4.1.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - தஞ்சை அரண்மனை வளாகம் – கலைக்கூடம்::நெல்லைத்தமிழன்

 

நாம் தஞ்சை அரண்மனையில் சிற்பங்கள் இருக்கும் இடத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருக்கிறோம். சில வருடங்களுக்கு முன்பு போனதைவிட தற்போது இந்தப் பகுதி நன்கு சீர் செய்யப்பட்டு இருக்கின்ற து. பல வெளிநாட்டுப் பார்வையாளர்களும் இந்தப் பகுதிக்கு வந்து ஒவ்வொரு சிற்பத்தையும் கூர்ந்து நோக்கிப் புரிந்துகொள்கின்றனர். உலோகச் சிற்பங்கள் இருந்த இட த்தில் ஃப்ரான்சிலிருந்து வந்த பார்வையாளர்களுக்கு ஃப்ரெஞ்சில் ஒரு வழிகாட்டி சிற்பங்களைப் பற்றி விளக்கிக்கொண்டிருந்தார்.

சில வாரங்களுக்கு முன்னால், திருவாய்மொழி வாசகமாலை என்ற ஒரு நூலைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதுபற்றி எழுதுவதற்கான இடம் இது என்று நினைக்கிறேன். தஞ்சை சரஸ்வதி மஹாலில், 1950களிலிருந்து ஓலைச்சுவடிகளிலிருந்து நூலாக்கும் பணியைச் செய்துவருகிறார்கள். அப்படிக் கிடைத்த ஒரு ஓலைச்சுவடிதான் திருவாய்மொழி வாசகமாலைஎன்ற இந்த நூல்.

அந்தக் காலத்தில் (அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) வைணவர்களின் தமிழ் வேதமான நாலாயிர திவ்யப்பிரபந்தத்தை, அதில் உள்ள பல்வேறு பகுதிகளை (திருவாய்மொழி, பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம் போன்று) பிரவசனம்/உபந்நியாசம் மூலமாக மக்களுக்கு விளக்கிச் சொல்லும் பணி நடைபெற்றது. பாசுரங்களையும் அதன் உட்பொருளையும் மிகவும் விளக்கமாகச் சொல்லும் முறை ஆச்சார்யர்களால் மேற்கொள்ளப்பட்ட து. இதன் காரணம் என்ன? எளியவர்களுக்கும் அந்தப் பாசுரங்களின் பொருள் போய்ச்சேரவேண்டும் என்பதுதான். இதுபற்றிப் புரிந்துகொள்வதற்கு முன்பு, அந்தக் காலத்தில் மொழி எப்படி இருந்தது என்ற புரிதல் வேண்டும்இது கொஞ்சம் போரடிக்கும் விஷயமாக இருந்தாலும் எனக்கு இதனைச் சொல்லவேண்டும் என்ற ஆசை இருப்பதால் எழுதுகிறேன்.

பக்தி என்பதற்கு மொழி கிடையாது. பக்தி என்பதற்கு ஜாதி கிடையாது. இந்த இரண்டும் மனத்தாலும் செய்கையினாலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது இராமானுஜர் காலத்துக்கும் முந்தைய வழக்கம். வைணவ வரலாறு மற்றும் திவ்யப் பிரபந்தம் கிடைக்கப்பெற்ற வரலாறு 9-10ம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. குருபரம்பரை என்ற நூலில் இதுபற்றி விஸ்தாரமாக எழுதியுள்ளனர். அப்போது திவ்யப் பிரபந்தங்கள் தமிழில் இருந்தாலும், அதனை, அதன் மேன்மையை விளங்கச் செய்த ஆச்சார்யர்கள், சமஸ்கிருத த்தில் பாண்டித்தியம் பெற்றவர்கள். வேதம், இதிஹாசம் போன்றவற்றைக் கற்றுத் தெளிந்தவர்கள். அதனால்தான் தமிழ் வேதமான திருவாய்மொழியை விளக்கிச் சொல்லுங்கால், அதில் குறிப்பிட்டுள்ள நிகழ்வுகள் வேதம், இதிஹாசம், புராணங்கள் போன்றவற்றில் எங்கெங்கெல்லாம் சொல்லப்பட்டுள்ளன என்பதை அவர்களுக்குச் சொல்ல முடிந்தது.

நாம் பிறமொழி பேசும் (குறிப்பாக தெலுங்கு) மக்கள் ஏதோ சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் வந்தவர்கள் என்று நினைக்கிறோம். அப்படி அல்ல. தெலுங்கு மொழி பேசுபவர்கள் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்தில் இருந்தனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்று சொன்னாலும் அதில் தவறிருக்காது. காரணம், தமிழகத்தில் தமிழ் மாத்திரமே புழங்கப்பட்ட பகுதி (2000 ஆண்டுகளுக்கு முன்பு) மதுரையும் அதற்குத் தெற்கே உள்ள பகுதிகளும்தான். அதற்கு வடக்கில் இருந்த பகுதிகள் பிறமொழிக் கலப்பு கொண்டவை. இதன் காரணம், அந்தப் பகுதிகள் பல்வேறு அரசர்களால் ஆளப்பட்ட துதான். (பல்லவர், சோழர் போன்றவர்கள்)

சொல்லவந்த விஷயம், வைணவம் பரவுவதற்கு தமிழ் தெலுங்கு சமஸ்கிருதம் பேசும் ஆச்சார்யர்களும், அவற்றைத் தெரிந்துகொள்ள வந்த தமிழ் தெலுங்கு மலையாள கன்னட மக்களும் காரணம். அதுபோல ஆச்சார்யர்களும் அவர்களின் சீடர்களும் பல்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். வர்ணாசிரமத்தில் அடித்தட்டில் இருப்பவர்களும் சீடர்களாக இருந்தன. இதுபற்றி எனக்கு எழுத ரொம்ப ஆசை. இவர்களின் வரலாற்றை நாம் படித்தால்தான், ஜாதி என்பது கற்றுக்கொள்ள தடையாக இருந்த தில்லை என்பது புரியும். அதற்காக, உயர்தட்டில் இருந்த பிராமணர்கள் எல்லோரும்  ஜாதிஎன்பதை ஒரு காரணியாக நினைத்ததில்லை என்று நான் சொல்லவில்லை. பலரும் ஜாதி அபிமானம் கொண்டிருந்தனர். ஆனால் ஆச்சார்யர்கள், ‘குல அபிமானம்ஒழிக்கப்படவேண்டியது என்பதைத் தங்கள் சொல்லாலும் செயலாலும் காண்பித்துக்கொண்டிருந்தனர்.

