பானுமதி வெங்கடேஸ்வரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பானுமதி வெங்கடேஸ்வரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.8.19

கேட்டு வாங்கிப்போடும் கதை : கேட்ட வரம் - பானுமதி வெங்கடேஸ்வரன்

கேட்ட வரம்
- பானுமதி வெங்கடேஸ்வரன் - 

உப்பரிகையில் நின்று கொண்டிருந்த தசரத சக்கரவர்த்தியின் கண்களில், கீழே நந்தவனத்தில் நடந்து கொண்டிருந்த ராமனும், சீதையும் பட்டார்கள். சீண்டலும்,சிணுங்கலும், சிரிப்புமாக நடந்து கொண்டிருந்த அவர்களை பார்க்க பார்க்க அவருக்கு மகிழ்ச்சி பொங்கியது.