத் தான் கரம்சந்த் காந்தி/புத்லிபாய் பற்றிய சில குறிப்புகளைப் படிச்சு அதிர்ச்சியில் இருக்கேன். :(

      நீக்கு
    8. ஆ..  அது என்னன்னு எனக்கு வாட்ஸாப்பில் 1 2 1 அனுப்புங்க.

      நீக்கு
  40. மூன்று திருமண புகைப்படங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அருமை.
    இந்திரா -- ஃபெரோஸ் திருமணப் புகைப்படத்தில் தம்பதியர் இருவர் முன்னால்
    வெள்ளைத் திட்டாக இருப்பது என்னவென்று தெரிகிறதா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீ.வீ.சார். உங்களிடமிருந்து விளக்கமான விமர்சனத்தை எதிர்பார்த்தேன்.

      நீக்கு
  41. இன்றைய வியாழன் பகிர்வு வித்தியாசமாக இருந்தது . பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  42. முதல் முறையக என்னுடைய பங்களிப்பிற்கு 100க்கு மேல் கருத்துகள். அனைவருக்கும் நன்றி. எல்லோரும் வந்துட்டு போயாச்சு, கடையைக்கட்டி விடலாமா? நன்றி, நன்றி, நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!