ஒரு நாள் இந்தப் பகுதியில் குருபரம்பரைத் தொடர் எழுத எனக்கு ஆசை. வைணவம் பற்றி ரொம்ப எழுதி போரடிக்கவைக்காமல், வெறும் வரலாற்றுத் தொடராக எழுத ஆசை. இப்போது திருவாய்மொழி வாசகமாலை என்ற புத்தகத்திற்கு வருகிறேன்.

ஒரே ஒரு ஓலைச்சுவடியில் இருந்ததை, அதிலும் 10-15 சுவடிகள் காணாமல் போயிருந்தன, 1950ல் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம், புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. இந்த ஓலைச்சுவடியை எழுதியவர், திருக்கோனேரி தாஸ்யை என்பவர். அவர் எழுத்து நடை, எழுதியுள்ளவை, மொழித் தவறுகள் ஆகியவற்றைக்கொண்டு இவர் 11-12ம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர், திருவரங்கத்தில் காலக்ஷேபம் கேட்டிருக்கிறார், தெலுங்கு மொழி பேசுபவர் என்று அனுமானித்திருக்கின்றனர். அந்தக் காலத்தில் ரெக்கார்டர், பேப்பர் பேனா போன்றவை கிடையாது. அதனால் தினமும் நடக்கும் உபதேசங்களை/காலக்ஷேபங்களைக் கேட்டு மனதில் பதியவைத்துக்கொண்டு, பிறகு ஓலைப்படுத்தியிருக்கிறார்அந்தக் கால வழக்கம், இத்தகைய காலக்ஷேபங்களை-பாசுரங்களை விரிவாக குரு ஒருவர் பொருள் கூற, அதைப் பெரும் கூட்டம் ஒன்று கேட்கும். அவ்வாறு கேட்டவற்றை ஒருவேளை ஓலைப்படுத்தினால், பிறகு அந்த குருவிடம் காண்பித்து, அவர் ஒப்புதலைப் பெறவேண்டும். ஓலைப்படுத்துவதற்கு முன்பே ஒப்புதலைப் பெற்றால் நல்லது. அப்படி ஒப்புதல் பெறப்பட்டு (அதாவது அங்கீகாரம் பெறப்பட்டு) எழுதப்படும் ஓலைச்சுவடியைப் பிறரும் படியெடுத்து நாடெங்கும் பரவுவதற்கு ஏதுவாகும்இந்த திருவாய்மொழி வாசகமாலை என்ற ஓலைச்சுவடி ஒன்றே ஒன்றுதான் கிடைத்த தால், அந்த ஓலைச்சுவடி அங்கீகாரம் பெற்றதாக இருக்கமுடியாது என்று அனுமானம் செய்கின்றனர்.

அது சரி.. காலக்ஷேபம் என்பதற்கான பொருள் என்ன? பொழுதைப் போக்குவது என்பதுதான் அதன் பொருள். அர்த்தம் பொதிந்த, நம் வாழ்விற்குப் பயனளிக்கும் விதத்தில் பொழுதுபோக்குவது காலக்ஷேபம் கேட்பது.

அந்த ஓலைச்சுவடியை அப்படியே சுமார் 350 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளியிட்டிருக்கின்றனர். எனக்கு மிகவும் பிடித்த நூல் அது. இந்த நூலிலிருந்து நான் தெரிந்துகொண்டது, அந்தக் காலத்தில் பெண்களும் இத்தகைய உபந்நியாசங்களைக் கேட்டிருக்கின்றனர், நன்கு புரிந்துகொண்டு நூலெழுதும் திறமையும் பெற்றிருந்திருக்கின்றனர், தாய்மொழி தெலுங்கு என்பது அவர்களுக்கு ஒரு குறையாக இருந்ததில்லை என்பதுதான்.

இதை எழுதும்போது இராமானுஜர் வரலாற்றையும் எழுதும் ஆசை வருகிறது. ஸ்மார்த்தர்கள் என்று சொல்லப்படும் (வடமா என்பர்கள்) பிரிவில் பிறந்து வைணவத்துக்கு வந்தவர் அவர். தற்போது நாம் பொதுவாக ஐயர், ஐயங்கார் என்று பிரிக்கிறோம். இந்தப் பிரிவே சிலபல நூற்றாண்டுகளுக்கு முன்பாக வந்ததுதான்தெலுங்கு பேசும் மக்கள், வைணவர்களை மரியாதை நிமித்தம் அய்ங்கருஎன்று சொல்ல ஆரம்பித்து பிறகு அது ஜாதியாக ஆகிவிட்டது என்றே நான் படித்திருக்கிறேன்.  

சைவம் வைணவம் என்றால் என்ன? சிவனை பிரதானமான கடவுளாக வழிபடுபவர்கள் சைவர்கள். (அவர்களிலும் பல பிரிவுகள் உண்டு). அவர்களுக்கு நாராயணன் எனப்படும் விஷ்ணு, மஹாலக்ஷ்மி போன்ற பல தெய்வங்கள் இருந்தாலும் சிவனே அவர்களுக்கு பிரதானமான தெய்வம். வைணவர்களுக்கு விஷ்ணுவே பிரதானமான தெய்வம்இந்த இரண்டு சமயங்களுள் பல்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் உண்டு. உதாரணமாக செட்டியார், ரெட்டியார், ஐயங்கார் போன்ற பல்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் வைணவர்களாக இருக்கலாம். அதுபோல ஐயர், பிள்ளைவாள், முதலியார் போன்ற பல்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் சைவர்களாக இருக்கலாம். (பல்வேறு ஜாதிகளின் லிஸ்டை இங்கு குறிப்பிடவில்லை). ஜாதி என்று பார்த்தால், ஐயர், ஐயங்கார், நம்பூதிரி போன்ற பலர் பிராமணர் என்ற ஜாதியில்தான் வருவார்கள்.

சரிஎதையோ எழுதப்போக, எங்கெங்கோ எழுத்து நீளுகிறதுஇன்றைய இந்த எழுத்து உங்களுக்கு போரடித்தது என்றால் கருத்தில் தெரியப்படுத்தவும். இப்போது கலைக்கூட த்தின் சிற்பங்களுக்குள் செல்வோம்.

 

கஜசம்ஹாரர், 12ம் நூற்றாண்டு, தாராசுரம்துவாரபாலகர், 10ம் நூற்றாண்டு, பட்டீஸ்வரம். 

மஹாவிஷ்ணு, 8ம் நூற்றாண்டுபார்வதி, 9ம் நூற்றாண்டு, செந்தலை.

தக்ஷிணாமூர்த்தி, 15ம் நூற்றாண்டு, உமையாள்வதி, ரிஷபவாஹனர், 15ம் நூற்றாண்டு, மாயவரம். 

சுஹாசனமூர்த்தி, 8ம் நூற்றாண்டு, செந்தலைஅம்பிகை/வள்ளி, 15ம் நூற்றாண்டு, செந்தலை.

சிவனும் பார்வதியும், 9ம் நூற்றாண்டு, திருவலஞ்சுழி, புத்தர், 15ம் நூற்றாண்டு, பட்டீஸ்வரம். 

சிவா (செஞ்சடை அண்ணல்), 9ம் நூற்றாண்டு, செந்தலை, பிக்ஷாடனர், 10ம் நூற்றாண்டு, திருவலஞ்சுழி. 

துர்கை, 10ம் நூற்றாண்டு, திருவலஞ்சுழி, பிரம்மா, 12ம் நூற்றாண்டு, திருவலஞ்சுழி. 

வீரபத்திரர் , 11ம் நூற்றாண்டு, செந்தலை, அர்த்தநாரி, 11ம் நூற்றாண்டு, திருவலஞ்சுழி. 

இராமன், சீதை, அனுமன், 10ம் நூற்றாண்டு, சீத்தமங்கை.

இராமன், சீதை ஹனுமன். கிடைத்த இடம் சீயாத்தமங்கை. 

மிகப்பெரிய ஹாலில் ஒவ்வொரு தூண் அருகிலும் சிலைகளை வைத்து விளக்கங்களை எழுதியுள்ளார்கள் (பலவற்றிற்கு). அதனால் எல்லோரும்

 

முருகன் வள்ளி தெய்வானை, 18-19ம் நூற்றாண்டு, குத்தாலம். 

A group of stone statues

AI-generated content may be incorrect.

வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர்,  17-18ம் நூற்றாண்டு, ஆரியச்சேரி, கும்பகோணம்

 

மகாலக்ஷ்மி, 17-18ம் நூற்றாண்டு, ஆரியச்சேரி, கும்பகோணம், முருகன், 11ம் நூற்றாண்டு திருப்பராய்த்துறை, திருச்சி. 

A stone carving of an elephant

AI-generated content may be incorrect.

நர்த்தன விநாயகர், 11-12ம் நூற்றாண்டு, தஞ்சை அரண்மனை. 

 

சுப்ரமணியர், 10ம் நூற்றாண்டு, கோயில் தேவராயன் பேட்டை, பாபநாசம்ப்ரம்மா, 12ம் நூற்றாண்டு, திருவாலம்பொழில், திருவையாறு. 

 

ஐயனார், 9ம் நூற்றாண்டு, அரசூர், திருவையாறுபுத்தர், 9ம் நூற்றாண்டு, சோழன் மாளிகை, கும்பகோணம்

 

புத்தர், 9-10ம் நூற்றாண்டு, சோழன் மாளிகை, கும்பகோணம்துளஜா கல்வெட்டு, 18ம் நூற்றாண்டு, தாழந்தொண்டி, சீர்காழி. 

 

வேலைப்பாடுடைய சாளரம், 9ம் நூற்றாண்டு, திருவிடைமருதூர், அம்மன், 13ம் நூற்றாண்டு, கோயில் தேவராயன் பேட்டை, பாபநாசம். 

 

சிம்மத் தூண், 8-9ம் நூற்றாண்டு, கண்டியூர், திருவையாறு, துவாரபாலகர், 10-11 நூற்றாண்டு, தாராசுரம். 

A stone carving of a person and two people

AI-generated content may be incorrect.

ஜேஷ்டாதேவி, 9ம் நூற்றாண்டு, பட்டீஸ்வரம். 

தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்த கூடத்தில் நிறையவே கற்சிற்பங்களைக் கண்டுவிட்டோம். மிகுதி உள்ள சிற்பங்களையும், கலைக்கூடத்தில் காணலாமா? அதற்கு அடுத்த வாரம் வரை காத்திருக்கவேண்டும்.

(தொடரும்) 

81 கருத்துகள்:

  1. காலை வணக்கம், நெல்லைஜி!
    வழக்கம்போல் கருத்துகள், படங்கள் எல்லாமே அபாரம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க திருவாழி மார்பன். நேற்று பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம் உங்கள் பெயர் திருவாழ்மார்பன் என்றல்லவா இருக்கவேண்டும் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறாரே

      நீக்கு
    2. @திருவாழிமார்பன்: நீங்கள் திருவாழிமாரனா? திருவாழ்மார்பனா? ஸ்ரீனிவாசன் என்பதை தமிழ்ப் படுத்தினால் திருவாழ்மார்பன் என்பதுதானே சரி? திருவாழி என்பது பெருமாள் கையில் இருக்கும் சுதர்ஷண சக்கரத்தை குறிக்காதா? பெருமாளின் மார்பில் உரைவது திருமகளா? சுதர்ஷண சக்கரமா?அல்லது திரு+வாழ்+மார்பன் என்பது தமிழ் இலக்கண புணர்ச்சி விதியின்படி திருவாழி மார்பன் என்றாகுமா?

      நீக்கு
    3. பெருமாளின் மார்பில் ஸ்ரீயும் உறைகிறாள். ஸ்ரீவத்ஸமும் உள்ளது. ஸ்ரீயைத் தன் மார்பில் தாங்கியதால் தான் அவன் ஸ்ரீவத்ஸன் எனப்படுகிறான். ஸ்ரீவத்ஸம் எனப்படும் இடத்தில் பெருமாளின் மார்பில் தங்குவதால் மஹாலக்ஷ்மி ஸ்ரீ எனப்படுகிறாள்

      நீக்கு
    4. நாம் அனைவருமே(எபி குடும்பம்) சிலரை தவிர்த்து நம் படங்கள் ஏதும் இல்லாமல்தான் அறிமுகமாகி உலா வருகிறோம். திருமாலின் மார்பில் உறைபவள் மகாலட்சுமியனறோ? பெண் தெய்வம் அதைக்குறிக்கும் சொல்லாடாகவும் இருக்கலாம் என்பதும் ஒரு ஐயமாகவே உள்ளது. இதுவும் மகாலட்சுமிக்கே வெளிச்சம்.

      நீக்கு
    5. @Kamala Hariharan! ஸ்ரீ தான் மஹாலக்ஷ்மி. ஸ்ரீவத்ஸ கோத்திரம் பற்றிய ஒரு தேடலில் பல விஷயங்கள் கிடைத்தன. எல்லாவற்றையும் சேகரித்து வைத்திருந்தேன். இப்போக் கிடைக்கலை! :( தேடிப் பார்க்கிறேன்.

      நீக்கு
    6. //பெண் தெய்வம் அதைக்குறிக்கும் சொல்லாடாகவும் இருக்கலாம் என்பதும் ஒரு ஐயமாகவே உள்ளது. இதுவும் மகாலட்சுமிக்கே வெளிச்சம்.// என்ன சொல்றீங்கனு புரியலை! ஏனெனில் ஜேஷ்டாதேவியும் சரி, ஸ்ரீ எனப்படும் மஹாலக்ஷ்மியும் சரி சகோதரிகள். ஆகவே இங்கே வேறே எந்தப் பெண் தெய்வம் வருகிறது? மூத்த தேவி தான் காலப்போக்கில் மூதேவியாக அழைக்கப்பட்டாள். தீமைகள் செய்பவரை நல்வழியில் திருப்பும் முக்கிய வேலை இவளுக்கு உண்டு. தீயவர்கள் மனம் மாற்றம் பெறும்வரை அவர்களைப் பிடித்துக் கொண்டு விட மாட்டாள்.

      நீக்கு
    7. ஒன்றுமில்லை கீதா சாம்பசிவம் சகோதரி.

      இன்று அவரது (திருவாழிமார்பன்) பெயர் குழப்பம் பற்றி படிக்கையில்
      அன்று ஒருபதிவில் (சகோதரர் திருவாழிமார்பன் அவர்கள் எழுதிய தத்துவ கதை பகிர்வில்) சகோதரி கீதாரெங்கனுக்கும், சகோதரர் திருவாழிமார்பன்அவர்களுக்கும் இடையே நடந்த கருத்து உரையாடல் நினைவுக்கு வந்தது. அதை கீழே குறிப்பிட்டுள்ளேன். அதனால் சிறு ஐயம். வேறொன்றுமில்லை. குறிப்பிட்டது தவறெனின் திருவாழிமார்பன் அவர்கள் மன்னிக்கவும். 🙏.

      /திவாமா அண்ணே! இனிமேல்.

      பின்ன, இப்படி எல்லாம் பெரிய பெரிய கருத்துகளை எல்லாம் சொன்னா, இந்தச் சின்னப் பொண்ணு அண்ணானு கூப்பிடாம இருக்க முடியுமா சொல்லுங்க!

      பானுக்கா நீங்க சொன்னபடியே சொல்லிட்டேன் பாருங்க!

      கீதா

      பதிலளி
      பதில்கள்

      Thiruvaazhimaarban9/12/25 3:58 PM
      ஓஹோ, இப்டி ஒன்னு இருக்கோ? அப்ப அடுத்து சின்னப்புள்ள கணக்கா எழுதிப்புடறேன். தம்பியாயிடலாமே!

      அது சரி, நான் ஆண்தான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அல்லது ஆள்தான் என்பதற்கு? A I சக்கை போடு போடுகிறதே; அதாவது புத்திசாலிதனத்தை மறைத்துக்கொண்டு மனிதனைப்போல தப்பும் தவறுமாக அதால் எழுத முடியுமே!

      சும்மாதான் சொன்னேன். என்னை எப்படி அழைத்தாலும் சம்மதமே; மகிழ்ச்சியே !/

      ஒருவர் அவரது புனைப்பெயரை எப்படி வேண்டுமானலும் வைத்துக் கொள்ளலாம் இல்லையா?. நான் கூறியது தவறெனின் அனைவரும் மன்னிக்கவும். நன்றி சகோதரி.

      நீக்கு
    8. பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்; புன்மை இருட்கணம் போயின யாவும்!
      **
      மிக்க நன்றி, திருமதி. கமலா ஹரிஹரன்!!
      அம்மையார் குறிப்பிட்டபடி, புனைப்பெயர் என்னவாகவும் இருக்கட்டும் (மற்றவரை எந்த வகையிலும் இழிபடுத்தாதவரை, தீச்சொல்லாக இல்லாதவரை). என் ஸ்வந்தப்பெயர்/ஊர் சமாச்சாரம் இங்கு முக்கியமில்லை. மாணிக்கவாசகர் சொன்னபடி 'ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்' :-)
      திருமகள் கேள்வர் என்றெடுத்துக்கொண்டால் கூட, ஸ்ரீனிவாஸ், ஸ்ரீதர், ஸ்ரீகாந்த், இன்னும் பலப்பல என் புனைப்பெயருக்கு பொருந்தும்.
      **
      நான் அறிந்தவரை, பலகையில் 'திருவாழ்மார்பன்' என்று பெயர் எழுதப்பட்ட கோவில்கள் மூன்று உண்டு (மூன்றாவது, கூகிள் புண்யம்). திருவண்பரிசாரம் பாசுரத்தில் நம்மாழ்வார் 'திருவாழ்மார்வன்' என்று குறிப்பிடுகிறார். Colloquial ஆக 'திருவாழிமார்பன்' என்று அழைப்போரும் பத்திரிகையில் அப்படி எழுதுவோரும் உண்டு!!! 'திருவாழ்மார்பன்' என்பதைவிட 'திருவாழிமார்பன்' காதில் கேட்டவுடன் எனக்கு பிடித்துவிட்டது! ஒன்றை விரும்புவது/வெறுப்பது, நாடுவது (பற்றுவது)/விடுவது, இவை இரண்டும்தானே மனதின் தொழில்கள்!
      **
      திருவாழி என்பதை திரு வாழி என்றும் திரு ஆழி என்றும் பிரிக்கலாம். ஆழி என்ற சொல்லுக்கு இரண்டு முக்கிய பொருள்கள். ஆழமாக இருப்பதால் ஆழி; கடல். இப்படிப்பார்க்கும்போது திருவாழி மார்பன் 'செல்வக்கடலையே மார்பில் கொண்டவன்' என்று பொருள்படும்!!

      அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
      பிறவாழி நீந்தல் அரிது.
      இங்கே 'அறவாழி அந்தணன்' என்பது அறக்கடலான கடவுளைக்குறிக்கும்.
      **
      வாழி என்பது வாழிய எனும் வியங்கோள் குறுக்கம் (நடந்தாய் வாழி காவேரி- சிலப்பதிகாரம்). எம்பெருமானுக்கு நான் அனுதினமும் பல்லாண்டு பாடி சேவிக்கும்போது 'வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு' என்று திருமகளை, 'திரு வாழி' என்று வாழ்த்துகின்றேனே! திருவாழிமார்பன் என்று சொல்லும், கேட்கும், படிக்கும் ஒவ்வொரு முறையும், தன் முயற்சியின்றி, தாயாரை மனதில் வாழ்த்தி, அதன் பின்னரே மார்பனை எண்ணுகின்றேன்!
      **
      ஆழி என்பதற்கு, சக்ரம் இன்னொரு பொருள். அழி என்ற வினைச்சொல்லின் நெடில் வடிவமாகி ஆழி பெயர்ச்சொல் (அழிக்கும் கருவி); கெடு-கேடு சுடு - சூடு, எடு -ஏடு, விடு-வீடு இப்படி. சக்ரம் மார்பில் தரிப்பதில்லை; இங்கே பொருந்தாது என்று நினைக்கிறேன். பொருந்தினாலும், எனக்கு கொலைக்கருவிகளில் நாட்டமில்லை (allegorical / symbolic ) என்றாலும். என் எண்ணம் பற்றி பெருமாளோ மற்றவர்களாளோ கவலைப்படப்போவதில்லை என்பதையும் உணர்ந்திருக்கிறேன் ;-)
      **
      திரு ஏன் மார்பில் (அதுவும் வலப்புறம்) என்பதை பின் எப்போதாவது சந்தர்ப்பம்/அவசியம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்.

      நீக்கு
    9. திருவாழிமார்பன்... உங்கள் அலசல் நன்று. ஆனாலும் எப்போதும் உங்கள் பெயரைக் காணும்போது எனக்கு திருவண்பரிசாரமும் அந்தப் பெருமாளும் நினைவுக்கு வருவார்கள். (மலைநாட்டு திருப்பதிகள், கோயில்கள், ஏன் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள கோயில்கள் சிலவற்றிலும் சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் நுழையவேண்டும். அது எனக்கு சில நேரங்களில் கஷ்டமாக இருக்கும்)

      நீக்கு
    10. பெயர் விளக்கம் சுவாரஸ்யம். நன்றி __/\__

      நீக்கு
    11. அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேள்வி கேட்ட திருமதி. பானுமதி வெங்கடேஸ்வரனுக்கும், அருமையான விளக்கங்கள் கொடுத்த திருமதி. கீதா சாம்பசிவமுக்கும் நன்றி! (ஹி ஹி நடுவுல காப்பி குடிக்கப்போய்ட்டேன்). பல்பு மெதுவா எரிய ஆரம்பிக்குதான்னு பாக்கணும். :-)

      நீக்கு
    12. என் திறமையின்மை காரணமாக, தமிழில் தட்டச்சி, பின் எழுத்துப்பிழை பார்த்து எல்லாம் செய்வதற்குள், வெகு நேரம் ஆகிவிடுகிறது. ஆங்கிலத்தைவிட நம்ப முடியாத அளவுக்கு பலமடங்கு நேரம் ஆகிறது. Looks like I can't sustain this for long.

      நீக்கு
    13. //சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் நுழையவேண்டும்// Their game; their rules! அதாவது, யஜமானைப்பார்த்ததும், மேல் வஸ்திரத்தை எடுத்துவிடவேண்டும்; ஏனெனில், மேல் வஸ்திரம் செல்வத்தின் அடையாளம் status symbol (முன் காலத்தில்). ஸ்டேட்டஸ் குறைவான பெண்களுக்கும் மேல் வஸ்திரம் மறுக்கப்பட்டிருந்தது. என்னவோ போ என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.என்னவோ போ என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

      நீக்கு
    14. அழகி மென்பொருள் சுலபமாக உபயோகிக்க முடியும். ஒற்றை விரலால் தட்டினாலும் பொதுவா தமிழில் எழுதுவது சுலபம். எழுத்து எங்க இருக்குன்னு பிடிபட்டால் போதும் ஶ்ரீநிவாசன்.

      நீக்கு
    15. இப்போதுமே, மேல் வஸ்திரம் அணிந்திருப்பது, பொதுவாக நான் உன்னைவிடப் பெரியவன் என்பதற்கான அடையாளம். அதனால்தான் பெரியவர்களைச் சந்திக்கச் செல்லும்போது மேல் வஸ்திரத்தை, இடுப்பில் கட்டிக்கொள்வோம். இப்போல்லாம் வேஷ்டி அங்கவஸ்திர மரபு போய், பனியன் சட்டை, சட்டைப் பாக்கெட்டில் பணம் என்று வந்துவிட்டதால் கோயிலில் கரற்றி மாட்ட சோம்பேறித்தனம்.

      நீக்கு
    16. இப்போதைய இளைஞர்கள் சட்டையைக் கழற்றிவிட்டு ஸ்வாமி தரிசனம் செய்வதை விரும்பாததால் கோயில்களுக்கு இளைஞர்கள் வரத்துக் குறைந்து வருவதாக ஒரு ஆய்வு சொல்கிறது எனப் படிச்சேன்.

      நீக்கு
  2. ஜேஷ்டாதேவி (மூதேவி) வழிபாடு பல்லவர் காலத்தில் பரவலாக இருந்ததாகவும் பின் காலப்போக்கில் காணாமல் போய்விட்டதாகவும் என்றோ/எங்கோ படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜேஷ்டாதேவி சிற்பம் எப்படி வந்தது என யோசித்தேன். பல்லவர் காலத்தில் வழிபட்டார்களா?

      நீக்கு
    2. FYI, here is a book review (longish read); not that I recommend :-) https://neeli.co.in/6284/

      நீக்கு
    3. ஜேஷ்டா தேவியின் சிலை வேறு ஏதோ ஒரு கோவிலிலும் பார்த்திருக்கிறேன். எந்த கோவில் என்பது நினைவில் இல்லை. ஜேஷ்டா தேவி கையில் துடைப்பம் வைத்திருப்பார்.

      நீக்கு
    4. ஜேஷ்டா தேவி, மூத்த தேவி பாற்கடலைக் கடைந்தப்போ முதலில் வந்தவள். இவளை அடுத்து ஸ்ரீ எனப்படும் மஹாலக்ஷ்மி தோன்றியதால் இவள் மூத்தவள் என்னும் பொருளில் ஜேஷ்டாதேவி என அழைக்கப்பட்டாள். மதுரையில் திருவேடகத்தில் ஜேஷ்டாதேவி உண்டு. என் மாமனாரின் சொந்த ஊரான பரவாக்கரையில் ஒரு சிவன் கோயிலில் ஜேஷ்டாதேவி கண்டெடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றனர். ஜேஷ்டாதேவி உள்ள கோயில்களெல்லாம் காலத்தால் முந்தையவை. பல்லவருக்கும் முன்னர் என நினைவு. ஜேஷ்டா எனப்படும் கேட்டை நக்ஷத்திரத்துக்கு அக்கா, தங்கை இருவரும் உரியவர்கள் என்பதால் கேட்டை நக்ஷத்திரமே பெருமாளுக்குப் ப்ரீதி என்பார்கள். அநேகமாக ஜேஷ்டா மாசம் எனப்படும் ஆனி மாதத்தில் எல்லாப் பெருமாள் கோயில்களிலும் ஜேஷ்டாபிஷேஹம் நடக்கும்.

      நீக்கு
    5. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். ஜேஷ்டாபிஷேகத்துக்கு இந்தத் தொடர்பை இன்றுதான் கேள்விப்படுகிறேன். தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
    6. திருவானைக்கா கோயிலில் ஜேஷ்டாதேவி சந்நிதி இப்போவும் இருப்பதாகவும் ராவணனை சக்தி இழக்கச் செய்ய ஜேஷ்டாதேவியை வணங்கச் செய்ததாகவும் ஒரு செவிவழிக்கதை உண்டு.

      நீக்கு
    7. பத்தாம் நூற்றாண்டு வரை ஜேஷ்டா தேவி வழிபாடு இருந்ததாகவும் தெரிகிறது. மூத்த தேவி என்பதே காலப்போக்கில் மருவி "மூதேவி" என்று ஆனதாகவும் சொல்லுவார்கள். ஆதி பராசக்தியே ஜேஷ்டாதேவியாகப் பாற்கடலில் இருந்து முதலில் வந்ததாகவும் மஹாலக்ஷ்மியே இரண்டு அவதாரங்களாக வெளி வந்ததாகவும் சொல்லுவது உண்டு. வடமாநிலங்களில் ஜேஷ்டாதேவி வழிபாடும் கேட்டை நக்ஷத்திரத்தைப் புகழ்வதும் மிகவும் பிரபலமான ஒன்று.

      நீக்கு
    8. நன்றி கீதா அக்கா. திருவானைக்கோவிலில்தான் ஜேஷ்டா தேவி சன்னதியை பார்த்திருக்கிறேன் என்று தோன்றியது.

      நீக்கு
    9. //மூத்த தேவி என்பதே காலப்போக்கில் மருவி "மூதேவி" என்று ஆனதாகவும் சொல்லுவார்கள். //இந்த காரணத்தினால்தான் எங்கள் வீட்டில் என் அப்பாவின் அத்தை(அவரையும் நாங்கள் அத்தை என்றுதான் அழைப்பும், பெரிய அத்தை என்று குறிப்பிடுவோம்) அக்கா என்று அழைக்கக் கூடாது என்பார். "அக்கா வேண்டாமே" என்பார்)

      நீக்கு
    10. ஐயையோ.... இனி 'அக்கா' என எழுதுபவர்களை யோசிக்க வைத்துவிட்டீர்களே பா.வெ.மேடம்..

      நீக்கு
  3. இன்றைய பகுதி எத்தனையோ மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. பிறகு படிக்கவில்லை. நேற்றைய பகுதியின் அல்லது வரப்போகும் சனிக்கிழமைகளின் சாயல் இருக்கிறதோ எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  4. இன்றைய சில தகவல்கள் கொஞ்சம் தெரிந்தவை...கொஞ்சம் தெரியாதவை தெரிந்துகொள்ள முடிந்தது.. நெல்லை.,.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அந்தக் கால வழக்கம், இத்தகைய காலக்ஷேபங்களை-பாசுரங்களை விரிவாக குரு ஒருவர் பொருள் கூற, அதைப் பெரும் கூட்டம் ஒன்று கேட்கும். அவ்வாறு கேட்டவற்றை ஒருவேளை ஓலைப்படுத்தினால், பிறகு அந்த குருவிடம் காண்பித்து, அவர் ஒப்புதலைப் பெறவேண்டும். ஓலைப்படுத்துவதற்கு முன்பே ஒப்புதலைப் பெற்றால் நல்லது.//

    கிட்டத்தட்ட இப்போதைய ஆய்வு, டாக்குமென்டேஷன் போல...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை கீதா ரங்கன். ஆய்வில் மாணவர்தானே ஈடுபடுகிறார். இதில் ஆசிரியர் கூறும் விளக்கங்களை அப்படியே ஏடுபடுத்துவது. குறிப்புகளாக எடுத்தால் ஆசிரியருக்குப் பிரச்சனையில்லை. இடையில் சக ஆசிரியரை கிண்டல் செய்தது அல்லது பிரின்சிபாலைப் பற்றிய விமர்சனம் போன்றவற்றையும் முழுமையாக நோட்ஸ் எடுத்தால்தான் அவர் கோபத்துக்கு ஆளாகணும்.

      நீக்கு
  6. கலைக்கூடச் சிற்பங்கள் ரொம்ப அழகு. மிக்வும் அழகாக வகைப்படுத்தியிருக்கின்றனர்.

    நர்த்தன விநாயகர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறாரே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நர்தன விநாயகரை பல இடங்களிலும் பார்த்திருக்கிறேன். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் பெண் விநாயகரைக் கண்டிருக்கிறீர்களா?

      நீக்கு
    2. நர்த்தன விநாயகரை மயிலை கற்பகாம்பாள் கோவிலில் தரிசிக்கலாம்.

      நீக்கு
  7. நான் ஈரோடில் பார்த்த கலைக்கூடத்தில் இப்படி வகைப்படுத்தியிருக்கவில்லை...

    அது எடுத்து 3 வருடங்கள் ஆகின்றன. அவ்வளவாக இந்தக் கலைக்கூடம் போன்று வகைப்படுத்தப்படாதவை. ஒரு வேளை இப்போது எப்படிச் செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அரசின் கீழ் தான் வருகிறது.

    படங்கள் எடுத்தும் போடாததன் காரணம் தயக்கம் தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டோ எடுத்துட்டீங்க. பதிவைப் போட்டுவிட வேண்டியதுதானே.

      ஈரோட்டில் கலைக்கூடமா?

      நீக்கு
  8. சிம்மத் தூண் ரொம்ப அழகாக இருக்கு.

    சாளரத்தின் வேலைப்பாடு வியக்க வைக்கிறது

    இதே போலத்தான் அக்கலைக்கூடத்திலும் எங்கிருந்து எடுக்கப்பட்டவை, காலம் எல்லாம் சொல்லிய விவரங்கள் கல்வெட்டுகளும் இருந்தன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த விவரங்கள் ரொம்பவே உபயோகம். நேற்றுப் படித்தேன். தஞ்சை ஆயிரத்தளி கோயில் இருந்த இடங்கள் ஆக்கிரமிப்பில் இருக்கிறது, அந்தப் பகுதியில் இருக்கும் வீட்டில் சிற்பமும் இருக்கிறது என்று.

      நீக்கு
  9. எல்லை காவல் தெய்வங்களான ஐயனார் எல்லாம் காலம் காலமாக வழிபாட்டில் என்பதும் தெரிய வருகிறது.

    எல்லாமே சூப்பர், நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதா ரங்கன்.

      திருமாலிருஞ்சோலை கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படி கருப்பர்.

      நீக்கு
    2. அழகர் மலையை விட்டு இறங்கினாலும் சரி, ஏறினாலும் சரி பதினெட்டாம்படிக் கருப்பர் அனுமதியுடன் தான் ஏறி இறங்குவார். அங்கே கதவுக்கே வழிபாடுகள்.

      நீக்கு
    3. ஆமாம் கீசா மேடம். அவர்தான் காவல் தெய்வம்.

      நீக்கு
  10. ​கொஞ்சம் நீளம். விவரங்கள் கூடுதல். போர் அடிக்கிறது.
    இதுவரையில் நான் இந்து மதம் பரப்பப்பட்ட ஒள்று என்று நினைக்கவில்லை. காரணம் மற்ற மதங்களைப்போல் மதம் மாறுவது என்ற ஒன்று இல்லை என்பதுதான்.

    ஆழ்வார்களும் நாயன்மார்களும் கல்வி கற்பித்தல் என்ற முறையில் பாமரர்க்கு இந்து தர்மத்தை, கடவுளரின் பெருமையை எடுத்துக்கூறி அவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வு உண்டாக்கினர் என்பது அல்லாமல் பரப்புதலோ, மதம் மாறுதலோ செய்யவில்லை என்பது எனது புரிதல்.
    மொழி தர்க்கங்களில் நான் புகவில்லை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். உங்களுக்கு போரடிக்கும் காரணம் நேற்றுள்ள சப்ஜெக்டின் நீட்சி என்பதாலா? இது யதேச்சையாக அமைந்தது

      பாரத தேச்ச் சமயங்களில் மதமாற்றம் கிடையாது. அவரவர்க்குப் பிடித்த மத்த்தை ஒழுகினர். உதாரணமாக பஞ்சமர் குலத்துதித்த மாறநேரி நம்பி என்பவர் வைணவர் ஆனால் அவர் குடும்பத்தைச் சார்ந்தவர் எவரும் வைணவ மதம் அல்ல.

      நீக்கு
    2. //ஒரு விழிப்புணர்வு உண்டாக்கினர் என்பது அல்லாமல் பரப்புதலோ, மதம் மாறுதலோ செய்யவில்லை என்பது எனது புரிதல்.// JKC தலைவரே, அல்லேலூயா கோஷ்டியும், அமைதி மார்க்கமும் கூட இப்டிதான் சொல்லிக்கிது; isn't it?

      நீக்கு
    3. திருவாழிமார்பன்... அந்த இரு மதங்களிலும், ஒருவர் மதம் மாறி அவங்க மத்த்தில் சேர்ந்தால் பிறகு குடும்பம் குடும்பமாக வழி வழியாக அதே மதம்தான். முஸ்லீம், மதம் மாறுவது நினைத்துப்பார்க்க இயலாது. அவர்களைத் திருமணம் செய்ய, திருமணம் செய்யப்போகிறவர் மதம் மாறவேண்டியது கட்டாயம். கிறித்துவர்களிலும் அப்படித்தான் தற்போது நடைபெறுகிறது.

      நீக்கு
  11. படங்கள் சிறப்பாக இருக்கின்றன. செந்தலை, கண்டியூர் எல்லாம் எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஊர்கள். செந்தலை மிக அருகில். செந்தலையில் இருந்த டூரிங் தியேட்டரில் காட்டும் படங்களின் பாடல்களை எங்கள் ஊரிலிருந்து கேட்க முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். சொந்த ஊரை நினைவுபடுத்திவிட்டேனா?

      நீக்கு
    2. நல்லதுதானே, அட! நம்மூர் என்று சந்தோஷம்.

      நீக்கு
  12. மதுரை கோவிலில் கூட இப்படி ஒரு மியூசியம் உண்டு. பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை மதுரை கோவிலில் மாலை தரிசனத்திற்கு நேரம் இருந்தது. காத்திருந்த நேரத்தில் அந்த மியூசியம் சென்ற நினைவு. பார்த்த சிற்பங்கள் நினைவில் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை மியூசியத்துக்கும் இரண்டு தடவைகள் சென்றிருக்கிறேன். படங்கள் எடுக்க இயலாது, மொபைலை கோயிலுக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

      நீக்கு
  13. அரண்மனை வளாகத்தில் இந்த சிற்பக் கலைக் காட்சியகம் மிகவும் சிறப்புடையது..

    அதன் தன்மை குறையாதபடிக்கு பதிவின் தகவல்கள்...

    சிறப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார். உள்ளூர் கார்ரான உங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி

      நீக்கு
  14. தனித்த சிற்பங்களும்
    தொகுப்பு சிற்பங்களும் காண்பவர் தம்மை வேறு உலகிற்கு இட்டுச் செல்லும் தன்மை உடையவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். அந்தக் காலங்களுக்கு அவை நம்மை இட்டுச் செல்லும்.

      நீக்கு
  15. திருவாழிமார்பனா?
    திருவாழ் மார்பனா!..

    எனக்கும் இந்த ஐயம் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டுமே சரி எனத் தோன்றுகிறது. திரு உறை மார்பன்.

      நீக்கு
  16. மோனத்திலிருந்து பேசுவது வரை எத்தனை எத்தனை
    புத்தர் சிலைகள்...
    எத்தனை எத்தனை கலைப்படைப்புகள்

    என்ன தவம் செய்தோம் யாம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நம் பல கோயில்களில் புத்தர் சிலைகள் உண்டு. முனைவர் ஜம்புலிங்கம் ஐயா, சோழ நாட்டில் பௌத்தம் என்ற பெரும் நூலை எழுதியிருக்கிறார். அவர் கையெழுத்துடன் வாங்க ஆசை. பார்ப்போம்.

      நீக்கு
  17. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். நலமா? ப்ரார்த்தனைக்கு நன்றி

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      நாங்கள் மகன்கள் குடும்பத்துடன் கடந்த இரு நாட்களாக இங்கு சில கோவில்களுக்கு சென்றுவிட்டு நேற்று இரவு 12மணிக்குமேல்தான் மேல்தான் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். அலைச்சலில் நலம் சற்று பாதிப்பாகத்தான் உள்ளது. காலை தாமதமான முழிப்பில் வீட்டு வேலைகள் வேறு பயமுறுத்துகின்றன. உங்களின் அருமையான பதிவை பிறகு படித்து விட்டு வருகிறேன். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. நல்லா ஓய்வு எடுத்துவிட்டு வாங்க கமலா ஹரிஹரன் மேடம். கோவில் பதிவுகள் எழுத ஆரம்பித்தாகிவிட்டதா?

      நீக்கு
  18. தஞ்சை கலைக் கூடப் படங்கள் அருமை. நாங்களும் பல வருடங்களுக்கும் பார்த்திருக்கிறோம். இப்பொழுது விரிவு படுத்தி உள்ளார்கள் போல் தெரிகிறது.

    சிலைகள் படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி நலமா? கொஞ்ச நாட்களாக உங்களை காணவில்லையே!

      நீக்கு
    2. வாங்க மாதேவி அவர்கள். ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு மாறுதல் அங்கு காண்கிறேன். இன்னமும் அரண்மனை அரசவைப் பகுதியைச் சீர்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

      நீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  20. //இன்றைய பகுதி எத்தனையோ மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. பிறகு படிக்கவில்லை. நேற்றைய பகுதியின் அல்லது வரப்போகும் சனிக்கிழமைகளின் சாயல் இருக்கிறதோ எனத் தோன்றுகிறது.//

    நான் நினைத்தேன் சனிக்கிழமைக்கு எழுதி வைத்த பதிவு தவறுதலாக இன்று இடம் பெற்று விட்டதோ என்று.

    நீங்களும் சாயல் ஒத்து இருப்பதை சொல்லி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று படிக்கும்போதுதான் எனக்குத் தோன்றியது கோமதி அரசு மேடம்.

      நீக்கு
    2. இன்னொன்று கோமதி அரசு மேடம். ஞாயிறு பகுதிகளை எழுதிக்கொண்டிருந்தபோது, இந்த 'வாரம் ஒரு பாசுரம்' என்றொரு பகுதி எதிர்காலத்தில் எழுதுவேன் என்பது தெரியாது.

      நீக்கு
  21. திருவாய்மொழி வாசகமாலை புத்தகத்தை படித்து அவற்றிலிருந்து சிலவற்றை விளக்கமாக சொன்னதற்கு நன்றி.

    //காலக்ஷேபம் என்பதற்கான பொருள் என்ன? பொழுதைப் போக்குவது என்பதுதான் அதன் பொருள். அர்த்தம் பொதிந்த, நம் வாழ்விற்குப் பயனளிக்கும் விதத்தில் பொழுதுபோக்குவது காலக்ஷேபம் கேட்பது.//

    அர்த்தம் நன்றாக இருக்கிறது. சிலர் உங்கள் வாழ்க்கை எப்படி போகிறது ? என்று கேட்கும் போதும் காலக்ஷேபம் எப்படி போகிறது என்றும் கேட்பார்கள் தானே! அதற்கு பதில் அளிப்பவர் காலக்ஷேபம் செய்வது கஷ்டம், கடினமாக இருக்கிறது என்றும் சொல்வார்கள்.
    ஒரு நாள் பொழுதை தள்ளுவதே மெத்த கடினமாக இருக்கிறது என்று பொருள்படும் பாடி பேசுவார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையாகவே கொஞ்சம் வயதாகிவிட்டால், பொழுதைப் போக்குவது கஷ்டம். பலர் தொலைக்காட்சி மொபைலை நாடுவார்கள். நான் அவைகள் பக்கத்தில் போவதே அபூர்வம். ரொம்ப போரடித்தால் மனைவியைக் கூட்டிக்கொண்டு வெளியில் சாப்பிடச் சென்றுவிடுவேன்.

      நீக்கு
  22. கலைக்கூடத்தின் சிற்பங்களின் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    புத்தர், 9-10ம் நூற்றாண்டு, //

    புத்தரின் தலைமுடி காந்தார கலையை சேர்ந்தது போல இருக்கே!


    //பார்வதி, 9ம் நூற்றாண்டு, செந்தலை.//
    பார்வதி அமர்ந்து இருக்கும் கோலம் ஒயிலாக இருக்கிறது.

    //முருகன் வள்ளி தெய்வானை, 18-19ம் நூற்றாண்டு, குத்தாலம். //

    வள்ளியை விட தெய்வானை கொஞ்சம் வளமையாக( புஷ்டியாக) இருப்பது போல இருக்கிறது.

    வேலைப்பாடுடைய சாளரம், 9ம் நூற்றாண்டு,//

    இப்போதும் இப்படி டிசைன் செய்கிறார்கள் அதற்கு பேர்
    jolly work design என்று வித விதமாக அந்தக்காலத்து சாளரங்களை மாடலாக கொண்டு செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... நல்லாவே அலசியிருக்கீங்க. முருகன் வள்ளி தெய்வானை சிறிய சிலைகள் அல்லவா?

      நீக்கு
  23. வழக்கம் போல் அருமையான பதிவு நெல்லை. ஆதார பூர்வமாக எழுதும் உங்கள் ஸ்டைல் எனக்குப் பிடிக்கும். ஸ்வாரஸ்யமாக இருக்கு உங்கள் நடை (ஸத்தியமாக போர் அடிக்கவில்லை). உங்கள் சனிக்கிழமை பதிவையும் இப்போதுதான் படிக்க முடிந்தது. அப்படி ஒன்றும் overlap இருப்பதாகத் தெரியவில்லை. தொடர்ந்து உங்கள் பாணியையே தொடருங்கள்.
    /பொதுவாக ஆழ்வார்கள் பன்னிருவர் என்றாலும், ஆண்டாளையும் மதுரகவியாழ்வாரையும் ஆழ்வார்கள் பதின்மர் என்று சொல்லும்போது சேர்ப்பதில்லை/
    அது என்ன பதின்மர் என்ற கணக்கு? ஆண்டாளை exclude செய்வது பெண் என்பதலா? மதுரகவியாழ்வாரையும் exclude பண்ணுவதற்கு என்ன காரணம்? விளக்கமாக எழுதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சூர்யா. மிக்க நன்றி உங்கள், உற்சாகப்படுத்தும் கருத்துக்கு.

      ஆழ்வார்கள் பன்னிருவர் என்றாலும், மதுரகவி ஆழ்வார், அவருடைய குருவான நம்மாழ்வாரை மாத்திரமே, கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற பத்துப் பாசுரங்களால் பாடியுள்ளார். அவரைத் தவிர, தேவு மற்றறியேன் என்கிறார். ஆண்டாள், பெரியாழ்வாரின் திருமகள். இருந்தாலும் துளசிச் செடி அருகே பிறந்த அவர், திருமகளின் அவதாரமாகத்தான் எண்ணப்படுகிறார். (மானிட உடலில் பிறந்தவரல்லர்). இந்தக் காரணத்தால் இவர்கள் இருவரையும் விட்டுவிட்டு, ஆழ்வார்கள் பதின்மர் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!